ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் முதன்முறையாக பன்றிக்காய்ச்சல் பாதித்துள்ளதை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். டோக்கியோ மிகவும் ஜனநெருக்கடியான இடமாகும். நியூயார்க் நகரத்தில் இருந்து திரும்பிய இரண்டு பள்ளிக்கூட மாணவிகளுக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஜப்பானில் சுமார் 250 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்
::சர்வதேச விடயங்கள்
::சர்வதேச விடயங்கள்
சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்
பாகிஸ் தானில், தாலிபான் ஆயுததாரிகளுக்கு எதிரான தமது போரின் காரணமாக இடம் பெயர்ந்துள்ள பெருமளவிலான பொதுமக்களுக்கு உதவும் வகையில் தமக்கு அவசரமாக 600 மில்லியன் டாலர்கள் அளவுக்கு தமக்கு நிதியுதவி தேவைப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் யூசூஃப் ராஜா கீலானி தெரிவித்துள்ளார்.
நாட்டின் வடமேற்கே தாலிபான் ஆயுததாரிகளை வெளியேற்றும் இராணுவ நடவடிக்கையின் காரணமாக 15 லட்சம் மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.
அந்த மக்களின் மனங்களை வெல்ல வேண்டியது மிகவும் அவசியமானது என்று நிதியுதவி வழங்குவோரின் சர்வதேச மாநாட்டிலேயே பாகிஸ்தானிய பிரதமர் கீலானி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் அமைதியும் வளர்ச்சியும் ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் 240 மில்லியன் டாலர்களுக்கு அதிகமான நிதி உதவி வழங்க கொடையாளிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
மத்திய அமைச்சரவையில் திமுகவுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் தொடர்பாக டெல்லியில் பேச்சுவார்த்தை நடந்தது.
காங்கிரசுடனான இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், காங்கிரஸ் கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதாக டி.ஆர்.பாலு அறிவித்தார். அவர் மேலும், ‘’நாளை சென்னையில் திமுக செயற்குழு கூடுகிறது’’ என்று தெரிவித்தார்.
டெல்லியில் நாளை மன்மோகன்சிங் பிரதமாரக பதவியேற்பு விழா நடக்கவிருக்கும் நிலையில் சென்னையில் திமுக செயற்குழு கூடுவதால் முதல்வர் கருணாநிதி பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டார் என்று பேசப்படுகிறது.
ஈழ விடுதலை போரை அழிக்கமுடியாது என்றும் இருந்தாலும் மறைந்தாலும் பிரபாகரன் விடுதலை போரை வழிநடத்துவார் என்றும் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 6 மாத காலமாக தமிழக மக்களும் புலம் பெயர்ந்து வாழும் உலகத் தமிழர்களும் எவ்வளவோ மன்றாடிக்கேட்டும் கடுமையாகப் போராடியும் இந்தியாவோ, சர்வதேச சமூகமோ எமது ஈழத் தமிழ் சொந்தங்களை காப்பாற்ற முன்வரவில்லை என்பது எக்காலத்திலும் ஆற்றுப்படுத்த முடியாத வேதனையை அளிக்கிறது.
உச்சக்கட்டமாக எமது மக்களின் ஒரே பாதுகாவலர்களாக விளங்கிய தமிழீழ விடுதலைப்புலிகளையும் கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ளனர். உலகத் தமிழினத்தை தலை நிமிரச் செய்த தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் படுகொலை செய்துவிட்டதாக சிங்கள இனவெறிக்கும்பல் கொழும்பு நகரில் கும்மாளமடித்து கொண்டாடிக் கொண்டிருக்கிறது. பிரபாகரன் படுகொலையானாரா? அல்லது பாதுகாப்பாக உள்ளாரா? என்ற ஆராய்ச்சி ஒருபுறம் இருந்தாலும் ஈழத்தில் எமது மக்கள் கடந்த 2 நாட்களில் 50 ஆயிரத்துக்கும் மேல் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. மேலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஈவிரக்கமற்ற இத்தகைய இனப்படுகொலையை உலகின் பார்வையிலிருந்து மூடி மறைப்பதற்காகவும், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் கடைசிகாலத் தடுப்பு முயற்சிகளை முறியடிக்கவும் சிங்கள இனவெறியன் ராஜபக்சே பல்வேறு நாடகங்களை நடத்துவதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் இந்தியாவும், சர்வதேச சமூகமும் மனிதாபிமான அடிப்படையில்கூட இந்த கொடூரமான இனப்படுகொலையை தடுத்து நிறுத்த முன்வரவில்லையே என்பதுதான் சகித்துக்கொள்ளவே முடியாத வேதனையாக உள்ளது.
ஆயுதங்களை கீழே போடவும் தயார் என்றும், எத்தகைய தீர்வுக்கும் தயார் என்றும் புலிகளின் தலைவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னரும், ஆயுதமில்லாத நிலையில் வெள்ளைக்கொடி ஏந்தியவாறு சிங்களப்படை அதிகாரிகளைச் சந்திக்க முன்வந்த புலிகளின் தலைவர்கள் நடேசன், புலித்தேவன் போன்றவர்களை மிகக் கேவலமான முறையில் சிங்கள இனவெறியர்கள் படுகொலை செய்திருப்பது வரலாற்றில் இல்லாத மனித நாகரிகத்திற்கு எதிரான நடவடிக்கையாகும்.
