ஜெயபாலன் த

ஜெயபாலன் த

மனித உரிமைகள் விடயத்தில் அவுஸ்திரேலிய பிரித்தானிய அரசுகள் இரட்டைவேடம்!

des_browneStephen_Smith_and_Rajaparksa._._._._._.
இன்று லண்டனில் வெளியான லண்டன் குரல் பத்திரிகையின் பிரதான தலைப்புச் செய்தி. இப்பத்திரிகையில் வெளியான ஏனைய செய்திகளும் வரும் நாட்களில் தேசம்நெற்றில் பிரசுரிக்கப்படும். லண்டன் குரல் பத்திரிகையின் அச்சுப் பிரதியைப் பெற விரும்புபவர்கள் தேசம்நெற் உடன் தொடர்பு கொள்ளவும்)
._._._._._.

அரசியல் தஞ்சம் கோரியுள்ள படகு அகதிகளை திருப்பி அனுப்ப
பிரித்தானிய அரசு அவுஸ்திரேலிய அரசுக்கு முழு ஆதரவு!!!

இந்தோனேசியக் கடலில் ஒரு மாதமாக தத்தளிக்கும் 260 படகு அகதிகளை திருப்பி அனுப்ப முற்படும் அவுஸ்திரேலிய அரசுக்கு முழுமையான ஆதரவை வழங்கி உள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய பிரதமரின் விசேட பிரதிநிதி டெஸ் பிரவுணியே ‘தமிழர்கள் உட்பட மக்களை திருப்பி அனுப்புவதற்கு இலங்கை பாதுகாப்பானது என்று நாங்கள் கருதுகிறோம்’ (‘’We take the view that it is safe to return people, including Tamils, to Sri Lanka.’’ ) என்று கன்பராவில் நவம்பர் 10 அன்று தெரிவித்துள்ளார். இலங்கைக்கு தாம் திருப்பி அனுப்பப்படுவதற்கு எதிராக ஐந்து இலங்கைத் தமிழர்கள் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக குறிப்பட்டுள்ள டெஸ் பிரவுணி அவ்வழக்குகளில் பிரித்தானிய அரசுக்கு சாதகமாக தீர்ப்புக் கிடைக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதற்கு முன்னரேயே டெஸ் பிரவுணியைச் சந்தித்த அவுஸ்திரேலிய வெளிநாட்டு அமைச்சர் ஸ்டிபன் சிமித் நவம்பர் 9 அன்று இலங்கை சென்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையேயும் அகதிகளை அழைத்துச் செல்லும் முகவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை இலகுவாக்கவும் தகவல்களை நபர்களைப் பரிமாறவும் உடன்பாடு எட்டப்பட்டு உள்ளது.

ஏற்கனவே படகு அகதிகள் தொடர்பாக ‘இந்தோனேசியத் தீர்வு’ என்பதனையே அவுஸ்திரேலியா பின்பற்றுகிறது. படகு அகதிகள் அவுஸ்திரேலியத் தரையைத் தட்டுவதற்கு முன் அவர்களை கடலிலேயே வழிமறித்து இந்தோனேசியாவிடம் ஒப்படைப்பதை ஒரு வழிமுறையாக அவுஸ்திரேலியா பின்பற்றுகின்றது. அதற்காக இந்தோனேசியாவிற்கு தற்போதைய அகதி நிலைதொடர்பான மேலதிக பேச்சுவார்த்தைகளை அவுஸ்திரேலிய – இந்தோனேசியப் பிரதமர்கள் நவம்பர் 18 – 19ல் நடைபெறவுள்ள சந்திப்புக்களிலும் பேசவுள்ளனர்.

இந்தோனிசிய அதிகாரிகள் தஞ்சம் கோருவோரை அடிப்பதாகவும் அவர்களுக்கு சுத்தமான குடிநீரை மருத்துவ வசதிகளை வழங்குவதில்லை அவர்கள் மோசமான நிலையில் உள்ளனர் என்றும் அவுஸ்திரேலிய சட்டத்தரனியும் அகதிகளுக்காகக் குரல் கொடுப்பவருமான ஜெசி ரெய்லர் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 8ல் Australian Tamil Forum for Justice & Equality அமைப்பினரைச் சந்தித்த டெஸ் பிரவுணி பிரித்தானிய அரசு இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றங்கள், இனப்படுகொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளமாட்டாது என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிலைப்பாட்டையே சர்வதேச சமூகமும் கொண்டுள்ளதாக அவர் அங்கு தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றங்கள், இனப்படுகொலை தொடர்பான விசாரணைகள் இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு உதவ மாட்டாது என்றும் தீர்வைக் கொண்டுவருவதற்கு எதிராக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

டெஸ் பிரவுணி உடனான சந்திப்புப் பற்றி கருத்து வெளியிட்டுள்ள Australian Tamil Forum for Justice & Equality அமைப்பின் பிரதிநிதி ஆர் ரவீந்திரன், டெஸ் பிரவுணி தமிழ் மக்களிடம் விட்டுக்கொடுப்பை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். தாங்கள் கடுமையான கோரிக்கை எதனையும் அங்கு வைக்கவில்லை எனக் குறிப்பிட்ட ஆர் ரவீந்திரன் சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வு சரியான பாதையில் செல்வதாக அமையும் என டெஸ் பிரவுண் கருத்து வெளியிட்டதாகக் தெரிவித்தார். ‘தனியரசு கேட்கமாட்டோம்’ என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என டெஸ்பிரவுண் கருதுகின்றாரோ தெரியாது எனவும் ஆர் ரவீந்திரன் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் உள்ள அகதிகளில் மூன்றில் இரண்டு பங்கினரை உலகின் வறிய நாடுகளே பொறுப்பேற்றுள்ளன. பிரித்தானியா உலகின் 2 வீதமான அகதிகளுக்கே அடைக்கலம் வழங்கி உள்ளது. 2002 கணிப்பின்படி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 300 பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையிலேயே அகதிகள் உள்வாங்கபட்டனர். தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை 50 வீதம் வரை குறைந்துள்ளது.

படகு அகதிகள் தொடர்பான பிரித்தானிய, அவுஸ்திரேலிய அரசுகளின் நிலைப்பாட்டை பிரித்தானிய சோசலிசக் கட்சியின் துணையமைப்பான தமிழர் ஒருங்கிணைப்பு வன்மையாகக் கண்டித்து உள்ளது.

BTF Bannerஆனால் பிரித்தானிய தமிழர் பேரவை – பிரிஎப் அல்லது அதன் முக்கிய உறுப்பினர்கள் பிரித்தானிய தொழிற்கட்சிக்கும் கொன்சவேடிவ் கட்சிக்கும் பல்லாயிரம் பவுண்களை நன்கொடையாக வழங்கி உள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கட்சிகளின் உயர்மட்டத் தலைமைகளுடன் பல்லாயிரம் பவுண் செலவில் விருந்துபசாரங்கைளயும் மேற்கொண்டுள்ளன. இது தொடார்பாக பிரிஎப் இடம் கேட்கப்பட்ட போது அவர்கள் பதிலளிக்கவில்லை.

பிரித்தானிய தொழிற்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசு தொடர்பான கடுமையான விமர்சனங்களை வைத்திருந்த போதிலும் அவை எதுவும் செயற்பாடுகளில் காட்டப்படவில்லை. தற்போது பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள அவுஸ்திரேலிய அரசின் அரசியல் தஞ்சம் தொடர்பான கடும்போக்கான நிலைப்பாட்டுக்கு டெஸ் பிரவுணி முண்டுகொடுத்துள்ளார். ஏற்கனவே பிரித்தானியா இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்புவது தொடர்பாக இலங்கை அரசுடன் ஒப்பந்தம் ஒன்றையும் மேற்கொண்டு உள்ளது. தற்போது அகதிகளைத் திருப்பி அனுப்புவது முக்கியம் என்றும் அதன் மூலமே அந்தச் செய்தி சென்றடைய வேண்டிய இடத்தைச் சென்றடையும் என்றும் அதுவே அகதிகள் வருவதைக் கட்டுப்படுத்தும் என்றும் டெஸ் பிரவுணி அவுஸ்திரேலிய அரசுக்கு ஆலோசணை வழங்கி உள்ளார்.

