கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

தமிழ் மக்களின் நலன் மறந்து டொலர்களின் பின்னால் சம்பந்தன் – ஐ.ம.சு.மு செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ராஜித தெரிவிப்பு

sampanthar.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் ஆர். சம்பந்தன் தமிழ் மக்களின் நலன்களுக்காக செயற்படாமல் வெளிநாட்டு டொலர்களின் பின்னணியில் செயற்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கஷ்டப்பட்ட தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்காத சம்பந்தன் பிரிவினர் புலிகளின் இறப்பர் முத்திரையாகவே செயற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் மாநாடு கொழும்பிலுள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெற்றது. கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ராஜித மேலும் உரையாற்றுகையில்:-

புலிகளின் பிடியில் அப்பாவித் தமிழ் மக்கள் சிக்கித் தவித்த போதும், அவர்களை அரசாங்கம் பாதுகாப்பாக மீட்டெடுத்த போதும் சம்பந்தன் அந்த மக்களது சுக, துக்கங்களைக் கேட்டறிந்து அவர்களுக்குத் தேவையான எதனையும் செய்து கொடுக்கவில்லை.

கஷ்டப்பட்ட தமிழ் மக்களுக்குத் தேவையான சகலவற்றையும் அரசாங்கமே செய்து கொடுத்தது. அந்தக் காலகட்டத்தில் அந்த மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியின் ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் போன்றவர்களை தவிர வேறு எவரையும் தெரியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். சம்பந்தனும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இந்தியாவின் பின்னணியில் செயல்படவில்லை. மாறாக வெளிநாடுகளின் டொலர்களின் பின்னணியில் செயற்படுகி ன்றனர்.

இந்தியாவுக்கு சென்று வரும் சம்பந்தன் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அறிவித்தல்களை விடுத்து இந்தியா தமது பின்னணியில் இருப்பது போன்று காண்பிக்க முயல்கின்றார். அதில் எந்தவித உண்மையுமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

30 வருடங்களுக்கு பின்னர் நாட்டில் பாரிய மாற்றங்களை குறுகிய காலத்தில் ஏற்படுத்தியவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. இன்று மாபெ ரும் மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் சமாதான மாக வாழும் சூழல் காணப் படுகின்றது.

இந்த நாட்டிற்குத் தேவையான சகல மாற்றங்களையும் ஜனாதிபதி ஏற்கனவே ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் மக்கள் மீண்டும் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி?

election_box.jpgஎதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் முறை தொடர்பாகத் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க வாக்காளர்களுக்கு விரிவான அறிவுறுத்தலை வெளியிட்டிருக்கின்றார்.இந்தத் தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வாக்குச்சீட்டு மிக நீளமானதாகிக் காணப்படலாம். வாக்காளர்கள் தமது வாக்குச்சீட்டைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் அவசரப்படாமல் வாக்குச்சீட்டை நன்கு வாசித்த பின்னர் தாம் தெரிவு செய்யும் வேட்பாளருக்குத் தமது புள்ளடியை அல்லது ஒன்று (1) இலக்கமிடலாம். ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதால் தாம் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிப்பதோடு அவசியமெனக் கருதுமிடத்து இரண்டாவது, மூன்றாவது தெரிவையும் அடையாளமிட முடியும்.

ஒருவரை மட்டும் தெரிவு செய்வதானால் X புள்ளடியை இடமுடியும்.

மூவருக்கு அடையாளமிட விரும்பினால் முதலாவது தெரிவுக்கு (1) என்று அடையாளமிட்ட பின்னர் இரண்டாவது, மூன்றாவது தெரிவுகளுக்கு முறையே 2,3 என அடையாளமிடமுடியும்.ஒரு வாக்குச்சீட்டில் ஒருவரைத் தெரிவு செய்து X புள்ளடி அல்லது (1) ஒன்று என அடையாளமிடப்பட்டிருப்பின் அந்த வாக்குச்சீட்டு செல்லுபடியானதாகும்.

முதலாவது தெரிவைத் தேர்ந்தெடுக்காமல் 2,3 என மட்டும் அடையாளமிடப்பட்டிருப்பின் அந்த வாக்குச்சீட்டு நிராகரிக்கப்படும்.

வாக்குச்சீட்டொன்றை அடையாளமிட வேண்டிய நடைமுறை ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

3:1) “1” என்ற இலக்கத்தை அடையாளமிடுவதன் மூலம் ஒரு வேட்பாளருக்குத் தமது வாக்கை அளிக்க முடியும்.

3:2 )”2”என்ற இலக்கத்தை அடையாளமிடுவதன் மூலம் தமது இரண்டாவது விருப்பத்தை அளிக்க முடியும்.

3:3 ) “3” என்ற இலக்கத்தை அடையாளமிடுவதன் மூலம் தமது மூன்றாவது விருப்பத்தை அளிக்க முடியும்.

04: வாக்காளர் ஒருவர் தமது வாக்கை ஒரு வேட்பாளருக்கு மட்டும் அளிக்க விரும்பினால். “1”  என்பதற்குப் பதிலாக “புள்ளடி X இடப்பட்டிருந்தாலும் அந்த வாக்குச் சீட்டு செல்லுபடியாகும்.

04:1 முதலாவது தெரிவுக்குப் பின்னர் 2,3 அடையாளமிட்டு இரண்டாம், மூன்றாம் தெரிவை அடையாளமிட்டாலும் அது ஏற்றுக்கொள்ளப்படும்.

04:2 எவருக்கும் வாக்களிக்கப்படாத வாக்குச்சீட்டும் ஒன்றுக்கு மேற்பட்ட X புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டும் முதலாவது தெரிவில்லாத 2 ஆம் 3 ஆம் தெரிவை அடையாளமிடப்பட்ட வாக்குச்சீட்டும் முற்றாக நிராகரிக்கப்படும்.

எனவே வாக்காளர்கள் முதலாவது தெரிவை அறிவித்த பின்னர் தாம் விரும்பினால் 2 ஆம், 3 ஆம் தெரிவை அடையாளமிடமுடியும். அது கட்டாயமாக 2,3 என்று குறிப்பிடப்படவேண்டும் எனவும் தேர்தல் ஆணையாளர் அறிவுறுத்தியிருக்கின்றார்.

யாருக்குப் போடலாம் வாக்கு : ஈழமாறன்

Sarath_Fonseka_Posterதமிழ் பேசும் மக்களின் போராட்ட வரலாற்றில் நாசமாய்ப் போன காலகட்டமாக கடந்த 35 ஆண்டுகள் கடந்தோடியது நாங்கள் அறிந்தது. தமிழரசுக் கட்சியும் தலைவர் செல்வநாயகமும் பொறுப்பில்லாமல் தமிழீழம் என்று சொல்லி விட்டு மேலுலகம் சென்றதும், அதைத் தூக்கி வைச்சு குறுக்கால போன கூட்டணி புலுடா விட்டதும் தம்பிமாரை உசுப்பி விட்டதும் கடந்தகால கசப்பான  விடயங்கள்.

ஒரு தலைமை என்பது தனது கட்சிக்கும், இருப்புக்கும் எது சாதகமாய் இருக்கும் என்று முடிவெடுப்பதல்ல. தான் எடுக்கப் போகும் முடிவால் உடனடியாகவும் எதிர்காலத்திலும் எப்படிப்பட்ட விளைவுகளை அது உண்டு பண்ணும், இது தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களை என்ன பாடுபடுத்தும் என்று சிந்தித்து, ஆய்வு செய்து முடிவெடுப்பதே ஒரு நல்ல தலைமைக்கு உரிய பண்பியில் இயல்பு. இதன் அடிப்படையில் பார்த்தால் “இனி கடவுள்தான் தமிழ் மக்களைக் காப்பாத்த வேணும்” என்று சொல்வதற்கு எதுக்கு ஒரு தலைவர். அட இழவு விழுவாரே கடவுள்தான் காப்பாத்த வேணுமெண்டால் அது எந்தக் கடவுள் எண்டு சொல்லி விட்டு செத்திருந்தால் தமிழ் மக்கள் தேசியத் தலைவருக்கு அபிசேகம் செய்தது போலவோ அல்லது பிறந்த நாள் பூசை புனர்த்தானங்கள் செய்தது போலவோ அந்தக் கோயிலுக்குச் சென்று ஆண்டவா எங்களைக் காப்பாத்து. எங்களுக்கு உரிமை பெற்றுக் கொடு என்று ஒரு அபிசேகம் செய்திருப்பார்கள். வேணுமென்றால் சில நூறு பலிகளும் கொடுதத்திருக்கலாம். இத்தனை ஆயிரம் அப்பாவி மக்களைப் பலிகொடுத்திருக்கத் தேவையில்லை.

இனவாத அரசுகளிடம் இருந்து உரிமைகளைப் பெறுவதற்காக அதுகாறும் நாம் மேற்கொண்ட செயற்பாடுகள் எதுவும் பலனளிக்காது போனதால் மாற்றுத்திட்டங்களை தீட்டி போராட்டத்தை வேறுவழியில் பொறுப்புடன் எடுத்துச் செல்ல வேண்டும் என மாற்று வழியை அல்லவா சொல்லியிருக்க வேண்டும். கடவுள்தான் காப்பாத்த வேண்டும் என்று சொல்ல என்னத்துக்கு தலைவர். ஒரு கட்சி. அதுக்கு வக்காலத்து வாங்க அடங்காமண் புடுங்கா மண் என்று சாதிவெறி பிடித்த ஒத்தூதிகள்.
 
அதை விடுத்து தமிழீழம், பெடரல், கிடறல் என்று சா வாக்கு மூலம் கொடுப்பது எதிர்காலத்தில் தமிழ் மக்களை எங்கே கொண்டுபோய் விடும் என்று கொஞ்சமாவது யோசித்திருக்க வேண்டாமா? சரி வயது போன நேரத்திலை மனுசன் அறளை பேந்து போய் கதைச்சிட்டாக்கும் என்று விட்டு விட்டு சற்று பிரக்ஞை பூர்வமாக இந்தக் கூட்டணி சிந்தித்திருந்தால் நாம் பாரிய அழிவை நிறுத்தியிருக்கலாம். இந்த கூட்டணி நாடகக் குழு போட்டு முடித்த நாடகங்களின் விளைவாக நாம் புது மாத்தளன் வரை கொடுத்த விலை மானிடமே மௌனித்துபோன வரலாறு. ஆனால் என்ன நடந்தது.

ஒரு தொழிற் சங்கம் வேலை பகிஸ்கரிப்பு பற்றி முடிவெடுக்க நினைக்கிறபோது அந்த முடிவு தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தப் போகும் சாதக பாதகங்களை ஆய்வு செய்து விவாதங்கள் நடாத்தி பெரும்பாலானவர்களின் ஒப்புதலை ஏற்ற பின்னரே முடிவெடுப்பார்கள். இங்கு தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு பாரிய முடிவைப் பற்றி கிஞ்சிற்றேனும் சிந்திக்காமல் தமிழீழம் என்று முழங்கிய துலைவார் கூட்டணியின் முடிவைக் கேட்டு கோதாரி விழுவாருக்கு கீறி வைச்ச பொட்டு இண்டைக்கு யாருக்கு வோட்டுப் போடுறது என்ற நிலைக்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறது.

தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழத்தை அறிவிக்கும் போது இது சாத்தியமா? அவ்வாறு சாத்தியம் எனின் மாங்காய் புடுங்குவது போல் சுலபமாக புடுங்கி எடுக்கலாமா இல்லை பனங்கிழங்கு கிண்டுவது போல கொஞ்சம் கொஞ்சமாய் கிண்டி எடுக்கலாமா, இல்லையா என்று சுடலையிலை போவார் குறைஞ்சது ஒரு பத்து நிமிசமாவது யோசித்திருக்க வேணும். அப்படி சிந்தித்திருந்தால் இப்பிடி நாம் ஆகியிருக்கத் தேவையில்லை என்பதை நடிகர் விவேக் பாணியிலை நான் எழுத வேண்டி வந்திருக்காது. வெளவால் வரும். துவக்கோடை வரும். தமிழனுக்கு எருமை மாட்டுத் தோல். சுட்டமண்ணும் பச்சமண்ணும் இனி ஒட்டாது என்று விட்டதெல்லாத்தையும் நம்பி அப்பாவி இளைஞர்கள் கொதிச்சு எழ குளிர்காய்ந்த இந்தக் கூட்டணி தமிழ் மக்கள் யாருக்கு வாக்குப் போட வேணும் என்று முடிவெடுத்திருக்கிறர்களாம்.

