மட்டக் களப்பு மாவட்டத்தில் சிவில் பாதுகாப்புக் குழு அமைப்பது தொடர்பான கூட்டம் நேற்று (20) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மின்சக்தி எரிபொருள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமமே தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தேசிய நல்லிணக்க ஒருங்கிணைப்பு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரட்ண, கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்தபாலசூரிய, மட்டக்களப்பு மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான எட்வின் குணதிலக, சங்கர், மட்டக்களப்பு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திருமதி ஆர். கேதீஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபைர் உட்பட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மாவட்ட சமுர்த்தி உதவி ஆணை யாளர் உட்பட உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச செயலாளர் பிரிவுகள் தோறும், கிராமங்களில் சிவில் பாதுகாப்புக் குழுக்களை அமைப்பது தொடர்பாக ஆராயப்பட்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட மட்டத்திலான சிவில் பாதுகாப்புக் குழுவும் அமைக்கப்பட்டது.