தாங்கள் திருப்பி அனுப்பப்படுவதற்கு எதிராக பிரித்தானிய உள்துறை அமைச்சுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள இலங்கையர்களின் வழக்கில் பிரித்தானிய அரசுக்கு சாதகமாக தீர்ப்பு அமைந்தால் அது பிரித்தானியாவில் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் திருப்பி அனுப்பப்படுவதற்கு வழிவகுக்கும்.

நேபால் மாவோயிஸ்ட்டுக்களின் தொடரும் போராட்டம்

Nepal_Maoists_Protestநவம்பர் 12ல் நேபால் மாவோயிஸ்ட்டுக்கள் மிகப்பெரும் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். தலைநகர் காத்மண்டு வீதிகளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அரச கட்டிடத் தொகுதியை சுற்றி வளைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அதன் அனைத்து நுழைவாயில்களையும் அடைத்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்புகையையும் குண்டாந்தடி அடியையும் பயன்படுத்தி கடுமையாக நடந்த கொண்டனர். மாணவர்களும் இளையவர்களும் இவ்வார்ப்பாட்டத்தில் பெருமளவில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதியுடைய அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டது தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Nepal_Maoists_Protestஆயுதப் போராட்டத்தில் இருந்து சமாதான உடன்பாட்டுக்கு வந்த மாவோயிஸ்ட்டுக்கள் சென்ற தேர்தலில் அதிகப்படியான ஆசனங்களைப் பெற்று கூட்டாட்சியை ஏற்படுத்தினர். தங்களது போராளிகளை நேபாள இராணுவத்தில் இணைப்பதற்கு இராணுவத் தளபதி சம்மதிக்காததால் அவரை பதவிநீக்கம் செய்தனர். அரசியலமைப்புக்கு மாறாக ஜனாதிபதி இப்பதவி நீக்கத்தை நிராகரித்து இராணுவத் தளபதியை மீண்டும் பதவியில் அமர்த்தியதை அடுத்து மாவோயிஸ்ட்டுக்களின் ஆட்சி தடம்புரண்டது.

அண்மைக் காலத்தில் ஆயுதப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி அரசியல் ரீதியாகவும் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஒரு முன்ணுதாரணமாக நேபால் மாவோயிஸ்ட்டுக்களின் போராட்டம் அமைந்திருந்தது. பிராந்திய மற்றும் சர்வதேச வல்லரசுகளின் பல்வேறுபட்ட நெருக்குவாரங்கள் மத்தியிலும் மாவோயிஸ்ட்டுக்கள் தங்கள் அரசியல் வல்லமையை நிரூபித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு தசாப்தத்திற்குப் பின்னரேயே மாவோயிஸ்ட்டுக்களின் போராட்டம் தீவிரமடைந்தது. இலங்கையில் மார்க்ஸிய அமைப்புகள் சில உருவான போதும் அவை போராட்டத்திற்கு தலைமை தாங்கக் கூடிய ஆளுமையைக் கொண்டிருக்கவில்லை. இன்று இலங்கையில் புரட்சி பற்றி பேசுபவர்கள் பெரும்பாலும் இலங்கைக்கு வெளியிலேயே வாழ்கின்றனர். இவர்கள் கீ போட் மார்க்ஸிட்டுக்களாகவே உள்ளனர். ஆனால் நேபாளில் புரட்சி பற்றிப் பேசும் மாவோயிஸ்ட்டுக்கள் காத்மண்டு வீதிகளில் போராட்டத்தை நடத்துகின்றனர். அதனால் அங்கு புரட்சி சாத்தியமாவதற்கான வாய்ப்பும் அதிகம் காணப்பட்டது.

தமிழ் தேசியத்தின் வறட்சியும் வடக்கின் வசந்தமும் : த ஜெயபாலன்

Basil Rajaparksa in Jaffna Paddy Fieldஇலங்கை அரசின் ‘வடக்கின் வசந்தம்’ திட்டம் பற்றிய விவரணம் வெளிவந்துள்ளது. வடக்கின் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய புள்ளி விபரங்களுடன் இது வெளியாகி உள்ளது. (முழுமையாகப் பார்வையிட http://www.np.gov.lk/pdf/development.pdf  ) ‘கிழக்கின் உதயம்’ திட்டம் அறிவிக்கப்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. தற்போது 180 நாள் மட்டுப்படுத்தப்பட்ட ‘வடக்கின் வசந்தம்’ அபிவிருத்தித் திட்டத்தை அரசு மேற்கொண்டு வருகின்றது.

வடக்கு, கிழக்கில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்துள்ள போதும் உள்நாட்டு யுத்தத்திற்கான காரணிகள் நீக்கப்படவில்லை என்பதை உலக வங்கி ஒக்ரோபர் இறுதியில் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டி இருந்தது. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்திற்குக் காரணமாக இருந்த இனமுரண்பாட்டுக்கு தீர்வு காணாதவரை நீண்டகால உறுதித்தன்மையை தக்க வைக்கவோ மூலதனத்தை கவரவோ முடியாது என உலக வங்கி அறிக்கை தெரிவித்து இருந்தது. மாநிலங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதே ஏற்புடைய செயன்முறையாக இருக்கும் என்றும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியது. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள அரிய சூழல் ஏற்பட்டு உள்ளது என்று தெரிவிக்கும் உலக வங்கி அறிக்கை இச்சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி தமிழ் மக்களுடைய அரசியல் குற்றச்சாட்டுக்களை திருப்திப்படுத்துகின்ற தீர்வை முன் வைக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டி இருந்தது.

ஆனால் அடுத்த தேர்தல் முடியும் வரை அரசியல் தீர்வு பற்றிய பேச்சுக்கே இடமில்லை என ஆளும் கட்சி அறிவித்துள்ளது. வடக்கு கிழக்கில் மட்டுப்படுத்தப்பட்ட அபிவிருத்தியை மேற்கொள்வதன் மூலம் அரசியல் தீர்வை பின்னடிக்கலாம் அல்லது கைவிடலாம் என்றளவில் அரசின் தற்போதைய நடவடிக்கைகள் அமைந்துள்ளதாக இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் தலைமைகள் நம்புகின்றன. ஆனாலும் அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்கின்ற அளவுக்கு இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் தலைமைகள் பலமான நிலையில் இல்லை. இதனால் அந்த அபிவிருத்தியில் பங்கெடுப்பதற்கு என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அணியில் நின்ற உள்ளுராட்சி உறுப்பினர்கள் சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளனர். இந்த இணைவு எதிர்காலத்தில் இவ்வாறான பல இணைவுகள் ஏற்படப் போகின்றது என்பதை முன்கூட்டியே அறிவித்துள்ளது.

இவ்வாறான இணைவுகள் தமிழ் மக்களின் தனித்துவ அரசியலை தவிர்க்க முடியாமல் பலவீனப்படுத்தப் போகின்றது. இதைத் தடுக்கின்ற அல்லது மட்டுமப்படுத்துகின்ற அரசியல் பலம் காலத்திற்குக் காலம் தோண்றிய தமிழர் விடுதலைக் கூட்டணி முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் வரையான தமிழ் தேசியத் தலைமைகளாலேயே அழிக்கப்பட்டு உள்ளது. கடந்த காலங்களில் இத்தலைமைகள் தங்கள் போராட்டத்தினூடாக தமிழ் மக்களுக்கு வாழ்வுக்குப் பதிலாக அழிவையே வழங்கி உள்ளனர். தமிழ் தேசியத் தலைமைகளிடம் உள்ள அரசியல் வறட்சி அவர்களை தமிழ் மக்களிடம் இருந்து அன்னியப்படுத்தி உள்ளது. அதனை மிகத்திட்டமிட்ட முறையில் பயன்படுத்திக் கொள்ளும் அரசு தமிழ் தேசியத் தலைமைகளுக்கு மாற்றீடாக தனது தலைமையை முன்வைக்கின்றது.

வன்னி முகாம் மக்களை சென்று பார்ப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அனுமதிக்கப்படவில்லை. அதற்காக அவர்கள் போராடவும் இல்லை. அவர்களில் சிலர் பல மாதங்களின் பின்னர் தற்போது தான் இலங்கைக்கே சென்றுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்ல கொழும்பு தமிழ் கட்சிகள் கூட அனுமதிக்கப்படவில்லை. ஆளும் அரசு தான் மட்டுமே அந்த மக்களில் அக்கறைகொண்டுள்ளதான தோற்றப்பாட்டை உருவாக்குகின்றது. தனக்குள்ள அனைத்து வழங்களையும் பயன்படுத்தி அதனை நிறுவ முற்பட்டுள்ளது. மே 18 வரை அரசியல் வன்முறைமூலம் தனது அரசியல் ஆதிக்கத்தை நிறுவிய அரசு தற்போது தமிழ் மக்கள் மீது கருத்தியல் மேலாதிக்கத்தை நிறுவ முற்பட்டுள்ளது. வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டம் கூட தெற்கில் உள்ள அமைச்சர்களின் தலைமையிலேயே நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 13 பேர் கொண்ட யாழ் அபிவிருத்தியில் மலையக அமைச்சர் ஒருவரே தமிழராக உள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக் கூடிய அடிப்படை ஜனநாயக விழுமியங்களையே இல்லாதொழித்த நிலையில் அரசு தனது கருத்தியல் மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு எவ்வித தடையும் இருப்பதாகத் தெரியவில்லை.

சினிமாப் படங்களில் எல்லாம் நடந்து முடிந்தபின் பொலிஸ் ஜீப் அல்லது கார் வருவது போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மார்க்சிய அறிஞர்களும் வெளியே தலைகாட்ட ஆரம்பித்துள்ளனர். மே 18 வரை மௌனம் காத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மார்க்ஸிய அறிஞர்களும் வே பிரபாகரன் எரிக்கப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட இடத்தில் புல்லும் முளைத்தபின் ‘தமிழீழ விடுதலைப் புலிகள் ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள்’ என்ற தங்கள் அறிவியல் விலாசத்தை எடுத்துவிடுகின்றனர்.

மிகப் பெரும் அவலத்தைக் கடந்து வந்த மக்களுக்கும் கடந்த 30 ஆண்டுகளாக செல் தாக்குதல்களுக்குள்ளும் குண்டுவெடிப்புகளுக்குள்ளும் வாழ்ந்த மக்களுக்கும் வழங்குவதற்கு தமிழ் தேசியத் தலைமைகளிடம் எதுவும் இல்லை. மீண்டும் குண்டுகள் வெடிக்கும் என்று எச்சரிப்பதைத் தவிர. ஓரிரு குண்டுவெடிப்புகளைச் செய்து தங்கள் தேசியத் தலைமையைக் காப்பாற்றுவதன் மூலம் தங்கள் இருப்பை உறுதிப்படுத்துவதற்கு சில புலம்பெயர் சக்திகள் முனைகின்றன. இது ஏற்படுத்தப் போகும் அரசியல் விளைவு பற்றிய அக்கறையிலும் பார்க்க தங்கள் இருப்பை உறுதிப்படுத்தி தங்கள் பொருளாதார நலன்களைப் பேணிக் கொள்வதில் அவர்கள் மிகுந்த அக்கறையாக உள்ளனர். மாவீரர் தினத்தை குறிக்கும் வைகயில் ஓரிரு குண்டுவெடிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கான அழுத்தங்களை புலம்பெயர் தமிழ் தேசிய ஆதரவு சக்திகள் வழங்கிவருவதை உணர முடிகிறது.

தமிழ் தேசியத்தின் பலம் இலங்கை அரசின் நேரடியான ஒடுக்குமுறையை வைத்தே கட்டமைக்கப்பட்டது. தமிழ் தேசியம் பலம்பெறுவதற்கு தமிழ் மக்கள் ஆயிரக் கணக்கில் கொல்லப்பட வேண்டும், தமிழ் பெண்கள் நூற்றுக் கணக்கில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இரத்தமும் சதையும் இல்லாமல் தமிழ் தேசியத்தால் நின்று பிடிக்க இயலாது. இதனையே மே 18க்குப் பின் காணக் கூடியதாக உள்ளது.

இலங்கை அரசு மேற்கொள்கின்ற நுண் அரசியலை மறைமுகமான இனச்சுத்திகரிப்பை கண்டுகொள்ளவோ எதிர்கொள்ளவோ தமிழ்த் தேசியம் தவறிவிட்டது. அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் ‘வடக்கின் வசந்தம்’ பாலம் கட்டினால் ‘தமிழ் தேசியம்’ குண்டு வைத்து தகர்க்கும் என்பதுதான். அந்த மக்களுக்கு தோளோடு தோள் கொடுக்காமல் ஒப்புக்கு மாரடிக்கும் போராட்டங்களும், ஆபத்தில் மக்களுக்கு உதவாத கோசங்களும் அரசியல் வறட்சியின் வெளிப்பாடாகவே உள்ளது. ஊரில் சொல்வார்கள் ‘பத்துப் பிள்ளை பெத்தவளுக்கு ஒரு பிள்ளை பெத்தவள் முக்கிக் காட்டினாள்’ என்று அது மாதிரியான நிலையிலேயே புலத்துப் போராட்டங்கள் அமைகின்றன.

துப்பாக்கி முனையில் கட்டிய தமிழ்தேசியம் ஈடாடுகிறது. ததேகூ உள்ளுராட்சி உறுப்பினர்கள் சுதந்திரக் கட்சியில் இணைவு. : த ஜெயபாலன்

Trincomalee_Mapதமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சுதந்திரக் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றத் தலைவரான ஆர் சம்பந்தனின் மாவட்டமான திருகோணமலை மாவட்டத்தின் நகரசபை பிரதேச சபைத் தலைவர்களும் உறுப்பினர்களும் இவ்வாறு ஆளும் சுதந்திரக் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்த போதிலும் ஆர் சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றவர்கள் மற்றவர்களுடன் கலந்தாலோசியாமலேயே முடிவுகளை மேற்கொள்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம் சிவாஜிலிங்கம் இலங்கை செல்வதற்கு சில தினங்களுக்கு முன் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டு இருந்தார். அவர்கள் தம்முடன் தொடர்புகளை மேற்கொள்ளவதைத் தவிர்த்து இருந்ததாகவும் எம் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

மிகுந்த அரசியல் அனுபவம் மிக்கவராகக் கருதப்படும் ஆர் சம்பந்தன் தன்னுடைய மாவட்டத்தின் நகரத்தின் நகர சபை பிரதேச சபை தலைவர்களையும் உறுப்பினர்களையும் வென்றெடுக்க முடியாதவராக இருந்துள்ளார். இதுவரை காலமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் துப்பாக்கி முனையில் பேணப்பட்டு வந்த தமிழ்த் தேசிய ஒருமைப்பாடு அவர்களுடைய துப்பாக்கிகள் பறிக்கப்பட்டதும் ஈடாடிப் போயுள்ளது. இப்பிளவு தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் மட்டுமல்ல வே பிரபாகரனை தேசியத் தலைவராக ஏற்றுக்கொண்ட அத்தனை புலித் தேசிய அமைப்புகளிலும் ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் கட்சித் தாவல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெரும் புள்ளிகளின் கட்சித் தாவலுக்கு கட்டியம் கூறுவதாக அமைந்தள்ளது.

பாராளுமன்றத் தலைவர் ஆர் சம்பந்தன் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாபெரும் மனித அவலம் இடம்பெறப் போவதை அறிந்திருந்த போதிலும் அவர்கள் அதனைத் தடுப்பதற்கு எவ்விதமான காத்திரமான முயற்சியும் எடுக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் முகவர்களாக இருந்து காலத்திற்குக் காலம் தங்கள் இருப்பைக் காட்டுவதற்கான அறிக்கைகளை விட்டதற்கு அப்பால் அவர்களுக்கு அரசியல் இருக்கவில்லை. தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரித்தானிய தமிழர் பேரவை போன்ற புலி சார்பு அமைப்புகள் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றன. அதற்கான அழுத்தங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஆளும் சுதந்திர ஐக்கிய முன்னணி அரசு தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள்ளும் பிளவுகளை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. உறுதியான தலைமையும் உறுதியான கொள்கையும் இன்றி தங்கள் பாராளுமன்ற ஆசனங்களைக் காப்பாற்றுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு வே பிரபாகரனுக்குப் பதிலாக இன்னுமொரு எஜமானனுக்கு கீழ் அந்தப் பாராளுமன்ற ஆசனங்களைத் தக்க வைக்க முடியுமென்றால் அதனை நோக்கி நகரவே முயற்சிக்கும்.