இவர்கள் கடந்த காலங்களில் எடுத்த எந்த முடிவுகள் சரியாக இருந்திருக்கின்றன? தமிழீழம் முடிந்த முடிவு என்ற இந்த நரிக் கூட்டம் முடிவெடுக்கும் போது இவர்களுக்கே இதன் பொருள் விளங்கியிருக்கவில்லை. அதற்கான திட்டமோ அன்றி அந்த இலக்கை அடைவதற்கான குறைந்தபட்ச வரைபடம் கூட இல்லாத இந்தக் காவாலிக் கூட்டணி பின்னர், வட்டமேசை மாநாடு போட்டபோது கூட கிட்டத் தட்ட என்ன வேணும் என்றதில் ஒரு வீதமேனும் தெளிவிருக்கவில்லை. அதன்பின் புலிக்கு வக்காலத்து வாங்குவதற்கு இவர்கள் எடுத்த முடிவென்று அடிக்கிக் கொண்டே போகலாம்.

ஒரு தலைமையின் முடிவு என்ன என்று எதிர்பாப்பதும் அந்தத் தலைமை என்ன சொல்கிறது என்பதை கேட்டு மக்கள் முடிவெடுப்பதும் சாதாரணமாக நடக்கிற ஒரு விசயம் தான். அதற்கான காரணங்களும் இருக்கின்றன. ரோனிபிளயர் என்கிற முன்னாள் பிரித்தானியப் பிரதம மந்திரி மக்களுக்கு ஈராக் தொடர்பாக ஒரு முடிவை அறிவிக்க வேண்டி இருந்தது. அது பெரும்பாலான மக்களுக்கு தெரிந்திருந்த முடிவாக இருந்தபோதிலும் ரோனிபிளயருக்கு இதை நிரூபிக்க வேண்டிய தேவை இருந்தது. அதற்காகவே அவர் யாரோ எழுதிய கட்டுரையை எடுத்து ஒரு சொல்லைக் கூட மாத்தாமல் பிரித்தானிய மக்களுக்கு பெருப்பிச்சுக் காட்டினார். நாட்டின் தலைமை மக்களின் நலன் கருதி முடிவெடுக்கும் என்று நம்பிய பிரித்தானிய மக்களும் சடாம் குசையின் மீது படையெடுப்பதை ஒப்புக் கொண்டார்கள். அதற்காக பிரித்தானிய மக்கள் கொடுத்திருக்கும் விலையும் அளப்பரியது.
 
நாமும் துப்பாக்கி தூக்கி போரடுவதற்கு தயாராகினோம். இதே கூட்டணிதான் துரையப்பாவை சுட்டிக் காட்டி சுட்டுக்காட்டுங்கள் என்று பிரபாகரனிடம் கேட்டதும் அன்றைய அப்பாவிப் பிரபாகரங்கள் சுட்டுத் தள்ளியதும் நடந்தேறின. இதன் பின் போராளிக் குழுக்கள். எந்தத் தலைமையும் தகுதி மட்டும் இல்லாத தலைமையாகவே உருவெடுத்தன. புரட்சி வெடிக்கிறபோது நாம் மக்களைப் பாதுகாப்பதற்கு ஒரு பொருளாதாரத் திட்டம் வைத்திருக்க வேண்டும் என்று தோழர்கள் உமா மகேஸ்வரனிடம் கேட்டபோது கீரை தின்னலாம் என்ற அளவுக்கு அவருக்கு தலைமை தாங்கும் தகுதி இருந்திருக்கிறது.

கிளின்ற் ஈஸ்ற்வூட்டின் படத்தைப் பார்த்துதான் திட்டங்கள் தீட்டுவேன் என்று சொன்ன மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமையும் என்று ஒவ்வொரு இயக்கமும் தாம் மேற்கொள்ளப் போகும் நடவடிக்கையினால் எத்தினை ஆயிரம் இளைஞர்கள், யுவதிகள் பாதிப்படையப் போகிறார்கள். வளங்கள் சொத்துக்கள் உயிர்கள் என்று எவ்வளவு நாசகாரம் நடக்கப் போகிறது என்று சிந்திக்காத, சிந்திக்க முடியாத, திராணியற்ற 50க்கு மேற்பட்ட இயக்கங்களும் இதனின்றும் முளையெடுத்த பாராளுமன்றக் கட்சிகளும் எங்கே, எப்போது தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தியிருக்கிறார்கள்? அப்படியாயின் தமிழ் பேசும் மக்கள் என்ன செய்ய வேண்டும். அவர்களுக்கு நிஜத்தைச் சொல்லி அதனால் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் சாதக பாதகங்களை புரிய வைப்பதற்காக அரசியல் வேலையை செய்து விட்டு மக்களை முடிவெடுக்கத் தூண்டியிருக்க வேண்டும்.

கிழக்கு மாகாணத் தேர்தல் முடிந்து இவ்வளவு காலம் ஆகியும் ஒரு மண்ணாங்கட்டியும் நடக்கேல்லை. ரோட்டுப் போடுவதும் இடிந்த கட்டடங்களைக் கட்டுவதும் அபிவிருத்தி கிடையாது. அவை மீள் கட்டுமானப் பணிகளே. மகிந்தவுடனேயே நின்று ஒன்றும் செய்ய முடியாத பிள்ளையான் தலைமை எடுத்திருக்கும் முடிவுக்கும் கிழக்கு மாகாண மக்களின் எதிர் காலத்திற்கும் என்ன தொடர்பு இருக்கப் போகிறது. அம்மானின் கூத்து அதைவிடக் கேலியானது.
 
மகிந்தவுக்குப் போடுங்கோ என்று பிள்ளையான் கட்சி எடுத்திருக்கும் முடிவுக்கான அடித்தளம் எதுவுமே கிடையாது. 13ம் திருத்தமோ மேலையோ கீழையோ மகிந்த எடுக்கும் முடிவுக்கே கட்டுப்படுகிறேன் என்று சொல்ல  ஒரு தலைமை. அந்தத் தலைமையின் முடிவைக் கேட்டு மக்கள் வாக்குப் போட வேணுமெண்டால் “கடவுள் தான் காப்பாத்தவேணும்” (நானும் ஒரு அரசியல் கட்சி தொடங்கலாம் போல இருக்கு. எனது அரசியல் ஞானத்தைப் பார்க்க தந்தை செல்வாவே பிச்சை வாங்க வேணும் போல இருக்கு.)

புளட் தலைவர் என்ன சொல்கிறார். அவரும் மகிந்த மாத்தையாதான் நல்லவராம். தமிழர்கள் என்ன மாப்பிளையா பாக்கிறார்கள்? அவர் குடும்பம் எப்பிடி? மாப்பிழை சிகரட் குடிப்பாரா? தண்ணி அடிப்பாரா என்று சான்றிதழ் முத்திரை குத்துவதற்கு. சித்தாத்தன் ஜயா சின்னத்திலை இருக்கிற உமாமகேஸ்வரன் அந்த இயக்கப் போராளிகளைத் தூக்கி போரணையில் போட்டு கொலை புரிவதற்க்கு காரணமாக இருந்தவர். பிள்ளைகளைப் பறி கொடுத்த தாய்மாரிடம் ஒரு மன்னிப்புக் கேட்கக் கூட திராணியில்லாத சித்தன் மகிந்தவுக்குச் சேட்டிபிக்கேற் குடுக்கிறார். ஆடு நனையிதெண்டு…. ஏதொ ஒரு மிருகம் அழுதமாதிரி இல்லையா இந்தக் கதை.

மகிந்த ஆட்சிக்கு வந்த இந்த நான்கு ஆண்டுகளில் பிரதமராக இருந்த அமைச்சராக இருந்த பன்னிரண்டு ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கு என்ன செய்தார். இனி என்ன செய்வதாக உறுதி கொடுத்துள்ளார்? அதை நிறைவேற்றுவார் என்பதற்கான அத்தாட்சி என்ன எந்த இழவும் சொல்லாமல் முறுகண்டி பிள்ளையார் கோயிலுக்கு கும்பாவிசேகம் செய்யப் போயிருக்கும் சித்தனின் முடிவை தமிழ் மக்கள் ஏற்று வாக்குப் போடலாமா?

டக்கிளசை விட்டிடுங்கோ. கோடி எந்தப் பக்கம் அவர் பாட்டும் அந்தப்பக்கம் என்பது மகிந்த சொல்லித்தான் எங்களுக்கே தெரியும். ஆதலால் அவரால் பெரிய ஆபத்தும் இல்லை. அவர் சொல்லை யாரும் கேட்கப் போவதுமில்லை. என்ன மீறினால் குடும்பத்தோடை சுட்டுப் பொசுக்கிப் போட்டு உத்தரத்திலை தொங்க விடும் உத்தரவாதத்தை மட்டும் அவரால் உறுதியாகக் கொடுக்க முடியும்.

மே 17ம் திகதி 2009ல் பிரபாகரன் ஒரு தீர்க்கதரிசி என்று புகழ்ந்து தள்ளிய சம்பந்தர் ஜயா 19ம் திகதி உந்தக் குறுக்கால போனவன்தான் எல்லா அழிவுக்கும் காரணம் என்று சொல்லும் இந்த ஜயா, பொன்சேகாவுக்குப் போடுங்கோ என்று சொல்லுறார். இதற்கான காரணங்களில் முக்கியமானது என்ன தெரியுமோ? நாலு வருசமா மகிந்த ஒண்டும் செய்யேல்லையாம். உங்கட தேசியத் தலைவரை மண்டியிட வைச்சது. பொன்சேகா தலைமையிலை போட்டுத் தள்ளியது. குறைஞ்சது வன்னிக்குப் போய் கதிர்காமக் கோயில் பூசாரி மாதிரி வாயைப் பொத்திக் கொண்டு சொல்லிற எல்லாத்தையும் செக்கு மாடுகள் மாதிரி கேட்டுக் கொண்டு வந்து வெளிநாடுகளிலை விளையாட்டுக் காட்டின உங்களை அக்கம் பக்கம் பாத்து பாராமல் அறிக்கை விடுற அளவுக்குச் செய்தது மகிந்த எண்டு அவிட்டு விட ஆயிரம் இருக்கய்யா. உங்களை இன்றைக்கு அரசியல்வாதி என்ற நிலைக்கு உயர்த்தி விட்டதே மகிந்த மாத்தையா தானே. இல்லாட்டி உங்களுக்குப் பெயர் பினாமிகள் எல்லோ? அது மட்டுமே வெளிநாடுகளில உள்ள கனபேர் இப்ப ஊருக்குப் போய் பொம்பிளை தேடுகினம். ஏதோ மகிந்தவின்ர புண்ணியத்தில அவர்களுக்கு கலியாணம் காட்சி என்று நடக்குது.

திருமலை தந்த புலிச் சிங்கமே சம்பந்தர் ஜயா! நாலு வருசமா மகிந்த ஒண்டும் புடுங்கேல்லை எண்டு மட்டுமில்லை இப்ப நீங்கள் வாக்குப் போடச் சொல்லியிருக்கும் பொன்சேகாவை ஆதரிக்கும் ஜக்கிய தேசியக் கட்சியும் ஆதரிக்க வேண்டாம் என்ற சுதந்திரக் கட்சியும் 62 வருசமா எதையும் உமக்கு நட்டு வைக்கேல்லை என்பது தெரியாமல் போச்சுதோ? 62 வருடங்களாக ஒப்பந்தம் இடுவதும், பின்னதைக் கிழிப்பதும் பிறகு வாக்குறுதி அளிப்பதும், நீங்கள் மறப்பதும் என்று நடந்த நாடகத்தில் மகிந்தவின் நாலு வருட ஆட்சியிலை ஒன்றும் நடக்காமல் போனது உங்களுக்கு கோவம் பொத்திக்கொண்டு வரக் காரணம் என்கிறீர்களே இதென்ன விளையாட்டு?

பொன்சேகா யார்? மே 18 வரை விடுதலைப் புலிகளுடன் சேர்த்து நாற்பதாயிரத்திற்கும் மேலான தமிழ் மக்களை கொன்று குவிப்பபதற்கு மகிந்த ராஜபக்சவின் அரசுக்கு பெருந்துணையாக இருந்தவர். புலிகளுடனான யுத்த வெற்றிக்கு பின் தமிழர்கள் தொடர்பாகவும் தழிழ்நாடு தொடர்பாகவும் மிக மோசமான துவேச அறிக்ககைளை விட்டவர். அமெரிக்கா சென்று தமிழர்கள் ஒரு மூலையில் இருக்க வேணும் என்றால் இருக்கட்டும். உரிமைக் கதை கதைக்கக் கூடாது என்று கூறியவர்.

