கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

ThesamNetLeaks : கொள்வனவு விதிகளை மீறிய யாழ் பல்கலைக்கழக உப வேந்தருக்கான வேட்பாளர் : த ஜெயபாலன்

Vasanthy_Arasaratnam_Prof_UoJஅண்மைக் காலமாக மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றிருந்த யாழ்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கான தெரிவில் நவம்பர் 27ல் இடம்பெற்ற பல்கலைக்கழக கவுன்சில் உறுப்பினர்களின் தெரிவு புதிய திருப்பத்தை ஏற்படுத்தி இருந்தது. இதுவரை யாழ்-சைவ-வேளாள-ஆண் ஒருவரே பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகத் தெரிவு செய்யப்பட்டு வந்தார். அதற்கு மாறாக பேராசிரியர் ஹுல் 2006ல் பல்கலைக்கழகக் கவுன்சிலால் தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை அச்சுறுத்தலை மேற்கொண்டு பேராசிரியர் ஹுல் ஐ தனது கடமையைச் செய்ய விடாமல் தடுத்தனர். தற்போது பல்கலைக்கழகக் கவுன்சிலால் மூவர் (பேராசிரியர்கள் வசந்தி அரசரட்ணம் ரட்னஜீவன் ஹூல் என் சண்முகலிங்கம்) தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதிக்கு அவர்களுடைய பெயர்கள் வழங்கப்பட்டு உள்ளது. இவர்களில் ஒருவரை ஜனாதிபதி நியமிப்பார்.

அண்மைக்காலமாக தேசம்நெற் யாழ் பல்கலைக்கழகத்தின் திரைமறைவில் இடம்பெற்ற நிர்வாகச் சீர்கேடுகள், மோசடிகள், பாலியல் துஸ்பிரயோகங்கள், கல்வித் தரத்தின் சீரழிவுகள் என்பனவற்றை வெளிக்கொண்டு வந்ததன் பயனாக என் சண்முகலிங்கம் தவிர்ந்த ஏனைய தகுதியற்ற வேட்பாளர்கள் நிராகரிக்கப்பட்டனர். யாழ் பல்கலைக்கழகத்தின் உப வேந்தருக்கான தெரிவில் ஆரம்பத்தில் முன்னணி வேட்பாளர்களாகக் கருதப்பட்ட பேராசிரியர் எஸ் சத்தியசீலன், பேராசிரியர் என் ஞர்னகுமாரன் ஆகியோர் நவம்பர் 27ல் முதல் மூவருக்குள் தெரிவு செய்யப்படவில்லை. யாழ் பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் சீர்கேடுகள், மோசடிகள், பாலியல் துஸ்பிரயோகங்கள், கல்வித் தரத்தின் சீரழிவுகள் என்பனவற்றுக்கு காரணமானவர்களில் ஒருவராக அடையாளம் காட்டப்பட்ட கடந்த மூன்று ஆண்டுகள் உப வேந்தராக இருந்த பேராசிரியர் என் சண்முகலிங்கம் யாழ் பல்கலைக்கழகக் கவுன்சிலால் தெரிவு செய்யப்பட்ட மூவரில் ஒருவராக உள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னணிப் பேராசிரியர்களின் திருவிளையாடல்கள் அம்பலத்திற்கு வந்ததால் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் மட்டுமே யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, ஒப்பீட்டளவில் தகுதியான ஒரே வேட்பாளர் ஆனார். அதனால் தேசம்நெற் இன் தொடர்ச்சியான பிரச்சாரங்கள் அவருக்கு சாதகமாக இருந்ததுடன் அரசியல் ரீதியான ஆதரவும் அவருக்கு கிடைத்தது.

உப வேந்தருக்கான தகமை அடிப்படையில், கல்வித் தகமையாக இருந்தாலென்ன நிர்வாக – முகாமைத்துவத் திறனாக இருந்தாலென்ன பேராசிரியர் ஹுல் ஏனைய அனையவர்களைக் காட்டிலும் மிக உச்சத்திலேயே உள்ளார். ஆனால் அவருக்கான அரசியல் ஆதரவு மிகக்கீழ் நிலையிலேயே உள்ளது. ஆனால் கல்வித் தகமை, நிர்வாக – முகாமைத்துவத் திறன் அடிப்படையில் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் கீழ் நிலையில் (பேராசிரியர் ஹுல் உடன் ஒப்பிடுகையில்) இருந்தபோதும் அவருக்கான அரசியல் ஆதரவு மேல்நிலையில் உள்ளது. அதனால் அவரை யாழ் பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக ஆக்குவதற்கான வாய்ப்பு நிறையவே உள்ளது.

பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் யாழ் பல்கலைக்கழகத்திற்குள் இருந்து போட்டியிட்டவர்களில் அப்பதவிக்கான தகமையைக் கொண்டிருந்தார். ஆனால் தற்போது வெளிக்கொண்டுவரப்பட்டு உள்ள, ஆவணங்கள் பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தின் கரங்களும் கறைபடிந்தவை என்பதனை நிரூபிக்கின்றது.

யாழ் பல்கலைக்கழகத்தில் பல மோசடிகள் மூடி மறைக்கப்படுகின்றன. பல்கலைகழகத்தின் பெயருக்கு நல்லதல்ல என்று கூறி மோசடிகள் தொடர்ச்சியாக மூடிமறைக்கப்பட்டதால் யாழ் பல்கலைக்கழகம் மிகச் சீரழிவுக்கு சென்றுள்ளது. பல்வேறு மட்டங்களிலும் உள்ளவர்கள் மோசடியில் ஈடுபட்டு அவை மூடிமறைக்கப்படும் போது அவர்கள் உயர்நிலைக்குச் செல்லும் போது மேலும் மேலும் மோசடிகளில் ஈடுபட்டு அவற்றை பல்கலைக்கழகத்தின் பெயரைப் பாதுகாப்பதாகக் கூறி மூடிமறைக்கின்றனர். அதனால் பல்கலைக்கழகம் பற்றி தேசம்நெற் இல் வெளிக்கொண்டு வரப்பட்ட விடயங்கள் மிகச்சொற்பமானவையே எனவும் மோசடியும் ஊழல்களும் குவிந்துள்ளதாகவும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2003ல் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான கணணி வலையமைப்பு மற்றும் பாகங்களை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டார். இவ்வாறான பெரும்தொகைக் கொள்வனவுகள் பல்கலைக்கழக விதிமுறைகளுடாகவும் ரென்டர் முறையிலுமே மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் பேராசிரயர் வசந்தி அரசரட்ணம் இந்த விதிமுறைகளை மீறி நேரடியாக M/S Delvon Computers (Pvt) Ltd, என்ற நிறுவனத்துக்கு கொள்வனவுக் கட்டளையை வழங்கி உள்ளார். இந்நிறுவனம் ஓய்வுபெற்ற இராணுவ கேணல் தர தளபதி ஒருவருடையது என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கொள்வனவு பல்கலைக்கழக விதிமுறைகளுடாகவும் ரென்டர் முறையினூடாகவும் மேற்கொள்ளப்படாமையினால் இக்கொள்வனவுக்கான நிதியினை வழங்க நிதிக்குழு தாமதித்தது. அவர்கள் குறிப்பிட்ட கொள்வனவு தொடர்பான கணக்கியல் பதிவுகளில் கேள்விகளை எழுப்பினர். அப்போதைய உப வேந்தர் மோகனதாஸ் இவ்விடயத்தை நிதிக்குழுவிற்கு குறிப்பிட்டு இருந்தார். அதன் பின்னர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் முன்னர் வழங்கிய தொகையைக் குறைத்து புதிய தொகையை வழங்கியதாக தெரியவருகிறது.

மருத்துவ பீடத்திற்கான கணணி வலையமைப்பு மற்றும் அதற்கான பாகங்களைக் கொள்வனவு செய்ய WHO, 963400.00 ரூபாய்களை மட்டுமே யாழ் பல்கலைக்கழகத்திற்கு வழங்கி இருந்தது. ஆனால் பேராசிரியர் வசந்தி அரசரடணம் தனக்கு வழங்கப்பட்ட நிதி வரையறைக்கு பலமடங்கு அதிகமாக கொள்வனவு விதிகளை மீறி நேரடியாக கொள்வனவுக் கட்டளையை வழங்கி இருந்தார். ஆனால் இது கேள்விக்கு உட்படுத்தப்பட்ட போது கொள்வனவுத் தொகை குறைக்கப்பட்டது. அப்படி இருந்துமே அப்போதைய சந்தை நிலையிலும் பார்க்க அதிகமாகவே இருந்தது.
 
இது தொடர்பாக நிதிக்குழுவின் ஒக்ரோபர் 25 2004ல் இடம்பெற்ற 247வது கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது 2003ல் 1163550.60 ரூபாய்க்கு பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் பல்கலைக்கழக விதிமுறைகளையும், ரென்டர்முறைகளையும் மீறி கொள்வனவை மேற்கொண்டதாக அப்போதைய உபவேந்தர் மோகனதாஸ் 247வது நிதிக் குழு கூட்டத்திற்கு வழங்கிய குறிப்பில் குறிப்பிட்டு உள்ளார்.
 
நிதிக்குழுவின் 233வது கூட்டத்திற்கு பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் வழங்கிய குறிப்பில் வேலைத்திட்டத்திற்கு ஆன செலவீனம் ரூபாய் 2,080,839.18 ஆல் அதிகரித்து உள்ளதாகக் குறிப்பிட்டு இருந்தார். அதாவது மொத்த செலவீனம் ரூபாய் 2,080,839.18 + 963,400.00  = 3 044 239.18.  வழங்கப்பட்ட நிதிவரையறைக்கு (963400.00 ரூபாய்) அதிகமாகவே பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் செலவீனத்தை மேற்கொண்டார்.

இந்த அதீத செலவீனத்தை மருத்துவ பீடத்தின் தகவல்தொழில் நுட்பத்திற்கு யுனிவசிற்றி கிறான்ட் கொமிசனால் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து தருமாறு பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் நிதிக்குழுவின் 233வது கூட்டத்திற்கு வழங்கிய குறிப்பில் கேட்டு இருந்தார்.

Delvon நிறுவனம் கேட்டுக்கொண்ட நிதியை வழங்காமல் ஓராண்டுவரை கூட்டங்களில் விவாதித்து ஒக்ரோபர் 30 2004 ல் இடம்பெற்ற நிதிக் குழுவின் 291வது கூட்டத்தில் பல்கலைக்கழகக் கவுன்சில் (Council Memo 277/17(e)) இது தொடர்பாக பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தை கண்டித்து இருந்தது. எதிர்காலத்தில் இது தொடர்பான அனைத்து விடயங்களும் பல்கலைக்கழக விதிமுறைகளுடாகவும் (through Bursar) ரென்டர் முறையினூடாகவுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் பல்கலைக்கழகத்தின் சார்பில் Delvon  நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டதால் பல்கலைக்கழக நிதிக் குழு பல்வேறு அழுத்தங்களாலும் குறைக்கப்பட்ட ஆனாலும் சந்தை நிலையிலும் அதிகமான கட்டணத்தை நிறுவனத்திற்கு வழங்கியது.

இவ்வாறான மோசடிகள் நிர்வாகச் சீர்கேடுகள் வடக்கு, கிழக்கு பல்கலைக்கழகங்களிலும் அவற்றின் வளாகங்களிலும் மலிந்து காணப்படுகின்றன. இப்பல்கலைக்கழகங்களின் உயர் பதவிகளில் உள்ளவர்களே இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்ற போது ‘கற்பித்தலும் ஆய்வும் இணைந்து பாரபட்சமற்ற உண்மையைத் தேடுவதே பல்கலைக்கழகம்’ என்ற வரைவிலக்கணம் இழக்கப்பட்டுவிடுகின்றது.

அண்மைக் காலமாக தேசம்நெற் இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவுகள்:

‘இலங்கையின் தமிழ் கல்விச் சமூகம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பார்வை’ நூலின் மின்னியல் வடிவம்: UoJ_A_View_By_Jeyabalan_T

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

”யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான தேசம்நெற் கட்டுரைகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை.” பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்

யாழ் பல்கலைக்கழகத்தின் இலக்கையும் தொலைநோக்கு பார்வையையும் முன்னெடுத்துச் செல்லும் கல்வியியல் ஆளுமையும் முகாமைத்துவத் திறமையும் உடையவரை உபவேந்தராகத் தெரிவு செய்யுங்கள்! : த ஜெயபாலன்

ஈபிடிபி தோழர்களே! நல்லதொரு இதயவீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிந்திட வேண்டாம். : ரி சோதிலிங்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பார்வை நூலுக்கான முன்னுரை : த ஜெயபாலன்

தமிழ் கல்விச் சமூகத்தின் மகுடம் யாழ். பல்கலைக்கழகம் – அதன் துணைவேந்தர் தெரிவிற்கான தேர்தல் ஒரு அலசல்

ThesamNetLeaks : கொள்வனவு விதிகளை மீறிய யாழ் பல்கலைக்கழ உப வேந்தருக்கான வேட்பாளர் : த ஜெயபாலன்

லண்டனில் இருந்து இலங்கை திரும்பிய கலாநிதி விக்கிரமபாகு மீது தாக்குதல்!

Wikramabahu Karunaratnaநவசமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளரும் இடதுசாரி முன்னணியின் தலைவருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன இன்று கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டு உள்ளார். விமான நிலையத்தின் அதிகாரிகள் பொலிஸார் முன்னிலையில் கலாநிதி விக்கிரமபாகுவைத் தாக்கியதாக ஒரு செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது. கலாநிதி விக்கிரமபாகுவை வரவேற்பதற்காக கட்சி ஆதரவாளர்களும் மனித உரிமைவாதிகளும் தொழிற்சங்கவாதிகளும் மனித உரிமைவாதிகளும் சட்டத்தரணிகளும் கூடி இருந்ததாகவும் அவர்களுக்கு முன்னிலையிலேயே சீருடை அணிந்த அதிகாரிகள் கலாநிதி விக்கிரமபாகுவைத் தாக்கியதாகவும் அச்செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

அண்மையில் லண்டன் வந்திருந்த கலாநிதி விக்கிரமபாகு லண்டனில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்விலும் உரையாற்ற அழைக்கப்பட்டு இருந்தார். மேலும் லண்டனில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களிலும் கலாநிதி விக்கிரமபாகு கலந்துகொண்டு இலங்கை அரசுக்கு எதிரான கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். நடந்து முடிந்த வன்னி யுத்தத்தில் 100,000 பேர்வரை மரணமடைந்ததாகவும் கலாநிதி விக்கிரமபாகு தெரிவித்து இருந்தார்.

விமானநிலையத்திற்கு வெளியே கலாநிதி விக்கிரமபாகு வரவும் ஒரு டசின் வரையான சீருடை அணிந்த விமானநிலைய அதிகாரிகள் விக்கிரமபாகுவைச் சூழ்ந்து ‘துரோகி’ என முழக்கமிட்டு உள்ளனர். ‘மகிந்தவால் இணைக்கப்பட்ட நாட்டை, துரோகி பிரிக்கப் பார்க்கிறாய்!” என சீருடை அணிந்த விமான நிலைய அதிகாரிகள் முழங்கி உள்ளனர். மேலும் கலாநிதி விக்கிரமபாகு வானில் ஏறி அவ்விடத்தை நீங்கும்வரை இவர்கள் கோசம் எழுப்பி உள்ளனர்.

கலாநிதி விக்கிரமபாகுவின் வருகை பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற எம்ரிவி ஊடகவியலாளர் பிரேம் லால் லங்கா ஈ-நியூஸ் ஊடகவியலாளர் சாந்த விஜயசூரிய ஆகியோரும் தாக்கப்பட்டதாக அச்செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.

டிசம்பர் 02ல் ஒக்ஸ்போர்ட் யூனியனில் ஜனாதிபதி ராஜபக்ச உரையாற்ற இருந்ததற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்கு கலாநிதி விக்கிரமபாகுவும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜெயலத் ஜெயவர்த்தனவும் முக்கிய காரணமாக இருந்ததாக அரச தரப்பில் தற்போது கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு உள்ள நிலையில் இத்தாக்குதல் இடம்பெற்று உள்ளது.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக லண்டனில் உள்ள லங்கா சாசமாஜக் கட்சி உறுப்பினருடன் தொடர்பு கொண்ட போது கலாநிதி விக்கிரமபாகு மீது எவ்வித தாக்குதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் ஆனால் அவரைக் காண வந்திருந்தவர்கள் விமான நிலைய அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். சிருடை அணிந்த விமான நிலைய அதிகாரிகள் சிலர் ‘துரோகி’ என்றும் ‘நாட்டைப் பிரிக்க வந்த துரோகி’ என்ற வகையிலும் கோசங்களை எழுப்பியதாகவும் தெரிவித்தார். கோசங்களை எழுப்பியவர்கள் கலாநிதி விக்கிரமபாகுவை ஏற்றிச் செல்ல வந்த வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இத்தாக்குதலினால் வாகனம் மிக மோசமாக சேதமடைந்து உள்ளது.

நவம்பர் 28ல் கலாநிதி விக்கிரமபாகு தேசம்நெற் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். (இன்று இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன உடன் சந்திப்பு.) நீண்டகாலமாக தமிழ் மக்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்து வருகின்ற கலாநிதி விக்கிரமபாகு சென்ற கூட்டத்திலும் தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமைக்காக குரல் கொடுத்து இருந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக கலாநிதி விக்கிரமபாகு உடன் தொடர்புகொள்ள முயற்சிக்கப்பட்ட போதும் உடன் தொடர்புகொள்ள முடியவில்லை.

‘ஒக்ஸ்போர்ட் யூனியன் கருத்துச் சுதந்திரத்துக்காக நிற்கத் தவறிவிட்டது’ : பேராசிரியர் ரட்ன ஜீவன் ஹூல்

Prof_Hooleஒக்ஸ்போர்ட் யூனியன் கருத்துச் சுதந்திரத்துக்காக நிற்கத் தவறிவிட்டது என பேராசிரியர் ரட்ன ஜீவன் ஹூல் நேசன் சன்டே ஒப்சேவர் ஆகிய பத்திரிகைகளுக்கு இன்று (டிசம்பர் 5) எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதன் சாரம்சம் கீழே தரப்படுகின்றது. (மொழிபெயர்ப்பு அல்ல)

._._._._._.

ஒக்ஸ்போர்ட் யூனியன்கருத்துச் சுதந்திரத்துக்காக நிற்கத் தவறிவிட்டது. ஒக்ஸ்போர்ட் யூனியனில் தனது உரையை வழங்குவதற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டதை சரியான முறையில் சிந்திப்பவர்கள் எவரும் கண்டிப்பார்கள்.

பல்கலைக்கழகங்கள் என்பது அனைத்து வகையான அடக்குமுறைகளையும் மீறல்களையும் கடந்த உரிமைகளுக்கான இடம். அங்கு அறிவை வளர்ப்பதற்கான பல்வேறு கருத்துக்களும் கலந்துரையாடப்படும்.

சுயதணிக்கை செய்வது குறிப்பாக பயமுறுத்தலின் காரணமாக கருத்துச் சுதந்திரத்துக்கான எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்.

இது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான தமிழ் சிங்கள அரசியல் செயற்பாட்டாளர்களாலேயே ஏற்படுத்தப்பட்டது.

எனக்கு தெரிந்தவரை ஐரோப்பா முழுவதிலும் இருந்து பஸ்களில் அரசியல் செயற்பாட்டாளர்கள் கொண்டுவரப்பட்டனர். இவர்கள் உண்மையான வழியில் ஜனநாயகத்தை பின்பற்றுபவர்களாக இருந்தால் பிரித்தானிய பொது மக்களையும் ஈடுபடுத்தி இருப்பார்கள் என்ற கேள்வி தவிர்க்க முடியாதது.

ஜனாதிபதியை இந்நிகழ்வுக்கு வரவழைத்த ஒக்ஸ்போர்ட் யூனியன் அவர் உரையாற்றுவதை அனுமதிப்பதற்கான கடமைப்பாட்டைக் கொண்டிருந்தது. இதனை ரத்து செய்ததன் மூலம் ஒக்ஸ்போர்ட் யூனியன் கருத்துச் சுதந்திரத்துக்காக நிற்கத் தவறிவிட்டதுடன் தமிழ் சிங்களத் தரப்பில் இருக்கும் தீவிரவாத சக்திகளை பலப்படுத்தி உள்ளது.

அரசாங்கமும் தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வை தாமதிப்பதால் பிரித்தானியாவில் உள்ள குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான மக்கள் கவலையடைந்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் மூலம் பெற்ற நன்மை என்ன? எதிரியை  அவமானப்படுத்தி இருக்கலாம். ஆனால் இங்கேயோ அங்கேயோ நீண்ட காலத்திற்கு அல்ல. ஆனால் அவர்கள் ஜனாதிபதி தன்னுடைய கருத்துக்களைத் தெரிவிப்பதைத் தடுத்து இருக்கிறார்கள். அதற்கும் மேல் ஜனாதிபதி பற்றி கணதியான பிரச்சினைகளை உடையவர்கள் ஜனாதிபதியுடன் உரையாடலை மேற்கொள்வதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் இவர்கள் ஒக்ஸ்போர்ட் யூனியனின் பலத்தையும் அதன் மதிப்பையும் தாழ்த்தி உள்ளனர்.

ஒரு பிரிவினர் தங்களுக்கு விரும்பமில்லாதவர்கள் மீது தணிக்கை செய்வதற்கான முத்திரைகளை பதிக்க முற்படுகின்றனர். அவர்கள் தங்களுக்கு எதிராகவும் இதே முத்திரைகள் பயன்படுத்தப்டும் என்பதை உணருவதில்லை.

ஜனாதிபதியின் ஒக்ஸ்போர்ட் யூனியன் உரையை தடுத்த அதே சக்திகளே எனது கருத்துக்கள் பிடிக்கவில்லை என்ற காரணத்தினால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் என்னைப் பணியாற்ற விடாமல் தடுத்தனர் என்பதை இங்கு ஞர்பகப்படுத்த விரும்புகிறேன்.

ருகுனு பல்கலைக்கழகத்தில் அதன் பொறியியல் பீடத்தின் முதல் பீடாதிபதி ஒரு சிங்களவராக இருக்க வேண்டும் என அப்போது தெரிவிக்கப்பட்டது. அதே போல் யாழ் பல்கலைக்ழகத்தின் உபவேந்தராக ஒரு இந்து வரவேண்டும் என அரசுடன் தொடர்புடைய ஏசியன் ரிபியூன் இணையம் ஆசிரயர் பகுதியில் தெரிவித்து உள்ளது.

பல்கலைக்கழகங்கள் – ஒக்ஸ்போர்ட் யுனியனும் கருத்துக்களையே மதிப்பீடு செய்ய வேண்டுமே அன்றி நபர்களை அல்ல என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

No_Future_Without_Forgivenessபேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் நவம்பர் 12, 2010 கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் அளித்த சாட்சியம்:

”ஐக்கிய இலங்கையை உருவாக்க வேண்டுமானால் தென்னாபிரிக்காவின் உதாரணத்தை பின்பற்ற வேண்டும்” பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் முன்சாட்சியம். : தொகுப்பு த ஜெயபாலன்

Oxford Union ‘failed to stand up for free speech’ : By S Ratnajeevan H Hoole

I trust that all right-thinking people will condemn the security threats that led to the cancellation of President Mahinda Rajapaksa’s invited speech at the Oxford Union. Universities are sacred precincts where all sorts of ideas are discussed and dissected to permit the expansion of knowledge. As such censorship, especially under threat, is anathema and counterproductive to ideals of free thought.

The threats against the President were organised by an assortment of Tamil and Sinhalese political activists opposed to President Rajapaksa.

I am aware that activists from all over Europe were bussed to converge in London, making one doubt if it was a true exercise in democratic protest involving the British public.

The Oxford Union, after inviting the President had an obligation to allow the event to proceed.
Now through the cancellation, they have failed to stand up for free speech and energized extremist forces, both Sinhalese and Tamil.

The government too must note that by delaying a solution, liberal Tamils in the UK, considerable in numbers, were made to sit passively by during this sad episode and have been weakened.

What have these protestors really achieved? They might have humiliated their opponent but that is neither here nor there in the long term. But more substantially, they have prevented President Rajapaksa from expressing his own views. And, most saddening, they have prevented others who might have had serious issues with him from engaging in a dialog with him at the lecture.

They have also vitiated the strength and prestige of the Oxford forum in that only speakers who are “acceptable” may now speak, thereby giving currency to the idea that there are those who can judge who is acceptable and who is not. Never in a university!

There are many lessons for us in Sri Lanka.

People of all hues here have tended to use labels to impose censorship against those whom they do not like, not realizing that the same censorship can be used against them one day.
I am reminded of how I was prevented from working at University of Jaffna by the same forces that obstructed the Oxford Union speech simply because they did not like how I thought.

At Ruhuna it was once said that the first Dean of Engineering had to be a Sinhalese. The Asian Tribune, with links to the government, has editorialised that at Jaffna the vice-chancellor has to be a Hindu.

Universities, not least the Oxford Union, must assert that we judge only ideas and not personages.

அண்மைக் காலமாக தேசம்நெற் இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவுகள்:

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

”யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான தேசம்நெற் கட்டுரைகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை.” பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்

யாழ் பல்கலைக்கழகத்தின் இலக்கையும் தொலைநோக்கு பார்வையையும் முன்னெடுத்துச் செல்லும் கல்வியியல் ஆளுமையும் முகாமைத்துவத் திறமையும் உடையவரை உபவேந்தராகத் தெரிவு செய்யுங்கள்! : த ஜெயபாலன்

29 ஆவது பெண்கள் சந்திப்பு பேர்லினில் நடைபெறவுள்ளது.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து உலகின் பலநாடுகளில் வசிக்கும் பெண்கள் சந்தித்து கருத்துக்களை பரிமாறவும், விவாதங்களை முன்னெடுக்கும் தளமாக அமையும் பெண்கள் சந்திப்பின் 29 ஆவது தொடர் எதிர்வரும் 11 ஆம் திகதி யேர்மனின் தலைநகரான பேர்லினில் நடைபெறவுள்ளது.

பெண்கள் சந்திப்பின் 29 ஆவது தொடர்

தூங்கா விளக்கும் காண்டாமணியும் – கொழும்பு தமிழ் எழுத்தாளர் மகாநாடு இன்னுமொரு பார்வை : விஜயகுமாரன்

1. பேரினவாத அரசு என்ற வகையில் தமிழ், முஸ்லீம் மக்களிற்கும் உலகமயமாக்கலின் அடிமைகள் என்ற வகையில் முழு இலங்கை மக்களிற்கும் இலங்கை அரசு பொது எதிரி. 2. இலங்கை அரசு படுகொலைகள் உட்பட மிக மோசமான மனித உரிமைமீறல்களை மேற்கொண்டு உள்ளது. 3. நான் விபரம் தெரிந்த நாள் முதல் இலங்கை அரசையும், இயக்கங்களின் வன்முறைகளையும் மற்றும் பிராந்திய, சர்வதேச மக்கள் விரோத அரசுகளையும் எதிர்த்து வருகின்றேன்.

சைவர்கள் காலையில் எழுந்ததும் எரித்த சாணியை அள்ளிப் பூசுவது போல் கிறிஸ்த்தவர்கள் சாப்பிடுவதற்கு முன்னும், படுக்கைக்கு போக முன்னும், பிறகு ஒரு முக்கியமான காரியத்திற்கு முன்னும் செபம் சொல்லுவது போல் ஒவ்வொரு கட்டுரை எழுதும் போதும் மேலே குறிப்பிட்ட 3 விடயங்களையும் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் வாழ் நாள் முழுவதும் மக்கள் விரோதிகளை எதிர்த்து வந்தாலும் இலங்கை, இந்திய அரசின் உளவாளிகள் என்று ரூம் போட்டு யோசித்து ஒரு கட்டுரை எழுதி விடுவார்கள். ஆனால் இப்படியான பொய்க் குற்றச்சாட்டுக்களை வைக்கும் இணையங்களில் தான் புலிகளின் ஆதரவாளர்களும் மகிந்தாவின் ஆதரவாளர்களும் ஈழவிடுதல,  மனிதாபிமானம், புரட்சி  என்று கட்டுரைகள் எழுதி காமடி பண்ணுகின்றார்கள்.

கொழும்பில் நடக்கவிருக்கும் தமிழ் எழுத்தாளர் மகாநாடு குறித்து கடுமையான எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன. இந்த மகாநாடு இலங்கை அரசினால் நடாத்தப்பட்டால் நிச்சயமாக எல்லோரும் எதிர்க்க வேண்டும். அல்லது அரசு சார்பானவர்கள் முன்னின்று நடாத்தினால் அதனை எதிர்த்தே ஆக வேண்டும். முருகபூபதி, ஞானசேகரன் போன்ற அமைப்பாளர்கள் இது இலங்கை அரசின் ஆதரவில் நடக்கவிருக்கின்ற மகாநாடு அல்ல என்று உறுதி கூறுகின்றார்கள். எழுத்தாளர்களினால் சுயாதீனமாக ஒழுங்கு செய்யப்படும் மகாநாட்டினை எதற்காக எதிர்க்க வேண்டும். போரினால் கருகிப் போய் புல் பூண்டு இல்லாத பாலையாய் இறுகிப் போயிருக்கும் தமிழ் சூழலில், மெல்லிதாக அரும்புகின்ற முளைகளை ஏன் முதலிலேயே கிள்ளிப் போட வேண்டும்.

இன்று இலங்கையில் இருக்கின்ற கொலைச் சூழலில் இந்த மகாநாடு ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் தான் நடத்த முடியும். இலங்கையின் பாசிச அரசினை எதிர்த்துக் கொண்டு இவர்களால் இந்த மகாநாட்டினை இலங்கையில் நடத்த முடியாது என்பது எல்லோரும் அறிந்த யதார்த்தம்.  இலங்கை அரசினை நியாயப்படுத்திக் கொண்டு இந்த இலக்கிய நிகழ்வை நடத்தவில்லை என்பதன் அடிப்படையிலேயே இதை ஆதரிக்க வேண்டும். இலக்கியம் நாணயமானதாகவும், மக்கள் பக்கமும் நின்று தன்னை வெளிப்படுத்துமாயின் இன்றைய அராஜக சூழலில் அதுவே போதுமானது. வெளிநாடுகளில் இருந்து கொண்டு இலங்கை அரசினைக் கணடிக்காமல் புடுங்கக் கூடாது என்று கூறுபவர்கள், இலங்கையில் போய் நின்று அதைச் சொல்ல முடியுமா?.  வெளிநாடுகளில் இருந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள்,  இப்படியான சுயாதீனமான நிகழ்வுகளை கண்டித்து எழுதுபவர்கள் இவற்றினை இலங்கையில் போய் ஏன் செய்வது கிடையாது?.

இந்த மகாநாட்டினை காட்டி, மகிந்தா தான் தமிழர்களிற்கு உரிமை கொடுத்துள்ளேன் என்று தமிழ் நாட்டவர்களிற்கும், வெளி நாடுகளிற்கும் காட்டி விடுவாராம். தமிழ் படத்தில் எம். ஜி. ஆர். ஒரு தாடியை மட்டும் ஒட்டி விட்டு, மாறு வேடத்தில் போகும் போது எதிரிகள் எம். ஜி.ஆரை அடையாளம் தெரியாமல் குழம்புவது போல், மகிந்தா இந்த மகாநாட்டினைக் காட்டி தனது முகத்தினை உலக மக்களிற்கு மறைத்து விடுவாராம்.

தமிழ் மக்களை கொலை செய்யும் இலங்கை மண்ணில் இப்படியான நிகழ்வுகளை நடத்தக் கூடாது என்றால் தண்டகாரண்யாவிலும், காஸ்மீரிலும்  – இந்தியாவிலோ அல்லது உலகம் முழுவதும் உயிர் உறிஞ்சும் அகிம்சையின் விளை நிலங்களான மேற்கு நாடுகளிலோ நடத்தினால் பரவாயில்லை என்பது தான் இவர்களின் தீர்வு.

இந்த மகாநாடு குறித்து ஆதாரங்கள் எதுவும் வைக்காமல்  முதலில் எதிர்ப்புக் காட்டியவர் எஸ். பொன்னுத்துரை. அவரிற்கு நீண்ட காலமாக பிடித்திருக்கும் மார்க்சிய விரோதம் என்ற நோய் முற்றி பேய் ஆடுகின்றார். முருகபூபதி இடதுசாரி இதழான டொமினிக் ஜீவாவின் மல்லிகையில் தனது எழுத்து வாழ்வினை தொடங்கியவர் என்ற ஒரு காரணமே பொன்னுத்துரையிற்கு எதிர்ப்பதற்கு போதுமானது. போராட்டக் குழுக்களில்  மார்க்சிய சிந்தனையுடன்  உறவாடியவர்கள் மீண்டும் ஈழத்தில் கால் பதிக்க, இந்த மகாநாடு கூட்டுவதற்கு உடந்தையாக இருப்பார்கள் என அவர் கண்டு பிடித்திருக்கம் இன்னொரு காரணத்தினை வாசிக்கவே புல்லரித்துப் போகின்றது. தமிழ் வலதுசாரிகள் இந்த மகாநாட்டினை நடாத்துவதாக இருந்தால் அவரிற்கு எந்த விதமான பிரச்சினையும் இருந்திருக்காது.

உண்மையான படைப்பாளி தன் இனத்தின் தூங்கா விளக்காக இருப்பான் என்று அவர் எழுதுகின்றார். சகோதரப் படுகொலைகள் செய்த போது, முஸ்லீம் மக்களை அவர்கள் வாழ்ந்த மண்ணை விட்டு விரட்டிய போது, அப்பாவி சிங்கள மக்களை கொன்ற போது, வன்னி மண்ணில் தமிழர்களை பலி கொடுத்த போது எல்லாம் இவர்களின தூங்கா விளக்கும் எரியவில்லை பொன்னுத்துரையின் காண்டா மணியும் அடிக்கவில்லை.

பா. ஜேயப்பிரகாசம் போன்ற தமிழகத்து படைப்பாளிகளும் எதிர்க்கின்றார்கள். இலங்கை அரசு நடத்திய திரைப் படவிழாவை தோல்வி காணச் செய்தது போல் இந்த மகாநாட்டையும் தோல்வியடையச் செய்ய வேண்டும் என்று அவர் எழுதுகின்றார். இலங்கை அரசு நடத்தியது என்பதற்காக மட்டுமல்லாது மூன்றாம் தர வணிக சினிமாவிற்க்கான விழா என்ற ஒரு காரணத்திற்காகவே அவை போன்றவற்றினை யார் நடத்தினாலும் எதிர்க்க வேண்டும். கோடம்பாக்கத்து வணிக சினிமாவும் தமிழ் எழுத்தாளர் மகாநாடும் ஒன்றல்ல.

இலங்கையிலிருந்து எந்த விதமான எதிர்ப்புக் குரல்களும் இது வரை எழவில்லை. இலங்கை அரசிற்கு எதிராக குரல் கொடுக்கும் புதிய ஜனநாயகக் கட்சி அதனது இலக்கியப் பிரிவான கலை இலக்கிய பேரவை போன்றவை இதனை எதிர்க்கவில்லை. இலங்கையில் இருந்து கொண்டு புலம் பெயர் இணையத்தளங்களில் எழுதுபவர்களும் இதனை எதிர்க்கவில்லை.

இலங்கையில் எழுபதுகளில் இருந்த தேசிய முதலாளித்துவ அரசினது உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவித்தல் என்னும் கொள்கைகளை பயன்படுத்தி இலக்கியத் துறையிலும் பெரிய அளவில் புத்தகங்கள் சஞ்சிகைகள் வெளிவந்தன. தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையினை சித்தரிக்கும் நூல்கள் வெளியாகின. யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு, மலையகம் போன்ற பிரதேசத்து வாழ்வுகளை மண்ணின் மனத்துடன் வெளிக் கொண்டு வந்தார்கள். சிங்கள மொழியில் இருந்து தமிழ் மொழிக்கு நூல்கள் மொழி மாற்றம் பெற்றன. யாழ்ப்பாணத்து கிராமத்தினையும், முதிர் கன்னியர்களின் அவல வாழ்வினையும் சித்திரமாய் தீட்டிய நித்திய கீர்த்தியின் “மீட்டாத வீணை”;  நெடுந்தீவு இரத்தமும், சதையுமாக உலவவிட்ட செங்கை ஆழியனின் “வாடைக்காற்று”; வன்னிக் காட்டு வேட்டையையும், விவசாயத்தையும் தமது ஊரிற்கு வெளியே நடக்கும் எதுவும் தெரியாது இயற்கையோடு வாழும் மக்களின் கதையினை பாலமனோகரனின் “நிலக்கிளி”யும்; தமிழ் இளைஞனும் சிங்கள யுவதியும் காதலித்து இன மத வேறுபாட்டை புறம் தள்ளிய கதையை அருள் சுப்பிரமணியத்தின் “அவர்களிற்கு வயது வந்து விட்டது” நாவலும் வெளிக் கொண்டு வந்தன. இத்தகைய எழுச்சியை மீண்டும் கொண்டு வருவதற்கு இப்படியான நிகழ்ச்சிகள் முன்முயற்சியாக அமைய வேண்டும்.

போர்க்காலச் சூழலில் அன்னையர் முன்னணி,  பிரஜைகள் குழு போன்ற பல அமைப்புக்களை மக்கள் தோற்றுவித்தனர். மக்கள் தமது பிரச்சினைகளிற்கு இவற்றிற் கூடாக தீர்வு காண முயன்றனர். விடுதலைப் போராட்டத்தினை பலாத்காரமாக மொத்த குத்தகைக்கு எடுத்திருந்த புலிகள்,  இச்சுயாதீன அமைப்புக்களையும் உள்வாங்கினர். இதனால் இவ்வமைப்புக்கள் தமது சுய செயற்பாடுகளை இழந்தன. அத்துடன் இவை புலிகளின் அமைப்புக்கள் என குற்றம் சாட்டப்பட்டு இலங்கை அரசினாலும், இந்திய கூலிப் படைகளாலும் சுலபமாக அழிக்கப்பட்டன.  இனியாவது பொதுத்தனத்தில் எழுகின்ற மக்கள் சார்ந்த சுயாதீனமான போக்குகளை வளர்த்தெடுப்பதற்கு முன்வர வேண்டும். தேவையில்லாமல் எதிர்ப்பதன் ழூலம் அவற்றை அரசின் பக்கம் தள்ளி விடுகின்ற கடந்த கால போக்கினை நிறுத்த வேண்டும்.

“சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாத மண்ணில் பாறை பிளந்து பயன் விளைவிப்பான்” என்று எங்களது மகாகவி பாடியது போல, இலங்கையின் பாசிச அரசை வன்முறையினால் மக்களின் மீது அதிகாரம் செய்யும் ஆட்சியை இலங்கை மக்கள் நிச்சயமாக ஒரு நாள் உடைத்தெறிவார்கள். நேர்மையுடன் மக்களால், மக்கள் நலனை கருத்தில் கொண்டு எழுகின்ற சுயாதீனமான முயற்சிகள் அதற்க்கான ஒரு தூண்டுதலைக் கொடுக்கும். “எச்சிறு  புல்லும் அதன் இயல்பினில் முழுமை” என்ற சண்முகம் சிவலிங்கத்தின் கவிதை வரிகளை வரலாறு மீண்டும் மீண்டும் எழுதிச் செல்லும்.

Related Articles:

யாதும் ஊரே யாவரும் கேளீர்! தீதும் நன்றும் பிறர்தர வாரா! : முருகபூபதி (அமைப்பாளர், சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு)

புலி ஆதரவு இலங்கை எழுத்தாளர்களும் தமிழக எழுத்தாளர்களும் கொழும்பு எழுத்தாளர் மாநாட்டுக்கு எதிராக கையெழுத்துப் போர்!

”நானும் தெருவில் நின்று போராடியவன்! இன்று உள்ளே இருக்கின்றேன்.” ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரித்தானிய இலங்கைத் தூதரகத்தில் இடம்பெற்ற சந்திப்பில்

MR_at_UK_Empassy”நான் எதிர்க்கட்சியில் இருந்தபோது நானும் இப்படி தெருத்தெருவாகப் போராட்டியவன். எனது போராட்டத்திற்கு நியாயம் இருந்தது. ஆனால் இங்கு நடைபெறும் போராட்டங்களுக்கு நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை” எனத் தெரிவித்தார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. இன்று (டிசம்பர் 02) பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி இங்கு மேலும் தெரிவிக்கையில் ”ஜனநாயகத்தின் தாய்நாடாக இருக்கும் பிரித்தானியாவில் கருத்துச் சுதந்திரத்திற்கு முன்னுரிமை அளிக்கின்ற ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் யூனியனில் எனது கருத்தை தெரிவிக்கவிடாமல் தடுத்தது கருத்துச் சுதந்திரத்தை மறுத்ததே” எனத் தெரிவித்தார்.

”ஒன்றரை வருடங்களுக்கு முன் நான் உங்களைச் சந்தித்த போது நான் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவேன் என்று உறுதி அளித்திருந்தேன். அதனைச் செய்து முடித்திருக்கிறேன். இனிமேல் இலங்கையில் அபிவிருத்தி மேற்கொள்ளப்படும். சமாதானம் நிலைநாட்டப்படும். சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் அனைவரும் இலங்கையர்களாக வாழ்வார்கள். அடுத்த தடவை மீண்டும் உங்களைச் சந்திக்கும் போது அவற்றைச் செய்து முடித்திருப்பேன்” என்று தெரிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் அனைவரும் தனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இன்று இடம்பெற்ற சந்திப்பில் அமைச்சர்கள் ஜி எல் பீரிஸ் எஸ் பி திஸ்ஸநாயக்கா ஆகியோரும் கலந்து கொண்டனர். அங்கு வந்திருந்த தமிழ் முஸ்லீம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. வழமைக்கு மாறாக இன்றைய நிகழ்வு பெரும்பாலும் சிங்கள மொழியிலேயே இடம்பெற்றது. இச்சந்திப்பில் மூவின சமூகங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்று மொழிகளையும் பேசக்கூடியவராக இருந்த போதும் இலங்கைத் தூதரகம் இக்கூட்டம் பற்றிய ஏற்பாடுகளை சீராக ஒழுங்கமைத்து இருக்கவில்லை.

கூட்ட ஏற்பாடுகள் எவ்வித ஒழுங்கும் இன்றி சீரற்றதாகவே காணப்பட்டது. ஒரு நாட்டின் ஜனாதிபதி உடனான சந்திப்பு என்று எவ்வித ஒழுங்கமைப்பும் இன்றி இச்சந்திப்பு அமைந்தது. அரசியல் உரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்கான வாய்ப்பு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கவில்லை.

ஒக்ஸ்போர் யூனியனில் இடம்பெற இருந்த ஜனாதிபதியின் உரை ரத்து செய்யப்பட்டமை இலங்கை அரசுக்கு ஏற்பட்ட வெளிப்படையான அவமானமே. இவ்வாறான ஒரு ஆர்ப்பாட்டம் முடுக்கி விடப்படும் என்பதை இலங்கைத் தூதரகம் கணித்து தகுந்த ஆலோசணை வழங்கத் தவறிவிட்டதாக தற்போது இலங்கை இராஜாங்க வட்டாரங்களில் குற்றம்சாட்டப்படுகிறது.

ஜனாதிபதியின் உரை ஒக்ஸ்போர்ட் யூனியனில் ரத்து செய்யப்பட்டமை அரசியல் ரீதியில் பலவீனமாகிக் கொண்டிருந்த பிரிஎப் ரிவைஓ போன்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு  அமைப்புகளுக்கு அமைப்புகளுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. ஒக்ஸ்போர்ட் நோக்கிய ஆர்ப்பாட்டம் அதன் பின்னர் ஜனாதிபதி தங்கியிருந்த ஹொட்டலை நோக்கியும் பின்னர் இலங்கைத் தூதரகத்தை நோக்கியும் நகர்ந்தது.

இலங்கைத் தூதரகத்தில் இன்று மாலை ஜனாதிபதியுடனான சந்திப்பு இடம்பெற்ற வேளை தூதரகம் உள்ள வீதியின் இரு அந்தங்களிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கி இருந்தன. பெரும்பாலும் அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி இவ்வார்ப்பாட்டங்கள் இடம்பெற்றது. ஆனால் புலிக்கொடிகளைத் தாங்கிய வண்ணம் இருந்த சிலர் ஜனாதிபதியின் சந்திப்பிற்கு வந்து சென்றவர்களை நோக்கி மோசமான தூசண வார்த்தைகளை தமிழிலும் சிங்களத்திலும் கோசமாக எழுப்பினர்.

இச்சந்திப்பையொட்டி ஏரானமான பொலிசார் அப்பகுதி எங்கும் குவிக்கப்பட்டு இருந்தனர். ஆயுதம் ஏந்திய பொலிசார் தூதரகத்திற்கு பாதுகாப்பு வழங்கினர்.

துயர்துடைக்க வாரீர் : இணுவையூர் பதஞ்சலி நவேந்திரன்.

Maaveerar_Memorialமற்றையவர்களின் விடிவிற்காக தன்னுயிர் ஈய்ந்த அந்த உத்தமர்களிற்கு,  
எனது ஒருகண மௌன அஞ்சலி
 
போராட்டம் உக்கிரம் அடைந்த உச்சக்கட்டத்தை அடைந்த நேரத்தில் இருந்து எத்தனை தூக்கமற்ற இரவுகள். இத்தனைக்கும் என்னுடன் நெருக்கமாக சம்பந்தப்பட்ட நண்பர்களோ உறவினர்களோ எந்த விதத்திலும் இந்த உச்சக்கட்ட போராட்டத்தில் பாதிக்கப்படவில்லை இருப்பினும் இறுதிநிலைப் போராட்டத்தில் உயிர்நீத்த அத்தனை மக்களை நினைத்தும் மனம் ரணமாக வேதனைப்பட்டிருக்கிறது. அங்கவீனர்களாக உறவுகளை இழந்த ஒன்றுமற்று அனாதைகளாக்கப்பட்ட பொதுமக்கள் போராளிகளை நினைத்த நினைத்து மனம் துவளுகின்றது.

வெளிநாடுகளில் வாழும் பெரும்பாலானவர்கள் இந்தப் போராளிகளுக்கும் போராட்டத்தினால் அகப்பட்டு நலிந்த மக்களுக்கும் மாற்றுக்கருத்தின்றி நிறையவே அடைக்க முடியா கடன்பட்டு இருக்கிறார்கள். போராட்டமின்றி வெளிநாட்டின் சுக போகங்கள் எமக்கும் கிடைத்திருக்க மாட்டாது. திரும்பிப் பாருங்கள் எம்முடன் படித்த சக மாணவ போராளிகளை எம்மைவிட மிகத் திறமைவாய்ந்த நண்பர்கள் போராட்டத்தில் இணைந்து, ஒன்று இறந்து இருக்கிறார்கள் அல்லது எல்லாவற்றையும் இழந்து இன்று ஒன்றுக்கும் இயலாதவர்களாக எல்லோராலும் வெறுக்கப்படும் நிலையிலும் இருப்பது மிகப்பரிதாபமானதும் வேதனையானதும்.

போராட்டத்தில் அவர்கள் இணையாமல் இருந்திருந்தால் இன்று எம்மைவிட மிகச்சிறப்பாகவே இருப்பார்கள். அவர்களின் திறமையால் தாய்நாட்டிலே போராட்டத்தினாலே எல்லோரும் தான் பாதிக்கப்படடார்கள் இருப்பினும் எனது இரக்கம் புலிப்போராளிகள் மீதுதான். காரணம் புலிப் போராளிகள் தவிர்ந்த மற்றயவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட பல வகையான அமைப்புக்கள் முண்டியடிக்கின்றன. இலங்கை அரசு உட்டபட பல அரசாங்கங்களும் இதில் உள்ளடக்கம்.
துரதிஸ்டவசமாக எல்லோராலும் கைவிடப்பட்டவர்கள் இந்த புலிப் போராளிகளே. மற்றைய இயக்கங்கள் இவர்களை எதிரியாக பார்க்கின்றன. அரசாங்கமோ ஒளித்துக்கட்ட வரிந்து கட்டி நிற்கிறது. எல்லாவற்றிக்கும் மேலாக யாருக்காக போராடினார்களோ, அந்த மக்களுக்கும் இவர்களை பிடிக்காமல் போனது மிகமிக துரதிஸ்டவசமானது. இப்போராளிகளை பராமரிக்க வேண்டிய பாரிய பொறுப்பு வெளிநாடுகளில் வாழும் ஒவ்வொருவருக்கும் உண்டு. தயவு செய்து உதவிக்கரம் நீட்டுங்கள்.

மாவீரர் தினம் முடிவடைந்து ஒரு வாரம் ஆகின்றது. விதைக்கப்பட்டவர்களுக்கு உரிய மரியாதை வணக்கம் செலுத்த வேண்டியது எமது எல்லோரினதம் கடமை. மாற்றுக் கருத்து இல்லை. இருப்பினும் நான் மேலே குறிப்பிட்ட போராட்டத்தில் பாதிக்கப்பட்ட இந்த நலிந்த மெலிந்த மக்களுக்கு, போராளிகள் உட்டபட நாம் என்ன செய்யப்போகிறோம்?

தலைமைகள் அழிக்கப்பட்டு சிதைக்கப்பட்ட நிலையில் எம்மை வழிநடத்த ஒருத்தரும் இல்லையா? என மனம் விம்மி வெடிக்கிறது. செய்வதற்கு நிறைய இருந்தும் இதைசெய் இப்படிச்சொல் என்று சொல்வதற்க்கு தகமையான தலைவர்களோ அமைப்புகளோ இல்லாமல் மனம் அல்லல்படுகின்றது.

நம்பி நடந்த பலர் ஏமாற்றிவிட்டார்கள். எனவே யாரையும் நம்ப மனம் மறுக்கிறது. இருப்பினும் உதவிசெய்ய மனம் உன்னுகிறது. வழிதான் தெரியவில்லை. இருப்பினும் பிறை ஒளியாய் சில கருத்துக்கள் பாதிக்கப்பட்ட இந்த சமூகத்திற்கு நாம் செய்யும் உதவி பாரிய நடவடிக்கைகளாக இருக்க வேண்டும் என்பதில்லை. சிறுதுளி பெரு வெள்ளம் என்பார்கள். எம்மால் முடிந்த சிறுசிறு உதவிகள் ஒவ்வொருவரும் செய்தால் அதுவே சிற்றருவியாகி ஆறாகி கடலாகி சமுத்திர வடிவமாகும்.

நாளை என்று ஒத்திப்போடாமல் இன்றே இக்கணமே செயல்வடிவம் எடுப்போம்.

1. எமக்கு தெரிந்த நண்பர்கள் உறவினர்களுக்கு எம்மால் முடிந்த சிறு உதவிகள்.

2. அடுத்த கட்டமாக நாம் பிறந்த ஊர் கிராமம் அல்லது பட்டினம் வெளிநாடுகளில் இந்த கிராமங்களை அடிப்படையாக வைத்து அமைப்புக்களை உருவாக்குங்கள். அவற்றில் இணைந்து சில உருப்படியான காரியங்களை உங்கள் கிராமங்களுக்கு செய்யுங்கள்.

வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோன் உயரும்.
 
3. தமிழர்களின் அடையாளங்களில் ஒன்று கல்விக்கு முதன்மை அளித்தல். இக்கல்விக்கு தாய் நாட்டிலுள்ள பாடசாலைகள் உறுதுணையாக நின்றன. நிற்கின்றன. இப்பாடசாலைகளின் பழைய மாணவர் அமைப்புகள் வெளிநாடுகளில் இயங்குகின்றன. நாட்டுக்கு நாடு இவை இருக்கின்றன. நானா? நீயா? என போட்டி போட்டு ஒரே தேவைக்கு பல நாட்டிலுள்ள இச்சங்கங்கள் தமக்குள் பேசாமல் அதிபர் கேட்டுவிடடார் என்பதற்காக பணத்தை வாரி இறைக்கின்றன. படித்த நன்றிக்கடனை செலுத்த வேண்டும் என்ற கடமை உணர்வு அளவிற்கு அதிகமாகவே, தேவைக்கு மிதமிஞசியே செய்ய வைக்கிறது. 40 சீட்பஸ் அதற்கு நிரந்தர ஓட்டுனர். அதனைப் பராமரிப்பதற்கு அதைப் பாதுகாக்க கொட்டகை இப்படியே பட்டியல் நீள்கின்றது.
 
இந்த வெளிநாட்டில் இயங்கும் பழைய மாணவர் சங்கங்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் ஒருவருடத்திற்கு உங்கள் உதவிக் கரங்களை இந்தப் பாதிக்ப்பட்ட இடங்களில் உள்ள பாடசாலைக்கு நீட்டுங்கள். ஒரு பாடசாலையை தத்து எடுங்கள். ஒரு வருடத்திற்கு நீங்கள் படித்த பாடசாலைக்கு உதவி செய்யாமல் விட்டால் அப்பாடசாலை ஒன்றும் தராதரத்தில் குறைந்துவிடாது.

முற்றாக ஒன்றுமே இல்லாமல் பிரிந்த கூரையும் ஆசிரியர்கள் இல்லாத பாடசாலைக்கு நீங்கள் உதவ முடியமானால் அவர்கள் அதனால் அடையும் பலன் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது என்ற கருத்தை ஆதரிக்க மாகவி பாரதியாரை உதவிக்கு அழைக்கின்றேன்.
 
இன்னறுங் கனிச்சோலைகள் செய்தல்
இனிய நீர்க்கண் சுனைகள் இயற்றல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னர் உள்ள தர்மங்கள் யாவும்
பெயர்விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்னயாவினும் புண்ணியம்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்து அறிவித்தல்
வீணாண வெட்டிப்பேச்சை கைவிட்டு வாரீர் துயர் துடைக்க

இணுவையூர் பதஞ்சலி நவேந்திரன்.

வன்னியில் இடம்பெற்ற அவலமும் புலி ஆதரவு அமைப்புகளின் மகிந்த எதிர்ப்புப் போராட்டமும் : த ஜெயபாலன்

MR_Protest_Heathrowதமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவுகளாக இயங்கிய அமைப்புகள் இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வருகையைக் கண்டித்து எதிர்ப்பு அணிவகுப்பொன்றை ஹீத்ரோ விமான நிலையத்தில் நடத்தினர். நடந்து முடிந்த யுத்தத்தில் ஜனாதிபதி ராஜபக்சவைக் குற்றவாளி என்று சொல்லி அவரது வருகையைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக இலங்கை மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொள்வதற்காக லண்டன் வந்துள்ள ஜனாதிபதி ராஜபக்சவை பொலிஸார் வழமையான முக்கியஸ்தர்களின் பாதுகாப்பு வழியால் அழைத்துச் சென்றுள்ளனர். அதனால் ஜனாதிபதி ஆர்ப்பாட்டக்காரர்களை நேருக்குநேர் சந்திக்கவில்லை.

ஆனால் இந்த ஆர்பாட்டம் காரணமாக சிறிலங்கா எயர்லைனில் வந்த பயணிகள் அனைவரும் இரவு 12:00 மணிவரை விமான நிலையத்திற்கு உள்ளேயே இருக்க வைக்கப்பட்டனர்.

ஒக்ரோபர் பிற்பகுதியில் அமைச்சர் ஜீல் பீரிஸ் ற்கு எதிராகவும் ஒரு கண்டன நிகழ்வு லண்டனில் இடம்பெற்றது. கண்டன நிகழ்வுக்கு முன்னதாகவே ஜீஎல் பீரிஸ் தனது உரையை முடித்துக் கொண்டு மண்டபத்தை விட்டுச் சென்றிருந்தார்.

MR_Protest_Heathrowநடந்து முடிந்த யுத்தத்தில் இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் மிக மோசமான முறையில் மனித உரிமைகளை மீறியிருந்தனர். யுத்தத்தின் முன்பகுதியில் 2009 பெப்ரவரி வரை 1200 பேர்வரையே கொல்லப்பட்டு இருந்தனர். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தப் பகுதியில் தமிழ் மக்களை மனிதக் கேடயங்களாக்கி யுத்தத்தை முடுக்கிவிட்ட போது மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். சர்வதேச நாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகள் பொது மக்களைப் புலிகள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதை தொடர்ந்தும் ஆதரித்தே வந்தனர்.

2008ல் யுத்தம் உச்சகட்டத்தில் இருந்தபோது லண்டனில் இடம்பெற்ற கொமன்வெல்த் மாநாட்டிலும் ஜனாதிபதி ராஜபக்ச கலந்துகொண்டிருந்தார். அப்போதும் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இம்முறை ஜனாதிபதி ஒக்ஸ்போர் மாணவர்களின் நிகழ்வில் உரையாற்ற இருப்பது இரண்டாவது தடவையாகும். அதையொட்டியும் புலி ஆதரவு அமைப்புகள் தங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க ஒக்ஸ்போர்ட் நோக்கி செல்ல உள்ளனர்.

தற்போதைய விஜயத்திற்கு முன்பாக ஜனாதிபதியின் விஜயம் ஒத்திவைக்கப்பட்டது. தாங்கள் யுத்தக் குற்றத்திற்கு எதிராக வழக்கு தாங்கல் செய்ய உள்ளதாலேயே இலங்கை அரசு அந்த விஜயத்தை கைவிட வேண்டி ஏற்பட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச அமைப்புகள் அறிவித்தன. ஆனால் இப்போது ஜனாதிபதி லண்டனிலேயே தங்கி உள்ளார்.

மேலும் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் விநாயகமூர்த்தி முரளீதரன் போலிக் கடவுச்சீட்டில் ஆயுதத்துடன் வந்து பிரித்தானியாவில் பிடிபட்ட போதும் அவருக்கு எதிராக எவ்வித மனித உரிமை மீறல் நடவடிக்கைகளையும் யாரும் பதிவு செய்யவில்லை. சர்வதேச உரிமை அரைமப்புகள் நூற்றுக்கணக்கான மனித உரிமை மீறல் குற்றங்களை விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராகச் சுமத்திய போதும் அவர்களால் முரளிதரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

நடந்து முடிந்த இறுதி யுத்தத்தை மேற்கு நாடுகள் சிசிரிவி இல் பார்ப்பது போன்று செய்மதிகளினூடாகப் பார்த்து ஆதாரங்களையும் கைவசம் வைத்துள்ளனர். ஆனால் மனித உரிமைகளை அவர்கள் அரசியல் பலப் பரீட்சைக்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர். மனித உரிமைகளுக்காக யுத்தக் குற்றம் என்று வந்தால் இலங்கை ஜனாதிபதி மட்டுமல்ல அமெரிக்க அதிபர் பிரித்தானியப் பிரதமர் என்று பட்டியல் நீளும் என்பது மேற்கு நாடுகள் நன்கு அறியும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் பொது மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை நன்று அறிந்து கொண்ட இலங்கை அரசும் அவர்களை விடுவிப்பதற்கான காத்திரமான முயற்சிகளை எடுக்காமல் புலிகளுக்கு எதிரான பதில் தாக்குதலை மூன்று லட்சம் மக்கள் மத்தியில் நடாத்தியது.

மேலும் யுத்தத்தின் இறுதிப் பகுதிகளில் இந்த யுத்த வலயத்திற்குள் இருந்து தப்பிச் செல்ல முற்பட்டவர்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடாத்தி உள்ளனர். பொது மக்கள் மீது செல் தாக்குதல்களையும் புலிகள் நடத்தி உள்ளனர்.

MR_Protest_Heathrowதற்போது யுத்தத்தில் தோல்வியடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அரசினைப் பழிவாங்குவதற்கான மாற்று வழியாக மனித உரிமை மீறல்களைப் பயன்படுத்த முற்பட்டு உள்ளனர். நடந்து முடிந்த யுத்தத்தில் அரசு மனித உரிமைகளை அப்பட்டமாக மீறியுள்ளது. ஆனால் அரசுக்கு எதிராக மனித உரிமைகளைத் தூக்கிப்பிடிக்கின்ற தமிழீழ விடுதலைப் புலி சர்வதேச அமைப்புகளும் வன்னியில் ஆயிரக் கணக்காண மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்துள்ளனர். அங்கு வகைதொகையின்றி மனித அவலம் நடந்தால் சர்வதேச சமூகம் தமிழீழத்தைப் பெற்றுத் தரும் என்று பிரச்சாரம் செய்து மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி மிகமோசமான மனித அவலத்துக்கு காரணமாக இருந்தனர்.

யுத்தக் குற்றவாளி இலங்கை அரசு மட்டுமல்ல தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் சர்வதேச அமைப்புகளும் தான். அதனால் எதிரியாகக் கருதிய இலங்கை அரசிடம் நியாயம் கேட்கும் அதேவேளை தம்மைக்காக்க வேண்டிய தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் சர்வதேச கட்டமைப்புகளும் தாங்கள் அம்மக்களுக்கு இழைத்த துரோகத்திற்கு நியாயம் கிடைக்க வழி செய்து கொண்டு எதிரியிடம் நியாயம் கேட்பதே முறையானது.

”அரச எதிர்ப்பு அணுகுமுறையை கைவிட முடிவு செய்துள்ளோம்” வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதை கூட்டமைப்பு கைவிட்டது.

TNAநேற்று திங்கள் (நவம்பர் 29) மாலை நாடாளுமன்றில் இடம்பெற்ற வரவுசெலவுத் திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்து வாக்களிப்பதைத் தவிர்த்து வாக்களிப்பில் கலந்து கொள்ளமல் விட்டது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, அபிவிருத்தி ஆகிய விடயங்களில் அரசாங்கத்துடன் ஆக்கபூர்வமாக கலந்துரையாடி அதற்காக அரசுடன் இணைந்து செயற்பட கூட்டமைப்பு விரும்புவதால், அரச எதிர்ப்பு அணுகுமுறையை கைவிட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்பாடாகவே நேற்று வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பில் கலந்து கொண்டு அதனை எதிர்ப்பதை தவிர்த்துக் கொண்டதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கூட்டமைப்பு அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.

”நாடாளுமன்றில் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் இடம்பெயர்ந்து பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களுக்கு எவ்விதமான நிவாரணத்தையும் வழங்கவில்லை. இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியமர்வு முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய ஒன்று எனக் கூறிவரும் ஜனாதிபதியின் வரவு செலவுத்திட்டத்தின் ஒதுக்கீடுகளில் இது எவ்விதத்திலும் பிரதிபலிக்கவில்லை. இதற்கு மேலாகப் போர் முடிவுற்ற நிலையிலும் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு வருடாவருடம் அதிகரித்துக் கொண்டே போகின்றது. இந்நிலையில் தமிழ் மக்களின் மீள்குடியமர்வு. புனர்வாழ்வு. அபிவிருத்தி போன்ற விடயங்களில் அரசாங்கம் கூட்டமைப்புடன் அக்கபூர்வமான பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக கூட்டமைப்பின் நல்லெண்ணத்தைத் தெரிவிக்கும் முகமாகவே வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெகெடுப்பில் எதிர்த்து வாக்களிப்பதிலிருந்து கூட்டமைப்பு விலகியிருந்தது.”  இவ்வாறு கூட்டமைப்பின் விளக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று மாலை இடம்பெற்ற வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்களிப்பில் 150 வாக்குகள் ஆதரவாகவும், 46 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. 104 மேலதிக வாக்குகளால் இது நிறைவேறியது.

ஏதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சி, ஜே.வி.பி ஆகியன எதிராக வாக்களித்தன. அரசுடன் தற்போது இணைந்துள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, ஆகியன ஆதரவாக வாக்களித்தன.

யாழ் பல்கலையின் உப வேந்தராவதற்கு ரட்னஜீவன் ஹூல், வசந்தி அரசரட்ணம், என் சண்முகலிங்கம் தெரிவு.

இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துணைவேந்தருக்கான தெரிவில் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் வசந்தி அரசரட்ணம் என் சண்முகலிங்கம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் 14 வாக்குகளையும் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் 9 வாக்குகளையும் பெற்றுள்ளனர். பேராசிரியர் என் சண்முகலிங்கனும் 9 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஏனைய வேட்பாளர்களான பேராசிரியர் சத்தியசீலன் 8 வாக்குகளையும் பேராசிரியர் ஞானகுமாரன் 5 வாக்குகளையும் பெற்றுள்ளனர். விரிவுரையாளர் அல்வாப்பிள்ளை தனேந்திரன் ராஜரட்னம் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

உபவேந்தருக்கான முதல் கட்டம் முடிவடைந்த நிலையில் தெரிவு செய்யப்பட்ட மூவரில் இருந்து ஒருவரை ஜனாதிபதி உபவேந்தராக நியமிப்பார். இவ்விடயத்தில் ஜனாதிபதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசணையைப் பெறுவார். தெரிவு செய்யப்பட்ட மூவரில் யார் உபவேந்தர் என்பது ஒரு வாரத்தில் தெரியவரும்.

அண்மைக் காலமாக தேசம்நெற் இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவுகள்:

‘இலங்கையின் தமிழ் கல்விச் சமூகம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பார்வை’ நூலின் மின்னியல் வடிவம்: UoJ_A_View_By_Jeyabalan_T

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

”யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான தேசம்நெற் கட்டுரைகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை.” பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்

ஈபிடிபி தோழர்களே! நல்லதொரு இதயவீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிந்திட வேண்டாம். : ரி சோதிலிங்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பார்வை நூலுக்கான முன்னுரை : த ஜெயபாலன்

தமிழ் கல்விச் சமூகத்தின் மகுடம் யாழ். பல்கலைக்கழகம் – அதன் துணைவேந்தர் தெரிவிற்கான தேர்தல் ஒரு அலசல்