கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

திருகோணமலை மாவட்டமும் வட கிழக்கு மாகாண அரசும் – பே பரமானந்தம்

30 வருடம் சிங்கள தமிழ் இன யுத்தத்தில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் திருகோணமலை மாவட்டம் முதன்மையான இன அழிவை எதிர்நோக்கிய ஒரு மாவட்டமாகும். இலங்கை சுதந்திரமடைந்து 63 வருடங்கள் ஆகியும் இம்மாவட்டத்திற்கென ஒரு அரசாங்க அதிபராக தமிழர் ஒருவரை நியமிக்க முடியாத அரசியற் கட்சிகள் அல்லது தமிழ்த் தலைமைகள். பேரினவாதம் திட்டமிட்டபடி தனது பெரும்பான்மை சிங்களக் குடியேற்றத்தை ஆதரித்து தமிழரின் விகிதாசாரத்தை குறைத்து காட்டவே தமிழர் ஒருவரை அரசாங்க அதிபராக நியமிக்கவில்லை. உதாரணமாக தமிழில் கண்தளை- கிராமம் பின்னாளில் கந்தளே, மணலாறு- வெலிஓயா, குமரேசன்கடை- கோமரன்கடவெல. இப்படி மாற்றுவதற்கு சிங்கள அரசாங்க அதிபர் தேவைப்படுவதால்தான் இந்த ஏற்பாடு.

1987ம் ஆண்டு நடைமுறைக்குவந்த மாகாண அரசின் முதல் முதல்வராக தமிழர் ஒருவரை அரசாங்க அதிபராக நியமிக்க முடிந்தது. அதையும் அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியும் புலிகளும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நிராகரித்து மாகாண அரசைக் கலைக்கும்வரை துணை போனார்கள். அதனால் அந்தச் சந்தர்ப்பமும் இல்லாது போனதுடன் தமிழர் ஒருவரை திருமலை அரசாங்க அதிபராக்க கிடைத்த சந்தர்ப்பமும் இல்லாமற் போனது.

அப்போது வடக்கு கிழக்கு 7 மாவட்டங்களும் இணைத்ததே மாவட்ட அரசு. இப்போது கிழக்கு மாகாணசபை அம்பாறை- மட்டக்களப்பு- திருகோணமலை மூன்றும் சேர்ந்து கிழக்கு மாகாணம். மற்றைய நான்கும் சேர்ந்து வடமாகாணம். இது சட்டத்தால் மட்டுமே பிரிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் தமிழ் மக்களின் இதயங்களில் இணைக்கப்பட்டும் பூஜிக்கப்பட்டும் உயிர் வாழ்ந்து வருகிறது.

மாவட்ட சபையைக்கூட தர மறுக்கும் பெரும்பான்மை ஆட்சியாளர்கள் மத்தியில் இலங்கை இந்திய உடன்படிக்கையே தமிழ்மக்களின் இனப் பிரச்சனைக்கு ஒரு சிறந்த தீர்வாக அமைந்தது. வடகிழக்கு எல்லைகளைப் பாதுகாக்க (ரிஎன்ஏ) தமிழ் தேசிய இராணுவம் சிவிஎவ் பிரஜைகள் பாதுகாப்புப் படை பொலிஸ். இவர்களுக்குச் சம்பளமாக மாதாந்த 4500 ரூபா. நான்கு வருடங்களின் பின் நிரந்தர நியமனம். 20000 பேர்கொண்ட தமிழ் முஸ்லிம் இளைஞர்களை உள்வாங்கிய சட்டரீதியில் சிறுபான்மை சமூகங்களைக் கொண்ட இராணுவ அமைப்பு. அதுமட்டுமல்ல அரச பதவிகளில் விகிதாசாரம் பேணப்படல் வேண்டும்.

ஓருபுறம் சிங்கள கடும் போக்காளர்கள் இந்தியஅரசு தமிழர்களுக்கு தனிநாடு ஒன்றை பெற்றுக் கொடுத்து விட்டது போன்ற எண்ணத்தை சிங்கள மக்கள் மத்தியில் பரப்பி இந்தியாவுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடித்தது. மறுபுறம் புலிகளும் அப்போதைய தமிழ் தலைமைகளும் வெறும் பொம்மை அரசு என்று கூறி நிராகரித்தது. அப்படியிருந்தும் இந்தியா தனது உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தவே இலங்கையை நிர்ப்பந்தித்தது.

இதை சாதகமாக புலிகளும் பாவித்து இந்திய தாக்குதலிலிருந்து தங்களைப் பாதுகாக்க பிரேமதாசாவுடன் கூட்டுச் சேர்ந்து இந்தியப்படைகளை இலங்கையைவிட்டு வெளியேற்றியது. பிரேமதாசாவும், ‘நானும் புலிகளும் அண்ணன் தம்பிகள் எங்களின் பிரச்சனைகளை நாங்கள் பேசித் தீர்ப்போம், முதலில் நீங்கள் வெளியேறுங்கள்’ என்று மாகாணஅரசைக் கலைத்து சகவாசம் செய்து தமிழ்தேசிய இராணுவத்திற்கு எதிராக சிறீலங்கா ஆமியுடன் இணைந்த புலிகள் ரிஎன்ஏ முற்றாக தாக்கியழித்தனர்.

எழுபத்திரண்டு மாகாணஅரச உறுப்பினர்கள் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட சபையில் தன்னாதிக்கமும் இறைமையும் உள்ள ஈழ ஜனநாயக சோசலிசக் குடியரசு ஆக முதலமைச்சரால் பிரகடனப்படுத்தப்பட்டு இன்றுவரை ஒரு தனிநாடாகவே இருந்து வருகிறது. இதையும் இந்தியாவே முன்னின்று செய்தது. அந்த அளவுக்கு இந்தியா நட்புடன் இருந்த நேரம். காஸ்மீர் ஆந்திரா போன்ற பல உள்நாட்டுப் பிரச்சனைகள் இருந்தும் இந்தியா பகிரங்கமாக இதை அங்கீகரித்தது. இதன்முலம் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுப்பதையே இந்தியா விரும்பியதை உணரலாம். 13வது திருத்தச் சட்டத்தினை ஏற்று முதலமைச்சராகச் சத்தியப்பிரமாணம் செய்யும் ஒரு முதலமைச்சர் அரசபணியின் நிமித்தம் வெளிநாடு ஒன்றிற்குச் செல்ல வேண்டுமாயின் ஆளுனரின் அனுமதியைப்பெற்று செல்ல வேண்டும். ஆனால் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் அடிக்கடி அரச பயணமாக இந்திய இராணுவ விமானம் மூலம் ஆளுனரின் எதுவிதமான அனுமதியும் இன்றி இந்தியா சென்று வந்தார். அந்தளவுக்கு இந்தியா வடகிழக்கை தனது மானிலங்களில் ஒன்றாகவே கையாண்டு வந்தது. ஆனால் அப்போது சிங்களப் பத்திரிகைகள் இதுபற்றி கண்டனத்தையும் செய்திருந்தது.

தந்தை எஸ்ஜேவி செல்வநாயகம் சொன்னது போல் தமிழர்களுக்கு ஒரு தீர்வு வந்தால் வடகிழக்குத் தலைநகரம் திருகோணமலை என்ற அவரது கனவை நனவாக்க உழைத்து அதை திருமலையில் நிறுவிய தவராஜா தம்பிராஜா அவரையும் புலிகள் நிலாவெளியில் வைத்து சுட்டுக் கொன்றுவிட்டனர்.

சந்திரிகா அம்மையாரின் காலத்தில் ஒருதீர்வுத் திட்டம் நீலன் திருச்செல்வம் தலைமையில் தயாரிக்கப்பட்டது. அதையும் எதிர்த்த புலிகள் அவரையும் கொலைசெய்தனர் அதை உடந்தையாய் இருந்து தயாரித்த தோழர் கேதீஸ்- லோகநாதனை கொழும்பில் வைத்துக் கொலை செய்தனர். இப்படித் தமிழ் மக்களின் தீர்வுகள் எல்லாவற்றிலேயும் இவர்கள் தங்கள் கெடுபிடியைக் காட்டி இல்லாதொழித்து விட்டனர்

இலங்கை இந்திய ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தநேரம் பெரும்பாலான சிங்களக் குடியேற்றவாசிகள் திருகோணமலைக் கோட்டை முகாமுக்குள் தஞ்சம் புகுந்து அகதியாக இருந்தனர். அவ்வளவுக்கு பெரும்பான்மையினர் அஞ்சியிருந்தனர். குடியேற்றமும் குறைந்து காணப்பட்டது.

1989ம் ஆண்டு புலிகள் 4ம் கட்டை சிங்களவர்கள் செறிந்து வாழும் பகுதியில் ஒரு கண்ணிவெடியை வைத்து விட்டனர். இச்சம்பவத்தில் மொழிபெயர்ப்பாளராக சென்றபோது இந்திய இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன். political officer welcome என என்னை வரவேற்ற அவர் சொன்னார், 35 லட்சம் தமிழர்களின் அமைதிக்காக 100 கோடி இந்திய குடிமக்களின் அமைதியைக் கெடுக்க இந்தியா விரும்பாது. அது தமிழ்நாட்டை மையமாக வைத்தே அவர் அதைச் சொன்னதாக நான் இப்போது உணர்ந்தேன். தமிழர்களுக்கு சகல அந்தஸ்தும் கிடைக்க இந்தியா பாடுபடும். மூக்கு இருக்கும் வரைக்கும் சளி இருக்கும் என்பதுபோல் இந்தியா இருக்கும்வரை புலிகள் நினைப்பதுபோல் இந்தியாவைப் புறம்தள்ளி ஒரு தீர்வை அடைய முடியாது. இன்றைய புலிகளின் தோல்வியில் இருந்து அதை இன்றும் நினைவுபடுத்திப் பார்க்கின்றேன். எவ்வளவு உண்மையென்று எண்ணிப் பாருங்கள்.

வடகிழக்கில் 72 மாகாணசபை உறுப்பினர்களைக் கொண்ட மக்களால் தெரிவுசெய்யப்பட்ட சபையில் தன்னாதிக்கமும் இறைமையும் உள்ள ஈழ ஜனநாயக சோசலிஷக் குடியரசு ஆக வடகிழக்கின் முதல் முதல்வர் அண்ணாமலை வரதராஜப் பெருமாள் தலைமையில் பிரகடனப்படுத்தப்பட்டு இன்றுவரை ஜனநாயக மரபுகளுக்கு அமைவாக அது பிரிக்க முடியாததொரு தனிநாடாகவே இருந்து வருகிறது. இதையும் உலகின் மிகப்பெரிய வல்லின ஜனநாயக இந்தியப் பேரரசே முன்னின்று அங்கீகரித்தது. அது ஒரு பெரிய அரசியல் ஸ்ரண்ட் அந்த அளவுக்கு இந்தியா நம்முடன் இருந்தநேரம் காஸ்மீர்- ஆந்திரம் மேற்குலகம் தமிழ்நாடு போன்ற இந்தியாவிலேயே தனிநாட்டுக் கோஷம் உள்நாட்டிலும் நெருக்கடி இருந்தும் பொருட்படுத்தாது செய்தது. இதன்மூலம் சிறுபான்மையினருக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்க இந்தியா செயற்பட்டதை உணரலாம்.

மதத்தால் பாக்கிஸ்தான் பிரிந்ததைப்போல் மொழியால் பங்களாதேஸ் பிரிந்ததுபோல் யேசுநாதரின் ஒரே மதத்தின் (கிறிஸ்தவ) இருவேறு (புரட்டஸ்தான்- கத்தோலிக்கம்) தத்துவப் படிப்பாளர்களால் ஐசடயனெ- ழேசவா ஐசயடயனெஇளுழரவா பிரிந்ததுபோல் இனத்தால்- திராவிடன், மொழியால்- தமிழன் கொடுத்த தாயகப்பிரதேசம் கலை கலாச்சாரம் பூர்வீகம் இவற்றை எல்லாம் கருத்தில் எடுத்தே இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் ஈழப் பிரகடனத்தை ஆமோதித்ததை உணரலாம். உதாரணமாக 1983ம் ஆண்டு தரைவழிப் பாதையூடாக இந்தியா உணவு அனுப்ப விழைந்தபோது ஜேஆர் அரசு தடுத்து நிறுத்தியது. பின்னர் விமானமூலம் இந்தியா உணவு போட்டது. இலங்கை இறையான்மை எங்கே போனது. இதிலிருந்து இந்தியாவே ஆசியாவின் பேரரசு என்பதை உணரலாம். தமிழர்களின் அன்றைய வெற்றிக்கும் இந்தியாதான் காரணம் இன்றைய தோல்விக்கும் இந்தியாதான் காரணம்.

புலிகளின் தவறான மூட அரசியலால் உலகின் 4வது வல்லரசைத் தாக்கி வெற்றி கொண்டதாகப் பெருமைப்படும் அளவுக்கு ஒரு அறிலீலிகளான ஒரு சமூகத்தை உருவாக்கியிருக்கிறது. அவர்கள் எவ்வளவு அனுபவம் பெற்றவர்கள் எத்தனை யுத்தத்தில் பங்கெடுத்தார்கள் என்பதை எண்ண மறந்துவிட்டோம். இன்று முழுத் தமிழ்ச் சமுதாயமும் பாதிக்கப் பட்டுள்ளோம். இலங்கையில் தனக்கு ஏற்பட்ட தோல்வியில், புலிகளின் பங்களிப்பை எண்ணிய இந்தியா அன்று தொடக்கம் புலிகளுக்கு எதிரான விக்கெட்டுக்களை அடிக்கத் தொடங்கியது. இன்று முழுப் புலிகளையும் அழித்து ஆசியாவில் தன்னை எதிர்க்கும் சக்திகளுக்கு தானே ஆசியப் பேரரசு என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

மாவட்ட சபையைக்கூட தரமறுக்கும் பேரினவாத அரசியலாளர்கள் மத்தியில் இலங்கை இந்திய உடன்படிக்கையே தமிழ்மக்களின் உரிமைப் போருக்கான சிறந்த தீர்வாக அமைந்தது. அதுமட்டுமல்ல அந்த ஒப்பந்தத்தை மட்டும்தான் இலங்கை வரலாற்றில் பெரும்பாலான கட்சிகள் அடங்கலாக அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன் சரத்துக்கள் பற்றி கொஞ்சம் பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும். வடகிழக்கு இணைந்த மாகாண அரசு அந்த அரசின் எல்லைகனளை அந்த அரசின் இராணுவ பணிகளை கையாள ஒரு இராணுவக் கட்டமைப்பு ரிஎன்ஏ தமிழ் தேசிய இராணுவம் இவர்களுக்கு சம்பளமாக மாதம் 4500 ரூபாய் நான்கு வருடத்தின் பின பணி நிரந்தரம். 20 000 பேரைக் கொண்ட சிறுபான்மைத் தமிழ் முஸ்லிம் சழூகங்களைக் கொண்ட சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசின் இராணுவம்.

அரச பதவிகளில் சிறுபான்மைச் சமூகங்களின் விகிதாசார அடிப்படையில் அனைத்துப் பதவிகளும் கடைப்பிடிக்க வேண்டும். நான்கு வருடங்களின் பின் வடகிழக்கில் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்தி வடகிழக்கு இணைந்து இருப்பதா இல்லையா என்று மக்கள் கருத்துக்கு விடப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படு;ம்

ஒருபுறம் சிங்களவர்களும் சிங்கள கட்சிகளும், ஜேவிபி தமிழர்களுக்கு போதிய அதிகாரம் கொண்ட தனிநாடு ஒன்றை இந்திய அரசு பெற்றுக் கொடுத்து விட்டதாக சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து இந்திய எதிர்ப்பு அலையை உருவாக்கியது. மறுபுறம் புலிகளும் அப்போதைய தமிழ்த் தலைமைகளும் ஒன்றும் இல்லாத ஒரு பொம்மை அரசை தமிழ்மக்கள் மத்தியில் இந்திய அரசு திணித்து விட்டதாக தமிழர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து அதையும் முற்றாக நிராகரித்து விட்டனர். அப்படியிருந்தும் இந்தியப் பேரரசு தனது உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தவே இலங்கையை நிர்ப்பந்தித்தது.

எப்படியும் மாகாண அரசைக் கலைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருந்த ரணசிங்க பிரேமதாசா சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி புலிகளை பேச்சு வார்த்தைக்கு அழைத்து புலிகளும் இலங்கை இராணுவத்துடன் இணைந்து ரிஎன் ஏ இராணுவத்துக்கு எதிராக கடும் தாக்குதல்கள் தொடுத்து அதை முற்றாக அழித்தனர். மற்றைய இயக்கங்கள் இராணுவத்துடன் பேசினால் காட்டிக் கொடுப்போர், ஒட்டுப்படை, தேசத்துரோகிகள்: புலிகள் இணைந்தால் இராஜதந்திரம். அன்று புலிகள் அழித்த, தமிழ் இராணுவம் இருந்திருந்தால் 20000 தமிழ் பேசும் படையணி.

நிராயுதபாணிகளாக நிற்கும் ஒருவரை ஆயுதங்களால் தாக்குவது தர்மத்துக்கு முரணானது1990 ஆண்டு 19.06.90- யூன் மாதம் தமிழ்நாட்டில் இந்தியாவில் கோடம்பாக்கம் ….காலனியில் உள்ள ராணி அப்பாட்மென்ட்டில் வைத்து புலிகளால் சுட்டுக் கொலட்லப்பட்ட ஈபிஆர்எல்எவ் தலைவர் பத்மநாபாவும் 13 முன்னணித் தோழர்களும் கொல்லப்பட்ட சமயம் 19.06.91 திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டில் ஒருவருட அஞசலிக் கூட்டத்தில் நான் ஆற்றிய உரையின் ஒருபகுதியை இவர்களின் இன்றைய நிலையில் மீட்பது பொருந்தும் என நினைக்கின்றேன். இவர்களால் தாக்கியழிக்கப்பட்ட இயக்கங்கள் தலைமை கொடுத்துக் கொண்டிருக்க இவர்கள் மட்டும் அழிந்து போயினர்: பாருங்கள் இவர்களின் இன்றைய அழிவை அன்றே கட்டியம் சொன்னதுபோல் உணர்கின்றேன்.

நண்பா புலியே மானிட உயிரின் மாண்பினை மதி

இன்றேல் அழிவே உனது கதி.

ஓடமும் ஒருநாள் வண்டிலேறும் வண்எயும் ஒருநாள் ஓடடத்தில் ஏறும் இதை நீ மறந்து விடாதே.

காலமும் நாமும் இதற்குப் பதிலளிப்போம். விரிந்து பரந்த உலகில் நாம் வீழ்ந்து விட்டோம், ஆசைகளால் பிரிக்கப் பட்டோம், பாசத்தால் இறுக்கப்பட்டோம், பண்பை மறந்து விட்டோம். ஆனால் மறந்தவை மறந்தவை அல்ல. உன் இழி குணங்களால் நீயே அழிக்கப்படுவாய,; இழிகுணம் உள்ள சமூகம் அழிந்ததாக எமது வரலாறே இயம்புகிறது.

எமது இதிகாச புராணங்கள் வேத நூல்கள் மறை ஆகம சிவாகமங்கள் அனைத்தும் ஜனநாயக கருத்துச்சுதந்திர மரபுகளை அடியொற்றி, அது மறுக்கப்பட்ட போது போர்வெடித்த வரலாற்றை, படித்தும் அறிந்தும் இவ்வாறு செயல்பட்டதானது எமது இனத்துக்கு ஏற்பட்ட இழுக்கு என்பது மட்டும் எனது கணிப்பீடு.

திருகோணமலைத் தேர்தல் சூடுபிடித்துள்ள இன்றைய தினத்தில் களத்தில் சம்பந்தர் நின்று தமிழர்களுக்கு இதுவரை எதுவித பெயர் சொல்லிக் கதைக்கும் அளவுக்கு எதையும் செய்யவில்லை. யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலையில் திருமண உறவில் குடியேறிய பெரியபொடி சூரியமூர்த்தி தமிழர்களின் சிங்கள மயமாக்கலை மெல்ல முடியாத நிலையில் தமிழருக்கென ஒரு தமிழ் மார்க்கெட்டைக் கட்டினார். இன்றும் மக்கள் சொல்லிக் கதைக்கிறார்கள். 2002ம் ஆண்டு அந்த மார்க்கெட்டைத் திறக்க பெரும்பான்மை விடவில்லை ஆனால் அவன் கட்டினான் என்று தமிழர்கள் இன்னமும் வியப்புடன் பேசுகிறார்கள். ஏனெனில் ஒரு துணிவு மிக்க மகனாக இருந்து செய்தார்;. ஆனால் எம்பி சம்பந்தருக்குப் போட்ட வாக்குகளை அவருக்குப் போட்டடிருந்தால் கொஞ்சமேனும் முன்னேற்றம் கண்டிருக்கலாம். கடற்படைத் தளத்திற்குச் செல்லும் வழியில் இருந்த காணிகளில் தமிழர்கள் குடியேறச் செய்தார். எம்பியால் ஏன் முடியவில்லை?

புலிகளின் தற்கொலைக் குண்டுகள் வெடித்துக் கொல்லப்படும் உயிர்களின் எண்ணிக்கையிலேயே பாராளுமன்றம் செல்ல முடியும் என்ற உத்தி அல்லது திட்டம் தீட்டி அரசியல் பின்பலமோ அல்லது ஆராமையோ எதுவுமே இல்லாது எம்பி துரைரட்ணசிங்கம் புலிகள் சம்பந்தருக்கும் தனக்கும்தான் போடச் சொன்னார்கள் என்ற மாயையை சொல்லியே கடந்தமுறை எம்பி ஆனார். புலிகளின் அடுத்த வன்னி என வர்ணிக்கப்பட்ட கட்டைப்பறிச்சான் என்பது மட்டுமே இவரது அரசியல் விளம்பரம். மிகவும் அமைதியானார் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர்.

இம்முறையும் பல மோசடிப் பேர்வழிகளையும் தமிழ்மக்களைப் பிரதிநிதித்துவப்;படுத்த சில பண முதலைகளையும் சம்பந்தர் தமிழர்களின் மீட்பர்களாக சித்தரிக்க முற்படுகின்றார்.

திருகோணமலையில் பெரும்பாலான தமிழ்ப் பகுதிகள் மட்டும் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதி. நகரங்களை அண்டிய பகுதி அரச கட்டுப்பாட்டுப் பகுதி. இப்படிப் பிரிக்கப்பட்டு தமிழ்ப் பகுதிகள் அனைத்தும் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதி எனக் காரணம் காட்டி எதுவிதமான அரசபணிகளும் நடைபெறவில்லை. மற்றைய சமூகங்கள் வாழும் பகுதிகள் பெரும்பாலும் அபிவிருத்தி செய்யப்பட்டே வந்தது. ஆனால் தமிழ்ப் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டே வருகிறது.

யாழ்ப்பாணம் தோழர் டக்ளஸ் தேவானந்தா மட்டக்களப்பு முரளீதரன் சிவனேசதுரை சந்திரகாந்தன் முன்னின்று அபிவிருத்தி செய்வதைப்போல திருகோணமலைக்கு யார்? புணரமைப்புக்குப் பதிலாக சம்பந்தர் தலைமை திருகோணமலை தமிழர்களை புதைத்து வருகிறார்கள். இந்த தேர்தலில் இவர்களுக்கு ஒரு நல்ல பாடம் புகட்ட தமிழர்கள் அணிதிரள வேண்டும்

Buddhism, Nationalism and Ethnic Conflict

An Interview With The Thai Buddhist Social Thinker and Activist Sulak Sivaraksa

This interview was conducted in July 1993 in Japan and published in the Tamil Times.The views expressed by Sulak Sivaraksa on the Sri Lankan conflict are still worthy of consideration and reflection.

Interviewed by N. Shanmugaratnam

(April 03, London, Sri Lanka Guardian) Sulak Sivaraksa is a well-known Thai social thinker and activist. A nominee for the 1994 Nobel Peace Prize, Sulak is being tried by the Thai Supreme Court on a charge of defaming the King of Thailand.The charge of lese majeste, if proved, carries a maximum penalty of fifteen years in prison. Currently, Sulak is a Visiting Professor at Ryukoku University, Kyoto. In Japan, he is engaged in dialogues with Buddhists, non-Buddhists, atheists and socialists on problems of Asian societies.
The present interviewer, who identifies himself as an atheist and a socialist, has also participated in some of these discussions. The purpose of this interview, however, is to present Sulak’s views on issues that are likely to interest readers of Tamil Times. Sulak has recently published a book entitled Seeds of Peace – A Buddhist Vision for Renewing Society. He has also been engaged, along with several others, in a dialogue with Buddhist monks and lay Buddhists from Lanka on the ethnic conflict with the aim of promoting justice and peace in Lanka. He is due to return to Thailand shortly to face trial. This interview took place in Kyoto on 20 July 1993.

You are an advocate of a Buddhist approach to social change. The title of your recent book is Seeds of Peace – A Buddhist Vision For Renewing Society. Can you state your worldview in a few words?

I have discussed at some length the Buddhist Vision in the book mentioned by you. The beauty of the Buddhist view is that you do not have to believe in a god. First of all, you have to be a peaceful, humble and simple person who is in harmony with other beings including non-human beings such as animals and plants and the natural world in general.
I respect other religions and believe in learning from them too. But I think they spend a lot of time and effort to prove the existence of a god. The basic question is one of finding ways to help those who suffer. In a sense everyone in this world suffers in one way or the other. Helping others is a good way to build friendship. I believe that friendship is possible even between persons who hold different views and spiritual values. I know that there are problems when disagreements take irreconcilable forms. I have been beaten up a few times by people who thought that I was their enemy because I disagreed with them. One has to be patient at such times and prepared not to let anger and hatred take the upper hand.

How does Buddhism define an alternative path for social development?

Before answering that question, let me say something about the dominant approaches of our times, capitalism, and socialism as we have known it. Both these approaches have used social engineering strategies in their own ways. I think social engineering has failed to create the conditions for human development. Capitalism does not merely make use of human greed but glorifies this human weakness as a great virtue. It celebrates self-interested behaviour. Capitalism encourages accumulation of wealth but does not easily allow even a basically fair distribution of it. It subordinates human development to the accumulation motive by putting the economic objective above all else. I have discussed the new religion of consumerism and how it ruins the Thai society in my last book. The equalitarian ideology of socialism is wonderful but in reality it has led to state capitalism and authoritarianism. Capitalism permits some individual freedom while denying a fair distribution of wealth. Under socialism we are ensured of a fairer distribution but denied basic freedoms. I do recognize the merits of Marxist class analysis and the contribution of Marxism to the debates on social development.

Now turning to Buddhism, the most crucial difference it has with capitalism is that it does not seek to make a virtue of self-interest, greed and self-aggrandisement. In fact,Buddhism condemns greed, which can easily lead to aggression and hatred, and shows how to be content by changing yourself and striving with your fellow human beings to improve everyone’s wellbeing. Unfortunately, Buddhists have failed to deal with problems in that spirit. We have failed to deal with the injustices of feudalism and capitalism and with the impacts of Hinduism and Confucianism on Buddhist philosophy.

We have to understand socio-cultural realities in our societies and their tensions and evolve appropriate approaches so that no section feels discriminated against. As a Buddhist, I am an advocate of what has come to be knows as the middle path when it comes to development. We cannot turn the clock backwards. We must adopt from the modern systems whatever is good for the people’s human development and build a righteous society. This is no easy task and I know it involves compromises for the sake of peace and harmony. I would refer those interested to know more to my book.

If I may turn to a more specific issue, Thai and Lankan Buddhist clerical establishments have had a very long and cordial relationship. You have been involved for some time in peace promotion in Sri Lanka. Do you think that Buddhist peace activists like you in Thailand could play a role in bringing about a resolution of the Lankan conflict?

Let me first tell you something about Thai-Tamil relations of which many people do not seem to be aware in Thailand or in India and Sri Lanka. Before the establishment of close links between Lankan and Thai Buddhists, we had a long period of interaction with South Indian culture. Tamil Nadu already had a rich culture many centuries ago and there was constant intercourse between Thai and Tamil culture. The version of Ramayana we have in Thailand came from Tamil Nadu. The Brahmanic mantras chanted at ceremonies in the Thai court are Tamil in origin although many people still think that they are Sanskritic (in origin). In fact, some scholars have deciphered the words and shown them to be Tamil. And Buddhism came not only from North India but from the South as well as Tamil Nadu had one of the most active centres of Buddhism in Kanchi. Sorry to interrupt you at this point. I have been told that in your language the word Tamil means something very bad. Is this true?

Yes. Thamin, that is how Thamil is spelt in Thai, means something dreadful, bloody, violent etc. There is a history behind this. I think the word in its current usage came into the Thai language from Sri Lanka through Mahavansa and the Sinhala Buddhist monks who used it pejoratively. In May this year, a peaceful mass demonstration was broken up by the police and several people got killed. A major newspaper headlined its story about this incident as “Pruspa Thamin” which means “May Thamil”, i.e. May Violence.I wrote a long article to that newspaper protesting against the misuse of a word, which actually describes the ethnic identity, and language of more than 50 million people.

There was a positive response to my article from a popular columnist in the same paper who stressed that we should not use the word Thamin in the sense we have been using it all this time as it could hurt the feelings of the Tamil people. I hope this message will reach everyone in Thailand.

Now to return to your question about our role in promoting justice and peace in Lanka.There are people like me in Thailand who are very concerned about the situation in Sri Lanka and willing to do whatever we can to bring about a just resolution of the conflict and an end to the war. My nationality and religion could be both help and hindrance in this regard. The close ties between the Sri Lankan and Thai Sanghas provide us with a good communication channel. On the other hand, the nationalist elements in the Sinhala Buddhist Sangha may expect us to support their position or, at least, not to oppose them.

The first message I have for the Sinhala Buddhists is that they should abide by the Buddhist precept of non-violence. You cannot be a Buddhist and an advocate or a supporter of violence at the same time. Almost ten years ago, I was asked by three
international peace bodies: War Resister International, Peace Brigades International and International Fellowship for Reconciliation, to participate in a peace initiative in Sri Lanka. I agreed to this and visited Sri Lanka in 1984 and several times after that. I met with Buddhist leaders including the Mahanayake to whom I said that the Sangha had got too close to politics at the expense Buddhism in Sri Lanka. I also politely asked the Mahanayake to explain why there were no Tamil Buddhist monks in Sri Lanka. I did not get a satisfactory answer. As a result of my visits and with the cooperation of the Peace Research Institute, Oslo, (PRIO) we managed to invite 35 Buddhist monks from Sri Lanka to Bangkok for a dialogue and reflection on the ethnic problem. Tord Høvik of PRIO, himself a Buddhist, was very helpful to me. I noticed that the Sinhala Buddhist monks
suffered from a mental block when it came to the Tamil question. We talked a lot and at one stage I proposed that a meeting with Tamil militants may help and that it could be held in Madras or Bangkok. The monks were not ready for such a dialogue yet.They appeared to be worried that such a meeting might adversely affect their credibility among the Sinhala people. We also discussed other matters of mutual interest including alternative development. I showed the monks some parts of Bangkok to help them see the negative aspects of so called development. They also saw some of the positive side.

I raised another important question too. It concerned the virtual disappearance of Pintapata (the practice of begging by Buddhist monks) among the Sri Lankan Buddhist clergy.

An upshot of our efforts was that we gained a few individuals who became dedicated to the peace process at the risk being attacked by chauvinists as traitors to the Sinhala Buddhist cause. Now some monks and laypersons are working with Tamils. Some of them have been exposed to training in Norway and the Philippines sponsored by HURIDOCS and PRIO. I will continue my effort but I know it is not an easy task to find a solution and end the war.
Can a Buddhist be a nationalist too?

Not the way many Buddhists in Sri Lanka are nationalists; they are Sinhalese before they are Buddhists. Buddha was born in India but his teachings spread far and wide across countries and states. A true Buddhist cannot be a nationalist although he or she may support those national movements that can serve as vehicles of the universal humanist values for which Buddhism stands. For a Buddhist, there is no Holy war or Just War. But in the real world Buddhists have been involved in state making and have often compromised their principles for the sake of patronage from states that oppressed the people. State patronage tends to divert the Sangha from the truly Buddhist course and co-opts it into supporting and justifying violations of people’s rights, Once you compromise with the state you enjoy a lot of privileges including material benefits, but that is not Buddhism.

Buddhism has not been able to contribute in a significant way toward solving the basic problems of the people for 2500 years. Its universal values have been distorted by the very establishments, which were supposed to practice them. Buddhists monks openly defend violence and display extreme forms of chauvinism and hatred toward non-Buddhists. Buddhism has failed for 2500 years, what makes you have faith in the Buddhist vision?

In 1973, there was a big student uprising in Bangkok which led to a political change at the top as at the dictators of Thailand fled the country. I was engaged in a dialogue with the students at that time. I told them the political change was only superficial and that we all should work for basic changes by following the Buddhist path. The student leaders told me that we had given 2500 years for Buddha and the time had come to give Mao the due place. Mao and not Buddha, they insisted, had the answer to Thailand’s problem. I told them that Mao and Buddha had similar aims but Mao believed in violence whereas Buddha believed in non-violence. Buddhism asks you to challenge your own inner self first before trying to challenge others but Maoism asks you to challenge others but not the self. They did not agree with me. For about three years, ‘hundred flowers bloomed” but then the dictators returned with a vengeance in 1976. At this point, hundreds of students left Bangkok for the jungles to join the Thai Communist Party with the aim of making the revolution. They returned after some time quite disillusioned. These youths were basically Thai nationalists who found the Thai Communist Party to be more Chinese and than Thai. Some of them have developed beyond the limits of their old beliefs and begun to be interested in the Buddhist approach.

(Courtesy: Tamil Times, August 1993)

‘ஈழத் தமிழர்’ என்ற பதத்திற்கு பதிலாக இன்று ‘ஐரோப்பிய தமிழர்’ என அடையாளப்படுத்தும் நிலை – என். செல்வராஜா

selvarajah-n02.jpgஐரோப்பாவில் வாழும் தமிழர் எதிர்காலத்திலும் தமிழர் என்ற அடையாளத்தினை பேணுவார்கள். ஆனால்,  ஈழத் தமிழர்கள் என்ற பதத்திற்கு பதிலாக ஐரோப்பிய தமிழர் என்று அடையாளப்படுத்தும் நிலை தோன்றியுள்ளதாக லண்டனிலிருந்து நூல்தேட்டம் என்ற ஈழத்துத் தமிழ் நூல்களை ஆணவப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள நூலகர் என். செல்வராஜா தெரிவித்துள்ளார்.

பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில் புலம்பெயர் தமிழ் சூழலில் வெளியீடுகளை ஆவணப்படுத்தல் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த உரையாடலில் பல்கலைக்கழக பேராசிரியர்களும்,  விரிவுரையாளர்களும்,  தமிழ்த்துறை உள்ளிட்ட பல மாணவர்களும் பங்குபற்றினர்.

தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் துரை. மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூலகவியலாளர் என். செல்வாராஜா தொடர்ந்து உரையாற்றுகையில்:

ஐரோப்பாவில் வாழும் தமிழர்களின் இரண்டாம் தலைமுறையினர் இலங்கை தமிழர் பற்றி பல ஆய்வுகளை ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் மேற்கொள்கின்றனர்.  ஐரோப்பியரும் இவ்வாறான ஆய்வுகளில் ஆர்வம் செலுத்துகின்றனர். பல்வேறு மொழி அகராதிகளும்,  மொழிபெயர்ப்பு முயற்சிகளும் புலம்பெயர்ந்த தமிழர்களினாலும் அவர்களது இரண்டாம் தலைமுறையினராலும் நேரடியான மூல மொழியிலிருந்தும்,  மூல நூலாசிரியரின் வாழிடச் சூழலை அனுபவித்தும் நேரடியாக மொழிபெயர்க்கப்படுகின்றன. படைப்பாளி நிலக்கிளி பால மனோகரன் (டென்மார்க்) சரவண பவன் (ஜேர்மனி) கலாமோகன் (பாரிஸ்) போன்றோரை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

1980களில் மலேசியா,  சிங்கப்பூர் நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர்களின் தலைமுறையினர் இன்று சிலோன் தமிழர்களாக வாழ்வது போல ஐரோப்பிய தமிழரும் தனித்துவ அடையாளத்துடன் வாழ்வார்கள்.

இன்று ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் கூட பல இலங்கை தமிழர்கள் போட்டியிடுகின்றனர். மலேசியா,  சிங்கப்பூர் தமிழர்களில் இலங்கையிலிருந்து சென்றவர்களே 1870-1930 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பல இலக்கியங்களை படைத்துள்ளனர். மலேசியா மான்மியம் ஈழத்தமிழராலேயே எழுதப்பட்டுள்ளது. மலேசியாவின் ஆரம்பகால படைப்பிலக்கியங்கள் ஈழத்தமிழர்களாலேயே மேற்கொள்ளப்பட்டன. ஆனால்,  இவை ஆவணப்படுத்தப்படவில்லை. இவற்றை தனியான ஒரு மலேசிய நூல்தேட்டம் மூலம் ஆவணப்படுத்தி வெளியிட்டுள்ளேன்.

ஐரோப்பிய தமிழ் ஆவணகாப்பகமும்,  ஆய்வு நிலையமும் என்ற பெயரில் அமைப்பொன்று ஏற்படுத்தப்பட்டு ஐரோப்பாவில் புலம்பெயர்ந்த மண்ணில் தமிழர்களின் நூல்கள் ஆவணப்படுத்தப்படுவதோடு,  அங்கு இலங்கை தமிழர் பற்றிய நூல்களும் ஆவணப்படுத்தப்படுகின்றன. இவை எதிர்காலத்தில் தமிழர் பற்றி ஆய்வு செய்யும் ஐரோப்பியர்களுக்கும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் பல்கலைக்கழகங்களில் கற்பவர்களுக்கும் ஒரு ஆய்வகமாகத் திகழப் போகிறது. பிரித்தானியாவிலுள்ள முன்னணி ஆறு பல்கலைக்கழங்களில் 600ற்கு மேற்பட்ட புலம்பெயர்ந்த தமிழ் மாணவர்கள் வருடாந்தம் கல்வி கற்று பட்டதாரிகளாக வெளியேறுகிறார்கள். எமது புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்தும் இலங்கை தமிழர்களுக்கு ஏதோவொரு வகையில் உதவிகளை செய்து வருகின்றனர்.