எப்படி தேர்தல் களம் வரை வந்தார்? மகிந்த அரசில் ஏற்பட்ட சிறிய முறுகல் மகிந்தவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்பட்டுவரும் இறுக்கம், யுஎன்பி கட்சிக்குள் முத்தியிருக்கும் தலைமைப் போட்டி, அமெரிக்காவுக்கு தலையாட்டுவதற்கு ஆள் பிடிக்க வேண்டிய கட்டாயம் எல்லாம் ஒன்று சேர்ந்து பொன்சேகாவுக்கு முடி சூட்டியதே, தவிர பொன்சேகா நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று எதிர்கட்சிகள் எடுத்த நல்லெண்ணம் கிடையாது. பிரபாகரனை முடித்த கையோடு சீனாவின் பக்கம் கூடுதலாக சாய்ந்து கொண்ட மகிந்தவைக் கொண்டுவருவதில் இந்தியாவுக்கு விருப்பம் குறைந்து விட்டாலும் மேற்குலகுடன் எப்பவும் சாயும் யுஎன்பியை ஆதரிக்கவும் இந்தியா தயங்கியது.

சீனாவுடனான வர்த்தக இராணுவ அரசியல் முறுகல் மோசமடைந்து வருகிற இந்த நேரத்தில் பொன்சேகா ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவுடன் ஏற்பட்டு வரும் உறவைப் பயன்படுத்தி சீனாவை ஓரம் தள்ளி இந்தியா தன்னை இலங்கையில் முன்னிறுத்தலாம் என்று எடுத்துக் கொண்ட முடிவே பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவு. சம்பந்தனுக்கு உருத்திரகுமார் வியன்னாவிலை வைச்சு சொன்னதும் இதைத்தான். இந்தியா தொலைபேசியில் சம்பந்தனுக்கு சொன்னதும் இதுதான்.

இன்று மக்கள் முன் உள்ள கடமை இதுதான். காலத்துக்காலம் சோரம்போன இந்த அரசியல் கட்சிகள் மக்கள் நன்மை தொடர்பாக என்றுமே சிந்தித்து முடி எடுத்ததில்லை. உண்மையில் சாதாரண மக்களுக்கு இருக்கிற அறிவு கூட இந்த தலைமைகளுக்கு இருந்தது கிடையாது. ஆகவே இந்தக் கட்சிகளின் காசுழைக்கும் விஞ்ஞாபனங்களை எல்லாம் தூக்கி வீசி விட்டு இன்றைய அரசியல் பொருளாதார சூழலைப் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது.

மே 18 2009 வரை ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கையில் உறை குளிரில் உலகமெங்கும் கூக்குரல் இட்டதமிழ் மக்களின் கோரிக்கைகளில் முதன்மையாக ஒலித்தது போர்க் குற்றம் என்பது. இதனை நிரூபிப்பதற்க்கு சனல்4 போன்ற ஊடகங்கள் பாரிய முயற்சியை மேற்கொண்டிருந்தன என்பதும் எல்லோருக்கும் தெரியும். மே 18 வரை போர்க் குற்றம் புரியும்படி கட்டளையிட்டவர் மகிந்த. அதை நிறைவேற்றியவர் பொன்சேகா. இன்று யாரை முதல் எதிரி என்று வாய் கிழியக் கத்தினோமோ அவரை ஆதரியுங்கள் என்று வந்து நிக்கிறது தங்களைத் தமிழ் மக்களின் தலைமை என்று கூறிக்கொள்ளும் இந்தக் கூட்டம். காலா காலமாக தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைத் திட்டமிட்டே நசுக்கிவந்த சிங்களத் தலைமையும் பௌத்த பீடமும் புதுமாத்தளனுக்குப் பின் ஞானம் பிறந்து தமிழ் பேசும் மக்களை காப்பாத்த அவதாரம் எடுத்திருக்கறார்கள் என்று விசுக்கோத்துத் தனமாக சொல்லும் இந்த தமிழ் அரசில் கட்சிகளின் குறிப்பாக கூட்டமைப்பின் முடிவை எண்ணிச் சிரிக்கக் கூட முடியவில்லை.

யுத்தம் நடந்து பேரவலம் கட்டவிழ்த்து விடப்பட்ட அப்பாவி மக்கள் இன்றும் தங்கள் இழப்புக்களில் இருந்து விடுப.டாத நிலையில் ஒரு தேர்தல். அதில் கொன்றவனுக்கும் கொல்லச் சொன்னவனுக்கும் வாக்குப் போடுங்கள் என்று கூட்டம்  போடும் இந்தக் கூட்டமைப்புக்கும் இதர கட்சிகளுக்கும் மக்கள் பாடம் புகட்டவேண்டிய தருணம் இது.

விக்கிரமபாகு என்று ஒரு வேட்பாளர். தமிழர்கள் அழிக்கப் பட்டபோது ஓங்கி குரல் கொடுத்த ஒரு இடதுசாரி அரசியல்வாதி. தமிழர்களின் பிரச்சனை நியாயமானது என்று குரல் கொடுப்பவர். புலி கெலி கொண்டு ஓடும்வரை சம்பந்தர் கூட்டமும் விக்கிரபாகு பற்றி பெரிதாகவே பேசினார். இப்போது என்ன நடக்கிறது. பொன்சேகாவுக்கு மாலை சூட்டுகிறார்.

தமிழர்கள் இந்த இருவரில் யாருக்குப் போடாவிட்டாலும் ஒருவர் வெல்வது உறுதி. ஆனால் எமக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஒருங்கிணைந்து வெளிக்காட்ட எமக்கு கிடைத்திருக்கும் ஒரு சந்தர்ப்பத்தை நழுவ விடுவதோடு மாத்திரமல்லாமல் இவர்கள் இருவரையும் ஆதரிப்பதன் மூலம் சர்வதேசத்தின் முன்னால் இவர்கள் போர்க் குற்றவாளிகள் அல்ல, மே 18 முன் நடந்ததெல்லாம் வெறும் வாண வேடிக்கை களியாட்டம் என்று நாமே அவர்களுக்காக நிரூபணம் கொடுத்துவிடுவோம். 

இதுவரை காலமும் இந்தத் தமிழ்கட்சிகள் ஒரு முடிவை ஆராய்ந்து சாதக பாதகங்களை கணக்கெடுத்து எமது எதிர்காலம் பற்றிச் சிந்தித்து செயலாற்றியது கிடையாது. இந்தியாவுக்கோ அமெரிக்காவுக்கோ தலையாட்டிப் பிழைத்த கூட்டம் தான் இந்தக் கூட்டமைப்பும் கட்சிகளும். இந்தத் தேர்தலில் இந்த இரண்டு வேட்பாளர்களையும் ஆதரிப்பதா அல்லது நிராகரிப்பதா என்ற முடிவை இம்முறை நீங்களே சிந்தித்து எடுங்கள். விக்கிரமபாகுவுக்கு வாக்களித்தால் குறைந்தபட்சம் இவர்களது போர்க்குற்றத்தையாவது நாம் அறைந்து சொல்ல முடியும்.

”சிவாஜிலிங்கம், சிறிகாந்தா அமைப்பில் இருந்து நீக்கப்பட்டது என வெளியான செய்தி மோசடியானது” ரெலோ தலைவர்

Selvam Adaikalanathan TNA_TELOஜனாதிபதித் தேர்தலுக்கான நாட்கள் அண்மிக்க அண்மிக்க தேர்தல் பிரச்சாரங்கள் சேறடிப்புப் பிரச்சாரங்களாகவும் மாறி வருகின்றது. இரு பிரதான வேட்பாளர்களும் தங்கள் கொள்கையினதும் நன்மதிப்பின் அடிப்படையில் வாக்கு கேட்பதற்குப் பதிலாக மற்றவரின் பலவீனத்திலும் மற்றவரை குற்றம்சாட்டுவதன் மூலமும் தங்களைப் பலப்படுத்த முயல்கின்றனர். இந்த சேறடிப்புப் போட்டியில் தமிழ் ஊடகங்களும் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன. இதன் ஒரு வெளிப்பாடாக சுயேட்சையாகத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம் கெ சிவாஜிலிங்கம் அவர் அங்கம் வகித்த ரெலோ அமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மோசடியான செய்தி பரவலாக வெளியிடப்பட்டுள்ளது.

‘தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் மற்றும் ஸ்ரீகாந்தா ஆகியோர் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் செயலளார் பிரசன்னா ஆகியோர் கையொப்பமிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்’ என அச்செய்திகள் தெரிவிக்கின்றன. ‘குறித்த இருவரும் கட்சியின் அனைத்து பதவி நிலைகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்’ என்றும் அச்செய்தி தெரிவிக்கின்றது. இச்செய்தி கொழும்பில் இருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகையொன்றிலும் அதனைத் தொடர்ந்து இணைய ஊடகங்களிலும் பிரித்தானியத் தமிழ் தொலைக்காட்சி ஒன்றிலும் வெளியிடப்பட்டு உள்ளது.

‘கட்சியின் நிலைப்பாட்டிற்கு முரணாக சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடத் தீர்மானித்தமை தொடர்பில் அவர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவு வழங்கியமை காரணமாக ஸ்ரீகாந்தா கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்’ என்றும் அச்செயிதியில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பெரும்பாலும் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கும் இந்த ஊடகங்கள் எம் கெ சிவாஜிலிங்கத்திற்கு கிடைக்கும் வாக்குகளைத் தடுப்பதற்காகவே இவ்வாறான பிரச்சாரங்களில் ஈடுபடுவதாக லண்டனில் உள்ள எம் கெ சிவாஜிலிங்கத்தின் ஆதரவாளர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இச்செய்தி தொடர்பாக ரெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுடன் தொடர்பு கொண்ட போது இச்செய்தி முற்றிலும் மோசடியானது எனத் தெரிவித்தார். இச்செய்தியை வெளியிட்ட ஊடகங்கள் அதனை வெளியிடுவதற்கு முன் தன்னுடன் அச்செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த தவறி இருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். இத்தவறான செய்தி தொடர்பான அறிக்கை விரைவில் ரெலோ அமைப்பினரால் வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார்.

ரெலோ இயக்கத்தினுள் பிளவை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாறான முயற்சிகளை வன்மையாகக் கண்டித்த அவர் ரெலோ அமைப்பின் பழமையான திருமலை மாவட்ட லெற்றர் ஹெட்டில் எழுதப்பட்டு தனது கையொப்பத்தை இட்டு அனுப்பப்பட்ட அறிக்கையை ஆதாரமாகக் காட்டியே இச்செய்தி வெளியிடப்பட்டதாகவும்  அக்கையொப்பம் தன்னுடையதல்ல அது மோசடியானது என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க முன்வந்த போதும் பெரும்பாலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யத் தயங்குகின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பிரவு சரத் பொன்சேகாவுக்கும் இன்னுமொரு பிரிவு மகிந்த ராஜபக்சவுக்கு மறைமுகமாகவும் மற்றுமொருபிரிவு சுயேட்சை வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கத்துக்கு ஆதரவாகவும் செயற்படுகின்றது.

இம்மோசடிச் செய்தி எம் கெ சிவாஜிலிங்கத்தின் மீதான ஒரு சேறடிப்பு முயற்சியாகவே அமைந்துள்ளது.

வன்முறைகளுடன் சூடுபிடித்துள்ள ஆறாவது ஜனாதிபதித் தேர்தல் – புன்னியாமீன்

sarath-jaffna.jpgmahinda_jaffna.jpgஆறாவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 26ஆந் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் களப் பரீட்சையில் இறங்கியுள்ள இரண்டு பிரதான கட்சிகளுக்கிடையில் தேர்தல் வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரித்துவருவதை அவதானிக்க முடிகின்றது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமிருக்கும் இந்நிலையில் (ஜனவரி 18 வரை) தேர்தல் தொடர்பில் 694 முறைப்பாடுகள் நாடு முழுவதும் பதிவாகியுள்ளதாக குற்றவியல் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க தெரிவித்திருந்தார். இதில் சந்தேகநபர்கள் தெரியாத முறைப்பாடுகள் 387 உம் சந்தேகநபர்கள் தெரிந்த முறைப்பாடுகள் 307ம் அடங்கும். சந்தேகநபர்கள் தெரிந்த முறைப்பாடுகளில் 123 முறைப்பாடுகள் விசாரித்து முடிக்கப்பட்டு விட்டதாகவும் மேலும் தெரிவித்தார்.

ஆறாவது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்பு இதுவரை 4 பாரதூரமான சம்பவங்களாக உக்கம, புத்தளம், வாரியபொல குருநாகல், வெலகெர ஆகிய பகுதிகளில் 4 பேர் தேர்தல் வன்முறைகளால் கொல்லப்பட்டுள்ளனர். முதலாவது அரசியல் படுகொலை ஜனவரி 12ஆந் திகதி இலங்கையின் தென்மாகாணத்தில் தங்காலை பகுதியில்  இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டம் ஒன்றுக்கு சென்றுகொண்டிருந்த பஸ் ஒன்றின் மீது துப்பாக்கிச் சு10டு நடத்தப்பட்டதால் குசுமாவதி என்பவர் கொல்லப்பட்டதுடன், மேலும் 8 பேர் காயமடைந்தனர். குசுமாவதியின் மரணம் குறித்து கருத்துத் தெரிவித்த சஜித் பிரேமதாஸ குசுமாவதி தனது கட்சி ஆதரவாளர் என்றும்,  இக்கொலைச் சம்பவமானது மிலேச்சத்தனமான நடவடிக்கை எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த முதலாவது கொலையைப் புரிந்தது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் என குற்றஞ் சுமத்தப்பட்டது.

இந்நிலையில் ஜனவரி 17ஆந் திகதி இரண்டாவது அரசியல் தேர்தல் வன்முறை கொலையும் இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றுக்கு சென்றுகொண்டிருந்த ஆதரவாளர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஆனந்த சமன்குமார என்ற 19 வயதுடைய இளைஞன்; கொல்லப்பட்டார். இந்த இளைஞன் ஆனமடுவ,  தெனிங்கலவைச் சேர்ந்தவராவார். இந்த இளைஞனுக்கு அஞ்சலிச் செலுத்த ஐக்கிய மக்கள் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவும் கலந்து கொண்டதாக தெரியவருகின்றது.
இந்நிலையில் வாரியபொலவில் ஜனவரி 18ஆம் திகதி அதிகாலையில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். தேர்தல் வன்முறையில் இது 3வது கொலையாகும். இச்சம்பவத்தில் எச். எம். தம்மிக்க ஹேரத் (33) என்பவரே கொல்லப்பட்டார். வாரியபொல பிரதேசத்தில் சம்பவ தினம் பத்து பேர் சேர்ந்து தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவ்வேளை மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்த குழுவினர் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தவர்கள் மீது தடிகளால் தாக்கியுள்ளனர் எனவும் இதன்போதே தம்மிக்க ஹேரத் என்பவர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

பலிக்குப் பலி வாங்கும் இத்தேர்தல் வன்முறைக் கலாசாரத்தில் 18ஆம் திகதி இரவு நேரத்தில் பிரதி அமைச்சர் ஜெயரத்தின ஹேரத்தின் குருநாகல், வெலகதர பிரதேசத்திலுள்ள வீட்டுடன் இணைந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அலுவலகத்தின் மீது கிரனேட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் அமைச்சரின் சாரதி டி.எம் சுரங்க இந்திரஜித் (27) உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. இவ்வாறாக நாளுக்குநாள் வன்முறைக் கலாசாரங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இதுவரை நடந்த 4 கொலைகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவாளர்கள் இருவரும், பொதுவேட்பாளரின் ஆதரவாளர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளிலும்,  இரண்டு கட்சி ஆதரவாளர்களுக்கிடையிலான வாய்ப் பேச்சி மோதலாக மாத்திரம் அன்றி ஆயுதப் பிரயோகங்களாகவும் அதிகரித்து  வருகின்றன. கிரெனைட் வீச்சுக்கள், கைத்துப்பாக்கிப் பிரயோகங்கள் போன்றனவும், கடந்த ஒரு வாரத்துக்குள் அதிகரித்து வருகின்றன. கட்சி ஆதரவாளர்கள் தாக்கப்படுதல்,  காரியாலயங்கள் தாக்கப்படுதல்,  என்பன சாதாரண நிகழ்வுகளாக இடம்பெறத் தொடங்கியுள்ளன. பலர் காயமடைந்துள்ளனர். வாகனங்கள்,  வீடுகள் போன்ற உடைமைகள் சேதமாக்கப்பட்டுள்ளன. மக்களின் ஜனநாயக உரிமைகளில் வன்முறையும் ஒன்றா என்று ஐயப்படும் வகையில் இவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. தேர்தல் காலங்களில் வன்முறை கலாசாரங்கள் மூன்றாம் உலக நாடுகளுக்கு பொதுவானவை.  

வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் தொடர்பான வன்முறை முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் பொலிஸார் கூறுகின்றனர். சகல முறைப்பாடுகள் தொடர்பாகவும் 289 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதில் அதிகமானோர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 164 பேர் இன்னும் கைது செய்யப்படவுள்ளனர். இதேநேரம், கடந்த 13 ஆம் திகதி பொலநறுவையில் ஆளும் தரப்பு,  எதிர்த் தரப்பு கட்சி ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட வேண்டிய 21 பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹக்கம பகுதியில் பிரசாரக் கூட்டமொன்றிற்கு சென்று கொண்டிருந்த பஸ்லொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விட்டதுடன், அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. வாரியபொல பிரசார சுவரொட்டி ஒட்டிக் கொண்டிருந்த ஒருவர் மீது 6 மோட்டார் சைக்கிள்களில் வந்து தாக்கி அந்நபரை கொலை செய்த சம்பவம் தொடர்பிலான 6 சந்தேகநபர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 2 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று கூறியுள்ளனர்.

தேர்தல் காலத்தில் வன்முறைகள் உருவாகுவதை  எக்காரணத்தையிட்டும் எச்சமூகத்தாலும் அனுமதிக்க முடியாது. வன்முறைகள் தலைதூக்காத விதத்தில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் பொலிஸாருக்கு அறிவுறுத்தல்கள்  வழங்கியுள்ள போதிலும் கூட அந்த அறிவுறுத்தல்கள் உறுதியானவையாக உள்ளனவா என்பது கேள்விக்குறியே. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ‘தேர்தல் சட்டங்களை பாதுகாப்பதற்கு எவரும் ஒத்துழைப்பு வழங்குவதில்லை” என தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க விசனம் வெளியிட்டுள்ளார். தேர்தல் செயலகத்தில் கட்சிப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். தேர்தல் சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு அரச அதிகாரிகளுக்கு விடுக்கப்படும் உத்தரவுகள் உதாசீனப்படுத்தப்படுவதாகவும்,  இந்த நிலைமையின் கீழ் தேர்தல் பணிகளை முன்னெடுப்பதில் சிக்கல் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரச ஊடகங்களை கண்காணிக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட தகுதி வாய்ந்த அதிகாரியின் பணிப்புரைகளை குறித்த ஊடகங்கள் பின்பற்றுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அரச ஊடகங்கள் தொடர்ந்தும் உத்தரவுகளை மீறிச் செயற்பட்டால் குறித்த அதிகாரியை வாபஸ் பெற்றுக்கொள்ள நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளதோடு அரச உத்தியோகத்தர்கள் 17 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு அமைய செயற்பட வேண்டும் என்ற போதிலும் எவரும் அதனைப் பின்பற்றுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் வன்முறையில் ஈடுபடுவோர் எவராக இருப்பினும் பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்படி பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் காலத்தில் தேர்தல் ஆணையாளர் விசேட அதிகாரங்களைக் கொண்டவராக விளங்குகிறார். தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு சுமுகமாக நடை பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் விசேட பணிப்புரைகளை வழங்கும் அதிகாரம் அவருக்குண்டு.

தேர்தல் தொடர்பான சிறு சிறு சம்பவங்களைக் கூட பெரிதுபடுத்தும் விதத்தில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடகங்களுக்குத் தகவல்களை வழங்குவதாக தேர்தல் ஆணையாளரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்விடயத்தில பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டுமென்பதே அத்தகைய அமைப்புகளுக்கு தேர்தல் ஆணையாளர் கூறியிருக்கும் அறிவுரை ஆகும். சிறு வன்முறைச் சம்பவங்களைப் பெரிதுபடுத்துவது ஊடகங்களுக்கும் அழகல்ல.

தேர்தல் கடமையைப் பொறுத்த வரை எமது தேர்தல் ஆணையாளர் அனைத்துத் தரப்பினரதும் பாராட்டைப் பெற்றவராக விளங்குகிறார். கூடுதலான தேர்தல்களை கச்சிதமாக நடத்தி முடித்த நிர்வாகத்திறன் மிகுந்தவர் அவர். எதுவித பக்கச்சார்புமற்ற விதத்தில் தேர்தல்களை நடத்துவதென்பது மிகுந்த பொறுப்பு மிக்கதாகும். இப்போது நடைபெறவிருக்கும் தேர்தலிலும் தேர்தல் ஆணையாளரின் நடவடிக்கைகள் கடுமையானதாகவே அமைந்திருக்கும் என எதிர்பார்க்க முடியும்.

ஜனநாயக நாடொன்றில் ஆட்சியைத் தீர்மானிப்பதற்காக உரிமை  மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களது சுயசெயற்பாடுகளுக்குப் பங்கம் விளைவித்தல் என்பது ஜனநாயக உரிமை மீறலாகும். தெற்காசியாவிலே கல்வியறிவில் முன்னணியில் உள்ள எமது இலங்கை இவ்விடயத்தையும் கவனத்தில் எடுத்தல் வேண்டும்.  வன்முறைகள் வாயிலாக எதனையும் சாதித்துவிட முடியாதென்பது யதார்த்தமும் உண்மையாகும்.

மறுபுறமாக தேர்தல் தொடர்பான விதிமுறைகளை மீறிச் செயற்படுவதோ அல்லது வன்முறைகளில் ஈடுபடுவதோ ஆரோக்கியமான நடவடிக்கைகளல்ல. இதுபோன்ற நடவடிக்கைகளால் சாதாரண மக்கள் மத்தியில் வெறுப்பும் அதிருப்தியுமே உருவாகும். வன்முறையில் சம்பந்தப்படுவோர் இதனை முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும். வன்முறைகளில் ஈடுபடுவதன் மூலம் ஆரோக்கியமான சமுதாயத்தினுள் எதுவிதமான மனமாற்றத்தையும் ஏற்படுத்தி விட முடியாது. அதற்கு மாறாக மக்களிடமிருந்து வெறுப்பையே சம்பாதித்துக் கொள்ள முடியும். தற்போது இலங்கையிலும் இதுவே ஏற்பட்டு வருகின்றது.

இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையும், இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களும் : 06 – புன்னியாமீன் –

sri-lanka.jpgதொடர்ச்சி….

13 அபேட்சகர்கள் போட்டியிட்ட நான்காவது ஜனாதிபதித் தேர்தல்

நான்காவது ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் 1994.11.10ம் திகதி இலங்கையின் 5வது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாகச் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். அரசியலமைப்பின் 30ம் உறுப்புரையின் 2ம் பந்திக்கமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும். ஆனால், தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாகவே 4வது ஜனாதிபதித் தேர்தலுக்குரிய அறிவித்தல் விடுக்கப்பட்டது. (ஜனாதிபதி தனது பதவிக்காலத்தை 4 ஆண்டுகள் பூரணப்படுத்திய பின்பு ஜனாதிபதி விரும்பின் இடைக்காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் அதிகாரம் அவருக்குண்டு.

4வது ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் 1999.11.16ம் திகதி ஏற்றுக் கொள்ளப்படுமெனவும், 199.12.21ம் திகதி தேர்தல் நடைபெறுமெனவும்,  ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா குமாரதுங்கவின் பணிப்புரையின் படி பதில் தேர்தல் ஆணையாளர் அவர்களினால் உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்பட்டது.

இந்த அறிவித்தலின்படி ஸ்ரீலங்கா ஜனநாயகக் குடியரசின் 5வது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியைத் தேர்ந்தெப்பதற்கான 4வது ஜனாதிபதித் தேர்தலில் பின்வரும் அபேட்சகர்கள் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்தனர்.

1. ஜனாப் அப்துல் ரஸ்ஸாக் அப்துல் றசூல்
சின்னம் : தாரசு
ஸ்ரீலங்கா முஸ்லிம் கட்சி
2. திரு. அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தனா சின்னம்
சின்னம்: வண்ணத்திப்பூச்சி
கட்சி : மக்கள் சுதந்திர ஒற்றுமை முன்னணி
3. திரு. ஆரியவங்ச திசாநாயக்க
சின்னம் : கழுகு
கட்சி : ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி
4. திரு. மெஸ்டியகே தொன் நந்தன குணதிலக
சின்னம் : மணி
கட்சி : மக்கள் விடுதலை முன்னணி
5. திரு. கமல் கருணதாச
சின்னம் : லந்தர் விளக்கு
கட்சி : மக்கள் விடுதலை ஒற்றுமை முன்னணி
6. திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
சின்னம் : நாற்காலி
கட்சி : பொதுஜன ஐக்கிய முன்னணி
7. திரு. டெனிசன் எதிரிசூரிய
சின்னம் : கத்தரிக்கோல்
கட்சி : சுயேட்டை
8. திரு. மஹிமன் ரஞ்சித்
சின்னம் : அலுமாரி
கட்சி : சுயேட்டை
9. திரு. ரணில் விக்கிரமசிங்க
சின்னம் : யானை
கட்சி : ஐக்கிய தேசியக்கட்சி
10. திரு. ராஜீவ விஜேசிங்க
சின்னம் : புத்தகம்
கட்சி : லிபரல் கட்சி
11. திரு. வாசுதேவ நாணயக்கார 
சின்னம் : மணிக்கூடு
கட்சி : இடதுசாரி ஜனநாயக முன்னணி
12. திரு. ஹட்சன் சமரசிங்க
சின்னம் : வானொலி
கட்சி : சுயேட்டை
13. திரு. விஜேதுங்க முதலிகே ஹரிச்சந்திர விஜேதுங்க
சின்னம் : விமானம்
கட்சி : சிங்களயே மகசம்மத பூமிபுத்திர கட்சி

நிமயனப் பத்திரம் தாக்கல் செய்ததை நோக்கும் போது 3 ஜனாதிபதித் தேர்தல்களையும் விட அதிகமான அபேட்சகர்கள் நியமனப்பத்திரம் தாக்கல் செய்தது இதுவே முதற்தடவை. இங்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மூலமாக 10 வேட்பாளர்களும், சுயேட்சையாக 3 வேட்பாளர்களும் நியமனப்பத்திரம் தாக்கல் செய்திருந்தனர்.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் நியமனப்பத்திரம் தாக்கல் செய்திருந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். (முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் திரு. குமார் பொன்னம்பலம் வேட்பாளராக நியமனப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார். இந்த அடிப்படையில் நோக்கும் போது ஜனாப் அப்துல் றசூல் அவர்கள் ஜனாதிபதித் தேர்தலொன்றில் போட்டியிட்ட 2வது சிறுபான்மை அபேட்சகராகின்றார்.

4வது ஜனாதிபதித் தேர்தலில் 13 அபேட்சகர்கள் போட்டியிட்ட போதிலும் கூட போட்டி மும்முனைப் போட்டியாகவே (பொதுசன ஐக்கிய முன்னணி, ஐக்கிய தேசியக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி) இடம்பெறுமென பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சூடுபிடித்த நேரத்தில் மக்கள் விடுதலை முன்னணியால் பலத்த தாக்கமொன்றினை ஏற்படுத்த முடியவில்லை. முன்னணிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையிலான நேரடி மோதலாகவே இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது. அதேநேரத்தில் மேற்படி இரண்டு கட்சிகளும் தவிர ஏனைய கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் தமது கட்டுப்பணத்தை இழக்கும் என்ற நிலை பரவலாகப் பேசப்பட்டது.

4வது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள்
மேல்மாகாணம்.

கொழும்பு மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க   474,310 (49.18%)
ரணில் விக்கிரமசிங்க    425,185 (44.08%)
நந்தன குணதிலக   44,009  (4.56%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    8,209  (0.85%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,319  (0.14%)
ராஜீவ விஜேசிங்க    1,376  (0.14%)
வாசுதேவ நாணயக்கார    5,000  (0.52%)
டெனிசன் எதிரிசூரிய    1,370  (0.14%)
அப்துல் ரசூல்     1,980  (0.21%)
கமல் கருணாதாச    783  (0.08%)
ஹட்சன் சமரசிங்க     355  (0.04%)
ஆரியவங்ஸ திசாநாயக்க    329  (0.03%)
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  309  (0.03%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 993,731 (74.32%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   29,197 (2.94%)
செல்லுபடியான வாக்குகள்  964,534 (97.06%)
மேலதிக வாக்குகள்  49,125       

கம்பஹா மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க   532,796 (56.58%)
ரணில் விக்கிரமசிங்க     353,969 (37.59%)
நந்தன குணதிலக   40,742  (4.32%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    4,753  (0.50%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,495  (0.16%)
ராஜீவ விஜேசிங்க    1,165  (0.12%)
வாசுதேவ நாணயக்கார    2,102  (0.22%)
டெனிசன் எதிரிசூரிய    1,549  (0.16%)
அப்துல் ரசூல்     1,354  (0.14%)
கமல் கருணாதாச    878  (0.09%)
ஹட்சன் சமரசிங்க     420  (0.04%)  
ஆரியவங்ஸ திசாநாயக்க    386  (0.04%)
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  280 (0.03%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 962,387 (78.31%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   20,768 (2.16%)
செல்லுபடியான வாக்குகள்  941,619 (97.84%)
மேலதிக வாக்குகள்  178,827      

களுத்துறை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க   281,217 (52.88%)
ரணில் விக்கிரமசிங்க     217,423 (40.88%)
நந்தன குணதிலக   23,770  (4.47%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    2,721  (0.51%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,279  (0.24%)
ராஜீவ விஜேசிங்க    1,028  (0.19%)
வாசுதேவ நாணயக்கார    1,003  (0.19%)
டெனிசன் எதிரிசூரிய    1,133  (0.21%)
அப்துல் ரசூல்     796  (0.15%)
கமல் கருணாதாச    608  (0.11%)
ஹட்சன் சமரசிங்க     386  (0.07%)  
ஆரியவங்ஸ திசாநாயக்க    216  (0.04%)
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  229  (0.04%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 543,605 (79.62%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   11,796 (2.17%)
செல்லுபடியான வாக்குகள்  531,809 (97.83%)
மேலதிக வாக்குகள்  63,794      

மத்திய மாகாணம்

கண்டி மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க   308,187 (50.29%)
ரணில் விக்கிரமசிங்க     276,360 (45.10%)
நந்தன குணதிலக   15,512  (2.53%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    3,280  (0.54%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,775  (0.29%)
ராஜீவ விஜேசிங்க    1,614  (0.26%)
வாசுதேவ நாணயக்கார    1,065  (0.17%)
டெனிசன் எதிரிசூரிய    1,369  (0.22%)
அப்துல் ரசூல்     1,706  (0.28%)
கமல் கருணாதாச    749  (0.12%)
ஹட்சன் சமரசிங்க     639  (0.10%)  
ஆரியவங்ஸ திசாநாயக்க    265  (0.04%)
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  290 (0.05%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 629,871 (79.28%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   17,060 (2.71%)
செல்லுபடியான வாக்குகள்  612,871 (97.29%)
மேலதிக வாக்குகள்  31,827

மாத்தளை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    111,232  (51.42%)
ரணில் விக்கிரமசிங்க     91,944 (42.51%)
நந்தன குணதிலக   7,924  (3.66%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    902  (0.42%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   951  (0.44%)
ராஜீவ விஜேசிங்க   860  (0.40%)
வாசுதேவ நாணயக்கார   308  (0.14%)
டெனிசன் எதிரிசூரிய   747  (0.35%)
அப்துல் ரசூல்     550  (0.25%)
கமல் கருணாதாச    343  (0.16%)
ஹட்சன் சமரசிங்க     261  (0.12%)  
ஆரியவங்ஸ திசாநாயக்க    139  (0.06%)
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன 149 (0.07%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 222,482 (77.74%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   6,171 (2.77%)
செல்லுபடியான வாக்குகள்  216,310 (97.23%)
மேலதிக வாக்குகள்  19,288

நுவரெலியா மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    147,210 (46.88%)
ரணில் விக்கிரமசிங்க     152,836 (48.88%)
நந்தன குணதிலக   5,879  (1.87%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    1,021  (0.33%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,698  (0.54%)
ராஜீவ விஜேசிங்க    1,567  (0.50%)
வாசுதேவ நாணயக்கார    812  (0.26%)
டெனிசன் எதிரிசூரிய    1,116  (0.36%)
அப்துல் ரசூல்     531  (0.17%)
கமல் கருணாதாச    555  (0.18%)
ஹட்சன் சமரசிங்க     413  (0.13%)  
ஆரியவங்ஸ திசாநாயக்க    176  (0.06%)
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன   176  (0.06%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 322,987 (81.21%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   8,997 (2.79%)
செல்லுபடியான வாக்குகள்  313,990 (97.21%)
மேலதிக வாக்குகள்  5,626

தென் மாகாணம்

காலி மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    281,154 (54.91%)
ரணில் விக்கிரமசிங்க     195,906 (38.26%)
நந்தன குணதிலக   27,257  (5.32%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    1,592  (0.31%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,227  (0.24%)
ராஜீவ விஜேசிங்க    907  (0.18%)
வாசுதேவ நாணயக்கார    952  (0.19%)
டெனிசன் எதிரிசூரிய    968  (0.19%)
அப்துல் ரசூல்     651  (0.13%)
கமல் கருணாதாச    663  (0.13%)
ஹட்சன் சமரசிங்க     357  (0.07%)  
ஆரியவங்ஸ திசாநாயக்க    175  (0.03%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  210  (0.04%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 521,735 (78.98%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   9,716 (1.86%)
செல்லுபடியான வாக்குகள்  512,019 (98.14%)
மேலதிக வாக்குகள்  85,248

மாத்தறை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    205,685 (54.32%)
ரணில் விக்கிரமசிங்க     139,677 (36.89%)
நந்தன குணதிலக   26,229  (6.93%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    1,539  (0.41%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,042  (0.28%)
ராஜீவ விஜேசிங்க    997  (0.26%)
வாசுதேவ நாணயக்கார    670  (0.18%)
டெனிசன் எதிரிசூரிய    891  (0.24%)
அப்துல் ரசூல்     639  (0.17%)
கமல் கருணாதாச    543  (0.14%)
ஹட்சன் சமரசிங்க     332  (0.09%)  
ஆரியவங்ஸ திசாநாயக்க    192  (0.05%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  202 (0.05%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 387,221 (75.06%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   8,583 (2.22%)
செல்லுபடியான வாக்குகள்  378,636 (97.78%)
மேலதிக வாக்குகள்  66,008

ஹம்பாந்தோட்டை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    120,275 (47.41%)
ரணில் விக்கிரமசிங்க     95,088 (37.48%)
நந்தன குணதிலக   33,739  (13.30%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    733  (0.29%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   700  (0.28%)
ராஜீவ விஜேசிங்க    729  (0.29%)
வாசுதேவ நாணயக்கார    483  (0.19%)
டெனிசன் எதிரிசூரிய    691  (0.27%)
அப்துல் ரசூல்     346  (0.14%)
கமல் கருணாதாச    421  (0.17%)
ஹட்சன் சமரசிங்க     192  (0.08%)  
ஆரியவங்ஸ திசாநாயக்க    160  (0.06%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன   121  (0.05%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 259,053 (73.84%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   5,375 (2.07%)
செல்லுபடியான வாக்குகள்  253,678 (97.84%)
மேலதிக வாக்குகள்  25,187

வட மாகாணம்

யாழ்ப்பாண மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    52,043  (46.65%)
ரணில் விக்கிரமசிங்க     48,005 (43.03%)
நந்தன குணதிலக   413  (0.37%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    818  (0.73%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,873  (1.68%)
ராஜீவ விஜேசிங்க    1,368  (1.23%)
வாசுதேவ நாணயக்கார    3,394  (3.04%)
டெனிசன் எதிரிசூரிய    831  (0.74%)
அப்துல் ரசூல்     1,041  (0.93%)
கமல் கருணாதாச    487  (0.44%)
ஹட்சன் சமரசிங்க     552  (0.49%)  
ஆரியவங்ஸ திசாநாயக்க    340  (0.30%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  403 (0.36%)

அளிக்கப்பட்ட வாக்குகள் 117,549 (19.18%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   5,981 (5.09%)
செல்லுபடியான வாக்குகள்  111,568  (94.91%)
மேலதிக வாக்குகள்  4,038

