மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகம், தலைமறைவாகியுள்ள மூன்று பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பான தகவல்களைத் தந்து உதவுமாறு பொது மக்களிடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளது. காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட்களான அகமது மீராசாகிபு அப்துல் ரஹீம் மற்றும் முகமது அலியார் நசார், பொலிஸ் கான்ஸ்டபிள் முகமது காசீம் அப்துல் ரசீத் ஆகியோர் தொடர்பாகவே தகவல்கைளத் தந்து உதவுமாறு பொது மக்களை மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகம் கேட்டுள்ளது
இது தொடர்பான அறிவித்தல் நேற்று ஒலி பெருக்கி மூலம் மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பொலிஸ் பிரிவுகளில் விடுக்கப்பட்டுள்ளது மூன்று லட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான நீதிமன்ற வழக்கு சான்றுகளை மோசடி செய்தார்கள் என இவர்கள் மீது வழக்கு பதிவாகியிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேற்படி நபர்கள் தற்போது தலைமறைவாகியிருப்பதாகவும் இவர்கள் தொடர்பான மறைவிடங்கள் பற்றிய தகவல்களைப் பொது மக்களிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.