வன்னியில் இடம்பெற்ற அவலமும் புலி ஆதரவு அமைப்புகளின் மகிந்த எதிர்ப்புப் போராட்டமும் : த ஜெயபாலன்

MR_Protest_Heathrowதமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவுகளாக இயங்கிய அமைப்புகள் இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வருகையைக் கண்டித்து எதிர்ப்பு அணிவகுப்பொன்றை ஹீத்ரோ விமான நிலையத்தில் நடத்தினர். நடந்து முடிந்த யுத்தத்தில் ஜனாதிபதி ராஜபக்சவைக் குற்றவாளி என்று சொல்லி அவரது வருகையைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக இலங்கை மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொள்வதற்காக லண்டன் வந்துள்ள ஜனாதிபதி ராஜபக்சவை பொலிஸார் வழமையான முக்கியஸ்தர்களின் பாதுகாப்பு வழியால் அழைத்துச் சென்றுள்ளனர். அதனால் ஜனாதிபதி ஆர்ப்பாட்டக்காரர்களை நேருக்குநேர் சந்திக்கவில்லை.

ஆனால் இந்த ஆர்பாட்டம் காரணமாக சிறிலங்கா எயர்லைனில் வந்த பயணிகள் அனைவரும் இரவு 12:00 மணிவரை விமான நிலையத்திற்கு உள்ளேயே இருக்க வைக்கப்பட்டனர்.

ஒக்ரோபர் பிற்பகுதியில் அமைச்சர் ஜீல் பீரிஸ் ற்கு எதிராகவும் ஒரு கண்டன நிகழ்வு லண்டனில் இடம்பெற்றது. கண்டன நிகழ்வுக்கு முன்னதாகவே ஜீஎல் பீரிஸ் தனது உரையை முடித்துக் கொண்டு மண்டபத்தை விட்டுச் சென்றிருந்தார்.

MR_Protest_Heathrowநடந்து முடிந்த யுத்தத்தில் இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் மிக மோசமான முறையில் மனித உரிமைகளை மீறியிருந்தனர். யுத்தத்தின் முன்பகுதியில் 2009 பெப்ரவரி வரை 1200 பேர்வரையே கொல்லப்பட்டு இருந்தனர். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தப் பகுதியில் தமிழ் மக்களை மனிதக் கேடயங்களாக்கி யுத்தத்தை முடுக்கிவிட்ட போது மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். சர்வதேச நாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகள் பொது மக்களைப் புலிகள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதை தொடர்ந்தும் ஆதரித்தே வந்தனர்.

2008ல் யுத்தம் உச்சகட்டத்தில் இருந்தபோது லண்டனில் இடம்பெற்ற கொமன்வெல்த் மாநாட்டிலும் ஜனாதிபதி ராஜபக்ச கலந்துகொண்டிருந்தார். அப்போதும் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இம்முறை ஜனாதிபதி ஒக்ஸ்போர் மாணவர்களின் நிகழ்வில் உரையாற்ற இருப்பது இரண்டாவது தடவையாகும். அதையொட்டியும் புலி ஆதரவு அமைப்புகள் தங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க ஒக்ஸ்போர்ட் நோக்கி செல்ல உள்ளனர்.

தற்போதைய விஜயத்திற்கு முன்பாக ஜனாதிபதியின் விஜயம் ஒத்திவைக்கப்பட்டது. தாங்கள் யுத்தக் குற்றத்திற்கு எதிராக வழக்கு தாங்கல் செய்ய உள்ளதாலேயே இலங்கை அரசு அந்த விஜயத்தை கைவிட வேண்டி ஏற்பட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச அமைப்புகள் அறிவித்தன. ஆனால் இப்போது ஜனாதிபதி லண்டனிலேயே தங்கி உள்ளார்.

மேலும் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் விநாயகமூர்த்தி முரளீதரன் போலிக் கடவுச்சீட்டில் ஆயுதத்துடன் வந்து பிரித்தானியாவில் பிடிபட்ட போதும் அவருக்கு எதிராக எவ்வித மனித உரிமை மீறல் நடவடிக்கைகளையும் யாரும் பதிவு செய்யவில்லை. சர்வதேச உரிமை அரைமப்புகள் நூற்றுக்கணக்கான மனித உரிமை மீறல் குற்றங்களை விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராகச் சுமத்திய போதும் அவர்களால் முரளிதரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

நடந்து முடிந்த இறுதி யுத்தத்தை மேற்கு நாடுகள் சிசிரிவி இல் பார்ப்பது போன்று செய்மதிகளினூடாகப் பார்த்து ஆதாரங்களையும் கைவசம் வைத்துள்ளனர். ஆனால் மனித உரிமைகளை அவர்கள் அரசியல் பலப் பரீட்சைக்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர். மனித உரிமைகளுக்காக யுத்தக் குற்றம் என்று வந்தால் இலங்கை ஜனாதிபதி மட்டுமல்ல அமெரிக்க அதிபர் பிரித்தானியப் பிரதமர் என்று பட்டியல் நீளும் என்பது மேற்கு நாடுகள் நன்கு அறியும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் பொது மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை நன்று அறிந்து கொண்ட இலங்கை அரசும் அவர்களை விடுவிப்பதற்கான காத்திரமான முயற்சிகளை எடுக்காமல் புலிகளுக்கு எதிரான பதில் தாக்குதலை மூன்று லட்சம் மக்கள் மத்தியில் நடாத்தியது.

மேலும் யுத்தத்தின் இறுதிப் பகுதிகளில் இந்த யுத்த வலயத்திற்குள் இருந்து தப்பிச் செல்ல முற்பட்டவர்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடாத்தி உள்ளனர். பொது மக்கள் மீது செல் தாக்குதல்களையும் புலிகள் நடத்தி உள்ளனர்.

MR_Protest_Heathrowதற்போது யுத்தத்தில் தோல்வியடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அரசினைப் பழிவாங்குவதற்கான மாற்று வழியாக மனித உரிமை மீறல்களைப் பயன்படுத்த முற்பட்டு உள்ளனர். நடந்து முடிந்த யுத்தத்தில் அரசு மனித உரிமைகளை அப்பட்டமாக மீறியுள்ளது. ஆனால் அரசுக்கு எதிராக மனித உரிமைகளைத் தூக்கிப்பிடிக்கின்ற தமிழீழ விடுதலைப் புலி சர்வதேச அமைப்புகளும் வன்னியில் ஆயிரக் கணக்காண மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்துள்ளனர். அங்கு வகைதொகையின்றி மனித அவலம் நடந்தால் சர்வதேச சமூகம் தமிழீழத்தைப் பெற்றுத் தரும் என்று பிரச்சாரம் செய்து மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி மிகமோசமான மனித அவலத்துக்கு காரணமாக இருந்தனர்.

யுத்தக் குற்றவாளி இலங்கை அரசு மட்டுமல்ல தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் சர்வதேச அமைப்புகளும் தான். அதனால் எதிரியாகக் கருதிய இலங்கை அரசிடம் நியாயம் கேட்கும் அதேவேளை தம்மைக்காக்க வேண்டிய தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் சர்வதேச கட்டமைப்புகளும் தாங்கள் அம்மக்களுக்கு இழைத்த துரோகத்திற்கு நியாயம் கிடைக்க வழி செய்து கொண்டு எதிரியிடம் நியாயம் கேட்பதே முறையானது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

64 Comments

 • Nathan
  Nathan

  புலிதானே முள்ளிவாய்காலில் செத்துப்போச்சு என்று எழுதிறயல் பிறகு புலியின் போர்க்குற்றத்திற்கு தண்டணை கொடுக்க வேண்டுமென்றால் எப்படி? உண்மையை சொன்னால் புலியின் அத்தனை முடிவுக்கும் பிராகரனை பொறுப்பு கூறலாம் ஏனெனில் அவருக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்க நியாயமில்லை. ஆனால் அவரும் செத்து உடலையும் எரித்து கடலில போட்டாச்சு அப்ப யாரை பிடித்து கூட்டில் நிறுத்துவது? சரி புலிகளியக்கத்தை தடை செய்யலாம் ஆனால் அதுதான் 35 நாடுகனில் தடைசெய்யப்பட்டாகி விட்டதே!!

  உங்கட விருப்பம் புலிய எல்லோரும் வெறுக்கவேண்டுமென்பதே தவிர சனத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்பதல்ல. புலியின் காலை வாறுவதற்காக கொடுங்கோலனை விட்டுவிடவேண்டாம். முதலில் மகிந்தரை கூட்டில் ஏற்ற ஆவன செய்வோம் பிறகு எல்லோருமாய் சேர்ந்து புலியை கூட்டில் ஏற்றுவோம்.

  Reply
 • karuna
  karuna

  என்ன ஜெயபாலன் புலிகளின் யுத்தக்குற்றங்கள் பற்றியோ மனித படுகொலைகள் பற்றியோ இனச்சுத்திகரிப்பு பற்றியோ பட்டியல் போட மறந்து விட்டீர்கள்?
  சரணடைந்த மாற்று இயக்கத்தினரை படுகொலை செய்தமை சரணடைந்த இராணுவத்தினை படுகொலை செய்தமை தம் பாதுகாப்பில் வைத்திருந்த யுத்தக் கைதிகள் மற்றும் சகோதர இயக்க போராளிகளை படகொலை செய்தமை இது ஒரு ஆரம்பமே! பட்டியல் அனுராதபுரத்தில் சிங்கள அப்பாவி பொதுமக்கள் கொலை! காத்தான் குடியில் முஸ்லீம் அப்பாவிகள் படுகொலை! திருமலையில் சிங்கள முஸ்லீம் மக்கள் படுகொலை! கொழும்பு மற்றும் தெற்கில் சிங்கள் தமிழ் முஸ்லீம் மக்களை பல்வேறு பட்ட குண்டு மற்றும் தற்கொலை குண்டு தாரிகளால் கொலை செய்தமை! தமிழ் மற்றும் சிங்கள முஸ்லீம் நிராயுதபாணியான அரசியல் வாதிகளை கொலை செய்தமை!

  பசிக் கொடுமையால் சிறு சிறு குற்றம் செய்தவர்களை எந்த வித விசாரணைகளுமின்றி தந்தி கம்பங்களில் கட்டி வைத்து கொலை செய்தமை!
  இயக்கங்களிற்குள் நடைபெற்ற உட்பூசல் (இது புலி முதல் புளொட் ரெலோ ரெலா என பல தமிழ் இயக்கங்கள் அடங்க) பதவி போட்டியில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் கொலை! காலா காலமாக அமைதியாக வசித்து வந்த ஒரு சமூகத்தை இனச் சத்திகரிப்பு என்ற பெயரில் 24 மணித்தியாலத்தில் அவர்களின் உடமைகளை கூட எடுக்கவிடாது அவர்களின் வாழிடங்களில் இருந்து அகதிகளாக துரத்தியமை!

  இலங்கையில் நடந்தது போதாதென்று ஊழலில் ஈடுபட்ட புலிகளின் வெளி நாட்டு முகவரை பிரான்ஸில் வைத்து கொன்றமை! மாற்று இயக்க உறுப்பினரை பிரானஸ்சில் வைத்து கொன்றமை மற்றும் தாக்கியமை! எல்லாவற்றிகும் மேல் முன்னை நாள் வெளி நாட்டு பிரதமரையும் அந்த நாட்டு பிரஜைகளையும் தற்கொலை தாக்குதல் மூலம் கொலை செய்தமை!

  இப்படி நாடு விட்டு நாடு மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயந்து கொலை செய்த தமிழர்கள் மகிந்தாவை மட்டும் போர்க்குற்றவாளி என்பது ஜோக்காக தெரியவில்லை! மனித குலத்திறகும் தமிழினத்திற்கும் மிகவும் மோசமான அவப்பெயரை ஈட்டுத் தந்த இந்த தமிழ் இனத்தை சேர்ந்த ஒருவன் என்பதில் நான் வெட்கி தலை குனிகிறேன்! முதலில் எமது குற்றங்களை பட்டியல் இட்டு ஒரு போர்க்குற்ற வழக்கிற்கு தயாராகுங்கள்! பிறகு மற்றவர்களை பற்றி கவனிப்போம்!

  Reply
 • karuna
  karuna

  நந்தன் முதலில் உங்கள் முதுகில் உள்ள அழுக்கை கழுவுங்கள்! பிறகு அடுத்தவனை அசிற் ஊத்தி கழுவலாம்! அது சரி மகிந்த யுத்தக் குற்றவாளி சரி! நீங்கள் இந்த யுத்த குற்றங்களை நேரடியாக செய்து யாழ் குடாவில் மனித அவல படுகுழிகளை நிரப்பிய சரத்தை மன்னித்து ஆதரித்தது ஏன்? இந்த எய்தவன் அம்பு கதை இங்கு வேண்டாம்! காரணம் புலிகளின் மனித உரிமை மீறல்களிற்கு அம்பு தான் பிரபாகரன் அவனை ஏத்தி எய்தது முழுத் தமிழினமுமே!

  Reply
 • மகுடி
  மகுடி

  கருணாவின் பட்டியல் தரமானவை. இதற்காக புலிகள் எந்தக் கோட்டில் ஏறப் போகிறார்கள்?

  Reply
 • gopal
  gopal

  நாதன்
  பிரபாகரன் செத்து உடலையும் எரித்து கடலில போட்டாச்சு என்றால் இந்த வருடமும் போன வருடமம் மாவீரர்தினம் கொண்டாடும்போது பிரபாகரனுக்கம் அஞ்சலி செலுத்தினீர்களா?
  பிரபாகரன் உயிரோடை இருக்கிறார் தகுந்த நேரத்தில் வெளிவருவார் எனக் காத்திருப்பவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீhகள் அவர்கள் எதற்காக அப்படி சொல்கிறார்கள்??

  Reply
 • thurai
  thurai

  தமிழீழப்போராட்டம் இலங்கையில் நடத்திய புலிகள் தமிழ் மக்களீற்கு பாதுகாப்பாக ஒருபோதும் இருந்ததில்லை. மாறாக வன்னி மக்களின் பாதுகாப்பினிலேயே வாழ்வை நடத்தினர். இறுதியில் வன்னி மக்கலையும் அழித்து தாமும் அழிந்தனர்.

