::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

வங்கதேசத்தில் மேலும் சில மனிதப் புதைகுழிகள்

bangaladesh.jpgவங்கதேச எல்லைக்காவல் படையினரின் கலவரங்களில் கொல்லப்பட்ட இராணுவ அதிகாரிகளின் புதைகுழிகள் மேலும் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தக் கலவரங்களில் காணாமல் போன 70 அதிகாரிகளைத் தேடும் முயற்சிகளின்போது, தலைநகர் டாக்காவின் காணி ஒன்றுக்குள் ஆழமில்லாமல் இருந்த புதைகுழிகள் மூன்று கண்டுபிடிக்கப்பட்டன.

இதில் காணப்பட்ட 10 சடலங்களில் இராணுவ கட்டளை அதிகாரியின் மனைவியின் சடலமும் அடங்கும் என்று பிபிசிக்கு கூறப்பட்டுள்ளது.சடலங்கள் எரிந்த நிலையில் இருந்ததால், அவற்றை அடையாளம் காண்பது சிரமமாக இருந்தது.

முகர்ஜிக்கு எதிராக கருப்புக் கொடி: செருப்பு, துடைப்பங்களை ஏந்தி ஊர்வலம் – வைகோ கைது!

26-vaiko.jpgஇன்று தூத்துக்குடி வந்த மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக் கொடி காட்ட ஊர்வலமாக சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டார். கருப்புக் கொடி மற்றும் செருப்பு, துடைப்பங்களை ஏந்தி ஊர்வலம் சென்ற நூற்றுக்கணக்கான மதிமுக தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஆகியவை இணைந்து தூத்துக்குடியில் 1000 மெகாவாட் திறன் கொண்ட புதிய அன்ல் மின் நிலையத்தை அமைக்கின்றன. இதற்கான அடிக்கல் நாட்டு விழா தூத்துக்குடி, எட்டயபுரம் ரோட்டில் உள்ள சங்கரப்பேரி விலக்கு அருகே இன்று நடக்கிறது. இதில் வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில் பங்கேற்க பிரணாப் முகர்ஜி தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் தூத்துக்குடி சென்றார்.

ஈழத் தமிழர்களுக்கு எதிரான போக்கை மத்திய அரசு கடைப்பிடிப்பதாகவும், அதில் பிரணாப் முகர்ஜியின் பங்கு அதிகம் என்றும் தமிழகத்தில் இலங்கைத் தமிழர் ஆதரவு அமைப்புகள் குறைகூறி வருகின்றன.

ராஜாஜி பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடத்தி பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக்கொடி காட்ட வைகோ இன்று தூத்துக்குடி வந்தார். வைகோ தலைமையில் மதிமுகவினர் மற்றும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் பிரணாப்புக்கு எதிராக கறுப்புக் கொடி, செருப்பு மற்றும் துடைங்களை ஏந்தியபடி நூற்றுக்கணக்கில் ஊர்வலமாக சென்றனர். இதையடுத்து வைகோ, விருதுநகர் மதிமுக எம்.எல்.ஏ, வரதராஜன், சிவகாசி மதிமுக எம்.எல்.ஏ ஞானதாஸ் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இளைஞர்களின் செயல்கள், இலங்கைத் தமிழர்களுக்கு ஆக்க பூர்வமாகப் பயன்பட வேண்டும் – விஜயகாந்த்

vijayagath1.jpgஇளைஞர் களின் செயல்கள், இலங்கைத் தமிழர்களுக்கு ஆக்கபூர்வமாகப் பயன்பட வேண்டும். இலங்கைப் பிரச்சினைக்காக யாரும் தீக்குளித்து தங்கள் உயிரை மாய்த்து கொள்ள வேண்டாம்” என்று கட்சித் தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து  விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “தேசிய முற்போக்கு திராவிட கழகம் தொடர்ந்து இலங்கைத் தமிழர்களின் இன்னல்களைத் தீர்க்க ஜனநாயக முறையில் நடத்தி வரும் போராட்டங்களில் கட்சியினர் கலந்து கொள்ள வேண்டுமே தவிர, தனிப்பட்ட முறையில் தீ வைத்து கொண்டு உயிரை மாய்த்து கொள்ளும் முயற்சியில் எக்காரணத்தை முன்னிட்டும் ஈடுபட வேண்டாம் என்று வேண்டுகோள் வைக்கிறேன். இளைஞர்களின் செயல்கள், இலங்கைத் தமிழர்களுக்கு ஆக்க பூர்வமாகப் பயன்பட வேண்டும். அதற்கு மாறாக அவர்களது உயிரைத் தாங்களே மாய்த்துக் கொள்வதை கட்சி ஒரு போதும் ஊக்கப்படுத்தாது.

வேலூர் மாவட்டம், வள்ளி பட்டு ஊராட்சியை சேர்ந்த எனது உயிரினும் மேலான கட்சியின் கிளை செயலாளர் சீனிவாசன் தீக்குளித்தார் என்பதை கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அவருக்குத் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் என்ற செய்தி அறிந்து துயருற்றேன்.

இளைஞர்கள் சாதிக்க பிறந்தவர்களே தவிர, சாவதற்கு பிறந்தவர்கள் அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தொண்டரும் வீட்டிற்கும், நாட்டிற்கும் பயன்படுபவராக இருக்க வேண்டுமென்று நான் அடிக்கடி வலியுறுத்தி வரும் கருத்தாகும். தீக்குளிக்கும் முயற்சியில் தயவு செய்து கட்சியினர் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். தீக்குளிப்பது என்பது இதுவே முதலும், கடைசியுமாக இருக்க வேண்டுமென்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

வங்கதேச துணை ராணுவத்தினர் கலகத்தில் 200 ராணுவ அதிகாரிகள் கொலை -பாதாள சாக்கடையில் பிணக் குவியல்

buyinfromreuters.jpgவங்க தேசத்தில் 2 நாட்களாக துணை ராணுவத்தினர் நடத்திய கலகம், அரசின் கடும் எச்சரிக்கையால் ஓய்ந்தது. கலவரத்தில் ரைபிள் படைப் பிரிவின் இயக்குனர் உட்பட 200 ராணுவ அதிகாரிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.  130 அதிகாரிகளை காணவில்லை. பாதாள சாக்கடையில் குவியல் குவியலாக பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன. வங்கதேசத்தில் வங்கதேச ‘ரைபிள் படை’ என்ற துணை ராணுவ படையில் 40 ஆயிரம் வீரர்கள் உள்ளனர்.

அவர்களில் 20 ஆயிரம் பேர் தலைநகர் தாகாவில் உள்ள தலைமை அலுவலகத்திலும், மற்றவர்கள் மற்ற மாகாணங்களில் உள்ள முகாம்களிலும் இருக்கிறார்கள். இவர்கள் சம்பளம், பதவி உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இது அலட்சியப்படுத்தப்பட்டு வந்ததால் ஆத்திரத்தில் இருந்த அவர்கள், கடந்த புதன்கிழமை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டு, வீரர்கள் கலகத்தில் இறங்கினர். அதிகாரிகளை விரட்டி விரட்டி சுட்டனர்.

தலைமை அலுவலகத்துக்கும் தீ வைத்தனர். கலகத்தை அடக்க ராணுவம் அழைக்கப்பட்டது. கலகத்தில் ஈடுபட்டுள்ள வீரர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைந்தால் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று பிரதமர் ஹசீனா  அறிவித்தார். அதைத் தொடர்ந்து ஒரு பிரிவு வீரர்கள் சரண் அடைந்தனர். மற்றொரு பிரிவினர்  தொடர்ந்து கலகத்தில் ஈடுபட்டனர். 2வது நாளில் மற்ற முகாம்களுக்கும் கலகம் பரவியது. அதைத் தொடர்ந்து பிரதமர் ஹசீனா கடும் எச்சரிக்கை விடுத்தார்.

தலைமையகத்தை டாங்கி களுடன் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்த ராணுவம் தயாரானது. இதையடுத்து, எல்லா வீரர்களும் சரண் அடைந்தனர். இதன் மூலம், 2 நாட்கள் நடைபெற்ற கலகம் முடிவுக்கு வந்தது. இந்த கலகத்தில் துணை ராணுவ படையின் இயக்குனர் ஷகீல் அகமது உட்பட 200 ராணுவ அதிகாரி கள் சுட்டுக் கொல்லப் பட்டள்ளனர். சம்பள உயர்வு பற்றி வீரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய சில நிமிடங்களில் ஷகீல் அகமது அங்கிருந்து வெளியேறி உள்ளார்.

அப்போது, 4 வீரர்கள் பாய்ந்து சென்று அவரை பிடித்து சுட்டுக் கொன்றதாக துணை ராணுவத்தின் லெப்டினென்ட் கர்னல் சையது குவாம் ரஜ்மான் கூறினார். இவரும் வயிற்றில் குண்டு பாய்ந்து உயிர் தப்பியுள்ளார். தலைமையக வளாகத்தில் இருந்த அதிகாரிகளின் வீடுகள் கொள்ளை யடிக்கப்பட்டு உள்ளன.கலகம் ஓய்ந்ததும் தலைமை அலுவலகத்துக்குள் ராணுவம் நுழைந்து, மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதலில் ஈடுபட்டது.

பணய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு இருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஒரு இடத்தில் புதிதாக குழி தோண்டி மூடப்பட்டதற்கான அடையாளம் காணப் பட்டது.  அந்த இடத்தை தோண்டியபோது, 38 அதிகாரிகளின் உடல்கள் புதைக்கப்பட்டு இருந்தன.
 
மேலும் உடல்கள் புதைக்கப்பட்டு இருக்கிறதா என்று தேடப்படுகிறது.  அலுவலக வளாகத்தில் உள்ள பாதாள சாக்கடையிலும் பிணக் குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இன்னும் 130க்கும் மேற்பட்ட அதிகாரிகளை காணவில்லை.  கலவரத்தில் ஈடு பட்ட 300 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கலகத்தில் காயம் அடைந்து  சிகிச்சை பெற்று வரும் அதிகாரிகளை பிரதமர் ஹசீனா நேற்று பார்த்தார்.

அப்போது அவர், ”கலகத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும், அதிகாரிகள் கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்ட வர்களுக்கு மன்னிப்பு கிடையாது”  என்று அறிவித்தார்.

பிரணாப்புக்கு எதிர்ப்பு:தூத்துக்குடியில் போலீசார் குவிப்பு

Pranab_Mukherjeeதூத்துக் குடிக்கு இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகட்ஜி அரசு விழா சம்பந்தமாக வருகை தருகிறார்.
இவர் இலங்கை தமிழர்களை காக்க முயற்சி எடுக்கவில்லை என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர்  பிரணாப்புக்கு கறுப்புக்கொடி காட்ட முடிவு செய்துள்ளனர். இதனால் தூத்துக்குடியில் பதட்டம் நிலவுகிறது. இப்பதட்டத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

போலீஸ்காரர் தீக்குளிப்பு-வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் எதிரொலி

court-tamilnadu.jpgசென்னை உயர்நீதிமன்றம் முன்பு ஆயுதப்படை காவலர் ரவிக்குமார் என்பவர் நேற்று திடீரென தீக்குளித்தார். இதனால் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் இடையே பெரும் கலவரம் மூண்டது. இந்த கலவரத்தில் சிக்கி படுகாயமடைந்தவர் ரவிக்குமார். ஆயுதப்படையில் இவர் காவலராக உள்ளார். கலவர தினத்தன்று இவர் உயர்நீதிமன்றத்திற்கு வெளியே பணியில் இருந்தார். அப்போது வக்கீல்கள் அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். பிளேடுகளால் அவரது உடலில் கீறியதில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் ரவிக்குமார். சில நாட்களுக்கு முன்பு அவர் கமிஷனர் அலுவலகத்திற்கு ஆட்டோவில் வந்து வக்கீல்களுக்கு எதிராக கோஷமிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், நேற்று மாலை, திடீரென உயர்நீதிமன்றத்திற்கு வந்தார். நீதிமன்றத்தின் முன்பாக மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்தார்.அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் ரவிக்குமாரை மீட்டுக் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர் கொடுத்த வாக்குமூலத்தில், வக்கீல்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள், ஆனால் போலீசாரிடம் ஒற்றுமை இல்லை. போலீசாரும், வக்கீல்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது என் ஆசை. ஆனால், தொடர்ந்து எல்லா சம்பவங்களிலும் போலீஸ்காரர்கள் தான் தாக்கப்படுகிறார்கள். போலீஸ்காரர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இப்போது ஐகோர்ட்டு சம்பவத்தில் 5 உயர் போலீஸ் அதிகாரிகளை உடனே மாற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு போட்டுள்ளது. ஆனால் கல்வீசி தாக்கிய வக்கீல்கள் மீதும், போலீஸ் நிலையத்தை எரித்த வக்கீல்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சட்டம் எல்லோருக்கும் பொதுவானது.

வக்கீல்கள் கல்வீசி தாக்கியதையும், போலீஸ் நிலையத்தை எரித்ததையும் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் ஆதாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டன. ஆனால், போலீஸ் அதிகாரிகளை மட்டும் மாற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

போலீசாருக்கு பாதுகாப்பு கொடுப்பது யார்? என்று தெரியவில்லை. இதனால் மன ரீதியாக நான் வருத்தம் அடைந்தேன். எனது வருத்தத்தை தெரிவிப்பதற்காக தீக்குளித்து உயிரைவிட முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார் ரவிக்குமார்.

