லைக்கா சாமியார் ஐந்து மில்லியன் பவுண்கள் பிணையில் விடுதலை! “நானோ லைக்காவோ சாமியாரை பிணை எடுக்கவில்லை” லைக்கா துணைத் தலைவர் பிரேம்! : காணொலி

பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் பாலியல் பலாத்காரம் ஆகிய காரணங்களுக்காக குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த ஓம் சரவணபவ என்ற ஆசாமி புலிக்கள் முரளிகிருஸ்ணன் செப்ரம்பர் பிற்பகுதியில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஐந்து மில்லியன் பவுண்கள் பெறுமதியான வீட்டை பிணை வைத்தே இந்தப் போலி ஆசாமியை லைக்கா நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரேமநாதன் சிவசாமி என்றழைக்கப்படும் பிரேம் பிணைமீட்டுள்ளார். இது தொடர்பாக ஒக்ரோபர் 21 லைக்கா துணைத் தலைவரோடு தொடர்பை ஏற்படுத்த முயன்ற போதும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால் இச்செய்தி இவ்வழக்கு சம்பந்தப்பட்ட சட்டக்குழுவினூடாக தேசம்நெற்க்கு கிடைக்கப்பெற்றது. மேலும் லைக்கா நிறுவனர் சுபாஸ்கரனின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்களும் இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆனால் இது பற்றிய தேசம்திரை காணொலி வெளியான சில மணி நேரங்களில் தேசம்நெற்றை தொடர்புகொண்ட லைக்கா மோபைல் துணைத் தலைவர் பிரேம் “நானோ லைக்காவோ சாமியைப் பிணை மீட்கவில்லை என்று அறுதியிட்டுத் தெரிவித்திருந்தார். அப்படியானால் உங்களின் பினாமிகளுடாக பிணை எடுத்தீர்களா என்று கேட்டபோது அவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் தனக்கு இல்லை எனப் பிரேம் சினந்தார். தங்களுக்கு வேறு நெருக்கடிகள் விடயமாக அவசரமாக இயங்கிக் கொண்டிருக்கின்ற போது எங்கள் ஊடகம் தங்களை தொடர்ந்தும் தொந்தரவு பண்ணுவதாக குற்றம் சாட்டினார். தங்கள் சட்டத்தரணிகள் குழுவினுடாக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் தமிழர்கள் என்பதால் தான் நேரடியாகத் தொடர்பு கொண்டதாக பிரேம் இந்த உரையாடலில் தெரிவித்தார். ஈழத் தமிழ் பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்வதாகக் குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு நீங்கள் எதற்காக ஆதரவு வழங்குகின்றீர்கள் அவர் சம்பந்தப்பட்ட சட்ட விடயங்களுக்கு ஏன் ஆதரவளிக்கின்றீர்கள் என்று கேட்ட போது, தங்களுக்கு இதற்கெல்லாம் நேரமில்லை என்றும் அதனுடன் தங்களுக்கு சம்பந்தம் இல்லை என்றும் லைக்கா மோபைல் துணைத் தலைவர் பிரேம் தெரிவித்தார்.

லைக்கா மோபைல் துணைத் தலைவர் பிரேம் உரையாடலை நிறுத்திய சில நிமிடங்களிலேயே இச்செய்தி வெளியான யூரியூப் சனல் இடைநிறுத்தப்பட்டது. இச்செயலைக் கண்டிக்கும் வகையில் வெவ்வேறு சமூக வலைத்தளங்களில் இந்த லைக்கா சாமியார் தன் ஆண்குறியை வெளியே எடுத்து உருவுகின்ற வீடியோக்கள் வெளியிடப்பட்டு இருந்தது. கணணிக் காட்சி உரையாடலில் லைக்கா சாமியார் தன் ஆண்குறியை தன் கைகளால் உருவுவதும் உரையாடுவதும் அவருடைய முகபாவனைகளோடு வெளியாகி உள்ளது.

ஆனால் இவ்வாறான, குழந்தைகளை இளம் பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்யும் பேர்வழிகளுக்கு ஆதரவாகச் செயற்படும் புல்லுருவிகளும் ஈனர்களும் சமூக வலைத்தளங்களில் தாராளமாக வலம் வருகின்றனர்.

