::விளையாட்டு

::விளையாட்டு

இலங்கை மற்றும் சர்வதேச விளையாட்டுச் செய்திகள்.

2வது டெஸ்ட்: இலங்கை 416 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது -நியூஸீலாந்து 159/5

2nd-test.jpgநியூஸீ லாந்து அணிக்கு எதிராக கொழும்பில் நடந்து வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 416 ஓட்டங்களுக்கு  ஆட்டமிழந்தது.

நேற்று ஆரம்பமாகிய இப்போட்டியில் பூவா-தலையா வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்தது. முதல்நாள் ஆட்டம் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 262 ஓட்டங்கள் எடுத்த இலங்கை அணி, இன்று முதல் இன்னிங்சை தொடர்ந்தது.

ஜெயவர்த்தனே 92 ஓட்டங்கள்  கபுகேதரா 35 ஓட்டங்கள்  பிரசன்ன ஜெயவர்த்தனே 17 ஓட்டங்கள்  தம்மிகா பிரசாத் 6 ஓட்டங்கள்  முரளிதரன் ஆட்டமிழக்காமல் 17 ஓட்டங்கள் எடுத்தனர். சமரவீரா அதிகபட்சமாக 143 ஓட்டங்கள் குவித்தார்.

நியூஸீலாந்து தரப்பில் ஜீத்தன் படேல் 4 விக்கெட்டுகளும், டேனியல் வெட்டோரி 3 விக்கெட்டுகளும், ஓபிரையன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

Sri Lanka 1st Innings 416 / 10 in 130.3 Overs

New Zealand 1 st Innings 159 / 5 in 47 Overs

New Zealand trail by 257 runs with 5 wickets remaining

Fall of Wickets 1-14 (TG McIntosh, 2.1 ov), 2-49 (DR Flynn, 9.2 ov), 3-63 (MJ Guptill, 15.4 ov), 4-148 (JD Ryder, 40.4 ov), 5-149 (JS Patel, 41.4 ov) 
 
Still To Come JDP Oram, DL Vettori, IE O’Brien, CS Martin 

தொடர் வெற்றி எதிர்பார்ப்புடன் இலங்கை இன்று களத்தில்

2nd-test.jpgஇலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டி இன்று எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமாகியது. ஏற்கனவே டெஸ்ட் தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள இலங்கை அணி இரண்டாவது டெஸ்டை வெற்றிபெற்றாலோ அல்லது சமநிலையில் முடித்தாலோ தொடரை கைப்பற்றிவிடும்.

எனினும் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இலங்கை அந்த இடத்தை தக்கவைத்துக்கொள்ள இன்று ஆரம்பமாகும் போட்டியில் வெற்றிபெறுவது கட்டாயமாகும். மாறாக இலங்கை இரண்டாவது டெஸ்டில் தோல்வி அடைந்தாலோ அல்லது போட்டி சமநிலையில் முடிந்தாலோ இலங்கை அணி தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுவதோடு இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறும். எனவே, இலங்கை அணி இரண்டாவது டெஸ்டிலும் நியூஸிலாந்தை வீழ்த்த போராடும்.

மறுபுறத்தில் தொடர் தோல்வியை தவிர்ப்பதற்கு கட்டாயம் வெற்றிபெறவேண்டிய இக்கட்டான நிலையில் நியூஸிலாந்து களமிறங்குகிறது. எனினும் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் வெளிநாட்டு அணியொன்று வெற்றியீட்டுவது கடினமான காரியமாகும். கடைசியாக இங்கு 2004 ஆம் ஆண்டு இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய அணியே டெஸ்ட் போட்டி ஒன்றில் இலங்கை அணியை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நியூஸிலாந்து அணித்தலைவர் டானியல் விட்டோரி 11 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று எஸ்.எஸ்.சி. மைதானத்தில் விளையாடவுள்ளார். 1998 ஆம் ஆண்டு தனது 19 ஆவது வயதில் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் விளையாடிய விட்டோரி அப்போது தனது 50 ஆவது டெஸ்ட் விக்கெட்டை பூர்த்திசெய்தார். இன்று 300 டெஸ்ட் விக்கெட்டை பூர்த்திசெய்தார்.

இலங்கை – முதலாவது இன்னிங்ஸ் 
 
பரனவிதான  (பிடி)டயலோர் (பந்து) விட்டோரி  19  
தில்ஷன்  (பிடி) (பந்து)  IE O’Brien  29  
சங்கக்கார (பிடி)  ஓரம் பெளல்ட் (பந்து) விட்டோரி  50 
மகேல  (ஆட்டம் இழக்காது) 79 
சமரவீர  (ஆட்டம் இழக்காது)  78  

நியூசிலாந்து பந்து வீச்சு
 
மார்ட்டின்  14  – 2  –  45 –  0  
IE O’Brien    16 – 3 – 52 – 1  
விட்டோரி  30 – 11 – 65 – 2 
ஓரம்  18 – 6  -45-  0  
படேல்  9  -1  -32-  0  
ர்யதேர்  3 – 1 – 17 – 0 

ஆஷஸ் தோல்வியின் எதிரொலி

eng0000.jpgஆஷஸ் தொடரை இழந்ததற்காக கப்டன் பதவியில் இருந்து ரிக்கி பொண்டிங் நீக்கப்படமாட்டார் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட்சபை அறிவித்துள்ளது. 132 கால ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் கிரிக்கெட் வரலாற்றில் ரிக்கி பொண்டிங் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி 1-2 என்ற கணக்கில் 2வது முறையாக இங்கிலாந்து அணியிடம் தொடரை இழந்துள்ளது. இதற்கு முன்பு பில்லி முர்டோச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி 1890ம் ஆண்டுகளில் 2 முறை ஆஷஸ் தொடரை இழந்துள்ளது.

ஆஷஸ் தொடரை இழந்ததன் மூலம் உலக டெஸ்ட் தர வரிசையிலும் அவுஸ்திரேலிய அணி முதல் இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

வோர்ன், மெக்ராத், கில்கிறிஸ்ட் ஆகியோர் ஓய்வுக்கு பின்னர் ஆட்டம் கண்டு வரும் அவுஸ்திரேலிய அணி இந்த ஆஷஸ் தொடரில் கடைசி டெஸ்டில் 197 ஓட்டம் வித்தியாசத்தில் தோல்வி கண்டு தொடரை இழந்தது. கடைசி டெஸ்டில் அவுஸ்திரேலிய அணியில் சுழற்பந்து வீச்சாளர் நாதன் ஹவுரிட்சை களம் இறக்காததும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. தோல்வி கண்ட அவுஸ்திரேலிய அணி கப்டன் ரிக்கி பொண்டிங்கிற்கு எதிராக முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

வெற்றி கண்ட இங்கிலாந்து அணி வாழ்த்து மழையில் நனைந்து வருகிறது. தோல்விக்காக கப்டன் பதவியில் இருந்து ரிக்கி பொண்டிங் நீக்கப்படுவார் என்ற சர்ச்சை கிளம்பியது. இது தொடர்பாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைத் தலைவர் ஜேம்ஸ் சுதர்லேண்ட் கூறியதாவது, கப்டன் பொறுப்பில் இருந்து ரிக்கி பொண்டிங்கை நீக்க வேண்டும் என்று சொல்வது முற்றிலும் நியாயமற்றது. ஆஷஸ் தொடரை வெல்ல வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம்.

அதற்காக சிறப்பாகவும் தயார் ஆனோம். வெல்லாவிட்டாலும் நமது வீரர்களை குறித்து பெருமைப்பட வேண்டும. அணி வீரர்கள் முழு திறமையையும் வெளிப்படுத்தி ஆடினார்கள். தொடரை இழக்கக்கூடிய இக்கட்டான சூழ்நிலையிலும் கப்டன் பொறுப்பில் பொண்டிங் சிறப்பாகவே செயல்பட்டார். எங்கள் அணியை குறித்து நாங்கள் எந்தவித மாய தோற்றத்தையும் சிந்திக்கவில்லை. மிகவும் சிறப்பான வீரர்களை இழந்த பிறகு அவுஸ்திரேலிய அணியை மறு கட்டமைப்பு செய்து வருகிறோம். இளம் மற்றும் அனுபவம் இல்லாத வீரர்கள் அதிகம் பேர் அணியில் இருப்பதால் ஏற்றம் மற்றும் இறக்கங்கனை சந்தித்து வருகிறோம்.

அதில் ஒரு பகுதியை தான் ஆஷஸ் தொடரிலும் சந்தித்தோம். சுமார் 200 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இருக்கிறோம். அப்படி இருக்கையில் அணியில் சுழற்பந்து வீச்சாளரை சேர்த்து இருந்தாலும் பலன் கிடைத்து இருக்காது. தோல்விக்கு தேர்வாளர்கள் எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். களத்தில் ஆடுவது வீரர்கள் தான். எங்கள் தோல்வியை ஒத்துக்கொள்ள தான் வேண்டும். அடுத்த போட்டியில் சிறப்பாக ஆடுவோம் என்றார்.

வெற்றி குறித்து இங்கிலாந்து அணி கப்டன் ஸ்டிராஸ் கூறுகையில், ‘இந்த வெற்றி மிகவும் சிறப்பானதாகும். இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நாள். இந்த போட்டி தொடரில் உணர்ச்சிபூர்வம், நம்பிக்கை ஏமாற்றம் கவலை ஆகியவை நிறைந்து இருந்தது. வெற்றியின் பாதைக்கு வர முடியாத நிலையில் அந்த பாதையை எட்டிப்பிடிப்பது எப்படி என்ற கஷ்டத்தை இதில் உணர்ந்தோம். நீண்ட போராட்டத்துக்கு பின்னர் கிடைத்த இந்த வெற்றியின் பெருமை அனைத்து வீரர்களுக்கும் சாரும். இந்த போட்டியில் எங்கள் வீரர்கள் போராட்ட குணத்துடன் செயல்பட்டனர். பொண்டிங்கை, பிளின்டொப் ரன்- அவுட் செய்த விதம் சிறப்பானதாகும் என்றார்.

இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்தில் நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக தோல்வி தழுவியவர் என்ற விதத்தில் ரிக்கி பொண்டிங் தன்னால் இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார். பில்லி முர்டாக்கின் தலைமையின் கீழ் இங்கிலாந்தில் இரண்டு ஆஷஸ் தொடரை அவுஸ்திரேலியா இழந்த பிறகு தற்போது பொண்டிங் தலைமையில் இரண்டு முறை தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தோல்வி மூலம் நான் என்னை மேலும் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாகவும், சிறந்த தலைவராகவும் வளர்த்துக்கொள்ளும் உறுதி என்னிடம் இப்போது வலுவடைந்துள்ளது. எனக்கு மேலே இருக்கும் அதிகாரிகள் என்ன கேட்பார்கள் என்பது பற்றி கவலையில்லை. தற்போது பத்திரிகையாளர்களை சந்திப்பதுதான் எனக்கு கவலையளிக்கிறது.

கடந்த முறை ஓவலில் அடைந்த தோல்வி, தற்போது அடைந்துள்ள தோல்வி எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. நான் இப்போது ஏமாற்றம் அடைந்திருப்பது போல் யாரும் வேறு எந்த தருணத்திலும் ஏமாற்றம் அடைந்திருக்கமாட்டார்கள். அணியின் தலைவராக துடுப்பாட்ட வீரராக என்னால் இந்த தோல்வியை ஏற்றுக்கொள் முடியவில்லை. மற்ற வீரர்களுக்கும் அவ்வாறுதான் இருக்கும்.

இந்த தொடர் முழுவதும் இரண்டு மோசமான இரண்டு மணி நேர ஆட்டம் தொடரை இழக்கச் செய்துள்ளது. நாங்கள் நன்றாக விளையாடும்போது அபாரமாக திகழ்கிறோம். ஆனால் நன்றாக விளையாடியபோதும் மிகவும் மோசமாக இருந்துள்ளோம். நாம் சீராக விளையாட வேண்டும் என்றார். அவுஸ்திரேலியா கடந்த 16 டெஸ்ட்களில் 6 போட்டிகளை மட்டுமே வென்றுள்ளது.

இதில் இந்தியாவிடமும் தென்னாபிரிக்காவிடமும் இங்கிலாந்திடமும் தொடரை இழந்துள்ளது. இதனால் டெஸ்ட் தரவரிசையில் அவுஸ்திரேலியா முதலிடத்தை இழந்து தென் ஆபிரிக்கா அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ளது.

முரளிதரன் பந்தை எறிகிறார் – குற்றம் சுமத்துகிறார் மார்க் ரிச்சர்ட்சன்

murali.jpgஇலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் பந்தை எறிவதாக நியூசிலாந்து முன்னாள் வீரர் மார்க் ரிச்சர்ட்சன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து ரிச்சர்ட்சன் நியூசிலாந்து பத்திரிகையில் எழுதி இருப்பதாவது:-

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் பந்தை எறிகிறார். இதனால் தான் அவரது பந்து வீச்சை அடிக்கவும், எதிர்கொள்ளவும் திணற வேண்டி உள்ளது. ஏற்கனவே சில முறை சந்தேகம் எழுந்ததால் அவரது பந்து வீச்சு குறித்து மீண்டும், மீண்டும் சோதனை நடத்தப்பட்டதும், அதில் அவர் விதிமுறைக்குட்பட்டு பந்து வீசி நிரூபித்து இருப்பதும் எனக்கு தெரியும்.

கிரிக்கெட்டில் இப்போது நிறைய தொழில் நுட்பம் வந்துள்ளது. அதன் உதவியுடன் அவரது பந்து வீச்சை பார்க்கும்போது எனது கருத்தை வலுப்படுத்தும் விதமாக காட்சிகள் அமையும். அவரது ஆக்ஷன் காட்சியை டி.வி. ரிப்ளேயில் நுணுக்கமாக பார்க்கும்போது, பந்து வீசுகையில் முழங்கையினை 15 டிகிரிக்கு மேல் வளைக்ககூடாது என்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) விதியை மீறுவது தெரியும்.

திருத்தம் தேவை

பந்து வீச்சு பரிசோதனையின்போது அவரது உடல் முழுவதும் ஏதோ பல்புகள் பொருத்தப்பட்ட படத்தை பார்த்து இருக்கிறேன். பந்தை எறியவில்லை என்று அவர் பரிசோதனை கூடத்தில் நிரூபித்து உள்ளார். ஆனால் சோதனை கூடத்தில் கிரிக்கெட் விளையாடப்படவில்லை. களத்தில் அவரது பந்து வீச்சு வேறு விதமாக இருக்கிறது.

ஐ. சி. சி. யின் மெத்தன போக்கால் சந்தேகத்துக்கிடமாக பந்து வீசுபவர்கள் கிரிக்கெட்டில் நீண்ட காலம் நீடிக்க முடிகிறது. எனவே அதற்கு தகுந்தாற்போல் விதிகளை ஐ. சி. சி. திருத்த வேண்டியது அவசியமாகும். தொழில்நுட்பத்தின் உதவியுடன் பந்து எந்த இடத்தில் பிட்ச் ஆகிறது. எப்படி சுழல்கிறது என்பதை எல்லாம் பார்க்கிறோமோ தவிர, அதை வீசியவர் யார், எப்படி வீசுகிறார் என்பதை பார்ப்பதில்லை என்றார்.

அரை இறுதிக்கு செரினா தகுதி

serena-williams.jpgரோஜர்ஸ் கோப்பைக டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் செரினா வில்லியம் வெற்றிப் பெற்று அரையிறுக்கு முன்னேறியுள்ளார்.

ரோஜர்ஸ் கோப்பைக்கான மகளிர் டென்னிஸ் போட்டி கனடாவில் நடந்து வருகிறது. இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், உலகின் 2ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், செக் குடியரசு நாட்டை சேர்ந்த லூசி சபரோவாவை எதிர்கொண்டார்.

இதில், 6 – 3, 6-  2 என்ற நேர் செட்டில் லூசி சபரோவாவை வென்று, செரினா அரை இறுதிக்கு முன்னேறினார்.

மற்ற கால் இறுதி ஆட்டங்களில் மரியா ஷரபோவா (ரஷியா), எலீனா டெமன்டிவா (ரஷியா), அலிசா கிளைபனோவா (ரஷியா) ஆகியோர் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்

ஆஷஸ் தொடரை வென்றது இங்கிலாந்து!

eng0000.jpgஅவுஸ்தி ரேலியாவிற்கு எதிரான சாம்பல் கிண்ணத்துக்கான ஆஷஸ் தொடரை இங்கிலாந்து அணி வென்று கிண்ணத்தைக் கைப்பற்றியது.

இங்கிலாந்து-ஆஸ்‌ட்ரேலிய கிரிக்கெட் அணிகள் இடையே வரலாற்று புகழ்மிக்க ‘ஆஷஸ்` டெஸ்ட் தொடர் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த போட்டி நடத்தப்படுகிறது. இதன்படி 65-வது ஆஷஸ் டெஸ்ட் கடந்த மாதம் இங்கிலாந்தில் தொடங்கியது. இதில் முதல் 4 டெஸ்டில் இரு அணியும் தலா ஒரு வெற்றி பெற்றன. இரு போட்டி டிராவாகின.

இதனால் தொடர் சமன் ஆன நிலையில் கோப்பையை வெல்வது யார் என்பதை நிர்ணயிக்கும் பரபரப்பான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 20ஆ‌ம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 332 ஓட்டங்களும், ஆஸ்‌ட்ரேலியா 160 ஓட்டங்களும் எடுத்தன. பின்னர் 172 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 373 ஓட்டங்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் ஆஸ்‌ட்ரேலிய அணிக்கு 546 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

கடினமான இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்‌ட்ரேலிய அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. முந்தைய நாள் சிறப்பான தொடக்கம் அமைத்து தந்த வாட்சன், சைமன் கேடிச் இருவரும் சிறிது நேரத்தில் அடுத்தடுத்து எல்.பி.டபிள்யூ. ஆனார்கள். கேடிச் 43 ஓட்டங்களுடனும் வாட்சன் 40 ஓட்டங்களுடனும் அவுட் ஆனார்கள்.

இதை தொடர்ந்து அ‌ணி‌த் தலைவ‌ர் ரிக்கி பாண்டிங்கும், மைக் ஹஸ்ஸியும் அணியை வீழ்ச்சியில் இருந்து மீட்கும் போராட்டத்தில் இறங்கினார்கள். அணியை ஓரளவு தூக்கி நிறுத்திய இந்த அபாயகரமான கூட்டணி துரதிர்ஷ்டவசமாக ரன்-அவுட்டில் பிரிந்தது. பிளின்டாப்பால் ரன்-அவுட் செய்யப்பட்ட பாண்டிங் 66 ஓட்டங்களுடன் (103 பந்து, 10 பவுண்டரி) பெவிலியன் திரும்பினார். அடுத்து இறங்கிய துணை தலைவ‌ர் மைக்கேல் கிளார்க்கும் (0) வந்த வேகத்தில் ரன்-அவுட் ஆகவே ஆஸ்‌ட்ரேலிய அணி தோல்வி பாதைக்கு தள்ளப்பட்டது. 5-வது விக்கெட்டுக்கு உள்ளே வந்த மார்கஸ் நார்த்தும் (10 ரன்) நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

இதன் பின்னர் ஒரு முனையில் ஹஸ்ஸி தனது 10-வது சதத்தை பூர்த்தி செய்து கொண்டு போராட, மறுபக்கம் வேகமாக விக்கெட்டுகள் சரிந்தன. ஹேடின் (34 ஓட்டங்கள்), ஜான்சன் (0), சிடில் (10), ஸ்டூவர்ட் கிளார்க் (0) ஆகியோர் சிறிய இடைவெளியில் வெளியேறினர்.