வன்னி மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    16,202  (25.84%)
ரணில் விக்கிரமசிங்க     43,803 (69.87%)
நந்தன குணதிலக   482  (0.77%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    93  (0.15%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   420  (0.67%)
ராஜீவ விஜேசிங்க    456  (0.73%)
வாசுதேவ நாணயக்கார    444  (0.71%)
டெனிசன் எதிரிசூரிய    234  (0.37%)
அப்துல் ரசூல்     306  (0.49%)
கமல் கருணாதாச    83  (0.13%)
ஹட்சன் சமரசிங்க     69  (0.11%) 
ஆரியவங்ஸ திசாநாயக்க    40  (0.06%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  58  (0.09%) 
 
அளிக்கப்பட்ட வாக்குகள் 64,180  (31.23%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,490 (2.32%)
செல்லுபடியான வாக்குகள்  62,690  (97.68%)
மேலதிக வாக்குகள்  27,601

கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    58,975  (34.66%)
ரணில் விக்கிரமசிங்க     104,100 (61.19%)
நந்தன குணதிலக   290  (0.17%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    250  (0.15%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,528  (0.90%)
ராஜீவ விஜேசிங்க    1,838  (1.08%)
வாசுதேவ நாணயக்கார    884  (0.52%)
டெனிசன் எதிரிசூரிய    784  (0.46%)
அப்துல் ரசூல்     750  (0.44%)
கமல் கருணாதாச    331  (0.19%)
ஹட்சன் சமரசிங்க     234  (0.14%) 
ஆரியவங்ஸ திசாநாயக்க    78  (0.05%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  89  (0.05%) 
 
அளிக்கப்பட்ட வாக்குகள் 173,878 (64.35%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   3,747 (2.15%)
செல்லுபடியான வாக்குகள்  170,131 (97.85%)
மேலதிக வாக்குகள்  45,125

திகாமடுல்லை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    149,593 (55.59%)
ரணில் விக்கிரமசிங்க     109,805 (40.80%)
நந்தன குணதிலக   4,068  (1.51%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    344  (0.13%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,275  (0.47%)
ராஜீவ விஜேசிங்க    1,193  (0.44%)
வாசுதேவ நாணயக்கார    473  (0.18%)
டெனிசன் எதிரிசூரிய    823  (0.31%)
அப்துல் ரசூல்     663  (0.25%)
கமல் கருணாதாச    519  (0.19%)
ஹட்சன் சமரசிங்க     171  (0.06%) 
ஆரியவங்ஸ திசாநாயக்க    93  (0.03%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  80 (0.03%) 
 
அளிக்கப்பட்ட வாக்குகள் 273,649 (79.59%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,549 (1.66%)
செல்லுபடியான வாக்குகள்  269,100 (98.34%)
மேலதிக வாக்குகள்  39,788

திருகோணமலை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    56,691  (44.96%)
ரணில் விக்கிரமசிங்க     63,351 (50.25%)
நந்தன குணதிலக   2,307  (1.83%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    218  (0.17%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   735  (0.58%)
ராஜீவ விஜேசிங்க    713  (0.57%)
வாசுதேவ நாணயக்கார    476  (0.38%)
டெனிசன் எதிரிசூரிய    477  (0.38%)
அப்துல் ரசூல்     599  (0.48%)
கமல் கருணாதாச    245  (0.19%)
ஹட்சன் சமரசிங்க     128  (0.10%) 
ஆரியவங்ஸ திசாநாயக்க    72  (0.06%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  69  (0.05%) 
 
அளிக்கப்பட்ட வாக்குகள் 128,723 (63.78%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,642 (2.05%)
செல்லுபடியான வாக்குகள்  126,081 (97.95%)
மேலதிக வாக்குகள்  6,660

வடமேல் மாகாணம்

குருநாகலை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    377,483 (50.76%)
ரணில் விக்கிரமசிங்க     326,327 (43.88%)
நந்தன குணதிலக   27,354  (3.68%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    2,704  (0.36%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,889  (0.25%)
ராஜீவ விஜேசிங்க    1,660  (0.22%)
வாசுதேவ நாணயக்கார    1,011  (0.13%)
டெனிசன் எதிரிசூரிய    1,672  (0.22%)
அப்துல் ரசூல்     1,355  (0.18%)
கமல் கருணாதாச    872  (0.12%)
ஹட்சன் சமரசிங்க     578  (0.08%) 
ஆரியவங்ஸ திசாநாயக்க    314  (0.04%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  301  (0.04%) 
 
அளிக்கப்பட்ட வாக்குகள் 758,791 (77.37%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   15,272 (2.01%)
செல்லுபடியான வாக்குகள்  743,579 (97.99%)
மேலதிக வாக்குகள்  51,156

புத்தளம் மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    141,725 (51.47%)
ரணில் விக்கிரமசிங்க     121,615 (44.17%)
நந்தன குணதிலக   7,876  (2.86%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    614  (0.22%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   741  (0.27%)
ராஜீவ விஜேசிங்க    599  (0.22%)
வாசுதேவ நாணயக்கார    445  (0.16%)
டெனிசன் எதிரிசூரிய    589  (0.21%)
அப்துல் ரசூல்     481  (0.17%)
கமல் கருணாதாச    308  (0.11%)
ஹட்சன் சமரசிங்க     164  (0.06%) 
ஆரியவங்ஸ திசாநாயக்க    88  (0.03%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  94 (0.03%) 
 
அளிக்கப்பட்ட வாக்குகள் 281,117  (69.57%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   5,778 (2.06%)
செல்லுபடியான வாக்குகள்  275,339 (97.94%)
மேலதிக வாக்குகள்  20,110

வடமத்திய மாகாணம்

அநுராதபுர மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    189,073 (54.14%)
ரணில் விக்கிரமசிங்க     139,180 (39.86%)
நந்தன குணதிலக   14,612  (4.18%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    902  (0.26%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,176  (0.34%)
ராஜீவ விஜேசிங்க    1,065  (0.30%)
வாசுதேவ நாணயக்கார    394  (0.11%)
டெனிசன் எதிரிசூரிய    963  (0.28%)
அப்துல் ரசூல்     670  (0.19%)
கமல் கருணாதாச    600  (0.17%)
ஹட்சன் சமரசிங்க     271  (0.08%) 
ஆரியவங்ஸ திசாநாயக்க    166  (0.05%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  129  (0.04%) 
 
அளிக்கப்பட்ட வாக்குகள் 356,150 (77.50%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   6,949 (1.95%)
செல்லுபடியான வாக்குகள்  349,201 (98.50%)
மேலதிக வாக்குகள்  49,893

வடமத்திய மாகாணம்

பொலநறுவை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க   88,663  (51.55%)
ரணில் விக்கிரமசிங்க     72,598 (42.21%)
நந்தன குணதிலக   8,020  (4.66%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    381  (0.22%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   541  (0.31%)
ராஜீவ விஜேசிங்க    542  (0.32%)
வாசுதேவ நாணயக்கார    165  (0.10%)
டெனிசன் எதிரிசூரிய    392  (0.23%)
அப்துல் ரசூல்     240  (0.14%)
கமல் கருணாதாச    247  (0.24%)
ஹட்சன் சமரசிங்க     116  (0.07%) 
ஆரியவங்ஸ திசாநாயக்க    65  (0.04%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  37 (0.02%) 
 
அளிக்கப்பட்ட வாக்குகள் 175,158 (98.20%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   3,151 (1.80%)
செல்லுபடியான வாக்குகள்  172,007 (79.25%)
மேலதிக வாக்குகள்  16,065

ஊவா மாகாணம்

பதுளை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க   167,000 (46.33%)
ரணில் விக்கிரமசிங்க     172,884 (47.97%)
நந்தன குணதிலக   12,023  (3.34%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    1,177  (0.14%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,499  (0.42%)
ராஜீவ விஜேசிங்க    1,652  (0.46%)
வாசுதேவ நாணயக்கார    589  (0.16%)
டெனிசன் எதிரிசூரிய    1,254  (0.34%)
அப்துல் ரசூல்     915  (0.25%)
கமல் கருணாதாச    554  (0.15%)
ஹட்சன் சமரசிங்க     495  (0.14%) 
ஆரியவங்ஸ திசாநாயக்க   203  (0.06%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  194 (0.05%) 
 
அளிக்கப்பட்ட வாக்குகள் 371,400 (80.00%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   10,979 (2.06%)
செல்லுபடியான வாக்குகள்  360,421 (97.04%)
மேலதிக வாக்குகள்  5,884

மொனராகலை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க    92,049  (51.07%)
ரணில் விக்கிரமசிங்க     73,695 (40.89%)
நந்தன குணதிலக   10,456  (5.80%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    481  (0.27%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   816  (0.45%)
ராஜீவ விஜேசிங்க    860  (0.48%)
வாசுதேவ நாணயக்கார    288  (0.16%)
டெனிசன் எதிரிசூரிய    678  (0.38%)
அப்துல் ரசூல்     215  (0.12%)
கமல் கருணாதாச    336  (0.19%)
ஹட்சன் சமரசிங்க     145  (0.08%) 
ஆரியவங்ஸ திசாநாயக்க    126  (0.07%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன   100  (0.06%) 
 
அளிக்கப்பட்ட வாக்குகள் 184,406 (79.98%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,161 (2.26%)
செல்லுபடியான வாக்குகள்  180,245 (97.74%)
மேலதிக வாக்குகள்  18,354

சப்ரகமுவ மாகாணம்

கேகாலை மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க   210,185 (51.30%)
ரணில் விக்கிரமசிங்க     176,376 (43.05%)
நந்தன குணதிலக   14,997  (3.66%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    1,730  (0.42%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,262  (0.32%)
ராஜீவ விஜேசிங்க    1,209  (0.30%)
வாசுதேவ நாணயக்கார    703  (0.17%)
டெனிசன் எதிரிசூரிய    1,134  (0.28%)
அப்துல் ரசூல்     814  (0.17%)
கமல் கருணாதாச    481  (0.12%)
ஹட்சன் சமரசிங்க     416  (0.10%) 
ஆரியவங்ஸ திசாநாயக்க    169  (0.04%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  204 (0.05%) 
 
அளிக்கப்பட்ட வாக்குகள் 417,816 (78.10%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   8,136 (1.95%)
செல்லுபடியான வாக்குகள்  409,680 (98.05%)
மேலதிக வாக்குகள்  33,809

இரத்தினபுரி மாவட்டம்

சந்திரிக்கா குமாரதுங்க   250,409 (52.13%)
ரணில் விக்கிரமசிங்க     202,621 (42.28%)
நந்தன குணதிலக   16,482  (3.43%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    1,392  (0.29%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   1,811  (0.38%)
ராஜீவ விஜேசிங்க    1,687  (0.35%)
வாசுதேவ நாணயக்கார   2,007  (0.42%)
டெனிசன் எதிரிசூரிய    1,475  (0.31%)
அப்துல் ரசூல்     757  (0.16%)
கமல் கருணாதாச    727  (0.15%)
ஹட்சன் சமரசிங்க     490  (0.10%) 
ஆரியவங்ஸ திசாநாயக்க    247  (0.05%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன  259 (0.05%) 
 
அளிக்கப்பட்ட வாக்குகள் 489,402 (82.14%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   9,038 (1.85%)
செல்லுபடியான வாக்குகள்  480,364 (98.15%)
மேலதிக வாக்குகள்  47,788

இறுதித் தேர்தல் முடிவுகள்.

சந்திரிக்கா குமாரதுங்க   4,312,157 (51.12%)
ரணில் விக்கிரமசிங்க     3,602,748 (42.71%)
நந்தன குணதிலக   344,173  (4.08%)
ஹரிச்சந்திர விஜேதுங்க    35,854  (0.43%)
டபிள்யு.வி.எம். ரஞ்சித்   27,052  (0.32%)
ராஜீவ விஜேசிங்க    25,085  (0.30%)
வாசுதேவ நாணயக்கார   23,668  (0.28%)
டெனிசன் எதிரிசூரிய    21,119  (0.25%)
அப்துல் ரசூல்     17,359  (0.21%)
கமல் கருணாதாச    11,333  (0.13%)
ஹட்சன் சமரசிங்க     7,184  (0.09%) 
ஆரியவங்ஸ திசாநாயக்க     4,039  (0.05%) 
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்தன     3,983 (0.05%) 
 
அளிக்கப்பட்ட வாக்குகள் 8,635,290 (73.31%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  199,536 (2.31%)
செல்லுபடியான வாக்குகள்  8,435,754 (97.69%)

இம்முடிவின் படி ஜனாதிபதியாகத் தெரிவாக குறைந்த பட்சமாகப் பெறவேண்டிய வாக்குகள் (செல்லுபடியான வாக்குகளில் 50% வீதத்துக்கும் அதிகமான வாக்குகள்)

4,217,877

குறைந்த பட்ச வாக்குகளை விட திருமதி சந்திரிக்கா குமாரதுங்க  அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்    

94,280

இரண்டாம் இடத்தைப் பெற்ற ரணில் விக்கிரமசிங்க அவர்களை விட அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்

709,409

பிரதியமைச்சர் வீடு மீது கிரனேட் தாக்குதல் : சாரதி பலி.

