அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

எட்டு மாவட்டங்களில் பெரும் மழை; வெள்ளம் சுமார் 2 இலட்சம் பேர் நிர்க்கதி; 6 பேர் பலி

rain.jpgநாட்டின் பல்வேறு பாகங்களிலும் நேற்று பெய்த மின்னலுடன் கூடிய அடை மழை காரணமாக அறுவர் உயிரி ழந்திருப்பதுடன் 16 பேர் காயமடைந் திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர நடவடிக்கைளுக்கான பணிப்பாளர் பிரிகேடியர் என். பி. வேரகம தெரிவித்தார்.

rain.jpgஎட்டு மாவட்டங்களிலுள்ள 45 ஆயிரத்து 75 குடும்பங்களைச் சேர்ந்த, ஒரு இலட்சத்து 91 ஆயிரத்து 908 பேர் கடந்த 48 மணித்தியாலங்களுக்குள் பெய்த அடை மழை வெள்ளத்தினால் நிர்க்கதிக்குள்ளா கியிருப்பதாகவும் அவர் கூறினார். கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, குருணாகல், காலி, புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே நேற்றைய மழையினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இம் மாவட்டங்களிலுள்ள 18 வீடுகள் முழுமையாகவும் 47 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

அடை மழை காரணமாக கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த ஐவரும் மின்னல் தாக்கியதில் அனுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் நேற்று உயிரிழந்துள்ளனர். இதேவேளை 11 பேர் மழையினாலும் அனுராதபுரத்தைச் சேர்ந்த 5 பேர் மின்னல் தாக்கியதில் காயமடைந்து வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

களுகங்கை மற்றும் களனி கங்கையின் நீர்மட்டங்கள் அதிகரித்து வருவதாகவும் பணிப்பாளர் பிரிகேடியர் என். பி. வேரகம தெரிவித்தார். இம்மழை காரணமாக மேல் மாகாண மக்களின் இயல்பு வாழ்க்கையும், போக்குவரத்துகளும் பெரிதும் பாதிக்கப் பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இம்மழையினால் மேல் மாகாணத்திலுள்ள பல வீதிகள் நீரில் மூழ்கியதே இதற்குக் காரணமாகும். அதனால் தாழ் நிலங்களில் தேங்கியுள்ள மழைநீர் துரிதமாக வழிந்தோடுவதற்குத் தேவையான ஏற்பாடுகளும் அவசர அவசரமாக மேற்கொள்ளப்படுகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இக்கடும் மழை காரணமாக கம்பஹா மாவட்ட மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இம் மாவட்டத்திலுள்ள பதினொரு பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 15 ஆயிரத்து 65 குடும்பங்களைச் சேர்ந்த 59 ஆயிரத்து 785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்திலுள்ள குடுப்பிட்டிய ஓயா பெருக்கெடுத்துள்ளது என்றார்.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கம்பஹா மாவட்ட இணைப்பாளர் குறிப்பிடுகையில், இம்மழை காரணமாக கம்பஹா – மினுவாங்கொட, கம்பஹா – ஜாஎல, கம்பஹா – உருதொட்ட, பெலும்மகஹா – வெலிவேரிய வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன என்றார். கொழும்பு மாவட்ட இணைப்பாளர் கூறுகையில், மழை காரணமாக 1913 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புவக்குபிட்டிய ஓய உட்பட இப்பிரதேசத்திலுள்ள மூன்று ஆறுகள் பெருக்கெடுத்துள்ளன. இம்மாவட்டத்திலும் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன என்றார்.

இதேவேளை களுத்துறை, பண்டாரகம, பாணந்துறை பகுதிகளில் வெள்ளத்தினால் 2720 குடும்பங்களைச் சேர்ந்த 13316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  களுத்துறையில் வெள்ளத்தினால் ஒரு வீடு முற்றாகச் சேதமுற்றுள்ளதுடன் 6 வீடுகள் பகுதி அளவில் சேதம் அடைந்துள்ளன. குகுலே கங்கை மின்சார திட்டத்தின் இரு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் தாழ்ந்த பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

களுத்துறையில் 1406 குடும்பங்களைச் சேர்ந்த 6890 பேரும், பாணந்துறையில் 1300 குடும்பங்களைச் சேர்ந்த 6370 பேரும், பண்டாரகமையில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் பாடசாலைகள் இயங்கிய போதிலும் மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் வரவு வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்கப்படுவதாக களுத்துறை பிரதேச செயலாளர் சிறிசோம லொகுவிதான தெரிவித்தார். களுகங்கையின் நீர் மட்டம் மேலும் அதிகரித்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

வங்காளவிரிகுடாவில் தாழமுக்கம்; இடியுடன் கடும் மழை தொடரும்; மக்களுக்கு எச்சரிக்கை!

