பாபர் மசூதி இடிப்பில் காங்கிரசுக்கும் பங்கு உண்டு: லாலு

laluprasat.jpgபீகார் மாநிலத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சி தலைவர் லல்லு பிரசாத் யாதவ், அயோத்தியில் பழம் பெருமை வாய்ந்த பாபர் மசூதியை 1992ம் ஆண்டு பா.ஜ.க. இடித்தது. அத்வானி பிரதமர் ஆக வேண்டும் என்ற கனவில் தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
 
பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் காங்கிரஸ் கட்சிக்கும் பங்கு உண்டு. அந்த பழியில் இருந்து காங்கிரஸ் தப்ப முடியாது. காங்கிரஸ் கட்சி நினைத்திருந்தால் பாபர் மசூதி இடிப்பை தடுத்திருக்க முடியும். பாபர் மசூதி இடிக்கப்படுவதை தடுக்க காங்கிரஸ் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இது சம்பந்தமாக நான் விவாதிக்க தயார். காங்கிரஸ் கட்சியினர் இது தொடர்பாக முட்டாள்தனமாக எதுவும் உளறிக்கொண்டிருக்ககூடாது.
 
காங்கிரஸ் கட்சியினர் இது தொடர்பாக ஏதாவது பேசினால் மேலும் பல ரகசியங்களை நான் வெளியிட வேண்டியது வரும். பாபர் மசூதி பற்றி காங்கிரசின் இரட்டை வேடத்தை நான் அம்பலப்படுத்த நேரிடும் என்றார். பாபர் மசூதி இடிப்புக்கும் காங்கிரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. லல்லுவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • msri
    msri

    லாலு-கலைஞர் வைத்தியர் ரமதாசு முகர்ர்சி > இவர்கள் எல்லாம் கடந்த இரு கிழமைக்கு முன் முற்போக்கு கூட்டணியினர் (கூட்டாளிகள்) இப்போ?

    Reply