மக்களவை தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடக்கும் 124 தொகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இந்த இடங்களில் 16ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. ஏப்ரல் 16 முதல் மே 13ம் தேதி வரையில் ஐந்து கட்டமாக மக்களவை தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்ட தேர்தல் நடக்கும் 124 தொகுதிகளில் 16ம் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது. மொத்தம் 1,715 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில் 122 பேர் பெண்கள். இந்த தொகுதிகளில் தலைவர்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. முதல் கட்டமாக, ஆந்திராவில் 22 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.சட்டீஸ்கரில் 11 தொகுதிகளிலும் ஒரிசாவில் 10, ஜார்கண்ட் 6, அசாமில் 3 தொகுதிகளிலும் 16ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
இதேபோல், மேகாலயாவில் 2 தொகுதிகளிலும் ஜம்மு&காஷ்மீர், அந்தமான் நிக்கோபர் தீவுகளில் ஒரு தொகுதியிலும் 16ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 17 மாநிலங்களில் முதல் கட்டமாக வாக்குபதிவு நடக்க உள்ள 124 தொகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடைகிறது.