கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

மனித உரிமைப் போராளிக்கு சமாதானத்துக்கான நோபல்பரிசு 2010! : நோர்வே நக்கீரா

Noble_Peace_Price2010_Liu_Xiaoboவெடிபொருளான டைனமட்டையும் அதன் முக்கிய வெடிபதார்த்தமான ரிஎன்ரி யைக் கண்டுபிடித்தவரான அல்பிரெட் நோபலின் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை கண்டுபிடிப்பாளர்களையும் ஆய்வாளர்களையும் கௌரவிக்கும் நிகழ்வுதான் நோபல்பரிசு. இப்பரிசுகளின் முக்கியத்துவமும் பிரபல்யமும் கொண்டது சமாதானப்பரிசு என்பதை யாவரும் அறிந்ததே. அல்பிரெட் நோபல் என்பவர் சுவீடனைப் பூர்வீகமானவராகக் கொண்டாலும் சமாதானப்பரிசை நோர்வேயில் கொடுக்க வேண்டும் என்று பணித்துச் சென்றார். அதன் காரணமாக சமாதானத்துக்கான நோபல்பரிசு நோபலின் எழுதிச்சென்ற கோட்பாட்டுக்கு இணங்க நோர்வேயிலேயே கொடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. சுவீடன் டென்மாக் போன்ற நாடுகளின் காலணித்துவத்தின் கீழ் நோர்வே இருந்தாலும் தனது சுதந்திரத்தை, நாட்டின் விடுதலையை இரத்தம் கொலைகள் இன்றி இராஜதந்திரமுறையில் நோர்வே வென்றெடுத்தது. இதனால் சமாதானப் பரிசு வழங்குவதற்கு நோர்வேயே சரியானது என அல்பிரெட் நோபல் கருதியிருந்தார். இருப்பினும் இரண்டாம் உலகப்போரில் சுவீடன் நாசிப்படையை திறந்து விட்டு எதிர்ப்பின்றி இருந்தாலும் நோர்வே ஜேர்மன் நாசிப்படையை எதிர்த்து கெரில்லாப் போரில் ஈடுபட்டிருந்தது குறிப்பிட வேண்டியது ஒன்றாகும்.

ஒரு பேரழிவுவைத்தரும் டைனமயிட்டைக் கண்டுபிடித்தவர் சமாதானத்தை ஊக்குவிக்கும் முகமாக தனது உழைப்பின் ஒரு பகுதியை உலகிற்கு ஈர்ந்து சென்றிருக்கிறார் என்றால் இதன்பின் ஒளிந்திருக்கும் எண்ணத்தை நாம் தோண்டிப் பார்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம். கத்தியை நல்ல விடயங்களுக்கும் பாவிக்கலாம் கத்தியைக்கொண்டு கொலையும் செய்யலாம். அது கத்தியின் பிழையன்று. அதைப் பாவிப்பர்களின் பிழையே. அல்பிரட் நோபலின் நோக்கம் தனது கண்டுபிடிப்பு நல்லவற்றிற்கே பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் சமாதானத்துக்கான பரிசை தனிப்பட முக்கியப்படுத்தினார். இன்றும் மலைகளை உடைத்து வீடுகள் கட்டவும் பாதைகள் அமைக்கவும் அவரின் கண்டுபிடிப்பே உதவுகிறது என்றாலும் பேரழிவாயுதங்கள் தயாரிப்பதற்கு இந்த ரிஎன்ரி யே துணைபோகிறது. அதனால் அல்பிரெட்டின் நோக்கம் பிழை என்று கூற இயலாது. புதிய கண்டுபிடிப்பாளர்கள் வளரவேண்டும் புதிய கண்டுபிடிப்புக்கள் உலகிற்கு வரவேண்டும் என்பதே இப்பரிசுத்திட்டத்தின் நோக்கமாகும்.

Liu_Xiaobo_wife_Liu_Xia(லீயூவும் அவர் மனைவியும்)

2010 க்கான நோபல்பரிசை நோர்வே நோபல்பரிசுக்குழு 8.10.2010 மாலை அறிவித்தது. அந்த விடயம் பல நாடுகளில் பரபரப்பையும் சீனாவில் பெரிய பூகம்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இப்பரிசானது மனித உரிமைகள் ஆர்வலரும் போராளியும் எழுத்தாளரும் ஜனநாயக விரும்பியுமான சீனத்தைச் சேர்ந்த லியூ சியாபூ (Liu Xiaobo) க்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சீனாவில் மாற்றம் வேண்டும், மனிதஉரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும், அரசியல் மாற்றத்தினூடாக ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று போராடி வந்தவர்தான் லியூ. இவர் சீன அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார் என்று பலஆண்டுகளாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று அதாவது 09.10.2010 காலை இந்த நோபல்பரிசுச் செய்தியை தன் கணவனுக்குச் சொல்லச் சென்ற அவரின் மனைவியை காணவில்லை என்ற அறிவித்தல் நோர்வேக்கு கிடைத்தது. லியூவின் வழக்கறிஞருடன் தொடர்பு கொண்டபோது அவரின் வாக்கு மூலப்படி வீட்டுக்காவலில் இருந்த லியூவின் மனைவியை சீனாதான் மறைத்து வைத்துள்ளது என்று அறியமுடிகிறது. லியூவுக்கு நோபல்பரிசு கொடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டபோது சீன வெளிநாட்டமைச்சகம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது என்பது இங்கே கருத்தில் கொள்ள வேண்டியது.

லியூவுக்கு எதற்காக நோபல்பரிசு வழங்கப்படுகிறது என்பதை நோபல்குழுவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதமரும், முன்னாள் தொழிற்கட்சிச் தலைவரும், இன்றைய ஐரோப்பா அமைச்சரச் செயலாளருமான தூர்பியோன் யாலாண்ட் குறிப்பிடுகிறார். பொருளாதார ரீதியாக சீனா முன்னேறினாலும், பல சர்வதேச உடன்படிக்கைகளை சீனா கையொப்பமிட்டாலும் அதனை மீறியுள்ளது எனவும், சீனச்சட்டம் 35ன்படி பேச்சுரிமை, கூட்டங்கள் கூடும் உரிமை, எழுத்துரிமை, ஊர்வலம்போகும் உரிமைகள் எழுத்துருவில் இருந்தாலும் அவை நடைமுறையில் மட்டறுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார். சீனா தனது சட்டத்தையே குழிதோண்டிப் புதைத்துள்ளது என்பதை லியூவும் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

http://www.youtube.com/user/thenobelprize

இந்த நோபல்பரிசை லியூவுக்கு வழங்குவதால் நோர்வே பொருளாதார ரீதியாக பல தீமைகளை அனுபவிக்கும் என்பதை அறிந்தும் நோர்வே நோபல்குழு தன்நிலை தளராது பிசகாது அப்பரிசை லியூவுக்கு அளித்துள்ளமை பாராட்டுக்குரியது என பலர் கருத்துத் தெரிவித்திருந்தனர். தீபெத்திய ஆத்மீகத் தலைவர் டலாய் லாமா நோர்வே நோபல்குழுவுக்கு தனது பாராட்டை இது ஒரு துணிகரமான செயல் என்று விமர்சித்துள்ளார். நோர்வேயின் மீன் ஏற்றுமதியின் பெரும்பகுதி சீனாவுக்கே போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான தடையை நோர்வே எதிர்பார்த்திருக்கிறது.

பல சீன உல்லாசப் பயணிகளிடம் செவ்விகண்ட போது பலவிதமான கருத்துக்களை அறிய முடிந்தது. அதாவது ஏன் இந்தப் பரிசை அமைப்புகளுக்குக் கொடுக்கவில்லை, சீனச்சட்டத்துக்கு எதிரான பல வழக்கறிஞர்கள் சிறையில் சீனஅரசின் சித்திரவதைகளுக்கு உள்ளாகிக் கொண்டுள்ளார்கள் அவர்களுக்குக் கொடுக்கலாமே என்ற மாதிரியான பல கருத்துக்களைத் தெரிவித்தார்கள். உலகின் பல நாடுகளும் இப்பரிசு முன்மொழிவை துணிகரமான செயல் என்று பாராட்டி வரவேற்றுள்ளமை சிறப்புக்குரியதே.

இலங்கையில் இன உறவுகள் – எனக்குத் தெரிந்த நியாயம்: சஹாப்தீன் நாநா

Tamil_Muslim_Communityஎல்லோரையும் அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்.

விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை.
கெட்டுப் போபவன் விட்டுக் கொடுப்பதில்லை.

பாரதி எழுத ஆரம்பித்த பின்னர்தான் மொழிகளுக்கெல்லாம் மீசை முளைத்ததாம். அவன் சிந்திக்க ஆரம்பித்த பின்புதான் திசைகளுக்கெல்லாம் தீப்பிடித்தததாம். அந்த தீயில் வெள்ளயனுக்கான வெப்பம் இருந்ததாம். முழு இந்தியனுக்குமான வெளிச்சம் இருந்தததாம் எண்டு நிறைய பேர் கதை சொல்றாங்க. ஆனால் எங்களுக்கு மீசை வைக்கவும் யாரும் கெடைக்கல, தீப்பந்தம் பிடிக்கவும் யாரும் உதவல, வந்தவனெல்லாம் பம்மாத்தும், சுத்துமாத்தாகவும்தான் இருந்தார்கள். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முன்தோன்றிய பரம்பரையிலும் சரி, ஆதிமனிதன் ஆதமின் பிள்ளைகள் நாங்கள், நாரே தக்பீர், அல்லாஹ் அக்பர் எனக் கூறிக்கொண்டு அரசியலுக்கு வந்தவர்களின் பரம்பரையிலும் சரி, எறும்புக்கும் தீங்கிழைக்காதே என்ற போதிசத்துவனின் வழிகாட்டலில் வந்தவர்களும் சரி யாருமே, யாருக்குமே வழி காட்டல. வாழ வழி சொல்லல. ஆனால் எல்லாருமே, இந்த வழிகாட்ட புறப்பட்டு வந்த எல்லோருமே, தங்கள் வயிறுகளையும், உறவுகளையும் நன்றாகவே கவனித்துக் கொண்டார்கள். பாவம் மனிதன். ஆம் பாவம் பாவப்பட்ட மனிதர்கள்.

திரும்ப தொடங்கிவிட்டது நட்டுவாங்கம். அதுதான் கோழிக்குள்ள இருந்து முட்டை வந்ததா, இல்ல முட்டைக்குள்ள இருந்து கோழி வந்ததா. தீர்வுக்கு பின் அபிவிருத்தியா, அபிவிருத்திக்கு பின் தீர்வா. அனைவரும் முட்டையில மயிர் புடுங்க கிளம்பிட்டாங்க. இந்த மயிர புடுங்குங்கடா எண்டுதான், மொத்தமா ஒங்களுக்கிட்ட எல்லாத்தையும் கொடுத்துப்போட்டு, இஞ்ச வெள்ளயைனுகளுக்கிட்ட புடுங்கி, ஒங்களுக்கு காசா எறச்சி தள்ளினோம். ஒண்டும் யாரும் புடுங்கல. மிஞ்சியது கண்பொண்டாட்டிகளும், முண்டச்சிகளும், முழங்கால் ஒடைஞ்சவனுகளும்தான்.

அது ஒரு பக்கம் கெடக்க, இப்ப புதுசா இன்னொரு கதையும் தொடங்கிட்டாங்க. முஸ்லீம்கள் மீது நீண்ட ஒரு பார்வை வைக்க வேண்டுமாம். கடந்த 25 வருடங்களாக நடந்த நிறைய விடயங்களுக்கு சிறிலங்கா முஸ்லீம்களும் காரணமாம். பஸ்தியாம்பிள்ளை காட்டிக்கொடுத்தார் எண்டுபோட்டு, அவரை தேடிப் போய் கொண்டயள். சரி. அமிர்தலிங்கம் பிழை செய்கிறார் எண்டுபோட்டு, அவரை குறிபார்த்து சாக்காட்டினயள். அதுவும் சரி. நீலன் திருச்செல்வம் தொப்பி புரட்டுறார் எண்டு போட்டு, அவரை சுக்கு நூறா கிழிச்சயள். நியாயம். வாஸ்தவமும் கூட. ஆனால், ஒரு சோனி பிழை செய்தால், மொத்த சோனிக்கும் ஆப்படிக்கிறியள். இதை நாங்க கேட்கவும் கூடாது. கதைக்கவும் கூடாது. அதுதான் நியாயம். இனி நாங்க கேட்கல. கதைக்கவும் மாட்டம்.

நல்லூர், கள்ளியங்காடு, தின்னவேலி போன்ற இடங்களில் உள்ள ஆடியபாதம் ரோட்டு, பொற்பாதம் வீதி, தபால்பெட்டி ஒழுங்கை, மணல்தரை ரோட்டு, குமாரசாமி ரோட், இராமநாதன் வீதி, கலட்டி வீதி, டச்சு ரோட்டு, சட்டநாதர் கோவில் ரோட், பிறவுண் வீதி, சிவன் கோவில் வீதி, வைமன் வீதி, கோயில் வீதி, ராஜ வீதி, கொலனி வீதி, கோணாவலை வீதி, அரசடி வீதிகளிலும், கொட்டடி, கந்தர்மடம், ஓட்டுமடம், வண்ணார் பண்ணை, நாச்சிமார் கோயிலடி, சிவலிங்க புளியடி, சுண்டிக்குளி, கொய்யாத் தோட்டம், மணியம் தோட்டம், பாசையூர், கரையூர், கொழும்புத்தறை, முத்திரைச்சந்தை, ஆனைப்பந்தி, பண்ணை, நல்லூர் போன்ற இடங்களிலும், ஆட்சிசெய்த முண்ணாள் சண்டியர்களான, தின்னவேலி மகான், டானி ( இவர் பின்னாளில் டெலோ உறுப்பினர்), கொட்டடி தெய்வேந்திரம், ஆரியகுளம் பொன்ராசா போன்றவர்களிடம் எங்கடவன், நிறையவே அடி வாங்கியிருக்கின்றார்கள். இதற்காக எம்மவன் எல்லாம், ஓ இந்த யாழ்ப்பாணமே வேண்டாம் என்று கூறிக்கொண்டு அங்கிருந்து வெளியேறவும் இல்லை. அந்த யாழ் மக்களை ஒருக்காலும் இகழ்ச்சியாகப் பேசவும் இல்லை. சோனகதெருவில் (பொம்மைவெளி) வண்டில் என்ற பெயரில் ஒரு முஸ்லீம் ரவுடியும் இருந்தார் என்பதையும் இங்கே பதிவு செய்து கொள்வோம். சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் இக்பால் அவர்களால் இவரது கொட்டம் அடக்கப்பட்டதும் ஒரு தனிக்கதை.

முஸ்லீம்களால் நிறைய தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என்ற விடயத்துக்கு வருவோம். மொத்த முஸ்லீம்களும் சேர்ந்து இந்த ரவுடியிஷத்தை செய்வதற்கு எங்களுக்கும், தமிழர்களுக்கும் எந்த பகையும் கிடையாது. குறுகிய நோக்கம் கொண்ட சில முஸ்லீம்காடையர்களே இதை செய்தனர். ஒரு முறை அதாவது பள்ளிவாசல்கள் எல்லாம் தகர்க்கப்பட்டு, முஸ்லீம்கள் நிறைய பேர் கொல்லப்பட்டு, ஆம் திட்டமிட்டு நேர்த்தியாக களையெடுக்கப்பட்டு கொண்டிருந்த போது, ஜிகாத் இயக்கம் 1984 களில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஜிகாத் இயக்கத்துக்கும், கிழக்கில் அப்போது இருந்த ஈபிஆர்எல்எப், ஈரோஸ், டெலோ அமைப்பினருக்குமிடையே ஒரு புரிந்துணர்வு இருந்தது எனலாம். அதாவது முஸ்லீம்களில் யாராவது கடத்தப்பட்டாலோ அல்லது அவர்களது வாகனங்கள் பறிக்கப்பட்டாலோ, அடுத்த தினமே, ஜிகாத் அமைப்பு எதிர் நடவடிக்கை எடுத்து, தமிழ் மக்களை கடத்தியது, வாகனங்களையும் பறித்தது. இது உண்மை. நிஜமும் கூட. பறித்தவுடன் தமிழ் பகுதிகளில் தைரியமாக துண்டுப் பிரசுரங்களும் வினியோகித்தது. அதாவது எமது பொருட்களை அல்லது உயிர்களை, கடத்தப்பட்ட உயிர்களை எழுபத்திரண்டு மணிநேரத்துக்குள் ஒப்படைத்தால், உங்கள் பொருள் அல்லது உயிர் ஒப்படைக்கப்படுமென. அதன்படி நிறைய காரியங்கள் சுமுகமாக கைமாறியது. நடு இரவுகளில் பல பேச்சுவார்த்தைகளும் மானசீகமாக நடந்தது.

ஒரு முறை மட்டக்களப்பிலிருந்து, யாழ்ப்பாணத்துக்கு சென்ற லொறியையும், சாரதி உதவியாளர்களையும், பல லட்சம் கேட்டு புலிகள் கடத்திய போது, காத்தான்குடியில் வைத்து எதிர்நடவடிக்கை எடுத்து, உடம்புக்கும் நோகாமல், மருந்துக்கும் வலிக்காமல் பக்குவமாக மீட்ட கதையெல்லாம் நிறையவே இருக்கின்றது. அப்போதிருந்த சிறிலங்காவின் காவல்துறை அல்லது புலானாய்வுத்துறை, ஜிகாத் நடவடிக்கைகளில் (அரச உதவியுடனேயே ஜிகாத் அமைப்பு உருவானது, உருவாக்கப்பட்டது என்பதை இங்கு வெட்கத்தை விட்டு சொல்லலாம்) திருப்தி காணாமல், ரவுடிகளையும், காவாலிகளையும் ஜிகாத் பெயரில் உருவாக்கி, நெருப்பில் நெய்வார்த்தனர். அக்ரைப்பற்றைச் செர்ந்த ஒரு முஸ்லீம், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கடத்தி வைக்கப்பட்டார். அவர் கடத்தி வைக்கப்பட்ட இடம். இப்போதைய பியசேன எம்பியின் அடுத்த வீடு. அதற்காக ஜிகாத் எதிர்நடவடிக்கை எடுத்தது. தமிழ் அமைப்புகள் தாங்கள் கடத்தவில்லை என தலையிலடித்து சத்தியம் செய்தார்கள். ஜிகாத்தும் விடுவதாக இல்லை. இறுதியில் ஐந்து நாள் அவகாசத்தில், உண்மையை கண்டறிந்து, உரிய நபரை மீட்டு, ஒப்படைத்து பிரச்சனையை சுமுகமாக தீர்த்தனர்.

இதற்காக அப்போதைய புலி, டெலோ, ஈரோஸ், ஈபிஆர்எல்எப் அமைப்பினரை பாராட்டியே ஆகவேண்டும். எல்லோரிடமும் ஒருநேர்மையும், புரிந்துணர்வும் இருந்தது. இதே போல் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த ஒரு தமிழ் சகோதரரையும், இரண்டு உழவு இயந்திரங்களையும் இதே முஸ்லீம் கட்டாக்காலிகள் கடத்தி நிந்தவூர் என்ற ஊரில் மறைத்து வைத்தனர். இதுவும் 24 மணிநேரத்தில் கண்டு பிடிக்கப்பட்டு, தமிழ் சகோதரர்களின் உயிரும், உடமைகளும் ஒப்படைக்கப்பட்டதுடன், ஜிகாத் அமைப்பினர் நேரடியாக சென்று பகிரங்க மன்னிப்பும் கேட்டனர். இது ஒருவகை நாகரிகம். மனிதம் என்றும் இதற்கு பெயரிடலாம்.

ஆனால் அமைப்பு ரீதியாக, திட்டமிட்டு, கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்ட, துரத்தப்பட்ட, சூறையாடப்பட்ட எங்களிடம், யாரும், எவரும், ஒரு நாயோ, பேயோ, பிசாசோ, புண்ணாக்கோ மன்னிப்பு கேட்கல.

அது…….வந்து…….ஓ……உங்களுக்கு………… நாங்க அநியாயம். செய்திட்டமா………ஓ…..சாறி……அது ஒரு துன்பியல் சம்பவம்டாப்பா………. அது சரி. இதை எந்த நாகரிகத்தில் சேர்ப்பது. எங்கிருந்து மனுநீதிச் சோழர்களை அழைப்பது.

இந்த சோனிக்காக்காமாருக்கு இன்னும் புத்தி வரல. அல்லது புத்தி புடிபடல. ரோட்டோரத்துல ரெண்டு மாடில பள்ளிகட்டி, வாணிஷ், பெயின்ற் பண்ணி, ஓ என்று எங்கிட பாங்கொலி உலகம் முழுக்க கேட்கணும் என்று புத்தி கெட்டு போய் திரியிறானுகள். ஆடை, அணிகலன், ஆடம்பரங்களை ஆண்டவன் விரும்புவதில்லை, அங்கொரு கண்ணும், இங்கொரு கண்ணும் ஆலைய வழிபாடில்லை என்ற சங்கதி இவனுக்கு இன்னமே புரியல. இனியும் புரியாது. புரிய நாளெடுக்கும். தமிழ் சகோதர்கள் நினைப்பது போல் அமைப்பு கட்டி, ஆராவாரம் பண்ணி, துண்டக்காணோம், துணியக்காணோம் என்று ஓடுவதற்கு முஸ்லீம்களுக்கு, சிறிலங்கா முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல, உலக முஸ்லீம்களுக்கே திராணி கிடையாது. அவனே ஒன்று ரெண்டாகி, ரெண்டு நாலாகி, துப்புக் கெட்டுப் போய்கிடக்கின்றார்கள்.

சீயா, சுன்னி, அகமதியா, முகமதியா, தப்லிக், ஜமாஅத் ஏ இஸ்லாம் என ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சொல்கின்றார்கள். நாங்க இதற்குள்ள எந்த வகையறா என்பதே புரியாமலிருக்கின்றது. முகம்மது நபி அலை அவர்கள் சொன்ன இஸ்லாம். ஐந்து நேரம் தொழு, வருடத்தில் 30 நாள் நோன்பு பிடி, கலிமாச் சொல், லாஇலாஹ இல்லல்லாஹு முகம்மது றசூலுல்லாஹ். வணக்கத்துக்கு பாத்திரமான நாயன் அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாரும் இல்லை. முகம்மது நபி அவர்கள் அவனது திருத்தூதர் ஆகும், சக்காத் கொடு, உனது உழைப்பின், லாபத்தில் ஒரு பகுதியை வருடா வருடம் தானமாக கொடு, ஹஜ்ஜு செய். அதாவது, உன்னிடம் அதிகப்படியான பணம் இருந்தால். அது உனக்கு போதுமானதாக இருந்தால் மக்காவுக்கு சென்று எனது பள்ளியில் ஆசுவாசமாக அமர்ந்து ஒரு குட்டி பிரார்த்தனை செய். உனது அடுத்த வீட்டில் அல்லது தெருவில், ஒரு ஏழை பெண் முதிர்கன்னியாக இருந்தால் அந்த பணத்தை, அப்பெண்ணின் திருமணத்துக்கு செலவிடு. ஹஜ் செய்வதை பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.

இதைத்தான் முகம்மது நபி சொன்னாரே தவிர. வாளெடுத்து அடுத்த மதத்தவனை தாக்கு, அடுத்த இனத்தை மதியாதே என்று எங்கும் எப்போதும் சொல்லவில்லை. ஒரு முறை முகம்மது நபி தன் தோழர்களுடன் ஒரு பள்ளிவாசலில் அமர்ந்திருக்கும் போது, அவ்வழியால் இன்னொரு மதத்தை சார்ந்த ஒருவரின் மரண ஊர்வலம் போய்க் கொண்டிருந்து இருக்கின்றது. உடனே நபி அவர்கள் மரண ஊர்வலம் போய் முடியும் வரை எழுந்து நின்றிருக்கின்றார்கள். இதைக்கண்ட தோழர்கள், அது வேற்று மதத்தவரின் மரண ஊர்வலம் என்று சொல்லி இருக்கின்றார்கள். எம்மதம் என்றாலும் அதற்கு மரியாதை செய்வதுதான் மனித பண்பு என அவர்கள் கூறியுள்ளார்கள். அது மட்டுமல்ல அம்மரண ஊர்வலம் சென்ற பின்னர், அவ்வுடல் புதைக்கப்பட்ட இடத்துக்கு சென்று, ஒரு குட்டி மரக்கன்றை அவ்விடத்தில் நாட்டியுமுள்ளார். இந்த பண்புகளைத்தான் இஸ்லாம் சொன்னதே தவிர, பின்லாடன் சொல்வதுபோல் அல்லது யாசீர் அரபாத் அழுதது போல் கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்பதெல்லாம் பொய்கதை, புருடா. அப்படி சொன்ன யாசீர் அரபாத் கூட, இறுதியில், ஒலிவ் இலையை கையில் ஏந்திக்கொண்டுதான் அய்யன்னா நாவன்னாவுக்குள் நுழைந்தார்.

இஸ்லாம் ஒரு மதம் என்பதை விட, நல்லதை நல்லபடியா செய்யுங்க என்று சொல்கின்ற ஒரு விருட்சம். அது தானே தன் பாட்டுக்கு வளரும். கொழும்பில் நிறைய ஹெரோயின் வியாபாரிகளும், ஹெரோயின் பாவிப்பவர்களும் முஸ்லீம்களே. இதை தடுக்க இந்த தப்லீக்காறரும், ஜமா அத் ஏ இஸ்லாம் காறரும், அகமதியா, முகமதியா காறரும் பல வருடகாலமாக தலையால தண்ணி குடிச்சி பார்த்தினம். எதுவும் நடக்கல. ஒரு இம்மி கூட நகரல. நம்ம மகின்த மகராசா வந்து, அதற்கென ஒரு ரீம் அமைச்சு. நார்கொடிக் தடுப்பு பிரிவு. முழுக்க முழுக்க முஸ்லீம் உயரதிகாரிகளை நியமித்து, இரண்டு வருட இடைவெளியில், 147 தூள் வியாபாரிகள் நட்டநடு வீதியில் மரணத்தை தழுவிக் கொண்டார்கள். நம்ம பாஷையில சொல்லப் போனா, போட்டுத்தள்ளப் பட்டார்கள். ஒரே ஒரு நபர்பாக்கி. அவர் பெயர் பொட்ட நவாஷ். பனாகொடையில சேப்ரியாக இருக்கின்றார். எந்த சோனிக்காக்காவும் நடு ரோட்டுக்கு வந்து சோனிய போட்டுட்டானுகள் என்று ஆர்ப்பாட்டம் பண்ணல. இங்கே எங்கிட அல்லாஹ்வோ, திருப்பரங்குன்றத்துல எழுந்தருளியிருக்கின்ற முருகப்பெருமானோ, பொலன்னறுவையில் 40 அடி நீளத்தில் நீட்டி தூங்கிக் கொண்டிருக்கின்ற புத்த பகவானோ ஆப்பு வைக்க வரவில்லை. தெய்வம் மனித ரூபயணா. ஆம் கடவுள் மகின்த ரூபத்தில் வந்து தூள் வியாபாரிகளுக்கு ஆப்பு வைத்துள்ளார்.

கடந்த பல வருடங்களாக, குறிப்பாக 83/84/85/86 காலப்பகுதியில் நிறைய தப்பு தண்டாக்கள் பல இடங்களிலும், பல பகுதிகளிலும் நடந்தது. உண்மையிலேயே 83 ஜூலை கலவரத்தில் கொழும்பிலும், 84/85 காலப்பகுதியில் கிழக்கிலும் முஸ்லீம் காடையர்களால், தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதை, ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். ஆனால் இங்கு முஸ்லீம் காடையர்களால் தாக்கப்பட்டவர்களைவிட, முஸ்லீம் மக்களால் காப்பாற்ப்பட்டவர்கள்தான் அதிகம் என்பதையும், இங்கு நுனிப்புல் மேய்பவர்கள் உணர வேண்டும்.

இப்போது, மகின்த கிழிப்பாரா, கேபி அண்ணா சாதிப்பாரா, தோழர் டக்ளஸ் பிடித்துள்ள வடம் சரிதானா, கருணா அம்மான் தேறுவாரா என்று பழையபடி பல்லவிகளை தொடங்கிவிட்டனர் நமது புலம் பெயர் புத்தி ஜீவிகள். பாவம், பாவப்பட்ட மக்கள். எல்லோரும் குற்றம் கண்டு பிடித்து பெயர்வாங்கும் புலவர்களாக இருக்கின்றார்களே தவிர. பசித்த வாய்க்கு பாலூட்டுபவர்கள் யாரையுமே காணல. ஆனால் இங்கே சிறிலங்காவில் எல்லாமே நன்றாகத்தான் நடக்கின்றது.

இந்திய முதலாளிகள் வருகின்றார்கள், சீன வியாபாரிகள் கிளிநொச்சியில் நடமாடுகின்றார்கள், பசித்த வாய்களுக்கு பாரியளவு இல்லாவிட்டாலும், குறைந்தளவு மகின்த அரசு ஊட்டுகின்றது, சிங்கள பொதுமக்கள் வடக்கை எந்த பயமுமின்றி தரிசித்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லீம்கள் பழைய இரும்புகளை விசுவமடுவிலும், கிளிநொச்சியிலும், ஐந்து சந்தியிலும் வாங்கி குவித்துக் கொண்டிருக்கின்றார்கள், நாடே ஒரு களை கட்டிப் போய்க்கிடக்கின்றது அப்புறம் உங்களுக்கு வேறு என்ன தேவைப்படுகின்றது. உரிமை.

பொண்ணே பார்க்கலயாம், இவர்கள் பிள்ளைக்கு பெயர் வைக்க சாதகம் பார்க்கின்றார்கள் என்ற கதையாக இருக்கின்றது நமது நிலமை. ஊருக்குள்ள திடீரென்று பல பேருக்கு, ஏதோ இனம் தெரியாத நோய் புடிச்சிப் போய், டாக்கடருக்கிட்ட வந்திருக்காங்க. டாக்டரும் என்ன மருந்து கொடுப்பதென தெரியாமல், ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு மருந்தை எழுதிக் கொடுத்திருக்கின்றார். இதைப் பார்த்த ஓடலியார், என்ன சார் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு மருந்தை எழுதிக் கொடுக்கின்றீர்களே, இது சரியா எனக் கேட்டிருக்கின்றார். எனக்கே இது என்ன நோய் என தெரியாமல் இருக்கின்றது. ஆளுக்கொரு மருந்தை கொடுப்போம். யாராவது ஒருவருக்கு நோய் சுகப்படும். அந்த மருந்தை, இனி தொடர்ந்து கொடுப்போம் என்றாராம். அதுபோலதான் இருக்கின்றது எங்கள் கதையும்.

இருபத்தஞ்சு வருசமாக, சிங்கள அரசுகள் சுடுதண்ணி ஒத்தணம், மயிலெறகு வருடல், ஆமெணக்கெண்ணை தடவல் எனக்கொடுத்து போதாமல்தான், மகின்த சகோதரர்கள், மகியங்கன, மரமஞ்சள் கசாயம் குடுத்து நோயை குணப்படுத்தியிருக்கினம். குணப்படுத்திட்டம் எண்டு சொல்லினம். ஆனால் நோயாளிகள் வாயே தொறக்கல. ஆனால் புதினம் பார்க்க வந்தவர்கள்தான் ஆயிரம் மருந்து சொல்லினம். இவர்கள் எல்லாம் ஏற்கனவே, சிறிலங்காவில் இருந்து கொண்டு வேப்பிலை அடித்தவர்கள்தான். இப்ப வெள்ளயனுகளுக்கிட்ட, இருந்து கொண்டு அமொக்சிலுனும், புரூபனும், வொட்காவும் பழகிப் போட்டு, இதே மருந்தை உடனே கொடு என வியாக்கியானம் பண்ணினம்.
ஏன் நமதுநாட்டு வைத்தியத்துக்கு என்ன குறை. நாட்டு வைத்தியம் உடன் பலன்தராதுதான். ஆனால் நீண்டகாலத்தில் அது கைகொடுக்கும். மெள்ள மெள்ள சுளுக்கெடுத்து, நோயாளியை ஆசுவாசப்படுத்தி, அது முறிவா, அல்லது சுளுக்கா என கண்டு பிடித்து, சுளுக்கென்றால், சித்தாமட்டி வேர், ஆடா தோடை இலை, கொஞ்சம் வேப்பிலையை, மயிலெண்ணெயில் அரைத்து, இளஞ்சூட்டில் பூசி, நல்லெண்ணை தடவிய வெள்ளை துணியை கட்டினால் நோய் சுகம். இல்ல அது பெரிய, பாரிய முறிவு என்றால், அம்மிக்குளவியை எடுத்து முறிவில் ரெண்டு தட்டு தட்டி, பச்சை மஞ்சள், மரமஞ்சள், கொஞ்சூண்டு அசமதாகம் ( ஓமம் ), சூடம் ஒரு நாலு வில்லையளவு, எடுத்து உரலில் போட்டு உளக்கி, வேப்பெண்ணையில் வேகவைத்து, காலில்வைத்து கட்டி, அதற்கு துணையாக பனைமட்டையை கட்டினால்தான் மூன்று மாதத்தில் நோயாளி எழும்பி நடப்பான்.

என்ன நோய் என்பதை நோயாளிதான் சொல்ல வேண்டும். பெரிய சீக்காளி கேபி அண்ணாவே வாய் தொறக்கல. அப்புறம் அன்றாடம் காய்ச்சிகள் எப்படி வாய் தொறப்பார்கள். ஆனால் அவன் நிச்சயம் வாய் தொறப்பான். அவன் முதலில் அவனை ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும். பின்னர் பீனிக்சுகள் கிளம்பும். சுதந்திர சிறிலங்கா உதயமாகும். அதில் சிறிலங்காவின் இரண்டாவது தலைநகரமாக கிளிநொச்சி இருக்கும். அங்கே ஆங்காங்கே புத்தர் சிலைகள் இருக்கும். நிறைய பள்ளிவாசல்கள் கட்டப்படும்.

கதிர்காமத்தில் பௌத்த காணியில், கந்தனுக்கு ஆலயமும், பால்குடி பாபாவுக்கு பள்ளிவாசலும், கண்டியில் பத்துநாள் பெரஹரவில் இரண்டாவது நாள் பெரஹர முருகப்பெருமானுக்கும், வள்ளிக்கும் சிங்களவன் செய்யும் போது, கிளிநொச்சியில் ஒரு குட்டி பெரஹரா நடப்பதில் என்ன தவறு இருக்கின்றது. காரியங்களை தலையை தடவித்தான் செய்ய வேண்டுமே தவிர, கழுத்தில் கத்தி வைத்துக் கொண்டு செய்யக்கூடாது.

இதைத்தான் முஸ்லீம்கள் தனித்தனியாக செய்து கொண்டிருக்கின்றார்கள். யாரும் இங்கே இயக்கம் கட்டி, அறிக்கை விட்டு செய்யல. கொழும்பு கண்டி வீதியில், கொழும்பிலிருந்து கண்டி டவுண் வரை, நட்ட நடு வீதி ஓரங்களில் 17 பள்ளிவாசல்கள், 6 ஹிந்துக் கோயில்கள் இருக்கின்றது. ஆனால், மூன்றே மூன்று புத்தர் சிலை. கிரிபத்கொடவில் ஒன்று, கடவத்தையில் இன்னொன்று, பேராதனையில் மற்றொன்று. பாவம் புத்தர். அவர் அமைதியாக நிஷ்டையில் இருக்கின்றார். ஆனால் இந்த முஸ்லீம்களோ, இந்த புத்தர் சிலைகளுக்கு முன்னால் இன்டர்கூலர்களில் 120 மைல் வேகத்தில் பறக்கின்றார்கள். ஆனால் சிங்கள சகோதரர்கள், பள்ளி வாசல்களையும், கோயில்களையும் கடக்கும் போது, வண்டியை நிறுத்தி, அல்லாஹ் தெய்யோவுக்கும், கந்தசாமி முது ஹாமுறுணிக்கும் உண்டியலில் பணம் போட்டு, இதயத்தை தடவிக் கொள்கின்றனர்.

நம்ம நாடு நண்டு மனிதர்கள் வாழும் நாடாகிவிட்டது. அதிலும் புலம் பெயர்ந்தவர்களே கெட்டிக்காறர்களாக இருக்கின்றனர். கூட்டுக்குள்ள நண்ட போட்டா, சலசல என்று ஓடித்திரியும். அப்புறம் அமைதியாகிவிடும். கொஞ்ச நேரத்துக்கப்புறம், ஒரு நண்டு மெதுவாக, கூடையில் ஏறி வெளியெ வர எத்தனிக்கும். உடனே மற்ற நண்டுகள், அதன் காலை வாரிவிடும். அதில நாமதான் கில்லி. பௌத்தர்களையும், முகலாயர்களையும் 1200 ஆண்டுகள் ஆளவிட்ட ஹிந்துக்கள், பிராமணர், பிராமணர் அல்லாதவர் என்ற கதைகளை கூறி, அகண்ட இந்தியாவை, ஒரு 30 ஆண்டுகள் கூட ஆள அனுமதிக்கவில்லை, நமது இந்திய ஹிந்து நண்டுகள். நமது அரிச்சுவடியும் அங்கிருந்துதான் ஆரம்பமாகின்றது.

3000 ஆண்டுகளுக்கு முன் முத்து, பவளம், சக்கரை, அரிசி, சந்தனம், பாக்கு, தேக்கு, ஏலம், சிறுத்தை, புலி, தந்தம் என்பவற்றை ரோமாபுரி, எகிப்து, கிரேக்கம் போன்ற நாடுகளுக்கு ஏற்றியவன் தமிழன், கம்பூச்சியாவில் காரைக்கால் அம்மையாருக்கு கோயில் இருக்கின்றது, கம்போடியாவில் 7ம் ஜயவர்த்தனே கட்டிய அங்கேர்வா கோயில் அமைந்திருக்கின்றது, சீன அரச அவையில் சோழ தூதருக்கு இருக்கை இருந்திருக்கின்றது, தாய்லாந்து அரசவையில், திருவெம்பாவையின் ஒளிச் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளது என்ற கதைகளையே இன்னும் சொல்லிக் கொண்டிருக்கின்றோமே தவிர, உள்நோய்க்கு யாரும் மருந்து சொல்லக் காணோம்.

யுரோப்புல இருந்து மகின்த ராஜபக்ஷவுக்கு ஒருதிட்டு, பசில் ராஜபக்ஷவுக்கு ரெண்டு திட்டு, டக்ளஸ் தேவானந்தாவுக்கு மூன்று திட்டு, கருணா அம்மானுக்கு நாலு திட்டு, கேபி சகோதரயாவுக்கு அஞ்சு திட்டு, நம்ம இளிச்சவாயர்களான தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மொத்த திட்டு என திட்டுவதை விட்டுவிட்டு, அந்த பொன்னான நேரத்தில் ஒரு வாழ்வையிழந்த உறவுக்கு ஆலோசனையாவது சொல்லலாமே. அதுதான் மாடு வாங்கி வளர்க்க சொல்லலாமே.

நம்ம நாட்டுல உள்ள மக்கள், இருவகையான மாடுகளை வளர்த்து பணம் உழைக்கின்றார்கள். வெப்ப வலயப்பகுதியில் உள்ளவர்கள் நாட்டு மாடுகளை வளர்த்தும், மத்திய மலைநாட்டுப் பகுதியில் உள்ளவர்கள் இறக்குமதி செய்யப்பட்ட சீமை, பிறேசிலியன், ஜேசி, அயசன் மாடுகளை வளர்த்தும் பணம் உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இறக்குமதி செய்யப்பட்ட சீமை ( கறுப்பு/சிகப்பு), பிறேசிலியன் ( கறுப்பு/வெள்ளை), ஜேசி (பிறவுண்/றோஸ் ), அயசன் (சிகப்பு) கறவைமாடுகள்தான் இன்று மத்திய மாகாணத்திலும், கொழும்பபை அண்டியபகுதிகளிலும் மக்களால் வளர்க்கப்பட்டு தினமும் பணத்தை கொட்டோ கொட்டென கொட்டிக் கொண்டிருக்கின்றது. சிறிய முதலில், வீட்டுக்குள் இருந்து கொண்டே பலர் பணத்தை உழைத்துக் கொண்டிருக்கின்றனர். எப்படி ?
கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரூபா முதல் 65ஆயிரம் ரூபா விலையான இம்மாடுகள், குட்டி ( கன்று ) போடுவதற்கு முன்னர், தினமும் 17 லீற்றர் முதல் 20 லீற்றர் வரை பால் தருகின்றன. காலையில் 8 லீற்றர், மாலையில் 8 / 9 லீற்றர் என ஒரு நாளைக்கு இரு முறை பால் தருகின்றன. ஒரு லீற்றர் பாலின் விலை 30 ரூபாவில் தொடங்கி, 31 ரூபா அல்லது 31 ரூபா 80 சதம் என, இலங்கை பால் சபையே தினமும் காலையும், மாலையும் வீட்டு வாசற்படிக்கே வந்து பாலைக் கொள்வனவு செய்கின்றது.

இவ்வகையான மாடுகளில் தொடர்ந்து எட்டு மாதங்களுக்கு பால் கறக்கலாம். அடுத்த ஓரிரு மாதத்தில் அது கன்று போடும். கன்று போடும் வரை பால் கறக்க மாட்டார்கள். கன்று போட்டு அடுத்த நாளே மீண்டும் பால் தரத் தொடங்கி விடும். கன்று போட்ட பின் முன்னரை விட 3/4 லீற்றர் கூடுதலாகவே பால் கறக்க முடியும். கன்று, பசுக்கன்றானால் அதுவும் அடுத்த ஒரு வருடத்தில் பால் தரத்தொடங்கிவிடும். அது காளையானால் இரண்டு, மூன்று வருடத்தில் அதை நல்ல விலைக்கு விற்கலாம்.

ஒரு மாட்டிலிருந்து முழு வருடமும் பால் கறக்க முடியாது. அதி கூடியது ஒன்பது அல்லது பத்து மாதம் பால் கறக்கலாம். ஆம் ஒரு நாளைக்கு 18 லீற்றர் பால் என ஒன்பது மாதம் ( 9 x 30 =270 நாட்கள் ) பால் கறந்தால், வருடத்துக்கு ( 270 x 18 ) 4860 லீற்றர் பால் கறக்க முடியும். ஒரு லீற்றர் பால் 30 ரூபாவாக பால் சபைக்கு கொடுத்தால், 4860 x 30 = 1,45,800 ஒரு லட்சத்து நாற்பத்தி ஐந்தாயிரத்து எண்ணூறு ரூபாவிற்கு பால் விற்க முடியும். இது மொத்த வரவு. அப்படியானால் செலவு எப்படி இருக்கும்.

ஆம் தினமும் புண்ணாக்கு, விற்றமின், பச்சைப் புல் என்பன இவற்றுக்கு உண்ணக் கொடுக்க வேண்டும். மில்கோ புண்ணாக்கு, மோர்லக் புண்ணாக்கு என பிரசித்தி பெற்ற புண்ணாக்குகள் இங்கு மலையகம் எங்கும் கிடைக்கும். புண்ணாக்கு 25 கிலோ பேக் ஒன்றின் விலை 450 ரூபா. ( ஒரு கிலோ 18 ரூபா ) அதே போல் மிடிமிக்ஸ், எமினோல் போன்ற விற்றமின் வகையறாக்களும் உண்டு. இந்த விற்றமின் ஒரு கிலோ பேக் 160 ரூபா.

தினமும் புண்ணாக்கு காலையில் 1.5 கிலோவும், மாலையில் 1.5 கிலோவும் இளம் சூட்டு நீரில் கலந்து 50 கிறாம் விற்றமினையும் கரைத்து இம்மாடுகளுக்கு கொடுக்க வேண்டும். ஆம் ஒரு நாளைக்கு 3கிலோ புண்ணாக்கு, 100 கிராம் விற்றமின் வழங்க வேண்டும். அத்துடன் பச்சைப்புல் ஒரு நாளைக்கு இரண்டு கட்டு வழங்க வேண்டும். இது கூலியாளை வைத்து இரண்டு நாட்களுக் கொருமுறை வெட்டி வழங்க வேண்டும். இக்கூலியாளுக்கு ஒரு நாளைக்கு 200 ரூபா வழங்க வேண்டும்.

புண்ணாக்கு ஒரு கிலோ 18 ரூபா, விற்றமின் 100 கிராம் 16 ரூபா, ஒரு நாளைக்கு 3 கிலோ புண்ணாக்கு, 100 கிராம் விற்றமின், கூலியாளுக்கு 100 ரூபா ( இரண்டு நாளைக்கு 200 ருபா ) ஆம், ஒரு நாளைக்கு ஒரு மாட்டுக்கு உணவுச் செலவு 54,16,100 மொத்தம் 170 ரூபா. ஒரு வருடத்துக்கு 365 x 170 = 62.050
மாட்டுக்கு அடுக்கடி நோய்வந்து தொலைக்குமா ? கிடையவே கிடையாது. ஆடிக்கொரு முறை, அமாவாசைக் கொருமுறை காய்ச்சல் போன்ற நோய்கள் வரும். அதற்கு இருக்கவே இருக்கின்றது பனடோல். பத்து பனடோலை எடுத்து அரைத்து கரைத்து, போத்தலில் இட்டு கொடுத்தால் காய்ச்சல் பறந்துவிடும். சில சமயங்களில் வயிற்றுளைவு போன்ற ஒரு நோய்வரும். அதற்கு நாட்டு மருந்தை கொடுத்து அடக்கிவிடுவார்கள்.
ஆம். வெள்ளைப்பூடு, இஞ்சி, பெருங்காயம், ஓமம் ( அசமதாகம் ), மிளகு, வெத்திலை என்பவற்றை எடுத்து, மைபோல அரைத்து, வெள்ளைத் துணியில் வடிகட்டி, பால் போத்தல்களில் ஊற்றி கொடுத்துவிட்டால் வயிற்றுளைவு பறந்துவிடும்.

அதுமட்டுமல்ல நாம் மாடு வாங்கியிருக்கின்றோம் என்ற சங்கதியை அப்பகுதி மிருக வைத்தியருக்கு அறிவித்து விட்டால் போதும், அவர் வாரா வாரம் வந்து நமக்கு அறிவுரையும், ஆலோசனையும் வழங்குவார். இந்த விடயத்தில் நமது அரச ஊழியர்கள் ரொம்ப சுத்தமாகவே இருக்கின்றார்கள்.

மாட்டை நடு றோட்டில் வைத்துக் கொண்டு வளர்க்க முடியுமா ? முடியாது. அதற்கென ஒரு “செட்” அடிக்க வேண்டும். ஆம் சாதாரணமாக மூன்று மாட்டுக்கு 175/190 புளக் கல், 5 சீமெந்து பேக், 10 அஸ்பெஸ்டாஸ் சீற், மணல் என்பன வாங்கி ஒரு குட்டி செட் அடிக்க வேண்டும். ஒரு புளக் கல் 39 ரூபா, சிமென்ட் ஒரு பேக் 800 ரூபா, சீற் ஒன்றுக்கு 1500 ரூபா.
190 புளக் கல் ( 190 x 39 ) = 7,410 ரூபா, 5 சீமெந்து பேக் ( 800 x 5 ) = 4,000ரூபா, 10 சீட் ( 1500 x 10 ) = 15,000ரூபா, மணல் ஆயிரம் ரூபா, மொத்த செலவு 27,410 ரூபா.
ஒரு மாடு வளர்த்து பணம் உழைக்க வேண்டுமானால் எவ்வளவு உழைக்கலாம்.
ஒரு மாடு 50,000 ஆயிரம் ரூபா, உணவுக்கு வருடம் 62,050 ரூபா, செட்டுக்கு 27,410 ரூபா, மொத்த செலவு இவ்வளவே. ஒரு மாட்டை ஆறு , ஏழு வருடம் வரை வைத்துக்கொண்டு பால் கறக்கலாம். நிச்சயமாக வருடத்துக்கொரு கன்று போடும். அக்கன்றும் பசுவானால், அதுவும் ஒரு வருடத்தில் பால் தர தொடங்கும். ஒரு வருடத்துக்கு 1,45,000 ரூபாவிற்கு பால் விற்கலாம்.
நிலையான செலவு, மாட்டுக்கு 50,000 ரூபா, செட்டுக்கு 27,410 ரூபா. ஆக மொத்தம் 77,410 ரூபா மட்டுமே. உணவுக்கு செலவு வருடம் 62,050 ரூபா. மொத்த பால் விற்பனை வருடத்துக்கு 1,45,000 ரூபா. ஆம் வருட நிகர வருமானம் 1,45,000 – 62,050 = 82,950
அது மட்டுமல்லாமல், வருடத்துக்கு ஒரு கன்று என ஏழு அல்லது எட்டு கன்றுகளும் கிடைக்கும். இவைகளும் பால்தரத் தொடங்கினால் இலாபம் இருமடங்கு, மும்மடங்கு என வருடா வருடம் கூடிக் கொண்டே செல்லும். முதல் வருடம் 80,000 ஆயிரம் நிகர இலாபம், இரண்டாவது வருடமும் 80 ஆயிரம் நிச்சயம் கிடைக்கும், மூன்றாவது வருடம் (கிட்டத்தட்ட) 1,20,000 ரூபா (கன்றும் பால் தரத் தொடங்கிவிடும்), நாலாவது வருடம் 2,20,000 ரூபா (மற்ற கன்றும் பசுவானால் பால் தரத் தொடங்கிவிடும்) என ஒரு மாட்டின் மூலம் உழைக்கலாம்.

எச்சரிக்கை:
1972 இல் வியட்நாமில், நவாப் குண்டுகளை போட்டு, வியட்நாமையும், மக்களையும் சீரழித்த அமெரிக்க யாவாரி, இப்ப அதெல்லாத்தையும் உட்டுப் போட்டு, மரபணு விதை யாவாரம் பண்ண தொடங்கிருக்கிறானாம். அதாவது நீங்க விழைவிக்கின்ற ஐஆர் எய்ட், எச் போர் நெல்லு விதைகள், உங்களூர் தென்னங்கன்று, உங்க வீட்டு மாங்கொட்டை எல்லாம் கனிந்து பயன் தர நாளெடுக்கும், காலமெடுக்கும். நம்மளுக்கிட்ட அதே சரக்கு லேட்டஸ்ராக இருக்கு, அதை வாங்கி நடுவுங்கோ குறைந்த காலத்தில் கூடிய பயன் கிடைக்கும், அதாவது நாலு மாதத்தில் புள்ள பெத்துக்கலாம் என்று கூறிக் கொண்டு வாற மாதம் நம்ம ஊருக்கு ஒரு நடை வரப் போறானாம். சாக்கிரதை, சாக்கிரதை. 30 வருஷம் கருக்கட்டிய புள்ளயையே பெத்துக்க முடியாம இருக்கம். இந்த மானுடத் துரோகி வந்து இருக்கிறதயும் கெடுக்க போறான்.

டெல்லி கொமன்வெல்த் போட்டியில் ஒரு ஈழத்தமிழரின் தங்க வேட்டை

commonwealt_logo.jpgஅவுஸ் திரேலியாவுக்காக தங்கப் பதக்கங்கள் வென்ற இலங்கைத் தமிழன் பிரஷாந்த் கொமன்வெல்த் போட்டியில் சாதனை டெல்லி கொமன்வெல்த் போட்டியில் ஒரு தமிழர் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவர் இலங்கை பிரஷாந்த் செல்லத்துரை. அவுஸ்திரேலியாவுக்காக விளையாடி வருகிறார் இந்த ஜிம்னாஸ்ரிக்ஸ் வீரர்.
சர்வதேச அரங்கில் தமிழர்களின் முத்திரை தற்போது அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் இப்போது டெல்லி கொமன்வெல்த் போட்டியில் பதக்க வேட்டையில் முதலிடத்திலிருக்கும் அவுஸ்திரேலியாவுக்காக ஒரு தமிழர் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

அவரது பெயர் பிரஷாந்த் செல்லத்துரை. பூர்வீகம் இலங்கை. இவரது குடும்பத்தினர் இலங்கையில் இனக்கலவரம் பெரிதாக வெடித்த 1983 ஆம் ஆண்டு அங்கிருந்து இடம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவுக்குச் சென்றனர். தற்போது சிட்னியில் வசித்து வருகிறது செல்லத்துரையின் குடும்பம். பிரஷாந்த் அவுஸ்திரேலிய ஜிம்னாஸ்ரிக்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள முக்கிய வீரர். அவுஸ்திரேலியாவுக்காக டெல்லி கொமன்வெல்த் போட்டியில் 2 தங்கம் வென்று கொடுத்துள்ளார்.

டெல்லி கொமன்வெல்த் போட்டியில் இரு போட்டிப் பிரிவுகளில் கிட்டத்தட்ட 15,000 புள்ளிகள் வரை பெற்றுள்ளார் பிரஷாந்த். ஜிம்னாஸ்ரிக்ஸ் போட்டிகளில் இந்தளவுக்கு அதிக பட்ச புள்ளிகள் கிடைப்பது மிகவும் அரிதான விடயம். அந்தளவில் பிரஷாந்த் ஒரு சாதனையே படைத்துள்ளார்.

24 வயதேயாகும் பிரஷாந்த் “ரேடியோலோ” மாணவர் அவுஸ்திரேலிய அணியில் இடம் கிடைத்தது பிரஷாந்த்துக்கு எளிதாக இருக்கவில்லையாம். கடும் போராட்டங்கள், கடின பயிற்சி, கடுமையான முயற்சிக்குப் பின்புதான் அணியில் இடம்கிடைத்தது. கடந்த மெல்போர்ன் கொமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் பிரஷாந்த். இந்த முறை தங்கத்துடன் திரும்புவேனென சபதமே போட்டிருந்தாராம். சொன்னபடி வாங்கியும் விட்டார். டெல்லி கொமன்வெல்த் போட்டியில் ஒரு ஈழத்தமிழர் அதுவும்  தங்க வேட்டையாடி வருவது பெருமைக்குரிய விடயம் தான்.

ஆர் பிரதீபனின் ‘சடோஸ் ஒப் சைலன்ஸ்’ – சர்வதேச பாராட்டைப் பெறும் புலம்பெயர் படைப்பு!

Piradeepan_Rபிரான்ஸில் புலம்பெயர்ந்து வாழும் ஆர் பிரதீபனின் ‘சடோஸ் ஒப் சைலன்ஸ்’ புலம்பெயர் தமிழர்களின் வாழ்வியல் நெருக்கடிகளை பதிவு செய்யும் குறும்படமாக வெளிவந்தள்ளது. பாராட்டுக்குரிய ‘என் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம்’ ( மரணித்த இரண்டு முற்றத்து மாமரங்கள் : யமுனா ராஜேந்திரன் ) என்ற குறும்படத்தை படைத்த இவரின் ‘சடோஸ் ஒப் சைலன்ஸ்’ உம் பல பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

பிரான்ஸ் ஹான்ஸ் மற்றும் அமெரிக்கத் திரைப்பட விழா ஒன்றிலும் திரையிடப்பட்ட இப்படம் லண்டனில் நடைபெறவுள்ள ரெயின் டான்ஸ் திரைப்பட விழாவில் இன்று (ஒக்ரோபர் 08 2010) காண்பிக்கப்பட இருக்கிறது.

காட்சிப் படிமங்களில் ஆர்வத்துடன் ஈடுபட்டுவரும் ஆர் பிரதீபன் புகைப்படத்துறையில் இருந்து திரைப்படத்துறைக்கு மிக நிதானமாகவே அடி எடுத்து வைக்கின்றார். லண்டனில் புதியவன் சுவிஸில் அஜீவன் டென்மார்க் சுபாஸ் நோர்வேயில் தமயந்தி கனடாவில் சுமதி ரூபன் போன்ற சில குறும்பட ஆர்வலர்கள் வரிசையில் பிரான்ஸில் ஆர் பிரதீபனின் வருகை ஆரோக்கியமானதாகவே உள்ளது.

._._._._._.

Shadows of Silence-Movie by Pradeepam Raveendran beats 20 Indian film, goes to Cannes Film Fest

Mumbai, April 22 (Calcutta Tube)

Paris-based Sri Lankan director Pradeepan Raveendran‘s film ‘Shadows of Silence‘, listed as a French entry, will be presented in the Directors’ Fortnight section at the 63rd Cannes Film Festival May 12-23. Based in Paris, Raveendran makes films in Tamil and Sinhala and his ‘Shadows of Silence’ has beaten 20 Indian films — none of which were selected — to the Directors’ Fortnight.

‘Shadows of Silence’ is described as being about the ‘nightmares and realities of a depressed person in exile’. He has directed, produced and written this 11-minute fiction film himself.

Raveendran’s earlier film ‘A Mango Tree in the Front Yard’, also a French entry, was selected by the Berlin Film Festival in 2009, and nominated for a Golden Bear for best short film. It has been screened around the world, including the International Film Festival of Los Angeles and the Museum of Modern Art (MOMA), New York.

Set in war-ravaged Sri Lanka, ‘A Mango Tree in the Front Yard’ focuses on three children for whom even walking home from school proves dangerous. The MOMA described the film as ‘spare and haunting’. A film in Tamil, it credits the Association of French Tamil Exiles as co-producer.

Born in Jaffna, Raveendran, 29, left the island in 2004 because of the ethnic conflict, and was granted political refugee status in France in 2007. He is active with the Tamil diaspora community in Europe. He is on the editorial board of Uyirnizhal (Shadow of the Soul), a political-literary Tamil diaspora quarterly magazine.

He organised two photography exhibitions in Paris and Berlin on the theme of life in exile. His photographs highlight the lives of immigrants who struggle to survive in Paris without valid permission, avoiding attention and detention.

As for India, the Cannes festival has two official invitations. The first is for Shekhar Kapur, who has been selected on the Feature Film Jury.

The other is for director Vikramaditya Motwane, whose film ‘Udaan’ has been chosen in the official selection of the festival. Motwane’s debut feature will be screened in the Un Certain Regard (A Certain Look) section of the festival.

(Meenakshi Shedde is India Consultant to the Berlin Film Festival and curator to international festivals worldwide.)

Exile and ‘Shadow of Silence’
Film review by Charles Sarvan, Sunday Island, Colombo, August 29, 2010

”Shaving, he looks at himself in the mirror but not self-admiringly, as young Narcissus did by the pool. Rather, he seems not to look at the mirror but to search deep in it for answers to existential questions: What is this life? Who am I? That the day has no structure for him suggests he’s unemployed. The last scene is of a snow-covered landscape, and the spread-eagled body of the man: a dark figure; white snow, and the red of seeping, spreading, blood.” 

[I have] watched the smoke that rises from the pipes
Of lonely men in shirt-sleeves, leaning out of windows
(T. S. Eliot)     

Many Sri Lankan artists (“artists” in a wider sense) who settle abroad continue to base their work on the Island, and so it was with Pradeepan Raveendran (b. 1981) in his earlier, much-acclaimed,  ‘A mango tree in my front yard’. But ‘Shadows of Silence’, set in France where the producer now lives, has to do with exile. It is remarkable that so much can be contained within a time-frame of, approximately, ten minutes. A restrained, suggestive work, relying on symbolism, capable of different “readings” (the title, ‘Shadows of Silence’, included), it stands comparison with the best of such films.

The film commences with a desolate winter scene of snow-covered ground, and high-rise flats without any sign of human habitation. Are the adults at work, and the children in school? A few crows, traditional harbingers of misfortune, fly around, cawing jarringly. The film then “cuts” to the celebration of a little girl’s birthday.  A picture is duly taken of father, mother and the three children, but the father seems detached, withdrawn into his own world. The mother looks distracted (worried about the mental and emotional state of her husband?) but tries to present a face appropriate to the party. (One thinks of Virginia Woolf’s novel, ‘Mrs Dalloway’, and foreign Lucrezia, helpless, unable to stop her husband retreating into mental and emotional regions where he can no longer be reached.) The next scene is of the father who has “succeeded” in committing suicide. A mat on the floor is his makeshift bier. He is mourned by his family and aged parents. The children are sad and solemn, uncomprehending and bewildered.

In a time-shift, we see the man about to cut his wrist, but “recalled” to life and duty by his little son “calling” for him. Shaving, he looks at himself in the mirror but not self-admiringly, as young Narcissus did by the pool. Rather, he seems not to look at the mirror but to search deep in it for answers to existential questions: What is this life? Who am I? That the day has no structure for him suggests he’s unemployed. The last scene is of a snow-covered landscape, and the spread-eagled body of the man: a dark figure; white snow, and the red of seeping, spreading, blood.  A mobile-telephone rings in the silence of snow and death. Is it a failed attempt to reach out and connect; to comfort and encourage? Was it his worried wife? Perhaps, she has succeeded in finding employment of a kind, and therefore must be absent? Earlier too, the phone had rung but the man had switched it off, wanting only to be left alone. Much credit goes to the main actor, Krishna Subramania, who suggests strength and isolation and, while being vulnerable, is never pathetic. It is a powerful performance, all the more so for its restraint.

As he dreams (or is it fantasy, a “dream” while not asleep?) that a python is winding itself round his naked body, the man makes sensuous sounds. An interpretation suggests itself: the python kills by strangulation; exile-life is suffocating, and death the much longed for orgasm of release. Repeatedly, the man sees himself dead: in Freudian terms, it’s “wish fulfilment”. Freud, in ‘Beyond the Pleasure Principle’, theorised that we are driven by two major instinctual drives: the sexual (associated with life and self-preservation), and its opposite, the death-wish (thanatos), that is, a seeking to return to an earlier state, to the quiet of non-existence. In some individuals and / or in certain circumstances, thanatos triumphs over the drive to live. In Dr Johnson’s ‘The History of Rasselas’ (Chapter 43) it is observed that the worst possible misfortune which can befall a human being is the loss of reason. Depression, as in this film, overcomes reason, erases the victim’s sense of balance, proportion and perspective and, with those gone, her or his sanguinity. Freud drew a distinction between “melancholy” (generalised and vague) and “mourning” or sorrow which is specific: similarly, a “pain” can be located, identified and, often, treated while an “ache” is more difficult to cure or alleviate, being diffused.

Banishment and exile are as old as human history. In the Western tradition, the Trojans, their city captured and sacked, are carried away into exile. At the beginning of the Common Era, Ovid wrote his ‘Sorrows Of An Exile’. In Richard II (Act 1, Sc. iii), Norfolk, sent into exile, laments the loss of his “native English”. (Norfolk feels he is too old to master, and feel comfortable in, a new “tongue”. By depriving him of his language, he has been sentenced to “speechlessness”, which is a form of death.)  Among other events closer in time are the ‘Partition’ of India, the expulsion of Asians from Uganda, and “ethnic cleansing” in the Balkans. Some Sri Lankan Tamils (such as the producer’s parents?), feeling oppressed in the present, despairing of the future at “home”, undertake costly, arduous and hazardous journeys into exile. 

As already mentioned, many writers have dealt with the theme of exile. At random, Salman Rushdie, Caryl Phillips and Edward Said come to mind. It is very much a modern phenomenon and condition. However, Ian Buruma (2001) and others have warned that exile has become “fashionable”: the focus tends to be on writers and intellectuals, and those of the middle-class, rather than on those who do not “make it”, those who eke a difficult, if not despairing, existence on the margins of their new country. These remain, forever, foreigners. To them, to be a stranger and feel strange is everyday and normal. In the film, a broken branch, black on the white snow, lies by the path, severed and  “out of place”.

We are social beings, and to life in society and community, language is normal and expected. A silent person can cause unease. In ‘Julius Caesar’, Cassius makes Caesar uncomfortable because he (Cassius) reads, observes and thinks – three activities which imply silence. Of course, there are many kinds of silence, such as the silence of the dead, which we expect and accept. Silence can also mean harmony: “A friend is someone with whom one can be silent” (L.S.). In a structural dichotomy, silence is the absence of sound, even as darkness is the absence of light, but in drama and film, we depend not on narration but presentation, presentation through action and language, the last being mainly dialogue, that is, speech. So silence in a film draws attention to itself, becomes significant. Paradoxically, the absence (of sound) becomes a presence. 

Shadows reflect mutely; are silent. The silence here seems to signify the sense of utter alienation and loneliness that the central character experiences, despite his family, relations and friends. As the film proceeds, this silence intensifies and becomes almost palpable. ‘Shadows of Silence’ is a silent scream for help from one who is no longer accessible and, therefore, beyond help.  “I was much too far out all my life / And not waving but drowning” (Stevie Smith). That the man has no name makes him anonymous and, at the same time, representative of the many unnoticed, “unsung” casualties of exile – irrespective of time, place and ethnic origin. (Of course, in as much as some living in their own homeland also fall victim to depression, by no means do all exiles succumb to it: others at the birthday party are happy.)

We remember the children. Their home will be France; their attitudes, expectations and experiences different – and, hopefully, so too their lives. The date on the child’s birthday cake is January 2010. The month explains the snow, but also marks the start of a New Year and beginning. Foreign countries, sometimes, kindly gift what “home” unkindly denied.

Only one solace:
there have been
others too,
lingering in that twilight,
who shed
home and country…

(‘Leaving the Country’, Bahadur Tejani)

Charles Ponnuthurai Sarvan
Germany                                                   

(As often, with thanks to Liebetraut Sarvan)

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

Kailasapathy_K_Profதேசம்நெற் இணையம் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தைப் பற்றி பல கட்டுரைகளை அண்மைக் காலமாக வெளியிடுகிறது. அக்கட்டுரைகளையும் அவற்றிற்கான பின்னூட்டங்களையும் படித்த பின்பு ஒரு முக்கிய விஷயத்தைப் பற்றி எனது மனதில் தோன்றுவதை சொல்லியே ஆக வேண்டும் என்ற உந்துதலின் காரணமாக இதை எழுதுகிறேன். பெரும்பாலானவை எனது அனுபவங்களின் வெளிப்பாடே.

முதன் முதலாக அவரை நேரில் பார்த்தது அவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவுக்கு பிரதம விருந்தினராக வந்திருந்த போது. அக்காலப் பகுதி அவர் யாழ்ப்பாண வளாகத்தின் தலைவராகப் பொறுப்பேற்று சில மாதங்களே ஆகியிருந்த நேரம். அப்போதைய யாழ்ப்பாண மக்கள் பல்கலைக் கழக வளாகத்தையும் அதன் பிரதிநிதிகளையும் தமக்குப் பிடிக்காத அரசாங்கம் ஒன்றின் எச்சமாகப் பார்க்கும் (தமிழரசுக் கட்சியின்) மனநிலையில் தான் இருந்தனர். என்னிடமும் கைலாசபதி என்ற பெயர் அன்றைய தினத்தில் பெரிதான மதிப்புணர்வை ஏற்படுத்தியதாக நினைவில்லை. வாசலில் இருந்து விழா மண்டபத்திற்கு திருமதியுடனும் குழந்தைகளுடனும் வந்திருந்த அவரை எல்லா மாணவர்கள், ஆசிரியர்களுடனும் அழைத்துச் சென்றபோதுதான் அவரை மிக அருகில் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது. சாதாரணமாக யாழ்ப்பாணத் தமிழர்கள் மத்தியில் காண முடியாத உயர்ந்த, கட்டுமஸ்தான, சிவந்த உருவம் இயல்பாகவே மதிப்பைப் பெறும் தன்மையைக் கொண்டிருந்தது. பெரிய மனிதர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எனது மாணவ மனது உடனடியாக எண்னிக் கொண்டது.

விழாவில் அவர் நிகழ்த்திய உரை இன்று பெரிதாக நினைவில்லை. ஆனால் அந்த உரையில் அவர் சொன்ன இரண்டு விஷயங்கள் நினைவில் நிரந்தரமாக நிலை கொண்டுவிட்டன. ஒன்று அதே கல்லூரியின் பழைய மாணவர் அவர் என்பது. மற்றையதை அவருடைய வார்த்தைகளிலேயே சொல்கிறேன்:  “நான் பல்கலைக் கழகத்தில் மாணவனாக இருந்த போது எல்லோரும் பொருளியல் படிக்கவே விரும்பினார்கள். நான் தமிழ் படிக்க விரும்பினேன்.” ( கலைப்பீடத்திற்குச் சென்றால் பொருளியல் படிப்பது பெருமையான விஷயமாக இன்றும் தமிழ் மானவர்கள் நினைக்கிறார்கள்.)
இந்தக் கூற்றின் உட்பொருளையும் அத்தகைய ஒரு தீர்மானத்தை மேற்கொண்ட ஒரு இளம் மனதின் இயல்பையும் நான் அடிக்கடி சிந்தித்துப் பார்ப்பதுண்டு. அப்போது எனக்கு மோலியரின் வாழ்க்கை பற்றி எடுக்கப் பட்ட படமொன்றில் பார்த்த காட்சி நினைவுக்கு வரும். அக்காட்சி வெளிப்படுத்தும் மோலியரின் மனனிலையுடன் இந்த மனநிலை ஒத்துப் போவதாக நான் உணர்வதுண்டு. மோலியரின் தந்தை பெரும் பணக்காரர். குடும்ப கெளரவம்இ மற்றும் அதன் நலன்களைக் காப்பாற்றும் பொருட்டு இளம் மோலியரை சட்டம் படிக்குமாறு வற்புறுத்துகிறார் தந்தை. ஆனால் இளம் மோலியர் சொன்ன பதில் தந்தையை அதிர்ச்சியடைய வைக்கிறது:  “நான் நாடகம் எழுதப் போகிறேன்!” பிரெஞ்சு நாடகத்தின் தந்தையாக இன்று கொண்டாடப்படும் மோலியர் அன்று சட்டம் படிக்கப் போயிருந்தால்..?

யாழ்ப்பாண உயர் சைவ வேளாள, பணக்கார குடும்ப வாரிசான கைலாசபதி சட்டமோ அல்லது பொருளியளோ படிக்க ஏன் போகவில்லை? தமிழ் சமூகத்தின் மந்தைத் தனமான சிந்தனைப் போக்கிலிருந்து மாறுபட்டு நிற்கும் ஒரு மன நிலையை அவர் கொண்டிருந்தார் என்பதாலா அல்லது “தமிழ் என் உயிர்” என்று அரசியல் செய்யும் எண்ணத்தைக் கொண்டிருந்தாரா?
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நான் மாணவனாக நுழைந்த போது மீண்டும் அவரை நேரில் காண்பதற்கும் அவரை மிக அருகில் இருந்து அவதானிப்பதற்குமான வாய்ப்பு கிட்டியது. அப்போது அவர் கலைப் பீடாதிபதியாகப் பதவியிறக்கப் பட்டிருந்தார், அப்போதும் அவருடைய சிந்தனை முறையின் தன்மை பற்றி என்னிடம் பல கேள்விகள் எழுந்தன. தானே முன்னின்று உருவாக்கிய பல்கலைக் கழகத்தினுள் தான் ஏற்கனவே வகித்த பதவியை விட குறைவான பதவியை வகிக்க எப்படி அவர் போன்ற ஒரு மனிதரால் முடிகிறது? தமது தகுதிக்கு மீறிய தலை வீக்கமும், தமது பதவிகள் தரும் மதிப்பு என்னும் மாயைக்குள்ளிருந்து மீள முடியாத மனநிலையும் கொண்ட மனிதர்களால் நிரம்பிய ஒரு சமூகத்தில் இவர் வித்தியாசமான சிந்தனையுடய ஒரு மனிதரா? ஏதாவது ஒரு வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் ஒரு குறைவான பதவியை என்றாலும் ஏர்றுக் கொண்டு ஓடுவதுதான் தன்மானமிக்க செயல் என்று கருதுபவர்களிடையே இவர் சிந்திக்கத் தெரியாத மனிதரா? அல்லது தான் கொண்டிருந்த அறிவை தான் சார்ந்துள்ள சமூகத்தின் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வது தனது கடமையெனக் கருதினாரா?

அவர் வெறும் கலைப் பீடாதிபதியாக இருந்த போதும் அவரது ஆளுமை வீச்சு பல்கலைக் கழகத்தைக் கடந்தும் எமது சமூகம் மற்றும் தேசத்தின் எல்லைகளைக் கடந்தும் பரந்திருந்ததை என்னால் உணரக் கூடியதாக இருந்தது. பதவியில் இல்லாவிட்டாலும் பல்கலைக் கழகத்தினுள் அவர் ஒரு முன் மாதிரியாக விளங்கினார். யாருடனும் வம்பளந்து கொண்டிருந்ததையோஇ வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டிருந்ததையோ நான் என்றும் கண்டது கிடையாது. உடலின் இயக்கத்திலும் பேச்சிலும் தன்னம்பிக்கையையும் தலைமை தாங்கிச் செல்லும் பண்புகளையும் எப்போதும் வெளிப்படுத்தும் தன்மை அவரிடமிருந்தது. ( அதே காலத்தில் பதவிகளை பற்றிப் பிடித்துக் கொண்டிருந்த பலர் உடலை அசைத்து நடப்பதற்கே மிகவும் சிரமப் பட்டனர். )

பீடாதிபதியாக இருந்த போதும் மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதை முக்கிய கடமையாகச் செய்தார். அவரிடம் தமிழ் பயின்ற மாணவர்கள் அவரிடம் பாடம் கேட்பதை பெரிய விஷயமாகக் கருதினார்கள். (அவருடைய காலப் பகுதியில் பல்கலைக் கழகத்தில் பயின்றதை நானும் பெரிய விஷயமாகவே உணர்கிறேன்.) அவர் பணியாற்றிய காரணத்தினாலேயே யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் பெயர் பெற்றது என்றால் அது மிகையில்லை. அந்தப் பெருமையை வேறு எந்த துணை வேந்தராலோ அல்லது பேராசிரியராலோ யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திற்கு பெற்றுத் தர முடியவில்லை. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றியதாலேயே அவர்கள் பெயர் பெற்றனர். பீடாதிபதியாக பதவி வகித்த போதிலும் பல்கலைக் கழகத்த்கின் பெயரை நிலை நிறுத்துபவர்களில் முக்கியமானவராக அவர் இருந்தார்.

நான் அகதியாக தமிழ் நாட்டுக்கு சென்ற பின்பு மதுரையில் நடந்த ம்ர்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டுப் பந்தலில் ஒரு பார்வையாளனாக அமர்ந்திருந்தேன்.. தற்செயலாக என்னருகில் அமர்ந்திருந்த கல்லூரி மானவர்களுடன் உரையாடியபோது அவர்கள் ஒரு நபரைப் பற்றிப் பெரிதும் விதந்து பேசினார்கள்.. அந்த நபர் கைலாசபதி. தமிழ் கல்வியும் ஒரு பல்கலைக் கழகப் பதவியும் ஒருவருக்கு இத்தகைய மதிப்பைப் பெற்றுத்தர முடியுமா? அப்படியானால் இத்தகைய புகழைப் பெறுவதற்கு இந்த மனிதரிடம் இருந்த ஆளுமைகள் என்ன?

லண்டன் வந்த பின்பு ஒரு நூல் நிலையத்தில் அறிமுகமான தமிழ் அன்பர் ஒருவருடன் உரையாடியபோது அவர் தான் இலங்கையில் வகித்த பதவிகளைச் சொல்லிக் கொள்வதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அவர் மிகப் பெருமைப் பட்டுச் சொன்ன விஷயம்: “நான் கைலாசபதிக்கு சிறு வயதில் தமிழ் படிப்பித்தேன்”. இத்தனைக்கும் அந்த அன்பர் ஒரு தமிழாசிரியர் அல்ல. தனது வீட்டுக்கு அருகில் குடியிருந்த கைலாசபதி தன்னைக் கண்டவுடன் தமிழ் புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு ஓடி வருவார் என்று சொன்னார். அந்த அன்பர் சொன்ன சொன்ன இன்னொரு விஷயம் முக்கியமானது. கைலாசபதி அகர முதலை முதன் முதலாக அறியத் தொடங்கியபோது அவருக்கு வயது ஏழு. அப்போது கைலாசபதி வீட்டில் ஆங்கிலம் பேசுபவராக இருந்தார்.

கைலாசபதி எழுதிய நூல்கலைப் படிக்காதவர்கள் கூட அவர் பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளைப் படித்திருப்பார்களேயானால், ஒரு சாதாரண வாசகனைக் கூட அறிவார்ந்த நிலைகளுக்கு உயர்த்திச் செல்லும் லாவகத்தை தனது எழுத்து திறமையால் அவர் கையாண்டார் என்பதை புரிந்து கொள்ள முடியும். அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்து விட்ட எனது நண்பர் ஒருவர் அண்மையில் என்னிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார். மூன்று நாடகங்கள் என்ற நூலுக்கு கைலாசபதி எழுதிய முன்னுரையை எங்காவது பெற்றுத் தர முடியுமா என்று. நான் அதனை யாழ்ப்பாண பல்கலைக் கழக நூலகருக்கு அனுப்பினேன். நூலகர் உடனடியாக கைலாசபதி எழுதிய முன்னுரையை அனுப்பிய போது அதனைப் படிக்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. பத்திரிகை வாசகனுக்குரிய எளிய முறையில் எவ்வாறு மிக ஆழம் நிறைந்த கருத்துக்களையும் வெளிப்படுத்த முடியும் என்பதற்கு அந்த முன்னுரை சிறந்த உதாரணம்.

அவர் தினகரன் ஆசிரியராக இருந்த போது அவர் ஆற்றிய தமிழ் பணியைப் பற்றி  இன்னொரு நீண்ட கட்டுரையை எழுதலாம்.. தமிழ் நாட்டு இலக்கியமே எமது இலக்கியம் என இலங்கைத் தமிழ் சமூகம் மயங்கிக் கிடந்த காலத்தில் ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்தைப் பிரசுரித்து ஈழத்து இலக்கியம் வளர அவர் அயராது உழைத்தார். ( இன்றும் கூட ரமணி சந்திரனைப் படிப்பதில் நமக்குள்ள ஆர்வம் தமரைச்செல்வியைப் படிப்பதில் இல்லை) எமது மக்களின் வாழ்க்கையும் இலக்கியமாக முடியும் என்பதற்கு வழிசமைத்துக் கொடுத்தவர் கைலாசபதி.

அவர் பயின்ற கல்வியோ அவர் வகித்த பதவிகளோ அவரது இயல்புகளில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சாதாரண நிலையில் இருந்தவர்களுடனும் நட்பு பாராட்டினார். நாடி வந்தவர்களுக்கு தம்மால் இயன்ற உதவியைச் செய்ய கைலாஸ் எப்போதும் தயங்கியதில்லை என நீர்வை பொன்னையன் தெரிவித்ததாக ஒரு நண்பர் என்னிடம் சொன்னார். தமிழை நேசித்த அனைவருடனும் கைலாசபதி நட்புணர்வு பாராட்டியதாக எழுத்தாளர் அ. முத்துலிங்கம் தீராநதியில் எழுதிய கட்டுரையொன்றில் தெரிவித்திருந்தார். இதைப் படித்துப் பாருங்கள் என பல எழுத்தாளர்களின் புத்தகங்களை தன்னிடம் தந்து அவர்களை கைலாஸ் தனக்கு அறிமுகம் செய்து வைத்தார் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர் திடீரெனெ மறைந்த போதும் நான் பல்கலைக் கழக மாணவனாக இருந்தேன். அவருடைய மறைவு பல்கலைக் கழகத்தினுள் பெரும் வெற்றிடத்தை தோர்றுவித்ததை மாணவராகிய எம்மால் உணரக் கூடியதாக இருந்தது. அவருடைய இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது என்ற எண்ணம் இயல்பாய் எமக்குள்ளே தோன்றத் தொடங்கியது.

ஆழம் கொண்ட அறிவார்ந்த விவாதங்கள் அற்றுப் போய், மதகுகளில் அமர்ந்து நுனிப்புல் மேய்ந்த நிலையில் விவாதம் செய்வதே கருத்துப் பரிமாற்றம் என ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒரு சமூகத்தில் அவருடைய இடம் என்றும் நிரப்ப முடியாத ஒன்று. 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:

முருகையன் (1935-2009) – நகலும் நாடகமும் : நட்சத்திரன் செவ்விந்தியன்

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ண ஜீவன் ஃகூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்ன ஜீவன் ஃகூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

இலக்கியத்துக்கான நோபல் – பெரு நாட்டு எழுத்தாளர் வர்காஸ் லோசாவுக்கு

00mario-vargas-llosa.jpgபெரு நாட்டைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் மரியோ வர்காஸ் லோசாவுக்கு 2010ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. பெரு நாட்டு அதிபர் தேர்தலில் முன்பு போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் லோசா. சிறந்த எழுத்தாளர், பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். ஸ்பானிஷ் மொழி  பேசும் இலக்கிய கர்த்தாக்களில் முக்கியமானவர் லோசா.

74 வயதாகும் லோசாவை வெகுவாகப் பாராட்டியுள்ள நோபல் பரிசுக் கமிட்டி, அரசியல் அதிகாரம் குறித்த அவரது அலசல், தனி நபர்கள் அதிகார வர்க்கத்தை எதிர்த்துப் போராடும் நிலை, அதில் அவர்கள் அடையும் தோல்விகள், புரட்சிகள் குறித்து மிகுந்த ஞானத்துடன் எழுதி வருபவர் லோசா என புகழாரம் சூட்டியுள்ளது. மேலும் 60களிலும், 70களிலும் லத்தீன் அமெரிக்க இலக்கியம் பெரும் புகழ் பெறவும், பிரபலம் அடையவும் வித்தாக அமைந்தவர்களில் மிக முக்கியமானவர் லோசா என்றும் புகழ்ந்துள்ளது.

லோசா, 30க்கும் மேற்பட்ட நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார். அவற்றில் புகழ் பெற்றவை கான்வர்சேஷன் இன் கதீட்ரல், தி கிரீன் ஹவுஸ் ஆகியவையாகும். 1995ம் ஆண்டு இவருக்கு ஸ்பானிஷ் மொழி இலக்கிய வட்டாரத்தில் அளிக்கப்படும் உயரிய விருதான கார்வன்டஸ் பிரைஸ் கிடைத்தது.

பெருவின் அரிக்யூபாவில் பிறந்தவர் லோசா. இவரது பெற்றோர் விவாகரத்து வாங்கியதால் பொலிவியாவில் தனது தாத்தா, பாட்டியுடன் வளர்ந்தார். பின்னர் 1946ல் மீண்டும் பெரு திரும்பினார்.அங்கு ராணுவப் பள்ளியில் சேர்ந்தார். பிறகு லிமா மற்றும் மாட்ரிட் நகர்களில் இலக்கியம் மற்றும் சட்டம்  பயின்றார். 1959ல் பாரீஸுக்கு இடம் பெயர்ந்தார். மொழி ஆசிரியராகப் பணியாற்றினார். ஏஎப்பி எனப்படும் ஏஜென்சி பிரான்ஸ் பிரஸ்ஸேவில் செய்தியாளராகப் பணியாற்றினார். பிரான்ஸ் டிவியிலும் வேலை  பார்த்துள்ளார். அமெரிக்காவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இவர் ஆசிரியராகப் பணியாற்றியவர்.இப்போது கூட பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் வருகைப் பேராசிரியராக இருக்கிறார்.

1990ல் பெரு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு அல்பர்டோ பிஜிமோரியிடம் தோல்வியுற்றார். பின்னர் 1994ம் ஆண்டு ஸ்பானிஷ் அகாடமியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த எழுத்தாளராக மட்டுமல்லாமல் சாதாரண மக்கள் மீதான அடக்குமுறைகளை தைரியமாக தட்டிக் கேட்கும் புரட்சிவாதியாகவும் திகழ்பவர் லோசா என்பது அவருக்கான கூடுதல் சிறப்பாகும்

ஐ.சி.சி. தரவரிசை பட்டியலில் சங்கக்காரவுக்கு முதலிடம்

sangakkara.jpgஐ.சி.சி. டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன் அவர் நான்காவது இடத்தில் இருந்தார்.

2002 டிசம்பரில் ஹாமில்டனில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்குப் பிறகு தற்போது தான் முதன் முறையாக 3வது இடத்திற்கு சச்சின் முன்னேறியுள்ளார்.

இதுபோல், வி.வி.எஸ். லட்சு மண் 4 இடங்கள் முன்னேறி 8 வது இடத்தைக் கைப்பற்றியுளார். இலங்கை வீரர் குமார சங்கக்கார முதல் இடத்திலும், ஷேவாக் இரண் டாமிடத்திலும் உள்ளனர். ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியல் நேற்று துபாயில் வெளியிடப் பட்டது.

குற்றாலம் வெங்கடாச்சலம் நாகராஜன் – நீங்காத நினைவுகள் : இணுவையூர் நவேந்திரன்

Kutralam_Nagarajanமிகக் கனத்த மனத்துடன் இக்கடினமான செய்தியை எழுதும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன். குற்றாலம் என்றவுடன் எமக்கெல்லாம் மனதில் குதித்தோடும் எண்ணம் – இந்தியாவில் உள்ள குளுமையான இடமான குற்றாலமும் அதில் சில்லென்று ஓடும் அருவியும் மலையும் அதன் சூழலும். ஆனால் அதே குளுமையுடனும் அதே பெயரில் வாஞ்சையுடனும் எம்மிடையே ஒரு மாமனிதன் நேற்றுவரை நடமாடினான். ஆனால் அம்மாமனிதன் இன்று எம்முடன் இல்லை. (தோற்றம் 16 05 1966 – மறைவு 28 09 2010)

நாட்டியப்பாடலில் “இமயம்” என்று அழைக்கப்படக்கூடிய குற்றாலம் வெங்கடாச்சலம் நாகராஜன் செவ்வாய் (28 09 10) 6.30 மாலையில் தனது இறுதிமூச்சை நிறுத்திக் கொண்டார்.

தன்னிகரற்ற ஒரு பாடகன் பாடலாசிரியன் இசையமைப்பாளன். இம்மூன்றும் ஒருசேர அமைவது மிக அபூர்வம். ஆனால் இவை அனைத்தின் சொந்தக்காரன் கற்றாலம் நாகராஜன். இவரது பாடலில் மயங்காதவரே இலர். சிறுவர்களில் இருந்து முதியோர்வரை இவரது இசைப் பிரியர்கள்.

ஒருமுறை பழகினால் காந்தம் மாதிரி இழுக்கும் அதீத மனோபாவம் இவரது உன்னத மனித குணத்தால் இவரது குறைகளை எல்வாம் மறந்து மீண்டும் மீண்டும் இவரை நாடி ஓடும் அகஅழகு கொண்டவர்.

1992ம் ஆண்டளவில் திரு கணேசனால் லண்டனிற்கு அறிமுகம் செய்யப்பட்டார். நுhற்றுக்கணக்கான ஏன் ஆயிரக்கணக்கான என்றுகூடச் சொல்லக்கூடிய நாட்டிய அரங்கேற்றங்களில் பாடிய முடிசூடா மன்னன். பாடல் வடிவமைப்பதிலும் இசையமைப்பதிலும் ஈடு இணையற்ற தனித்திறன் கொண்டவர்.

Kutralam_Nagarajanராஜாவின் “குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா” என்ற பாடலுக்கமைய யாரையும் குறை கூற மாட்டார். எல்லோரிலும் ஒரு நிறைவுகாணும் ஒரு உன்னத மனிதப்பிறவி. இவரது குழந்தை உள்ளத்தால் யாராலும் வெறுக்கப்பட முடியாதவர்.

இசைப்பரம்பரையில் தோன்றிய காரணத்தால் சிறுவயதில் இருந்தே இயற்கைஞானம் கொண்டவர். ஆனாலும் 20 வயதுவரை சங்கீதத்தை முறையாகக் கற்கும் வாய்ப்பு இருக்கவில்லை. பின்னர் சங்கீதமேதை வி ஆர் கிருஷ்ணன் என்பவரிடம் இசையை பயிலும் அரிய வாய்ப்பைப் பெற்றார்

இவரது குரு வி ஆர் கிருஷ்ணன் தியாகராஜா சுவாமிகள் இசைப்பரம்பரையில் வந்த செம்மங்குடி சீனிவாச ஜயர் அவர்களின் மாணவர் எனடபது குறிப்பிடத்தக்கது. காலம் தாழ்த்தி 20 வயதில் இசையைப் பயின்றாலும் மிகக் குறுகிய காலத்திலேயே நாட்டியப் பாடலுக்கு குற்றாலம் நாகராஜன் என முத்திரை பதித்து தனக்கென்று ஒரு அசையா இடத்தை சென்னை மக்களிடம் பிடித்துக் கொண்டார்.

இவரது இசைத்திறன்கண்டு தனது சரித்திரத்தில் முதன்முறையாக “சிறந்த பரதநாட்டிய பாடகன் ” என்று பட்டமளித்து Music Academy madras கெளரவித்தது.

இசையின் உச்சத்தைத் தொட்ட இவர் நினைத்திருந்தால் பணத்தின் உச்சத்தையும் தொட்டிருக்கலாம். மூன்று தலைமுறைக்குத் தேவையான சொத்தை இவரால் தேடியிருக்க முடியும். ஆனால் ஆயிரக்கணக்கான இளம் இசைப்பயிர்களை உருவாக்குவதில் ஆர்வம்காட்டிய இவர் பணத்தின் பக்கம் கவனம் செலுத்தாதது இவரது மகனும் மனைவியும் செய்த துர்ப்பாக்கியமே.

வல்லவன் வகுத்ததே வாய்க்கால் என்பது இயற்கை நியதி. இருப்பினும் காலத்திற்குக் காலம் நல்லவர்களும் தோன்றத்தான் செய்கிறார்கள். வல்லவர்களை காலம் மறந்துவிடும் வரலாறு இருக்காது. ஆனால் நல்லவர்களிற்கு வரலாறு உண்டு. இவர்களை காலம் மறக்காது.

குற்றாலம் நாகராஜனின் இசைச்சேவை சாதனை மிகப்பெரியது. அவரது வெற்றிடம் இலகுவில் நிரப்ப முடியாதது.

அவரது பிரிவால் வாடும் மகன் சங்கீத்திற்கும் துணைவி கோமதிக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

இவரது பூதவுடல் ஈமக்கிரியைகளுக்காக சென்னைக்கு அனுப்பப்பட இருக்கிறது. லண்டனில் இறுதி மரியாதை இன்று (03Oct 2010) காலை இடம்பெற்றது.

இணுவையூர் பதஞ்சலி நவேந்திரன்:( 07916 134 976 – pandkassociates@aol.com)

கொமன்வெல்த் போட்டி இன்று கோலாகலமாக ஆரம்பம்

commonwealt_logo.jpgகொமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகள் டெல்லியில் இன்று கோலாகலமாக தொட ங்குகின்றன. இரவு 7 மணிக்கு தொடக்க விழா நிகழ்ச்சி நடக்கிறது. எதிர்வரும் 14ம் திகதி வரை நடைபெறும்.

இன்று தொடக்க விழா நிகழ்ச்சி மட்டும் நடை பெறும். போட்டிகள் எதுவும் இல்லை. திங்கள் முதல் போட்டிகள் தொடங்குகிறது. 12 நாட்கள் நடைபெறும் இந்த காமன் வெல்த் விளையாட்டுத் திரு விழாவில் 71 நாடுகள் கலந்து கொள்கின்றன. 6700 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸ், ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ஆகியோர் இணைந்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை ஆரம்பித்து வைக்கின்றனர்.

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

UoJ_Signboardஆசியாவின் முதலாவது உயர்தர தங்கிப்படிக்கும் பெண்கள் பாடசாலை (1824 இல் உடுவிலில்) ஆரம்பிக்கப்பட்டது யாழ்ப்பாணத்தில்தான். 1848 ம் ஆண்டிலேயே பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரிக்கு சமனான மேலைத்தேய மருத்துவக் கல்லூரி சாமுவேல் கிறீன் என்பவரால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையின் முதலாவது மருத்துவக் கல்லூரியும் இதுதான்.

1864 ம் ஆண்டிலிருந்து இம்மருத்துவக் கல்லூரியில் தமிழ்மொழியை மருத்துவக் கற்கைக்கான ஊடக மொழியாக்கிய மகத்தான புரட்சியையும் அமெரிக்கரான சாமுவேல் கிறீன் சாதித்தார். 1823 ம் ஆண்டு வட்டுக்கோட்டை குருத்துவக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இக்குருத்துவக் கல்லூரியின் தரம் பல ஐரோப்பிய பல்கலைக்கழகங்களின் தரத்துக்கு ஈடாக இருந்ததை தான் கண்டதாக அக்கல்லூரிக்கு 1848 ம் ஆண்டு விஜயம் செய்த சிறந்த பயண எழுத்தாளரும் பிரித்தானிய உயர் சிவில் அதிகாரியுமான ஜேம்ஸ் எமர்சன் ரெநன்ற் எழுதியிருக்கிறார்.

இக்குருத்துவக் கல்லூரியின் சிறப்பான மாணவர்தான் பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டதாரியும் தமிழ் பதிப்புத்துறையின் தந்தையும் சிறந்த தமிழறிஞருமான சி.வை.தாமோதரம்பிள்ளை. (சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட 1857 ம் ஆண்டில் கலைமாணிக்கான (B.A) இறுதியாண்டுப்பரீட்சை எழுதிய சீ.வை. தாமோதரம்பிள்ளை டீ.வை.விசுவநாதபிள்ளை ஆகிய இருவரே. இருவரும் வட்டுக்கோட்டை குருத்துவக்கல்லூரி மாணவர்கள். இருவருமே சித்தியடைந்தனர். தாமோதரம்பிள்ளை அதிக புள்ளிகள் எடுத்தமையால் முதலாவதாக குறிப்பிடப்பட்டு அதனால் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டதாரியாக ஏற்றுக்கொள்ளப்படுபவர்) யாழ்ப்பாணத்தின் மேற்கூறிய எல்லா சாதனைகளுக்கும் உரோமன் கத்தோலிக்கர்கள் அல்லாதவர்களான கிறிஸ்தவ அமெரிக்க தொண்டூழியச் சபையினருக்கே (American Missionaries) யாழ்ப்பாணம் கடமைப்பட்டது.

இவ்வளவு சிறப்பான கல்வி வரலாற்றையுடைய யாழ்ப்பாணத்தில் உருவான பல்கலைக்கழகம் சீரழிந்து போனமைக்கான காரணங்கள் என்ன? பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்பபாணத்தில் இரண்டாம்தர மூன்றாம் தர (Secondary and tertiary education) கல்விக்கான சிறப்பான நிறுவனங்கள் யாழ்ப்பாணத்தில் உருவானபோதும் முழுமையான பல்கலைக்கழகம் இலங்கையில் இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டின் பின்னரே ஆரம்பிக்கப்பட்டது. பிரித்தானிய சாம்ராச்சியத்தின் முத்தாகவும் முடியாகவும் இந்தியா இருந்ததாலும் அன்று உலகின் இரண்டாவது பெரிய நகரமாக கல்கத்தா இருந்ததாலும் கல்கத்தா மும்பாய் சென்னை ஆகிய நகரங்களிலேயே பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. 1974 ம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாகவே யாழ் வளாகம் உருவாக்கப்பட்ட போதும் 1978 ம் ஆண்டிலிருந்து தனிப்பல்கலைக்கழகமாக இருந்து வருகிறது. 1978 ம் ஆண்டிலிருந்து தனிப்பல்கலைக்கழகமாக இயங்கிவரும் ஏனைய இலங்கைப் பல்கலைக்கழகங்ளோடு ஒப்பிடுகிறபோது மிகப்பின்தங்கிய சீரழிந்த பல்கலைக்கழகமாக இருப்பது யாழ் பல்கலைக்கழகம்தான்.

பின்தங்கலுக்கும் சீரழிவுக்குமான காரணங்களை பகுத்தாராய்ந்து அறிவதற்கு இப்பல்கலைக்கழகத்தின் வரலாற்றை பின்வரும் இரண்டு காலங்களாகப் பிரிக்க வேண்டியிருக்கிறது.
புலிப்பாசிசத்திற்கு முற்பட்ட காலம் (1974 இலிருந்து 1986 வரை)
புலிப்பாசிச காலம்(1986 இலிருந்து இன்றுவரை)

புலிப்பாசிசத்திற்கு முற்பட்ட காலம் (1974 இலிருந்து 1986 வரை)

1974 ம் ஆண்டிலிருந்து 1977 ம் ஆண்டுவரை யாழ் வளாகத்தின் தலைவராக இருந்தவர் க.கைலாசபதி. தனது முதலாவது கட்டுரையில் த.ஜெயபாலன் பின்வருமாறு கூறுகிறார்.

Kailasapathy_K_Prof“யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாகச் செயற்பட்டவர் பேராசிரியர் கைலாசபதி. இவரே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்வேறுபட்ட துறைகளையும் உருவாக்கி ஆசியாவில் சிறந்ததொரு பல்கலைக்கழகமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை ஆக்க வேண்டும் என்ற விரிந்த பார்வையைக் கொண்டு இருந்ததுடன் அதனை நோக்கியும் செயற்பட்டார். பேராசிரியர் கைலாசபதியை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தந்தை எனக் கூறுவது மிகப்பொருத்தமானது. இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கம்பஸ்கள் கொழும்பு கண்டி நகரங்களை மையப்படுத்தியே இயங்கி வந்தன. இந்தச் சூழலிலேயே பேராசிரியர் கைலாசபதி தமிழ் பிரதேசம் ஒன்றுக்கான பல்கலைக்கழகத்தை யாழ்ப்பாணத்தில் நிறுவினார். கொழும்பு, கண்டி ஆகிய பாரம்பரிய பல்கலைக்கழக நகரத்துக்கு வெளியே அமைக்கப்பட்ட முதலாவது பல்கலைக்கழகம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகும். இக்காலகட்டத்தில் யாழப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் மட்டுமல்ல சிங்கள முஸ்லிம் மாணவர்களும் கல்வி கற்பதனை பேராசிரியர் கைலாசபதி உறுதிப்படுத்தி இருந்தார்.”

கைலாசபதியைப் பற்றி ஜெயபாலன் எழுதியவைகள் எல்லாம் அதீதமான மிகை மதிப்பீடுகள். மிகத் தவறானவைகள். சனத்தொகை பெருகுகிறபோது பல்கலைக்கழக வளாகங்களை விரிவாக்குகிற வழமையான கல்வி அமைச்சின் நடவடிக்கை காரணமாகவே யாழ் வளாகம் நிறுவப்பட்டது. இலங்கையின் மூன்றாவது பெரிய நகரமாக யாழ்ப்பாணம் இருந்ததால் அங்கு ஒரு வளாகம் நிறுவவேண்டிய தேவை நீண்டகாலமாகவே இருந்துவந்தது. யாழ் பல்கலைக்கழகம் கைலாசபதியின் தரிசனத்தில் உருவானது என்பதும் அதனை அவரே நிறுவினார் என்பதும் வேடிக்கைக்குரிய கூற்றுக்கள். கைலாசபதி வளாகத்தலைவர் மட்டுமே என்பதால் அவரது அதிகாரம் மிக மட்டுப்படுத்தப்பட்டது. யாழ் வளாகத்தில் உருவாக்க வேண்டிய துறைகளை தீர்மானித்தது அன்றைய இலங்கைப் பல்கலைக்கழக துணைவேந்தரும் யுனிவேசிட்டி செனட் சபையும் கல்வி அமைச்சுமே. எல்லா வளாகங்களிலும் மூவின மாணவர்களும் கற்கும்படி இருப்பது அன்றைய கல்விகொள்கை வகுப்பாளாகளின் நடைமுறையே தவிர அது கைலாசபதியின் நடவடிக்கை அல்ல.

நியாயப்படி பார்த்தால் கைலாசபதிக்கு அன்றைய யாழ் வளாக தலைவர் பதவி கிடைத்திருக்கவே முடியாது. சிரேஷ்ட அடிப்படையிலும் அறிவு மற்றும் திறன் அடிப்படையிலும் கைலாசபதி கடைசியிலேயே இருந்தார். தனிநாயகம் அடிகளார் (1913-1980). சீ.ஜே.எலியேசர் (1918-2001). சின்னப்பா அரசரட்ணம்.(1930- 1998) ஜெயரட்ணம் வில்சன் (1928-2000) போன்றவர்களின் திறமைகளோடும் சாதனைகளோடும் ஒப்பிடுகிறபோது கைலாசபதியினுடையவை மிகச் சாமானியமானவை. மேற்கூறிய பேராசிரியர்கள் சர்வதேச ரீதியாக தங்களை நிலை நிறுத்தியவர்கள். மிகச்சிறப்பான அமெரிக்க கனேடிய ஆஸ்திரேலிய மலாய பல்கலைக்கழகங்கள் மேற்கூறியவர்களின் திறமைகளை இனங்கண்டு மேற்கூறியவர்களை தங்கள் பல்கலைக்கழக பேராசியர்களாக்கின. துறைத்தலைவர்களாக்கின. துறைசார்ந்த நூல்களை எழுதுமாறு அவர்களைப் பணித்தன. திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும் என்று பாரதி பாடியது இதனைத்தான். இன்றும் இப்பேராசிரியர்கள் எழுதிய நூல்கள் மிகச்சிறப்பானவையாக இருக்கின்றன. கைலாசபதி எழுதிய நூல்கள் அவர் வாழ்நாட்காலத்திலேயே நிராகரிக்கப்பட்டன. Literary cognition இல்லாத இலக்கிய விமர்சகராக இருந்ததும் காய்தல் உவத்தல் இல்லாத புலமையாளராக இருப்பதற்குப்பதில் மார்க்ஸிய சித்தாந்த ஓதுகைக்கு(Marxist indoctrination) ஆட்கொள்ளப்பட்டவராக இருந்ததும் கைலாசபதி ஒரு academic ஆக தோல்வியடைந்தமைக்கான காரணங்கள்.

சு. வித்தியானந்தன் கைலாசபதியின் பல்கலைக்கழக ஆசிரியரும் கைலாசபதியைவிட சீனியரும். இருந்தும் கைலாசபதி குருவை விஞ்சிய சீடப்பிள்ளையாக பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராசிரியர் பதவிக்கு வித்தியானந்துடனேயே போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

கைலாசபதிக்கே தனக்கு நியாயப்படி யாழ் வளாகத்துக்கான தலைவர் பதவி கிடைக்காது என்பது நன்கு தெரிந்திருந்தது. ஆனால் கைலாசபதி குதிரை வியாபாரத்திலும் (Horse trading) அரசியல் காய் நகர்த்தல்களிலும் மிக வல்லவராக இருந்தார். இடதுசாரி கூட்டு சுதந்திரக்கட்சி ஆட்சியிலிருந்த போது இடதுசாரித் தொடர்புகள் மற்றும் அமைச்சர் குமாரசூரியர் என்பவர்களைப் பயன்படுத்தி புகுந்து விளையாடலானார். 1974 ம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடந்த நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை கைலாசபதியும் சிவத்தம்பியும் புறக்கணித்தனர். ஜனநாய அடிப்படையில் மாநாட்டுக் குழுவினர் அதனை யாழ்ப்பாணத்தில் நடாத்துவது என்று தீர்மானித்தனர். அதனைப் புறக்கணித்து தான் கலந்து கொள்ளாததையெல்லாம் ஒரு துரும்புச்சீட்டாகப் பயன்படுத்தி அதேயாண்டு ஆகஸ்டில் யாழ் வளாகம் திறக்கப்பட்டபோது தலைவர் பதவியை அடித்துப்பறித்தார்.

Thaninayagam_Adikalதொலைதூரப் பார்வையும் புலமையும் மிக்க கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட அரசியல் தலைவர்களும் அமுக்கக் குழுக்களும் தமிழர் மத்தியில் அன்றிருந்திருந்தால் நான் மேலே குறிப்பிட்ட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கடைமையாற்றிய, கடமையாற்றிக் கொண்டிருந்த நான்கு பேராசிரியர்மாரை அணுகி அவர்களிலொருவரை வளாகத்தலைவராக்க முயற்சித்திருக்கலாம். 1974 ம் ஆண்டு தனிநாயகம் அடிகளாருக்கு 61 வயது. தமிழாராய்ச்சி மாநாடுகளை சர்வதேச மயப்படுத்தியதிலும், தமிழையும் தமிழியலையும் உலகப் பல்கலைக்கழகங்களில் பாடநெறியாக்கியதிலும், தமிழை செம்மொழியாக்கியதிலும் அடிகளாரின் பங்கு அளப்பரியது. அவர் 1974 யாழ் வளாக தலைவருக்கு பொருத்தமானவர்களில் ஒருவரல்லவா.

கைலாசபதி வெளிப்பூச்சுக்குத்தான் மார்க்ஸிஸ்ட். உள்ளுக்குள் தடித்த சைவ வெள்ளாளர் என்பதையும் யாழ் இந்துக் கல்லூரியிலிருந்து வந்தவர் என்பதையும் பயன்படுத்தி அரசியல் செய்தவர். 2006 ம் ஆண்டுக்கு முதல் சைவ வேளாளர் அல்லாத எவரையும் பல்கலைக்கழக கவுன்சில் துணைவேந்தராக சிபாரிசு செய்ததில்லை.

முதற்கோணல் முற்றும்கோணல் என்ற அடிப்படையில் முற்றிலும் ஒரு அரசியல் நியமனமான கைலாசபதியின் வளாகத் தலைவர் பதவியிலிருந்தே யாழ் பல்கலைக்கழக சீர்கேடு ஆரம்பிக்கிறது. கைலாசபதி ஒரு நன்கு அறியப்பட்ட ஸ்திரி லோலர்(womanizer) அவரது மாணவிகளாக இருந்து பின்னாட்களில் விரிவுரையாளர் பேராசிரியர் ஆன பெண்களோடு அவருக்கு இருந்த உறவுகளையும் பல்கலைக்கழக சமூகம் நன்கு அறிந்தே இருக்கிறது. இங்கு பாலுறவு காரணமாக விரிவுரையாளர் தெரிவில் பாரபட்சங்கள் காட்டப்படடிருக்க அதிக வாய்ப்புண்டு. மேலும் மேலிடத்தில் உள்ளவரே இவ்வாறு நடந்துகொள்ளும்போது கீழிடத்தில் உள்ளவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்கள் செய்ய அவர்கள் மீது மேலிடம் நடவடிக்கை எடுக்கமுடியாத நிலையேற்படும்.

மாணவியொருவரின் சம்மதத்தோடு பல்கலைக்கழக அதிகாரி அல்லது விரிவுரையாளர் பாலுறவில் ஈடுபட்டாலும் இதனைப் பணயமாக வைத்து ஊழல்கள் இருதரப்பிலிருந்தும் புரியப்பட்டு கல்வித் தராதரங்கள் சமரசம் செய்யப்பட வாய்ப்புள்ளதால்தான் இவை பாரிய குற்றச்செயல்களாகக் கருதப்படுகின்றன. இலங்கைப் பல்கலைக்கழகங்களில் காணப்படுகிற ஒரு முக்கியமான கொடூரமான அநீதி என்னவென்றால் ஒரு மாணவன் அல்லது மாணவி தான் எழுதிய பரீட்சைக்கு தனக்கு வழங்கப்பட்ட புள்ளிகளில் பாரபட்சம் காட்டப்பட்டிருக்கிறது என்றால் தனது விடைத்தாளை பெற்றுப் பார்ப்பதற்கோ அல்லது அதனை மீளத்திருத்துமாறு கேட்பதற்கோ உரிமையற்றிருப்பதுதான். 25 புள்ளி எடுத்து ஒருவருக்கு 75 புள்ளி வழங்குவதற்கும் இதன் மறுதலையைச் செய்வதற்கான அதிகாரமும் விரிவுரையாளர்களிடம் உண்டு. Transparency, freedom of information என்பன ஏறத்தாள முற்றாகவே பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கின்றன. பாலுறவையும் இதனோடு இணைக்கிறபோது இலங்கைப் பல்கலைக்கழகங்கள் எவ்வளவு மோசமான நரகங்களாக இருக்கமுடியும் என்பது புரிகிறதல்லவா.

UoJ_Sivathamby_K_Profகைலாசபதியும் சிவத்தம்பியும் தமிழ்ச்சூழலில் மிகவும் உயர்த்தி மதிப்பிடப்பட்ட (Over estimated) புலமையாளர்கள் (Academics). இலங்கை போன்ற மூன்றாம் உலநாடுகளில் காலனியாதிக்கத்திற்கு பிற்பட்ட சுதந்திர எழுச்சிக்காலத்தில் மார்க்சிசம் ஒரு சர்வ நிவாரணியாகக் கருதப்பட்டதோடு மிகப்பிரபல்யமான தத்துவமாகவும் மோஸ்தராகவும் இருந்தது. மார்க்ஸிய பேராசிரியராக தன்னை அடையாளப்படுத்துகவர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட மேதைகளாக கருதப்பட அதில் வெற்றிகரமாக கப்பலோட்டியவர்கள்தான் பதியும் சிவமும். அவர்களுடைய எழுத்துக்களுக்கூடாகவும் அவர்கள் உருவாக்கிய மாணவர்கள் ஊடாகவும் அவர்களை மதிப்பிடுகிறபோது மிஞ்சுவது ஏமாற்றம்தான்.

Vithiyanandan_S_Prof1977ம் ஆண்டு யாழ் வளாக தலைவராக சு. வித்தியானந்தன் ஆக்கப்பட்டதும் ஒரு அரசியல் நியமனந்தான். பல்கலைக்கழகம் இரண்டு பிரிவுகள் இருக்கிற ஒரு அரசியல் கட்சிபோல ஆக்கப்பட்டது. இரு தரப்பினருமே தங்கள் அணிக்கு விரிவுரையாள் தெரிவுகள் மூலம் ஆட்சேர்த்தார்களே தவிர பொது நன்மைக்காக பல்கலைக்கழகம் நடத்தவில்லை. இவர்களுடைய அரசியலுக்கு வெளியிலிருந்துதான் பல்கலைக்கழகத்தில் நடந்த சாதனைகள் இருந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தினுடைய கல்விப்புரட்சி கிறிஸ்தவ அமெரிக்க தொண்டூழியச் சபையினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டமையாலும் கிறிஸ்தவ குருத்துவக் குல்லூரிகள் ஊடாகவே அக்காலத்தில் மூன்றாந்தரக் கல்வி பெறக்கூடிய வாய்ப்புக்கள் இருந்தமையாலும் யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவர்கள் அதிலும் குறிப்பாக உரோமன் கத்தோலிக்கர் அல்லாத அங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள் கல்வியில் சாதித்தது அதிகம். இம்மரபில் வந்த கிறிஸ்தவ கல்வியாளர்களான சீலன் கதிர்காமர், நிர்மலா ராஜசிங்கம், ராஜினி திராணகம, சுரேஷ் கனகராஜா, தயா சோமசுந்தரம் போன்றவர்கள்தான் கைலாசபதி மற்றும் வித்தியானந்தன் மரபுக்கு அப்பால் நின்று சாதித்தவர்கள் அல்லது சாதிக்க முயன்றவர்கள். ஏ.ஜே.கனகரட்னா கைலாசபதியைவிடத் திறமையானவர். ஆனால் அவரிடம் கைலாசபதியிடமிருந்த சுறுசுறுப்பும் சாதிக்கவேண்டும் என்றவெறியும் இருந்ததில்லை. இருந்தும் ஏ.ஜே.கனகரட்னா நேரடியாகவோ மறைமுகமாகவோ உருவாக்கிய மாணவர்களாக நிர்மலா ராஜசிங்கம், சுரேஷ் கனகராஜா ராஜன் ஹ_ல் முதலியவர்களைச் சொல்லலாம். நோம் சொம்ஸிக்கு ஒரு Tanya Reinhart மாதிரி கனகரட்னாவுக்கு மூன்று versatile academics மாணவர்களாக கிடைத்தது பெருங்காரியம்தான். இந்திரபாலா ஒரு விதிவிலக்கு. ஆனால் அவர் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டவரல்ல.

புலிப்பாசிச காலம் (1986 இலிருந்து இன்றுவரை)

1986 ஏப்ரல் மேயில் ரெலோ இயக்கம் புலிகளால் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்தே புலிகளின் பாசிசத்தன்மை வெளிச்சத்திற்கு வருகிறது.

பாசிசம் எப்படி செயற்படுகிறது என்பதைக் கண்டடைவதற்டகான ஒரு அருமையான case study ஆக இக்காலத்து யாழ் பல்கலைக் கழகத்தைக் கொள்ளலாம். பாசிச காலத்தில் நல்லவர்களுக்கு காலமில்லை. நல்லவர்கள் நீதி நியாயம் கேட்பதற்காக பாசிஸ்டுகளால் கொல்லப்படுவார்கள். இருக்கிற நல்லவர்கள் எங்காவது தப்பி ஓடுவார்கள்.

1986 நவம்பரில் விஜிதரன் புலிகளால் கடத்தி சித்திரவதை செய்து கொல்லப்பட்டதோடேயே புலிப்பாசிசம் பல்கலைக்கழக ஆட்சிக்கு வரவில்லை. 1986 நவம்பரிலிருந்து 1989 டிசம்பர் வரை பல்கலைக்கழகம் தன் சுயாதீனத்தை பேணுவதற்கு கடுமையாகப் போராடியது. பலமான சுயாதீனமான பல்கலைக்கழகத்துக்கு பலமாக மாணவர் சங்கம் அவசியம். பாசிசம் தொழிலாளர் சங்கங்கள் மாணவர் சங்கங்கள் என்பவற்றிலேயே முதலில் கைவைத்து அவற்றை அடித்து முறித்து ஆட்சி எடுக்கும். 1988 ஜூலையில் யாழ் பல்கலைக்கழக மாணவன் விமலேஸ்வரனைக் கொலை செய்த புலிகள் 1989 செப்டம்பரில் விரிவுரையாளர் ராஜினி திராணகமவைக் கொலை செய்தார்கள். இவைகளுக்கப்பாலும் 1989 ம் ஆண்டு டிசம்பர் மாதம் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தலைவராக தெரிவுசெய்யப்பட்ட அன்ரன் வின்ஸ்லஸ் என்கிற மாணவரும், மாணவர் சங்கமும் பல்கலைக்கழக சுயாதீனத்தை பேணுவதற்காகக் கடுமையாகப் போராடினார்கள்.

1990 ம் ஆண்டு ஜூனில் விடுதலைப் புலிகளால் போர் தொடங்கப்பட்டதும் புலிகள் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தை நெருங்கி “ இலங்கை அரசாங்கம் ஒரு இனப்படுகொலையை முன்னெடுத்து வருவதாகவும் இதற்கெதிராக விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வரும் போரை சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்படும் படியும் மக்கள் எல்லோரும் விடுதலைப் புலிகளின் பின் ஒருங்கிணையுமாறும் வேண்டி” ஒரு தீர்மானத்தை மாணவர் சங்கத்தால் நிறைவேற்றுமாறு கேட்டார்கள். இத்தீர்மானம் நிறைவேற்றப் படாவிட்டால் மாணவர் சங்கம் கலைக்கப்படும் என்று மிரட்டவும் செய்தார்கள். சங்கத்தலைவர் பிரேரணையை வாக்கெடுப்புக்கு விட்டார். பிரேரணை 145 க்கும் 115 இடைப்பட்ட வாக்குவித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. புலிகள் இதனை மீண்டும் வாக்குக்கு விடுமாறு கேட்டனர். இரண்டாவது தடவையும் புலிகளின் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. இரண்டு நாட்களின் பின்னர் புலிகள் அன்ரன் வின்ஸ்லஸ்ஸை அணுகி தாங்கள் வேண்டியபடி தயாரித்த தீர்மானத்தில் பலாத்காரமாக அவரது கையெழுத்தை வைப்பித்தனர். இதன்பின்னர் வின்ஸ்லஸ் மற்றும் அவரது மாணவர் சங்க கூட்டாளிகளும் மாணவர் சங்கத்திலிருந்து ராஜினாமாச் செய்தனர். (அன்ரன் வின்ஸ்லஸ் இப்போது ரொறன்ரோ நகரில் வசிக்கிறார்) இதற்குப்பிறகு மாணவர் சங்கம் புலிகளுக்குச் சேவகம் செய்யும் பொம்மை அமைப்பாக்கப்பட்டது.

ராஜன் ஹூல் சிறிதரன் முதலிய விரிவுரையாளர்கள் புலிகளால் கொல்லப்பட இருந்ததால் கொழும்புக்குத் தப்பிச்சென்றார்கள். செல்வி மனோகரன் போன்ற பல யாழ் பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட நடவடிக்கையாளர்களும் மனச்சாட்சியின் கைதிகளும் புலிகளால் கொல்லப்பட்டார்கள்.

பாசிச காலத்தில் நல்லவர்களுக்கு காலமில்லை. நல்லவர்கள் நீதி நியாயம் கேட்பதற்காக பாசிஸ்டுகளால் கொல்லப்படுவார்கள். இருக்கிற நல்லவர்கள் எங்காவது தப்பி ஓடுவார்கள். அயோக்கியர்களும் சாமானிய தரத்திலுள்ளவர்களுமே (Mediocrity) பாசிசம் பரவும் நிலத்தில் ஓங்கித் தழைப்பார்கள். அயோக்கியர்களின் பாலியல் முதலிய குற்றச்செயல்களை பணயமாக வைத்து அவர்களிடமிருந்து நிபந்தனைகளற்ற சேவகத்தை பாசிசம் பெற்றுக்கொள்ளும். திறமையானவர்களும் நல்லவர்களும் ஒதுங்கியோ ஓடியோ கொல்லப்பட்டோ விடுவதால் திறமையும் தரமுமற்ற சாமானியர்கள் பாசிசத்தை அண்டி நக்கிப்பிழைத்து அடிமைச்சேவகம் செய்து தழைப்பார்கள்.

திறமையான ஒருவரை புலிக்குப் “போட்டுக்கொடுப்பதன்” மூலம் அவரின் இடத்தை எடுக்கலாம். க.சிதம்பரநாதன் செல்வியை புலிக்குக் காட்டிக் கொடுத்துத்தான் செல்விக்கு கிடைக்கவிருந்த விரிவுரையாளர் பதவியை தான் எடுத்தார். ஸ்டாலினின் பாசிச ஆட்சிக்குச் சேவகம் செய்த மைக்கல் கலினின் மற்றும் லவ்றென்ரி பெரியா ஆகிய இருவரும் பாலியல் கொடூரங்களைச்செய்த இரண்டு பெண் பித்தர்கள். ஸ்டாலின் இக்குற்றங்களைச் செய்ய அனுமதித்து அவற்றை அவர்களுக்கெதிரான பணயமாக வைத்திருந்தார். நடராஜா முரளிதரன (சுவிஸ் – கனடா) குமரன் பத்மநாதன் மற்றும் கேணல் கருணா ஆகியோர் இயக்கத்திலிருந்து விலக்கப்பட அல்லது விலக்கப்பட்ட பின்னர்தான் அவர்களது பாலியல் லீலைகளை புலிகள் பகிரங்கப்படுத்தினார்கள் அல்லவா. யாழ் பல்கலைக்கழகத்தில் என் சண்முகலிங்கம் தொடர்ச்சியாக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதையும் இதே பின்னணியில்தான் அணுகமுடியும். 1995 ம் ஆண்டு குடாநாடு இராணுவத்தால் கைப்பற்றப்படும்வரை புலிகளுக்கு தீவிரமான சேவகம் செய்தவர் சண்முகலிங்கம். விஜிதரனை சித்திரவதை செய்து கொன்ற கிட்டு கடலில் இறந்தபோது “ கடலம்மா எங்களுக்கு நீதி சொல்ல எவருமே இல்லையா” என்ற அஞ்சலிக் கவிதையை கிட்டுவுக்கு எழுதியவர்தான் சண்முகலிங்கம் (பார்க்க : தளபதி கிட்டு ஒரு காலத்தின் பதிவு)

UoJ_Posterஇவ்வாண்டு ஜூன் மாதம் மேலுள்ள துண்டுப்பிரசுரத்தை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் வெளியிட்டனர். புலிகள் அழிக்கப்பட்டு ஏறத்தாழ ஓராண்டுக்குப்பிறகே மாணவர்கள் சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் இயங்கக்கூடிய சூழல்வருகிறபோது இது வெளிவருவது குறிப்படத்தக்கது. இதில் குறிப்பிடப்பட்டிருப்பவர்கள் செல்லையா இளங்குமரன், கிருஸ்ணபிள்ளை விசாகரூபன், என்.வீ.எம். நவரத்தினம், கே. அருந்தாகரன் ஆகியோர்.

UoJ_Elankumaran_C_Drசெல்லையா இளங்குமரன் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். இவர் புள்ளிவிபரவியல் துறையைச் சேர்ந்தவர் என்பதால் புள்ளிவிபரவியல் பயிலும் கலைத்துறை மாணவிகள் பலரையே இவர் இலக்கு வைத்து பாலியல் வதைகளும் பாலியல் பலாத்காரங்களும் தொடர்ச்சியாகவும் அதிகளவிலும் புரிபவர். இவருக்கு பாதிக்கப்பட்டவர்கள் வழங்கிய பட்டப்பெயர் கரும்புடையன். இவரது குடுப்ப உறுப்பினர்கள் அல்லது சகோதரங்கள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் அல்லது மாவீரர்கள் என்பதையும் தனது பலமாக குற்றங்கள் புரியும்போது உபயோகிப்பவர். இவரது குற்றங்கள் பன்மடங்கு அதிகரித்ததால் 1995 ம் ஆண்டளவில் மாணவர்கள் துணைவேந்தரிடமும் விடுதலைப் புலிகளிடமும் முறையிட்டார்கள். விடுதலைப் புலிகளுக்கும் வேறு வழியின்றி இளங்குமரனைத் “தூக்க”வேண்டியதாயிற்று. எனினும் அவ்வாண்டே யாழ் குடாநாட்டை இராணுவம் கைப்பற்றியதால் புலிகள் இவரை விடவேண்டியதானது. பின்னர் பாலசுந்தரம்பிள்ளை துணைவேந்தராக வந்தபின்னர் புலிகளோடு கள்ள ஒப்பந்தமும் செய்துகொண்டுவந்த இளங்குமரன் யாழ் பல்கலைக்கழகத்துள் உள்வாங்கப்பட்டார். முதலில் கணிதத்துறையிலிருந்த இளங்குமரனை பாலசுந்தரம்பிள்ளை இம்முறை பொருளியல்துறைக்குள் விரிவுரையாளராக்கினார். இக்காலத்தில் பாலியல் குற்றங்கள் அதிகளவில் நிறுவனமயப்பட்டு விட இளங்குமரனும் தொடர்ந்தார்.

UoJ_Arundaharan_Kதமிழ் விரிவுரையாளர் க.அருந்தாகரன் முள்ளியவளையைச் சேர்ந்தவர். இவரது பல சகோதரங்கள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் அல்லது மாவீரர்கள். இவர் இரண்டாந்தரக் கல்வி கற்றுக் கொண்டிருக்குப்போதே பாலியல் குற்றம் ஒன்றை செய்ததாகக் குற்றச்சாட்டப்பட்டவர். அருந்தாகரனின் சக மாணவியான முள்ளியவளை செங்குந்தா வீதியைச் சேர்ந்த புலேந்திரன் என்பவரின் மகள் கர்ப்பிணியானாள். அவளது கற்பத்திற்கு காரணம் யார் என்று கேட்கப்பட்டபோது அப்பெண் அருந்தாகரனையே அடையாளங் காட்டினாள். அருந்தாகரன் இதனை முற்றாக மறுத்துவிடவே அப்பெண் கர்ப்பிணியாகவே தற்கொலை செய்துகொண்டாள். பல முள்ளியவளை வட்டாரங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

கிருஸ்ணபிள்ளை விசாகரூபன் தமிழ் விரிவுரையாளர். நெடுந்தீவைச் சேர்ந்தவர். இவரும் விடுதலைப்புலிகள் சார்பானவராகத் தம்மைக் காட்டிக்கொண்டவர்.

சங்கீதபூசன் என்.வீ.எம்.நவரத்தினம் இசைத்துறையைச் சேர்ந்தவர். குறிப்பட்டவர்களில் வயது அதிகமானவரும் இவரே.

UoJ_Ganeshalingam_K_Tயாழ் பல்கலைக்கழகம் அயோக்கியர்கள் கள்ளர்கள் பொறுக்கிகள் என்போரின் கடைசிப்புகலிடமானது புலிப்பாசிச காலத்தில்தான். பரஸ்பரம் பாலியல் மற்றும் வேறு குற்றங்கள் பணயமாக வைக்கப்பட இரண்டு தரப்பும் சமரசம் செய்துகொள்கிறது. ஒருவருடைய குற்றத்தை மற்றவர் மறைக்க இதற்குப் பிரதியுபகாரமாக வேறு உதவி எதிர்பார்க்கப்படுகிறது. என். சண்முகலிங்கத்தின் பாலியல் குற்றத்தை பணயமாக வைத்து இதே குற்றச் செயலைச் செய்த கே.ரீ. கணேசலிங்கம் மறுபடியும் சமூகவியல் துறைக்கூடாக மறுபடி உள்வாங்கப்படுகிறார். இவ்வாறே இளங்குமரனும் உள்ளே வந்தார்.

செங்கை ஆழியான் எனப்படுகிற க. குணராசா இலங்கை நிர்வாக சேவையிலிருந்தபோது செய்த மரக்கடத்தல் ஊழலுக்காக குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டதோடு இலங்கை நிர்வாக சேவையிலிருந்து விலக்கப்பட்டவர். இத்தகைய குற்ற வரலாற்றையுடைய செங்கை ஆழியானுக்கு பல்கலைக்கழகத்தில் பதிவாளர் பதவி வழங்கப்பட்டது. இவர்களில் சிலரின் குற்றங்களை பணயமாகவைத்து புலிகள் பல்கலைக்கழகத்திற்குள் இருந்துகொண்டு இவர்களை இரகசியமாக தங்களுக்கான புலனாய்வு இராணுவம் மற்றும் அரசியல் வேலைகளை செய்துதருமாறு பணிக்கிறார்கள். இந்த கோலங்கள் தொடர்ந்துதான் யாழ்பல்கலைக்கழகம் சீரழிந்திருக்கிறது

UoJ_Visakaruban_K_Drஇதிலும் மேலுங் கொடூரத்திற்குரியது என்னவென்றால் பாலியல் குற்றங்களைச்செய்கிற குற்றவாளிகளான விசாகரூபனும், கே.ரீ கணேசலிங்கமும் மாணவர்களின் உளவள ஆலோசகராக (Counsellor) நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். செல்லையா இளங்குமரன் உள்வாங்கப்பட்டது மட்டுமின்றி யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தலைவராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

என்.சண்முகலிங்கத்தின் பாலியல் தொல்லைகள் பல. யாழ்பல்கலைக்கழக மாணவியொருவர் சண்முகலிங்கத்தின பாலியல் தொல்லை தாங்காது யாழ் பல்கலைக்கழகத்தை விட்டு விலகி தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகமொன்றுக்கு சென்று தன் பட்டப்படிப்பை நிறைவுசெய்தவர். இப்போதைய துணைவேந்தரின் உண்மையான பெயர் சண்முகலிங்கம். ‘ம்’ இல் முடிகிறது. உத்தியோக பதிவுகளிலிருப்பது அப்படித்தான். தன் வயதைக் குறைத்துக் காட்டவேண்டும் என்பதற்காக பலவித உளச்சிக்கல் குறைபாடுகளுள்ள இவர் சண்முகலிங்கன் என்றே ‘ன்’ போட்டு தன்னுடைய நூல்களிலெல்லாம் தன்பெயரை எழுதுகிறார். சடைமயிர் வளர்த்து இருப்பது இவரின் இன்னுமொரு இளமையாகும் பிரயத்தனம்.

நல்லவரும் வல்லவருமான ஒரு துணைவேந்தரையே வேண்டிநிற்கிறது யாழ் பல்கலைக்கழகம்.

“திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்யவேண்டும்”

– பாரதி

இம்முறை துணைவேந்தர் பதவிக்கு என்.சண்முகலிங்கம் என். ஞானகுமாரன் எஸ்.சத்தியசீலன் ரட்ணஜீவன் ஹூல் ஆகியோர் போட்டியிடவுள்ளார்கள். யாழ் பல்கலைக்கழகத்தை சீரழித்ததிலும் அங்கு இடம்பெற்ற குற்றச் செயல்களிலும் ஹூல் தவிர்ந்த மூவருக்குமே பங்குண்டு.

UoJ_Gnanakumaran_N_Profஞானகுமாரன் கலைப்பீடாதிபதி. கலைப்பீடத்தில்தான் அதிகளவு பாலியல் குற்றங்கள் இடம்பெறுகின்றன. இக்குற்றங்களுக்கான பொறுப்பை பீட அதிபர் என்ற வகையில் ஞான குமாரனும்தான் பொறுப்பேற்க வேண்டும். ஞானகுமாரன் துணைவேந்தராக வந்தால் பாலியல் குற்றங்கள் மேலும் தொடர்ந்து நடக்க அனுமதியளிக்கப்படும் என்பதில் சந்தேகம் இருக்கமுடியாது. ஞானகுமாரனுடைய சகோதரர் கொழும்புப் பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளர் என்பதால் அவரூடாக ஜி.எல்.பீரிசிடமும் மேலும் ஜனாதிபதியிடமும் கெஞ்சி மண்டாடியாவது துணைவேந்தராக வர கடும் பிரயத்தனம் செய்கிறார் ஞானகுமாரன். ஞானகுமாரன் சண்முகலிங்கம் சத்தியசீலன் ஆகிய மூவருமே திறமை அடிப்படையில் மிகவும் சாமானிய சூனியங்கள். இன்று பல்கலைக்கழகம் ஒரு பாலியல் வதைமுகாமாகி விட்டது. ஒரு யாழ் பல்கலைக்கழக பேராசிரியருடைய மனைவி இப்போது இளைப்பாறிவிட்ட இன்னொரு பேராசிரியருடன் பாலியல் தொடுப்பிலிருந்தே தனது பல்கலைக்கழக பதவியை தங்கவைத்துக் கொண்டார். கணவனுக்கு மட்டுமல்ல முழு பல்கலைக்கழக சமூகத்திற்கும் தெரிந்த பரகசியம் அது. இன்னொரு தமிழ்ப்பேராசிரியர் பழைய நிலமானிய சமூக ஸ்டைலில் பல்கலைக்கழக மாணவியை வைப்பாட்டியாக வைத்திருக்கிறார். சண்முகலிங்கமும், சத்தியசீலனும் யாழ் பல்கலைக்கழகத்திலேயே கலாநிதிப்பட்டம் பெற்றவர்கள். தரமான பல்கலைக்கழகம் எதிலுமே கலாநிதிப்பட்டம் பெறுமளவுக்கு திறமையற்றவர்கள் இருவரும். இந்தியாவில் பெறப்பட்ட ஞானகுமாரனின் கலாநிதி பட்டமும் மிகச் சாமானியமானதுதான். லிங்கமும் குமாரனும் சீலனும் யாழ் பல்கலைக் கழகத்திலிருக்கும்வரை திறமையானவர்கள் எவரையுமே யாழ் பல்கலைக்கழகத்தினுள் அனுமதிக்கப் போவதில்லை. இவர்களுடைய காலத்தில் பல்கலைக்கழகம் மேலும் சீரழியப்போவது உறுதி.

இன்று நாம் ஒரு கால்நூற்றாண்டு கொடும்போர் முடிந்த யுக சந்தியில் நிற்கிறோம். நல்லவரும் வல்லவருமான ஒருவர் அதுவும் வெளிநாட்டார் அவர்தம் திறமையை வணக்கம் செய்த ஒருவர் பத்தொன்பதாம் நூற்றாண்டிலில் சீ.வை.தாமோதரம்பிள்ளை தொடக்கிவைத்த செழுமையான பாரம்பரியத்தின் சிறப்புக்களையெல்லாம் கொண்டுள்ள ஒருவர் விஞ்ஞானத்திலும் (Engineering) மெய்ஞானத்திலும் (Humanities) பாண்டித்தியம் உடைய ஒருவர் ஆதியில் இந்து முதாதையரிலிருந்து வந்த ஆதித்தமிழனின் கருப்புத்தோலையுடைய ஒருவர் நம் கல்வி சமூகத்திற்கு சேவை செய்ய வந்திருப்பது நாம் முன்செய்த தவத்தின் பயனாலல்லவா? ஒரு வாழ்நாள் காலத்தில் தமிழ் சமூகத்திற்குக் கிடைக்கும் இவ்வாறானதொரு அரும் சந்தர்ப்பத்தை நாம் தவறவிடுவோமாயின் ஈழ தமிழ் சமூகம் கற்காலத்திற்கு திரும்பிப் போவது உறுதி.

பேராசிரியர் ரட்ணஜீவன் துணைவேந்தராக வருவதால் கிடைக்கும் பெருநன்மைகள்.

1. குற்றச்செயல்களும் சீரழிவுகளும் மிகுந்த யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு வெளியேயிருந்து வருபவர் கண்ணியமானவர் என்பதால் யாழ் பல்கலைக்கழகத்துக்கு புனர்வாழ்வழித்து அதனை முன்னேற்றுவார்.
2. எந்திரவியல் பேராசிரியர் என்பதால் எந்திரவியல்துறை முதல்முறையாக யாழ் பல்கலைக்கழகத்தில் தழைத்தோங்கும்.
3. சர்வதேச ரீதியாக நன்கு அறியப்பட்ட புலமையாளர் சாதனையாளர் என்பதால் சர்வதேசரீதியாக புகழ்வாய்ந்த தரமான தமிழர் தமிழரல்லாத துறைசார் அறிஞர்களை யாழ்பல்கலைக் கழகத்துக்குள் கொண்டுவருவார்.
4. யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு அதிக அளவில் புலமைப் பரிசில்களை வெளிநாடுகளில் பெற்றுக் கொடுக்குமளவுக்கு சர்வதேச ரீதியில் செல்வாக்கான பெயரையும் தகுதிகளையுமுடையவர்.
5. யாழ் பல்கலைக்கழகத்துக்கு வெளிநாட்டு உதவிகளை அதிக அளவில் பெற்றுக்கொடுக்கக் கூடியவர்.
6. சமூகவிஞ்ஞானத்திலும் பாண்டித்தியம் உடையவர் என்பதால் விஞ்ஞான சமூகவிஞ்ஞான துறைகளிடையே நிதி பங்கிடப்படும்போது சமநிலையைப் பேணுவதோடு கலை மற்றும் சமுகவிஞ்ஞானவியல் துறைகளையும் முன்னேற்றுவார்.
7. யாழ் பல்கலைக்கழகத்தை சர்வதேச ரீதியான தராதரத்துக்கு உயர்த்துவார்.
8. புதிய கற்கை நெறிகளை யாழ் பல்கலைக்கழகத்துக்குள் கொண்டுவரக்கூடியவர்.
9. கல்விசார் சுதந்திரத்தை(Academic freedom) அதிகளவில் மதிக்கக்கூடியவர்

UoJ_Shanmugalingan_N_Profலிங்கமோ குமாரனோ சீலனோ துணைவேந்தராக தெரிவுசெய்யப்பட்டால் வரப்போகிற இன்னொரு ஆபத்து ஒரு பெரும் மாணவர் கிளர்ச்சி வெடிக்கலாம் என்பதே. புலிப்பாசிசம் பல்கலைக்கழக வட்டத்துக்குள் இப்போது இல்லை என்பதால் மாணவர் சுயாதீனமாக இயங்குகிறார்கள். இன்றைய இணைய யுகத்தில் பல்கலைக்கழகத்தில் நடக்கும் ஒரு அநீதி உடனேயே இணையம்மூலம் உலகம்பூராகவுள்ள பல்லாயிரம் பேருக்கு தெரியவர வாய்ப்புண்டு. சுவாமி நித்தியானந்தாவின் பாலியல் லீலை சண் ரீவியிலும் யூரியூப்பிலும் வெளிவந்தமாதிரி யாழ் விரிவுரையாளரின் அக்கிரமும் வெளிவராது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது செல்வாக்கை நல்ல காரியங்களுக்கு உபயோகிக்க வேண்டும். ஒரு காலத்தில் புலியின் காலில் விழுந்த இவர்கள் இப்போது அமைச்சரின் காலில் விழுகிறபோது அதனால் அமைச்சர் கிறங்கக்கூடாது. பிரபாகரனைப்போல வரலாற்றில் நிராகரிக்கப்பட்ட ஒரு கொடுங்கோலனாக வருவதா அல்லது வரலாற்றில் நிலைக்கும் தலைவராக வருவதா என்பது அமைச்சரின் முடிவுகளிலேயே தங்கியிருக்கிறது. யாழ் பல்கலைக்கழகத்து யார் துணை வேந்தராக வருவதை அமைச்சர் விரும்புகிறார் என்பதைப் பொறுத்தது. மக்கள் எல்லாவற்றையும் மிக அவதானமாக் கவனித்து வருகிறார்கள். சண்முகலிங்கம், சத்தியசீலன், நந்தகுமாரன் போன்றவர்கள் துணைவேந்தராக தெரிவு செய்யப்படுவதற்கு அமைச்சர் தேவானந்தாவின் உதவி இருக்குமாயின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உதயன் பத்திரிகை போன்றவைகள் அமைச்சருக்கெதிரான வலுவான பிரச்சாரமாக இதனை உபயோகிக்கலாம். அமைச்சரின் செல்வாக்கும் மாணவர் மற்றும் அவர்தம் பெற்றோரின் மத்தியில் வலுவாகக் குறையலாம்.

அன்று ஆசியாவின் முதலாவது உயர்தரப்பெண்கள் பாடசாலை உருவான யாழ்ப்பாணத்தில் இன்று துணைவேந்தராம் என். சண்முகலிங்கம் என்கிறவர் ஒரு மாணவியை பல்கலைக்கழக மொட்டை மாடியில் பட்டப்பகலில் வல்லுறவு செய்ய கேட்க நாதியற்றிருக்கிறது யாழ் சமூகம்.

இனியொரு விதிசெய்வோம்
அதை என்னாளும் காப்போம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:

முருகையன் (1935-2009) – நகலும் நாடகமும் : நட்சத்திரன் செவ்விந்தியன்

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ண ஜீவன் ஃகூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்