‘இனி தமிழன் என்று சொல்லடா தலைகுனிந்து நில்லடா’-சத்யராஜ்

sathyaraj.jpgஉலகமெங்கும் உள்ள தமிழர்கள் தங்கள் ஈழ உறவுகளுக்காக ஒன்றுபட்டு குரல் கொடுக்கிறார்கள். ஆனால் தாயகத் தமிழர்களான நாம் அதை சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். மீண்டும் ஒரு பெரும் போராட்டத்தில் நாம் இறங்க வேண்டும் என நடிகர் சத்யராஜ் கூறினார்.

கவிஞர் பா.விஜய் கதாநாயகனாக அறிமுகமாகும் ஞாபகங்கள் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை ஏவி.எம். ஏசி ப்ளோரில் நடந்தது. விழாவில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ் பேசியதாவது:

ஐயா…நான் இறையாண்மைக்கு எதிரா எதுவும் பேசலீங்க… உண்மையைப் பேசுறேன்… சரித்திரத்தை, இந்திய- இலங்கை அரசாங்கங்கள் ஏற்றுக் கொண்ட சரித்திரத்தைத்தான் சொல்கிறேன். இந்த ஞாபகங்கள் விழாவில் நெஞ்சைவிட்டு அகலாத ஞாபகமாக ஈழ மண்ணில் நம் சொந்தங்கள் அழிந்துகொண்டிருப்பது சுற்றிச் சுழல்கிறது. தமிழ்நாட்டில் உள்ள எல்லா அமைப்புகளும், எல்லா கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஈழ தமிழர்களுக்காக மீண்டும் குரல் கொடுக்க வேண்டும்.

லண்டனில் இரண்டு லட்சம் தமிழர்கள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். பிரான்சு, ஜெர்மனி, நார்வே, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என உலகம் முழுக்க தமிழர் கொடியுடன் தமது உறவுகளின் உயிர்காக்க கண்ணீரும் கம்பலையுமாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.நாம் அவற்றைப் பற்றிய செய்திகளைப் படித்துக் கொண்டு பொழுதைக் கழிப்பதை விட்டுவிட்டு, மீண்டும் நமது உணர்வுகளை வலிமையாக இந்த அரசுக்குப் புரியும் விதமாகக் காட்ட வேண்டும்.

உலகம் முழுக்க 8 கோடி தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இலங்கையில் உள்ள 3 லட்சம் தமிழர்களை நாம் காப்பாற்றவில்லை என்றால், தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று சொல்லிக்கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. இனி தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா என்றுதான் சொல்ல வேண்டியது வரும் என்றார் சத்யராஜ்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • john
    john

    வெளிநாடுகளில் நடக்கும் புலன்பெயர் இழையோர் போராட்டங்களுடன் அந்த நிலை தமிழருக்கு வந்திட்டுது. நீங்கள் ஒண்டும் புதிதாய் சொல்லவில்லை.

    Reply
  • thurai
    thurai

    தமிழரின் தலைசிறந்த தலைவர்களை தலையில் போட்டு தம்பி பிரபா கொல்லும் போது, உங்கள் தலை எங்கே போனதென சொல்வீரா சத்தியராஜ்?

    துரை

    Reply