அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

சந்தேகத்தில் கைதான இளைஞன் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பலி

gun.jpgமட்டக் களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரதேசத்தில் விடுதலைப் புலி உறுப்பினர் என சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைதாகி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞரொருவர் நேற்று நண்பகல் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லபட்டுள்ளார்.

களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த கீர்த்தி எனப்படும் 27 வயதான ஐயாத்துரை கணேசமூர்த்தி என அடையாளம் காணப்பட்டுள்ள இந்நபர் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட பிஸ்டல் குழுவின் தலைவர் என தங்களால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஏப்ரில் மாதம் 8 ஆம் திகதி தங்களால் கைது செய்யப்பட்ட இந்நபர் கொடுத்த தகவலையடுத்து விமானம் தாக்கும் துப்பாக்கி ரவைகள் மற்றும் கைக்குண்டுகள் உட்பட பல வெடிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சவுக்கடி மயானத்தில் ஆயுதங்கள் புதைக்கப்படடிருந்த இடத்தை அடையாளம் காட்டுவதற்காக நேற்று நண்பகல் இந்நபர் அங்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும்,

அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகள் மூலம் பொலிஸாரை தாக்க முற்பட்ட வேளை மேற்கொள்ளப்பட்ட பதில் நடவடிக்கையிலேயே இவர் கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.பொலிஸ் தகவல்களின் படி அந்த இடத்தில் ரி 56 ரக துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகள் சில கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதிபதி வினோபா இந்திரன் மரண விசாரணையின் நிமித்தம் சடலத்தையும் சம்பவம் நடந்த இடத்தையும் நேரில் பார்வையிட்டார்.பிரேத பரிசோதனையின் பின்பு சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார் 

குவைத்தில் முதன்முதலாக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

kuwait.jpgகுவைத் தில் முதன்முதலாக பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நான்கு பெண்களில் மூவர் பேராசிரியர்கள், ஒருவர் பொருளாதார நிபுணர். நாட்டின் வளர்ச்சியில் பெண்களும் பங்கேற்க வாக்களித்த வாக்காளர்களை எண்ணி மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக ரோலா டஷ்தி என்ற பெண் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.

குவைத்தில் 2005 ம் ஆண்டு வரையில் பெண்கள் தேர்தலில் பங்கேற்கவோ, வாக்களிக்கவோ அனுமதியில்லை. குவைத் மன்னரின் உறவினர் பிரதமராக இருந்த போது, நிதியை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்க நாடாளுமன்றம் முனைந்தது. இதனை தொடர்ந்து மன்னர் நாடாளுமன்றத்தை கலைத்தார்.

தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் பதவியை துறக்க அத்வானி முடிவு

indian-election.jpgபா. ஜனதா கூட்டணி தோல்வி அடைந்த தால் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பத வியை ஏற்கப் போவதில்லை என்று அத்வானி அறிவித்துள்ளார். ஆனால் கட்சியின் மூத்த தலைவர்கள் அவரை சமாதானப்படுத்தி வருகின்றனர். கடந்த 2004 பாராளுமன்ற தேர்தலில் பா. ஜனதா கட்சி மட்டும் தனியாக 138 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் இந்த தேர்தலில் அதைவிட குறைவான இடங் களையே கைப்பற்றியதால் பா. ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பா. ஜனதா கூட்டணி சார்பாக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எல். கே. அத்வானியும் வருத்தம் அடைந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக பா. ஜனதா கட்சியின் தற்போதைய எம்.பிக்கள் கூட்டம் டெல்லியில் நடந்தது. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் அத்வானி தலைமையில் அந்த கூட்டம் நடந்தது.

அந்த கூட்டத்தில் பேசிய அத்வானி, ‘தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்கப் போவதில்லை என்று தெரிவித்தார். தற்போதும் காங்கிரஸை அடுத்து பா. ஜனதா அதிக இடங்களை கைப்பற்றி இருக்கிறது. எனவே, பாராளுமன் றத்தில் அதன் தலைவராக இருப்பவரே எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுவார். அந்த பதவிக்கு மத்திய காபினேட் மந்திரி பதவிக்கு இணையான அந்தஸ்து அளிக்கப்படும். அதை அத்வானி ஏற்க மறுத்துள்ளார்.

இது குறித்து கட்சியின் பொது செயலாளர் அருண் ஜெட்லி கூறுகையில், ‘எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கப் போவதில்லை என்று அத்வானி கூறியதை கட்சியின் பாராளுமன்ற குழு நிராகரித்து விட்டது. தொடர்ந்து பதவியில் நீடிக்க அவரை சமாதானப்படுத்து மாறு கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் கூறப்பட்டுள்ளது என்றார்.

மேலும் புதிய தலைவரை தேர்ந்தெடுத்து கொள்ளுமாறும், தன்னை பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியின் தலைவர்களை அத்வானி கேட்டுள்ளார். தோல்வியை தொடர்ந்து கட்சிக்குள் பல்வேறு மாற்றங்கள் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பா. ஜனதா கட்சியின் முக்கிய பொறுப்புகளில் அடுத்த தலைமுறை தலைவர்களை நியமிக்கலாம் என்று தெரிகிறது.

ராஜ்நாத் சிங்குக்கு பிறகு கட்சியின் புதிய தலைவருக்கான பட்டியலில் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. தலைமை மற்றும் கொள்கைகளில் பெரிய அளவில் மாற்றங்களை செய்ய பா. ஜனதா தீர்மானித்து இருக்கிறது.

