கடந்த 72 மணிநேரத்தில் 81420 சிவிலியன்களை படையினர் புலிகளிடமிருந்து விடுவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் இப்போது பதிவு செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பெரும் தொகையினரை படையினர் விரைவில் விடுவிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம் என தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கம் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,
இவ்வாறு விடுவிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருத்ததுவ உதவிகளை படையினர் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் ஒத்துழைப்புடன் வழங்கி வருகின்றனர் என்றும் அமைச்சர் கூறினார்.