கேரளாவில் மோசடிப் பேர்வழியாக அறியப்பட்ட புலிக்கள் முரளிகிருஸ்ணன் எப்படி லைக்கா சாமியானார் என்பதும் லைக்காவின் லைக்குகளை வாங்கினார் என்பதும் ‘பணம் – பக்தி – பாலியல் ஓம் சரவணபவ!’ என்ற தலைப்பில் தேசம்திரை காணொலியாகி வெளி வந்திருந்தது. அதனைத் தொடர்ந்து லைக்கா மோபைல் துணைத் தலைவரை யூலை நடுப்பகுதியில் சந்தித்து மேற்கொண்ட பதிவு ‘போலிச்சாமியார் ஓம் சரவணபவவிற்கு முண்டுகொடுக்கவில்லை’ என அவர் தெரிவித்த கருத்தைத் தாங்கி வெளிவந்திருந்தது.

“கூடியிருந்து விஸ்கி அடித்த லைக்கா குழுமம், லைக்கா சாமியாருக்கு முன் கூடி, அவர் காலைக் கழுவிய தண்ணியை அடிக்க, அவர் அப்படி என்னத்தைத்தான் காட்டினார் ?” என வினவுகின்றார் கற்பக விநாயகர் அடியவர் எம் ஜி கிருஸ்ணன். ஈழத் தமிழ் பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சாமியாரை ஐந்து மில்லியன் பவுண்கள் பிணை செலுத்தி வெளியே எடுத்துள்ளார் லைக்காவின் துணைத் தலைவர் பிரேம். பிரேம் தன்னுடைய மனைவி சாமியாரில் மிகுந்த பக்தியுடையவர் எனத் தெரிவித்து இருந்தார். பிரேம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தவர். அச்சமயத்திலேயே தெய்வதீஸ்வரி செல்வேந்திரனால் லைக்கா குழுமத்தினருக்கு சாமியார் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தார். மருத்துவ சிகிச்சையின் பயனாக பிரேம் குணமடைந்த போதும், சாமியின் காலைக் கழுவிக்கு குடித்தால் தான் புற்றுநோய் குணமானது என பிரேம் குடும்பத்தினர் நம்புகின்றனர். அது தேசம் ஜெயபாலன் பிரேமுடன் உரையாடியதில் வெளிப்பட்டு இருந்தது. ஈழத் தமிழ் பெண்களை சாமியால் பாலியல் துஸ்பிரயோகம் செய்ததை அச்சந்திப்பில் பிரேம் கண்டிக்கவில்லை. ஆனால் சாமியாரை லைக்காவோடு தொடர்புபடுத்துவது பற்றியே விசனம் தெரிவித்து இருந்தார்.

சாமியாரின் வழக்குடன் தனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் தானோ லைக்காவோ அவருக்காக வாதாடவோ அவருடைய வழக்குச் செலவுகளை ஏற்கவோ இல்லை என அறுதியிட்டுத் தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது லைக்காவின் துணைத் தலைவர் பிரேம் ஐந்து மில்லியன் பவுண் பிணையில் சாமியாரை வெளியே எடுத்துள்ளார் எனத் தெரிய வருகின்றது. சாமியாருக்கு கட்டப்பட்ட கோவிலுக்கான நிதியையும் இவரே வழங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

பணம் – பக்தி – பாலியல் ஆகிய மூன்று அம்சங்களும் ஒருங்கிணைவது சமூகச் சீரழிவுக்கு வழிகோலுகின்றது. இவ்வாறான அயோக்கியர்களுக்கு லைக்கா போன்ற அமைப்புகளும் ஆலயங்களும் உறுதுணையாக இருப்பது மிக ஆபத்தான நிலையைத் தோற்றுவித்துள்ளது. புலம்பெயர் நாடுகளில் உள்ள பணம் படைத்த வர்த்தகப் புள்ளிகள் தங்களிடம் பணம் இருப்பதால் தங்களை தட்டிக் கேட்க யாராலும் முடியாது என்ற தோரணையுடன் ரவுடிகளாகச் செயற்படுகின்றனர். தங்கள் கைகளில் ஊடகங்களையும், அடியாட்களையும், மொட்டைக்கடிதம் எழுதுபவர்களையும் வைத்துக்கொண்டு இவர்கள் எதிர்கால சமூகத்தையே சீரழித்து வருகின்றனர். தவறணை நடத்துவது அதற்கு ஆட்களை வரவழைக்க போதைப்பொருள் விற்பனைகளை மறைமுகமாக அனுமதிப்பது என இந்தக் கூட்டத்தின் அடாவடித்தனங்கள் சொல்லில் அடங்கா.

