வை.கோ விடயத்தில் சட்டம் அதனுடைய வேலையைச் செய்யும் – ராகுல் காந்தி

rahul.jpgஇலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டாரானல் இந்தியாவில் இரத்த ஆறு ஓடும் என தமிழ் நாட்டு அரசியல்வாதிகளில் ஒருவரான வை.கோபாலசாமி தெரிவித்திருந்தார். இன்று கொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் பதிலளித்த இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் புலிகளால் படுகொலைசெய்யப்பட்ட இந்திய முன்னாள் பிரதமரின் புத்திரருமான ராகுல் காந்தி அவர்களிடம் வை:கோ வின் கருத்து தொடர்பாக கேட்ட போது, அவருடைய கருத்தை இந்தியச் சட்டம் கையாளும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரிக்கப்போவதில்லை எனவும் ஆனால் இலங்கையில் தமிழ் மக்கள் துன்புறுத்தப்படுவதை அனுமதிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *