ரோஜர்ஸ் கோப்பைக டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் செரினா வில்லியம் வெற்றிப் பெற்று அரையிறுக்கு முன்னேறியுள்ளார்.
ரோஜர்ஸ் கோப்பைக்கான மகளிர் டென்னிஸ் போட்டி கனடாவில் நடந்து வருகிறது. இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், உலகின் 2ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், செக் குடியரசு நாட்டை சேர்ந்த லூசி சபரோவாவை எதிர்கொண்டார்.
இதில், 6 – 3, 6- 2 என்ற நேர் செட்டில் லூசி சபரோவாவை வென்று, செரினா அரை இறுதிக்கு முன்னேறினார்.
மற்ற கால் இறுதி ஆட்டங்களில் மரியா ஷரபோவா (ரஷியா), எலீனா டெமன்டிவா (ரஷியா), அலிசா கிளைபனோவா (ரஷியா) ஆகியோர் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்