அண்மையில் கனடாவில் கைதான 78 இலங்கையர்கள் சென்ற ஓசியன் டேடி கப்பலில் இருந்து மீண்டும் ஆர் டீ எக்ஸ் மற்றும் சைக்லோ ஓக்சிஜன் போன்ற பாரிய வெடிப்புகளை ஏற்படுத்தக் கூடிய பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பொருட்கள் கப்பலின் முக்கிய பல மூன்று பகுதிகளில் மறைத்து வைக்கபட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அருட்சல்வன் வி
அருட்சல்வன் வி
கண்டியில் ஏ(எச்1என்1) பாதிப்புக் குள்ளான 24 பேர் பேராதனை ஆஸ் பத்திரியிலும் 14 பேர் கண்டி ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் சாந்தி சமரநாயக்க தெரிவித்தார்.
மாத்தளை பிரதேசத்தில் ஏ(எச்1என்1) வைரசினால் பீடிக்கப்பட்ட 17 பேர் மாத்தளை ஆதார வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மாத்தளை மாவ ட்ட சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஏ(எச்1என்1) வைரசினால் (பன்றிக் காய்ச்சல்) பீடிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக மாத்தளை, தம்புள்ள, இறத்தோட்டை ஆஸ் பத்தி ரிகளில் விசேட சிகிச்சைப் பிரி வுகள் மத்திய மாகாண சுகாதார அமைச்சினால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
ஒரு இராணுவ அதிகாரியிடமிருந்து ஜனநாயக ஆட்சியை எதிர்பார்க்க முடியுமா எனக் கேள்வி எழுப்பிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ, விடுதலைப் புலிகளின் பொங்கு தமிழ் நிகழ்வில் மேடையேறிய தேசத்துரோகிகளான மனோ கணேசன், ரவூப்ஹக்கீம் ஆகியோருடனும் தேசத்தைக் காட்டிக்கொடுத்த ரணில், மங்கள சமரவீரவுடனும் ஜெனரல் சரத் பொன்சேகா இணைந்து கொள்வது இன்னொரு துரோகச் செயலுக்காகவா எனவும் கேட்டார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் நாடு ஈட்டிய யுத்த வெற்றியை ஜெனரல் சரத் பொன்சேகா காட்டிக்கொடுக்க முற்படுவதாகவும் விமல் வீரவன்ஸ குற்றச்சாட்டு சுமத்தினார். நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு மகாவலி நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ இவ்வாறு தெரிவித்தார்.
ஜே.வி.பி.தலைவர் ரோஹன விஜேவீரவை கொலை செய்தவர்களில் ஒருவராக காணப்படும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருடன் ஜே.வி.பி.யினர் ஒரே மேடையில் தோன்றி மக்கள்முன் செல்லப்போகின்றனர். இவர்களுக்கு வெட்கம், மானம், ரோசம் என்பன கிடையாதா எனக் கேட்கவிரும்புகின்றேன்.
ஜே.வி.பி.யின் நோக்கமென்ன, ஒரு இராணுவ அதிகாரியால் ஜனநாயக ஆட்சியை நடத்த முடியுமா? நாட்டில் இன்னொரு பிரளயத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சியிலேயே ஜே.வி.பி.யினர் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பேராபத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட வேண்டுமெனவும் விமல் வீரவன்ஸ கேட்டுக் கொண்டார்.
சட்டவிரோத ஆட்கடத்தலில் 100 க்கு மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற நான்கு மீன் பிடி படகுகளை இலங்கை கடற்படை யினர் தென் பகுதி ஆழ்கடலில் கைப்பற்றிய துடன் அதில் இருந்தவர்களை காலிக்கு கொண்டு வந்து தடுப்புக்காவலில் வைத்து ள்ளனர். இந்த நான்கு படகுகளில் இரண்டு நேற்றும் (23) இரண்டு படகுகள் இன்றும் (24) கடற் படையினரால் கைப்பற்றப்பட்டன.
இந்த நடவடிக்கைக்கு விமானப் படையினரும் பொலிஸாரும் கடற்படைக்கு உதவியுள்ளனர்.கைப்பற்றப்பட்ட சமயம் இந்த படகுகள் அவுஸ்திரேலியாவை நோக்கி சென்றுகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அவுஸ்திரேலியா செல்வதற்காக படகில் இருந்தவர்கள் பெருந்தொகை பணத்தை இந்த சட்டவிரோத ஆட்கடத்தில் ஈடுபட்டவர்களிடம் கொடுத்திருப்பதாகவும் இவர்களில் தமிழர்களுடன் சிங்களவர்களும் இருப்பதாக கூறிய கடற்படை பேச்சாளர் இவர்களில் மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு கடற்படையினர் உதவி வருவதாக குறிப்பிட்டார்.
இந்தியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அருசாக் காந்தாவும் அவரது குழுவினரும் இன்று யாழ். மாநகர சபைக்கு விஜயம் செய்யவுள்ளதாக யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ஜெனரல் பொன்சேகாவை தாம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஜெ வி பி கூறியுள்ளது. ஜே.வி.பி கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க இத்தகவலை வெளியிட்டுள்ளார்
பிற எதிர்கட்சிகளும் இவரை ஆதரிக்க வேண்டும் என்று அக்கட்சி கோரியுள்ளது. ஆனால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு தேர்தலில் நிற்பது குறித்து ஜெனரல் பொன்சேகா எதவும் கூறாமல் இருந்து வருகிறார். அதே நேரம் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் இது பற்றி எதுவும் தெரிவிக்காமல் உள்ளது.
பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான ஆகக் கூடிய வய தெல்லை 45 ஆக அதிகரிக்கப்பட்டு ள்ளதென அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு வழங்குவதற்கான வயதெல்லை 35 ஆகும். இதனை அதிகரிப்பதற்கான வேண்டு கோளை அமைச்சர் முரளிதரன் ஜனாதிபதியிடம் விடுத்திருந்தார் இதற்கமைய இந்த வயதெல்லை அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இராணுவ தளபதியும், கூட்டுப்படை தலைமையதிகாரியுமான, சரத் பொன்சேகா உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். முன்னாள் படைத்தளபதியான தமக்கு உரிய பாதுகாப்பை வழங்கவேண்டும் என்றும், உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்குவதற்கு அனுமதிக்கவேண்டும் என்றும் அவர் தமது மனுவில் கோரியுள்ளார்.
சரத் பொன்சேகா, பதவியில் இருந்த போது அவருக்கு சுமார் 750 பேர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். எனினும் அந்த பாதுகாப்பு தற்போது 25 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அவர் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறவேண்டும் என்றும் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிலிப்பைன்ஸின் மகுண்டனோ மாகாணத்தில் 21 பேர் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டோர் மகுண்டனோ மாகாண உள்ளூர் அரசியல் வாதிகளின் ஆதரவாளர்களும், ஊடகவியலாளர்களுமாவர். உள்ளூர் ஆட்சி தேர்தல்களுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்யச் சென்றோரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டனர். தீவிரவாத அமைப்பு கடந்த திங்கட்கிழமை இவர்களை ஆயுதமுனையில் கடத்திச் சென்றதாக அறிவிக்கப்படுகின்றது.
படுகொலை செய்யப்பட்ட 21 பேரின் சடலங்களைக் கண்டெடுத்ததாகக் கூறிய பொலிஸார் இவர்களில் 13 பேர் பெண்களென்றும் சடலங்கள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுத்ததாகவும் கூறினர். பிரேதங்களின் தலைகள் துண்டிக்கப்பட்டும், உருக்குலைந்த நிலையிலும் காணப்பட்டன.
கொலைசெய்யப்பட்டோரில் உள்ளூர் அரசியல் வாதியின் மனைவியும் அடங்குகின்றார். மாகாண ஆளுநருடன் தொடர்புகொண்ட ஆயுததாரிகள் இவர்களைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படுவதை ஆளுநர் முற்றாக நிராகரித்துள்ளார். தேர்தலில் வாக்களிக்கக் கூடாதென முஸ்லிம் அமைப்பொன்று ஏற்கனவே எச்சரிக்கை விடுத்ததாகப் பொலிஸார் கூறினர்.
அரசியல் நோக்கங்களுக்காக இக்கொலைகள் நடந்துள்ளன. ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டமைக்கு பிலிப்பைன்ஸ் அராசங்கம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளது. பிலிப்பைன்ஸில் அடுத்த வருடம் பொதுத் தேர்தல் உள்ளிட்ட முக்கிய தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. இதை முன்னிட்டு உள்ளூராட்சித் தேர்தல்கள் சில மாகாணங்களில் நடத்தப்படவுள்ளன. இத் தேர்தலில் வாக்களிக்கவோ போட்டியிடவோ கூடாதென பிரிவினைவாத அமைப்புக்கள் கோரியுள்ளன.
உரிய காலத்துக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த தீர்மானம் குறித்து தேர்தல் ஆணையாளருக்கு நேற்று நண்பகல் சுப நேரத்தில் அறிவிக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சகல கட்சித் தலைவர்களையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று காலை சந்தித்தார். ஜனாதிபதித் தேர்தலை உடனடியாக நடத்தத் தீர்மானித்திருப்பதாக கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி இங்கு அறிவித்தார்.
ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தை கட்சித் தலைவர்கள் அனைவரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டதாகவும் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டார். இந்தச் சந்திப்பில் சகல மாகாண சபை முதலமைச்சர்களும் கலந்து கொண்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ 2005 நம்பவர் 18ம் திகதி இலங்கையின் 5வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அவரின் பதவிக் காலம் 2011 நவம்பர் 18 ஆம் திகதி நிறைவ டைய உள்ள நிலையில் ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டி நடத்த ஜனாதிபதி முடிவு செய்துள்ளார்.
ஜனாதிபதி தனது முடிவை முறைப்படி கடிதம் மூலமாக நேற்று (23) தேர்தல் ஆணை யாளருக்கு அறிவித்தார். இதன்படி ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்படும் திகதியை தேர்தல் ஆணையாளர் வெகுவிரைவில் அறிவிப்பார் என தேர்தல் செயலக வட்டாரங்கள் கூறின.
நான்காண்டுகள் முடிவடைந்த பின்னர் எந்த நேரத்திலும், மேலுமொரு தவணைக்குப் பதவி வகிப்பதற்காக தேர்தல் மூலம் ஆணையொன்றுக்கென மக்களை வேண்டி நிற்பதற்கான தமது முன்னத்தை பிரகடனம் மூலம் வெளிப்படுத்தலாம் என அரசியலமைப்பின் 31 (3) (அ) (1) இந்த சரத்து ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது. இதன்படி முன்கூட்டி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.