அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

டிசம்பர் 5இல் மெளலவி ஆசிரியர் நியமனம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் விசேட பணிப்புரைக் கமைய டிசம்பர் 05 ஆம் திகதி மெளலவி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கப்படவுள்ள தாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்தார்.

மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப் பேகடுவையின் கண்டி உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற மத்திய மாகாண ஸ்ரீல. சு. கட்சி அமைப்பாளர்களுக்கான விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தார்.

மேல்மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா, ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்வர் ஆகியோர் கடந்த வியாழக்கிழமை நிதி அமைச்சு மற்றும் திறை சேரியின் செயலாளர் கலாநிதி பீ. பி. ஜயசு ந்தரவைச் சந்தித்து நடாத்திய பேச்சு வார்த்தையையடுத்து இந்நியமனங்களுக்கான நிதியை உடனடியாகக் கல்வியமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறு பணிப்புரை விடுக்கப்ப ட்டது

பொதுவேட்பாளரை நாளை ஐ.தே.மு. அறிவிக்கும்

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் பொதுவேட்பாளர் யார் என்பதை நாளை புதன்கிழமை கூட விருக்கும் முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களது கூட்டத்தில் அறிவிக்கப்படவிருக்கின்றது. எதிரணி பொது முன்னணியின் பொதுவேட்பாளராக பெரும்பாலும் ஜெனரல் சரத் பொன்சேகாவே தேர்ந்தெடுக்கப்படுவார் என அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

பொதுவேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் ஜே.வி.பி.யும் இணக்கப்பாடு கண்டிருப்பதாகவும் நாளை புதன் கிழமை நடைபெறவிருக்கும் கூட்டத்தில் ஜே.வி.பி.யும் கலந்துகொள்ளவிருப்பதாக ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வமான அறிவிப்பு நேற்று மாலை வெளிவரும் எனத் தெரியவந்ததையடுத்தே பொதுவேட்பாளரை நாட்டுக்கு பகிரங்கமாக அறிவிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவிருக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் இந்த விசேட நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளதும் தலைவர்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர். பொது வேட்பாளர் யார் என்பதை அறிவித்த பின்னர் அவரை அறிமுகப்படுத்தும் பொதுக்கூட்டத்தை பாரிய அளவில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புவி அழகி – 2009 : பிரேசில் மங்கை முதலிடம்

miss_earth.png2009-ம் ஆண்டின் “புவி’ அழகியாக பிரேசில் மங்கை லாரிசா ரமோஸ். (இடமிருந்து 3-வது) தேர்ந்தெடுக்கப்படடுள்ளார். இந்தப் போட்டி பிலிப்பின்ஸில் நேற்று நடைபெற்றது. இரண்டாமிடம் பிடித்த பிலிப்பின்ஸ்  மங்கை சாண்ட்ரா சைஃபெர்ட் (இடமிருந்து 2-வது). மூன்றாவது இடத்தை வெனிசுலாவின் ஜெஸிகா பார்பரா பிடித்தார். “தண்ணீர்’ அழகியாக ஸ்பெயினின்  அலெஜாண்ட்ரா இஸவாரியா பட்டம் வென்றார்..

பிரான்ஸ் தமிழரிடம் பணம் பறித்த விடுதலைப்புலிகளுக்கு சிறைத்தண்டனை

பிரான்ஸில் வாழுகின்ற தமிழர் சமூகத்திடம் மிரட்டிப் பணம் பறித்த குற்றச்சாட்டின் கீழ் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒரு குழுவினருக்கு ஒரு பிரஞ்சு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. என BBC தெரிவித்துள்ளது

இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான போருக்காக பல லட்சக் கணக்கான டாலர்களை இந்தக் குழுவினர் பிரான்ஸில் வாழும் தமிழ் மக்களிடம் மிரட்டிப் பறித்ததாக கூறப்படுகிறது.

விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரான்ஸ் நாட்டுப் பிரிவின் தலைவரான நடராஜா மதிந்திரன் என்பவர் உட்பட 21 பேர் இந்த வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டுள்ளனர்.

பாரிஸிலும், அண்மைய பகுதிகளிலும் வாழும், பெரும்பாலும் அரசியல் அகதிகளான தமிழர்களிடம், புரட்சி வரி என்ற பெயரில் இந்தப் பணம் அறவிடபட்டதாக அரச தரப்பு வழக்குத்தொடுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை விவகாரம்; மலேசிய பாராளுமன்றத்தில் கடும் விவாதம்

மலேசியப் பாராளுமன்றத்தில் இலங்கை விவகாரம் தொடர்பாக நேற்று திங்கட்கிழமை கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம் பெற்றுள்ளன. மலேசியாவிலுள்ள இந்திய சமூகத்தவர்கள் (பெரும்பான்மையானோர் தமிழர்கள்) மத்தியில் செல்வாக்கைத் தேடுவதற்கு முயற்சிக்கும் எதிர்க்கட்சித் தலைவரான அன்வர் இப்ராகிம், இலங்கையில் தமிழ் அகதிகள் தொடர்பாக கொழும்பு மீது குற்றச்சாட்டு சுமத்தியதாக மலேசிய பிரதி வெளிவிவகார அமைச்சர் குற்றம் சாட்டியதையடுத்து கடுமையான தர்க்கம் இடம் பெற்றது.  இலங்கை அரசு அகதிகளின் நலன்களை புறக்கணித்ததாக தெரிவித்ததன் மூலம் இந்திய சமூகத்தவரின் செல்வாக்கைப் பெற்றுக் கொள்ள முயற்சிப்பதாக பிரதி வெளி விவகார அமைச்சர் கோகிலன்பிள்ளை குற்றம் சாட்டியதாக போர்னாமா செய்திச் சேவை தெரிவித்தது.

இலங்கையின் நெருக்கடியை உள்நாட்டு விவகாரமாகவே மலேசியா பார்ப்பதாகவும் மலேசிய அரசின் வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படையில் இலங்கைப் பிரச்சினை அதன் உள்நாட்டு விவகாரம் என்றும் கோகிலன் பிள்ளை கூறியுள்ளார்.  அகதிகளின் பாதுகாப்பு, நலன்கள் தொடர்பாக மனித உரிமைக் குழுக்களுடன் நெருங்கிச் செயற்படப் போவதாக ஐ.நா.செயலாளர் நாயகம் பான்கீ மூனுக்கு இலங்கை அரசு உறுதியளித்திருப்பதாகவும் கோகிலன் பிள்ளை மலேசியப் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.

செனட்டர் பி.இராமசாமி எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்திருக்கிறார்.  இலங்கையில் மோதலின் போது பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்பட்டமை மற்றும் 3 இலட்சம் அகதிகளின் அவல நிலை தொடர்பாக கொழும்பை மலேசிய அரசு ஏன் கண்டிக்கவில்லை என்று இராமசாமி கேள்வி எழுப்பியிருந்தார்.

மலேசியாவும் இலங்கையும் நட்பு நாடுகள் எனவும் இலங்கையின் முயற்சிகளுக்கு மலேசியா ஆதரவளித்ததாகவும் கூறிய கோகிலன் பிள்ளை, இலங்கை தொடர்பாக சர்வதேச சமூகம் கொண்டிருக்கும் விருப்பங்கள் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.

ஈரான் ஜனாதிபதி பிரேஸில் பயணம்: இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

ஈரான் ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத் நேற்று திங்கட்கிழமை பிரேஸில் பயணமானார். இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் பிரேஸில் ஜனாதிபதி ஈரான் ஜனாதிபதியை வரவேற்கவுள்ளார். பிரதான வர்த்தக உடன்படிக்கையில் இருதலைவர்களும் கையெழுத்திட்ட பின்னர் நடைபெறவுள்ள முக்கிய நிகழ்ச்சிகளில் ஈரான் தலைவர் பங்கேற்கவுள்ளார்.

பிரேஸில் பல்கலைக்கழகத்தில் உரையாற்றவும் பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொள்ளவும் பிரேஸில் காங்கிரஸில் உரையாற்றவும் ஈரான் ஜனாதிபதி அழைத்துச் செல்லப்படவுள்ளார். மேற்கு நாடுகளின் அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில் பிரேஸிலுடனான உறவை வளர்ப்பதில் ஈரான் அக்கறை செலுத்தியுள்ளது.

இஸ்ரேல் ஜனாதிபதி ஷிமோன் பெரஸ் அண்மையில் பிரேஸில் சென்ற வேளை இவரது விஜயத்தை எதிர்த்துப் பாரிய ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். ஈரான் யுரேனியத்தை மின்சாரத் தேவைக்காகவும் அமைதியான முறையிலும் கையாள்வதாக கடந்த செப்டம்பர் மாதம் ஏ. எப். பி. செய்திச் சேவைக்கு பிரேஸில் ஜனாதிபதி தெரிவித்தார். இதிலிருந்து இவ்விரு நாடுகளினதும் உறவுகள் விரிவடைய ஆரம்பித்துள்ளன.

பிரேஸில் பயணம் குறித்து ஈரான் ஜனாதிபதி கடந்த வெள்ளிக்கிழமை கூறியபோது இருநாடுகளினதும் பல்வேறுபட்டதுறைகளுக்கு இரு நாடுகளினதும் ஒத்துழைப்பு அவசியம் என வலியுறுத்தினார். மேற்கத்தேய நாடுகள் ஏனைய நாடுகளின் விஞ்ஞான வளர்ச்சியைத் துண்டிக்க முயற்சிப்பதாகவும் அஹ்மெதி நெஜாத் குறிப்பிட்டார்.

பிரேஸில் மக்கள் உள்ள பக்கம் ஈரான் மக்கள் உள்ளனர். அப்பாவிப் பொது மக்களுக்கெதிரான ஷியோனிஸவாதிகளின் தாக்குதல்களைக் கண்டிக்கும் விடயத்தில் பிரேஸிலியர்களும் ஈரானியர்களும் ஒற்றுமையுடனுள்ளதாகவும் ஈரான் ஜனாதிபதி குறிப்பிட்டார். மேற்கு நாடுகளின் அழுத்தங்கள் அச்சுறுத்தல்களைப் பொருட்படுத்தாத ஈரான் ஜனாதிபதி தென்னமெரிக்க நாடுகளுடனான உறவை வளர்ப்பதில் அக்கறையுடனுள்ளார். யுரேனியத்தை செறிவூட்டும் ஈரான் ரகசியமாக அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாக இஸ்ரேலும் மேற்குலக நாடுகளும் சந்தேகிக்கின்றன.

இவ்வாறான நிலையில் பிரேஸில் ஈரானுடன் உறவு கொள்வதை அந்நாடுகள் கடுமையாக விமர்சித்துள்ளன. பொருளாதார நெருக்கடியிலிருந்து பாதுகாப்புப் பெற பிரேஸில் ஈரானுடன் தொடர்புகளைப் புதுப்பிப்பதாகவும் விமர்சிக்கப்படுகிறது. 2010 ல் ஈரானுக்கு வருமாறு பிரேஸில் ஜனாதிபதியை அஹ்மெதி நெஜாத் அழைப்புவிடுப்பார்

யாழில் கல்வி வெளியீட்டு திணைக்கள கிளை

260909srilanka.jpgயாழ். கல்விச் சமூகத்தின் நன்மை கருதி கல்வி அமைச்சின், கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் கிளை யொன்றினை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைப்பதற்கு நட வடிக்கை எடுத்துள்ளதாக பிரதிக் கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

மேற்படி கிளைமூலம் பாரிய சேவையை வழங்க முடிவதுடன் மாண வர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை திறம் பட மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படு மென தாம் நம்புவதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

கிறிஸ்மஸ் தீவு தாக்குதலில் சம்பந்தப்பட்டோர் திருப்பி அனுப்பப்படும் நிலை ஏற்படலாம் அவுஸ்திரேலியா எச்சரிக்கை

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான், இலங்கையைச் சேர்ந்த புகலிடம் கோருவோருக்கு இடையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று அவுஸ்திரேலிய குடிவரவுத் துறை அமைச்சர் கிறிஸ் இவான் தெரிவித்துள்ளார்.