  புலம் பெயர்நாட்டிலுள்ள புலிகள் இங்கு ஈழ்த்தமிழரின் அரசியல் உருமைபற்றியோ அல்லது போராட்டம் பற்றியோ பேசவும் தெரியாது யாராவது வாய் திறந்து கேட்டால் வாய்க்குள் துப்பாக்கியே செருகியவர்கள் இவர்கள் பாதுகாத்து புலம்பெயர் நாடுகளில் வளர்த்து
  தமிழினத்துக்கு துரோகமும் ஏமாற்றும் செய்தவர்கள் மட்டுமல்ல வாழும்நாடுகளையும் ஏமாற்றி வாழ்பவர்களையுமே.

  தொடர்ந்தும் இந்த ஏமாற்றுப் பேர்வழிகள் வாழ வேண்டுமானால் பாதுகாக்கப்பட வேண்டுமானால் இராசபக்சவென்ன இனி வரும் எல்லா சிங்கள தலைவர்களையும் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யவே வேண்டும். மனைவிக்கு வீரம் காட்டும் கணவன் போல, தன் இனத்திற்கே வீரம்காட்டி தம்மை வளர்த்தவர்கள் தான் புலிகள். இவர்களின் வீரம் ஈழ்த்தமிழினத்தை அழிவிற்கே கொண்டு சென்றது. விடுதலைக்கல்ல. –துரை

  Reply
 • மாயா
  மாயா

  //முதலில் மகிந்தரை கூட்டில் ஏற்ற ஆவன செய்வோம் பிறகு எல்லோருமாய் சேர்ந்து புலியை கூட்டில் ஏற்றுவோம். – நாதன்//

  //உண்மையை சொன்னால் புலியின் அத்தனை முடிவுக்கும் பிராகரனை பொறுப்பு கூறலாம் ஏனெனில் அவருக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்க நியாயமில்லை. ஆனால் அவரும் செத்து உடலையும் எரித்து கடலில போட்டாச்சு அப்ப யாரை பிடித்து கூட்டில் நிறுத்துவது? – நாதன்//

  உங்கட கதையைப் பார்த்தா காட்டில இருக்கிற ஏதாவது ஒரு புலியை கூட்டில போட்டுவீங்க போல இருக்கு. உங்களைப் போன்ற அறிவாளிகள் எழுத்தைப் பார்த்தா உங்கட கூட்டத்தின்ர அறிவும் தெரியுது? பேக்காட்டலும் விளங்குது?

  ஏதாவது காரியம் நடக்க கையை காலைப் பிடிப்பாங்கள். காரியம் ஆன பிறகு காலை வாருவாங்க. இதைத்தானே நீங்க காலா காலமா செய்து வாரீங்க. எத்தனை அறிவு உங்களுக்கு? உனக்கும் பெப்போ. உங்கப்பனுக்கும் பெப்பே கதை தெரியுமா? அதுதான் உங்களிட கதையும் நாதன். எதிர்கால சமுதாயம் துண்டைக் காணும் துணியக் காணும் என்று துரத்தப் போவது உங்களைப் போன்ற ஆக்களைத்தான்.

  Reply
 • S. சுகுணகுமார்
  S. சுகுணகுமார்

  அன்புடையீர் நான் ஒரு புலி ஆதரவாளன்! அதாவது வன்னியில் புலிகள் போராடியபோது ஆதரவளித்தவன்! 2009 மே 18 உடன் புலிகள் இயக்கம் அழிந்து விட்டது! அவர்களின் தலைவர் கொல்லப்பட்டதுடன் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு நிரந்தரமாக இல்லாது போயுள்ளது. ஆனால் இன்றும் சிலர் தம்மை புலி ஆதரவாளர்கள் என்று கூறுகிறார்கள். இல்லாத ஒரு அமைப்பிற்கு ஆதரவளர்களா? புலிகள் அமைப்பை உண்மையில் நேசித்தவர்கள் முன்னைநாள் புலி ஆதரவாளர்கள் பலர் இன்று புலிகளின் அழிவை உள்வாங்கி தம் நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர். இதன் முதல் செயற்பாடு கடந்த 21ம் திகதி (21/11/2010) தெற்கு லண்டனில் மிக அமைதியாக நடைபெற்ற மாவீரர் குடும்ப கொளரவிப்பும் மாவீரர் குடும்ப உதவிகளும் என்ற நிகழ்வுடன் ஆரம்பித்துள்ளது. இந்த நிகழ்வில் 200மேற்பட்ட முன்னை நாள் போராளிகள் கலந்து கொண்டதுடன் எதிர்காலத்தில் மிக எளிமையாக எவ்வாறு மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பது என்பது பற்றி முடிவுகள் எடுக்கப்பட்டதுடன் தாயகத்தில் அல்லலுறும் போராளிகள் குடும்பம் மற்றும் செய்யப்பட்ட போராளிகளுக்கு எவ்வாறு உதவுவது போன்ற செயற்பாடுகளும் முடிவுசெய்யப்பட்டது. அனைவரும் தம்மால் ஆனா உதவிகளை செய்வதுடன் முடிந்தளவு தாயக மக்களின் தேவையை பூர்த்தி செய்ய அனைவரும் பங்களிப்பதாக ஒப்புக்கொண்டனர்.

  ஆனால் நவம்பர் 27ம் திகதி லண்டனில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளில் இவர்கள் யாரும் பங்கு பற்றவில்லை! ஒரு சிலரை தவிர அந்த நிகழ்வில் பங்கு பற்றிய 99வீதமானவர்கள் போராட்டம் ஆரம்பித்தபோதே இயக்கங்களிற்கு போகவேண்டும் என்ற பயத்தில் வெளி நாட்டுக்கு ஓடி வந்தவர்கள். 2002 வரை தாமுண்டு தம் கடமையுண்டு என்றும் தமது குழந்தைகளை கிறமர் பாடசாலைக்கு அனுப்புவது முதல் சொகுசான வாகனங்கள் வாங்கி ஓடுவது போன்ற பல்வேறு அலுவல்களை முன்னிலைப்படுத்தியதே இந்த கூட்டம். ஆனால் சமாதான கால நடவடிக்கைகளை பயன்படுத்தி இந்த கூட்டம் 2002இல் புலிகள் அமைப்பின் சர்வதேச கட்டமைப்பினுள் நுளைந்து விடுதலைப் போராட்டத்தை ஒரு வியாபாரமாக மாற்றியவர்கள். இவர்கள் புலிகளின் பினாமிகள்! இந்த கூட்டம் தான் இன்று தமது உழைப்பை முன்னிலைப்படுத்தி இலங்கை அரசிற்கெதிரான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். இவர்களின் இந்த நடவடிக்கையால் தாயக தமிழர்கள் அல்லல் பட்டாலும் கவலையில்லை! அங்கு மக்கள் பட்டினியால் சொத்தாலும் பரவாயில்லை ஒரு குண்டாவது வெடிக்காதா என்று அலையும் கூட்டம். இது புலிப்பினாமிக் கூட்டம்!

  எனவே தயவு செய்து இனி வரும் காலங்களில் புலம்பெயர் சமூகம் இவ்வாறு வேலையற்ற போராட்டங்களை செய்தால் அதை புலிப்பினாமிகள் அல்லது பினாமிப்புலிகளின் செயற்பாடு என்று தெரிவிக்க வேண்டும். இல்லாத புலிகளோ அல்லது புலிகளின் உண்மையான ஆதரவாளர்களோ இன்று இவ்வாறான நிகழ்வுகளிற்கு செல்வது கிடையாது! மாறாக இந்த பினாமிபுலிகளின் ஏற்பாட்டில் அவர்களின் ஆதரவாளர்களே இன்று இவ்வாறு அடாவடித்தனம் செய்கிறார்கள்.

  இனிவரும் காலங்களில் விடுதலைப் புலிகள் அல்லது புலிகள் என்று அழைப்பது 2009 மே பதினெட்டிற்கு முன்னர் செயற்பட்டவர்கள்!

  அதன் பின்னான செயற்பாட்டாளர்கள் பினாமிபுலிகள் அல்லது புலிப்பினாமிகளும் அதன் ஆதரவாளர்களும்!

  Reply
 • விளங்காமுடி
  விளங்காமுடி

  சனல் 4இன் புதிய செய்தியை படியுங்கள்.

  http://link.brightcove.com/services/player/bcpid69900095001?bctid=693375798001

  Reply
 • பல்லி
  பல்லி

  எனக்கென்னமோ இவர்கள் புலம்பெயர் தேசத்தில் இருந்தும் தமிழரை நாடு கடத்த போகிறார்கள் போல் உள்ளது; மகிந்தாவை கூண்டில் ஏற்ற புலிகொடி எதுக்கு; எங்கு சதிராட போனாலும் இந்த புலி கொடியை தூக்கி இடுப்பில் கட்டுவது ஒரு வாடிக்கையாய் போச்சு; இதை பார்த்த சில லண்டன் மக்கள் சரியான குளிர் உந்த துணியை கழுத்தில் சுத்துங்கள் என அறிவுரை சொன்னார்களாம்;

  புலி கொடி விளம்பர சதிராட்டமா.?
  அல்லது மகிந்தாவை விரட்ட புலி போட்ட துணியா??

  Reply
 • Thalaphathy
  Thalaphathy

  //எனக்கென்னமோ இவர்கள் புலம்பெயர் தேசத்தில் இருந்தும் தமிழரை நாடு கடத்த போகிறார்கள் போல் உள்ளது; – பல்லி on November 30, 2010 10:02 pm//
  சனநாயக நாடுகளில் சனநாயகமற்ற முறைகளில் பணம்பண்ண வெளிக்கிட்டு, ஒருசமுதாயத்தின் வாழ்வையும் இருப்பையும் கேள்விக்குள்ளாக்கிய இவர்கள் இந்த நாடுகளில் இருப்பதிலும்பார்க்க, இவர்களின் சொந்தப் பன்றிந்தொழுவத்தில் அவர்களது சொந்த சுகாதாரத்தை பேண, கட்டாய விடுமுறையில் அங்கு அனுப்பினால்த்தான் இவர்களுக்கு சனநாயகப்புத்தியும், சனநாயக அரசியலில் தனியொரு மனிதனின் சமுதாய வளர்ச்சிக்கான பங்கு என்னவென்பதையும் இவர்களால் விளங்கிக்கொள்ள முடியாவிட்டாலும், ஆகக்குறைந்தது உணரவாவது முடியும்.

  Reply
 • மாயா
  மாயா

  இலங்கை அரசு மனித உரிமை மீறல்களைச் செய்திருக்கிறது. அதை விட அதிகமாக புலிகளும் செய்துள்ளார்கள். அனைத்து இயக்கங்களும் செய்துள்ளன. யாரைத் தண்டிப்பது? யாரை விடுவது? இதே மக்கள் அன்று அப்பாவிகளின் கொலைகளுக்கு இப்படி வீறு கொண்டு ஏன் எழுந்திருக்கவில்லை? அப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால் பல ஆயிரம் உயிர்கள் இன்றும் வாழ்ந்திருக்கும்.

  ஓமந்தை தடுப்பு முகாமிலிருந்து ஒரு முக்கிய புலி உறுப்பினர்; கிளிநொச்சியைச் சேர்ந்த ராஜதுரை (சசி சந்திரன்) திங்கள் கிழமை தப்பி விட்டதாக செய்தியொன்று வந்துள்ளது.

  Reply
 • Nathan
  Nathan

  //உங்கட கதையைப் பார்த்தா காட்டில இருக்கிற ஏதாவது ஒரு புலியை கூட்டில போட்டுவீங்க போல இருக்கு. உங்களைப் போன்ற அறிவாளிகள் எழுத்தைப் பார்த்தா உங்கட கூட்டத்தின்ர அறிவும் தெரியுது? பேக்காட்டலும் விளங்குது? மாயா//
  இலங்கை அரசாங்கமே புலியில்லை என்றாலும் உங்களைப்போன்றவர்கள் இல்லை செத்தவனையாவது தோண்டி எடுத்து கொண்டு வாங்கோ என்பியல். ஏனெண்டா உங்களமாதிரி சிலருக்கு பிழைப்பே அதுதான்.

  //ஏதாவது காரியம் நடக்க கையை காலைப் பிடிப்பாங்கள். காரியம் ஆன பிறகு காலை வாருவாங்க. இதைத்தானே நீங்க காலா காலமா செய்து வாரீங்க. எத்தனை அறிவு உங்களுக்கு? உனக்கும் பெப்போ. உங்கப்பனுக்கும் பெப்பே கதை தெரியுமா? அதுதான் உங்களிட கதையும் நாதன். எதிர்கால சமுதாயம் துண்டைக் காணும் துணியக் காணும் என்று துரத்தப் போவது உங்களைப் போன்ற ஆக்களைத்தான் மாயா//
  எனக்கு மூக்கு போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுணப்பிழை வரவேணும் என நினைக்கிற உங்களை போல ஆட்களை சமுதாயம் துரத்தியே விட்டது. அதுதான் இருப்புக்காக புலிஎதிப்பு அரசியல்

  //பிரபாகரன் உயிரோடை இருக்கிறார் தகுந்த நேரத்தில் வெளிவருவார் எனக் காத்திருப்பவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீhகள் அவர்கள் எதற்காக அப்படி சொல்கிறார்கள் Gopal??//அப்படி சொல்லுர ஆட்களைத்தான் நீங்கள் கேட்கோணும்

  Reply
 • Nathan
  Nathan

  பிரித்தானிய Chanel 4 தெலைக்காட்சியல் இலங்கை போர்க்குற்றம் தொடர்பான இன்னெரு ஆவணம் நேற்று வெளிடப்பட்டது. உண்மையில் புலியும் அரசாங்கமும் போர்க்குற்றம் புரிந்தனர் என சொல்லி வந்த British ஊடகங்கள் இப்ப அரசை பெரும்பாலும் குறிவைத்து தாக்குகின்றது. காரணம் புலிகளுக்கு பொறுப்புச்சொல்ல மூத்த தலைவர்கள் யாரும் இல்லை என்பதே. தற்கால நிலையில் மகிந்தாவை குற்றாளியாக நிரூப்pப்தே தேவை. அதற்காக இன்னும் 40 வருடம் கழிந்து அவர் இறந்தபின் தண்டணை கொடு;தால் என்ன பயன்?