கடைசி விக்கெட்டாக மைக்ஹஸ்ஸி (121 ஓட்டங்கள், 263 பந்து, 14 பவுண்டரி) ஆட்டம் இழக்க ஆஸ்‌ட்ரேலிய அணி 2-வது இன்னிங்சில் 348 ஓட்டங்களு‌க்கு அனை‌த்து ‌வி‌க்கெ‌ட்டுகளை இழ‌ந்தது. இதன் மூலம் 197 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இங்கிலாந்து அணி மீண்டும் ஆஷஸ் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. இங்கிலாந்து அணியில் ஸ்வான் 4 விக்கெட்டுகளும், ஹார்மிசன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். வெற்றி கொண்டாட்டத்துடன் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பிளின்டாப் டெஸ்ட கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் ஆஸ்‌ட்ரேலியாவை நிலை குலைய செய்த இங்கிலாந்து ப‌ந்து ‌வீ‌ச்சாள‌ர் ஸ்டூவர்ட் பிராட் ஆட்டநாயகன் விருது பெற்றார். இங்கிலாந்து அ‌ணி‌த் தலைவ‌ர் ஸ்டிராஸ் (மொத்தம் 474 ஓட்டங்கள் ), ஆஸ்‌ட்ரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் (448 ஓட்டங்கள் ) ஆகியோர் தொடர் நாயகன் விருது பெற்றனர்.

இந்த தோல்வியின் மூலம் ஆஸ்‌ட்ரேலிய அணி முதல் முறையாக ஐ.சி.சி. தரவரிசையில் முதலிடத்தை இழந்துள்ளது.

தோல்வியடையும் நிலையில் அவுஸ்திரேலியா

eng0000.jpgஓவலில் நடைபெறும் ஆஸ்ட்ரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது, இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 4ஆம் நாளான இன்று அவுஸ்திரேலியா  அணி சற்று முன் வரை தன் இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 102 ஓட்டங்கள் எடுத்திருந்தது. தோல்வியை தவிர்க்க அவுஸ்திரேலியா மேலும் 443ஓட்டங்கள் பெற வேண்டும்

பலமான நிலையில் இங்கிலாந்து

cri0000.jpgஓவலில் நடைபெறும் ஆஸ்ட்ரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது, இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ஆம் நாளான நேற்று இங்கிலாந்து அணி தன் இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 373 ஒட்டங்கள் எடுத்து 545 ரன்கள் முன்னிலை பெற்று பலமான நிலையில் உள்ள போது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

ஆஸ்திரேலியா – நேற்று இரண்டாவது இன்னிங்ஸ்ஸில் ஆட்டமுடிவின் போது விக்கெட் இழப்பின்றி 80 ஒட்டங்கள் பெற்றிருந்தது. வாட்சன்  ஆட்டம் இழக்காமல் 31 ஒட்டங்கள் கடிச்  ஆட்டம் இழக்காமல்  42 ஒட்டங்கள்  பெற்றிருந்தனர்.

இங்கிலாந்து – முதலாவது இன்னிங்ஸ் – 90.5 ஓவர்கள்  332 ஒட்டங்கள் 
ஆஸ்திரேலியா – முதலாவது இன்னிங்ஸ் – 52.5 ஓவர்கள்  160 ஒட்டங்கள் 
இங்கிலாந்து – இரண்டாவது இன்னிங்ஸ் –  95 ஓவர்கள்  373 ஒட்டங்களுக்கு ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.
ஆஸ்திரேலியா – இரண்டாவது இன்னிங்ஸ்  – 20 ஓவர்கள்  விக்கெட் இழப்பின்றி 80 ஒட்டங்கள்

ஆஸ்திரேலியா வெற்றி இழக்கு 546 ஒட்டங்கள்

இலங்கை கிரிக்கெட் அணி 202 ஓட்டங்களால் வெற்றி

thilakarathna-dilshan.jpgஇலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையில் காலியில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 202 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