9colombo.jpgதிருகோண மலையிலிருந்து 800 கிலோ மீற்றருக்கு அப்பால் வங்காளவிரிகுடாவில் தாழமுக்கம் நிலை கொண்டிருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் கயனாஹெந்த வித்தாரன தெரிவித்தார்.

இந்தத் தாழமுக்கத்தினதும், தென்மேல் பருவ பெயர்ச்சி மழை பெய்வதற்கான அறிகுறியாகவுமே தென்பகுதியில் கடும் மழை பெய்து வருவதாகவும் அவர் கூறினார். நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி அதிக மழை வீழ்ச்சி நிட்டம்புவவில் 313.6 மி.மீ. ஆகப் பதிவாகியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம் அடுத்துவரும் 24 மணி நேரத்தில் மேல், தென், சப்ரகமுவ மாகாணங்களில் இடி, மின்னலுடன் கடும் மழை பெய்ய முடியும் என வானிலை அவதான நிலையம் முன்னெச்சரிக்கை விடுத்தது.

இக்காலப்பகுதியில் இடி, மின்னல் மற்றும் அதிக மழை காரணமான பாதிப்புக்களிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் அந்நிலையம் நாட்டு மக்களைக் கேட்டுள்ளது. வானிலையாளரான கயனாஹெந்த வித்தாரண மேலும் கூறுகையில், வங்காள விரிகுடாவில் நிலை கொண்டிருக்கும் தாழமுக்கம் தற்போது இலங்கைக்கு அப்பால் நகர்ந்து கொண்டிருக்கின்றது.

இது இவ்வாறிருக்க நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழைவீழ்ச்சிப் பதிவுப்படி நிட்டம்புவவில் 313.6 மி.மீ, மக்காவிட்ட 223.5 மி.மீ, ஹங்வெல்ல 210 மி.மீ, கலட்டுவாவ 219.5 மி.மீ, குக்குலேகங்கை 188 மி.மீ, அவிசாவளை 157 மி.மீ. என்றபடி அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. நேற்று பிற்பகல் 2.30 மணியுடன் முடிவுற்ற 6 மணி நேர மழைவீழ்ச்சி பதிவுப்படி இரத்த மலானையில் 169.5 மி.மீ. கொழும்பில் 126 மி.மீ. என்றபடி மழை பெய்துள்ளது என்றார்.

ஆயிரம் பேர் விடுதலை

ltte_child_soldiers.jpgபுனர் வாழ்வு நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட ஆயிரம் பேர் நாளை அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளனர். யுத்தம் வெற்றிகொளளப்பட்டு ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு நாளை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள வைபவத்திலேயே இந்த நிகழ்வும் இடம்பெறவுள்ளது. வடமாகாண ஆளுனர் தலைமையிலான இந்த வைபவத்தில் பங்கேற்குமாறு வடபகுதி மாவட்டச் செயலாளர்கள் சகலரும் கேட்கப்பட்டுள்ளனர்.

இலங்கையைச் சுற்றி காற்றமுக்கம்

lightning.jpgஇலங்கையைச் சுற்றி காற்றமுக்கநிலை ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பையும் அதணை அண்டிய பகுதிகளிலும் இன்று காலை முதல் கடும் காற்று, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகின்ற நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழை காரணமாக கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கி மக்களின் இயல்பு வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ஜீ-15 உச்சி மாநாட்டில் இன்று தலைமையேற்று உரை

mahinda-raja_1.jpgஜீ-15  நாடுகளின் 14வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஈரான் தலைநகர் தெஹ்ரானைச் சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மெஹேராபான் விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

