மாலைதீவில் பாரிய வீடமைப்புத் திட்டமொன்று அமைக்கும் பணியை இலங்கைக்குப் பெற்றுக்கொடுக்க அந்நாட்டு அரசாங்கம் முன்வந்துள்ளதாக தேசநிர்மான மற்றும் பொறியியல்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அண்மையில் மாலைதீவுக்கு தான் மேற்கொண்ட விஜயத்தின் பலனாகவே இந்த நன்மை இலங்கைக்குக் கிடைத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
இத்திட்டத்தின்படி மாலைதீவின் தலைநகரில் பாதி சொகுசு வசதிகளுடன் கூடிய 10 ஆயிரம் வீடுகள் நிர்மானிக்கப்படவுள்ளன. இந்த வீடமைப்புத் திட்டத்தை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கைக் கட்டிடக் கலைஞர்களின் உதவியுடன் பூர்த்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்