இன்று மாலை 7.00 மணியளவில் குருநாகல், வேகெர பிரதேசத்திலுள்ள பிரதி அமைச்சர் ஜெயரத்தின ஹேரத்தின்  வீட்டுடன் இணைந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அலுவலகத்தின் மீது கிரனேட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் அமைச்சரின் சாரதி டி.எம் சுரங்க இந்திரஜித் (27) உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.  நேற்றிரவு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் இரும்புக் கம்பிகளால் அடித்தும் துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்டதன் எதிரொலியாகவே இச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது.

புலிகளுடைய அரசியலில் இருந்து புலிகளற்ற அரசியலை நோக்கி : பேரின்பம் பரமானந்தம்

Paranthaman_Perinpam._._._._._. 

கட்டுரையாளர் பேரின்பம் பரமானந்தம் – பரமன் என அறியப்பட்டவர். திருகோணமலை மாவட்டம் மூதூரைச் சேர்ந்தவர். தற்போது லண்டனில் வதிகின்றார். ‘திருகோணமலை மாவட்ட பிரஜைகள் குழு – பிரித்தானியா’ வின் தலைவராக உள்ளார். இவர் முன்னாள் ஈபிஆர்எல்எப் திருகோணமலை மாவட்ட மக்கள் தொடர்பாளர்.

._._._._._.

இலங்கை சுதந்திரமடைந்து 62 வருடங்களைக் கடந்தும் தமிழர்கள் இனரீதியாக ஒடுக்கப்பட்டு வந்தார்கள். இதனால் சீற்றமடைந்த தமிழ் மிதவாத தலைவர்கள் சத்தியாக்கிரக வழிகளில் அகிம்சை ரீதியாக இதற்கு எதிராக போராடி வந்தனர். இருந்தும் பேரினவாதம் எந்தவிதமான சம உரிமைகளையும் மறுத்து வந்ததுடன் காலத்துக்குக் காலம் இன வன்முறைகளையும் கட்டவிழ்த்து விட்டது.

இதன் உச்சக் கட்டமாக 1983ம் ஆண்டு, இன அழிப்பின் உச்சக் கட்டத்தை அடைந்தது. விளைவு ஆயுதம் ஏந்திப் போராடுவதன் மூலம் தமிழர்களின் நிம்மதியான வாழ்வை சிங்கள ஏகாதிபத்தியத்திடம் பெற முடியுமென தமிழ் மக்கள் நம்பினார்கள். இதனால் பல ஆயுதக்குழுக்கள் ஆயுதம் ஏந்திப் போராடினர். புலிகளின் ஏகப்பிரதிநிதித்து வமானது 1986ம் ஆண்டு புலிகள் தவிர்ந்த மற்ற ஆயதக்குழுக்கள் அனைத்ததையும் முற்று முழுதாக தடைசெய்து, கொலை செய்ததன் மூலம் ஆரம்பிக்கப்பட்டது. இன்றுவரை நடைபெறும் தமிழர்களின் அழிவை புலிகள் அன்றே தொடக்கிவிட்டனர். ஏககாலத்தில் தங்களுடன் சேர்ந்து போராடிய அனைத்து மிதவாத தலைவர்கள் உட்பட அனைவரும் புலிகளால் கொலை செய்யப்பட்டும், இவ்வளவு தூரம் இந்த மாற்று இயக்கங்கள் புலிகளுக்கு தோல்வியை ஏற்படுத்துவார்கள் என்று புலிகள் அப்போது அறியவில்லை. அந்த அளவுக்கு சகோரத இயக்க கொலை வெறி ஏறியிருந்தது.

இந்த நிலையில் சுயநிர்ணய உரிமை கேட்டுப்போராடிய தமிழ் மக்களுக்கு ஆசியாவின் வல்லரசான இந்தியா ஏற்கனவே பக்கத்து நாடான பாக்கிஸ்தான், பங்களாதேஸ், மாலைதீவு போன்ற நாடுகளின் பிரச்சினைகள் தீர செயற்பட்ட அதே பாணியில் செயற்பட்டது. இலங்கையில் இந்திய அரசின் நேரடித்தலையீட்டின் இந்தியத்தாய்க்கும் இலங்கை தகப்பனுக்கும் பிறந்த குழந்தையே வடக்கு கிழக்கு மாகாண அரசு. உண்மையில் இது தமிழீழம் அல்ல ஈழஅரசியலுக்கு கிடைத்த அங்கிகாரம் என்பது உண்மையே. புலிகளின் தவறான அல்லது தூர நோக்கற்ற அரசியலால் அதையும் இல்லாது ஒழித்துவிட்டனர்.

அன்று புலிகள் ஏற்றிருந்தால் அல்லது ஏற்றுசெயற்பட்ட ஈபிஆர்எல்எப் இயக்கத்தை விட்டிருந்தால் இன்றுவரை சுமார் இருபது வருடம் கழிந்தும் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அதிகாரமும் மாகாண அரசுக்கு தராவிட்டிருந்தால் இதையே காரணம் காட்டி சர்வதேச சமூகத்திடம் நீதிகேட்டு நாம் தனியாக பிரிந்து செல்லப் போகிறோம் என்ற ஈழ அங்கீகாரத்தை பெற்றிருக்க முடியும். அதையும் புலிகள் செய்வதற்கு, சுட்டுக்கொலை செய்ய தெரிந்த அளவுக்கு அரசியல் தெரியவில்லை.

1983 ஆண்டு பிறந்த இலங்கை தமிழ் பிள்ளைக்கு சுமார் இருபது வருடம் பிரபாகரன் காட்டியது யுத்தமும், மாவீரர் துயிலும் தமிழ் இளையவர்களின் கல்லறைகளும் மட்டுமே. புலிகளில் 30ஆயிரம் பேரும் மற்றக் குழுக்களில் 10 ஆயிரம் பேரும் அண்ணளவாக புலிகளால் பலிகளாக்கப்பட்டனர். கிழக்கில் மட்டும் 40 000 தமிழ் இனம் 20க்கும்30க்கும் இடைப்பட்ட வயது விதவைகளையும் வடக்கில் 35 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட விதவைகளையும் உருவாக்கியது. இதுவே புலிகளின் போராட்டத்திற்கு தமிழர்கள் பெற்ற தமிழீழமா?. புலி ஒரு கணம் சிந்தித்து அன்று அனைவரும் ஒன்றுபட்டு போராடியிருந்தால் ஏன் இந்த நிலை.

1989ம்ஆண்டு இந்தியப்படை கொஞ்சம் கொஞ்சமாக இலங்கையை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த நேரம் புலிகளுக்கும் இலங்கை ஜனாதிபதி பிரேமதாஸாவுக்கும் தேன் நிலவு ஆரம்பித்தது. அந்நேரத்திலும் புலிகள் மிகப்பெரியதொரு சகோதர இயக்கப் படுகொலையை செய்திருந்தார்கள். அப்போது புலிகள் துண்டுப்பிரசுரம் ஒன்றை அடித்து வெளியிட்டிருந்தார்கள். அதில் இருந்த வாசகம் ‘இந்திய இராணுவத்துடன் சேர்ந்து செயற்பட்ட அனைத்துமட்ட போராளிகளுக்கும் எமது தலைவர் பிரபாகரன் பொதுமன்னிப்பு தருகிறார். எம்மிடம் சரணடைந்தவர்களை பாதுகாப்பாக நாம் சுதந்திரமாக செல்ல அனுமதிப்போம்’ என்பதே.

இதை நம்பிய மாகாண அரசில் பங்கெடுத்த ஈபிஆரஎல்எப், ஈஎன்டிஎல்எப், ரெலோ இயக்க போராளிகள் இன்று இராணுவத்தின் வசம் உள்ள திருகோணமலை- சம்பூரை நோக்கி வந்து கையில் அகப்பட்டதை எடுத்துக்கொண்டு மூதூரை நோக்கி ஓடினார்கள். அப்படி ஓடிய முதலாவது குழுவினரை புலிகள் சுதந்திரமாக நடமாட அனுமதித்துவிட்டு அதிலும் ஒரு தந்திரம் கடைப்பிடித்தார்கள். இரண்டாம்முறை அதிகமான ஈபிஆர்எல்எப் போராளிகள் ஓடினார்கள். இப்படியாக அனைவரையும் ஒன்று சேர்த்த புலிகள் மூதூரில் உள்ள மறைச்சேனை சித்திவிநாயகர் ஆலய கோயில் முன்றலில் அனைத்து மதபெரியார்கள் முன்னிலையில் கூட்டம் போட்டு இவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கிவிட்டதாக கூறி கலைந்து செல்ல உத்தரவு இட்டனர். பின்னர் ஒரு கிழமைக்குப் பிறகு சிறிய ரக லான்மாஸ்டர் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றிக்கொண்டு எமது தலைவர் உங்களுடன் பேச விரும்புகிறார் வாருங்கள் என்று சொல்லி அழைத்துச்சென்று ஈச்சலம் பற்றைக்காடுகளில் சுமார் 1500 மேற்ப்பட்டோரை வரிசையில் நிற்க வைத்து கொலை செய்து விட்டார்கள்.

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் வைத்து மாகாண அரசக்கு சேர்க்கப்பட்ட CDF பிரஜைகள் தொண்டர் படையினரை இதே அளவு சுட்டுக்கொன்றது அனைவரும் அறிந்ததே. அதேபோன்று எனது குடும்பத்தில் மாத்திரம் புலிகளால் ஆறு பேரும் அரசபடைகளால் ஒருவரும் என ஏழுபேர் சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார்கள். சிலர் கடத்திக் கொல்லப்பட்டார்கள். சிலர் நேரடியாக வீடுகளில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அப்படி கொல்லப்பட்ட சிலருக்கு மட்டுமே அக்காலத்தில் மரண அத்தாட்சிப்பத்திரம் பெறக்கூடிய சூழல் இருந்தது. இது இதை உறுதிப்படுத்துவதற்காக இணைக்கப்படுகிறது.

1. முத்துக்குமார் கணேசகுமார். பெரியவெளி மூதூர் – மாமா
2. அல்பேட் ரொன்சன். பொடிமாத்தளை பத்தமுடிச்சேனை மூதூர் – மாமா
3. ஆதிருகட்டிராஜா. மணற்சேனை -மல்லிகைத்தீவு மூதூர் -மாமா
4. நாகலிங்கம் சந்திரன். மணற்சேனை மல்லிகைத்தீவு- மூதூர் – தம்பி
5. விக்டர் சொய்சா முரளீதரன். பெரியவெளி- மூதூர் – மச்சான்
6. முத்துலிங்கம் தங்கவேல். பெரியவெளி மூதூர் -மாமா
7. ஆதிருகட்டி அமரசேன. பெரிய வெளி மூதூர்- (இராணுவம் சுட்டது) – மாமா

இப்படி என் குடும்பத்தினர்போல் பல தமிழ் குடும்பங்கள் அனைத்துப் பகுதிகளாலும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இலங்கை அரசால் கொல்லப்பட்ட தமிழர்களை விட புலிகளால் கொல்லப்பட்ட தமிழர்களே அதிகம் என்பது உண்மையே. இன்று தமிழர்களுக்கு தேவை குறைந்த பட்சம் நிம்மதியாக வாழக்கூடிய ஒரு சமாதானத்தீர்வு. அதைத்தான் இன்று சாதாரணமான தமிழ் மக்கள் கையேந்துகிறார்கள். இலங்கை அரசிடம் பேரம்பேசும் அரசியல் சமநிலையை தமிழ் அரசியல் மிகவும் பலவீனமான நிலையில்கேட்க முடியாத தயக்கமான நிலைதான் காணப்படுகிறது. இவை அனைத்தும் புலிகளின் தூரநோக்கற்ற அரசியல், தமிழ் மக்களுக்கு அநீதிகள் என்றால் அது மிகையாகாது.