நூல்தேட்டத்தின் 7வது நூல் தொகுப்பு பேராதனை பல்கலைக்கழக வெளியீடுகளையும்,  பல்கலைக்கழக நூலகத்தின் அரிய வளங்களையும் ஆவணப்படுத்தி வெளியிடப்படவுள்ளது. இந்த நூல் தேட்டம் விற்பனை நோக்கத்துடன் செய்யப்படவில்லை. ஈழத்தமிழரின் வெளியீடுகள் உலகளாவிய ரீதியில் ஆவணப்படுத்தப்படுவதே இதன் முக்கிய நோக்கமாகும் என்று அவர் தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழர்கள் தாம் வாழும் இடத்திலிருந்து கொண்டே இலங்கை தொடர்பான பல ஆய்வுகளை வெளியிட்டு வருகின்றனர். இவை இலங்கையிலும் இந்தியாவிலும் வேறு நாடுகளிலும் அச்சிடப்படுகின்றன. இந்த நூல்கள் பலவற்றில் எழுத்தாளரின் இலங்கை விலாசமே பயன்படுத்தப்படுகிறது என்பதும் அவதானிக்கப்பட வேண்டும்.

இளம்தலைமுறையினரும் இலங்கை பற்றி ஆய்வு செய்யவே ஆர்வமாகவுள்ளனர். எதிர்காலத்தில் இலங்கையில் பல வெளியீடுகளை மேற்கொள்வார் எனவும் புலம் பெயர் தமிழரின் ஆதரவினை பெற்றுக்கொள்ள தாயகத்திலுள்ள தமிழ்ப் படைப்பாளிகள் முன்வர வேண்டும் என்றும் மேலும் தெரிவித்தார். உரையின் முடிவில் திரு. செல்வராஜா ஒன்றுகூடலில் கலந்துகொண்டோரின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
 

மலேசிய இந்தியர்களின் எழுச்சியும் ஹின்ட்ராப் அமைப்பின் தோற்றமும் : வேதமூர்த்தி பொன்னுசாமி

Wethamoorthy_HINDRAFவேதமூர்த்தி பொன்னுசாமி Hindu Rights Action Force – HINDRAF முன்னணி உறுப்பினர். 2007 நவம்பர் 25ல் மலேசியாவில் இடம்பெற்ற மலேசிய இந்தியர்களின் மாபெரும் எழுச்சிக்குப் பின் மலேசியாவை விட்டு வெளியேறி மேற்கு நாடுகளில் தங்கள் போராட்டத்திற்கான ஆதரவைத் திரட்டியவர். டெல்லி, சென்னை, லண்டன், வோசிங்டன், நியூயோர்க், புரூசல்ஸ், ஜெனிவா என உலக நாடுகளுக்குச் சென்று தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு இருந்தார். அவர் லண்டனில் தங்கி இருந்த போது 2009 மே 13ல் தேசம்நெற் சார்பாக அவரைச் சந்தித்து உரையாடி இருந்தேன். அப்பொது வன்னி யுத்தம் மிக உச்சத்தில் இருந்த சூழலில் இந்த நேர்காணலை உடனடியாக வெளியிடுவது பொருத்தமற்றதாக இருந்தது. அதனால் தற்போது இவ்வுரையாடலின் ஒரு பகுதியைப் பிரசுரிக்கின்றோம். இப்பகுதியில்  HINDRAF அமைப்பின் தோற்றம் செயற்பாடுகள் பற்றிய விடயங்களை வேதமூர்த்தி பொன்னுசாமி பகிர்ந்துகொள்கின்றார். அவருடைய நேர்காணல் அடுத்த இதழில் வெளிவரும்.

HINDRAF- Hindu Rights Action Force இது ஒரு சிறு அமைப்பு. ஆரம்பகாலங்களில் ஒரு 50 பேர் உள்ள அமைப்பு.

ஒரு மதமாற்றம் சம்பந்தப்பட்ட பிரச்சினை. அதாவது இந்து ஒருவர் முஸ்லீம் பெண்ணைத் திருமணம் செய்திருந்தார். இறந்த பிறகு இவர் முஸ்லீம் மதத்தில் சேர்ந்து விட்டார் என்று கூறி அவருடைய உடலை முஸ்லீம் மதத்தினருடைய இடத்திற்கு எடுத்துப் போய் விட்டார்கள். இந்த விடயம் கோட்டுக்கு போனபோது கோடு சொல்லியது இது முஸ்லீம் மதம் சம்பந்தப்பட்டது இதை நீங்கள் செரியா கோட்டுக்கு எடுத்துப் போக வேண்டும் என்று. ஒரு இந்து எப்படி இஸ்லாமிய முறைப்படியான ‘செரியா’ கோட்டுக்கு நீதி விசாரணைக்கு போக முடியும் என்ற யோசனை இல்லாமலே இப்படி தீர்ப்பளிக்கப்படுகிறது.

அவர் மதம் மாறினாரா இல்லையா என்பது முதலில் civil courtல் தீர்மானம் கொள்ளட்டும். அதில் அவர் முஸ்லீமை திருமணம் செய்திருந்தால் அதற்குப் பிறகு ‘செரியா’ கோட்டுக்குப் போகட்டும். ஆனால் civil court judge எடுத்தவுடனேயே இது முஸ்லிம் சம்பந்தப்பட்டது. ‘நாங்கள் தலையிட முடியாது. அங்கே போங்கோ’ என்கிறார். இது Judiceryயோட advocations of power என்பது அவங்கள் தங்கள் கடமையை தவறிவிட்டார்கள் (civil court). இவ்வாறான பல சம்பவங்கள் நடந்து நீதி மறுக்கப்பட்டதானாலேயே HINDRAF அமைக்கப்பட்டது. இந்த கோர்ட் முடிவு எல்லா முஸ்லிம் அல்லாதவர்களையும் பாதிக்கும். ஏறத்தாழ 45 வீத மக்களைப் பாதிக்கும். சீனர்கள் பௌத்தர்கள் கௌசிஸ் கிறிஸ்தவர்கள் எல்லோரையும் பாதிக்கும்.

இதுற்றி பேச இவர்கள் எல்லோரையும் அழைத்த போது இவர்கள் வரமாட்டேன் என்றார்கள். காரணம் மதம் பற்றிப் பேசினால் National Security Actஜ பயன்படுத்தி நாட்டின் பாதுகாப்புக்கு பிரச்சனை தருபவர்கள் என்ற மிரட்டலுக்கு உள்ளாக வேண்டிவரும். இப்படி அரசு இந்தச் சட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தாங்க.

இது மதம் சம்பந்தப்பட்ட உணர்ச்சி வசப்படக்கூடிய விடயம் என மற்றவங்க வரவில்லை. எனவே நாம் HINDRAF என்ற அமைப்பை உருவாக்கி விட்டோம். உருவாக்கும்போது 50 இந்து இந்தியா சம்பந்தப்பட்ட இயக்கங்கள் வந்தாங்க. திராவிடக் கழகங்களும் வந்தாங்க. வந்த இரண்டு வாரத்தில எல்லாரும் போய்விட்டாங்க.  இப்ப நாங்க தனியா இருக்கிறோம்.

Temple_Destruction_in_Malaysiaஎன்னுடைய மூத்த அண்ணர் உதயமூர்த்தி பொலிஸ் அராஜகத்திற்கு எதிரான நடவடிக் கைகளை மேற்கொண்டிருந்தார். தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுவது, தமிழர்கள் பொலிஸ் ரிமாண்டில் சாவது, அடித்துக் கொல்லப்படுவது போன்ற வழக்குகளை அவர் எடுத்துக் கொண்டிருந்தார். அவர்  எமக்கு உதவ முன்வந்தார். ஆகவே அவரை எமது HINDRAFக்கு சட்ட ஆலோசகராக்கினோம். 2005 டிசெம்பர் 28ம் இவ்வமைப்பை ஆரம்பித்தோம். 2006 ஜனவரி 16ம் போராடப் போனோம். அத்துடன் எல்லாரும் எம்மைவிட்டுப் போறாங்கள். பின்னர் மார்ச் மாதம் 100 வருடத்திற்கு மேற்ப்பட்ட ஒரு ஆலயத்தை உடைப்பதாக தகவல் வந்தது. வழக்கமாக கோயிலை உடைத்தால் எல்லோருமே பேசாமல் இருப்பாங்க. ஆனால் நாங்க போய் அவர்களிடம் பேசி வழக்கு எடுப்போம் என்று சொல்லி பொலிசில் புகார் செய்து, சர்வதேச நிருபர்களை கூப்பிட்டு பிரச்சினையாக்கினோம். இது ஒரு சர்வதேச விடயமாகிவிட்டது.

இப்ப இந்த விடயம் பெரிதாகிவிட்டது. இப்போ இது வழக்குத் தொடரப்பட உள்ள போது எல்லோரும் இந்த அமைப்பு யார் என்ன என்று பார்க்கிறாங்க. இந்த விடயம் சர்வதேச ரீதியாக வெளிவந்ததும் உள்ளுர் செய்தி ஸ்தாபனங்களும் வெளியிட வேண்டியதாயிற்று. (இல்லாவிட்டால் உள்ளுரில் செய்தி போட மாட்டாங்க.)

உடனே மக்களிடம் இவ்வளவு நாளும் இந்த அநியாயங்கள் நடக்குது யாரும் கேட்கவில்லை. இப்ப இதை முன்னின்று செய்பவர்கள் யார் என்ற விடயம் அதிர்ச்சியைக் கொடுத்தது. எல்லோரும் HINDRAFஜ பார்க்கிறாங்க. அதுக்குப் பிறகு ஒவ்வொரு பிரச்சினையாக எம்மிடம் வருகிறது. எல்லா இடங்களிலுமிருந்து எங்கெங்கு கோயிலை இடிக்கிறாங்க என்ற செய்தியுடன் எம்மை தொடர்பு கொள்கிறாங்கள்.

எங்களை கூப்பிடுவாங்க. அங்க போனால் புல்டோசர் நிக்கும். எந்தவொரு வழக்கறிஞரும் உங்களை கோவிலை இடித்தால் கோட்டில்தான் சந்திப்பாங்க. கோயிலை இடிக்கிற இடத்திலல்ல. ஆனால் ஏழை மக்களின் கோயில் தொழிலாளர்களுடைய கோயில் அவர்களுக்கென்று குரல் கிடையாது. தமது உரிமையை தட்டிக் கேட்கத் தெரியாதவர்கள். அவங்கள் ஏழையானதால் ஆதரவு இல்லாததால் அரசு எதுவும் செய்யும். 150, 200 வருடங்களுக்கு முன்பு பிரிட்டிஷ் colonial timeல் காடுகளை வெட்டி plantation செய்தாங்கள். அந்தநேரம் கோயிலை கட்டினாங்கள். இந்த plantion landஜ உருவாக்கிய தொழிலாளர்களிடமிருந்தும் அந்த நிலங்களை அரசு திரும்பவும் பெறுகிறது. அந்த நேரம் இந்தக் கோயில் சட்டவிரோதமானது என்று கூறி அரசு கோயில்களை இடிக்கிறது. இப்படித்தான் பிரச்சினைகள் எழுகின்றது.

அந்த நிலத்தை மீள எடுக்கும் போது அரசு அந்த மக்களுக்கு நிவாரணம் கொடுத்து வேறு இடம் கொடுத்து வசிப்பதற்கு வீடு கொடுக்க வேண்டிய அரசாங்கம், எதுவுமே கொடுக்காமல் துரத்துகிறது. (நிலத்தின் சொந்தக்காரர்கள்) கோயில்களையும் தமிழ்ப் பள்ளிக் கூடங்களையும் அடித்து உடைப்பார்கள்.

Temple_Destruction_In_Malaysiaஇப்படியாக சில வேலைகளை நாம் செய்யச் செய்ய எம்மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகமாகிக் கொண்டு வந்தது. காரணம் நாங்கள் பேசுவதில்லை. புல்டோசரின் முன்னால் நாங்கள் தான் நிற்போம். அந்த கஸ்ரப்பட்ட மக்களுக்காக நாம் போராடாமல் என்ன செய்ய முடியும். இப்படி நாங்கள் lawyers கோயில் உடைப்பில் கைது செய்யப்பட செய்திகள் பெரிதாக வெளிவரும். இப்படிச் செய்திகள் வெளிவர மக்களுக்கு எங்கள்மீது நம்பிக்கை அதிகமாக ஏற்பட்டு வந்தது.

இப்படியாக கோயில் பிரச்சினைகளிலிருந்து தொழிலதிபர்கள் பிரச்சினை, தங்களுடைய தொழிலகங்களை இப்படி உடைக்கிறாங்கள், என்று பின்னர் வீட்டு உரிமையாளர்கள் பிரச்சினை, வேலைவாய்ப்புப் பிரச்சினை, மாணவர்கள் தமக்கு பல்கலைக்கழக அனுமதிப் பிரச்சினை இப்படி பலவிடயங்களை எடுத்துப் போராட்டமாக செய்ய இது கிட்டத்தட்ட இரு வருடங்களில் இந்த HINDRAF பெரிய விடயமாக செய்திகள் வர ஆரம்பித்து விட்டது.

பின்பு 50 வருட மலேசிய சுதந்திரத்திற்கு முன்பே 18 கோரிக்கைகளை முன்வைத்து 50 வருடங்களாக எங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறியள் எண்டு கேட்க ஆரம்பித்தோம். இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டங்களை நடாத்தும் போது பெரும் திரளாக 5000 பேர் மட்டில் வந்தாங்க. முன்பெல்லாம் இப்படி போராட்டங்கள் செய்யும்போது 20,  30,  50  பேர்தான் வருவாங்கள். இந்த 18 கோரிக்கைகளை முன்வைத்த போது 5000 பேர் வந்தது ஒருபெரிய விடயமாகிவிட்டது. 18 கோரிக்கைகளையும் அரசிடம் பிரதம மந்திரியிடம் கொடுத்தோம். அரசும் கண்ணைத் திறந்து விட்டார்கள். அதிலிருந்து எங்களை கண்காணிக்க தொடங்கி விட்டார்கள்.

இதைத் தொடர்ந்து 31 ஆகஸ்ட் 7007 மலேசிய 50வது சுதந்திர தினத்திற்கு முதல்நாள் 30ம் திகதி பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஒரு வழக்கு தாக்கல் செய்துவிட்டு அமெரிக்கா போனேன். அங்கு. AFP செய்திஸ்தாபனம் இதை பெரிய செய்தியாக்கியது. மலேசியாவில் மக்கள் ஒரு பெரிய விடயம் நடந்ததாகப் பார்த்தார்கள்.  இந்த விடயங்கள் எல்லாத்தையும் தமிழில் விளக்கமாக ஒரு பிரசுரம் அடித்து மக்களுக்கு கொடுத்தோம். காரணம் பத்திரிகைகள் செய்தியை மேலோட்டமாகவே போடுவார்கள். மக்களுக்கு விளங்காது. இப்படிக் கொடுத்தால் மட்டுமே மக்கள் விபரமாக படித்துக் கொள்வார்கள்.

செப்ரெம்பர் மாதம் தொடக்கம் ஒவ்வொரு பிரதேசம் பிரதேசமாக கூட்டங்கள் போட்டு விளக்கங்கள் கொடுக்கத் தொடங்கினோம். முதல் கூட்டத்திற்கே 3000 பேர் வந்தார்கள். இப்படியே 5000, 6000 12000 மக்கள் கூட்டத்திற்கு வந்தார்கள். மக்கள் விழித்துக் கொண்டார்கள். நாங்களும் உரிமைக்காக போராடுவோம் என்ற உணர்வு வந்தது.

பின்பு 25 நவம்பர் 2007 ‘நாங்கள் பிரிட்டிஷ் மகாராணியிடம் மனு கொடுப்போம் : இதுபற்றி பொது அறிவிப்பு செய்ய வேண்டும் என அழைத்த போது  நாம் எதிர்பார்த்தது 10 000 பேரை. ஆனால் வந்தது ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள். 50 வருடமாக தூங்கியிருந்த மக்கள் விழித்துக் கொண்டார்கள். அரசாங்கத்திற்கு அவர்களின் விஷேட பிரிவு விளக்கமாக ஒரு பெரிய பிரச்சினை எழுந்துள்ளதாக . எல்லாம் சொல்லிவிட்டது.   2007 நவம்பர் 22ம் திகதி கோலாலம்பூர் நகரத்தை பொலிஸ் காவல் போட்டு தமிழர்கள் உள்ளே வரவிடாமல் தடுத்துள்ளனர். 25ம் திகதிக் கூட்டத்திற்கு தமிழர்கள் வரவிடாமல் தடுத்தார்கள். அதையும் மீறி பலர் 24ம் திகதி கோவிலுக்குப் போய் பூஜையில் கலந்துவிட்டு அங்கிருந்து அடுத்தநாள் கூட்டத்திற்கு போகவிருந்தார்கள். இந்த நேரம் கோயிலுக்குள் புகுந்து பொலிஸ் தண்ணியடித்து மக்களுக்கு பெரிய பிரச்சினைகளைக் கொடுத்து 1000 க்கு மேற்பட்டோரை கைது செய்தார்கள்.

November 23 2007ல் என்னையும் மற்றவர்களையும் பிடித்தாங்க. மக்கள் பயந்து விட்டாங்கள். எல்லோரையும் கைது செய்து விட்டாங்கள். 345 பேர் வரைக்கும் கோட்டுக்கு கொண்டுபோய் குற்றம் சாட்டி மாலை 6 மணிவரை இழுத்தடித்து இவர்களுக்கு Bail கொடுக்க முடியாமல் உள்ளே வைத்திருந்தால் போராட்டம் தொடர முடியாமல் போகும் என நம்பினார்கள். காரணம் HINDRAFல் 4 அல்லது 5 பேர்தானே உள்ளோம். நான் எனது அண்ணர் மற்ற  இரண்டு சட்டத்தரணிகள் இந்த நாலு பேரையும் உள்ளே போட்டால்  எல்லாம் அடங்கிப் போய்விடும் என்று நம்பினாங்க. ஆனால் இந்த 4 பேருக்கமாக இந்த நாடே எழும்பி வந்தது.

யார் யாரோ எல்லாம் அடுத்த நாள் கோட்டுக்கு வந்தாங்க. பெரிய சனக் கூட்டம் கோட்டுக்கு வெளியே நின்று விடுதலை செய்! தலைவர்களை விடுதலை செய்! என்று சத்தம் போட்டாங்கள்.  நீதிபதியும் மிகக் குறைந்த பணத்துடன் bail out பண்ண முன்வந்தார். மக்கள் அந்த இடத்திலேயே காசுகள் எல்லாம் சேர்த்து bail out  பண்ண ரெடி. ஆனால் நான் என்ன செய்தேன் என்றால் கொடுத்த bail outஜ நிராகரித்துதேன். bail outஜ நிராகரித்தது மலேசிய வரலாற்றில் முதன் முறையாக நடைபெறுகிறது.

இப்படி ஏன் செய்யப்பட்டது என்றால்
1 நாங்கள் உங்கள் சிறைகளைப் பற்றி கவலைப்பட்டதேயில்லை. அது ஒரு பிரச்சினையில்லை.
2. இது ஒரு சமாதானப் போராட்டம். இல்லாவிட்டால் சுற்றியுள்ள மோசமான கிரிமினல்களை அனுப்பி கலவரத்தை உண்டு பண்ணியிடுவாங்கள்.
3  தலைவர் இல்லாமலே போராட்டம் நடக்கும்.
மூன்று நாட்களாகளுக்கு முன்பு நான் lockupல் உள்ளேன். மக்கள் தானாகவே நடக்கிறார்கள். மஞ்சள் துணி கொண்டு கொடி கட்டுறார்கள். காந்தி படத்துடன் வந்தாங்க. November 25 2007ல் போராட்டம் நடந்தது. ஆனால் அரசாங்கம் மட்டும் கலவரத்தை. பிரச்சினைகளை உண்டு பண்ணியது.

அமைதியாக இருந்த மக்களை போலீசாரே அடித்தனர் மக்கள் தலைவர் இல்லாமலே தானாகவே எல்லாவற்றையும் செய்தார்கள். இது largest hindu upraise out side to the India. அதற்கு அடுத்த நாள் எங்களை விடுவித்தனர். அதன் பிற்பாடே நான் மலேசியாவில் இருந்து வெளியேறினேன்.

Budtha_Destruction_In_malaysiaஇந்துக் கோயில்களுக்கு நடந்தது மாதிரி கிறீஸ்தவ தேவாலயங்களுக்கும் புத்த விகாரைகளுக்கும் பிரச்சினைகள் உண்டா? எப்படி என்றால் கிறீஸ்தவ மதத்தினர்க்கு ஏற்கனவே காலணி ஆதிகாலத்தில் நகரத்தில் எல்லாம் கட்டப்பட்டதால் பிரச்சினையில்லை. ஆனால் மற்றும் Evangalicn Church போன்ற நிறைய பணத்துடன் உள்ள இவர்கள் ஒரு துண்டு நிலம் வாங்குவது என்றால் பிரச்சினை. நிலம் வாங்கவே முடியாது. அரசு அனுமதிக்காது. கிறீஸ்தவ மதத்தை எதிர்காலத்தில் பிரச்சினையான மதமாக பார்க்கிறார்கள்.

பல பிரச்சினைகளின் பின் எனக்குத் தெரிந்த ஒரு கிறிஸ்தவ சேர்ச்சிற்கு 25 வருடம் கழித்து சேர்ச் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் கடைகளுக்கு மேலே இருந்த இடங்களிலேயே தமது சேர்ச்சை நடத்தி வந்தார்கள். புத்த மதத்தவர்களுக்கும் பாரிய பிரச்சினையில்லை. காரணம் ஆரம்ப காலத்தில் குடியேறிய சீனர்கள் தமது தலங்களை town இலேயே கட்டிவிட்டார்கள். அதனால் பிரச்சினையில்லை.

இந்துக்களுக்கே பெரிய பிரச்சினை. காரணம் இந்திய வம்சாவழியினரான நம்மவர்கள் காட்டை அழித்து வயல் ஆக்கினர். கோயில் கட்டினர். எல்லாமே கிராமப் புறங்களாகவே இருக்கும். இப்ப அரசாங்கம் இந்த நிலங்களை சுவீகாரம் செய்யும்போது இந்துக் கோயில்களை சட்டவிரோதம் என்று இடித்து அழிக்கிறார்கள். இதற்கு நாம் என்ன சொல்கிறோம் என்றால் நாம் developmentக்கு எதிரானவர்கள் அல்ல. நீங்கள் நிலச் சுவீகரிப்பு செய்வது பிரச்சினையல்ல. ஆனால் இதற்கு மாற்றீடான நிலத்தை எமது சமூகத்திற்கு கொடுங்கள் எனக் கேட்கிறோம். மக்கள் கிராமம் எங்கே மாற்றப்பட்டதோ அங்கேதான் இந்தக் கோயிலும் மாற்றப்பட வேண்டும் என்பது. இதுதான் இங்குள்ள பிரச்சினை அதை அரசு செய்வதில்லை.

மலேசிய Heritage சட்டத்தின்படி எதுசரி 100 வருடங்கள் இருந்திருந்தால் அது பாதுகாக்கப்பட வேண்டியவைகள். ஆனால் 150 வருடங்களாக உள்ள கோயில்களை உடைக்கிறார்கள். காரணம் மலேசியாவில் ஒரு மசூதி தான் 100 வருடமாக உள்ளன. அவர்களிடம் மிக பழமையான மசூதிகள் இல்லை. எமக்கு ஆயிரக் கணக்கான இந்துக் கோயில்கள் 150 வருடங்களுக்கு முன்பே கட்டப்பட்டவை. முருகன், அம்மன் கோயில்கள் பிரதானமான கோயில்கள்  மற்றும் முனீஸ்வரர் காளியம்மன் சங்கிலி கறுப்பன் குலதெய்வ கோயில்களுமுண்டு. இவையெல்லாம் கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற கருத்தில் கட்டப்பட்டது.

நாம் என்ன சொல்கிறோம் என்றால் 100 ஏக்கர் காணிகளில் 20 கோயில்கள் இருக்கும் புதுநிலம் கொடுக்கப்படும்போது கோயிலுக்கு பெரிய நிலம் தரப்பட்டால் இந்த 20 கோயில்களையும் பெரிய 4 கோயில்களாக்கலாம். நாம் இந்த 20 கோயில்களும் வேணும் என்று கேட்டதே கிடையாது. அரசை மாற்றீடு தீர்வு வைக்கும்படி கேட்டுள்ளோம். மனு கொடுத்துள்ளோம். கெஞ்சிக் கேட்டுள்ளோம். எல்லா வழிமுறைகளிலும் கேட்டுள்ளோம். பிரதமரிடம் நீதியாசர்களிடம் கேட்டுள்ளோம். Attorny of General எம்மை ஒரு meetingகுக் கூப்பிட்டார்கள். நிறையவே எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதாலேயே கூப்பிட்டார்கள். எல்லாம் நல்லாவே பேசுவார்கள். எம்மை அனுப்பிவிட்டு அடுத்த நாளே கோயிலை உடைக்க ஆட்களை அனுப்புவார்கள்.

இவர்கள் தங்களுக்கு உள்ள Agendதaபடி வேலை செய்கிறாங்கள். ஆரம்பத்தில் நாங்கள் நினைத்தோம் இதை விளங்காமலேயே செய்கிறாங்கள் என்று. இவர்களுக்கு ஒரு திட்டவட்டமான திட்டம் ஒன்று உண்டு. அதாவது இவர்களுடைய கோயில்களை பழமையான கலாச்சாரத்தை உரிமையை முஸ்லிம்களுக்கு இல்லாத நீண்ட பாரம்பரியத்தை உள்ள இந்து மக்களின் பாரம்பரியத்தை அவர்களின்  உரிமைகளை அழிப்பதே நோக்கம். இது திட்டவட்டமாக எமக்குத் தெரிகின்றது.

ஷரியா(Shari’ah) சட்டம்: பாண் திருடிய சிறுவனின் கை சிதைப்பு! – Mohamed S R Nisthar

Shariah_Law_IranShariah_Law_Iranமேலே உள்ள படங்கள் என் நண்பனால் அனுப்பி வைக்கப்பட்டன. “அரசியலும் சமயமும்” என்ற கட்டுரையில் சமயங்களின் நன் நோக்கங்கள் பற்றி நீதானே எழுதி இருந்தாய், பார்த்தாயா சமயங்களின் சமுக முன்னேற்ற செயற்பாடுகளை என்று என்னைப் பார்த்து அந்த படங்கள் நக்கலாக (sarcastic) கேட்பது போல் தோன்றியது.

ஈரானில் நடந்தாக கூறப்படும் ஒரு சம்பவம் அதற்கு ஆங்கிலத்துடன் ஹிப்ரு மொழியிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதால் இது ஈரானுக்கும், இஸ்ரவேலுக்குமான பனிப்போர் என்று இதை விட்டுவிடவும் முடியாதுள்ளது. அதேநேரம் இந்த படங்களின் உண்மை தன்மையை(veracity) அறிவதன் மூலமோ, அல்லது புகைப்பட நிபுணத்துவ யோசனை (expert opinion) பெறுவதன் மூலமோ இந்த படங்களின் ஊடாக சம்பந்தப்பட்டோர் சொல்லவந்த விடயம் என்னவென்றும் அறியமுடியாது.

இருப்பினும் அந்த படங்களின் விளக்கத்தையும் எழுப்பப்படும் கேள்வியையும் பார்க்கும் போது அதாவது “in the name of Islam he is being punished”, “ Is this religion of peace and love” இது ஒரு சமயத்தை குறி வைத்து, அந்த சமயம் மனித விழுமியங்களுக்கு எதிரான விடயங்களை போதிப்பதாகவும், எனவே அந்த சமயத்தை பின்பற்றுவோர் பயங்கரவாத சுபாவம் கொண்டோர் என்ற முடிவு நோக்கி மனித சமூகத்தை நிர்ப்பந்திக்கின்றது போலவும் தோன்றுகிறது.

இதுவரை தொலைகாட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளிவராத இந்த புகைப்படங்களின் பின்னணி இத்தகைய உள் நோக்குத்தான் என்றால், தற்போது திரையரங்குகளில் காண்பிக்கப்படும் “My name is Khan” என்ற திரைப்படம் இந்த புகைப் படங்களுக்கு நல்லதொரு பதிலாகும். ஆனாலும் இந்த புகைப் படங்கள் என் நண்பன் போன்ற பல்லாயிரக்கணக்கானோரின் மனதில் ஷரியா சட்டம் பற்றிய தப்பபிராயம் ஆழ்ப்பதியக்கூடிய ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதால் இதை சற்று ஆழமாக ஆராய்வதன் மூலம் இந்த படங்கள் அடிப்படையில் எதை கேள்விக்குற்படுத்துகிறதோ அதன் தர்க்க நியாயங்களை நாம் அறிய வழி வகுக்கும் என நம்புகிறேன்.

இந்த வகையில் 8 வயது பாண் திருடனின் கை சிதைப்பு என்ற குற்றச்சாட்டு இஸ்லாமிய மார்க்க சட்ட (ஷரியா)த்துடன் நேரடி சம்பந்தப்பட்டது. ஆகவே இந்த ஷரியா சட்டமானது கை, கால் வெட்டல், தலை தவிர முழு உடலையும் நிலத்துக்குள் புதைத்து கல்லால் அடித்து கொல்லுதல், வெறும் மேனியுடன் கசையடிக்கு உட்படுத்துதல், சிறை பிடிக்கப்பட்டோரின் அல்லது பணயம் வைக்கப்படோரின் தலை கொய்தல் போன்ற வெறும் தண்டனை கொடுக்கும் முறை என்ற கருத்து நிலவுவதை நாம் மறுப்பதற்கில்லை.

ஷரியா என்பது அடிப்படையில் கடவுளுக்கும் மனிதனுக்குமான தொடர்பை வரையறுப்பது. அதன் அடுத்த கட்டம் மனிதர்களுக்கிடையிலான தொடர்பு ஆதாவது திருமணம், குழந்தைகள் விவகாரம், விவாகரத்து, வணிகம், குற்றமும் தண்டனையும், நல்லாட்சி, சர்வதேச தொடர்புகள், யுத்தமும் சமாதானமும், மரணம், வாரிசுரிமை என்ற முற்றுப் பெறாத பட்டியலை கொண்டிருந்த போதிலும், இந்த ஷரியா சட்டம் முற்றும் முழுதாக அமுலில் இல்லாத நிலையிலும் இஸ்லாமியர்கள் இதில் சிலதை தெரிந்தெடுத்தும், சிலதை கைவிட்டு( pick and choose) இருப்பதும், பல சமூகங்களின் கலாச்சார தாக்கங்கள் இந்த சட்டத்துக்குள் சத்தமின்றி புகுந்துள்ள நிலைமையும் ஷரியா சட்டத்தின் மூலங்களையே(source) கேள்விக்குற்படுத்துவதாக அமைந்து விடுகின்றது.

ஷரியாசட்டத்தின் மூலம் என்பது:
1) புனித குர்-ஆன்( Holy Qur’an)

2) ஹதீத் ( Hadith -இறுதி இறை தூதர் முஹம்மது அவர்களின் சொல்லும், செயலும்) அதாவது, இறை தூதர்(நபி/ prophet) முஹம்மது அவர்களின் குர் ஆனை அடியொட்டிய நம்பிக்கை, அந்த நம்பிக்கையை பிரதிபலிக்கும் அவரின் சொல், செயல் என்பவற்றை சுட்டுவதாகும். இவரின் 63 கால உலக வாழ்வில் குறிப்பாக 23 வருட இறை தூதத்துவ (prophet hood)வாழ்வில் குர் ஆனின் போதனைகள் முற்றிலும் இவர் வாழ்வில் பரிட்சிக்கப்பட்டு வரம்பு நிர்ணயிக்கப்பட்டதற்கான சாட்சியமாகவே இதை கொள்ள வேண்டியுள்ளது.

மேலும் எல்லாம் வல்ல, எல்லாம் நல்ல, எல்லாம் அறிந்த தன்மைகள் இறைவனின் குணாம்சங்களாக(characters) இருப்பதால் இறைவனால் அருளப்பட்ட இந்த ஷரியா சட்டம் முழுமை பெற்றது. இது மாறாத்தன்மை கொண்டது. இதில் அகல்தல்(repeal) சேர்த்தல் (addition) என்பதற்கு இடமில்லை. ஏனெனில் இறைவாக்கு என்பது கால, நேர, இடங்களுக்கு அப்பாற்பட்டது. எக்காலத்துக்கும் எவ்விடத்துக்கும் பொருத்தமானது.

இருந்த போதிலும் இந்த படங்கள் குறிப்பாக ஒரு குற்றச்சாட்டையும் அதற்கான தண்டனையின் தன்மையையும் விமர்சிப்பதனால், ஷரியா சட்டத்தில் “குற்றமும், தண்டனையும்” என்ற விடயத்தை மாத்திரம் இங்கு பார்ப்பது மிக பொருத்தமாக அமையும் என நம்புகிறேன்.

இந்த அடிப்படையில் ஷரியா சட்டம் என்பதன் நோக்கம் “சமூகத்தை பாதுகாத்தல்” என்பதனால் வரம்பு மீறிய சுதந்திரம் (unlimited freedom), தனி மனிதத்துவம் (individualism), பொருள் முதல் வாதம் (materialism) என்பன இங்கு முதன்மை பெற இடமில்லை. இதை அடிப்படையாக கொண்டே விழுமியங்களும், அதை நடைமுறைபடுத்த விதிகளும், விதிகள் மீறப்படும் போது அதற்கு தண்டனையும் வழங்கப்படுகின்றது.

சமூகம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் முதலில் அதன் அங்கமான தனிமனிதன் பாதுகாக்கப்பட வேண்டும். தனி மனிதனின் பாதுகாப்பு என்பது முதலில் அவனின் மனம் (mind) பாதுகாக்கப்படல் என்பதில் தங்கியுள்ளது. ஆகவேதான் ஒழுக்க கல்வி ஆணுக்கும், பெண்ணுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தாற் போல் சமத்துவ சமூக (just society) அமைப்பு அவசியமாகின்றது. அதற்குப் பிறகு நல்லாச்சியின் (good governance) தேவை அவசியமாகின்றது. அடுத்த நிலையில் குற்றம் சாட்டுவோரின் அதி கூடிய சாட்சிய பொறுப்பு (high evidential burden) தேவைப்படுகின்றது. இதன் மூலம் சட்ட துஸ்பிரயோகம் (miscarriage of justice) தவிர்க்கப்பட வற்புறுதப்படுகின்றது. அடுத்தாற் போல் அளிக்கப்படும் தண்டனை நிருபிக்கப்பட்ட குற்றத்துக்கு சமமானதாக (proportion) இருப்பது ஒரு மீற முடியாத நிபந்தனையாகவுள்ளது. இறுதியாக தண்டனை என்பது மற்றோரை குற்றம் செய்யாமல் தடுக்கும் (deterrent) விதத்திலும் அமைதல் வேண்டும் என்பதும் கவணத்தில் கொள்ளப்பட வேண்டிய தேவையும் உள்ளது. எனவே மேலே சொன்னவை சாத்தியமில்லாத நிலையில் அளிக்கப்படும் தீர்ப்பு (judgment/verdict) ஷரியா சட்டமாக கொள்ள முடியாது.

எனவே இந்த பாண் விவகாரத்துக்கான தண்டனை மேல் சொன்ன வடிகட்டல் (scrutinizing) முறையின் ஊடாக பெறப்பட்டதா என்ற கேள்வி இயல்பாக எழுவதை தடுக்க முடியாதுள்ளது. இதை விடவும் குற்றம் இழைக்கப்பட்டவர் விரும்பின் குற்றம் செய்தவரை சுயமாக மன்னிக்கவும் அல்லது நட்டஈடு பெற்றுக் கொண்டு மன்னிப்பளிக்கவும் ஷரியா சட்டத்தில் இடமுண்டு. இப்படி செய்ய பாண் வியாபாரி முன்வரவில்லையா என்ற கேள்வியும் தொடர்ந்தே வருகின்றது.

கொலை வழக்குகளில் கூட நட்டஈடு/பாவபணம் (blood money) செலுத்தி கொலைகாரர் மன்னிப்பு பெற்ற சம்பவங்கள் ஈரானிலும் நடந்துள்ளன. ஆகவே இந்த பாண் திருட்டு சம்பவத்தில் பாண் வியாபாரிக்கு நட்டஈடு கொடுத்து சிறுவனை காக்க அந்த சமூகம் முன்வரவில்லையா என்ற கேள்வியை என்னால் அலட்சியம் செய்ய முடியவில்லை.

அதையும் விட மூளை சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகள் முன்னேற்றம் அடைந்துள்ள இன்றைய கால கட்டத்தில் குற்றச் செயல்களை தூண்டும் gene சிலருக்கு பிறப்பில் இருந்தே இருந்து வருவதாக சொல்லப்படுவதால், இத்தகைய களவுகளுக்கு இந்த ஜீன்னின் பங்களிப்பு என்ன என்பதும் கட்டாயமாக ஆராயப்பட வேண்டும். இந்த “ஒப்பு உவமை” (comparative exercise) செய்யும் முறையையும் தீர்ப்பளிப்போர் அறிந்திருக்கவேண்டும் என்பது ஷரியா சட்டத்தின் இன்னுமொரு அம்சம்.

எனவே இந்த படங்கள் உண்மையானவை என்றும் அதனடிப்படையில் இத்தீர்ப்பு பிழையென்று கொள்வோமாயின், தீர்ப்பளிப்போருக்கான பின்பற்றல் விதி முறையில் ஏதும் பிழை (procedural error) ஏற்பட்டிருக்கலாமே தவிர அல்லது அப்படியான சந்தர்பங்களில் தீர்ப்புக்கு எதிராக மேன்முறைஈடு (appeal) செய்ய வேண்டுமே தவிர ஷரியா சட்டம் பிழையானது என்ற கூற்று தண்டனை பெற்றவருக்கான பரிகாரமாகாது.