இதனைத் தட்டிக்கேட்டால் தங்கள் ஏவலாளிகளைக் கொண்டு முகநூலை முடக்குவது, குடும்பத்தை இழுத்து மொட்டைக்கடிதம் எழுதுவது, ஒருபடி மேலே சென்று இணையத்தை ஊடுருவி – ஹக் பண்ணி முடக்குவது எனப் பல்வேறு அடாவடித்தனங்களைச் செய்கின்றனர். இவ்வாறான அநியாயங்களுக்கு தேசம்நெற் மற்றும் தேசம்திரை ஊடகங்கள் தொடர்ந்தும் முகம்கொடுத்து வருகின்றன.

லைக்கா சாமியாரை சட்டத்துக்கு முன் நிறுத்த வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக ஈடுபட்டவர்களில் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் உறுப்பினர் ஆர் ஜெயதேவன் குறிப்பிடத்தக்கவர். லைக்கா சாமியாருக்கு எதிராக சாட்சியம் அளித்த சிலர் பின்நாட்களில் வெளி அழுத்தங்கள் காரணமாகவும், அவர்களுக்கு எதிரான மொட்டை கடிதங்கள் அழுத்தங்கள் காரணமாகவும் சாட்சியமளிக்க பின் வாங்கினர். நீண்ட காலமாக லைக்கா சாமிக்கு பிணை மறுக்கப்பட்டதற்கும் அவருடைய பிணைக்கு மிகப் பெரும் நிதி பிணையாகக் கோரப்பட்டதற்கும் இதுவே காரணம். ஆர் ஜெயதேவன் இந்த வழக்குத் தொடர்பில் லைக்கா சாமியாருக்கு எதிராக உறுதியாக நின்றதாகவும் தேசம்நெற்க்கு கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பாலியல் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டப்பட்ட பின்னும்இ தங்கள் குடும்பத்தினர் அந்த ஆசாமியின் கோவிலுக்குச் சென்று வருவதாகத் தெரிவித்த லைக்கா பிரேம் தான் கோவிலுக்குச் செல்வதால் சாமியை ஆதரிப்பதாக குற்றம்சாட்ட முடியாது எனத் தெரிவித்தார். தற்போது சாமியார் மீது குற்றம்சாட்டுகின்றவர்கள் சாமியின் அடியார்களாக இருந்ததாகவும் லைக்கா பிரேம் தெரிவித்தார். சாமியாரின் சுயரூபம் தெரியாதவரை அவருக்கு அடியாராக இருந்தமை சரி என்று கொண்டாலும் சாமி ஆண்குறியை உசார்ப்படுத்தும் விடியோக்கள் வெளியான பின்னரும் ஏன் இவர்கள் அங்கு செல்கின்றனர் லைக்கா சாமியின் லிங்க பூஜையின் சிறப்பு என்ன என்பது மார்ச் 15 2024 ஹரோ நீதிமன்றில் தெரியவரும்.

குற்றம்சாட்டப்பட்ட நிரூபிக்கப்பட்ட பின்னும் தெய்வதீஸ்வரி செல்வேந்திரன் மற்றும் திருமதி பிரேம் போன்ற சில பெண்கள் இவ்வாறான குற்றவாளிகளுக்கு தொடர்ந்தும் துணை போவது ஆச்சரியமாக உள்ளது. குறிப்பாக லைக்கா குடும்பத்தினர் இன்னமும் பாலியல் குற்றவாளியான புலிக்கள் முரளிகிருஸ்ணனின் காலைக் கழுவி தீர்த்தம் குடிக்க ஆசைப்படுவது ஏன்? இனிமேல் லைக்கா காட் வாங்கினால் லைக்கா சாமியின் தீர்த்தம் இலவசமாகக் கிடைக்குமோ?

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *