அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

யாழ். எழுதுமட்டுவாள், கரம்பகம் பிரதேசங்களில் மீள்குடியேற்றம்

யாழ். தென்மராட்சி கிழக்குப் பிரதேசமான எழுதுமட்டுவாள், கரம்பகம் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மீளக் குடியேறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா தெரிவித்துள்ளார். பாதுகாப்புக் காரணங்களுக்காக மக்கள் பாவனைக்கு விடப்படாதிருந்த மேற்படி பகுதிகளுக்கு நேரில் விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி மக்களை அப்பகுதியில் மீளக் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

தென்மராட்சிப் பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதன் கிழக்கு பகுதியான எழுதுமட்டுவாள் ஜே-334 கிராம சேவகர் பிரிவிலுள்ள பகுதிகளையும் கரம்பகம் ஜே-330 கிராம சேவகர் பிரிவிலுள்ள பகுதிகளையும் அப்பகுதிப் பொதுமக்களின் மீள்குடியேற்றத் திற்கான ஏற்பாடுகளை பாதுகாப்புப் படையினரின் இணக்கப்பாட்டுடன் மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் தென்மராட்சிப் பிரதேச செயலாளர் சி.ஸ்ரீனிவாசன், 523வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி ஹேமந்த பண்டார, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் சூசைமுத்து அலெக்சாண்டர் சாள்ஸ் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் பெருமளவு பொதுமக்களும் கலந்து கொண்டனர். கடந்த 10 வருட காலமாக பொதுமக்கள் பாவனைக்கு விடுவிக்கப்படாமலிருந்த கரம்பகம், எழுதுமட்டுவாள் ஆகிய பகுதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கடும்பிரயத்தனத்தின் மத்தியில் மீள்குடியேற்றத்திற்கு விடப்பட்டுள்ளது.

அப்பகுதியில் மீளக்குடியேறத் தயாராக இருந்த மக்கள் மத்தியில் உரை நிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்போது ஏற்பட்டுள்ள புதிய ஜனநாயக சூழ்நிலையில் நாம் கடந்த காலத்தில் இழந்தவற்றை ஈடுசெய்யும் பொருட்டு தொடர்ந்து பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருவதுடன் மீள்குடியேற்ற நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மியன்மார் உயர்தலைவரின் இலங்கை விஜயத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

myanmar_president.jpgமியன்மார் இராணுவ உயர்தலைவரின், இலங்கை விஜயத்தை கண்டித்து இன்று இலங்கையின் தலைநகர்  கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம், நடத்தப்பட்டது. இடதுசாரி கட்சிகள் உட்பட்ட சமூக அமைப்புகள் இதனை ஏற்பாடு செய்திருந்தன. மியன்மாரில் ஜனநாயக உரிமைகளை பேணுமாறு கோரி, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோசங்களை எழுப்பினர்.

தமிழ் இளைஞர் கடலில் அடித்துக் கொலை: சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேர் சேவையில் இடைநிறுத்தம்

Bambalappitty_Police_Brutalityபம்பலப்பிட்டி கடற்கரையில் தமிழ் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நான்கு பேர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொலிஸ் திணைக்களம் உச்ச சட்ட நடவடிக்கையை எடுத்துள்ளது.

மன்னார்- கருங்கண்டல் பிரதேசத்தில் நேற்று ஏர்பூட்டு விழா – அமைச்சர் ரிஷாத், ஆளுநர் சந்திரசிறி அதிதிகள்

வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மன்னார் மாந்தை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கருங்கண்டல் பிரதேசத்தில் ஏர்பூட்டு விழா நேற்று இடம்பெற்றது. மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஏர்பூட்டு விழாவை உத்தி யோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்த வைபவத்தில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மாந்தைப் பிரதேசத்தில் மீளவும் குடியேறிய மக்கள் விவசாய நடவடி க்கைகளை மேற்கொள்வதற்கு இங்குள்ள 4 ஆயிரம் விவசாய நிலங்களை மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருப் பதுடன், மானிய விலையில் உரம் மற்றும் விதை நெல் என்பனவற்றை அரசாங்கம் வழங்கவிருப்பதாகவும் இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

மாந்தை பிரதேசத்தில் 2600 குடும்பங்கள் வாழ்ந்த போதிலும் தற்போது 1600 குடும்பங்கள் மாத்திரமே அரசாங்கம் மீள்குடியமர்த்தியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தற்போது கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை துரிதப்படுத்த ப்பட்டுள்ளன. எனவே, அவை முடி வடைந்ததும் எஞ்சியுள்ள குடும்பங்களை மீள்குடியேற்ற இருக்கிறோம்.

இங்கு ஆரம்பிக்கப்படும் விவசாய நடவடிக்கைகளுக்காக கட்டுக்கரைக் குளம் பிரதேசத்திலிருந்து நீரைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

பாகிஸ்தான் விமானப்படை தளபதி இலங்கை வருகை

பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயார் சிவ்மார்ஷல் ராவ் ஒமார் சுயெல்மான் இலங்கைக்கு வியாழக்கிழமை வருகை தந்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ,  விமானப்படைத்தளபதி எயார் சிவ்மார்ஷல் ரொஷான் குணதிலக மற்றும் பாதுகாப்பு உயரதிகாரிகளை அவர் சந்திக்கவிருக்கிறார். தமது விஜயத்தின்போது கட்டுநாயக்க விமானப் படைத்தளத்திற்கும் அவர் செல்வார் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐ.தே.மு கொள்கை விளக்கக் கோவை கையளிப்பு ஊர்வலம் ஆரம்பம்

ranil.jpgஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கை விளக்கக் கோவையினை கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்த பௌத்த பீடங்களைச் சேர்ந்த மகாநாயக்கர்களுக்குக் கையளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊர்வலம் சுமார் 250 வாகனங்களுடன் இன்று முற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமாகியது. ரணில் விக்கிரமசிங்க, ரவூப் ஹக்கீம், மங்கள சமரவீர உள்ளிட்ட முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஊர்வலத்தில் கலந்துகொண்டுள்ளனர்.நாளை விசேட மத வழிபாடுகளில் ஈடுபட்டபின்னர் மகாநாயக்கர்களை சந்திக்கவுள்ளனர்

நன்றி ; புகைப்படம் www.dailymirror.lk

முல்லை மீள்குடியேற்ற பகுதியில் விவசாய நடவடிக்கை ஆரம்பம்

imalda.jpgமுல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் மீளக் குடியமர்ந்த பிரதேசங்களில் விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக 17ஆம் திகதி விவசாயக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக அரச அதிபர் கூறினார். இதன் போது 10 சிறிய குளங்களையும் 10 பெரிய குளங்களையும் புனரமைப்புச் செய்து விவசாயத்துக்குத் தேவையான நீர்ப்பாசனத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆராயப்படவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்றைய தினத்துடன் 1682 குடும்பங்களைச் சேர்ந்த 5532 பேர் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளதாக அரச அதிபர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் 4415 குடும்பங்களைச் சேர்ந்த 16394 பேரை மீளக் குடியமர்த்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அரச அதிபர் தெரிவித்தார். குறித்த காலப் பகுதிக்குள் துணுக்காய் பிரதேசத்தில் 10312 பேரும், மாந்தையில் 4691 பேரும், ஒட்டுச்சுட்டானில் 1391 பேரும் மீளக் குடியமர்த்தப்படுவர் என அரசாங்க அதிபர் மேலும் கூறினார்.

இலங்கையின் தற்போதைய நிலை பற்றி தென் ஆபிரிக்கா. தமிழர்களுக்கு விளக்கப்படும்

இலங்கையைப் பற்றிய பொய்ப் பிரசாரங்களை பரப்புவதன் மூலம் இலங்கையின் கீர்த்திக்கு பங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய சிலர் இப்போதும் ஈடுபட்டு வருவதாக தென் ஆபிரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் திருமதி மெயிட்டே நெகோனா மெஷபானே கூறியுள்ளார்.

இலங்கையில் நிலவும் தற்போதைய நிலை தொடர்பாக தனது நாட்டின் தலைமைத்துவத்துக்கும் மற்றும் அங்கு வசிக்கும் தமிழ் மக்களுக்கும் அறிவுறுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க விருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தென்னாபிரிக்க வெளிவிவகார அமைச்சர் நேற்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசினார். அப்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஏ-9 வீதி போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்வு

யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களின் செளகரியம் கருதி ஏ-9 வீதியின் மூலம் பொருட்களை எடுத்துச் செல்லவும் பயணிகள் போக்குவரத்துக்கும் இருந்த கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக அரசாங்கம் நேற்று விடுத்த அறிக்கையில் தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள் பற்றி மேலும் கூறப்பட் டுள்ளதாவது,

நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் இருப்பதைப் போன்றே யாழ்ப்பாணத்துக்கும் பொருட்களை கொண்டு செல்வதற்கு அல்லது எடுத்து வருவதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை.

அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகத்திடம் ஏற்கனவே பதிவு செய்யப் பட்டுள்ள வாகனங்கள் பொருட்களை கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

யாழ்ப்பாணத்துக்கு பொருட் களை கொண்டு செல்வதற்கான வாகனங் களை அத்தியாவசிய சேவைகள் ஆணை யாளர் நாயகத்திடம் பதிவு செய்வது 2009 நவம்பர் 30ஆம் திகதி வரை நீடி க்கப்பட்டுள்ளது. அரசாங்க டிப்போக்கள், கூட்டுத்தாபனங்கள் வங்கிகள் மற்றும் உற்பத்திக் கம்பனிகள் தமது சொந்த வாகனங்களில் பொருட்களை 6 மாதகாலத்துக்கு தொடர்ந்து எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்களை அந்த நிறுவனங்கள் அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பொது மக்கள் தற்போது சேவையிலீடுபடும் பொது போக்குவரத்து மூலம் அல்லது தனியார் பஸ்கள் மூலம் யாழ்ப்பாணம் செல்வதற்கும் அங்கிருந்து திரும்புவதற்கும் அனும திக்கப்படுவர்.

கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் சேவையிலீடுபட விரும்பும் தனியார் பஸ் மற்றும் சொகுசு பஸ்களின் சொந்தக்காரர்கள் அதற்கான வீதி அனுமதிப் பத்திரங்கங்களுக்காக தேசிய போக்குவரத்து ஆணைக் குழுவிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

துறைமுக அதிகார சபையின் கப்பல்களுக்கான அனுமதி மற்றும் சேவைக்கான தேவைகளுக்கு ஏற்றதாக அமையும் வகையிலான தனியார் கப்பல்கள் நாட்டின் எந்தவொரு துறைமுகத்தில் இருந்தும் வட பகுதிக்கு பொருட்களை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும். இதற்கு அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகத்தின் அங்கீகாரம் தேவைப்படமாட்டாது.

சரத் பொன்சேகா பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார்

031109sarathfonseka.jpgஜெனரல் சரத் பொன்சேகா கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவியிலிருந்து  ஓய்வு பெறுவதற்கான விண்ணப்பக் கடிதத்தை இன்று பிற்பகல்  ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார். இதனை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உறுதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா பொது வேட்பாளராக களமிறங்கவிருப்பதாக வெளியான தகவலின் மத்தியிலேயே இந்த கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவரது பதவிக்காலம் எதிர்வரும் டிசம்பர் 15 ஆந் திகதியோடு நிறைவு பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.