ஜீ-15 நாடுகளின் உச்சி மாநாடு இன்று ஆரம்பமாவதுடன் அதன் தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையேற்றுக் கொள்கிறார். ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நெஜாத்திடமிருந்து ஜனாதிபதி மேற்படி தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதுடன் மாநாட்டில் விசேட உரையாற்றவுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

ஜீ-15 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று அதிகாலை இலங்கையிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முற்பகல் 11.20 அளவில் தெஹ்ரானின் மேஹேராபான் விசேட பிரமுகர்களுக்கான விமான நிலையத்தைச் சென்றடைந்தார். இம்முறை ஜீ-15 நாடுகளின் தலைமைப் பதவியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்கவுள்ளதால் புதிய தலைவருக்கு வரவேற்பளிப்பதற்காக விமான நிலையத்தில் விசேட வைபவமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

2006ம் ஆண்டு கியூபாவின் ஹவானா நகரில் நடைபெற்ற ஜீ-15 நாடுகளின் உச்சி மாநாட்டின் போது மாநாட்டின் தலைமைப் பொறுப்பை ஈரானிய ஜனாதிபதி கலாநிதி மஹ்மூத் தகமதீ நெஜாத் ஏற்றுக் கொண்டதுடன் இம்முறை மாநாட்டில் அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கவுள்ளார்.  இன்று அந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இதேவேளை, ஜீ-15 நாடுகளின் தலைமைப் பொறுப்பு இம்முறை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குக் கிடைப்பதானது ஆசிய பிராந்தியம் மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு இதுபெரும் பலமாக அமையுமென ஜீ-15 நாடுகளின் வெளிநாட்டமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜீ-15 நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு முன்னோடியாக மேற்படி அமைப்பின் அங்கத்துவ நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பங்கேற்ற மாநாடு நேற்று முன்தினம் தெஹிரான் சர்வதேச இஸ்லாமிய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இம்மாநாட்டின் போதே வெளிவிவகார அமைச்சர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். இம்மாநாட்டில் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க ஆகியோர் கலந்து கொண்டுள் ளனர்.

இன்று ஆரம்பமாகும் ஜீ-15 அரச தலைவர்களின் உச்சி மாநாட்டில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் உணவுப் பாதுகாப்பு, இரு தரப்பு உறவுகள், பல்தரப்பு வர்த்தக நடவடிக்கைகளின் மேம்பாடு, நிதி நெருக்கடிக்கு முகம் கொடுத்து உலக பொருளாதாரத்துடன் இணைந்து செற்படல் போன்றவற்றிற்கு முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

எவரையும் இழிவுபடுத்தும் உரிமை ஊடகவியலாளருக்கு இல்லை – ஊடகத்துறை அமைச்சர்

kahiliya.jpgஎவரையும் இழிவுபடுத்தவோ அல்லது மற்றையோர் மனங்களைப் புண்படுத்தவோ ஊடகத்துறையினருக்கு எந்த வகையிலும் உரிமையில்லை என்று தகவல், ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்றுத் தெரிவித்தார்.

நாட்டின் நடப்புகள நிலவரங்களை எழுதும் அதேவேளை அரசாங்கம் எதை செய்தாலும் அதற்கு விரோதமாக எழுதும் போக்கையும் சிலர் கொண்டுள்ளனர். எனினும் நான் அனைத்து ஊடகவியலாளருடனும் சுமுகமாக செயலாற்றுவேன் எனவும் அமைச்சர் கூறினார். அமைச்சர் கெஹெலிய நேற்று (16) கண்டியில் உள்ள மல்வத்த மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரினது ஆசிபெற்றபோது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கண்டி பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றேன். கண்டி நகரான மரபுரிமை நகரை பாதுகாப்பது எமது அனைவருடைய கடமைப்பாடாகும்.

இந்த வகையில் கண்டி நகரில் உள்ள நிருவாக கட்டமைப்புகள் அனைத்தும் வேறிடத்திற்கு கொண்டு செல்லப்படும். இதன் அடிப்படையில் தான் கண்டி போகம் பறையில் அமைந்துள்ள சிறைச்சாலையை பள்ளேகலப் பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் அமைச்சர் கூறினார். மேலும் நேற்று அமைச்சர் பெளத்த, இந்து, இஸ்லாமிய கிரிஸ்தவ மத வழிபாட்டு நிலையங்களுக்கு சென்று அங்குள்ள மத குருக்களிடமும் ஆசி பெற்றார்.