நவம்பர் 09ல் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்மைப்பு, சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ், மற்றும் ஐக்கிய தேசியக் உறுப்பினர்கள் ஜனாதிபதியைச் சந்தித்து சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர். மேலும் சிறிரெலோ உறுப்பினர்கள் பதினொருவரும் இவர்களுடன் இணைந்து சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர். நாட்டினை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்லும் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவதற்கே தாம் சுதந்திரக் கட்சியில் இணைந்ததாக சிறிரெலோவைச் சேர்ந்த சிவம் தேசம்நெற்றுக்கு தெரிவித்தார். இந்நிகழ்வில் மொத்தமாக 26 பேர் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர். ஏற்கனவே மட்டு மாவட்ட மேயர் சிவகீதா பிரபாகரன் உட்பட மட்டக்களப்பு நகரசபை பிரதேச சபை உறுப்பினர்கள் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டமை தெரிந்ததே.

Trincomalee_Map2006ல் இடம்பெற்ற திருகோணமலை உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழரசுக் கட்சி)ல் போட்டியிட்டு வெற்றி பெற்ற நகரசபை, பிரதேசசபை உறுப்பினர்களே தற்போது சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளனர். திருகோணமலை நகரசபைத் தலைவர் எஸ் கௌரிமுகுந்தன், உப்புவெளி பிரதேச சபைத் தலைவர் ரி காந்தரூபன், உபதலைவர் வி சுரேஸ்குமார், மற்றும் உப்புவெளி பிரதேச சபை உறுப்பினர்கள் ரி பாலசுப்பிரமணியம், கெ வைரவநாதன் மற்றும் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் யு ரவிக்குமார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்ட ரெலொ அமைப்பு தங்கள் அடிமட்ட உறுப்பினர்களைக் கைவிட்டுவிட்டதாகக் கூறி பாரிஸில் இருந்து சென்ற சயந்தன், உதயராஜா (உதயன்) ஆகியோர் சிறிரெலோவை உருவாக்கினர். லண்டனைச் சேர்ந்த முன்னாள் ரெலோ உறுப்பினர் மாணிக்கம் நகுலேந்திரன் (கீரன்) அண்மையில் இலங்கை சென்று சிறிரெலோவுடன் இணைந்து செயற்பட்டார். தற்போது சிறிரெலோவின் தலைமையும் தங்கள் அடிமட்ட உறுப்பினர்களை கைவிட்டுவிட்டதாகக் குற்றம்சாட்டி சிவம் தலைமையில் ஒரு பகுதியினர் சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளனர். இன்னும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் அவ்வாறு இணைய உள்ளதாகவும் அவர்கள் தேசம்நெற்றுக்கு தெரிவித்தனர்.

ஸ்காபுறோவில் உபாலி குரேயின் ஞாபகார்த்த கருத்தரங்கு

Upaly Coorayஉபாலி குறேயின் ஞாபகார்த்த கருத்தரங்கு கனடா ஸ்காபுறோவில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. Canadians for Peace Sri Lankan Alliance என்ற அமைப்பு இந்நிகழ்வை ஏற்பாடு செய்தள்ளது. நவம்பர் 14ல் இடம்பெறும் இஞ்ஞாபகார்த்த நிகழ்வில்

சந்திரறட்ன பண்டார: என் நினைவில் உபாலி
கே தங்கவடிவேல்: புலம்பெயர் மக்களும் இடம்பெயர் மக்களும்.
அஜித் ஜினதாச: இன முரண்பாட்டின் காரணிகள்.
ராஜன் பிலிப்ஸ்:  அரசியல் அடையாளமும் இலங்கையின் பன்முக சமூகமும்

ஆகிய தலைப்புகளில் பேச்சாளர்கள் தம் உரையை நிகழ்த்த உள்ளனர்.

காலம்: 14 th of November 2009, 2.30 PM
இடம்: Scarborough Civic Centre 150 Borough Drive Scarborough

._._._._._.

தோழர் உபாலி குரே: தமிழ் – சிங்கள உறவுப் பாலம்

தமிழ் – சிங்கள இனங்களிடையே பாலமாகச் செயற்பட்டு வந்த தோழர் உபாலி குரே நேற்று (ஓகஸ்ட் 21 2009) அதிகாலை காலமானார். தமிழ் – சிங்கள இன உறவுகள் மிகவும் பலவீனப்பட்டுப் போயுள்ள இன்றைய சூழலில் தோழர் உப்பாலி குரேயின் மறைவு மிகவும் வேதனையானதாக அமைந்துள்ளது. தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்த உப்பாலி குரே, அந்த ஓடுக்குமுறை அரசிடம் இருந்தோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்தோ யாரிடம் இருந்து வந்த போதும் அதனைக் கண்டிக்கத் தவறியதில்லை. தனது இறுதிக் காலங்கள் வரை தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்காக குரல் கொடுத்தும் எழுதியும் வந்தவர்.

தனது இளமைப் பராயத்தில் இலங்கை சுதந்திரமடைந்த காலப் பகுதிகளிலேயே தன்னை லங்கா சமசமாஜக் கட்சியில் இணைத்துக் கொண்டவர். சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டுவந்து இனவாதத்திற்குத் தூபமிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் 1964ல் லங்க சமசமாஜக் கட்சி (LSSP) இணைந்த போது அந்த இணைவை கடுமையாக எதிர்த்தவர்களில் உபாலி குரேயும் ஒருவர். தோழர்கள் எட்மன்ட் சமரக்கொடி, பாலாத்தம்பு, காராளசிங்கம், பரராஜசிங்கம், தமிழ்ரைம்ஸ் ராஜநாயகம் ஆகியோர் அப்போது லங்கா சமசமாஜக் கட்சியில் இருந்து வெளியேறினர். இவர்கள் இணைந்து புரட்சிகர லங்கா சமசமாஜக் கட்சியை (LSSP-R) உருவாக்கினர்.

தொடர்ந்தும் தொழிற்சங்க நடவடிக்கைகளுடன் தன்னை ஈடுபடுத்தி வந்த உபாலி குரே என்றும் தான் நம்பிய இடதுசாரி அரசியலில் இருந்து விலகி இருக்கவில்லை. 1970க்களின் முற்பகுதியில் லண்டனுக்கு புலம்பெயர்ந்த உபாலி குரே லண்டனிலும் தனது அரசியல் நடவடிக்கைகளைத் தொடர்ந்தார்.

1983 இனக்கலவரத்தின் போது இலங்கையில் இருந்த உப்பாலி குரே தனித்தும் கூட்டாகவும் தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை எடுத்திருந்தார். 1983ல் மரத்துடன் கட்டி உயிருடன் தீவைக்க முயன்ற கூட்டத்திடம் இருந்து ஒரு தமிழ்ப் பையனை காப்பாற்றி இருந்தார். இலங்கையில் இடம்பெற்ற இனக்கலவரங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக தன் கருத்துக்களை முன்வைத்து வருபவர். சிங்கள தேசியவாதிகளால் துரோகியாகக் கருதப்படுபவர்களில் உபாலி குரேயும் ஒருவர்.

Upaly Coorayஇலங்கை அரசு மேற்கொள்ளும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் அண்மைக் காலமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பு அமைப்புகளால் தவறான வகையில் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் புலம்பெயர்ந்த மண்ணில் தமிழ் மக்களின் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களை முதலில் ஆரம்பித்தவர்களில் தோழர் உபாலி குரேயை மறக்க முடியாது. 1983 இனக்கலவரங்களுக்கு முன்னதாகவே இலங்கைச் சிறைகளில் அடைக்கபட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்காக இலங்கையில் உள்ள அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரும் போராட்ட அமைப்பு (Campaign for Release of Political Prisoners in Sri Lanka) தோழர் உபாலி குரே, சூரியசேகரம், டொக்டர் ஆறுமுகம், தமிழ் ரைம்ஸ் ராஜநாயம் போன்றவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வமைப்பு பின்னர் ஸ்ரீலங்கா சொலிடாரிற்றி கம்பைன் (Sri Lanka Solidarity Cambaign) என பெயர்மாற்றம் செய்யப்பட்டு 1983 இனக்கலவரத்திற்கு எதிராக அப்போது பெரும் ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் ஒழுங்கு செய்யப்பட்டது. பிற்காலங்களில் தமிழ் தேசியவாத அலையில் ஸ்ரீலங்கா சொலிடாரிற்றி கம்பைன் ஈழம் சொலிடாரிற்றி கம்பைனாக (Eelam Solidarity Campaign) மாற்றப்பட்டது.

அதன் பின்னர் கொமிற்றி போர் டெமொகிரசி அன் ஜஸ்டிஸ் (Committee for Democracy and Justice) என்ற அமைப்பை தோழர்கள் உபாலி குரே, வெஸ்லி முத்தையா, வி சிவலிங்கம், தமிழ் ரைம்ஸ் ராஜநாயகம் ஆகியோர் உருவாக்கினர். இவ்வமைப்பு தமிழ் தேசியவாத அலையைத் தாண்டி செயற்படும் பலத்தைக் கொண்டிருக்கவில்லை. அதன் செயற்பாடுகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே அமைந்தது.

லண்டனில் மாற்றுக் கருத்துச் சூழலில் நன்கு அறியப்பட்டவர் உப்பாலி குரே. ஒரு சட்டத்தரணியான இவர் எப்போதும் அவருடைய அரசியல் விடயத்திறகாகவே அறியப்பட்டவர். அவருடைய அரசியலுக்கு அப்பால் அவர் ஒரு மனிதநேயம் மிக்கவராக இருந்துள்ளார். அந்த மனித நேயப் பண்பே அவரை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலை அவர் தேர்ந்தெடுக்க காரணமானது.

Upaly Coorayஇலங்கை அரசின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான வெற்றியை பெரும்பான்மைச் சிங்களச் சமூகம் வெற்றிக் கழிப்பில் கொண்டாடிக் கொண்டிருக்கையில் அந்த வெற்றிக் கழிப்பை தோழர் உபாலி குரேயின் உறவுக்காரப் பையன் ஒருவரும் தனது பேஸ்புக்கில் (facebook) பதிவிட்டிருந்தார். அந்த வெற்றிக் கழிப்பை விமர்சித்து அந்தப் பையனின் பேஸ்புக்கில் உபாலி குரே தனது விமர்சனத்தை ஆணித்தரமாகப் பதிவு செய்திருந்தார். அதன் பின்னர் தானும் தனது இருபது நண்பர்களும் யுத்தம் பற்றிய மனநிலையை மாற்றிக் கொண்டதாக அப்பையன் தோழர் உபாலி குரேக்கு தெரிவித்துள்ளார். இருபது அல்ல இருபது மில்லியன் இலங்கை மக்களுக்கும் இந்த யுத்தம் பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்த வேண்டிய தருணத்தில் உபாலி குரேயின் மரணம் சம்பவித்துள்ளது.

சிங்கள – தமிழ் – முஸ்லீம் மக்களிடையேயான உறவுகள் மிகக் கீழ் நிலைக்கு சென்றுள்ளது. இனங்களுக்கு இடையேயான நம்பிக்கையீனம் மிகவும் செல்வாக்குச் செலுத்துகின்றது. இந்த நம்பிக்கையீனத்திற்கு தூபமிடுகின்ற வகையில் இலங்கை அரசின் பேரினவாதப் போக்கும் அதற்கு எதிரான தமிழ் தேசியவாதத்தின் போக்கும் உள்ளது. இவற்றைக் கடந்து இன உறவுகளை வளர்த்துக் கொள்வதற்கான முன்னோடிகள் அனைத்து சமூகங்களின் மத்தியிலும் பலவீனமாகவே உள்ளனர். இவர்களைப் பலப்படுத்தி இன உறவுகளைக் வலுப்படுத்தி சகலவிதமான ஒடுக்குமுறைக்கும் முற்றுப்புள்ளி வைப்பதன் மூலமே இலங்கையில் நிரந்தரமான சமாதானத்தை நிறுவ முடியும். இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான அடிப்படை இனங்களிடையேயான உறவும் புரிந்துணர்வும்.

அந்த வகையில் தனது இறுதிக் காலம் வரை ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்து வந்தவர் தோழர் உபாலி குரே. இன்று இவர் போன்ற பல பாலங்கள் தமிழ் – சிங்கள மக்களை இணைக்க அவசியப்படுகின்ற போது அவர் எம்மைவிட்டுப் பிரிந்தது மிக மிக வேதனையானது. அவருடைய இறுதி நிகழ்வுகளில் இருந்து மற்றுமொரு இன உறவுப்பாலத்தை அமைப்பதே அவருக்கு செய்யும் அஞ்சலியாக அமையும்.

மேலதிக வாசிப்பிற்கு : Upali Cooray: The Unrepentant Marxist : P Rajanayagam

._._._._._.

தோழர் உபாலி குரேயின் இறுதி நிகழ்வுகள் செப்ரம்பர் 3ல்

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக வாழ்ந்த தோழர் உபாலி குரேயின் இறுதி நிகழ்வுகள் செப்ரம்பர் 3 வியாழக்கிழமை வெஸ்ட் லண்டன் கென்சல் கிறீன் மயானத்தில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது. இந்நிகழ்வு மிகவும் குறுகிய நிகழ்வாக அமைய உள்ளது. தோழர் உபாலி குரெ இன் பூதவுடல் 12:30ற்கு சப்பலில் இருந்து புறப்பட்டு வெஸ்ட் லண்டன் கென்சல் கிறீன் மயானத்தை மதியம் ஒரு மணிக்கு முன்னதாக வந்தடைய உள்ளது.

இறுதி நிகழ்வுகளுக்கு மலர்களோ மலர் வளையங்களோ எடுத்து வர வேண்டாம் என குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்நிகழ்வின் போது யுனிசெப் சர்வதேச மன்னிப்புச்சபை ஆகிய அமைப்புகள் தங்கள் பொது நோக்கங்களுக்காக நிதி சேகரிக்க குடும்பத்தினர் தங்கள் ஆதரவை நல்கி உள்ளனர்.

Funeral Service & Cremation:
Thursday, 3 September 2009

West London Crematorium,
Harrow Road,
Kensal Green,
London W10 4RA.

The service will be brief (approx. 30 minutes). The hearse will leave the chapel at 12.30 pm and arrive at the crematorium before 1.00 pm.

Map (Crematorium) :
http://www.streetmap.co.uk/map.srf?x=523796&y=182518&z=0&sv=W10+4RA&st=2&pc=W10+4RA&mapp=map.srf&searchp=ids.srf

Parking is available at the Crematorium. The nearest underground station is Kensal Green.

படகு அகதிகளின் தொடரும் அவலங்களும் மரணங்களும் – அவுஸ்திரேலியாவின் இந்தோனேசியத் தீர்வு – மேற்குலகு சொல்லும் மனித உரிமைகள் : த ஜெயபாலன்

Oceanic_Viking_Refugeesஅவுஸ்திரேலியாவின் வடமேற்குக் கடற்பரப்பில் இடம்பெற்ற விபத்தில் மூவர் இறந்துள்ளதாகவும் ஒன்பது பேரைக் காணவில்லை என்றும் அவுஸ்திரேலிய அரசு உறுதிப்படுத்தி உள்ளது. ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 01) இரவு அவுஸ்திரேலிய கடற்பரப்பில் இருந்து 350 கடல்மைல் தொலைவில் உள்ள கோகோஸ் தீவுக்கு அண்மையில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த போது 39 பேர் படகில் இருந்துள்ளனர். அகதிகளை ஏற்றி வந்த படகு மூழ்கிக் கொண்டிருக்கையில் திரவ வாயுவை ஏற்றி வந்த ‘எல்என்ஜி பைனியர்’ரும் யப்பானிய மீன்பிடிப் படகில் வந்தவர்களும் மூழ்கிக் கொண்டிருந்த படகில் இருந்து 27 பேரைக் காப்பாற்றி உள்ளனர். ஏனையவர்கள் பற்றிய அச்சம் கவலையளிப்பதாக இவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே 39 பேர் பயணித்த படகிற்கு பின்னால் 59 பேருடன் சென்ற மற்றுமொரு படகு கோகோஸ் தீவுகளுக்கு அண்மையில் காணாமல் போயுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இவ்வாண்டு மட்டும் 30க்கும் மேற்பட்ட படகுகள் இந்தோனேசியக் கடற்படையினரால் தடுக்கப்பட்டு உள்ளனர். 2000 பேர்வரை தஞ்சம் கோரி உள்ளனர்.

