நந்திக் கடல் பிரதேசத்தில் 53 ஆம் படைப்பிரிவின் வீரர்கள் நேற்று நடத்திய தேடுதலின் போது விமானங்களைத் தாக்கக் கூடிய நான்கு ஏவுகணைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் பிரிவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றுக் காலை இவை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அப்பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்ற புலிகள் இவற்றை மறைத்து வைத்து விட்டுச் சென்றுள்ளதாகவும் இராணுவத்தினர் தெரிவித்தனர்.