யானை தன் கையினால் தனக்கு மண்அள்ளிப் போட்டதுபோல் புலிகள் தங்களுக்கு தாங்களே மண் அள்ளி தங்களின் அழிவைத் தேடிக் கொண்டார்கள். மகிந்தாவை ஜனாதிபதி ஆக்கினால் அவர் கடும்போக்காளர் சண்டைக்கு வருவார். நாம் தமிழீழத்தை வென்று விடலாம். ரனில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்தால் முழுப்புலிகளையும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடுவார் என்று புலிகள் தங்களது பலத்தை மிதமிஞ்சி பீற்றிக் கொண்டது மட்டுமன்றி வடபகுதி தமிழர்களை வாக்களிக்காது தடுத்து பெரிய ஜனநாயக விரோதப் போக்கையும் செய்து, மகிந்தவை ஜனாதிபதியாக்கி இன்று இந்த கடும்தோல்வியைப் பெற்றிருக்கிறார்கள்.

இத்தனை தோல்விகளுக்கும் அடிப்படைக் காரணம் – புலிகளால் உயிர்பறிக்கப்பட்ட சிறந்த ஜனநாயகத் தலைவர்கள் அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம் சரோஜினி, சிவபாலன் போன்ற பல மிதவாத தலைவர்கள் உட்பட ஈபிஆர்எல்எப் பத்மநாபா, ரெலோ சிறீசபாரத்தினம் போன்ற ஆயுதக்குழுக்களின் தலைவர்களையும் தங்களது தலைமை வெறிக்கு இரையாக்கினார்கள்.

இணைக்கப்பட்ட வட கிழக்கு மாகாண அரசுக்கு ஈபிஆர்எல்எப் பலாத்காரமாக மாகாண அரசை பாதுகாப்பதற்கு உருவாக்கப்பட்டது தமிழ் தேசிய இராணுவம். இதுவும் ரிஎன்ஏ 1990 பிரேமதாஸா அரசு பேச்சுவார்த்தைக்கு வந்த புலிகள் இலங்கை இராணுவத்துடன் இணைந்து கிழக்கில் பெரும் இராணுவ தாக்குதலை நடாத்தினார்கள். இதனால் அச்சமடைந்த பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களை புலிகள் பகிரங்கமாக மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் வைத்துச் சுட்டுக்கொலை செய்தார்கள்.

உண்மையில் புலிகள் இவர்களை மன்னித்து இருக்க வேண்டும் ஏனெனில் இவர்கள் விரும்பிச் சேரவில்லை. ஈபிஆர்எல்எப் இனால் பிடிக்கப்பட்டவர்கள் என்பதால் அதனை பல தடவை பேட்டிகளின் போது கருணா அம்மான் – இன்றைய தேசிய நல்லிணக்க அமைச்சர் சுட்டிக்காட்டியதும் நினைவுக்கு எடுக்கலாம்.

உண்மையில் புலிகள் மற்ற ஏககால ஆயுதப்போராட்ட இயக்கங்களை தடைசெய்து தாக்குதல் நடாத்தியவேளை கிழக்கில் கட்டுக்கடங்காது தமிழ் இளைஞர்கள் புலிகளால் வேட்டையாடப்பட்டார்கள். ஆனால் அந்த அளவுக்கு பெருந்தொகையான தோழர்கள் யாழ்ப்பாணத்தில் கொல்லப்படவில்லை. அங்கும் நடந்தது தான், ஆனால் ஒப்பீட்டளவில் கிழக்கில் தான் அதிகம். அதற்குக் காரணம் புலிகளின் தலைமை யாழில் இருந்தது. கிழக்கில் அப்படி அல்ல, எல்லாம் முடித்துவிட்டு தொலை தூரக்கருவி மூலம் அறிவிப்பது மட்டும் வழக்கம். அதனால்த்தான் விரும்பியபடி பலரை கொலை செய்தார்கள்.

அநுராதபுர தாக்குதலில் கொல்லப்பட்ட புலிகளின் ஆடையின்றிய உடலை மனிதாபிமானம் கொண்ட எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நானும் அதை சரி என்று சொல்லவில்லை. ஆனால் தங்களிடம் சரணடைந்தவர்களை மன்னிப்பு என்று சொல்லி அழைத்துவிட்டு அனைவரையும் ஒன்று சேர்த்து ஊர்வலமாக அழைத்துச் சென்று ஒவ்வொரு சந்திக்குச் சந்தி பொதுமக்கள் முன்னிலையில் நிறுத்தப்பட்டு சிலர் துப்பியும், சிலர் தும்புத்தடிகளால் தாக்கியும் தங்கள் வஞ்சகத்தைத் தீர்த்துக்கொண்ட பின்பு கொலை செய்ப்பட்டார்கள்.

இந்திய இராணுவத்திற்கு தமிழ் ஆங்கில மொழி பெயர்ப்பாளராக என்னுடன் செயற்பட்ட மூதூரைச் சேர்ந்த கணித ஆசிரியர் ஜெகதீசன் குரூஸ். இப்போது அவர் ஒரு கல்விப்பணிப்பாளர் என நினைக்கிறேன். அவரை முட்டுக்காலில் புலிகள் தவழ விட்டு தண்டனை வழங்கினார்கள். இது எந்த நாகரீகம். இதேபோல் மூதூர் மணற்சேனையை சேர்ந்த ஜீவரட்ணம் தங்கரத்தினம் குடும்பத்தில் புலிகள் அவரது 8 குழந்தைகளின் தந்தையான அண்ணண் முத்துக்குமார் அவரது தம்பி அருள் அவரது ஒரே ஒரு மகன் சசிகுமார் 2008ல் புலிகள் கொலை செய்து விட்டு, அவரை அவருடைய ஊருக்கே வரக்கூடாது என்று உத்தரவிட்டு அவர் இப்போது திருகோணமலையிலேயே தஞ்சமடைந்து இருக்கிறார்கள். புலிகளின் நீதித்துறை இதுதானா? இந்த தங்கரத்தினம் உள்ளுராட்சி மன்ற செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று உலகம் முழுவதும் புரட்சிகள் ஜனநாயக வழிக்கு வந்து கொண்டிருக்கையில் தமிழர்கள் மட்டும் கொல்ப்பட்டு வருவது மிகவும் வேதனை அழிக்கிறது.

1983 பிறந்த ஒரு குழந்தை இன்று 26 வயது பெரிய பிள்ளை. அதற்கு கொழும்பு தெரியாது. ரெயின் தெரியாத குழந்தைகளும் இருக்கிறார்கள். தமிழீழத்தின் பெயரால் இவர்களுக்குத் தெரிந்தது சண்டையும் உயிர்க்கொலைகளும் செல்தாக்குதல்களும் தான். குறைந்தபட்சம் அவர்களுக்கு ரெயின் பஸ் மட்டுமன்றி கொழும்பு போன்ற இடங்களையாவது பார்ப்பதற்கு குறைந்தபட்ச தீர்வுக்கு தமிழ் தலைமைகள் முன்வருவது காலத்தின் தேவை.

கல்வி கலாச்சாரம் பொருளாதாரம் இனவிருத்தி போன்றவற்றிலும் நிலம் போன்ற அனைத்திலுமே கிட்டத்தட்ட 30 வருடம் நமது சமூகம் மூன்றாம் தரப்பு நிலைக்கு பின்நோக்கி தள்ளிவிடப்பட்டிருக்கிறது. இப்போதாவது தீர்வு ஒன்றை பெறாவிட்டால் நமது சமூகம் – இன்னும் வரலாற்றில் தமிழினம் நம்மை மன்னிக்காது கல்லறைகளை உடைத்தெறிவார்கள், விரைந்து செயற்படுங்கள். எனவே அனைத்து தரப்பும் நியாயமான தீர்வினைப்பெற்று தமிர்கள் நிம்மதியாக வாழ இந்த தருணத்தில் முன்வர வேண்டும்.

குறுகியகால சந்தர்ப்பவாதக் கூட்டுக்களைவிட்டு, பழிவாங்கும் அரசியலைவிட்டு தமிழ் முஸ்லீம் சிங்கள மக்கள் அனைவருமே இலங்கையர் என்ற எண்ணத்தக்க ஆட்சியை வழங்கக் கூடியஒரு அரசியல் தலைவருக்கு இலங்கை மக்கள் தங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்.

கிங்ஸ் லெவன் அணியின் தலைவராக சங்கக்கார

kumar.jpgஐ.பி.எல்., அணிகளுள் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமைப் பொறுப்பிலிருந்து இந்தி யாவின் யுவராஜ் சிங் நீக்கப்பட்டார்.

புதிய தலைவராக இலங்கையின் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தியன் பிரிமியர் லீக் சார்பில் (ஐ.பி.எல்.) 3 வது “டுவென்டி-20” கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 12 முதல் ஏப். 25 ஆம் திகதி வரை இந்தியாவில் நடக்க உள்ளது.  இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகளுள் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ஒன்று. கடந்த 2 தொடர்களில் இந்த அணியின் தலைவராக யுவராஜ் சிங் செயல்பட்டார்.

ஆனால் இந்த முறை தலைமைப் பொறுப்பிலிருந்து யுவராஜ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அணியின் புதிய தலைவராக இலங்கை அணி வீரர் சங்கக்கார தெரிவு செய்யப் பட்டுள்ளார். இது குறித்து அணியின் தலைமை நிர்வாக அதிகாரி அனில் ஸ்ரீவத்சவா கூறுகையில்,

“யுவராஜ் சிங்கிற்கு பதில் 3 வது ஐ.பி.எல். தொடரில் சங்கக்கார அணியை வழிநடத்துவார். இதன் மூலம் அணியின் பலம் அதிகரிக்கும் என நம்புகிறோம். கடந்த இரண்டு தொடர்களில் அணியின் தலைவராக யுவராஜ் சிங் சிறப்பாக செயல்பட்டார். அவரது தலைமையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலாவது முறை அரையிறுதி வரை முன்னேறி அசத்தியது.

அணியின் தலைமைப் பதவியிலிருந்து அவரை நீக்குவதால், அவர் மீது நம்பிக்கை இல்லை என்று அர்த்தம் இல்லை. அணியில் அவருக்கு என தனி இடம் உண்டு” என்றார். இது குறித்து சங்கக்கார கூறியதாவது, கடந்த இரண்டு தொடர்களில் யுவராஜ் சிங்கின் தலைமையில் விளையாடியது மகிழ்ச்சி அளித்தது.

அவர் மிகச் சிறந்த தலைவர் தவிர எனது நல்ல நண்பர். அணி நிர்வாகத்தின் புதிய முடிவு குறித்து அவரிடம் பேசினேன். அதற்குப் பின் தான் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக முடிவு செய்தேன்.

இதனால் எந்தப் பிரச்சினையும் ஏற்பட வாய்ப்பில்லை. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் முக்கிய வீரர் யுவராஜ். ஆட்டத்தின் போக்கை அவரால் எந்த சமயத் திலும் மாற்ற முடியும் இவ்வாறு சங்கக்கார கூறினார்.

தலைமைப் பொறுப்பிலிருந்து யுவராஜ் நீக்கப்பட்டது குறித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி கூறுகையில்,

“யுவராஜ் துடுப்பாட்டத்தில் முழுக் கவனம் செலுத்த வேண்டும் என அணி நிர்வாகம் விரும்புகிறது. தலைமைப் பொறுப்பு அவரது செயல்பாடுகளுக்குப் பாதிப்பாக அமைந்துவிடக் கூடாது.

வீரர்களுக்கும் அணி நிர்வாகத்துக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அனைவரும் இணைந்து சிறப்பாக தயாராகி வருகிறோம். அணி நிர்வாகத்தின் முடிவை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளார் யுவராஜ்” என்றார்.

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் இன்று

sania-mirza.jpgஅவுஸ் திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் முதல் சுற்று இந்தியாவின் சானியா மிர்சாவுக்கு சவாலானதாக அமைந்துள்ளது. ஆண்டின் முதல் கிராண்ஸ்லாம் தொடரான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் இன்று மெல்போர்னில் நடக்கிறது. இதில் உலகின் முன்னணி வீரர்கள் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் ராபெல் நடால் மற்றும் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், டினரா சபினா (ரஷ்யா), இவானோவிச் (செர்பியா) போன்ற வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, கடந்த ஆண்டு இரண்டாம் சுற்று வரை முன்னேறினார்.

இம்முறை இவருக்கு முதல் சுற்று போட்டி, கடினமானதாக இருக்கும் என தெரிகிறது. தர வரிசையில் 56வது இடத்தில் இருக்கும் இவர், 26வது இடத்தில் உள்ள பிரான்சின் அரவானே ரேசாயை சந்திக்கிறார். இதற்கு முன் இருவரும் மூன்று முறை மோதியுள்ளனர். இதில் இருவரும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளனர்.