பாகிஸ் தானின் அபிவிருத்திக்கேன சர்வதேச கொடையாளி நாடுகள் 5 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான உதவியை வழங்க முன்வந்துள்ளார்கள். உலக வங்கி மற்றும் ஜப்பான் ஆகியவற்றினால், டோக்கியோவில் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட இதற்கான மாநாட்டில் 30க்கும் அதிகமான நாடுகள் கலந்துகொண்டன.
இதனைவிட பாகிஸ்தானிய பொருளாதார பிரச்சினையை தவிர்க்க சர்வதேச நாணய நிதியமும் 7 பில்லியன் டாலர்களை கடனாக வழங்க முன்வந்துள்ளது.
அமெரிக்காவும், ஜப்பானும் தலா ஒரு பில்லியன் டாலர்களை வழங்க முன்வந்துள்ளன. உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய திட்டங்களின் மூலம் பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே இந்த உதவிகளின் நோக்கம் என்று கொடையாளிகள் கூறுகின்றனர்.