அரசியல் தஞ்சம் கோருபவர்களுக்கு தங்கள் கதவுகளை அடைக்கின்ற போக்கு ஆண்டுக்கு ஆண்டு கடுமையாக்கப்பட்டு வருகின்றது. தஞ்சம் கோருபவர்களுக்கான கதவுகள் அடைக்கப்பட்டு வருவதால் தஞ்சம் கோருபவர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து பயணத்தை மேற்கொள்ள வேண்டி உள்ளது. இந்தக் கதவடைப்பானது தமிழ் மக்களுக்கு மட்டுமான நடவடிக்கையாக இல்லாது போனாலும் இதனால் தமிழ் மக்கள் கணிசமான அளவில் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

2002ம் ஆண்டு கணிப்பின் படி உலகம் முழுவதும் 20 மில்லியன் மக்கள் கரிசனைக்குரிய மக்களாக கணிக்கப்படுகின்றனர். இவர்களில் 12 மில்லியன் பேர் அகதிகள். ஒரு மில்லியன் வரையானவர்கள் தஞ்சம் கோருபவர்கள் என்ற கணிக்கப்படுகின்றனர். உலகம் முழுவதும் உள்ள அகதிகளில் மூன்றில் இரண்டு பங்கினரை உலகின் வறிய நாடுகளே பொறுப்பேற்றுள்ளன. உதாரணத்திற்கு 2002ல் 7 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட கினி 3 மில்லின் சியரலியோன் அகதிகளுக்கும் 150 000 லைபீரியன் அகதிகளுக்கும் இடமளித்தது. பாகிஸ்தானிலும் தன்சானியாவிலும் மாதாந்தம் அகதிகளாக வருவோரின் எண்ணிக்கை ஐரோப்பாவின் முழு ஆண்டுக்கும் வரும் அகதிகளின் எண்ணிக்கைக்கு ஒப்பிடக் கூடியது.

பிரித்தானியா உலகின் 2 வீதமான அகதிகளுக்கே அடைக்கலம் வழங்கி உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 300 பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையிலேயே அகதிகள் உள்வாங்கபட்டனர். 1000 மக்கள் தொகைக்கு பிரித்தானியா இருவரினதும், நோர்வே, சுவீடன் நால்வரினதும் சுவிஸ்லாந்து, அயர்லாந்து மூவரினதும் தஞ்ச விண்ணப்பங்களை ஏற்கின்றன. இத்தரவுகள் 2001 ம் ஆண்டுக்கு உரியவை. தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை 50 வீதம் வரை குறைந்துள்ளது. தரவுகள் இவ்வாறு அமைய இந்நாடுகளைச் சேர்ந்த பொது மக்கள் மத்தியில் உலகின் 25 வீதமான அகதிகள் தங்கள் நாடுகளுக்கே வருவதாகக் கருதுகின்றனர். வலதுசாரி ஊடகங்களும் அரசியல் வாதிகளும் இவ்வாறான தவறான கருத்துக்களை பரப்பி அகதிகள் பற்றிய தப்பபிப்பிராயங்களை ஏற்படுத்த வழிகோலினர்.

இந்தப் பின்னணியிலேயே தற்போது அவுஸ்திரேலியாவில் விபத்துக்கு உள்ளான கப்பல் அகதிகளின் நிலையையும் இந்தோனேசியாவின் கடலில் தத்தளிக்கும் 260 அகதிகளையும் மற்றுமொரு முனையில் இந்தோனேசியாவில் தத்தளிக்கும் 76 அகதிகளையும் கனடாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 78 அகதிகளின் நிலையையும் பார்க்க வேண்டும்.

2ம் உலகமகா யுத்தத்திற்குப் பின் தங்கள் பொருளாதார வளர்ச்சிக்காகவும் பனிப்போர் அரசியல் காரணங்களுக்காகவும் பின்னைய சூழலில், தங்கள் சனத்தொகை வீழச்சி அடைவதையும் தங்கள் வயதடையும் சனத்தொகையை சமப்படுத்தவும் தங்கள் எல்லைகளைத் திறந்துவிட்ட மேற்கு நாடுகள் பனிப்போர் முடிவுக்குப் பின் தங்கள் ஐரோப்பிய எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டன. தொண்ணூறுக்களின் பின் ஆண்டுக்கு ஆண்டு தங்கள் எல்லைகளை இறுக்கி வந்துள்ள மேற்கு நாடுகள் மெலனியத்தற்குப் பின் தங்கள் எல்லைகளை இறுக்குவதற்கு கடுமையான நடவடிக்கைகளில் இறங்கின. தங்கள் எல்லைகளை இறுக்குவதற்காக தங்களுடன் இணைந்துள்ள கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு வேண்டிய உதவிகளை வழங்கின.

இக்கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி உயிரைப் பணயம் வைத்து மாண்டவர்கள் பலநூறு. அவ்வாறு மாண்ட தமிழர்களும் பலநூறு. கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பனிக் காடுகளுக்குள் பனிக்குள் குழிதோண்டிப் புதைக்கப்பட்ட தமிழ் உயிர்கள் பல. மேற்கு ஐரோப்பா நோக்கி வந்த ஐவர் பராகுவேயில் கைவிடப்பட்டு பனிக்குளிரில் சில தினங்கள் விடப்பட்டதால் அவர்களுடைய கால்கள் அழுகி அவை நீக்கப்பட வேண்டி ஏற்பட்டது. கொன்கிறீட் கலக்கும் வாகனத்தில் ஒழிந்து வந்தவர்கள் சிலர் எல்லைக் காவலாளி இயத்திரத்தை இயக்கிய போது மரணமடைந்தனர். பிரித்தானியாவின் வாயிலில் 58 சீனர்கள் மூச்சுத் தினறி இறந்த சம்பவம் பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள். இவ்வாறான கொள்கலன்களில் அடைக்கப்பட்டு பிரயாணத்தை மேற்கொண்ட பல தமிழர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக உயிரிழந்துள்ளனர்.

தொண்ணுறுக்களின் நடுப்பகுதியில் இத்தாலிக் கடலில் இடம்பெற்ற விபத்து தமிழ் அகதிகளின் புலம்பெயர்வில் ஏற்பட்ட பெரும் விபத்து. இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் இவ்விபத்தில் கொல்லப்பட்டனர். அவர்களில் இலங்கையர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். இத்தாலிக் கடலில் நின்ற கப்பலில் இருந்து படகுக்கு இறங்கும் பொழுது ஏற்பட்ட இவ்விபத்தில் படகு கவிழ்ந்து இவ்விபத்து நிகழ்ந்தது. கனடா கடல் பகுதியில் படகில் இறக்கப்பட்டவர்கள் நடுக்கடலில் சிக்கித் தவித்ததும் அதில் உயிரழந்தவருடன் படகு அகதிகள் காப்பாற்றப்பட்டதும் ‘வெல்கம் ரு கனடா’ என்று ஆவணமானது. எரித்திரியாவின் கடலில் வீழ்ந்த விமானத்தில் பயணித்தவர்களில் ஏழு பேர் இலங்கைத் தமிழ் அகதிகள். தற்போது அவுஸ்திரேலியாவில் ஒரு அவலம் நடந்துகொண்டுள்ளது. இவ்வாறு ஒரு சில சம்பவங்களை மட்டுமே நாம் அறிந்துள்ளோம். இவ்வாறு செய்தியாகாத பல சம்பவங்கள் உலகின் பல பாகங்களிலும் இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் நீண்ட யுத்தம் காரணமாக இலங்கையின் தமிழ் மக்களின் சனத்தொகையில் மூன்றிலொருவர் இலங்கைக்கு வெளியே புலம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் மேற்கு நாடுகளை நோக்கிப் புறப்பட்டு தங்கள் இலக்குகளை அடையாமல் இன்னமும் உலகின் பல்வேறு பாகங்களில் சிக்குண்டு இருண்ட எதிர்காலத்துடன் உள்ளனர். தங்கள் இலக்குகளான மேற்குலகை வந்தடைந்தவர்கள் மட்டும் ஒளிமயமான எதிர்காலத்தை எதிர்கொள்கின்றனர் எனக் கொள்ள முடியாது என்றாலும் ஒப்பீட்டளவில் பாதுகாப்பான சூழலில் உள்ளனர். இவ்வாறு தங்கள் இலக்குகளை அடைய முடியாமல் உலகின் பல்வேறு பாகங்களிலும் வாழ்பவர்கள் பெரும்பாலும் மறக்கப்பட்ட மனிதர்களாகவே வாழ்கின்றனர். இவர்கள் யார் எங்கு உள்ளனர் என்பது யாருக்கும் தெரிவதில்லை. தெரிந்த கொள்ளவும் முயற்சிக்கப்படவில்லை.

புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள அகதி அமைப்புகள் மனித உரிமை அமைப்புகள் கூட எதற்காக ஆரம்பிக்கப்பட்டனவோ அதனைக் கைவிட்டு அரச உதவிகள் எதற்குக் கிட்டுமோ அந்த நடவடிக்கைகளை மட்டும் செய்து கொண்டிருக்கின்றன. பிரித்தானியாவில் உள்ள தமிழ் அகதிகள் நடவடிக்கைக்குழு தற்போது நீரிழி நோயைத் தடுப்பது பற்றியும் யோகாசனம் பற்றியும் தான் சொல்லிக் கொடுக்கின்றது. உலகம் முழுவதும் தமிழ் மக்கள் வாழ்ந்த போதும் கைவிட்பட்ட இவர்கள் பற்றிய எவ்வித கவனமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

இந்தோனேசியக் கடலில் அரசியல் தஞ்சம் கோரியவர்கள் தொடர்பில் தமிழ் ஒருங்கிணைப்பு மட்டுமே அவுஸ்திரேலிய தூதரலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு அவர்களுக்கு அகதி அந்தஸ்து வழக்கக் கோரியது. அவுஸ்திரேலியா தமிழ் கொங்கிரஸ்ம் அதற்காக குரல் எழுப்பி வருகின்றது.

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்ட பொழுது அதனைத் தடுத்து மனித அழிவையும் அவலத்தையும் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் எதனையும் எடுக்காத மேற்குலகம் தற்பொழுது இலங்கை அரசு மனித உரிமைகளை மீறிவிட்டதாக அறிக்கை மேல் அறிக்கை வெளியிட்டு வருகின்றது. அதே இலங்கை அரசினால் மனித உரிமைகள் மீறப்பட்ட அகதிகள் 260 பேர் இந்தோனேசியக் கடலில் தவிக்கின்றனர். அந்த அகதிகளுக்கு எந்தவொரு மேற்கு நாடும் தஞ்சம் அளிக்க முன்வரவில்லை. கடந்த நான்கு வாரங்களாக நடுக்கடலில் தவிக்கும் இவர்களுக்கு தஞ்சம் வழங்கும்படி இந்த நாடுகள் அவுஸ்திரேலிய அரசை வலியுறுத்தவும் இல்லை. மறுமுனையில் கனடாவில் தஞ்சம் கோரியவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த மேற்குலகின் மனித உரிமைக் கோசங்கள் அவர்களின் அரசியல் சதுரங்கத்தின் ஒரு பகுதியாகவே உள்ளது என்பதற்கு ஆய்வுகள் அவசியமற்றது.

அவுஸ்திரேலியாவின் எல்லையில் மூன்று அவலங்கள் இடம்பெற்றுக் கொண்டுள்ளது.

ஒன்று: அவுஸ்திரேலியாவின் கோகோஸ் தீவில் நவம்பர் 1ல் கப்பல் மூழ்கி பயணித்தவர்கள் மரணமுற்றிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. அவுஸ்திரேலிய கடல் பாதுகாப்பு ஆணையம் – அம்சா வுக்கு ஞாயிறு காலை அவல அழைப்பு விடுக்கபட்டது. அழைப்பு விடுக்கப்பட்டு ஒன்பது மணிநேரத்திற்குப்பின்னரே ஜப்பானிய மீன்டிபிடிப் படகு சம்பவ இடத்தை அடைந்துள்ளது. அதற்குப் பின் பல மணி நேரங்களுக்குப் பின் திரவ வாயுவை ஏற்றும் எல்என்ஜி பைனியர் அவ்விடத்தை அடைந்தது. ஆனால் அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எல்என்ஜி பைனியர் மூழ்கிக் கொண்டிருந்த படகைக் காணும் தூரத்திலேயே நின்றதாக செய்தி வெளியிட்டு உள்ளது. ஆனால் அவுஸ்திரேலிய சுங்கத் திணைக்களம் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை எனத் தெரிவித்துள்ளது.

இரண்டு: ஒக்ரோபர் 18ல் இந்தோனேசிய அவுஸ்திரேலிய சர்வதேசக் கடலில் தவித்துக் கொண்டிருந்தவர்கள் அவுஸ்திரேலியாவின் ஓசானிக் வைக்கிங் கப்பலால் காப்பாற்றப்பட்டு இந்தோனேசியாவின் யாவா தீவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்பகுதி மாகாண ஆளுநர் இந்தோனேசியா தஞ்சம் கோருவோரைக் கொட்டும் இடமல்ல என அவர்களைத் தரையிறக்க மறுத்துவிட்டார். பின்னர் காப்பாற்றப்பட்டவர்கள் பின்ரன் தீவுக்கு கொண்டுவரப்பட்டனர். தற்போது அவர்கள் இந்தோனேசியாவில் தரையிறங்க மறுத்து வருகின்றனர். அவர்கள் தங்களை அவுஸ்திரெலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டு செல்லும்படி கோருகின்றனர். ஆனால் தஞ்சம் கோருபவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியாது என அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார்.

மூன்று: அவுஸ்திரேலியாவை நோக்கிப் புறப்பட்ட 260 பேர் கொண்ட கப்பல் இந்தோனேசியப் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க சர்வதேசக் கடல் எல்லையில் வைத்து இந்தோனேசிய கடற்படையினரால் தடுக்கப்பட்டு மேர்க் துறைமுகத்தில் ஒக்ரோபர் 10 முதல் தடுத்து வைக்கப்பட்டு உள்ளது. அதில் உள்ளவர்கள் தங்களுக்கு அடைக்கலம் வழங்குமாறு அவுஸ்திரேலியாவை கோரி வருகின்றனர். அவர்கள் இந்தோனேசியாவில் தரையிறங்க மறுக்கின்றனர்.

ஆனால் அவுஸ்திரேலிய அரசியல் களம் தஞ்சம் தொடர்பில் யார் கடும்போக்கானவர்கள் என்ற போட்டியில் இறங்கி உள்ளது. அவுஸ்திரேலிய எதிர்க்கட்சியின் முன் வரிசை உறுப்பினர் ரொனி அபோர்ட் குடிவரவு தொடர்பில் அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் றொட் மேற்கொண்ட மென் போக்கே இவற்றுக்குக் காரணம் என்று குற்றம்சாட்டி உள்ளார்.

ரொனி அபோட் மேலும் தெரிவிக்கையில் இந்தோனேசியாவில் உள்ள கப்பல் அகதிகளை இந்தோனேசியா ஏற்காத பட்சத்தில் அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டுவரப்பட்டு வழமையான குடிவரவு விதிகளுக்கு அமைய நடத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். குடிவரவு கொள்ளையை இறக்கமாக்குவதற்குப் பதில் தளர்த்தியதால் அவுஸ்திரேலியா நோக்கி படகு அகதிகள் கவரப்படுவதாகவும் அவர் தன் குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளார்.

