சோமா லியாவை அண்டிய ஏடன் வளைகுடா பகுதியில், சர்வதேச கடல் சார் படையினர் பாதுகாப்பை அதிகப்படுத்தி வருகின்ற அதேவேளையில், மேலும் இரண்டு சரக்குக் கப்பல்களைக் கைப்பற்றியுள்ள சோமாலிய கடற்கொள்ளையர்கள், மூன்றாவது ஒரு கப்பலின் மீது சுட்டும் உள்ளார்கள்.
இரண்டு நாட்களில் கடத்தப்பட்ட நான்காவது கப்பலாக டோகோ கொடியுடன் பயணித்த ஒரு 5000 தொன் கப்பல் அமைகின்றது. 24 மாலுமிகளுடன் கிரேக்க கப்பல் ஒன்று கடத்தப்பட்டதை அடுத்து இந்த கப்பலும் கடத்தப்பட்டுள்ளது.
மேலும் இருபது மாலுமிகளுடன் இரு எகிப்திய படகுகளும் கடத்தப்பட்டுள்ளன. லைபீரிய கொடியுடன் பயணித்த ஒரு கப்பலின் மீது சிறிய படகுகளில் வந்த கடற்கொள்ளையர்கள் சுட்டிருக்கிறார்கள்.