இத் தாக்குதலில் காயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தடிகள், தும்புக்கட்டைகளால் தடுப்பு நிலையத்திலுள்ள இரு நாட்டவர்களும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தியுள்ளனர். “இந்த விடயங்கள் தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டிருப்போருடன் நாம் ஆராய்ந்து வருகிறோம். ஆனால், புகலிடம் கோரும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் அது தொடர்பாக ஆட்கள் கவலையடைவார்கள். அவர்கள் அகதிகளென அடையாளம் கண்டு கொள்ளப்பட்டால் எமது பாதுகாப்பு அவர்களுக்கு கொடுக்கப்படும்.

இல்லாவிடின் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று கிறிஸ் இவான்ஸ் கூறியுள்ளார். முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் வன்முறைக்கு பொறுப்பானவர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருக்கிறார். கிறிஸ்மஸ் தீவு தடுப்பு நிலையத்தில் 975 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தடுத்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக தமது விரக்தியை அங்குள்ளோர் தெரிவித்திருப்பதாக அகதி செயல்பாட்டு முன்னணியின் பேச்சாளர் அயன் ரின்ரவுல் ஏ. பி. சி. செய்திச் சேவைக்கு கூறியுள்ளார். இதேவேளை, சில அகதி விண்ணப்பங்கள் தொடர்பான பெறுபேறுகளை அடுத்து ஏற்பட்ட தப்பபிப்பிராயத்தினால் வன்முறை மூண்டதாக பிரதமர் கெவின்ரூட் கூறியுள்ளார்.

“கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர் ஒருவர் பாரதூரமான குற்றச் செயலை மேற்கொண்டிருந்தால் அவர்களுக்கு விசா வழங்குவதா? இல்லையா? என்பது தொடர்பாகக் கணிப்பீடு செய்யும் போது இந்த விடயமும் பரிசீலனைக்கு எடுக்கப்படும் என்று அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின்ரூட் பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.

அகதிகளுக்கு நடமாடும் சுதந்திரம் ஐ.நா. செயலாளர் நாயகம் வரவேற்பு

ban-ki.jpgவவுனியாவில் இராணுவத்தின் காவலுடன் தங்கவைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு நடமாடும் சுதந்திரத்தை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருப்பதை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் வரவேற்றுள்ளார்.

வட இலங்கையிலுள்ள முகாம்களில் தற்போது வசிக்கும் இடம்பெயர்ந்த மக்களின் நடமாடும் சுதந்திரத்தை அதிகரிப்பதென இலங்கை அரசு மேற்கொண்ட தீர்மானத்தை செயலாளர் நாயகம் வரவேற்றுள்ளார் என்று அவரின் பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கைகளையே இலங்கை அதிகாரிகளுக்கு நீண்டகாலமாக ஐ.நா. வலியுறுத்தி வந்தது என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களின் மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதற்காக அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்திருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ வவுனியாவில் நிருபர்களிடம் கூறியிருந்தார். ஜனவரி இறுதிவரை கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது நடைமுறையில் இருக்கும் என்றும் ஜனவரி இறுதியில் சகலரும் இருப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றுவிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

பாதுகாப்பு வீரர்களுக்கான ‘ரணஜயபுர’ நேற்று ஜனாதிபதியால் அங்குரார்ப்பணம்

mahinda0.jpgஅநுராதபுர இப்பலோகமவில் அரசாங்கத்தால் பாதுகாப்புப் படை வீரர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள ‘ரணஜயபுர’ வீடமைப்புத் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்து படையினர்களிடம் கையளித்தார். 180 ஏக்கர் விஷ்தீரணமுள்ள காணியில் சகல வசதிகளையும் கொண்ட 1509 வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

புதிய வீடுகளுடன் மருத்துவ நிலையம், சிறுவர் பாடசாலை, வங்கி வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் அழகிய அமைதி சூழ்ந்த பிரதேசத்தில் இவ்வீடுகள் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. நேற்று முற்பகல் மேற்படி ‘ரண ஜயபுர’ வுக்கு வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ படை வீரர்களின் பிள்ளைகளால் வரவேற்கப்பட்டார்.  முப்படைத் தளபதிகள் மற்றும் படை உயரதிகாரிகளுடன் உள்நாட்டு வெளிநாட்டு இராஜதந்திரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.