ஈழக் கொலைகள்-100 பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதம்

fasting-100.jpgஈழத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களையும் குழந்தைகளையும் மக்களையும் காக்கும் நோக்கத்தோடு தமிழகம் முழுவதிலும் இருக்கும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 100 பெண்கள் சென்னையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். நேற்று 2வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தது.

ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமாரின், கொளத்தூர் பகுதியில், இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. பேராசிரியை சரஸ்வதி தலைமையில் 100 பெண்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

மாணவிகள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், உழைக்கும் பெண்கள் உள்ளிட்ட என பல தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர். முதலில் காவல்துறையினர் இதை அனுமதிக்கவில்லை. அனுமதி இல்லாமல் இப்படி கூடக் கூடாது என போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து அருகில் உள்ள பிளாட்பாரத்தில் பந்தல் போட்டு பெண்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஏதோ இப்ப உண்ணாவிரதமிருப்பதென்பது பெட்டிக்கடை வைப்பது போல ஆகிவிட்டது. ஆனால் சாகும்வரை உண்ணாவிரதம் என்று தொடங்குபவர்கள் இடையிலை செலக்டிவ் அமினீசியாவால் அதை மறந்து, இடையிலேயே முடித்து விடுகின்றனர்.

    Reply