ரவிக்குமாருக்கு தொடை மற்றும் காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. போலீஸ்காரர் தீக்குளித்த சம்பவம் சென்னை காவல்துறையில் மேலும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் திடீரென பரவிய ஹெபடைடிஸ்- பி

aep-hl-hepatitis.jpgஇந்தியா வின் குஜராத் மாநிலத்தில் மொடாஸா மாவட்டத்தில் ஹெபடைடிஸ் – பி ரக வைரஸ் திடீரென பரவியதால் பலர் பாதிக்கப்பட்டனர். அது, அஹமதாபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் பரவியது. அந்த வைரஸ் காரணமாக இதுவரை, 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே மருத்துவமனைகளில் மருந்துகள் செலுத்தப் பயன்படுத்தப்பட்ட சிரிஞ்ச் எனப்படும் ஊசிக்குழல்களை மீண்டும் பயன்படுத்தியதே, ஹெபடைடிஸ் – பி வேகமாகப் பரவக் காரணம் என்று கூறப்படுகிறது.

அந்த ஊசிக்குழல்களை, தனியார் மருத்துவமனைகளில் இருந்து வாங்கி, மொத்தமாக விற்பனை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதுபோன்ற ஊசிகளைப் பயன்படுத்திய தனியார் மருத்துவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சுகாதாரத்துறை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் நடத்திய சோதனையில், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட லட்சக்கணக்கான ஊசிக்குழல்கள் கைப்பற்றப்பட்டன.

வேலூர் தேமுதிக தொண்டர் தீக்குளிப்பு

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக் கோரி வேலூர் மாவட்டம் வானியம்பாடியில், தேமுதிக செயலாளர் தீக்குளித்தார். படுகாயத்துடன் வேலூர் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். வாணிம்பாடி அருகே உள்ளது வள்ளிப்பட்டி கிராமம். இந்த கிராமத்தின் தேமுதிக கிளை செயலாளாராக இருப்பவர் சீனிவாசன் .இவருக்கு அம்மு என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை சம்பவத்தால் மிகவும் மனம் உடைந்து போன சீனிவாசன் இது குறித்து அடிக்கடி தனது நண்பர்களுடன் உணர்ச்சி பிளம்பாக பேசுவாராம். இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணி அளவில் வீட்டில் இருந்த அவர் மண்ணெண்ணையை திடீரென உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் உடல் பாதி எறிந்தது. இருப்பினும் அவரை காப்பாற்றி வாணிம்பாடி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு சீனிவாசன் மாற்றப்பட்டார். தகவல் அறிந்த போலீசார் வாணிம்பாடி சீனிவாசனிடம் தீக்குளிப்புக்கான காரணத்தை வாக்குமூலமாக பெற்றுள்ளனர்.

பிரபாகரன் பேனர் அகற்றம் – 6 பேர் தீக்குளிக்க முயற்சி

tamilnadu.jpgபுதுக் கோட்டை அருகே விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பேனர்களை அகற்ற போலீசார் முயற்சி செய்ததால் 6 பேர் தீக்குளிக்க முயன்றனர்.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வடகாடு பகுதியில் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் சார்பில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் இயக்குநர் மணிவண்ணன், காளிமுத்து, வழக்கறிஞர் புரட்சி கவிதாசன் உள்ளிட்டோர் பங்கேற்பதாக இருந்தது. இந்த நிலையில் அந்த பகுதி முழுவதும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உருவம் பொறித்த படத்தை டிஜிட்டல் பேனர்களாக வைத்திருந்தனர். தகவல் அறிந்த எஸ்.பி மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த டிஜிட்டல் பேனர்களை அகற்ற முன்றனர்.

இதற்கு கூட்டத்த்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், விஜய், கோபி, சரவணன், திருப்பதி, ஆனந்த் உள்ளிட்ட 6 பேர் திடீரன உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அவர்கள் தீக்குளிப்பு போராட்டத்தை கைவிட்டனர்.

வேலை இழந்து நாடு திரும்பிய 20,000 இந்தியர்கள்

rajya-sabha.jpgவெளி நாடுகளில் வேலை செய்து வந்த சுமார் 20,000 இந்தியர்கள், உலக பொருளாதார வீழ்ச்சி காரணமாக வேலை இழந்து நாடு திரும்பியுள்ளனர்.பணிக்கான விசா காலத்தைப் புதுப்பிக்க மறுத்துவிட்ட நிறுவனங்கள், அனைவரையும திருப்பி அனுப்பிவிட்டனவாம். இத் தகவலை, வெளிநாடு வாழ் இந்தியர் நலத் துறை அமைச்சர் வயலார் ரவி ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின் போது தெரிவித்தார்.

அவர் கூறுகையில்,  இப்போது நாடு திரும்பியுள்ளோர் அனைவரின் விசாக்களை அவர்கள் பணியாற்றிய நிறுவனங்கள் புதுப்பிக்காமல் விட்டுவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த விஷயத்தில் நாம் எதுவும் செய்வதற்கில்லை. பல நாடுகளில் நிலைமை மோசமாக உள்ளதால் நாடு திரும்புவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.