ஜூன் 8 இல் ஜனாதிபதி இந்தியா பயணம்

 president.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி இந்தியாவிற்கு பயணம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

முதல்வர் தலைமையில் கிழக்கு மா. சபை உறுப்பினர் கேரளா விஜயம்

ep.jpgஎதிர்வரும் யூன் 6ந் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் இந்தியாவின் கேரளா மாநிலத்திற்கு பயணமொன்றை மேற்கொள்ள உள்ளனர்.

கேரளா மாநில அரச நிர்வாகம் மற்றும் கட்டமைப்பு விடயங்களை நேரடியாக பார்வையிட்டு, கிழக்கு மாகாண நிர்வாக நடவடிக்கைகளுக்கு அவ் அனுபவங்களை பயன்படுத்தும் நோக்கில் இவ் ஐந்து நாள் பயணம் யூ. என். டீ. பி. நிதி அனுசரணையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான எம். எஸ். உதுமா லெவ்வை கூறினார்.

கிழக்கு மாகாண சபையின் 35 உறுப்பினர்களும் மூன்று குழுக்களாக கேரள மாநிலத்திற்கான பயணத்தை எதிர்வரும் யூன் மாதம் 13ம் திகதி மற்றும் 20ம் திகதிகளில் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் உதுமா லெப்பை மேலும் கூறியுள்ளார்.

மீளக்குடியமர்ந்தோருக்கு சொந்தக் காணியில் வீடுகள் – நெடுங்கேணியில் ரூ. 100 மில். குடிநீர்த் திட்டம்

கனகராயன் குளம் உட்பட நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு அவர்களது சொந்த காணிகளில் சுமார் 600 நிரந்தர வீடுகள் கட்டப்படவுள்ளன. யூ. என். ஹெபிடாட் நிறுவனம் உட்பட அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த வீடுகளை கட்டிக்கொடுக்க முன்வந்துள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.

நெடுங்கேணி பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில் அவர்களுகான வாழ்வாதார உதவிகளையும் பெற்றுக் கொடுப்பதுடன் மலசலகூட வசதிகளுடன் கூடிய நிரந்தர வீடுகளும் அமைக்கப்படவுள்ளன.

நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவில் குடிநீர் விநியோகத் திட்டமொன்று 100 மில். ரூபா செலவில் முன்னெடு க்கப்படவுள்ளது. என்ரிப் நிறுவனம் இதனை நடைமுறைப்படுத்தவு ள்ளது. 43 மில். ரூபா செலவில் பஸ் நிலையம், பொதுச் சந்தைக் கட்டடம் என்பவற்றுடன் முதல் தர தபாலகமும் கட்டப்படவுள்ளன.

இப்பகுதியில் அரச ஊழியர்களுக்கென பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு 30 மில்லியன் ரூபா செலவில் கூட்டு விடுதிகளை கட்டுவதற்கும் ஏற்பாடு செய்துள்ளது. இதேவேளை வவுனியா மாவட்டத்தில் மீளக்குடியேறவுள்ள மக்களின் மேட்டு நிலம் மற்றும் வயற் காணிகளை துப்புரவு செய்வதற்கும் உலக வங்கி நிதி உதவியை வழங்க முன்வந்துள்ளது.

ரூ. 36 மில். செலவில் வடபகுதி தபாலகங்கள் புனரமைப்பு

post-boxes.jpgவடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் உள்ள தபால் அலுவலகங்களை புனர்நிர்மாணம் செய்ய 36 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் சேதமடைந்த அனைத்து தபாலகங்களும் இத்திட்டத்தின் கீழ் விரைவில் மீளக் கட்டியெழுப்புவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் வி. குமரகுரு தெரிவித்தார். ஏற்கனவே கட்டப்பட்டு நிறைவு செய்யப்படாத தபாலகங்களும் இந்த நிதி மூலம் முழுமையாக கட்டிமுடிக்கப்படும். அதனைவிட வன்னியில் போரினால் சேதமடைந்து முழுமையாக அழிவடைந்தும் உள்ள தபாலகக் கட்டடங்களும் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளது எனவும் பிரதி அஞ்சல் மா அதிபர் தெரிவித்தார்.