மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 24 ஆம் திகதி மூடப்படும் என்றும் மீண்டும் அப்பாடசாலைகள் 27 ஆம் திகதி திறக்கப்படும் என்றும் கல்வித் திணைக்களம் தெரிவித்தது. இதேவேளை விருப்பு வாக்குகள் எண்ணும் மத்திய நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் மட்டும் 28 ஆம் திகதி திறக்கப்படவுள்ளன.
மேல் மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டே இந்த விடுமுறை வழங்கப்படுகிறது. மேல் மாகானத்தின் மூன்று மாவட்டங்களிலும் ஆறு பாடசாலைகள் வாக்குகள் எண்ணும் மத்திய நிலையங்களாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.