30/1 என்று  5-ஆம் நாள் ஆட்டத்தை துவங்கிய நியூஸீலாந்து அணி மென்டிஸ், முரளிதரன், துஷாரா ஆகியோர் பந்து வீச்சை எதிர்கொள்ளத் திணறி நியூஸீலாந்து உணவு இடைவேளையின் போது 5 விக்கெட் இழப்பிற்கு 125 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

குப்டில் 18 ஓட்டங்களுக்கும், டெய்லர் 16 ஓட்டங்களுக்கும், மேகின்டோஷ்  ஓட்டங்கள்  எதுவும் எடுக்காமலும், ஓரம் 21  ஓட்டங்களுக்கும் பெவிலியன் நோக்கி நடையை கட்டினர். இந்த 4 விக்கெட்டுகளையும் குலசேகரா, துஷாரா, மென்டிஸ், ஜெயவர்தனே ஆகியோர் வீழ்த்தினர்.

உணவு இடைவேளை முடிந்தவுடன் 24  ஓட்டங்கள்  எடுத்த ரைடர், முரளிதரன் பந்தில் வீழ்ந்தார். அதன் பிறகு மெக்கல்லம் 29  ஓட்டங்களையும் படேல் 22  ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.கேட்ப்டன் டேனியல் வெட்டோரி மட்டும் ஒரு முனையில் மிகச்சிறப்பாக விளையாடி 67  ஓட்டங்கள் எடுத்து மென்டிஸ் பந்தில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 71.5 ஓவ ர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 210 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணியில் முரளிதரன் 3 விக்கெட்டுகளையும், மென்டிஸ் 2 விக்கெட்டுகளையும், துஷாரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

திலகரத்னே தில்ஷான் முதல் இன்னிங்சில் 72 பந்துகளில் 92  ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடி 123  ஓட்டங்களையும் எடுத்து இலங்கை வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்தார். அதனால் அவருக்கு ஆட்ட நாய்கன் விருது கிடைத்துள்ளது.

இந்த தொடரை இலங்கை 2- 0 என்று கைப்பற்றி, ஆஸ்ட்ரேலியா இங்கிலாந்திடம் ஆஷஸ் தொடரை 1- 2 என்று இழக்க நேரிட்டால் இலங்கை டெஸ்ட் தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறும்.

மின்னல் வேக உசைன் போல்ட் 200மீ. உலக சாதனை

17-husain-bolt222.jpgஉலகின் அதிவேக மனிதன் என்று அழைக்கப்படும் ஜமைக்காவின் உசைன் போல்ட் பெர்லினில் நடைபெறும் உலக தடகள அமைப்பின் உலக சாம்பியன்ஷிப் 200மீ ஓட்டப்பந்தயக்தில் 19.19 வினாடிகளில் இலக்கை எட்டி மீண்டும் ஒரு புதிய உலக சாதனை படைத்தார்.

ஏற்கனவே பெர்லினில் 100மீ. சாம்பியன் பட்டத்தை உலக சாதனையுடன் வென்றார் உசைன்போல்ட்.

சரியாக ஒரு ஆண்டிற்கு முன் உசைன் போல்ட் பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் 200மீ. ஓட்டத்தில் 19.30 வினாடிஅக்ள் என்று உலக சாதனையை நிகழ்த்தினார். ஆனால் நேற்று மேலும் 11 வினாடிகளை மிச்சம் பிடித்தார் உசைன் போல்ட்.

இவருக்கு அடுத்தபடியாக பனாமா வீரர் அலான்சோ எட்வர்ட், 0.62 வினாடிகள் கூடுதல் எடுத்துக் கொண்டு இலக்கை எட்டி இரண்டாவது இடம் வந்தார்.

அமெரிக்க வீரர் வாலஸ் ஸ்பியர்மன் 3-வது இடம் பிடித்தார். ஐ.ஏ.ஏ.எஃப். சாம்பியனான டைசன் கே காயம் காரணமாக இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.