  புலிகளின் தவறுகள் பல நியாயப்படுத்தப்பட முடிhயதவை ஆனால் உயிரோடிருக்கும் குற்றவாளிக்குத் தண்டணை பெற்றுக்கொடுக்காமல் சும்மா செத்த பாம்பை அடிப்பதில் பலனி;லை. பலர் தமது சொந்த பிரச்சனைகளால் புலியை எதிர்த்து இப்ப அதுவே அரசியலாய் போச்சு.

  Reply
 • ஜெயா
  ஜெயா

  இங்க என்னதான் நீங்க கூத்தாடினாலும் அங்க சிங்களவன் தமிழனை அடிக்கமாட்டான் ஆனால் அவன் புலி, புலிபினாமி என்று பார்க்கமாட்டான் சாதுரியமாக புலி அழியவில்லை எனவே அவசரகாலச்சட்டம் நீக்கமுடியாது முகாமில் உள்ளவர்களை அணுஅணுவாக விசாரணை செய்தே வெளியே விடுவான் பாதுகாப்பு வலயம் பற்றி கொஞசம்யோசிக்க வேண்டியள்ளது என்பான். வெளியேவிட்ட புலியையும் மீண்டும் உள்ளே போட சந்தர்ப்பம் உண்டு

  புலிசெத்தது என்றால் ஏன் புலிக்கொடி நிற்க வேண்டும் இதற்குதானே மோட்டு சிங்களவன் என்போமே அவன் அவுஸ்திரேலியாவிலும் முள்ளிவாய்க்காலிலும் தமிழர்கள் தத்தழித்தபோது புலிக்கொடியுடன் போராட்டம் நடாத்தியவர்களின் புலிக்கொடியை புடுங்கிஎறிந்து மக்களை விடுவிக்க கோருகிறார்கள் என்று சொன்னான். அங்கிருந்து மக்கள் ஒருவரும் மகிந்தாவை குற்ற கூண்டில் ஏற்ற கேட்கவில்லை (அதற்காக தவறு இல்லை என்பதல்ல) இங்கிருந்து உங்கள் வருவாய்க்காக அந்த மக்களை கூண்டில் ஏற்றுகிறீர்கள். உங்களுக்கு உண்மையாக என்ன வேணும் அதை பகிரங்கமாக சொல்ல வேண்டியதுதானே.

  Reply
 • மகுடி
  மகுடி

  //பலர் தமது சொந்த பிரச்சனைகளால் புலியை எதிர்த்து இப்ப அதுவே அரசியலாய் போச்சு.//

  நாதன் , புலிகள் எங்களை நிம்மதியாக வாழ விடவில்லை. புலிகளின் சாவு எமக்கு மகிழ்வே. இந்த அரசியல் , உங்கள் அரசியல் போல எமக்குத் தேவை. அன்று நீங்கள். இன்று நாங்கள். ஓகேயா நாதன்.

  Reply
 • மாயா
  மாயா

  பிரபாகரன் மட்டும்தான் புலி என்பது நாதனின் வாதம். ஆனால் நாதனும் புலிதான் என்பது எமது பார்வை. பரவாயில்லை?

  புலிகள் மட்டுமல்ல ஏனைய இயக்கங்களும் அப்பாவிகளைக் கம்பங்களில் கொன்று தொங்க விட்டார்களே? சிறு சிறு தவறுகளைச் செய்தவர்களை எந்த ஒரு விசாரனையுமின்றி கொன்றார்களே? சகோதார இயக்கங்களை அழித்தார்களே? அப்பாவி சிங்கள மக்களை ( நாதன் புலியில்லை என்றால்) கொன்றார்களே?

  இவை குறித்து புலிகள் அழியும் வரை நீங்கள் மெளனமானது ஏன்?

  மகிந்தவை தண்டிக்க எம்மை அழைப்பது ஏன்?

  இதற்கு முன்னும் போர் நடந்தது. தமிழின படுகொலைகள் நடந்தன. அது பண்டாரநாயக்க தொடங்கி சந்திரிகா வரை ( குறைந்த மதிப்பாக) இவர்களில் ரணில் ; சந்திரிகா போன்றோர் உயிரோடு இருக்கிறார்கள். அவர்களை தண்டிக்க ஏன் நீங்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை?

  இதற்கு பதில் தாருங்கள். வன்னிப் போர் காலத்தில் ஐநா திடல் / வீதிகளில் திரண்ட மக்கள் தொகையையும் ; இன்று திரளும் தொகையையும் பாருங்கள். சிலரை நம்மால் முட்டாள்கள் ஆக்கலாம் நாதன். அனைவரையும் அல்ல.

  எங்களைப் பிழைப்பு வாதியென்கிறீர்கள். நீங்கள் வாழ்வதே அப்பாவிகளின் மாயானத்தின் மீதுதான் என்பதை உங்கள் மனச் சாட்சி உங்களுக்குச் சொல்லும். நான் எந்த ஒரு மனித சாவிலும் மகிழ மாட்டேன்.

  Reply
 • Sri Vaishnavi
  Sri Vaishnavi

  ஜெயபாலன்,
  நாவலனின் இனிஒரு தளத்தின் கருத்துப்படி, ஆற்பாட்டம் சுயாதீனமாக லண்டன் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் ; அதை சில புலிகள் குழப்ப முயன்றதாகவும் அறிகிறோம். நீங்கள் புலிகள் ஒழுங்கு செய்ததாக இங்கு குறிபிடுகிறீர்கள். இதில் எது உண்மை??? லோண்டுனுக்கு வெளியில் வாழும் எமக்கு சரியான தகவல் தர வேண்டியது ஊடகங்களின் கடமை. அதேவேளை இங்கிலாந்து நிறுவனம் ஒன்று இலங்கை அரசிடம் பல மில்லியன் பெறுமதியான ஒப்பந்தத்துடன், இலங்கை சார்ந்த தகவல்களை, திசை திருப்புவதாகவும் நாவலன் சொல்கிறார். இது உண்மையா ?

  Reply
 • Nathan
  Nathan

  The video which was not shown on Channel 4
  -http://video.yahoo.com/watch/8621397/23279209

  Unless this happen to your brother or sister, you’ll say they were all LTTE. Normally, innocent until proven guilty but in Sri Lanka and for you guilty (LTTE) until proven innocent.

  Reply
 • thurai
  thurai

  //பலர் தமது சொந்த பிரச்சனைகளால் புலியை எதிர்த்து இப்ப அதுவே அரசியலாய் போச்சு//நாதன்
  புலிகள் என்பது வன்னியில் இற்ந்தவர்கள் மட்டுமல்ல. புலம்பெயர் நாடுகளில் தமிழர்களை தமிழீழமென்ற மாயையைக் காட்டி எமார்றுவோர். இவர்களின் ஏமாற்ரை அம்பலப் படுத்துவோரை துரோகிகளாக பட்டம் சூட்டினர் கொலை செய்தனர். இவர்கள இப்போ உருதிரகுமாரின் தலைமையின் கீழ் செயற்படுகின்றனர். உருதிரகுமாரிற்கே ஒவ்வொரு நாட்டிலும் புலிகள் என்ன ஏமாற்றுக்களை தொடர்ந்து செய்கின்றார்களென்பது தெரியாத விடயம்.

  //காரணம் புலிகளுக்கு பொறுப்புச்சொல்ல மூத்த தலைவர்கள் யாரும் இல்லை என்பதே. தற்கால நிலையில் மகிந்தாவை குற்றாளியாக நிரூப்ப்ப்தே தேவை//நாதன்
  இலங்கையில் ஒரு அரசியல் தலைவர் மகிந்தா மட்டும். ஆனால் புலிகளிற்கு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு ஊரிலும் தலைமைகள் உண்டு. இதனை அறியாமல் பேசுபவ்ர்கள் புலிகளல்ல புலியின் வால்களேயாகும்.– துரை

  Reply
 • karuna
  karuna

  பழிக்கு பழி ரத்தத்திற்கு ரத்தம் மகிந்தவை கூண்டில் ஏற்றுவது இதனால் இன்றைய பிரச்சனை தீர்ந்து விடுமா? மகிந்தாவவை போர்குற்றத்தில் எற்றி அவருக்கு தண்டணை வாங்கியதும் புலம்பெயர் தமிழர்கள் தன் வேலையை கவனிக்க சென்று விடுவார்கள்! அதற்கான முழுப்பழி வாங்கலும் இலங்கை வாழ் தமிழர் மீது தொடரும்! இன்று பட்டினியை எதிர்நோக்கும் அந்த சமூகம் இந்த வழக்கு விசாரணைகளால் எதைப்பெறும்? மன்னிப்பு – புரிந்துணர்வு – விட்டுக்கொடுப்பு! இதுதான் இன்றைய யதார்த்தம்! இன்று இலங்கையில் ஏதோ ஒரு வகையில் சமாதானம் நிலவுகிறது! இதை பயன்படுத்தி அனைவரும் தாம் விட்ட தவறுகளை மறு பரசீலனை செய்து புதிய வாழ்வை கட்டியெழுப்ப முனைகிறார்கள்! தயவு செய்து புலம்பெயர் தமிழர்களே அவர்களை விட்டு விடுங்கள்! தாயகத்திலிருந்து இதற்கான குரல்கள் ஏற்கனவே வர ஆரம்பித்தள்ளது! எங்களை விட்டு விடுங்கள்!

  Reply
 • DEMOCRACY
  DEMOCRACY

  வன்னியில் ஏற்பட்ட அவலம்!?. இதில் தனியார் “செக்க்யூரிட்டி நிறுவனங்களான” வெளிநாட்டு “கூலிப்படைகள் (மெர்ஷினரிகள்)” பயன்படுத்தப்பட்டது வெளிவந்ததா?. விக்கிலீக்கில் வரும்.. .ஈராக்கில் அமெரிக்கா?(கர்?) பயன்படுத்திய தனியார் கூலிப்படையினர் பதினேழு பொதுமக்களை கொலை செய்ததற்கே, வெளிக்கொணரப்படுகிறது…சம்பத்தப்படவர்களின் முயற்சியால்…

  “Under no circumstances accept a bribe”-said a WikiLeak cable.

  The message dispatches also show that Blackwater internationally omnipresent. Security experts trained Special forces and police units in the United Arab Emirates, Kuwait, Jordan and Azerbaijan – and Afghanistan together with the German police. In Chile, the Americans have the Red Tactica firm hired as a subcontractor, the former Chilean police and military as mercenaries in Iraq distributed.As Blackwater, the Iraqi government after the massacre on the Nisurplatz 2007, which killed 17 Iraqis, license revoked, changed many Mercenaries only the label: In January 2010, wrote from the U.S. Embassy Baghdad, that the company Triple Canopy, who worked for the U.S. government, “Allegedly employed hundreds of former Blackwater employees,” DynCorp Services also occupy another war “Dozens of ex-Blackwater people. ”
  In November 2009, allegations have been known then that Blackwater Iraq bribed officials with about a million dollars, had to remain in the country to be allowed. A Foreign Ministry spokesman said at the time, was away from him unknown.

  Now reveal the message reports that the U.S. officials in Baghdad but probably had about it and the year before in this wanted to dissociate matter of Blackwater. The deputy U.S. Ambassador in Baghdad said at that time in a message to Washington, to endorse the U.S. Embassy “under no circumstances a bribe or a part could be it. “

  Reply
 • karuna
  karuna

  some of thier lisits….
  -http://www.youtube.com/watch?v=F6nBBwKyhU0&feature=related
  -http://www.youtube.com/watch?v=F6nBBwKyhU0&feature=related
  -http://www.youtube.com/watch?v=UwleXz_rBl4&feature=related
  -http://www.youtube.com/watch?v=h99V5xjeNyo

  Reply
 • karuna
  karuna

  கொலை எப்படிச்செய்தாலும் கொலை தான்! கிட்டவைச்சு சுட்டாலும் அது கொலை ஒளித்து நின்று குண்டு வைத்தாலும் ஒரு கொலை! இங்கு சிங்கள தரப்பு நியாயாம் தமிழ் தரப்பு நியாயம் என்பதற்கும் அப்பால் மனித தர்மம் இரு தரப்பாலும் மீறப்பட்டுள்ளது! அனால் யாரை யார் தண்டிப்பது? இப்போது தண்டிப்பது அல்ல முக்கியம்! மக்களின் எதிர்காலம் பாதுகாப்பா இருக்க வேண்டும் என்பதே முக்கியம்! அதற்கு இந்த வழக்கு விசாரணை இன்று சரிவரமாட்டாது! இதை மறக்கத் தேவையில்லை! ஆனால் மன்னிக்கவேண்டிய தேவை உள்ளது! காரணம் நாம் அனைவருமே தவறிழைத்தள்ளோம்!

  Reply
 • satha
  satha

  நாதன் நீங்கள் பதிந்த வீடியோவை பார்க்கும்போது கண்கள் கட்டப்படாமல் கையெடுத்து கும்பிட்டுக்கொண்டு கெஞ்சி அழ அழ உயிரோடு, கழுத்தில் ரயர்போட்டு எனது சகோதரன் புலிகளால் கொழுத்தப்பட்டபோது ஏற்பட்ட வலியை, அதிர்ச்சியை மீண்டும் உணர்ந்தேன்.

  Reply
 • kamali
  kamali

  எங்களை இனியும் நிம்மதியாய் இருக்க விடமாட்டீர்கள் போலுள்ளது

  Reply
 • மாயா
  மாயா

  நாதன் ; உங்களை விட எங்களுக்கு வலிக்கிறது. இந்த வலி தொடரலாகாது என்பதே எமது நோக்கம். உங்கள் நோக்கம் உங்கள் பை நிறைய வேண்டும் என்பதே.எங்கள் நோக்கம் அப்பாவிகள் வாழ வேண்டும் என்பதே.

  மனைவியின் பெற்றோர் சீதனம் தராததற்கே ; மனைவியை அடிக்கும் ; எரிக்கும் மனிதர்கள் கொண்ட சமுதாயத்தில் நாம் வாழ்கிறோம். இங்கு நீங்கள் இங்கே போடும் கோசங்களின் பிரதிபலிப்பு ; அடைபட்டு கைதாகி நிற்கும் பலரது ஓலமாகிவிடும். அதுதான் நடக்கிறதோ தெரியாது?

  இவற்றை உணர பகுத்தறிவோ ; கல்வியோ தேவையில்லை. மனம் இருந்தால் மட்டும் போதும். புலிகள் அப்பாவிகளைக் கொன்ற போது கொண்டாடியவர்கள் நீங்கள். புலிகள் மட்டுமல்ல ; அனைத்து இயக்கங்களும் அதைத்தான் செய்தன. அதை அனைவரும் ஏற்றுக் கொள்கிறோம். உண்மையானவன் இல்லையென்று மறுக்க மாட்டான்?

  அங்கே பொறிக்குள் சிக்கியிருக்கும் அப்பாவிகளுக்கு எதுவும் நடக்கலாகாது என்பதே எமது ஆதங்கம். அங்கே உள்ளவர்கள் உங்களோடு (புலிகளோடு) வாழ்ந்து புலிகளுக்காக ஆயுதம் ஏந்தியவர்கள்தான். அதை உணர்வீர்களோ தெரியாது. இவற்றின் பாதிப்பு அங்கே அவர்களுக்கு பாதிப்பாகும். அதை மட்டும் உணருங்கள்.

  Reply
 • karuna
  karuna

  23வது நினைவு தினம்! எதற்கு தெரியமா? கந்தன் கருணை படுகொலை! அதாவது ஈழத்து வெலிக்கடை கொலை! என் உயிர் நண்பனை இழந்த நாள்! நண்பனின் துணைவி ஒரு விதவை அவளிற்கும் அவளின் குழந்தைக்கும் யார் நீதி கொடுக்கப்போகிறீர்கள்?

  Reply
 • விளங்காமுடி
  விளங்காமுடி

  கொலைவெறியாடி, அதைப்பதிவு செய்து, உலகத்திற்கு வெளிக்கொணர்ந்தது சிங்கள பவுத்த பேரினவாதக் கட்டமைப்பே. இதை சர்வதேச அமைப்புகள், நாடுகள் தாம் வகுத்த சட்டவமைப்புகள் மூலம் நீதிநடுகைக்குட்படுத்த வேண்டும்.

  இதைக் குழப்பியடிக்கவும், நாட்டில் பணயக் கைதிகளாக இருக்கும் தமிழ் மக்களுக்கு மரணசாசனம் எழுதவும் போகிறதை, ‘கூத்தாடும் வெளிநாட்டுகாரர்கள்’ இன்னமும் புரிந்து கொள்கிறார்களில்லை.

  Reply
 • Nathan
  Nathan

  மாயா நீங்கள் கண்ணைமூடிக்கொண்டு உலகம் இருண்டது என சொன்னா மற்றவனும் நம்ப வேண்டும் என்றில்லை.

  முதலாவது நான் புலியில்லை. புலிகளின் கட்டுப்பாட்டிலும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலும் வாழ்ந்த லட்சம் மக்களில் ஓருவன். நானும் எனது குடும்பமும் பலதடவை புலிகளால் பாதிக்கப்பட்டவர் தாம். pass office இற்கு நானும் நாயாய் அலைந்தவன்தான். புலிகளை நியாயப்படுத்துவதல்ல என் நோக்கம். இப்ப என்ன செய்யவேண்டும் என்பதே கேள்வி.

  இப்போ புலியென்று எவனும் காசு கேட்பதில்லை கேட்டாலும் எவனும் கொடுப்பதில்லை. சும்மா எதற்கெடுத்தாலும் ஏதோ லட்சத்தில் கொடுத்தமாதரி கதைப்பதை முதலில் நிறுத்துங்கள். நான் யாருக்கும் பணம் கொடுக்கவுமில்லை என்னை யாரும் கேட்கவுமில்லை. அதைவிட மக்களிடம் பணம் வாங்கி சொத்து சேர்கவேண்டியதேவையும் எனக்கிலை.

  ஏதோ இங்க மகிந்தவிற்கு மாலைபோட்டால் அவர் ஊருக்குபோய் எங்கட சனத்துக்கு நல்லது செய்வார் என நினைக்க வேண்டாம். ஒரு அன்பர் சொன்னார் எல்லாத்தையும் மறந்து மன்னி;போம் என்று. எனக்கும் விருப்பம்தான் ஆனா பெரு;பான்மை சிங்களவன் வோட்டு போட்டனுப்பிய எந்த அராங்கமாவது சொன்னதா தாங்கள் 1956 இல் கொன்றது பிழை 1977 இல் செய்தது பிழை அதாலதான் பிரபாகரன் புலியெண்டு வந்திருக்கமாட்டார் அப்ப நாமெல்லாம் ஒருதாய் பிள்ளைகளாய் வாழ்ந்திருக்கலாம். ஆனா அவங்கள் அப்பவும் சரி இப்பவும்சரி மற்க மன்னிக் தயாரில்லை. உங்களை மாதிரி சிலர்தான் இன்னும் இப்படி பேசிக்கொண்டு காலத்தை போக்கிறியள்.

  Reply
 • karuna
  karuna

  நந்தன் மற்றும் ஆத்திரத்தில் துடிக்கும் அன்பர்களே உங்களின் அவசிய வாசிப்புக்கு இது சமர்ப்பணம்! தயவு செய்து நுணிப்புல் மேய்ந்து விட்டு சென்று விடாதீர்கள்! ஆற அமர இருந்து வாசித்த விட்டு சிந்தனையை வெளிப்படுத்துங்கள்!

  -http://www.unmaikal.com/2010/11/1.html
  -http://www.unmaikal.com/2010/11/1_29.html

  Reply
 • மாயா
  மாயா

  நாதன் ; நீங்கள் புலியில்லை. அது பரவாயில்லை. இந்தியா ; உங்களுக்கு தனி நாடு தரவில்லை. சுயாட்சியை வாங்கித் தந்தது. அதற்கான பாதுகாப்பையும் தருவதாக உறுதியளித்தது. அதை போட்டுடைத்தீர்கள்?

  இந்தியா தனக்கு சாதகமாக்கிக் கொள்ள அதைச் செய்ததென்று வைத்துக் கொள்வோம். அதன் பிறகு நோர்வே மூலம் ரணில் வழி சுயாட்சிக்கான சமாதானம் வந்தது. அதையும் இல்லாமல் செய்து மகிந்தவை கொண்டு வந்தார்கள். புலிகள் சொன்னதால் ரணிலுக்கு வாக்களிக்கவில்லை. மகிந்தவிடம் பணமும் வாங்கி ; தமிழர்களை வாக்குப் போடாமல் தடுத்து மகிந்தவை கொண்டு வந்தார்கள். அதை ஏற்றீர்கள். நீங்கள் ஏற்கவில்லையென்றாலும் ; பெரும்பாலான தமிழர்கள் ஏற்றார்கள்.

  அதனால் மகிந்த வந்தார். மகிந்தவை வர விட்டு ; அவரைக் படுகொலை செய்ய முயன்றார்கள். சரத்தையும் படுகொலை செய்ய முயன்றார்கள். கோட்டாவையும் படுகொலை செய்ய முயன்றார்கள். எல்லாம் தலை குப்பறத் திரும்பியது. சண்டைதான் வேணும் என்று தமிழர்கள் ஒற்றைக் காலில் நின்றார்கள். நீங்கள் ; நானில்லை என்பீர்கள்? நாங்கள் என்று சொல்லிக் கொள்கிறோம். நாங்களாவது அதை ஏற்போம்.

  எப்போது சண்டை தொடங்கியது தெரியுமா? ஒரு மதகை திறந்து விடுங்கள் . விவாசாயிகள் பயிர் செய்ய முடியாமல் இருக்கிறார்கள் என்று கேட்டார்கள். இல்லை என்று அடம் பிடித்தார்கள். இராணுவம் வந்து அடித்து பறித்து திறந்து விட்ட போது ; சில புலிகள் கண்காணிப்புக் குழுவோடு பதுங்கித் திரிந்து குய்யோ முய்யோ என்று ஓடினார்கள். அது போதாதென்று ” நாங்கள் மனிதாபிமானத்தோடு திறந்து விட்டோம்” என்றார்கள். பிறகு திறக்கப் போகும் போது ” இராணுவம் பலவந்தமாக திறந்து போட்டார்கள்” என்று பம்மாத்து கதை சொன்னார்கள்.

  அன்றைக்கு தொடங்கின தொடக்கம்தான் முள்ளிவாய்க்கால வரைக்கும் போய் நின்றிச்சு.

  இந்தியா வாங்கித் தந்ததையும் வாங்கயில்லை. இலங்கை தந்ததையும் வாங்கயில்லை. சர்வதேசம் தந்ததையும் வாங்கயில்லை. எதையென்று கேட்பீங்க. உரிமையை. இப்போ மகிந்தவை தூக்கில போட வேணும் என்று நிக்கிறீங்க. இதுக்காகவா இத்தனை சாவுகளும்; அழிவுகளும்?

  நான் கண்ணை மூடிக் கொண்டு நிற்கிறது போல தெரியிறதுக்கு காரணம் நீங்க கண்ணிருந்தும் குருடாக இருக்கிறதால் என்று சொல்லலாம். இல்லை உங்களுக்கு பழசு மறந்து போச்சு. உங்கள் நோக்கம் தினசரி அடிபட வேணும். என்பதா? நான் நினைக்கிறேன் ; நீங்கள் சிறீலங்காவை விட்டு வெளியில் வந்துட்டதாக………..

  உங்கள் வேதனை புரிகிறது. தாயகத்தில் பகிடியாக பதியுமாறு படித்த ஒரு சில வரிகள் :

  //நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் victims என்ற முகமூடியுடன் அனுதாபம் தேடத் தொடங்கியிருக்கிறோம், நாங்கள் அப்பாவிகளைப் போட்டு அடிக்கும் போது தட்டிக் கேட்பவர்களைப் பார்த்து. பேசாமல் உன்ரை வேலையைப் பார் என்று சொல்கின்ற நாங்கள் எங்களுக்கு அடி விழும்போது ஐயோ. இந்த அநியாயத்தை கேட்பார் யாருமே இல்லையா என்று ஒப்பாரி வைப்பது எங்கள் பழக்கமாகவே இருந்து வருகிறது,

  உங்களுக்குத் தெரியும். பள்ளிக்கூடங்களில் சில மாணவர்கள் மற்றவர்களுடன் சொறிச்சேட்டைகளில் ஈடுபடுவார்கள், காரணமில்லாமல் அடிப்பார்கள், ஒரு பெடிப்பிள்ளை ஒருநாள் விசயம் தெரியாமல் ஒரு அப்பாவியின் மேல் கை வைத்திருக்கிறார், அதுவரை நாள் பொறுத்திருந்த அப்பாவி திருப்பி விளாசி விட்டான், இவர் அழத் தொடங்கியிருக்கிறார், வாத்தியார் கண்;டு வந்து கேட்டார், ஆர் சண்;டை தொடக்கினது அப்பாவி சொன்னான். அவன் தான் முதலில் எனக்கு அடிச்சான், மற்றவர் சொன்னார். இல்லை. அவன் தான் முதல்ல எனக்கு திருப்பி அடிச்சான்,

  நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்பதும் இவ்வாறானது தான், சண்;டையைத் தொடங்கி அடி வாங்கி விட்டு அநியாயத்தைக் கேட்பார் யாருமே இல்லையா என்ற ஒப்பாரி, எங்கட தலைவருக்குத் திருப்பி அடிச்சுப் போட்டான் என்பது தான் எங்களின் பிரச்சனை, ஏன் தலைவர் முதல் அடிச்சார் என்று கேட்க மாட்டோம், ஏனென்றால் அது எங்கள் செல்லப்பிள்ளை,…… – தாயகம் //

  இதுவும் நான் சொன்ன முந்தய கதைதான். மகிந்தவை தண்டிக்க வேண்டும். அதனால் என்ன நன்மை என விளக்குவீர்களா? தாயகத்தில் எந்தப் பகுதி? எங்கே வாழ்கிறீர்கள்? எப்போது நாட்டை விட்டு வந்தீர்கள் என்று சொல்வீர்களா? நோயை அறியாமல் மருந்து சாப்பிட முடியாது. அதனால்தான்.

  Reply
 • Ajith
  Ajith

  இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆக்ஸ்போர்டில் வியாழக்கிழமை ஆற்ற இருந்த சிறப்பு உரை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஆக்ஸ்போர்ட் யூனியன் அமைப்பு அறிவித்துள்ளது.

  Reply
 • விளங்காமுடி
  விளங்காமுடி

  அறுவது வருட முரண்பாடுகளை, முப்பதாகச் சுருக்கிக் கொண்டு, தனிமனித விருப்பு, வெறுப்புகளை புது ஆராய்ச்சியாக்கி, எழுதிக் கொண்டே இறந்து போகலாம் என்ற எண்ணப் பெருமிதமுந்தான் சிலரிடம் எஞ்சி நிற்கிறது. இது அறிவுடமையாகாது.
  தமிழ்மன்னனின் சிங்கக் கொடியை, சிங்கள பவுத்த கொடியாக தூக்கியது ‘ராஜபக்ஷ்’ தான் என்பதும், தன் பிள்ளைகளுக்கு ‘மகாவம்சத்தின்’ கதாபாத்திரங்களான ‘கோத்தபாயா, ‘மகிந்த’ பேர்களை இட்டதும், வரலாறு படைக்கத்தான் என்பதும், பலருக்குத் தெரியாது.
  சிங்கள பவுத்த பேரினவாதத்தின் பேரெழுச்சிதான் தமிழர்களை அன்னியமாக்கியது. இந்திய விஷ்தரிப்புவாதத்தின் எடுபிடிகளாகத் தமிழர்களைக் காட்டி, சிங்கள பவுத்த இளைஞர்களிடம் ஆயுதக் கிளர்ச்சியை வளர்க்க ‘அஞ்சாம் வகுப்பு’ உதவியது.
  சமஷ்டி அமைப்பை இலங்கையில் முதல் பேசிய பண்டா’ சிங்களம் மட்டும் சட்டம் ஏற்றினான்.’ ஒரு மொழியெனில் இருநாடாகுமென்று’ முதல் உரைத்த இடதுசாரி கொல்வின்தான் சிங்கள பவுத்த பேரினவாத அரசியலமைப்பு எழுதினான்.

  வாழாவெட்டியாக இருந்தவர்கள் அறுதலிப் பிள்ளைகளாக ஆன வரலாறு, நீண்டது; ஆழமானது; நுனிப் புல் மேய்ச்சலில் நறுக்க முடியாதது.

  Reply
 • BC
  BC

  //இப்போ புலியென்று எவனும் காசு கேட்பதில்லை கேட்டாலும் எவனும் கொடுப்பதில்லை. //
  எவரும் புலிக்கு காசு கொடுக்க தயாராக இல்லை அதனால் தான் புலி காசு கேட்பதில்லை என்பதே உண்மை. புலிக்காக கதைக்க வேண்டுமென்றால் நான் புலியல்ல என்ற சொல்லி கதைக்க வேண்டிய நிலை. மாயா சொன்னது போல் தங்கள் பை நிறைய வேண்டும் என்பதே புலிகளின் நோக்கம். அதற்காகவே இவ்வளவு கூத்துக்களும் நடத்தப்படுகிறது.

  Reply
 • ஜெயா
  ஜெயா

  கருணா எழுதிய கந்தன் கருணை படுகொலையை யாரும் மறக்க முடியாது. வெலிக்கடை சிறைச்சாலைக் கொலையை காலம் காலமாக எழுதுகிறோம் ஆனால் அதைவிட மோசமான கந்தன் கருணைப் படுகொலை கிட்டுவிற்கு கால்போய்விட்டது என்று(மாத்தையாவினால் தான்) அருணாவினால் தான் சிறைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட போராளிகளை கொன்று குவித்த விடிய முதல் சுதந்திர பறவைகள் இரத்தம் கழுவியதை எந்த சனல் 4ல் பார்க்கப்போகிறோம். ஆனால் அதே கிட்டு கருணாவை விடுதலை செய்த இராணுவத்திற்கு சங்கிலி போட்டதை எந்த தமிழ்வின் காட்டப் போகிறார்கள். மொத்தத்தில் அகோரமான படங்களைக் காட்டி பணம் மட்டும் சாதிப்பது தானே முக்கியம். ஆனால் இப்போ நிறைய இலங்கைத் தமிழர்கள் இந்த செய்திகளை விட்டு சன் ரிவி கலைஞர் ரிவி பார்ப்பது அதிகமாகிவிட்டது கேட்டால் சொல்லுகிறார்கள் எப்ப பார்த்தாலும் செத்த வீட்டு காட்சிதான் என்று. தேசியக்கொடி புலி, தேசியப்பறவை செண்பகம், தேசியப் பூ கார்த்திகைப்பூ வீட்டுவாசல்களுக்கு யாரும் அடுக்காத அவ்வளவற்றையுத் தூக்கி வைத்துக்கொண்டு போராட புறப்பட்ட புலித்தலைமை இது.

  Reply
 • Ajith
  Ajith

  மகிந்தவை தண்டிக்க வேண்டும். அதனால் என்ன நன்மை என விளக்குவீர்களா? தாயகத்தில் எந்தப் பகுதி? – மாயா
  மகிந்தவை தண்டிக்காமல் விடுவதால் என்ன நன்மை என் விளக்குவீர்களா? சிங்கள குடியேற்றும் குறையுமா? கடத்தல் கப்பம் கொலை கொள்ளை குறையுமா/? தண்டிபதினால் இலங்கையில் ஜனநாயகம் திரும்பும். மக்கள் பயமில்லாமல் வாழ்வார்கள். தாயகம் என்பது நீங்கள் கூறுவது எதனை?

  Reply
 • palli
  palli

  //இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆக்ஸ்போர்டில் வியாழக்கிழமை ஆற்ற இருந்த சிறப்பு உரை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஆக்ஸ்போர்ட் யூனியன் அமைப்பு அறிவித்துள்ளது.//
  இதனால் வன்னி தமிழருக்கு என்ன லாபம் என பல்லி தெரியலாமா?? இதனால் புலம்பெயர் தமிழர்களுக்கு அல்லது கலவரகாரருக்கு என்ன லாபம் என பல்லி சொல்லலாம்; மகிந்தா சொல்லியிருப்பார்; அகதியாய் வாழ வந்த இடத்திலேயே சட்டத்தை மீறி இந்த தமிழர் செய்யும் சேட்டையை பாருங்கள். அப்படியானால் இலங்கயில் அதுவும் வடகிழக்கில் இவர்கள் அட்டகாசம் எப்படி இருக்கும் என சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் கேட்டுருப்பார்; அதற்கு அவர்களும் யோசிக்க வேண்டிய விடயம்தான் என, முள்ளிவாய்க்காலின் போது புலம்பெயர் தேச சதிராட்டம்(தெருவில்) சர்வதேசத்தின் கண்ணை மூடியது போல் இனிவரும் காலத்தில் மகிந்தா செய்ய போகும் தவறுகளை பார்க்காமல் கேக்காமல் இருக்க போவதே இன்றய காலநிலை; எது எப்படியோ இதுகூட மகிந்தாவின் கையை பலபடுத்திய சதிராட்டமே;

  Reply
 • santhanam
  santhanam

  30வருடமாக இலக்கற்ற போராட்டம் பொட்டனையும் பிரபாவும் உயிர் வாழ நடந்த குருசோத்திரம் இப்ப புலம் பெயர்ந்த தேசத்திலும் இலக்கற்ற ஊர்வலங்கள்.மகிந்தா வடமாரட்சியில் சோத்தால் எறிந்தபோதும் சந்தோசப்பட்ட தமிழன் முள்ளிவாய்க்காலில் உலகத்தை அழைத்தும் அவர்கள்வந்து காப்பாற்றவில்லை லண்டன் பேரவை இதன் எதிர்வினையை சந்திய்பார்கள்.

  Reply
 • T Jeyabalan
  T Jeyabalan

  கருத்தாளர்களுக்கு நன்றிகள்.

  //இனிவரும் காலங்களில் விடுதலைப் புலிகள் அல்லது புலிகள் என்று அழைப்பது 2009 மே பதினெட்டிற்கு முன்னர் செயற்பட்டவர்கள்!அதன் பின்னான செயற்பாட்டாளர்கள் பினாமிபுலிகள் அல்லது புலிப்பினாமிகளும் அதன் ஆதரவாளர்களும்!//
  சுகுணகுமார் உங்கள் வாதம் சரியானதாக இருந்தாலும் நடைமுறையில் நீங்கள் மிகச் சிறுபான்மையினரே. அதனால் உங்கள் வாதம் எவ்வளவுதூரம் ஏற்றுக்கொள்ளப்படும்.

  நாதன் மனித உரிமைகள் தொடர்பான உங்கள் வாதத்துடன் என்னால் உடன்பட முடியவில்லை.

  //உண்மையில் புலியும் அரசாங்கமும் போர்க்குற்றம் புரிந்தனர் என சொல்லி வந்த பிரித்தானிய ஊடகங்கள் இப்ப அரசை பெரும்பாலும் குறிவைத்து தாக்குகின்றது. காரணம் புலிகளுக்கு பொறுப்புச்சொல்ல மூத்த தலைவர்கள் யாரும் இல்லை என்பதே.// நாதன்.
  ஒருவருடைய மரணம் அவர் மீதான மனித உரிமை மீறல் குற்றங்களைக் களையப்போவதில்லை. அதற்கு பிரபாகரனோ உமாமகேஸ்வரனோ அமிர்தலிங்கமோ விதிவிலக்கல்ல.

  யுத்தம் என்பது இரத்தமும் சதையும் சிதைக்கப்படுகின்ற அவலம் நிறைந்தது. அதனைக் கூவி அழைத்தவர்கள் இன்று மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்றி அதே விடுதலைப் புலிகளின் சர்வதேச அமைப்புகள்.

  இலங்கையில் ஆயுதம் ஏந்தியவர்கள் பெரும்பாலும் அனைவருமே மனித உரிமை மீறல்களை நிகழ்த்தி உள்ளனர். யாருக்காக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதோ அதே மக்களின் புதல்வர்களைப் புததல்விகளை மிகக் கோரமாகப் பழிவாங்கியது எமது விடுதலை இயக்கங்கள். படுகொலை பழிவாங்கல் சித்திரவதை இவை அனைத்தையும் ஸ்தாபனமயப்படுத்தி தமிழ் சமூகத்தை வேரறுத்தவர்கள் விடுதலைப் புலிகள். அதற்கு நியாயம் கற்பித்தவர்கள் விடுதலைப் புலிகளின் புலம்பெயர் ஆதரவு அமைப்புகள். இவர்கள் முன்னெடுக்கின்ற மனித உரிமைக் கோசம் சாத்தானின் வேதங்களுக்கு ஒப்பானது.

  இலங்கை இராணுவமோ இலங்கை அரசோ ஒன்றும் புனிதர்கள் கிடையாது. அவர்களும் விடுதலைப் புலிகளைப் போன்றே மிக மோசமான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டு உள்ளனர். இவர்கள் அமெரிக்காவும் பிரித்தானியாவும் மேற்கொள்ளும் மனித உரிமை மீற்ல்களுடன் எண்ணிக்கையில் தான் வேறுபடுகின்றனர்.

  இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் பற்றிய விசாரணைக்கு ஒரே வழி தென்னாபிரிக்கா முறையிலான உண்மையை வெளிக்கொண்டு வரவும் மீளுறவை ஏற்படுத்துவதற்குமான செயற்பாடுகளே.

  ‘மன்னித்து மறக்காவிட்டால் எதிர்காலம் இல்லை!’ டெஸ்மன் ருரூ

  மன்னித்து மறப்பதற்குரிய முதல் நிபந்தனை உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும். அந்த உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு அதனை வெளிக்கொண்டு வருபவர்களை (கொலை கூட்டுக்கொலை போன்ற பாரிய குற்றங்கள் தவிர்ந்த விடயங்களில்) சட்டம் மன்னித்து பாதுகாப்புக் கொடுக்க வேண்டும்.

  இதற்கு இலங்கை அரச படைகள் மட்டுமல்ல விடுதலை இயக்கங்களும் அதற்கு ஆதரவாகச் செயற்பட்ட ஆதரவாளர்களும் பங்காளிகளும் இதற்கு முன்வர வேண்டும். அதைவிடுத்து மனித உரிமைகளை வைத்து பழிவாங்கும் ஸ்ரண்ட் அரசியல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதனையும் பெற்றுத் தராது. மாறாக இவ்வாறான ஸ்ரண்ட் அரசியலை முன்னெடுக்கின்ற அமைப்புகள் தங்கள் வசூலை மேற்கொள்ள மட்டுமே இது உதவும்.

  பிரபல சட்டத்தரணி புரூஸ் பெய்ன் க்கு வழங்குவதற்காகச் சேர்க்கப்பட்ட பல்லாயிரம் பவுண்களுக்கு என்ன நடந்தது?

  //ஆற்பாட்டம் சுயாதீனமாக லண்டன் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் ; அதை சில புலிகள் குழப்ப முயன்றதாகவும் அறிகிறோம். நீங்கள் புலிகள் ஒழுங்கு செய்ததாக இங்கு குறிபிடுகிறீர்கள்.// சிறி வைஸ்ணவி
  இற்றைக்கு 25 வருடங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் ஒரு இராணுவ முகாம் தாக்கப்பட்டால் தாங்கள் தான் இராணுவ முகாம் தாக்குதலை நடத்தியதாக இரண்டு மூன்று இயக்கம் நோட்டீஸ் விடும். போஸ்ரர் அடிப்பினம். அதற்கு பிறகு ஒருத்தற்ரை போஸ்ரரை மற்றவர்கள் கிழிப்பினம்.

  25 வருசமா இவர்கள் போராட்ட முறைகள் இன்னமும் மாறவில்லை. பாவம் மக்கள்.

  //இங்கிலாந்து நிறுவனம் ஒன்று இலங்கை அரசிடம் பல மில்லியன் பெறுமதியான ஒப்பந்தத்துடன், இலங்கை சார்ந்த தகவல்களை, திசை திருப்புவது உண்மையா ?// சிறி வைஸ்ணவி
  உண்மையாக இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. லொபியிங் என்ற பெயரில் உலகம் முழுவதும் இது தான் நடக்கிறது. ரொஸ்கிஸ்ட்டுக்களுக்கு அமெரிக்கா நிதி வழங்குவதாக ஸ்ராலினிஸ்ட்டுகள் சொல்வார்கள். ஸ்ராலினிஸ்டுக்கள் புரட்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாக ரொட்ஸ்கிஸ்டுக்கள் சொல்வார்கள். இலங்கை அரசு ஓரு சாராருக்கு பணம் கொடுத்து தனக்காக வேலை செய்வதாக ஒரு பக்கம் சொல்வார்கள். எம்ஐ5 எம்ஐ6 பணம் கொடுத்து இலங்கை இந்தியாவுக்கு எதிராக சிலரைத் தூண்டுவதாக இன்னுமொரு சாரார் சொல்வார்கள்.

  என்னால் ஒன்றுமட்டும் சொல்ல முடியும். உண்மைகள் சில சமயங்களில் து}ங்கிவிடுகின்றன. ஆனால் அவை என்றோ ஒருநாள் விழித்துக்கொள்ளும் அல்லது தட்டி எழுப்பப்டும்.

  //நாதன் நீங்கள் பதிந்த வீடியோவை பார்க்கும்போது கண்கள் கட்டப்படாமல் கையெடுத்து கும்பிட்டுக்கொண்டு கெஞ்சி அழ அழ உயிரோடு, கழுத்தில் ரயர்போட்டு எனது சகோதரன் புலிகளால் கொழுத்தப்பட்டபோது ஏற்பட்ட வலியை, அதிர்ச்சியை மீண்டும் உணர்ந்தேன்.// சதா
  தவிர்க்க முடியாமல் சதாவினுடைய உணர்வே என்னையும் தூண்டியது. மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்ட இந்தப் போராளிகளது இறுதிநிமிடங்கள் உயிரை உறைய வைக்கின்றது. யுத்தம் இவ்வளவு கொடுமையானது என்பதை அறியாமலேயே யுத்தத்திற்கு அறை கூவல் விடுத்தவர்களை என்னவென்பது. படுகொலை செய்யப்பட்டவர்களைப் பிரிந்த சொந்தங்களுடன் துக்கத்தைப் பகிர்ந்து கொள்வோம். இனியொரு யுத்தம் வேண்டாம்.

  த ஜெயபாலன்.

  Reply
 • மாயா
  மாயா

  தற்போது வெளிவந்துள்ள ஒளிநாடாவில் உள்ளது போன்ற அவலங்கள் ; அனைத்து தரப்பாலும் செய்யப்பட்டே உள்ளன. இவை அருவருக்கத் தக்கது ; கண்டிக்கத் தக்கது. சில கொலைகளை நாம் வீடியோவில் பார்க்கிறோம். ஆனால் பல கொலைகள் நாம் கண்டதில்லை. இவற்றுக்கு ஒரு முடிவு வேண்டும். இவை தொடர்வது தடுக்கப்பட வேண்டும். அதை கற்றோர் செய்ய வேண்டும்.

  அதை விடுத்து உயிரோடு உள்ளவர்களது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுமாறு நடந்து கொள்வது புத்திசாலித்தனமல்ல. இந்த ஒளிப்திவைப் பார்த்து நாம் எப்படி கொதிக்கிறோமோ? அதே போல் அங்கு சில இனவாதிகள் கொதித்தால் ; வீடீயோவில் ஆதாரம் கிடைக்காத படு கொலைகள் நடக்கும். அதுதான் பிரச்சனை?

  அப்பாவிகளை பகடைக் காயாக்கி அரசியல் செய்வோர் அதிகம். அதை உணரும் போது ; நாம் உயிரோடு இருப்போமா தெரியாது.

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  //…மன்னித்து மறக்காவிட்டால் எதிர்காலம் இல்லை!’ டெஸ்மன் ருரூ…/

  ஆம். உண்மைதான், ஆனால் டெஸ்மன் ருரூ இதனை தென்னாபிரிக்க இனவெறி அரசின் வீழ்ச்சிக்குப்பின்னரே சொன்னார். அதாவது கறுப்பின மக்களின் விடுதலையின் பின்னர் என்பதனைக் கவனிக்கவும். ஸ்ரீலங்கா எங்கள் மக்களுக்கு உரிமைகளை வழங்குமிடத்து மன்னிக்க என்னமறந்து தோழ்மேல் கைபோடவும் தயாராக தமிழ் இனம் இருக்காது என உண்மையிலேயே நினைக்கிறீர்களா?

  //….பிரபல சட்டத்தரணி புரூஸ் பெய்ன் க்கு வழங்குவதற்காகச் சேர்க்கப்பட்ட பல்லாயிரம் பவுண்களுக்கு என்ன நடந்தது?..//
  வழக்குத்தாக்குதல் செய்வதற்கு உத்தேச ஆவணங்கள், சாட்சிகள், எல்லாம் தயார் செய்யப்பட்டு அமெரிக்க பிரதம சட்டத்தரணி திரு எரிக் ஹோல்டரின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறது. ஒரு நாட்டின் தலைவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்ய அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் ஒப்புதல் வேண்டும். அதனை பெறுவது இலகுவல்ல. ஆனால் புரூஸ் ஃபெய்னுக்கு கொடுத்த பணத்துக்கு முழுமையான கணக்கு வழக்கு உள்ளது. அதனை நான் பார்த்திருக்கிறேன். அவர்களிடம் கேளுங்கள் (அவர்களுக்குப் பணம் கொடுத்தவர்களூடாக ) கட்டாயன் காட்டுவார்கள். மேலும் இன்றைய விக்கிலீக்ஸில் வந்த அமெரிக்க தூதுவர் திருமதி.பற்றீசியா பியூற்ரென்ஸின் ஸ்ரீலங்கா பற்றிய கருத்துகளை வைத்துப்பார்க்கும் போது காரியம் இலகுவாகும் போல் இருக்கிறது!

  Reply
 • Nathan
  Nathan

  ஜெயபாலன்
  பேர்க்குற்றங்களுக்காக தனிநபர்களுக்குத் தண்டணை வழங்கலாமே தவிர ஒரு இயக்கத்திற்கோ முழுஅரசாங்கத்திற்கோ அல்ல. விடுதலைப் புலிகள் மேலுள்ள உங்கள் தனிநபர் வெறுப்பால் முழுஇயக்கத்தையும் குற்றவாளியாக்க நினைக்கிறீர்கள். போரட்டத்தில் இணைந்து மரணமடைந்த மற்றும் உயிர்வாழும் முன்னால் போரளிகள் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் இணைந்தார்கள். எத்தனையோ போரளிகள் உன்னதமான தாயகக்கனவுடனே மாண்டு போனார்கள்.

  மனித உரிமை மீறல்கல் மற்றும் போர் குற்றங்கள் புலிகளது தளபதிகள் தலைவர்களின் உத்தரவால் நடத்தப்படது. ஆகவே அவர்களே பொறுப்பு கூற வேண்டியவர்கள். இதனை மறுக்கவோ அல்லது தம்மை நியாயப்படுத்தவோ(??) அவர்கள் உயிரோடில்லை. ஆகவே அவர்கள் மீதான விசாரணை முழுமை பெறப்போவதில்லை. சேர்பிய அதிபர் மிலோசவிக் மீதான போர் குற்ற விசாரணை அவரது மரணத்துடன் முடிவுக்கு வந்ததை நினைவுகூற விரும்புகிறேன்.

  ஆக உயிரோடிருக்கும் மகிந்தரை விட்டுவிட்டு இறந்து போன பிரபாகரனை விசாரிக்க நீங்கள் காட்டும் ஆர்வம் உங்களின் தனிப்பட்ட விருப்பு.

  எனது வாதம் இப்போ மக்களுக்கு தேவை நிரந்தர அரசியல் தீர்வு. அதற்கு எம்மிடமுள்ள ஒரே துருப்புச்சீட்டு போர் குற்ற விசாரணை. முதலில் உயிரோடிருக்கும் மகிந்தரையும் அவரோடிணைந்த கூட்டத்தையும் விசாரணை செய்யலாம் பின் இறந்த பிரபாகரனையும் மற்ற தளபதிகளையும் விசாரணை செய்வோம்.

  Reply
 • karuna
  karuna

  இதென்ன புதுக்கதை துருப்புச் சீட்டு துருப்பு பிடிக்கதா சீட்டு! அரசியல் தீர்வு வந்ததும் பிரச்சனைகள் தீர்ந்து விடுமா? அல்லது உந்த துருப்புச் சீட்டுதான் அரசியல் தீர்வு தந்து விடுமா? ஒரு விடயம் கூட்டணியே மகிந்தர் காலில் விழுந்து விட்டனர். அங்கு உள்ள ஒரு கூட்டணி எம்பி முணுமுணுத்தாராம் சாமி வரம் கொடுத்தாலும் பூசாரியள் விடமாட்டினம் என்று! பூசாரிகள் என்று அவர் கூறியது புலம்பெயர் தமிழரை! இத்துடன் இனி நாங்கள் என்னண்டு அவற்றை முகத்திலை முழிக்கிறது என்றாராம். கூட்டணியின் இன்னுமொரு உறுப்பினர் இங்கு நிற்பவர்! இலங்கை எம்பசிக்கு ஓடிப்போய் தான் உதுக்குள்ளை இல்லை என்று கிளியர் பண்ணி விட்டாராம். ஆனால் ஒன்று மட்டும் உறுதி இனி பிரித்தானியாவிலிருந்து போகும் தமிழர்கள் கொழும்பில் விமானநிலையத்தில் படாதபாடு படப்போகிறார்கள்!

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  //… ஆனால் ஒன்று மட்டும் உறுதி இனி பிரித்தானியாவிலிருந்து போகும் தமிழர்கள் கொழும்பில் விமானநிலையத்தில் படாதபாடு படப்போகிறார்கள்! …//

  200 பேர்தான் கூக்குரலிட்டார்கள் மற்ரைய தமிழர்கள் எல்லாம் நல்லவர்கள் நல்லவர்கள் என குழல் ஊதிய அரசு ஒட்டுமொத்த தமிழரையும் (ஐ நா விலேயே தமிழில் பேசி சகோதர மொழிகாத்த மஹிந்த) படாதபாடு படுத்தப்போகிறதா? அப்பாடா அருமையான அரசு!

  Reply
 • மாயா
  மாயா

  ஒரு எறும்பு கடித்தால் ; அதைத்தான் கொல்ல வேண்டும். ஆனால் நாம் எறும்புக் கூட்டத்தையேயல்லவா கொல்கிறோம்? அது மாதிரி நடக்கலாம்?

  விக்கிரமபாகு கருணாரத்ண ; மாவீரர் நிகழ்வில் கதைக்க : அடி விழப் போனது ஜெயலலத் ஜயவர்தனாவுக்கு…… அதுவும் பாராளுமன்றத்துக்குள். ஜெயலத் ஜயவர்தனாதான் லண்டனுக்கு வந்து மகிந்தவின் வரவைக் குழப்ப சதி செய்தவர் என அமைச்சர்களான தினேஷ் குணவர்த்தன ; அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் ஜகத் புஸ்பகுமார ஆகியோர் தாக்க முற்பட்டுள்ளனர்.

  இறுதியில் அந்நேரம் தான் இத்தாலியில் இருந்ததாக ; தனது கடவுச் சீட்டைக் காட்டியதோடு ; ஐதேகட்சியின் பா.உறுப்பினர்கள் சுற்றி வளைத்து காப்பாற்றியுள்ளனர்.

  தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தளபதி கேணல். ரமேஸ் அரச படையினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படும் ஒளிக்காட்சி. இப்படியான நிலைகளுக்குள் மாட்டும் போது காப்பாற்ற எவரும் இருக்க மாட்டார்கள். அதைத் தடுக்கவே நாம் கருத்துகளை முன் வைக்கிறோம். அவை எவருக்கும் புரியாது. இங்கே எழுதுவோர் படம் பார்ப்பார்கள். உயிர் போவது யாருக்கோ………..

  -http://www.youtube.com/watch?v=59HOzX8vDB8&feature=player_embedded

  Reply
 • Ajith
  Ajith

  திரு ஜெயபாலன் அவர்களே ராஜபக்சே அரச சார்பு புலி எதிர்ப்பு நாடகத்தில் மனித உரிமை மீறல் படும் படாத பாடு படுகின்றது. Desond Tutu “மன்னித்து மறக்காவிட்டால் எதிர்காலம் இல்லை கூறியதை” திரித்து ராஜபக்சே செய்த மனித உரிமை மீறல்களை தமிழர்கள் மன்னித்து மறக்கா விட்டால் தமிழர்களுக்கு எதிர்காலம் இல்லை என்று பொருள்பட கூறும் நீங்கள் ஸ்ரீலங்காவில் நடந்த அத்தனை மனித உரிமை மீறல்களும் புலிகளாலும் புலி சார்பு புலம் பெயர் ஆதரவு அமைபுகளலும் தான் நடந்தது என்று வரிக்கு வரி விளம்புகிரீர்க்ளே. இது எதனை காடுகிறது: உங்கள் பழிவாங்கும் பண்பாட்டை எடுத்து இயம்புகிறது. திரு Tutu அவர்கள் மனித உரிமை மீறல்கள் பற்றிய உண்மை கண்டுபிடிக்க பட வேண்டும் என்கிறார். ஆனால் நீங்களோ சிங்கள இனவெரியளர்கள் நடத்துகிற, நடத்திய, நடதபோகும் மனித உரிமை மீறல்கள் பற்றி தமிழர்கள் மறந்து சிங்கள இனத்துக்கு அடிபணிந்து நடக்க வேண்டும் என்று நியாயம் பேசுகிறீர்கள். இங்கு வேடிக்கை என்னவென்றால் உங்கள் நியாயப்படி புலிகள் மக்களை கேடயமாக படுத்தியதால் தான் சிங்கள arasu
  மதிப்புக்குரிய திரு Tutu , ஸ்ரீ லங்கா அரசு அமைத்த ஆணைகுழு பற்றி தெளிவாக கூறியுள்ளார்
  Mr. Tutu, the former head of South Africa’s Truth and Reconciliation Commission, also said that Sri Lanka had “done little to reveal the truth behind human rights abuses,” during the civil war that ended last year. He added, “It is doubtful that the President’s ‘Lessons Learned and Reconciliation Commission’ will help Sri Lankans to work towards lasting peace and reconciliation.”
  தென் ஆப்பிரிக்காவில் கருப்பு இன மக்களின் விடுதலை போராட்டம் பல ஆண்டுகளாக நடைபெற்றது. விடுதலை பெற்ற இனம் தான் அங்கு இனவெறி சிறுபான்மை வெள்ளை அரசை ஆதரித்த மக்களை மன்னித்து செயற்பட்டது. ஆனால் இங்கு இனவெறி அரசு தொடர்ந்தும் மனித உரிமை மீறல்களை தொடர்ந்து செய்து வருகின்றது. உங்கள் குற்றச்சாட்டை நோக்குங்கள்:
  ” தமிழீழ விடுதலைப் புலிகள் பொது மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை நன்று அறிந்து கொண்ட இலங்கை அரசும் அவர்களை விடுவிப்பதற்கான காத்திரமான முயற்சிகளை எடுக்காமல் புலிகளுக்கு எதிரான பதில் தாக்குதலை மூன்று லட்சம் மக்கள் மத்தியில் நடாத்தியது.”

  இங்கு புலிகளுக்கு எதிராக தான் பதில் தாக்குதல் நடைபெற்றது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்த பார்கிறீர்கள். சிங்கள அரசும் , சிங்கள அரசும் வேண்டுமென்றே யுதகலதிலும் யுத்தம் முடந்த பின்னும் 40000 மக்களை கொண்டு குவித்தது. இந்த உண்மையை வேண்டுமென்றே மறைக்க முற்படுகிரீர்களா? இதிலிருந்து உங்கள் கபட நாடகம் தெளிவாகிறது. 1958 , 1977 , 1983 இழுகளில் யுத்தம் எதுவும் இல்லாமலே சிங்கள அரசும் இனவெறி சிங்கள மக்களும் இரத்த ஆறு ஓடச் செய்தனர். இதை மறைத்து எதோ தமிழர் ஆயுதப் போராடம் தான் அழிவுகளை ஏற்படுத்தியது என்று நிருபிக்க முற்படுகிறீர்கள், சிங்கள பயங்கரவாத இயக்கங்களும் சிங்கள அரசுகளும் தான் யுத்தம் புரிந்தார்கள். இரத்த ஆறும், மண்டை ஓடுகளும் நாடு முழுவதும் நரக பூமியாக மாறிய சம்பவங்கள் என்றும் மறக்கவோ, மறுக்கவோ முடியாத உண்மைகள். இன்று சிங்கள மக்களும் ராஜபக்சே ஒரு தண்டிக்கப்படவேண்டிய குற்றவாளி என்பதை உணர்ந்து செயற்படும் பொது நீங்கள்
  ” மனித உரிமைகளுக்காக யுத்தக் குற்றம் என்று வந்தால் இலங்கை ஜனாதிபதி மட்டுமல்ல அமெரிக்க அதிபர் பிரித்தானியப் பிரதமர் என்று பட்டியல் நீளும் என்பது மேற்கு நாடுகள் நன்கு அறியும்” என்று கூறி ராஜபக்சே செய்த குற்றத்தை கேட்பதற்கு யாராலும் முடியாது என்று விதண்டாவாதம் செய்ய வருகிறீர்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? இதே விதண்டவததை தான் சிங்கள அரசின் இனவெறியர்களும் சொல்கின்றார்கள் நீங்களும் சொல்கிறீர்கள். அதாவது உங்கள் குரல் சிங்கள இனவாதிகளின் குரலை ஒத்ததாகவே தெரிய வில்லையா?
  உங்கள் சிங்கள இனவாத குரலின் இன்னொரு பக்கம்:
  “தற்போது யுத்தத்தில் தோல்வியடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அரசினைப் பழிவாங்குவதற்கான மாற்று வழியாக மனித உரிமை மீறல்களைப் பயன்படுத்த முற்பட்டு உள்ளனர். நடந்து முடிந்த யுத்தத்தில் அரசு மனித உரிமைகளை அப்பட்டமாக மீறியுள்ளது. ஆனால் அரசுக்கு எதிராக மனித உரிமைகளைத் தூக்கிப்பிடிக்கின்ற தமிழீழ விடுதலைப் புலி சர்வதேச அமைப்புகளும் வன்னியில் ஆயிரக் கணக்காண மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்துள்ளனர்.”
  இங்கும் உங்கள் சிங்கள சார்பு வாதம் தெளிவு பெறுகிறது. இங்கும் நீங்கள் சிங்கள இனவாத ராஜபக்சே அரசினை காப்பாற்ற படாத பாடு படுகிறீர்கள். உங்களுக்கு தெரியாத உண்மையல்ல ராஜப்சே சிங்கள இனவாத ஜேவிபி பயன்கரவததிற்கு ஆதரவாக மனித உரிமை குரல் எழுப்பியதும் தமிழ் மக்களை படுகொலை செய்ததும். சரி, தமிழ் ஈழ விடுதலை புலிகளுக்கு தகுதி இல்லைஎன்றால் நீங்கள் அந்த காரியத்தை செயலாமே. இங்கு பழிவாங்குவது நீங்களே ஒழிய புலிகள் அல்ல. ராஜபக்சே யுத்தம் முடிந்தவுடன் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு முயற்சி எடுத்து தமிழ் மக்களின் அடிப்படை யனநாயக சுயாட்சி உரிமைகளை வழங்கியபின் இங்கு வந்திருந்தால் புலிகள் உட்பட எல்லோரும் நிச்சயமாக அவரை வரவேற்று அவர் செய்த குற்றங்களை மன்னித்து இருப்பார்கள். ஆனால் யுத்தம் முடிந்தவுடன் தமிழ் மக்களுக்கு பிரச்சினை இல்லை, புலிகளின் தோல்விக்கு பின் அரசியல் தீர்வு தேவை இல்லை என்று கூறி சிங்கள குடியேற்றம், சிங்கள இராணுவ மயமாக்கல், தொடரும் ஊடக அடக்குமுறை , பழிவாங்கல், இவரை தமிழர்கள் ஏற்று அடிமைகளாக வாழ வேண்டும் என்று விரும்பும் உங்களை மக்கள் மறக்கமுடியுமா?

  Reply
 • விளங்காமுடி
  விளங்காமுடி

  மாயா! உள்ளே நடைபெறுவதை வெளியே கொணர்ந்தமைக்கு நன்றி.
  மாயா உங்கள் கருத்தையே, சம்பந்தன் கூட அமெரிக்காவிடம் சொல்லியிருக்கிறார்.”……he believed the Tamil community was vulnerable on the issue and said he would not discuss war crimes per se in parliament for fear of retaliation…….”
  ஆதாரம்: -http://cablegate.wikileaks.org/cable/2010/01/10COLOMBO32.html

  சிங்கள பௌத்த பேரினவாதிகள், மகாவம்ச வாதத்தால் மழுங்கடிக்கப்பட்டவர்கள்.அவர்களிடமிருந்து எதையும் பெற்றுக் கொள்ள முடியாது என்பது வரலாற்றின் பாடம். சிங்கள பௌத்த பேரினவாதம் பிரேமாவதி மனம்பெரிக்கும்,இசைப்பிரியாவிற்கும் வித்தியாசம் காட்டாது.
  அது போலவே ஜெயலத் ஜயவர்தனாவிற்கும்…….
  அறுபது ஆண்டு கால இனப்படுகொலை வெறியின் மகுடம் மகிந்தவிற்கு உரியது. மகிந்த-சரத்தின் மோதல் ஆதாரங்களை அள்ளித் தருகிறது. இன்றைய சர்வதேச நாடுகள் இனப்படுகொலையின் மௌனப் பார்வையாளர்களாக,பங்காளர்களாக இருக்கிறார்கள். சர்வதேச நியமங்கள் சாக்கடையில் மிதக்கிறது. ஒரு இனத்தையே, பணயக்கைதிகளாக வைத்திருக்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசை, மாற்றம் செய்ய, மேற்குலகை மட்டும் தங்க வேண்டிய கையறு நிலைதான் தமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரே வழி.

  Reply
 • மாயா
  மாயா

  சரத் பொன்சேகாவுக்கு ஆதரவான உயர்தர இராணுவ அதிகாரிகளுக்கு கல்தா

  மேஜர் ஜெனரல் லெடீ அமரதுங்க ; மேஜர் ஜெனரல் அத்துல ஜெயவர்தன ; மேஜர் ஜெனரல் தீபால் அல்விஸ் ; பிரிகேடியர் பதுமதாஸ மற்றும் பிரிகேடியர் காதெனிய. இவர்களைத் தவிர இன்னும் இருவர் பெயர்களில் குறி வைக்கப்பட்டுள்ளது. அதிபரதும் ; பாகாப்புச் செயலரதும் சந்தேகத்துக்கு காரணிகளாகியுள்ள இவர்களுக்கு விரைவில் கல்தா வழக்கப்படலாம்.

  Reply
 • T Jeyabalan
  T Jeyabalan

  //பேர்க் குற்றங்களுக்காக தனிநபர்களுக்குத் தண்டணை வழங்கலாமே தவிர ஒரு இயக்கத்திற்கோ முழு அரசாங்கத்திற்கோ அல்ல.// நாதன்

  நான் இயக்கத்திற்கோ அரசாங்கத்திற்கோ தண்டனை வாங்கித்தரக் கேட்கவில்லை. மனித உரிமை மீறல்களைச் செய்த அனைவருக்கும் தண்டனையைக் கோருங்கள். துரையப்பா முதல் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட கடைசித் தமிழன் வரைக்கும் இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேளுங்கள். உங்களுக்கு பிடிக்காதவர்களுக்கு மட்டும் நீதி வேண்டும் மற்றவர்களுக்கு நீதி வேண்டாம் என்று கோராதீர்கள். வன்னி மக்களை வெளியேற வேண்டாம் என்று கூறியவர்களையும் விசாரியுங்கள்.

  அஜித் நீதியை நீதியாகக் கோருங்கள் என்பதே என்வாதம். இலங்கை அரசு தமிழ் மக்களின் எதிரியான அரசு அதனிடம் நியாயம் கேட்கும் நீங்கள் முதலில் தம் சொந்த மக்களை அழித்தவர்களிடம் நியாயம் கேளுங்கள். அதன் பின் எதிரியிடம் நியாயத்தை எதிர்பாருங்கள். புலிகள் மனித உரிமைபற்றிக் கதைப்பதும் கசாப்புக்கடைகாரர் உயிர்க்கொலையை நிறுத்தக் கோருவதும் ஒன்றுதான்.

  Reply
 • karuna
  karuna

  அல்பிரட் துரையப்பா முதல் தலைவரால் இறுதியில் போட்டுத்தள்ளப்பட்ட பானுவரை ஆயிரக்கணக்கான தமிழ் உயிர்கள் தமிழராலேயே காவுகொள்ளப்பட்டள்ளது! இதற்கு பதில் கிடையாதா? இதற்கு குறைநத் பட்சம் விசாராணைதான் வேண்டாம் ஒரு உண்மைகளை கண்டறியும் அமைப்பைக் கூட கோராது மகிந்தாவை மட்டும் கூண்டில் ஏற்ற நீங்கள் துடிப்பது பழிக்கு பழி வாங்கவே! தமிழன் தமிழனை கொன்றால் அது கொலையல்ல! தமிழன் சிங்கள முஸ்லீம்களை கொன்றால் அது கொலையல்ல! சிங்களவன் அதுவும் ராஜபக்ச கொன்றால் மட்டும் தான் அதை விசாரிக்க நிற்கிறீரகள்! இந்த ராஜபக்சவை அரியணை ஏற்ற புலிகள் வாங்கிய பணம் பற்றியும் ஒரு விசாரனை கொமிசன் வைத்தால் நல்லாயிருக்கும். சரி மகிந்தாவை தண்டித்ததும் தமிழர் பிரச்னை திர்ந்து விடுமா? முதலில் புலம் பெயர் நாட்டில் புலிகளின் செயற்பாட்டை நிறுத்தங்கள் எல்லாம் ஒழுங்காக வரும்!

  Reply
 • thurai
  thurai

  //200 பேர்தான் கூக்குரலிட்டார்கள் மற்ரைய தமிழர்கள் எல்லாம் நல்லவர்கள் நல்லவர்கள் என குழல் ஊதிய அரசு ஒட்டுமொத்த தமிழரையும் (ஐ நா விலேயே தமிழில் பேசி சகோதர மொழிகாத்த மஹிந்த) படாதபாடு படுத்தப்போகிறதா? அப்பாடா அருமையான அரசு!//சாந்தன்

  புலிகளின் கால்த்தில் உலகமுழுவதும் புலிகளிற்கு காசு கொடுத்தோர் கொடுக்காதோர் எல்லோரும் ஏ9ல் ஏற்ரி இறக்கப்பட்டனர். இது லண்டன் வாழ் தமிழர் மட்டுமே பரவாயில்லை-துரை

  Reply
 • Ajith
  Ajith

  அஜித் நீதியை நீதியாகக் கோருங்கள் என்பதே என்வாதம். இலங்கை அரசு தமிழ் மக்களின் எதிரியான அரசு அதனிடம் நியாயம் கேட்கும் நீங்கள் முதலில் தம் சொந்த மக்களை அழித்தவர்களிடம் நியாயம் கேளுங்கள். அதன் பின் எதிரியிடம் நியாயத்தை எதிர்பாருங்கள். புலிகள் மனித உரிமைபற்றிக் கதைப்பதும் கசாப்புக்கடைகாரர் உயிர்க்கொலையை நிறுத்தக் கோருவதும் ஒன்றுதான்.- ஜெயபாலன்

  திரு ஜெயபாலன்
  நாம் நீதியை நீதியாகத் தான் கேட்கிறோம். அது எங்கள் உரிமை. நீதிக்காக அதை கேட்க வேண்டாமென்று கேட்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று சொல்வீர்களா? நாங்கள் இலங்கை அரசிடம் நீதி கேட்கவில்லை. அங்கு நீதி கிடையாது என்றபடியால் தான் சர்வதேச நீதியை கேட்கிறோம். நீங்கள் விரும்பினால் இலங்கை அரசிடம் நீதியையும் நியாயத்தையும் கேளுங்கள் அல்லது சர்வதேசத்திடம் ராஜபக்சே அரசுககவும் நியாயத்தை கேளுங்கள். நீதி கேட்ட Lasantha முதல் பொன்சேகா கொடுத்த பரிசு என்ன என்று உங்களுக்கு ஏன் முடியவில்லை? புலிகளை கசாப்புக்கடைகாரருடன் ஒப்பிடும் நீங்கள் அதே உங்கள் நீதியால் நீதியாக ராஜபக்சே, டக்லஸ், PLOTE , TELO வையும் ஏன் ஒப்பிட முடியாது உள்ளது.

  நாம் எமது இனத்திற்கு எதிரான சிங்கள இனவாத அரசினால் நடத்திய மனித உரிமை மீறல்களுக்க நீதி கேட்பது தவறு என்று நீங்கள் கூறினால் உலக நீதி மன்றங்களும் தேவையில்லை உலக நீதிபதிகளும் தேவையில்லை. ராஜபக்சே செய்த மனித உரிமை மீறல்களை சிங்கள இனவாதிகள கேட்பார்களா அல்லது இன்வதிகளுகாக வக்காலத்து வாங்கும் நீங்களா கேட்கப் போறீர்கள். தமிழ் மக்களை அன்று தொட்டு இன்று வரை அநியாய படுகொலை செய்த சிங்கள அரசுகளும் சிங்கள மக்களும் ஏன் தண்டிக்கப்பட கூடாது?

  இலங்கை அரசு 1958 இல் இருந்து இன்று வரை தனது சொந்த மக்களைத்தான் அழித்து வருகிறது. ஏன் அதை பற்றி கதைக்க விருபுகிரீர்கள் இல்லை. இந்த கொலைகார ராஜபக்சே தேர்தல் வெற்றிக்காக யாழ்ப்பாணம் சென்று வாக்கு வேட்டைக்கு போனதை உங்களால் மறுக்க முடியுமா?

  Reply
 • saravanabavan
  saravanabavan

  யுத்தம் முடிவடைந்தவுடன் தமிழர்களுக்கு தீர்வு.
  இல்லை இல்லை பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் தமிழர்களுக்கு தீர்வு.
  இல்லை இல்லை
  ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன் தமிழர்களுக்கு தீர்வு. அப்புறம்……..

  Reply
 • S. சுகுணகுமார்
  S. சுகுணகுமார்

  அஜித்! நீங்கள் கூறுவது அனைத்தும் நியாயமானது! ஆனால் எனக்கோரு நீதி கூறுங்கள் கந்தன் கருணையில் கொலை செய்யப்பட்ட ஈபீஆர் எல் எப் தோழர்களிற்கான நீதிக்கு நாம் யாரிடம் செல்வது? திருநெல்வேலியல் ரயர் போட்டு ரெலோ தோழர்களை எரித்த பலர் இன்று கனடாவில் சுகமாக இருக்கிறார்களே அவர்களை யார் கூண்டில் ஏற்றப்போகிறீர்கள்? முஸ்லீம் மக்ககளை பிறந்த மண்ணை விட்டு விரட்டிய புலிகளில் பலர் இன்னும் ஐரோப்பாவில் இருக்கிறார்களே அவர்களை யார் விசாரிப்பது? புளட் இயக்கத்தில் இணைந்த போராளிகளை கொலை செய்த புளட் தோழர்கள் இன்னமும் ஐரோப்பிய கனடியா நாடுகளில் உள்ளார்களே குறைந்த பட்சம் அவர்களை கூப்பிட்டு ஒரு உண்மைகளை அறிய ஏதாவது செய்தீர்களா? சிங்கள் மக்களை அனுராதபுரத்தில் வெட்டிய புலி உறுப்பினர்கள் இருவர் இன்னமும் கனடாவில் வசிக்கிறார்களே அவர்களிடம் உள்ள உண்மைகள் மறைக்கப்பட்டுவது என்ன மனித நியாயாம்? நீதியை கேழுங்கள் அதை நீதியாக கேழுங்கள் என்றெ ஜெயபாலன் கூறுகிறார்! றோகன விஜயவிராவும் அவர்களின் தோழர்களும் களனியாற்றில் பிணமாக மிதக்கையில் நீங்கள் எங்கு போயிருந்தீர்கள்? இவர்களில் சிலருக்கு அடைக்கலம் கொடுத்த புளொட் மாணிக்கதாசனை பிரேமதாசாவின் கோரிக்கைக்காக கொன்ற ஒருவர் இன்றும் லண்டனில் உள்ளார். இவரை விசாரிக்க என்ன செய்தீர்கள்?

  Reply
 • Ajith
  Ajith

  திரு சுகுணகுமார்,
  உங்கள் ஆதங்கம் நன்றாக புரிகிறது, நீங்கள் ஏன் இந்த கேள்வியை என்னிடமோ அல்லது இந்த அரங்கிலோ கேட்கிறீர்கள் என்பது புரியவில்லை. நீங்களோ நீங்கள் இங்கே பட்டியலிட்ட நபர்களோ குழுக்களோ உங்களுக்கு எங்கே நியாயம் கேட்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அங்கெ சென்று நியாயத்தை தாரளமாக கேட்கலாம் தானே. யார் தடுகிறார்கள்? ஆனால் இங்கு நாங்கள் நீதி கேட்பது தமிழ் இனத்தின் ஓட்டுமொத்த அழிவுக்கு காரணமான சிங்கள இனவாத அரசு தொடர்ந்து செய்துவரும் மனித உரிமை மீறல்களுக்கு சர்வதேச நிறுவனங்களிடமும் மனித உரிமை கோட்பாடுகளை மதிக்கின்ற நாடுகளிடம் 40000கு மேற்பட்ட அப்பாவி மக்களை வக்கிரமான குண்டு போட்டு அழித்த, 300 ,000 மக்களை பட்டினி போட்டு வதைத இராணுவத்தையும் அதற்கு கட்டளைய்ட்ட அரசியல் தலைவர்களையும் சர்வதேச சட்ட முறைகளுக்கு அமைய கைது செய்து விசாரனைக்கு உட்படுத்தி தண்டனை வழங்கும்படி தான் கேட்கிறோம். இது தவறா? இயகங்களுகிடியே ஏற்பட்ட மோதல்கள் , களவு, கற்பழிப்பு, இந்திய இராணுவ, ஸ்ரீ லங்கா இராணுவ ஒட்டு வேலைகளின் பொது ஏற்பட்ட மோதல்கள் இவற்றுக்கான நீதியை நீங்கள் எங்கு கேட்க வேண்டுமோ அங்கெ கேட்டு கொள்ளுங்கள். நிச்சயமாக உங்களிடம் அதற்கான சான்றுகள் இருபது போல் தெரிகிறது. ஸ்ரீ லங்கா அரசும் அதற்கு வேண்டிய உதவியை செயும். ஏன் தயக்கம்?

  Reply
 • S. சுகுணகுமார்
  S. சுகுணகுமார்

  அஜித் உங்கள் பதிலிலிருந்தே உங்கள் சுயநலம் நன்கு புரிகிறது! நாங்கள் யாரிடம் போய் கேட்கவேண்டுமென்று நிங்கள் பிரித்து பேசுகையிலேயெ உங்கள் குள்ளதனமும் புரிகிறது! ஒட்டுக் குழு என்ற பதப் பிரயோகம் புலிகளின் சொற் பிரயோகம்! நீங்கள் புலிகள் உங்களிடம் எங்களிற்கு நியாயமா கிடைக்கும்? இன்று துப்பாக்கிகள் உங்கள் கைகளில் இல்லாததால் நல்ல வேளை தப்பித்தோம்! தண்டனை வாங்கி கொடுத்ததும் சிலவேளை உங்கள் ஈகோக்களிற்கு விடுதலை கிடைத்து விடும்! என்ன இருந்தாலும் உங்கள் தலைவரை கொன்றவரை பழி வாங்கும் சினிமாத்தனத்தை தானே உங்களிடம் எதிர்பார்க்கமுடியும்! பாதிக்கப்பட்ட மக்களிற்கு இன்று தேவைப்படுவது நீதி நியாயம் அல்ல புலிகாளல் உருவிஎறியப்பட்ட கோவணத்தை மறைக்க ஒரு துண்டும் அடுத்த வேளை சாப்படுமே! உங்கள விசாரணைகள் இதனை கொண்டு வரப்போவதில்லை! மாறாக நீங்கள் போடுகின்ற ஒவ்வொரு புலிக் கொக்கட்டமும் அங்கு தடுத்து வைக்கப்படடிருக்கும் ஒவ்வொரு விடுதலைப் புலி உறுப்பினின் மரண சாசனம்! அது தான் உங்களிற்கு வேணும்!

  Reply
 • thurai
  thurai

  //அஜித் உங்கள் பதிலிலிருந்தே உங்கள் சுயநலம் நன்கு புரிகிறது! நாங்கள் யாரிடம் போய் கேட்கவேண்டுமென்று நிங்கள் பிரித்து பேசுகையிலேயெ உங்கள் குள்ளதனமும் புரிகிறது! ஒட்டுக் குழு என்ற பதப் பிரயோகம் புலிகளின் சொற் பிரயோகம்//சுகுணகுமார்
  அஜீத் அவர்களே, நாங்கள் புலி செய்த கொடுமைகளிற்கு யாருக்கும் தண்டனை கொடுக்குமளவிற்குமில்லை. யாரிடம் முறையிடவுமில்லை. எங்கள் பெயரை சொல்லி புலிகள் குற்ரம் செய்தார்களென்று எங்கள் முகத்துடன் எங்காவது சொல்லினால் எங்கள் உயிர்களிற்கு உம்மால் பாதுகாப்புத்தர முடியுமா?– துரை

  Reply
 • ஜெயா
  ஜெயா

  //நீங்களோ நீங்கள் பட்டியல் இட்டநபர்களோ குழுக்களோ உங்களுக்கு நியாயம் கேட்க விரும்புகிறீர்களோ அங்கே சென்று நியாயத்தை தாராளமாக கேட்கலாம் தானே//அஜித்

  இது என்ன புதுப்பகிடியாக இருக்க நீங்கள் இங்கு கேட்கலாம் மற்றறவர்கள் அங்கு கேட்க வேண்டும். அங்கு என்றால் யாரிடம் அங்கு தான் ஒருவருமே இல்லையே இருந்திருந்தால் கேட்கவா முடியும் கொலை கொலை தான் யார் செய்தாலும் அதற்கு எங்கும் நியாயம் கேட்கலாம் சுவிஸ்ல் இருபது பேருக்கு முன்னால் ஒருவார் 2000 பேருக்கு முன்னால் பேசுவது போல் உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறார். பேசுவதற்க்கு ஒன்றுமில்லாததால் மாவீரர் கதைவேறு இதைச்சாட்டி எத்தனை காலம் ஓட்டுவது. பிரச்சினை அங்குள்ள மக்களுக்கா அல்லது இங்குள்ள மக்களுக்கா அங்குள்ள மக்களும் சரணடைந்த புலிகளும் எங்களை நிம்மதியாக வாழவிடுங்கள் என்று சொல்லும்போது இங்குள்ளவர்கள் எதற்காக கூச்சல் போட வேண்டும்

  புலிகளால் கொலை செய்யப்பட்ட ரெலோ போராளியின் தாய் பிரபாகரன் சாகும் வரை தான் கோயிலுக்கு வரமாட்டேன் என்று சாமிக்கே சவால் விட்டவா. அவவுக்கு நீதி மன்றமும் தெரியாது மன்னிப்பு சபையும் தெரியாது கடைசியில் யார் வென்றது – மனு நீதி.

  Reply
 • BC
  BC

  //ஜெயா – சுவிஸ்ல் இருபது பேருக்கு முன்னால் ஒருவார் 2000 பேருக்கு முன்னால் பேசுவது போல் உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறார்.//
  அந்த புலி சொன்னதை குறிப்பிட மறந்துவிட்டீர்கள். “இன்று ஆரம்பிக்கிறது எமக்கு வேட்டை காலம். ஒரு சிங்களவன் ஜரோப்பாவோ எந்த ஒரு மேற்க்குலகத்துக்கும் வரமுடியாது. அவனை கலைத்து கலைத்து அடிப்போம். இதை இறுதி மொழியாக இன்று ஏற்றுக்கொள்வோம்”

  Reply
 • மாயா
  மாயா

  புலிகள் செய்தால் அத்தனையும் சரி. சாதாரண அடிமட்டத்தவன் செய்தால் அத்தனையும் தவறு. விபச்சாரம் ; அடுத்தவன் குடும்பத்தை கெடுத்தவன் என புலிகளின் நீதியில் கொடுக்கப்பட்டவை மரண தண்டனை. காதலித்ததற்கே மரண தண்டனை கொடுத்தவர்கள். இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த போது ; மல்லாவியில் படித்த ஒரு மாணவி ஒரு இந்திய இராணுவ சிப்பாயோடு பேசினான் என்பதற்காக ; பள்ளி முற்றத்தில் வைத்து ; அனைத்து மாணவ – மாணவிகள் மற்றும் அந்த மாணவியின் பெற்றேர் (தகப்பன் ஒரு ஆசிரியர்) முன்னிலையில் பகிரங்கமாக மரண தண்டனை என கொடிக் கம்பத்தில் கட்டி சுட்டார்கள். இதில் என்ன ……. நீதியிருக்கு.

  இந்த முறை தியாகுவையும் ; தாமரையையும் அழைத்து வந்து மாவீரர் தினத்தில் மேடையில் பேச வைக்கிறார்கள். தியாகு எப்படிப்பட்டவர்? இவர் கடந்த காலத்தில் ஒரு நக்கசலைட். வெளியே வந்த பின்னர் சில மேடைகளில் பேசினார். ஒரு இயக்கத்தை தொடங்கினார். இப்போ இலங்கை தமிழர் காசில் சுகமான வாழ்வு.

  இதல்ல மேட்டர்……. இவர் தனது மனைவியையும் ; மகளையும் தவிக்க விட்டு ; சினமாவுக்கு பாட்டெழுதும் தாமரையோடு வாழ்கிறார். சின்ன வீடு நடத்துகிறார். அவர்களை மேடையேற்றி மாவீரர் நாளில் உரையாற்ற வைக்கிறீர்கள். இப்படியான ஒருவர் வன்னியில் அல்லது யாழ்பாணத்தில் புலிகளது கட்டுப்பாட்டு பகுதியில் இருந்திருந்தால் நீங்கள் என்ன தண்டனை கொடுப்பீர்கள்? கொடுத்தீர்கள்? அங்கே மண்டையில் போட்டீர்கள். இங்கே மாலை போடுகிறீர்கள்? என்ன தர்மம்? சே…………

  Reply
 • S. சுகுணகுமார்
  S. சுகுணகுமார்

  /புலிகளால் கொலை செய்யப்பட்ட ரெலோ போராளியின் தாய் பிரபாகரன் சாகும் வரை தான் கோயிலுக்கு வரமாட்டேன் என்று சாமிக்கே சவால் விட்டவா. அவவுக்கு நீதி மன்றமும் தெரியாது மன்னிப்பு சபையும் தெரியாது கடைசியில் யார் வென்றது – மனு நீதி./ அடுத்த வேளை உணவிற்கு அங்கு சனம் பிச்சையெடுக்க உண்ட களைப்பை போக்க இங்கு சனம் கொழுப்பெடுத்து அலைகிறது! இவர்களிற்கு தான் நீதி நியாயம் வேண்டும்! அந்த மக்களின் ஒரு நேர பசிக்கு உணவு கொடுக்க தடுக்கும் இந்த கூட்டத்திற்கும் ஒரு நாள் தண்டனை நிச்சயம் உண்டு!

  Reply
 • saravanabavan
  saravanabavan

  எப்ப பார்த்தாலும் புலி புலி என்டுக்கிட்டு அது தான் எல்லாம் முடிஞ்சு இரண்டு வருசமாச்சே பிறகெதுக்கு.. அவன் மக்களுக்கு உதவேல இவன் மக்களுக்கு உதவேல என்று சொல்லுரனியால் நீங்கள் ஏன் மக்களுக்கு உதவேல எண்டு உங்களுக்கே கேளுங்கோ.. சும்மா எதுக்கெடுத்தாலும் அடுத்தவனையே குற்றம் சாட்டிக்கிட்டு.. இது நம் இனத்தின் குணங்களில் ஒன்று போல…

  Reply
 • S. சுகுணகுமார்
  S. சுகுணகுமார்

  நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எமக்கு தெரியும் ஆனால் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரமாக இரப்பது புலம்பெயர் புலிகள் தான்! புலி ஊரிலை முடிஞ்சாலும் இங்கு முடியவில்லை. அதுதான் புலிகொடியோடு திரிகிறார்கள்!

  Reply