இந்த நிலையில் மாவீரர்களாய் களப்பலியான எமது விடுதலைப்போராளிகளுக்கும், அப்பாவி பொதுமக்களுக்கும் எமது செம்மாந்த வீரவணக்கத்தை செலுத்துகிறோம். புலிகளின் தலைவர்கள் அழிக்கப்பட்டாலும், ஈழ விடுதலைப்போரை அழிக்க முடியாது.
இருந்தாலும், மறைந்தாலும் தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் அந்த விடுதலைப்போரை மேலும் வழி நடத்துவார். சிங்கள இனவெறியன் ராஜபக்சேவின் காட்டுமிராண்டித்தனமான கொலை வெறித்தனத்தை விடுதலை சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிப்பதோடு அவனை சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டிப்பதற்குரிய அடுத்தக்கட்டப் பணிகளை மேற்கொள்வது விடுதலை சிறுத்தைகளின் கடமையாகும் என்று கருதுகிறோம். புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் உலகத்தமிழர்கள் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு சோர்வடையாமல் ஒருங்கிணைந்து போராட முன்வரவேண்டும்.
மத்திய அமைச்சரவையில் திமுகவுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் தொடர்பாக டெல்லியில் பேச்சுவார்த்தை நடந்தது.
காங்கிரசுடனான இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், காங்கிரஸ் கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதாக டி.ஆர்.பாலு அறிவித்தார். இதனையடுத்து, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர், ’’அமைச்சரவையில் திமுகவின் எதிர்பார்ப்பு அளவுக்கு அதிகமானது. அதனால், திமுகவின் கோரிக்கைகளை ஏற்க முடியாது’’ என்று தெரிவித்துள்ளார்.
கேட்ட அமைச்சர் பதவிகளை காங்கிரஸ் தர மறுத்ததால், அமைச்சரவையில் சேராமல், வெளியிலிருந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவு தர திமுக இன்று இரவு அதிரடி முடிவை எடுத்தது. திமுகவுக்கான அமைச்சர் பதவிகளை ஒதுக்குவதி்ல் சிக்கல் ஏற்பட்டுள்ளதையடுத்து இன்று ஜனாதிபதியை சந்தித்து அமைச்சர்கள் பட்டியல் தரும் திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் ஒத்தி வைத்துவிட்டார்.
தாங்கள் கேட்கும் அமைச்சர் பதவிகள், துறைகளைத் தராவிட்டால் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரப் போவதாகவும் காங்கிரசிடம் திமுக கூறிவிட்டது. இதையடுத்து சிக்கலைத் தீர்க்க தீவிர பேச்சு வார்ததை நடந்து வந்தது
முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரிக்கு சாலை போக்குவரத்து துறையும், மகள் கனிமொழிக்கு சுகாதாரத்துறையும் வழங்கப்படும் என்று தெரிகிறது. ஹெலன் டேவிட்சன் (கன்னியா குமரி), ஏ.கே.எஸ்.விஜயன் (நாகை) ஆகியோருக்கு இணை அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. முதல்வரின் பேரன் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, ராசா ஆகியோருக்கு மந்திரி பதவி கிடைப்பது சந்தேகம் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய அரசு அமைக்குமாறு மன்மோகன் சிங்கிற்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல்முறைப்படி அழைப்பு விடுத்தார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றன. இதையடுத்து புதிய ஆட்சி அமைக்கும் பணியில் காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று மாலை ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை, ராஷ்டிரபதி பவனில் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் நேரில் சந்தித்து ஆட்சியமைக்க அழைக்குமாறு கேட்டுக்கொண்டனர். தனிப்பெரும் கட்சியாகவும், தனிப்பெரும்பான்மை பெற்ற கூட்டணியாகவும் உள்ள தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். தங்களது அரசுக்கு ஆதரவளிக்கும் 322 எம்.பி.,க்கள் பட்டியலையும் அவர்கள் அப்போது ஜனாதிபதியிடம் வழங்கினர்.
இதையடுத்து, மன்மோகன் சிங்கை அரசு அமைக்க அழைக்கும் கடிதத்தை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், மன்மோகன் சிங்கிடம் வழங்கினார். இதை ராஷ்டிரபதி பவனில் கூடியிருந்த செய்தியாளர்களிடம் மன்மோகன் சிங் தெரிவித்தார். அதன்படி, மன்மோகன் சிங் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்ட ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சி மற்றும் பெரும்பான்மை பெற்ற தேர்தலுக்கு முந்தைய கூட்டணி என்ற முறையிலும் ஆட்சியமைக்க வருமாறு அழைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 22ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோ னேசியாவின் ஜாவா பகுதியில் உள்ள கிராமத்தில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. இதில் அதில் பயணம் செய்த 78 பேர் உயிரிழந்தனர்.
இந்த விமானம் இந்தோனேசிய ராணுவத்திற்குச் சொந்தமானதாகும். ஜகார்த்தாவிலிருந்து, ஜாவாவுக்குப் பறந்து கொண்டிருந்தபோது, மடியுன் என்ற இடத்தில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.
வயலில் விழுந்து நொறுங்குவதற்கு முன்பு அருகில் இருந்த கட்டடங்களில் மோதி விமானம் கீழே விழுந்துள்ளது. விழுந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது.
விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணம் தெரியவில்லை. விமானத்தில் 100 பேர் இருந்ததாகவும், இதுவரை 78 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் உயிரிழப்பு அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த விமானம் சி-130 ரக ஹெர்குலிஸ் விமானம் ஆகும். வழக்கமான பயிற்சியில் அது ஈடுபட்டிருந்தபோது விபத்தில் சிக்கியது