இலங் கையின் வடக்கே புதுமாத்தளன் மருத்துவமனையில் இருந்து நேற்று மேலும் ஒரு தொகுதி நோயாளர்களும், அவர்களது உறவினர்களுமாக 514 பேர் கிறீன் ஓசன் கப்பல் மூலமாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள புல்மோட்டை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள 48 மணிநேர மோதல் தவிர்ப்பு நடவடிக்கை நடைமுறையில் இருக்கும் வேளையில் திங்கள் கிழமையன்றும் இவ்வாறான ஒரு தொகுதி நோயாளர்கள் புல்மோட்டை பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.