பாகிஸ் தானில் புதிய தலிபான் இயக்கத் தலைவராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளவர் பாரிய ஹோட்டல் தாக்குதல் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணி மீதான பயங்கர தாக்குதல் ஆகியன உட்பட பல தாக்குதல்களை திட்டமிட்டு நடத்திய உயர் கமாண் டோ அதிகாரியாவார். அந்நாட்டில் இயங்கும் அந்நாட்டில் இயங்கும் தலிபான் குழு இன்னமும் சக்திவாய்ந்ததாகவும் தீவிரமானதாகவும் இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பதால் 28 வயதான ஹக்கிமுல்லா மெஹ்சூத்தின் இந்த நியமனம் அந்நாட்டில் அதிகரித்த தாக்குதல்களுக்கு கட்டியம் கூறலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
முன்னாள் பாக் தலிபான் பய்துல்லா மெஹ்சூத் வடமேற்கு பாகிஸ்தானில் அமெரிக்க சி.ஐ.ஏ. ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படுவதை அடுத்து அவரது இடத்திற்கு புதிதாக ஒருவரை தெரிவு செய்வது குறித்து தலிபான் கமாண்டர்களுக்கிடையே இடம்பெற்ற உட்பூசல்களை தொடர்ந்து சில வாரங்களாக நிலவிய ஊகங்களின் பின்னர் புதிய நியமனம் இடம்பெற்றுள்ளது.
பல உயர் தலிபான் கமாண்டர்கள் முன்னாள் தலைவர் உயிருடன் இருக்கிறார் என்று வலியுறுத்திய போதிலும் அவர்களால் அதனை நிரூபிக்க முடியவில்லை. தாக்குதலில் அவர் அநேகமாக கொல்லப்பட்டிருக்கலாம் என்றே அமெரிக்க, பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகிறார்கள்