அரசாங் கத்தின் மோதல் தவிர்ப்பு நடைமுறையில் இருக்கின்ற போதிலும், திங்கள் கிழமை இரவு பத்து மணி முதல் அதிகாலை வரையில் பாதுகாப்பு வலயத்தில் உள்ள வலைஞர்மடம் பகுதியின் எல்லைப்புறத்தில் இரு தரப்புக்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சமர் தொடர்ச்சியாக இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர் நிறுதத்ம் இருந்த காலத்தில் 93 பொதுமக்கள் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் புதுமாத்தளன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவி்த்திருக்கின்றன. 6 பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு தினங்களிலும் பொதுவாக ஷெல் தாக்குதல்கள் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்ற போதிலும், துப்பாக்கிச் சண்டைகள் நடைபெறுகின்ற பகுதிகளில் ஒன்றிரண்டு மோட்டார் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று நள்ளிரவுடன் அரசாங்கத்தின் மோதல் தவிர்ப்பு முடிவுக்கு வருவதையடுத்து, அடுத்து என்ன நடக்கப்போகின்றதோ என்ற ஓர் அச்ச உணர்வு பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் இருக்கும் மக்கள் மத்தியில் மேலோங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு நாள் அமைதிக்குப் பின்னர் மோதல்கள் மோசமாக வெடிக்கலாம் என்று அந்த மக்கள் மத்தி்யில் எதிர்பார்ப்பு நிலவுவதாகவும் கூறப்படுகின்றது.
தற்காலிக போர்நிறுத்தத்தின் முதல் நாளன்று இராணுவம் சிவிலியன்கள் மீது தொடர்ச்சியாக ஷெல் தாக்குதல்கள் நடத்தியதாக விடுதலைப்புலிகள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள இராணுவம், அரச படைகளின் மீது கடுமையான இய்திரத்துப்பாக்கித் தாக்குதல்களை விடுதலைப்புலிகளே மேற்கொண்டதாகக் கூறியிருக்கின்றது.