யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த வருடம் வாள் வெட்டு மற்றும் தாக்குதல் சம்பவங்களுக்கு இலக்காகி, சிகிச்சை பெற்று வந்தவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வாள், வெட்டு மற்றும் தாக்குதல்களுக்கு இலக்காகி கடந்த வருடம் 983 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என தெரிவித்தார்.
இது தவிர அண்மைய நாட்களில் வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பி இங்குள்ளவர்கள் மீது வாள்வெட்டு மேற்கொள்வது, வீட்டை எரிப்பது போன்ற வன்முறைச்சம்பவங்களும் பதிவாவதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.