புலிகளின் முக்கிய தலைவர் உட்பட 70 பேர் பலி

SL_Army_in_Final_Phaseஇராணுவத்தைத் தாக்கும் நோக்கில் விரைவாக வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் படகுகள் மீது படையினர் நடத்திய தாக்குதல் காரணமாகப் புலிகள் தரப்பில் 70 பேர் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கடல் ஏரியில் இன்று (17) காலையில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போதே புலிகளின் முக்கிய தலைவரொருவர் உட்பட எழுபது பேர் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட 300 பேர் தற்கொலை? இந்திய மற்றும் வெளிநாட்டு இணையத் தள செய்திகள்

smoke_.jpgமுல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் பதுங்கு குழிக்குள் மறைந்திருந்த சுமார் 300 விடுதலைப் புலிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர்களில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் சூசை, பொட்டு அம்மான் ஆகியோரும் அடங்கியிருக்கலாமெனவும்; இந்திய மற்றும் வெளிநாட்டு இணையத் தளங்கள் சற்று நேரத்துக்கு முன்னர் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இதேவேளை, புலிகள் மறைந்திருக்கும் பகுதியிலிருந்து தீச்சுவாலையுடன் வெடிபொருட்கள் வெடித்துச் சிதறும் சத்தம் தொடர்ந்து கேட்ட வண்ணம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் இவ்வாறானதொரு தற்கொலைக்கு முன்னராகத் தம்மிடமிருந்த ஆயுதங்களை அழித்தொழிக்கும் நடவடிக்கையாக அவற்றுக்குத் தீ வைத்திருக்கலாமெனவும் நம்பப்படுகிறது.

ஒரு சதுரக் கிலோமீட்டருக்கும் குறைவான பகுதிக்குள் எல்ரிரிஈ தலைவர்கள் முடக்கம்

SL_Army_in_Final_Phaseவெள்ளை முள்ளிவாய்கல் பகுதியில் சிவிலியன்களை முற்றாக விடுவித்த இராணுவத்தினர் 400X600மீட்டர் பெட்டிக்குள் எல்ரிரிஈ தலைவர்களை தற்போது முடக்கியுள்ளதாக களநிலைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 72 மணித்தியாலத்துக்குள் 50,000 க்கும் அதிகமான சிவிலியன்களை விடுவித்துள்ளதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடிய நாணயக்கார தெரிவித்தார்.  புலிகளுக்கு எதிரான தாக்குதல் தொடர்வதாகவும், இன்றைய இரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் சற்று முன்னைய களநிலைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

எல்ரிரிஈயினால் சிறைபிடித்த 7 இராணுவத்தினர் மீட்பு

mili.jpg
இராணுவத்தின் 59வது டிவிசன் படையினர் இன்று (மே:17) காலை எல்ரிரிஈயினால்  சிறை பிடித்து வைத்திருந்த படைவீரர்களை மீட்டுள்ளனர்.

இவ்வாறு 4 கடற்படைவீரர்களையும்ள 3 இராணுவத்தினரையும் மீட்டுள்ளதாக படைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.

mahinda-rajapaksha.jpgபுலிகளியக்கம் தோற்கடிக்கப்பட்ட இராணுவ வெற்றிச் செய்தியை எதிர்வரும் 19ம் திகதி 9.30 மணிக்கு பாராளுமன்றிலிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் நாட்டு மக்களுக்கு வைபவ ரீதியாக தெரிவிப்பார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புனரமைப்பு நடவடிக்கை பற்றியே விஜே நம்பியாருடன் பேசப்படும்: சமரசிங்க

mahinda-samarasinghe.jpgவிடுதலைப் புலிகளுக்கு எதிரான  மோதலுக்குப் பின்னரான புனர்வாழ்வு நடவடிக்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை நாடுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  இலங்கைக்கு வந்திருக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயக அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி விஜே நம்பியாரைச் சந்திக்கவிருக்கும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அரசாங்கத்தின் திட்டம்பற்றிக் கலந்துரையாடவுள்ளார்.

இயக்குநர் பாரதிராஜாவின் அலுவலகம் சூறை

indian-election.jpgசென்னை தேனாம்பேட்டையில் உள்ள இயக்குநர் பாரதிராஜாவின் அலுவலகத்தை சமூக விரோதிகள் சிலர் நேற்றிரவு சூறையுள்ளனர்.  திரைப்பட இயக்குநர் பாரதிராஜா இலங்கையில் தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்துவது குறித்து பல்வேறு இடங்களில் பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறார். குறிப்பிட்ட சில காங்கிரஸ் தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் இவரும், இயக்குநர் சீமானும் பேசியது வாக்காளர்களிடையே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சனிக்கிழமை மக்களவைத் தேர்தல் முடிவுகளில் சில குறிப்பிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தோல்வியைத் தழுவினர். இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் ஒரு தனியார் வணிக வளாகத்தில் உள்ள பாரதிராஜாவின் அலுவலகத்திற்குள் சனிக்கிழமை இரவு 7.50 மணி அளவில் 8 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்தது.

வந்தவர்கள் யார் என அங்கிருந்த ஊழியர்கள் விசாரிப்பதற்குள், அவர்கள் அலுவலகத்தில் இருந்த கண்ணாடி கதவுகள், கம்ப்யூட்டகள் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர்.