பிற்போக்கு தலைமைகளையும், கைக்கூலிகளையும் தோற்கடிப்போம்!

Viyoogamமே 18 இயக்கம் விடுக்கும் அறிக்கை.

மீண்டும் ஒரு தேர்தல்! புலிகளை சிங்கள பேரினவாத அரசு தோற்கடித்து ஒரு வருடத்தினுள் தமிழர் தாயகத்தில் நடைபெறும் மூன்றாவது தேர்தல்!! நடத்தப்படும் தேர்தல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் தன்மையை மதிப்பிடுவதாயிருந்தால் அந்த பட்டியலில் சிறீலங்கா முன்னிலையில் நிற்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் துரதிஸ்டவசமாக ஜனநாயகம் என்பது இந்த தேர்தல் நடத்துவது என்பதை விட இன்னமும் ஆழமான தார்ப்பரியங்களைக் கொண்டது. அப்படிப் பார்த்தால்> யுத்தம் முடிந்து> பாதிக்கப்பட்ட மக்கள் தமது சொந்த இருப்பிடங்களுக்கு முழுமையாக திரும்பாமலேயே> யுத்தத்திற்கு இட்டுச் சென்ற அரசியல் பிரச்சனைகள் பற்றிய தீர்வு காணாமலேயே> இன்னும் குறிப்பாக அப்படிப்பட்ட தீர்வுகளை காண்பதற்கான நிர்ப்பந்தங்களை தள்ளிப்போடும் நோக்கில் நடத்தப்படும் தேர்தல்கள் உண்மையில் ஜனநாயகத்தை கருவறுக்கும் செயற்பாடுகளேயாகும். ஆனாலும் பரவாயில்லை. அதில் போட்டியிடவும் தயாராக பல குழுக்கள்! முன்னர் பின்னர் தேர்தல்களில் கலந்து கொள்ளும் நோக்கமோ> அது தொடர்பான சிந்தனையையோ கொண்டிராத பலர் கூட களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். எல்லாம் ஆளும் கட்சியின் உபயம் தான். தனது அரசியல் எதிராளிகளை தோற்கடிப்பதற்காக> அந்தந்த பிரதேசங்களில் உள்ள பல்வேறு குழுக்களையும் பணத்தைக் கொடுத்து செயற்கையாக களத்தில் இறக்கும் செயற்பாட்டை ஆளும் கட்சி செய்து வருகிறது. இதுவொன்றும் ஜனநாயகத்தின் மீதான அக்கறையை வெளிப்படுத்தவில்லை. மாறாக> ஜனநாயகம் மீது இந்த கும்பல் கொண்டுள்ள இளக்காரமான பார்வையைத்தான் காட்டுகிறது.

இந்த தேர்தலில் நாம் கலந்து கொள்ளாவிட்டாலும் கூட> ஒரு அரசியல் அமைப்பு என்ற வகையில் எமது அமைப்பின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவது அவசியம் எனக் கருதுகிறோம். அந்த நோக்கிலேயே இந்த அறிக்கையானது வெளியிடப்படுகிறது. புரட்சிகர> முற்போக்கு சக்திகள் பாராளுமன்ற தேர்தல்களை தமது பிரச்சார நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்வது அவசியம் என்று கருதும் ‘மே 18 அமைப்பு’ இந்த தேர்தல் தொடர்பான எமது நிலைப்பாடுகளை முன்வைக்கிறது.

இந்த தேர்தல் தொடர்பாக நாம் அணுகும் போது பின்வரும் விடயங்கள் எமது கவனத்திற்கு உரியனவாக இருப்பது அவசியமானது.

1. மக்களுக்கு தேர்தல்கள் தொடர்பாக கல்வியூட்டுவது.
2. மோசமான பிற்போக்கு சக்திகள்> அரச கைக்கூலிகளை தனிமைப்படுத்துவது.
3. முற்போக்கான சக்திகளை இனம் காட்டுவது.
4. ஒரு விரிவான ஐக்கிய முன்னணி தந்திரோபாயத்தை நோக்கி வென்றெடுக்க முயல்வது.

இந்த நோக்கில் பின்வரும் நிலைப்பாடுகளை நாம் முன்வைக்கலாம் என்று கருதுகிறேம்

சிங்கள கட்சிகள்.

ஐ.தே.க மற்றும் சிறீலங்கா சுதந்திர கட்சி ஆகிய இரண்டுமே தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டவர்கள். இப்போதும் கூட இலங்கையில் தேசிய பிரச்சனை என்ற ஒன்று இருப்பதையே நிராகரிக்கும்> ஒற்றையாட்சி முறைக்குள் சில நிர்வாக மீளொழுங்குகளை மேற்கொள்வதன் மூலமாக தீர்வு காண முனைவதாக கூறுவதன் மூலமாக இலங்கை ஒரு பல்தேச சமூகம் என்பதை மறுத்துரைக்கும் இவர்கள் தமிழ் மக்களது எதிரிகளாவர். தமிழர் தேசியம்> தமிழர் தாயகம்> சுயநிர்ணய உரிமை என்பவற்றை மொத்தமாக மறுதளித்துவிட்டு இவர்கள் தருவதாக கூறப்படும் அபிவிருத்தி பூச்சாண்டிகளை தமிழ் மக்கள் நிராகரிப்பதன் மூலமாக தமது சுதந்திரத்திற்கான வேட்கையை வெளிப்படுத்த வேண்டும்.

கூலிப்படைகள்
புலிகள் இருந்த காலத்தில் பாதுகாப்பு மற்றும் பல்வேறு காரணங்களைக் கூறி சிறீலங்கா அரசுடனும்> இந்திய அரசுடனும் ஒட்டிக் கொண்டிருந்த கூலிப்படைகள் மீண்டும் ஒருமுறை தமிழ் மக்களது ஜனநாயக உரிமைகளுடன் விளையாடுவதற்காக வருகிறார்கள்.

புலிகளது அராஜகத்திற்கு எதிராக போராடுவதாக் கூறிக் கொண்டே இவர்கள செய்து முடித்த அராஜகங்களும்> மனித உரிமை மீறல்களும் மிகவும் அதிகம். இப்போது புலிகள் மடிந்த பின்னரும்> தாம் அரசுடன் ஒட்டிக் கொண்ட காலத்தில் பெற்ற சலுகைகளை காப்பாற்றுவதற்காக தமிழ் மக்களை விற்றுப் பிழைப்பது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். சிங்கள அரசிடம் எந்தவிதமான சமாதான முன்மொழிவுகளும் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிந்து கொண்டே> தமிழ் மக்களை தவறாக வழிநடத்துபவர்கள் இவர்கள். ஜனநாயக வழிமுறைக்கு திரும்பிவிட்டதாக கூறிக் கொண்ட போதிலும் இப்போதும் ஆயுதங்களை ஏந்தியவாறு> தமக்கு எதிராக குரல் கொடுக்கும் மக்களையும்> முற்போக்கு – ஜனநாயக சக்திகளையும்> ஊடக சுதந்திரத்தையும் ஒடுக்குவதற்கு மாத்திரம் இந்த ஆயுதங்களை பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள்.

தமிழ் சமூகத்தில் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய எந்த விதமான தேசிய> ஜனநாயக முன்முயற்சிகளையும் தீவிரமாக நசுக்குவதில் முன்னிற்பவர்கள் என்ற வகையில்> இவர்கள் தமிழ் மக்களது அரசியல் அரங்கில் இருந்து அகற்றப்படுவது> இந்த முன்முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு மிகவும் அவசியமானதாகிறது. ஆதலால் இவர்களை சிங்கள அரசின் கூலிப்படைகளாக இனம் கண்டு முற்றாக நிராகரிக்குமாறு மக்களை கோருகிறோம்.

சிங்கள தேசமானது தமிழ் மக்களை ஒரு தனியான தேசம் என்பதை மறுதலித்து> அவர்களை அடிமைகள் போல நடத்த முனைகிறது. தனியான> சுயமான அரசியல் அதிகாரத்தை கோரி நிற்கும் ஒரு தேசத்தின் முன் சில எலும்புத் துண்டுகளை எறிந்துவிட்டு> அபிவிருத்தி என்று பூச்சாண்டி காட்டுகிறது. இந்த திமிரான ஆதிக்க சக்திகளது குப்பை கூழங்களை கூவி விற்கும் இந்த பொறுக்கிகளை திட்டவட்டமாக நிராகரிப்பதாக தமிழ் மக்களது வாக்குகள் அமைய வேண்டும்.

தேர்தலில் தனது சொந்த சின்னத்தில் போட்டியிடவே வக்கில்லாத இந்த அடிமைகள்> ஒரு தேசத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வு காட்ட முனைவது என்பது சுத்த மோசடியாகும். ஒரு தேசத்தின் சுயமரியாதையை விற்று பிழைப்பு நடத்தும் இவர்கள் தமிழரது தேசிய அரசியல் அரங்கிலிருந்து அகற்றப்பட வேண்டிய களைகள் ஆகும். இப்போது இந்த பீடைகளை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பிவைக்க கிடைத்துள்ள தருணத்தை தமிழ் மக்கள் சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும். டக்லஸ் தேவானந்தா> கருணா அம்மான்> பிள்ளையான் போன்ற கைக்கூலிகளை ஜனநாயகரீதியாகவும்> அரசியல்ரீதியாகவும் தனிமைப்படுத்துக! அமைச்சர் பதவிகளை வைத்துக் கொண்டு அதிகாரம் பண்ணும் நிலைமைகளுக்கு முடிவு கட்டுவோம்!

தமிழர் தேசிய கூட்டமைப்பு

சரியான அர்த்தத்தில் பார்த்தால் இவர்கள் ஒரு அரசியல் கட்சியோ> அல்லது அமைப்போ கூட கிடையாது. புலிகள் தமது ஏவலை செய்வதற்கு சில அரசியல்வாதிகளை தேடினார்கள். இன்னும் சரியாக கூறுவதானால்> தமிழர் தாயகத்தில் உள்ள பாராளுமன்ற ஆசனங்களை கூலிப்படையினர் அலங்கரித்துக் கொண்டு> அரசின் பிரச்சாரத்திற்கு துணை போவதை தடுக்க முனைந்தார்கள். அதற்காக பொறுக்கியெடுக்கப்பட்ட தனிநபர்களே இவர்கள். தமிழர் தேசிய கூட்டமைப்பிற்கு என்று ஒரு அமைப்பு வடிவமோ> அல்லது திட்டவட்டமான கொள்கை நிலைப்பாடுகளோ கிடையாது. அதில் இருப்பதாக கூறப்படும் பல்வேறு அமைப்புக்களும் கூட இந்த தலைவர்களது கட்டுப்பாடுகளில் கிடையாது. ஆக மொத்தத்தில் தமது பதவி சுகங்களுக்காக வெட்கம் இன்றி புலிகளது கொத்தடிமைகளாக செயற்பட்ட ஒரு கூட்டம் இது. பதவியில் இருந்த காலத்தில் இவர்கள் புலிகள் அமைப்பிற்கோ> அல்லது தமிழ் மக்களுக்கோ விசுவாசமாக இருந்ததில்லை. தத்தம் சொந்த சொத்து சேர்க்கும் வேட்டையில் முழுமையாக மூழ்கித் திழைத்தவர்கள். இவர்களுள் பலர் தமது தொகுதிகளுக்கு செல்லாதது மட்டுமல்ல> இலங்கையிலேயே கூட இருந்ததில்லை. அடிக்கடி வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு> இலங்கை திரும்பும் போதெல்லாம்> பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தமக்கிருந்த சலுகைகளை பயன்படுத்தி புத்தம் புதிய வாகனங்களை இறக்குமதி செய்து விற்று கொள்ளை இலாபம் சம்பாதித்தவர்கள். வன்னியில் மக்கள் கடும்துயரில் இனப்படுகொலையை சந்தித்துக் கொண்டிருக்கையில் தமது குடும்பங்களை பாதுகாப்பாக வெளிநாடுகளில் வைத்துக் கொண்டே> புலிகளால் பலவந்தமாக பிடித்து வைக்கப்பட்டிருந்த மக்கள் தொடர்பாக> வன்னி மண் அந்த மக்களது மண் எனவும்> அவர்கள் அங்கு தங்கி நிற்பதே சரியானது என்ற வித்திலும் மிகவும் பொறுப்பற்ற அறிக்கை விட்டவர்கள்.

புலிகளது மறைவுடன் இவர்களது இருப்பிற்கான காரணம் மறைந்து விட்டது. ஆயினும் பாராளுமன்ற ஆசனங்கள் என்ற ஒரே குறியில் இவர்கள் அந்த அமைப்பை காப்பாற்றி வருகிறார்கள். இந்த ஆசனங்களை குறியாக வைத்தே ஒரு கூட்டம் இதைச் சுற்றிக் கொண்டு வருகிறது. முன்பு புலிகள் அமைப்பு இருந்த போது> வன்னியில் இவர்களது கட்டளைத் தலைமையகம் இருந்தது. இப்போது இது டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்திய அரசின் நலன்களுக்கு தமிழ் மக்களை தாரைவார்க்க தயாராகிவிட்டார்கள்.

கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு தலைமை கொடுத்து வந்த பிற்போக்கு> வலதுசாரி> மேட்டுக்குடியின் மிச்ச சொச்சமான இந்த அமைப்பானது> வரலாற்றுரீதியிலும்> அரசியல்ரீதியிலும் காலாவதியாகிப்போன ஒரு போக்கை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். தமிழ் மக்களது அரசியல் எதிர்காலமானது> இந்த பிற்போக்குத் தலைமைகள் முறியடிக்கப்படுவதிலேயே தங்கியுள்ளது.

தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி (தமிழ் கொங்கிரஸ் கூட்டு)

தமிழ் கொங்கிரஸ் அமைப்பானது தமிழ் மக்களது அரசியல் வரலாற்றில் தோன்றிய சாபக்கேடான ஒரு அமைப்பாகும். தமிழ் சமுதாயத்தில் காணப்பட்ட அத்தனை பிற்போக்கு சித்தாந்தங்களுக்கு ஒட்டு மொத்தமான வடிவமாக திகழ்ந்தவர்கள். இவர்கள் தமிழ் மக்களை காட்டிக் கொடுக்கும் அரசியலை மாத்திரமே செய்து வந்தவர்கள். தொண்ணூறுகளில்; புலிகளுக்கு ஆதரவாக ஆங்கிலத்தில் அறிக்கை விடும் ஒருவராக செயற்பட்டு> அரசினால் படுகொலை செய்யப்பட்ட குமார் பொன்னம்பலத்தின் மகன் என்ற ஒரு தகைமை மட்டுமே கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை பிற்காலத்தில் தமிழர் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக ஆக்கியது. புலிகளது காலத்தில் தமிழ் மக்களது விடுதலைக்காக இவர்கள் எந்தவிதமான உருப்படியான முன்னெடுப்புக்களையும் செய்யவில்லை.

புலிகளின் நியமனத்தில் தமிழர் தேசிய கூட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இடம் பெற்ற கஜேந்திரகுமார்> பத்மினி சிதம்பரநாதன் போன்றோர் புலிகளது நியமனம் என்பதைத் தவிர வேறு எந்த தகுதியையோ> அரசியல் முன்னெடுப்பையோ கொண்டிராதவர்கள். இப்போது இந்திய அரசின் நிர்ப்பந்தம் காரணமாக> அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆசனம் மறுக்கப்பட்ட நிலையில் இவர்கள்> கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ள இவர்கள் முன்வைக்கும் வாதங்களை நம்பும் அளவிற்கு தமிழ் மக்கள் அரசியல்ரீதியில் ஒன்றும் அப்பாவிகள் அல்லர்.

விக்கரமாபாகு கருணாரத்ன தலைமையிலான இடது முன்னணி

கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாம் நவ சமசமாஜ கட்சியைச் சேர்ந்த விக்கிரமபாகு கருணாரத்னவை ஆதரித்தோம். கடந்த காலத்தில் தமிழ் மக்களது விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து வந்தவர் என்ற ரீதியிலும்> தொடர்ந்தும் தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமையை நிபந்தனையின்றி ஆதரித்து வந்தவர் என்ற வகையிலும் இந்த ஆதரவிற்கான முடிவு எடுக்கப்பட்டது. இவர் கடந்த காலத்தில் புலிகளை நிபந்தனையின்றி ஆதரித்தது தவறு என்ற விமர்னத்தை நாம் கவனத்தில் கொண்டோம். ஆயினும் சிங்கள தேசத்தில் உள்ள முற்போக்கு சக்திகள் என்ற வகையில்> தமிழர் தரப்பில் வேறு மாற்று சக்திகள் எதுவும் தமிழ் மக்கள் மத்தியில் இல்லாத நிலையில் அதனை ஒரு பாரதூரமான தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில்> வேறு எந்த முற்போக்கு சக்திகளும் அரங்கில் இல்லாத நிலையில்> தமிழ் வலதுசாரி தலைமைக்கு முடிவு கட்டுவது> மற்றும் சிங்கள முதற்போக்கு சக்திகளுடன் நட்புறவை வளர்த்துக் கொள்ளும் நோக்குடனும் மேற்கொள்ளப்பட்ட அந்த முடிவானது சரியானது என்றே நம்புகிறோம்.

இந்த பாராளுமன்ற தேர்தலில் நிலைமைகள் வேறுபட்டிருப்பதாக நாம் உணர்கிறோம். முற்போக்கான அமைப்பு என்ற வகையில் நவ சமசமாஜ கட்சியானது> இந்த தேர்தலில் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் முற்போக்கு> ஜனநாயக சக்திகளுடன் கூட்டுக் சேராது> சிவாஜிலிங்கம்> சிறீகாந்தா ஆகியோருடன் கூட்டு சேர்ந்திருப்பது விநோதமானதாக இருக்கிறது. இவர்கள் இருவருமே> தமிழ் சமூகத்தின் மிகவும் பிற்போக்கான கூறுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்கள். இவர்கள் முன்னெடுக்கும் அரசியலானது கோமாளித்தனமானது. தென்னிலங்கையைச் சேர்ந்த ஒரு முற்போக்கான கட்சி என்ற வகையிலும்> தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமையை நிபந்தனையின்றி ஏற்றுக் கொள்பவர்கள் என்ற வகையிலும் இவர்கள் தமிழ் மக்களின் நட்பு சக்திகள் என்றே நாம் கருதுகிறோம். ஆனால் இவர்கள் தமிழ் பிற்போக்கு வலதுசாரிகளுடன் எற்படுத்திக் கொண்ட தேர்தல் கூட்டானது இவர்கள் தமிழ் மக்களது முற்போக்கு> ஜனநாயக சக்திகளின் ஆதரவை பெற்றுக் கொடுப்பதில் தடையாக அமைந்து விட்டதாகவே நாம் கருதுகிறோம்.

கழகம் மற்றும் ஈபிஆர்எல்எப் (நாபா) பிரிவு

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்தாவுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள்> இப்போது அந்த கூட்டுக்கு வெளியில் நிற்கிறார்கள். அதற்கான விளக்கங்களை முன்வைக்கவில்லை. 1983 யூலை கலவரத்தின் பின்பு தன்னியல்பாக தோன்றிய பல்வேறு குழுக்களும் அவற்றின் வரலாற்றுக் காலத்தையும் கடந்து> திட்டவட்டமான அரசியல் செயற்பாடுகள் எதுவும் அற்ற விதத்தில் வெறுமனே செயற்கையாக ஆதிக்க சக்திகளால் உயிர்வாழ வைக்கப்படுகின்றன. பல சந்தர்ப்பங்களில் தனிநபர்களது பிழைப்பு மற்றும் ஆசனத்திற்கான கனவுகளே இந்த அமைப்புக்கள் உயிர்வாழ்வதற்கான காரணங்களாக அமைகின்றன.

இப்படிப்பட்ட சில தனிநபர்களது பிழைப்பிற்காக> ஒரு தொகையான இளைஞர்கள் பலியிடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அத்தோடு பல்வேறு சமூக விரோத நடவடிக்கைகளிலும் இதன் அங்கத்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது கடந்த கால அடாவடித்தனங்கள்> மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் இன்றைய பாத்திரம் போன்றவற்றை கருத்திற் கொள்ளும் போது> இப்படிப்பட்ட அமைப்புக்களை கலைத்துவிடுவதே தமிழ் மக்களது அரசியல் எதிர்காலத்திற்கு நல்லது. இது இவர்களுக்கு மாத்திரம் அன்றி> அந்நிய சக்திகளது தயவில் செயற்கையாக இயக்கப்படும் இன்னும் பல உதிரிக் குழுக்களுக்கும் பொருந்தி வரக்கூடியது என்றே கருதுகிறோம்.

சிறுபான்மைத் தமிழர் மகாசபை

ஒடுக்கப்பட்ட மக்கள் தமக்குள் அமைப்பாவதும்> அதன் அடிப்படையில் தமது அரசியலை முன்னெடுப்பதும் சரியானதே. ஆதலால் தாழ்த்தப்பட்ட மக்கள் தனியாக தேர்தலில் நிற்பது என்பதுடன் எமக்கு கொள்கையளவில் முரண்பாடு கிடையாது. ஆனால் இந்த இடைக்காலத்தில் பல விடயங்கள் நடந்து முடிந்துள்ளன. தலித் முன்னணி என்ற அமைப்பின் தோற்றமும்> அவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை ஒட்டு மொத்தத்தில் தமிழ் தேசியத்தை மறுதலிக்கும் வகையில் முன்வைப்பதும்> இந்த அமைப்பின் நோக்கம் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. அத்தோடு இந்த அமைப்பானது அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்படும் குழுக்களுடன் கொண்டுள்ள நெருக்கமான உறவுகளும் சந்தேகத்திற்கு உரியனவாக உள்ளன. அத்தோடு அரசாங்கம் மற்றும் தன்னார்வ குழுக்களது பணங்கள் கைமாறப்படுவதான குற்றச்சாட்டுக்களை எம்மால் நிரூபிக்க முடியாவிட்டாலும்> அது அவர்கள் மீது ஒரு கறையாக படிவதை தவிர்க்க முடியாதுள்ளது. நாடளாவிய ரீதியில்> தமது எதிரணிகளை பலவீனப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தில் உள்ளவர்கள் பெருந்தொகையான பணத்தை விசியெறிந்து பல்வேறு குழுக்களை செயற்கையாக உருவாக்கி தேர்தலில் கலந்து கொள்ளச் செய்து தமது எதிரணிகளது வாக்குகளை சிதறடிக்க முனைவதை காண்கிறோம். அது இவர்கள் விடயத்திலும் நடப்பதாக ஒரு சந்தேகம் நிலவுவதை நாம் மறுத்துரைக்க முடியவில்லை.

கடந்த காலத்தில் சிங்கள அரசானது தமிழ் தேசியத்தினுள் உள்ள அக முரண்பாடுகளை கிளறிவிட்டு அதில் குளிர்காய்ந்ததை நாம் அறிவோம். தமிழ் தேசிய இயக்கத்தினுள் யாழ்மையவாதம்> சாதியம்> வர்க்கம்> ஆணாதிக்கம் போன்ற முரண்பாடுகளும்> ஏனைய ஒடுக்கப்பட்ட தேசங்கள் – முஸ்லிம் மலைய மக்கள் – தொடர்பான தப்பெண்ணங்களும் நிலவுவது உண்மையே. இவை ஒரு தேசத்தினுள் உள்ள அகமுரண்பாடுகள் என்ற வகையில் தேசத்தினுள்ளும்> ஏனைய ஒடுக்கப்பட்ட தேசங்களுடனான சமத்துவம் பற்றிய விடயமாக அந்த சகோதர தேசங்களுடன் அரசியல்ரீதியாக பேசியும் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சனைகளாகும். ஆனால்> எதிரகளோ இந்த முரண்பாடுகளை மிகவும் கூர்மையடையச் செய்து> தமிழர் தேசத்தை அதன் கூறுகளாக சிதறடிக்கவும்> பின்பு அந்த கூறுகளை ஒன்றோடொன்று மோதவிட்டு குளிர்காயவும் முயல்கின்றார்கள். அந்த நோக்கில் பயன்பட்டவர்களே இ;ந்த கருணா- பிள்ளையான கோஷ்டியும்> தலித் முன்னணியாகும். தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் ஒரு தீர்க்கமான பாத்திரத்தை வகிக்காத தனிநபர்கள் அடையாள அரசியலை முன்வைப்பதும்> தன்னார்வ குழுக்களது ஆதரவில் செயற்படுவதும் இப்போதும் நடந்து வருகிறது.

ஒடுக்கப்பட்ட மக்கள் தம்மை அமைப்பாவதும்> தாம் அன்றாடம் முகம் கொடுக்கும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராட முன்வருவதும் வரவேற்கத்தக்கதே. ஆனால் இந்த முயற்சியானது> இந்தியாவில் நடைபெறுவது போல> வெறுமனே சாதிச்சங்கங்களை தோற்றுவித்து ஒடுக்கப்பட்ட மக்களை வெறுமனே வாக்குவங்கிகளாக மாற்றி> அந்த ஒடுக்கப்பட்ட மக்களது போராட்ட உணர்வுகளை திசை திருப்புவதில் எமக்கு உடன்பாடு கிடையாது. அத்துடன் இந்த அக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் என்ற பெயரில்> வெளிப்படையாகவே எதிரியின் நடவடிக்கைகளுடன் கூட்டுச் சேர முனைவது தவறான அரசியல் என்றே நாம் கருதுகிறோம். ஆதலால் நாம் சிறுபான்மைத் தமிழர் மகாசபையை நிராகரிக்குமாறு கோருகிறோம். ஆனால் எமது ஆய்வுரைகளுக்கு மாறாக யதார்த்த நிலைமைகள் இருப்பதாக காணும் எவருமே தமது சுயமான முடிவுகளை எடுப்பதை நாம் ஊக்குவிக்கிறோம்.

புதிய ஜனநாயக கட்சி

இந்த தேர்தல் களத்தில் நிற்கும் கட்சிகளுள் முற்போக்கு கொள்கைகளுடனும்> சந்தர்ப்பவாத கூட்டுக்கள் இல்லாமலும்> தமது கொள்கை நிலைப்பாடுகளை மாத்திரம் முன்வைத்து தேர்தலில் நிற்கும் இவர்கள் கவனிக்கப்பட வேண்டிய சக்திகளாவர். ஒரு மரபார்ந்த இடதுசாரி அரசியல் கட்சி என்ற வகையில் இவர்களது கடந்த கால அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பாகவும்> இப்போது முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாகவும் எமக்கு விமர்சனங்கள் இருக்கின்றன. ஆயினும் ஒரு விரிவான ஜனநாயக கூட்டமைப்பு என்ற வகையில் இவர்களுடன் இணைந்து செயற்படவும்> தொடர்ச்சியாக உரையாடல்களை நடத்தவும் இந்த குறைபாடுகள் பெரிய தடையாக அமைந்துவிடாது என்று நம்புகிறோம். ஆதலால் நாம் சில கருத்து வேறுபாடுகளுடன்தான் என்றாலும் புதிய ஜனநாயக கட்சிக்கு முழுமையாக ஆதரவு வழங்கலாம் என்று கருதுகிறோம்.

மேலே கூறப்பட்ட நிலைப்பாடுகள் எமது அமைப்பின் கருத்துக்கள் என்ற வகையிலேயே முன்வைக்கப்படுகின்றன. இவற்றை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் உங்களது சொந்த அனுபவங்கள்> பரிசீலனைகளையும் வைத்து இறுதி முடிவை நீங்களே முன்வையுங்கள்.

சில குறிப்பான பிரச்சனைகள் குறித்து…

நாம் தேர்தல் தொடர்பான கொள்கை அடிப்படையிலான நிலைப்பாடு ஒன்றை முன்வைப்பதன் அவசியத்தை ஏற்றுக் கொள்ளும் அதே வேளை> எமது தேசம் முகம் கொடுக்கும் குறிப்பான பிரச்சனைகள் குறித்து பாராமுகமாக இருக்க முடியாது என்றே கருதுகிறோம்.

அந்த வகையில் திருகோணமலை> மட்டக்களப்பு> அம்பாறை போன்ற எல்லைப்புற மாவட்டங்களின் தேர்தல் களநிலைமைகள் குறிப்பான கவனத்தை வேண்டி நிற்கின்றனவாகும். இந்த மாவட்டங்களில் கடந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சிங்கள குடியேற்றங்களும்> நிர்வாக மற்றும் தேர்தல் அலகுகளில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் காரணமாகவும் தமிழ் மக்கள் தமது பாரம்பரிய பிரதேசத்திலேயே தமது பிரதிநிதித்துவத்தை இழக்கும் ஆபத்தை எதிர் கொள்வதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்த மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்படும் தமிழ் பிரதிநிதிகள் அதிகம் சாதிப்பார்களோ இல்லையோ> குறைந்த பட்சம் ஒரு சிங்கள பிரதிநிதியை வரவிடுவதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களையாவது தவிர்ப்பதில்> தடுத்து நிறுத்துவதில் ஓரளவுக்காவது பயன்படும் என்பது உண்மையே. இப்படியாக மக்கள் மத்தியில் உள்ள பய உணர்வுகளை சில அமைப்புக்கள் பயன்படுத்தி தமது அரசியலை நடத்த முனைவதும் நாம் அறியாதது அல்ல. ஆயினும் இப்போது இருக்கும் நெருக்கடியான நிலைமைகளில் இந்த சர்ச்சைகளில் அதிக சக்தியை விரயம் செய்யாமல் இந்த பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் தமது வாக்குரிமையை புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். இதனால் நாம் முன்னர் குறிப்பிட்ட தவறான செயற்பாடுகளை உடைய கட்சிக்கு இந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் வாக்களிக்க நேர்வது தவிர்க்க முடியாது போகலாம். ஆனால் அப்படிப்பட்ட நிலைமைகளில் கூட> இந்த கட்சிகளின் வேட்பாளர் பட்டியலில் உள்ள தீவிரமாக செயற்படும் சக்திகளை இனம் கண்டு> அவர்களை முன்னுக்கு கொண்டுவர உதவுவதாக உங்களது வாக்குகள் அமையலாம்.

தமிழ் மக்களே! பிற்போக்கு அரசியலுக்கு முடிவு கட்டுவோம்!!
முற்போக்கு ஜனநாயக சக்திகளை இனம் கண்டு ஆதரிப்போம்!!

18 இயக்கம் முடிவல்ல புதிய தொடக்கம்.

விகிதாசாரத் தேர்தல் முறையும், சிறுபான்மை சமூகத்தவர்களும் -04 : சிறுபான்மையினரின் அங்கத்துவம் அதிகரிப்பதனால் மாத்திரம் உரிமைகளைப் பெற்றுவிட முடியாது. உணர்வுபூர்வமான பிரதிநிதித்துவம் தேவை. – புன்னியாமீன்

election_cast_ballots.jpgவிகிதாசார பிரதிநிதித்துவ முறையின் போனஸ் ஆசனமுறை, வெட்டுப்புள்ளி வாக்குகள் பெறாத கட்சிகளை போட்டியிலிருந்து நீக்குதல், தொடர்புடைய வாக்குகளைக் கணிப்பீடு செய்தல்,  முடிவான எண்ணைக் கணிப்பீடு செய்தல், முடிவான எண்ணுக்கமைய ஆசனங்களைப் பகிர்தல், பிரச்சினைக்குரிய ஆசனங்கள் இருப்பின் மிகப் பெரும் பகுதி மிகுதி முறைக்கமைய ஆசனங்களை ஒதுக்கீடு செய்தல் ஆகிய தலைப்புக்களை கடந்தவாரம் நோக்கினோம்.

மேற்படி ஆறு படிமுறைக்கு அமையவே இலங்கையிலுள்ள 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் 196 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவர்.
தேசியபட்டியல் மூலம் மீதான பிரதிநிதிகளைத் தெரிவு செய்தல்;
இலங்கைப் பாராளுமன்றத்தின் மொத்தப் பிரதிநிதிகள் எண்ணிக்கை 225 ஆகும்.  இதில் 196 பிரதிநிதிகள் 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்தும் மீதான 29 பிரதிநிதிகள் தேசிய பட்டியல் மூலமாகவும் தெரிவு செய்யப்படுவர்.

தேசிய பட்டியல் என்றால் என்ன?

விகிதாசார தேர்தல் முறையின் கீழ் பாராளுமன்றப் பொதுத் தேர்தலொன்றுக்கு நியமனப் பத்திரம் கோரப்படும்போது 29 பெயர்களைக் கொண்ட பட்டியலொன்றினையும் தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையாளர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளையும், சுயேட்சைக் குழுக்களையும் கேட்டுக் கொள்வார். இப்பட்டியல் தரப்படுத்தப்பட்டதாக அமைதல் வேண்டும்.

ஒரு அரசியல் கட்சி எத்தனை தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டாலும்கூட 29 பெயர்களைக் கொண்ட ஒரு பட்டியலை மாத்திரமே தாக்கல் செய்ய முடியும். இப்பட்டியலே தேசியப்பட்டியல் எனப்படுகிறது. சுயேட்சைக்குழுக்கள் (விரும்பின்) இப் பட்டியலை தாக்கல் செய்யலாம்.

பொதுத் தேர்தலின் முடிவில் போட்டியிட்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும்,  தனித்தனி சுயேட்சைக் குழுக்களும் தேசிய ரீதியில் பெற்றுக்கொண்ட வாக்கு விகிதாசாரத்துக்கமைய தேசிய பட்டியல் பிரதிநிதித்துவம் தீர்மானிக்கப்படும்.

எமது தெளிவிற்காக 2000 ஆண்டு பாராளுமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகளை உதாரணமாகக் கொண்டு இதனை ஆராய்வோம்.
2000ம் ஆண்டு பொதுத் தேர்தலில்:

தெரிவாக வேண்டிய அங்கத்தவர் எண்ணிக்கை : 225
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்    : 12,071,062
அளிக்கப்பட்ட வாக்குகள்    : 9,128,832 (75.62%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்    : 481,155
செல்லுபடியான வாக்குகள்    : 8,647,668

மேற்படி பொதுத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட 29 அரசியல் கட்சிகளும் 99 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட்டன. இவற்றுள் அகில இலங்கை ரீதியில் ஒரு இலட்சத்துக்கு (1,00000) அதிகமான வாக்குகளைப் பெற்ற கட்சிகளை நோக்குவோம்.

பொதுசன ஐக்கிய முன்னணி  3,900,901 (45.10%)
ஐக்கிய தேசிய கட்சி   3,477,770 (40.21%)
மக்கள் விடுதலை முன்னணி  518,774 (5.99%)
தேசிய ஐக்கிய முன்னணி  197,983 (2.28 %)
சிஹல உறுமய   127,863 (1.47 %)
தமிழர் விடுதலைக் கூட்டணி  106,033  (1.22 %)

ஏனையவை அனைத்தும் 1,00000க்கும் குறைவாகவே வாக்குகளைப் பெற்றன.

தேசிய பட்டிலுக்கான குறைந்த பட்ச வாக்குகளைக் கணித்தல்

தேசிய ரீதியில் செல்லுபடியான மொத்த வாக்குகளை 29ஆல் வகுக்கும்போது தேசியபட்டியலுக்கான குறைந்தபட்ச வாக்குகளைக் கண்டுகொள்ள முடியும்.

2000ம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தேசிய பட்டியலுக்கான குறைந்தபட்ச வாக்கு = 8,647,668 / 29
= 298,195
ஆகும்.

இந்த வாக்கினை ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக்குழு பெற்றிருப்பின் தேசிய பட்டியல் பிரதிநிதியொருவரைப் பெற உரித்தாகின்றது.

இனி கட்சிகளுக்கு தேசிய பட்டியலை ஒதுக்கீடு செய்யும்போது அகில இலங்கை ரீதியில் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள் தேசியப் பட்டியலுக்குரிய குறைந்தபட்ச வாக்கினால் வகுக்கப்படும். முதலில் முழுமையான எண்ணுக்கமைய ஆசனம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மேலும் ஆசனம் தேவையெனின் மிகப்பெரும் மிகுதி முறைக்கமைய பகிரப்படும்.

பொதுசன ஐக்கிய முன்னணி பெற்ற மொத்த வாக்குகள் 3,900,901 ஆகும். இதனை 298,195 ஆல் வகுக்கும்போது ‘13’ உம் மிகுதியாக 24366 வாக்குகளும் வரும். எனவே முழுமையான எண்ணுக்கமைய பொதுசன ஐக்கிய முன்னணி 13 தேசியப்பட்டியல் உறுப்பினர்களைப் பெற உரித்துடையது.

அடுத்து இரண்டாவது அதிகப்படியுமான வாக்குகளைப் பெற்ற ஐ.தே.க. 11 தேசியப்பட்டியல் உறுப்பினர்களைப் பெற உரித்துடையது.
மூன்றாவது இடத்தைப் பெற்ற கட்சி மக்கள் விடுதலை முன்னணியாகும். இக்கட்சி பெற்ற மொத்த வாக்குகளான 518,774 ஐ 298,195 ஆல் வாக்கினால் வகுக்கும்போது ‘1’ உம் மிகுதியாக 220579 வாக்குகளும் வரும். எனவே முழுமையான எண்ணுக்கமைய மக்கள் விடுதலை முன்னணி ஒரு தேசியல்பட்டியல் உறுப்பிரைப் பெற்றுக்கொள்ள உரித்துடையது.

2000ம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் மேற்படி 3 கட்சிகளையும் தவிர வேறு எந்தவிதமான அரசியல் கட்சிகளோ அல்லது சுயேட்சைக்குழுக்களோ தேசியபட்டிலுக்குரிய குறைந்த பட்ச வாக்கினைவிட அதிகமாகப் பெறவில்லை.

ஆகவே இங்கும் மிகப் பெரும் மிகுதி முறையைப் பயன்படுத்த வேண்டும்.

முழுமையான எண்களுக்கமைய பொ.ஐ.மு. 13 உறுப்பினர்களையும்,  ஐ.தே.க. 11 உறுப்பினர்களையும், ம.வி.மு 1 உறுப்பினர்களையுமாக மொத்தம் 25 உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டன. மேலும் 4 தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தெரிவாக்கப்படல் வேண்டும். எனவே மிகப்பெரும் மிகுதிக்கமைய பின்வரும் அந்த 4 உறுப்பினர்களும் தீர்மானிக்கப்படுவர்.

பொ.ஐ.மு. மீதி – 24,366
ஐ.தே.க.  – 197,625
ம.வி.மு.   – 220,579
தே.ஐ.மு. பெற்ற வாக்குகள்- 197,983
சிஹல உருமய – 127,863

இதன்படி ஆகக் கூடுதலான மிகுதியைப் பெற்றுள்ள ம.வி.முன்னணி ஒரு பிரதிநிதியையும்,  2வது மிகுதியைப் பெற்றுள்ள தே.ஐ.முன்னணி ஒரு பிரதிநிதியையும்,  3 வது மிகுதியைப் பெற்றுள்ள ஐ.தே.கட்சி ஒரு பிரதிநிதியையும், 4 வது மிகுதியைப் பெற்றுள்ள சிஹல உருமய ஒரு பிரதிநிதியையும் பெற்றுக் கொள்ளும்.

பொ.ஐ.மு முழுமையான எண்ணுக்கமைய 13 தேசியப்பட்டியல் பிரதிநிதிகளைப் பெற்றுக் கொள்ளும். மிகப்பெரும் மிகுதிக்கமைய பிரதிநிதிகளைப் பெற முடியாது. ஆகவே பொ.ஐ.மு மொத்தமாகப் பெற்றுக்கொண்ட தேசியப்பட்டியல் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 13 ஆகும்.       

ஐ.தே.க முழுமையான எண்ணுக்கமைய 11 தேசியப்பட்டியல் பிரதிநிதிகளையும் மி கப்பெரும் மிகுதிக்கமைய 1 பிரதிநிதியையும் பெற்றுக் கொள்ளும். ஆகவே ஐ.தே.க மொத்தமாகப் பெற்றுக்கொண்ட தேசியப்பட்டியல் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 11+1 = 12 ஆகும்.

ம.வி.மு  முழுமையான எண்ணுக்கமைய 1 தேசியப்பட்டியல் பிரதிநிதியையும் மி கப்பெரும் மிகுதிக்கமைய 1 பிரதிநிதியையும் பெற்றுக் கொள்ளும். ஆகவே ம.வி.மு மொத்தமாகப் பெற்றுக்கொண்ட தேசியப்பட்டியல் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 1+1 = 2 ஆகும்.

தே.ஐ.மு,  சிஹல உருமய ஆகியன மிகப் பெரும் மிகுதி முறைக்கமைய ஒவ்வொரு ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும். இந்த அடிப்படையில் தேசியப்பட்டியல் 29 பிரதிநிதிகளும் பகிரப்படுவர்.

தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவத்திற்கு வெட்டுப்புள்ளி வாக்குகள் 5% பாதிப்பைச் செலுத்த முடியாது.

2000ம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தல் முடிவினூடாக நோக்குமிடத்து சிறிய கட்சிகளான ம.வி.முன்னணி 2 உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளவும்,  தே.ஐ.மு. 1 உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளவும்,  மாவட்ட ரீதியில் போட்டியிட்டு அனைத்து மாவட்டங்களிலும் தோல்வியடைந்த சிஹல உருமய ஒரு உறுப்பினரையாவது பெற்றுக் கொள்ளவும் தேசியப்பட்டியல் துணை புரிந்துள்ளது. அதே நேரததில் பிரதான கட்சிகளும்,  தேசியப்பட்டியல் மூலமாக சிறுபான்மையினருக்கு இடம் வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாககப்படுகின்றது.

2000 ஆம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத் தேர்தலை அடுத்து பொது ஜன ஐக்கிய முன்னணியின் தேசியப் பட்டியல் மூலமாக லக்ஸ்மன் கதிர்காமர்,  அலவி மௌலானா,  யூ.எல்.எம் ஹனீபா,  மாரிமுத்து, ரிஸ்வி சின்னலெப்பை,  ஆகிய சிறுபான்மைப் பிரதிநிதிகளும்,  ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் மூலமாக ஏ.எச்.எம் அஸ்வர்,  எம்.எஸ்.செல்லச்சாமி,  அப்துல் மஜீட், பி.பி. தேவராஜ்,  கனகராஜா போன்ற சிறுபான்மைப் பிரதிநிதிகளும்,  மக்கள் விடுதலை முன்னணி மூலமாக அன்ஜாத் உம்மா (இலங்கையிலே முதலாவது முஸ்லிம் பெண் பாராளுமன்றப் பிரதிநிதி) ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டமை தேசியப்பட்டியல் சிறுபான்மையினருக்கு வாய்ப்பானதொன்று நிராகரித்து விட முடியாதுள்ளது.

குறிப்பாக விகிதாசார தேர்தல் முறையின் கீழ் தனியொரு கட்சிக்கு தனது பெரும்பான்மையினை பெற்றுக் கொள்வது கடினமான நிலை காணப்பட்டமையினால் சிறிய கட்சிகள் சிறுபான்மை கட்சிகளுடன் இணைந்தே பிரதான கட்சிகள் அரசாங்கத்தை அமையக்கக்கூடிய நிலை ஏற்பட்டன. இதனால் அக்கட்சிகளை திருப்திப்படுத்திக் கொள்ள தேசியபட்டியலினூடாக பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு பிரதான கட்சிகள் தள்ளப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட நிலையின் கீழ் தேசியபட்டியலினூடாக சில சிறுபான்மைத்துவம் இடம்பெற்றாலும்கூட, அப் பிரதிநிதித்துவங்கள் தமது இனத்துக்காக அல்லது இனத்தின் உரிமைக்காக எத்தகைய பங்களிப்பினை ஆற்றியன என்பது கேள்விக்குறியே.

குறிப்பாக இலங்கையில் காணப்படக்கூடிய விகிதாசார முறைக்கமைய பாராளுமன்றத்தில் சிறுபான்மை அங்கத்துவம் அதிகரித்துக் காணப்பட்டது என்பது ஏதோ உண்மைதான். ஆனால்,  சிறுபான்மையினரின் உரிமையைப் பெற்றுக்கொள்ள பாராளுமன்றத்தில் அங்கத்துவர் எண்ணிக்கையால் மாத்திரம் உறுதிப்படுத்தப்படுவதில்லை என்பதை கடந்த கால அனுபவங்களினூடாக எம்மால் காணமுடிந்தது. எனவே, பாராளுமன்றத்தில் சிறுபான்மை அங்கத்தவர் என்பதை விட, உணர்வுபூர்வமான செயல்திறன்மிக்க அங்கத்துவமே தேவைப்படுகின்றது.

கட்சிகளால் தேர்தல் காலத்தில் தாக்கல் செய்யப்படக்கூடிய பட்டியலுக்கமையவே தேர்தல் ஆணையாளரினால் தேசியபட்டியல் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டாலும் கூட, இலங்கையில் தேர்தல் சட்ட மூலத்தின் கீழ் கட்சிகளின் செயலாளரினால் சிபாரிசு பண்ணக்கூடிய பிரதிநிதியையும் தேர்தல் ஆணையாளரினால் தேசியபட்டியலினூடாக நியமனம் வழங்கலாம். எனவே,  பட்டியல் முன்வைக்கப்பட்ட போதிலும்கூட, பட்டியலில் உள்ளவர்கள் மாத்திரமே பிரதிநிதித்துவத்தைப் பெறுவார்கள் என்பதை உறுதியாகக் கூறிவிட முடியாது.

(முற்றும்)

ஏப்ரல் தேர்தலில் தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் 25 வீதத்தால் வீழ்ச்சி அடையலாம்!!! : த ஜெயபாலன்

gajendrakumar_ponnampalamSambanthan_R_TNAஏப்ரல் 8ல் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கில் தெரிவு செய்யப்படும் தமிழ் பிரதிநிதிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ் வாக்குகள் பெருமளவில் சிதறிச் செல்கின்ற நிலையில் உள்ளதால்  2010 பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் 25 வீதம் வரை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 2004 தேர்தலில் வடக்கு கிழக்கில் இருந்து 23 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் சென்றிருந்தனர். இவர்களில் 22 பேர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும் ஒருவர் ஈபிடிபி யின் சார்பிலும் தெரிவு செய்யப்பட்டு இருந்தார். இத்தேர்தலில் வடக்கு கிழக்கில் தெரிவு செய்யப்படக் கூடிய தமிழ் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 15 ஆகக் குறையலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் ஆயுத முனையில் இடம்பெற்ற போட்டி பெரும்பாலும் இருமுனையினதாக அமைந்ததால் தமிழ் வாக்குகள் சிதறுண்ணாமல் இருந்தது. அதனால் ஜனநாயகமற்ற அரசியல் பலம்வலுவானதாக அமைந்தது. ஆனால் இம்முறை தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் (ஜீனியர் விகடனில் மட்டுமே வாழ்கின்றனர்.) ஆயுத பலத்தினால் அவர்கள் கட்டியிருந்த ஒற்றுமை சிதறி அவர்களுடைய அரசியல் ஆதரவுத் தளம் ஈடாடியுள்ளது. அதனால் தமிழ் வாக்குகள் மிகவும் சிதறிப் போயுள்ளது.

2004 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலில் யாழ். மாவட்டத்தின் 9 ஆசனங்களுள் 9 ஆசனங்களும், வன்னி மாவட்டத்தில் 6 ஆசனங்களுள் 5 ஆசனங்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 ஆசனங்களுள் 4 ஆசனங்களும், திருகோணமலை மாவட்டத்தில் 4 ஆசனங்களுள் 2 ஆசனங்களும், அம்பாறை மாவட்டத்தில் 7 ஆசனங்களுள் ஒரு ஆசனமும் தமிழ் பிரதிநிதிகளுக்கு அதாவது ஈபிடிபி கட்சிக்கு ஒரு ஆசனமும் ஏனையவை விடுதலைப் புலிகளின் அரசியல் அமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் கிடைத்தது. வடக்கு, கிழக்குப் பிரதேசத்துக்குரிய 31 ஆசனங்களுள் 23 ஆசனங்கள் தமிழ் பிரதிநிதிகளுக்குக் கிடைத்தது. இம்முறை 15 ஆசனங்களாகக் குறைந்துவிடலாம் என்ற அச்சம் தற்போது ஏற்பட்டு உள்ளது.

குறிப்பாக மே 18க்குப் பின்னான அரசியலில் ஆர் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை தங்கள் கட்சியில் இருந்து ஓரம்கட்டியது. அதனால் அவர்களில் கிசோர் சிவநாதன், கனகரத்தினம், க தங்கேஸ்வரி ஆகியோர் ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணிக்குச் சென்றனர். ந சிறிகாந்தா, எம்கே சிவாஜிலிங்கம் ஆகிய இருவரும் ஜனாதிபதித் தேர்தலின் போதே இடதுசாரி முண்ணணியுடன் இணைந்து கொண்டனர். ஏனையவர்கள் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியில் இணைந்து கொண்டனர். இவர்கள் அகில இலங்கை தமிழ் கொங்கிரஸ் கட்சியின் பட்டியலில் போட்டியிடுகின்றனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் இந்த முன்னணியின் குறிப்பான நபர்கள். குறிப்பாக வன்னி யுத்தத்தின் போது வெளிநாடுகளில் தங்கி இருந்து வெளிநாட்டில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இரண்டறக் கலந்த இவர்களுக்கு வடக்கு கிழக்கில் ஆதரவுத் தளம் இருக்கின்றதோ இல்லையோ புலம்பெயர்ந்த நாடுகளில் பலமான ஆதரவுத் தளம் உள்ளது.

போட்டியிடுகின்ற கட்சிகள்:

தமிழரசுக் கட்சி (தமிழ் தேசியக் கூட்டமைப்பு), அகில இலங்கை தமிழ் கொங்கிரஸ் (தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி), தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், புளொட், ஈழவர் ஜனநாயகக் கட்சி, இடதுசாரி முன்னணி, என தமிழர் தரப்பு கட்சிகளும் அத்துடன் சிங்கள கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி உட்பட சிங்கள கட்சிகளிலும் பல தமிழர்கள் போட்டியிடுகின்றனர். சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சியும் போட்டியிடுகிறது.

தேர்தல் களம்:

யாழ் மாவட்டத்தில் 9 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 324 வேட்பாளர்கள், 15 அரசியல் கட்சிகளிலும்; 12 சுயேச்சைக் குழுக்களிலும் போட்டியிடுகின்றனர். 250 000 குறைவானவர்களே யாழ் மாவட்டத்தில் வாக்களிக்க கூடியவர்களாக உள்ளனர்.

வன்னி மாவட்டத்தில் 6 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 253 வேட்பாளர்கள் 16 அரசியல் கட்சிகளிலும் 12 சுயேச்சைக் குழுக்களிலும் போட்டியிடுகின்றனர். வன்னி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 2 66 976.

திருகோணமலை, மூதூர், சேருவல தொகுதிகளை உள்ளடக்கிய திருகோணமலை மாவட்டத்தில் 4 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 217 வேட்பாளர்கள்  17 அரசியல் கட்சிகளிலும், 14 சுயேச்சைக் குழுக்களிலும் போட்டியிடுகின்றனர். 241,133 வாக்காளர்கள் அங்கு பதிவு செய்யப்பட்டு உள்ளனர்.

கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு தொகுதிகளை உள்ளடக்கிய மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 360 வேட்பாளர்கள்  17 அரசியல் கட்சிகளிலும் 28 சுயேச்சைக் குழுக்களிலும் போட்டியிடுகின்றனர். மட்டக்களப்பு  மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 333 644 ஆகும். 

அம்பாறை மாவட்டத்தில் 7 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 660 வேட்பாளர்கள் 18 அரசியல் கட்சிகளிலும் 48 சுயேச்சைக் குழுக்களிலும் போட்டியிடுகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 420 835.

இலங்கையிலேயே அதிகூடுதலான பிரிவுகள் போட்டியிடுகின்ற மாவட்டமாக அம்பாறையும் அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பும் உள்ளது.

யாழ் மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தெரிவு செய்யப்படும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. யாழ் மாவட்டத்தில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் முஸ்லீம் மக்கள் துரத்தியடிக்கப்பட்டதால் இழக்கப்பட்ட அவர்களுடைய அரசியல் பிரதிநிதித்துவம் இத்தடவை அவர்களுக்கு கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

போட்டி:

வடக்கு கிழக்கில் இதுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இருந்த ஏகபிரதிநித்ததுவம் இத்தேர்தலில் அடிபட்டுப் போய்விடும் நிலையே உள்ளது. இருந்தாலும் வடக்கு கிழக்கில் கூடுதலான ஆசனங்களைப் பெறும் கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு 8 முதல் 10 வரையிலான ஆசனங்களை வடக்கு கிழக்கில் தக்க வைக்கும் என எதிர்வு கூறல்கள் உள்ளது. தமிழ் தேசியத்திற்கான முன்னணி ஆர் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு பெரும் சவாலாக அமையும். தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தாங்கள் வெளியேறுவதற்கு காரணமாக இருந்த ஆர் சம்பந்தனை திருகோணமலையில் எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி தீவிரமாக உள்ளது. இதற்கு புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலி ஆதரவு ஊடகங்கள் பெரும் ஆதரவை வழங்கி உள்ளன. புலம்பெயர் விடுதலைப் புலிகளின் ஆதரவுத் தளத்தால் உருவாக்கப்பட்ட புதிய துரோகியாக ஆர் சம்பந்தன் உள்ளார்.

புலம்பெயர்ந்த தமிழர் குரலை தாயக மக்கள் செவிமடுக்கின்றார்களா என்பதும் இத்தேர்தலில் தெரிந்துவிடும்.

யார் வென்றது? மகிந்தவா? இல்லை. ஆசிய மூலதனம்: லோகன்

bull_fight
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச பெற்ற வெற்றி அவருக்குக் கிடைத்த இரண்டாவது மாபெரும்  வெற்றியாகும். இரத்தம் சிந்திய அரசியல் யுத்தத்தில் கிடைத்ததுதான் அவரின் முதலாவாது வெற்றியாகும். இது மே மாதம் 18ஆம் தேதியாகும். ஜனவரி மாதம் 29ஆம் தேதி இரத்தம் சிந்தா யுத்ததில் கிடைத்ததுதான் இரண்டாவது வெற்றியாகும். முதலாவது களத்தில் தோற்கடிக்கப்பட்டது மேற்குலக நாடுகளாலும், இந்தியா, ஜப்பான் மற்றும் மலேசியா ஆகிய ஆசிய நாடுகளாலும் பயங்கரவாதம் என நாமம் சூட்டப்பட்டு  தத்தமது நாடுகளில் தடைசெய்யப்பட்ட “புலிகள்”  இயக்கமாகும். இவ்வெற்றிக்காக மேற்குலக முகாமும், ஆசிய முலதன  முகாமும் “பயங்கரவாதத்தை” ஒழிப்பதற்காக இதய சுத்தியுடன்  ஐக்கியமானார்கள். இது ஒரு முறைசார் அமைப்பிலை. இதனால்  இவ்விரு சாரார்களுக்கும் ஒரு பொதுவான வேலைத்திட்டம்  இருக்கவில்லை, ஆனால் “புலிகளை” வெல்வது என்ற விடயத்தில் ஒரு ஒற்றுமை இருந்தது. இதற்காக போட்டி போட்டுக்கொண்டு இரு சாராரும் இலங்கை அரசுக்கு உதவி செய்தார்கள்.

“புலிகளின்” தனித்து நிற்கும் ஆற்றலை நீத்துப் போகச்செய்து அவர்களை வளர்ப்பு விலங்காக (பூனைகளாக)  மாற்றுவதுவே மேற்குலகத்தின் வேலைத்திட்டமாக இருந்தது. அது அத்துடன்  நிற்கவில்லை. மகிந்த உட்பட அனைத்து தேசியவாதிகளினதும் வீரியத்தைக் குறைத்து அனைவரையும் தாம் செல்லமுடன் வளர்க்கும் சண்டைச் சேவல்களாக்கி, அவர்களை  சண்டைபிடிக்கவிட்டு வேடிக்கை பார்ப்பதுவே அவர்களின்  நோக்கமாக இருந்தது. இதைத்தான தமது உள்ளூர் முகவர்களின்  மூலம் இவர்கள் செய்து வந்தார்கள். இதனால் தாமும் அடிக்கடி  குழம்பியதுடன் பிறரையும் குழப்பினார்கள். பெரும் சதிநாச வேலிகளிலும்  ஈடுபட்டார்கள்.  கருணாவும் சரத் பொன்சேகராவும்  இச் சதியின் குழந்தைகளே.

ஆனால் ஆசிய மூலதன முகாமோ, தமது கொள்கையில்  தெளிவாகவும் வெளிப்படையாகவும்  இருந்தது. அதனது பாதை முன்னைய முகாமினுடையதையும்விட வேறுபட்டதாக இருந்தது. எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு, எப்படி எப்படியெல்லாம் முடியுமோ அப்படி அப்படியெல்லாம் மகிந்தவின் அதிகாரத்தை  வளர்த்து விடுவதே இவர்களின் வேலைத் திட்டமாக இருந்தது. அடுத்த பக்கத்தில் பிற தேசியவாத இயக்கங்களை வேரும் வேரடி மண்ணோடும் அழிப்பதையும் நோக்கமாகக்  கொண்டிருந்தார்கள். பௌத்த சிங்களப் பேரினவாததுடன் பரிபூரண  சமரசத்தைப் பேணியும் வருகிறார்கள். இதில் ஒழிவு மறைவோ ஊசலாட்டமோ இருக்கவில்லை. 2004 இல் இருந்து இன்றுவரை  இதே கொள்கையைத்தான் பின்பற்றி வருகிறார்கள்.

ஆசிய மூலதனத்தின் பாதையே வெற்றிகண்டது.  இலங்கையை சண்டைக்கார சேவல்களின் சமர்க்களமாக மாற்றும் மேற்க்குலக மூலதனத்தின் பாதை தோல்விகண்டது.

இவ்விதமாக இரத்தம் சிந்திய அரசியலில் தோல்வி கண்ட மேற்குலக மூலதனம், “ஜனநாயகக் காவலன்” என்ற போர்வையில் “ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான விசாரணை”  என்ற பெயரில், அதிகார மமதையால் காட்டு எருதாக  வலம் வரும் மகிந்தவை மஞ்சு விரட்டுக்காக  வளர்க்கும்  காளையாக மாற்ற முற்படுகிறது. நீண்ட காலக் கடன், வரிவிலக்குச் சந்தை  ஆகிய தீவனங்கள் கொடுத்துப் பார்த்தும் காளையை  அடக்க முடியவில்லை. மகிந்தவைப்  பாதுகாக்க ஆசிய மூலதனம் உலக வங்கிக்கு வெளிப்படையாகவே சவால் விட்டது.  இதனால் அச்சம்  தவிர்த்தார் மகிந்த. தோல்வி கண்டது மேற்க்குலகம். விளைவு  ஜனாதிபதித் தேர்தல் என்ற அரசியல் களம்வரை பொறுத்திருக்க  நிர்ப்பந்திக்கப்பட்டது  மேற்குலகம்.

ஆசிய மூலதனம் இந்தத்  தேர்தல்களத்தில் நேரடியாகப் பங்களிக்கவில்லை. ஆனால் இலங்கையின் “தேசியப் பொருளாதாரத்தை” (மகிந்த சிந்தனை) கட்டி வளர்க்க நம்பகரமான  உத்தரவாதங்களை வளங்கியது.  இராணுவச் சதிகள் எதுவும் நடந்தால் அதை எதிர்கொள்ளவும் தயாராக இருந்தது. ஆனால் மேற்குலக மூலதனமோ மிக வெளிப்படையாகவே  களம் இறங்கியது. தாம்  படிப்படியாக பற்பல அடுக்குகளாக உருவாக்கி வைத்துள்ள மனிதநேய அமைப்புகள், ஜனநாயக  அமைப்புகள் ஆகிய அனைத்தையும் தேர்தல் களத்தில்  இறக்கியது.  தற்போது இப்படை அணியில் ஒருவராக உள்ள சந்திரிகா குமாரதுங்காவும் தனது முத்திரை மோதிரத்தைக் காட்டினார். சிங்களவர்கள் அல்லாதோரின் வாக்குகளைப் பெறுவதற்காக இவர்கள் அதிகப் பிரயத்தனங்கள் மேற்கொண்டார்கள். இன மோதல்களற்ற இலங்கையைப் பற்றிப் பேசினார்கள். மலையைக் குடைந்து எலியைப் பிடித்ததைப் போல் சில வெற்றிகளை பெற்றுக்கொடுத்தார்கள். இவ் வெற்றி பாராளுமன்றத் தேர்தலில் சில ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள  உதவலாம்.
 
மேற்குலகின்  இரண்டாவது  தந்திரோபாயம்; கருணாவைக் கொண்டு  பிரபாகரன் தலைமையை வீழ்த்தியது போல், மகிந்த அணியில்  ஒரு கருணாவை உருவாக்குவதாகும்; அதில் வெற்றியும்  பெற்றார்கள். ஒரு சரத் பொன்சேகர உருவாக்கப்பட்டார்.  கருணாவை பிரித்தெடுத்தது மேற்குலகமே. ஆனால் கருணாவால் பலன் அடைந்ததோ ஆசிய மூலதனமேயாகும். புலியை பூனையாக்கத்தான் மேற்குலகம்  விரும்பியது, ஆனால் கருணாவைப் பயன்படுத்தி  ஆசிய  மூலதனம் புலியை “அழித்தே?”விட்டது. (மே18 தான் மகிந்த, சரத்  பொன்சேகராவை  இனங்கண்ட  நாளாக  இருக்கலாம்.) ஆண்ட பரம்பரை மேற்குலகம் சரத் பொன்சேகவை உருவாக்குவதில் வெற்றி பெற்றாலும், அவரைப் பயன்படுத்துவதில் தோல்வி கண்டுவிட்டது. மேற்குலகின் “மனிதநேயக் காவல்”, “ஜனநாயகக் காப்பு”  மற்றும் “இனச் சமத்துவ இலங்கை”ப்  பரிவாரங்களும் அவற்றின் மிகப்படித்த அறிவாழிகளும்  நிலைதடுமாறி அவசர முடிவெடுத்து விட்டாரகள். 

2002இல் அதிகாரத்துக்கு  வருவதற்காகவும், அதிகாரத்திற்கு  வந்ததன்  பின்பும், புலிகளுக்கு எதிரான போர் காலம்புராகவும்  மகிந்த மற்றும் சரத் ஆகிய இவ்விருவராலும் முன்வைக்கப்பட்ட  “இலங்கைத்  தேசியவாதம்” மூன்று  வகையான  அரசியல்  உள்ளடக்கங்களைக் கொண்டதாக இருந்தது.
1) பயங்கரவாததிற்கும் பிரிவினை வாதத்திற்கும் எதிரானது.  இது,அனைத்துச்  சிங்கள  மக்களாலும், தமிழ்பேசும் மக்களில்  கணிசமான பகுதியினராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டிருந்தது.
2) இலங்கையில் யு.என். பி யால் பின்பற்றப்பட்டு வந்த நவகாலனியல் பொருளாதாரக் கொள்கைக்கு எதிரானது. 
3) இலங்கைத் தீவின் மூலை முடுக்கெல்லாம் பௌத்த சிங்களவர்களுக்கே சொந்தமானது என்ற சிங்கள பௌத்த  பேரகங்காரவாதம். சிங்கள மேற்த்தட்டு வர்க்கமும், நடுத்தர  வர்க்கமும் இக்கொள்கையை ஆதரிக்கின்றது.  நிலப் பஞ்சம் மிகுந்த மலைநாட்டு விவசாயிகளுக்கும் இந்தக் கொள்கை  ஏற்புடையதாகவே உள்ளது.

இந்த  மூன்றினதும் சேர்வைதான் “மகிந்த சிந்தனை” யாகும். முதலாவது உள்ளடக்கத்தை நிறைவேற்றுவதில் மகிந்த, தமிழர்களில் சிறுபகுதி உட்பட அனைவராலும்  பாராட்டப்படக்கூடிய வெற்றிபெற்றுவிட்டார். மகிந்தவால் உலகளவில் அமைக்கப்பட்ட அரசியல் வியூகமும், ஆசிய மூலதனத்துடன் அவர் உருவாக்கிய் முறையான உறவுகளும்தான் அவரின் வெற்றிக்கான அடிப்படைக் காரணங்ககளாகும். இராணுவ  நடவடிக்கை பிரதான காரணம். அதுவும் யுத்தம் வரையுமான  பிரதான காரணம்.

யுத்தம் முடிவடைந்த சூட்டோடு சூடாக மகிந்த தனது  சிந்தனையின் இரண்டாவது உள்ளடக்கத்தை நிறைவேற்றும்  முயற்கியில் துரிதமாக இறங்கிவிட்டார். யுத்தத்தின் போது பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத எதிர்ப்பை உள்ளடக்கமாகக்  கொண்டிருந்த “இலங்கைத் தேசியம்” மேற்குலகின்  சட்டாம்பித்தன எதிர்ப்பை தனது உள்ளடக்கமாக்கிக் கொண்டது. இதனால் இதற்கும்  தனது மட்டற்ற அதிகாரப் பிரயோகத்திற்கும்  தடையாக இருந்த சரத் பொன்சேகராவை களட்டி விடவேண்டிய  அவசியம்  மகிந்தவுக்கு இருந்தது.

மேற்குலகின் தாசர்களாக சிங்கள மக்களால்  இனங்காணப்பட்டிருந்த யு.என்.பி, இந்தத் தேசிய அலையில்  இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, தன்னை உருமறைப்புச் செய்ய வேண்டிய நிலையில் இருந்தது. தேசிய வீரனாகப் பெயரெடுத்திருந்த சரத் பொன்சேகவை உருமறைப்புக்  கவசமாகத் தெரிவு செய்தது.  மகிந்த எண்ணியிருந்ததை இவர்கள்  சுலபமாகச் செய்து முடித்தார்கள்.  கருணாவின் உடைவால்  பிரபாகரனின் படிமம் உயர்ந்தது போல் சரத்தின்  பிரிவால் மகிந்தவின் படிமமும் பலமடங்கு உயர்ந்தது.

மக்கியவல்லி சிறந்த “இராஜதந்திரி”தான், ஆனால் சாணக்கியன்  அதைவிடத் திறமையானவன் என்பது நிரூபணமாகின்றதா? கீழைக்காற்று மேலைக்காற்றை மேவுகிறதா?  எப்படியோ  மேற்குலகின் பருப்பு இனியும் இலங்கையில் அவியாது என்பது  உண்மையாகி வருகின்றது.

அதற்கான காரணங்கள் சில:
1) இலங்கையின் அரசிய – புவிவிய காரணங்களால் மேற்க்குலகின்  இராணுவத் தலையீடு மிகக் கடினமானதொன்றானதாக இருத்தல், அத்துடன் இலங்கை அனைத்து வளமுமிக்க ஒரு சிறிய நாடாக  இருத்தல்.

2) இலங்கையின் பண்பாட்டுப் பாரம்பரியம் ஆசியவகைப்பட்டதாக  இருத்தல்.

3) இரண்டாவது IMF,  குட்டி NATO  என்று  கூறப்படும்,BRIC க்கின் உருவாக்கத்துடன் மேற்குலகிற்கு  எதிரான, உலகளாவிய பொருளாதார வல்லமையும் அரசியல் வல்லமையும் மிகத் தனியான அணியாக வளரத் தொடங்கி விட்டது. அதாவது மீண்டும் பனிப்போர்  ஆரம்பமாகிவிட்டது. இப்  பனிப்போரில் ஆசிய மூலதனம் (BRIC)  தாக்குதல்  நிலையிலும்,  அமெரிக்கப் பொருளாதரம் தற்காப்பு  நிலையிலும்  உள்ளது. சீனா, இந்தியா மற்றும் இலங்கை தமது அந்நியச் செலவாணியை  தங்கமாக சேமிக்கத் தொடங்கியுள்ளன. இது அமெரிக்க றிசேர்வ்  வங்கிக்கும் டொலர் சாம்ராஜ்யத்திற்கும் எதிரானதோர்  பொருளாதாரப் போராகும். மற்றோர் தகவல், BRIC நாடுகள் 2010 ஜனவரி  மாதத்தில் புதிய பங்கு வெளியீட்டின் மூலம் 670 கோடி டொலர் (30, 820 கோடி இந்திய ரூபாய்க்கள்) நிதி திரட்டியுள்ளன. இது உலக அளவில் புதிய  பங்குவாயிலாக திரட்டப்பட்ட நிதியில் 76 சதவீத்மாகும்.

4)ருஷ்யா மீண்டும் அமெரிக்காவை நேரடியாக  எதிர்கொள்ளும் ஒரு  இராணுவ வல்லரசாக மாறப்போவதாக அறிவித்து  அதற்கான தயாரிப்புகளிலும்  ஈடுபட ஆரம்பித்திருத்தல்.

5) அமெரிக்காவின் கீழ்நிலைச் சகபாடியாக இருந்த ஐரோப்பிய  யூனியன்(EU) மெரிக்காவின் சமநிலைப் பங்காளியாக வளர்ந்து  வரல். இதனால் மேற்குலகில் பங்காளிச் சண்டைகள்  தொலைதூரத்தில் இல்லை.

6) அமெரிக்கக் கொல்லைப்புறமாக இருந்துவந்த இலத்தீன்  அமெரிக்க நாடுகள் ஆசிய மூலதனத்தின் சமபங்காளிகள் என்ற நிலைக்கு உயர்ந்துவரல்.(ex-பிரேசில், வென்சுலா)

அமெரிக்காவின் ஏகபோகத் தலைமையின் கீழிருந்த ஒரு முனை  உலகம் பல்முனை உலகமாக துரிதகதியில் பரிமாணம்  பெற்றுவருகின்றது. US–EU–BRIC என்ற  மும்முனை ஏற்கனவே  தோன்றிவிட்டது. இனியும் பல முனைகள் தோன்றுவதற்கான  வாய்புகள் உண்டு. தோன்றவேண்டிய  அவசியமும்  உள்ளது.

ஆகவே  இலங்கை மக்கள் இனியும் மேற்குலகில்  தங்கிற்பதை தொடரக்கூடாது. தொடர்வோம் எனத் தொடர்ந்த பிரபாகரனும், சரத் பொன்சேகராவும் தோற்றுப்போயினர். தொடரமாட்டோம்  எனச் செயல்பட்ட மகிந்த வெற்றி பெற்றுவருகிறார். உள்ளங்கை  நெல்லிக்கனி போன்ற இந்த சமகால வரலாற்றை காணத் தவறுபவர்களை கபோதிகள் என்று அழைக்கலாமா? 

மேற்குலகம் என்று இங்கு சொல்லப்படுவது, மேற்குலகை ஆழும்  அதிகார அடுக்குகளையேயாகும்,  மேற்குலகின் மக்களையல்ல. தமது ஜனநாயக சிந்தனையை மிகத்துரிதமாக வளர்த்துவரும் மேற்குலக மக்கள் இலங்கை மக்களின் ஜனநாயகப்  போராட்டங்களுக்கான முதல் வரிசை நம்பகரமான  நண்பர்களாகும் .

ஆசிய மூலதனத்தின் அங்கத்துவ நாடுகளின் ஆளும் அதிகார அடுக்குகளோ ஒன்று பாக்கியில்லாமல் அனைத்துமே மகிந்த வகையறாக்கள்தான். மேற்குலக மூலதனத்தை மிகத்துரிதமாக மேவ வேண்டும் என்பதற்காக துரித கதியில் தமது சொந்த  நாட்டை தாமே மறுகாலனியாக்கம் செய்துவருகிறார்கள்.  உலகம் ஒருமுனை ஆதிக்கத்தின் கீழ் இருக்கக்கூடாது என ஜனநாயகக்  குரல்கொடுக்கும் இந்த அதிகார அடுக்குகள் தத்தமது சொந்த நாடுகளில் துரிதமான ஒருமுனைச் சேர்க்கையை  நடத்திவருகிறார்கள். விழிம்புநிலை மக்கள், விழிம்புநிலை தேசியங்கள், விழிம்புநிலை மொழிகள், விழிம்புநிலை மதங்கள், விழிம்புநிலை சாதிகள் எனப் பல்வேறுவிதமான விழிம்புநிலை  ஆக்கங்கள் துரித கதியில் நடைபெற்று வருகிறன.  இதற்காக  இந்நாடுகள் தத்தமது நாடுகளில் ஒரு உள்நாட்டு யுத்தத்தை  முறையாக நடாத்தி வருகின்றன.

நாடுகளுக்கிடையேயான யுத்தம் ஆசிய மூலதனத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதால்  உலகளாவிய யுத்தத்திற்கு எதிராக காந்தியவாதிகளாகவும்  அசோகச் சக்கரவத்திகளாகவும் நடந்துகொள்ளும் இவர்கள்  தத்தமது உள்நாடுகளில் அரச பயங்கரவாதிகளாக நடந்து கொள்கிறார்கள். ஆசிய மூலதனத்தின் வளர்ச்சி முன்றாம் உலக யுத்ததைத் தடுத்துவருகிறது என்பது உண்மை. இதற்காக உலகம் அவர்களுக்கு நன்றி சொல்லக் கடைமைப்பட்டது, அதே நேரத்தில்,  இவ் யுத்தம் மேற்குமுகாம் நாடுகள் தவிர்ந்த அனைத்து  நாடுகளிலும் உள்ளூர்மயப்படுத்தப் பட்டுவிட்டது.  ஆசிய  மூலதனதின் வள்ர்ச்சிக்காக பலிக்கிடாய்கள் ஆக்கப்பட்டவர்களின்  பட்டியலில் இலங்கையரகளும் சேர்க்கப்படுள்ளனர்.

இந் நிலமையால் இலங்கை மக்களுக்கு மாத்திரமல்ல ஆசிய மூலதனத்தின் ஆட்சியின் கீழுள்ள அனைத்து நாடுகளின்  மக்களுக்கும் தமது ஜனநாயக உரிமைகளுக்கான  போராட்டங்களுக்காக எந்த அரசையும் நம்ப முடியாத  நிலையே உள்ளது. உலக மக்களைத்தவிர நம்பகரமான நண்பர்கள்  வேறு எவருமேயில்லை.

நட்பைக் கொடுப்போம்  நட்பைப் பெறுவோம், உள்ளூரமயப்படுத்தப்பட்ட மூன்றாம் உலக  யுத்தத்தில் வெற்றி பெறுவோம்.

கிரிஜா பிரசாத் கொய்ராலா காலமானார்

kohiraala.gifநேபாள நாட்டின் முன்னாள் பிரதமரும் நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவருமான கிரிஜா பிரசாத் கொய்ராலா நேற்று காலமானார். அவருக்கு வயது 87. கடந்த சில ஆண்டுகளாக அவர் நுரையீரல் நோய் காரணமாக பாதிக்கப்பட்டார். அவர் கடந்த வாரம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 4 நாட்களுக்கு முன்பு அவர் வீடு திரும்பினார். மகள் வீட்டில் ஓய்வு பெற்று வந்த நிலையில் அவர் மரணம் அடைந் தார். தகவல் கிடைத்ததும் பெருந்திரளான மக்கள் அவரது மகள் வீட்டுக்கு திரண்டனர். பிரதமர் மாதவ் குமார் நேபாள், மந்திரிகள் ஆகியோர் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

ஐந்து தடவைகள் நேபாளத்தின் பிரதமராகப் பதவி வகித்த கிரிஜா பிரசாத் கொய்ராலா, ஆயுதப் போராட் டத்தில் ஈடுபட்டிருந்த மாவோயிஸ்டுகளை அரசியல் நீரோட்டத்திற்கு கொண்டு வருவதில் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டவர். அதேநேரம், 240 ஆண்டுகால மன்னர் ஆட்சிக்கு முடிவுகட்டி நேபாளத்தை குடியரசாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தவர்.