அவர் தன் குற்றச்சாட்டை அத்துடன் நிறுத்தவில்லை அவ்வகதிகள் கிறிஸ்மஸ் தீவுகளுக்க கொண்டுவரப்பட்டால் அது அகதிகளை நாடுகடத்தலில் ஈடுபடுவோருக்குக் கிடைக்கும் வெற்றியாகும் என்றும் அது அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் றொட்டின் கொள்கைகளுக்கு கிடைக்கும் தோல்வி என்றும் தெரிவித்தார்.

கடந்த நான்கு வாரத்தில் இடம்பெற்றுள்ள இந்த மூன்று சம்பவங்களும் இந்தோனேசிய – அவுஸ்திரேலிய அரசுகளின் தஞ்சம் தொடர்பான கடும்போக்குகளை அம்பலப்படுத்தி உள்ளது. அவுஸ்திரேலிய அரசு தஞ்சம் கோருபவர்களை தனது கரைகளில் இறங்கவிடாது இந்தோனேசிய கடற்படையினரைக் கொண்டு தடுத்து வைக்கின்றது. இவற்றைவிட இவ்வாண்டு இவ்வாறான 30க்கும் மேற்பட்ட படகுகள் இந்தோனேசிய கடற்படையினரால் தடுக்கப்பட்டு உள்ளனர். அவுஸ்திரேலிய இந்தோனேசிய அரசுகளுக்கு இடையேயான உடன்பாட்டின் படி தஞ்சம் கோருவோரை இந்தோனேசியாவில் வைத்துப் பராமரிப்பதன் மூலம் தனது கையைக் கழுவிக்கொள்கின்றது அவுஸ்திரேலியா. இந்தோனிசிய அதிகாரிகள் தஞ்சம் கோருவோரை அடிப்பதாகவும் அவர்களுக்கு சுத்தமான குடிநீரை மருத்துவ வசதிகளை வழங்குவதில்லை அவர்கள் மோசமான நிலையில் உள்ளனர் என்றும் அவுஸ்திரேலிய சட்டத்தரனியும் அகதிகளுக்காகக் குரல் கொடுப்பவருமான ஜெசி ரெய்லர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அகதி நிலைதொடர்பான மேலதிக பேச்சுவார்த்தைகளை அவுஸ்திரேலிய – இந்தோனேசியப் பிரதமர்கள் நவம்பரில் மேற்கொள்ள உள்ளனர். சிங்கப்பூரில் இன்னும் சில தினங்களில் நவம்பர் 8ல் சிங்கப்பூரில் இடம்பெவுள்ள ஏபெக் மாநாட்டிலும் அதன் பின் அவுஸ்திரேலியாவில் நவம்பர் 18 – 19ல் நடைபெறவுள்ள சந்திப்பிலும் இவ்வகதிகள் விடயம் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அகதிகள் தொடர்பான அவுஸ்திரேலியாவின் ‘இந்தோனேசியத் தீர்வு’ எவ்வளவுதூரம் தீர்வாக அமையும் என்ற சந்தேகங்கள் ஏற்கனவே கிளம்பி உள்ளது.

அமெரிக்க இராஜாங்க அமைச்சின் அறிக்கையை காலாவதியாக்கும், முகாம் மக்களை வெளியேற்றும் இலங்கை அரசின் அறிவிப்பும், தொடரும் மௌனமான அடையாள அரசியல் அழிப்பும் : த ஜெயபாலன்

US_State_Department_Report_on_Sri_Lankaஅமெரிக்க அரசு இலங்கை அரசின் நடந்து முடிந்த யுத்தம் பற்றிய அறிக்கையை இன்று (ஒக்ரோபர் 22) வெளியிட்டுள்ள அதே நேரம் வன்னி முகாம்களில் உள்ள மக்களில் 40 000 பேரை மீள்குடியேற்றுவதற்கான அறிவிப்பை இலங்கை அரசு இன்று (ஒக்ரோபர் 22)ல் வெளியிட்டுள்ளது. நடந்த முடிந்த யுத்தத்தில் பாதுகாப்பு வலயங்களை அறிவித்துவிட்டு அந்த பாதுகாப்பு வலயங்களை நோக்கி இலங்கைப் படைகள் செல் தாக்குதல்களை நடத்தி உள்ளனர், தற்காலிக யுத்த நிறுத்தங்களை அறிவித்துவிட்டு யுத்த நிறுத்தம் முடிவடைவதற்கு முன்னரே அரச படைகள் தாக்குதலை நடத்தி உள்ளனர், சரணடைந்த விடுதலைப் புலிகளை இலங்கை அரசு சட்டவிரோதமாகக் கொலை செய்துள்ளது, வன்னி மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்கள் மிக மோசமான நிலையில் இருக்கின்றது போன்ற குற்றச்சாட்டுக்களை அமெரிக்க ராஜாங்க அமைச்சின் அறிக்கை கொண்டுள்ளது. இந்த அறிக்கையை சர்வதேச அரங்கில் பலவீனப்படுத்தி அதனை பெரிது பண்ண விடாமல் செய்யும் வகையில் இலங்கை அரசு ஏற்கனவே திட்டமிட்டபடி வன்னி முகாம்களில் இருந்து ஒரே தடவையில் 40 000 பேரை விடுவிக்கும் அறிவிப்பை வெளியிட்டதுடன் இன்று 5700 பேரை விடுவித்தும் உள்ளது. 

இவ்வாண்டு முடிவிற்குள் இலங்கை அரசு வன்னி முகாம்களில் உள்ள 80 வீதமான அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவதில் உறுதியாக இருப்பதாக அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த சர்வதேச அபிவிருத்திச் செயலகத்தின் செயலாளர் மைக்கல் போஸ்ர் நேற்று (ஒக்ரோபர் 21)ல் பிரித்தானிய பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது தெரிவித்தார். வன்னி முகாம்களில் சுகாதாரம், மனிதத்துவ உதவிகளுக்கான அனுமதி இன்னமும் மட்டுமப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் குடும்ப உறுப்பினர்கள் பிரிக்கப்பட்டு இருப்பதாகவும் அதீத இராணுவ கட்டுப்பாடு பற்றி தாங்கள் கரிசனை கொண்டிருப்பதாகவும் மைக்கல் போஸ்ரர் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார். தான் ஏப்ரலில் விஜயம் செய்த போது இருந்த நிலைமைகளிலும் தற்போதுள்ள நிலை முன்னேற்றகரமாக இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர் அடிப்படைத் தேவைகளான உணவும் உறைவிடமும் அனைவருக்கும் வழங்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாண்டு முடிவிற்குள் 80 வீதமானவர்களை மீளக் குடியேற்றுவதற்கான கண்ணி வெடிகளை அகற்றுவது போன்ற பணிகளுக்கு 500 000 பவுண்களை வழங்க உள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

இலங்கைகயின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு வழங்கப்பட்ட வரி நீக்கச் சலுகையை – ஜிஎஸ்பி பிளஸ் யை நீக்குவது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மைக்கல் போஸ்ரர்அது தொடர்பாக வெளிவந்துள்ள அறிக்கை சுட்டிக்காட்டுகின்ற விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகத் தெரிவித்தார். தொழிற்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் சினோபிம் மக்டோனா ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை நீக்க வேண்டும் என்று குறிப்பிடுகையில் கொன்சவேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜெப்ரி கிளிப்ரன்-பிறவுன் ’80 வீதமான மக்களை கிறிஸ்மஸ்ஸிற்கு முன்னதாக மீளக்குடியமர்த்தவும் மீளவும் உறவுகளை வலுப்படுத்தவும் இலங்கை அரசாங்கத்தை சம்மதிக்க வைப்பதற்கு ஜீஎஸ்பி பிளசை நீக்குவதா ஆரோக்கியமான நடவடிக்கை? இதனையா வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் பிரித்தானியாவில் உள்ள இலங்கையர்களும் தீவிரமாக எதிர்பார்க்கிறார்கள்’ என்று கேள்வி எழுப்பினார்.

அங்கு மைக்கல் போஸ்ரர் மேலும் தெரிவிக்கையில் செப்ரம்பரில் 32 000 பேர் வன்னி முகாம்களில் இருந்து வெளியேறி உள்ளனர் என்றும் மேலும் 41 000 பேரை மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சியில் மீள்குடியேற்ற ஐஓஎம் இன் உதவியை நாடி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரித்தானிய பாராளுமன்ற விவாதமும் இலங்கை அரசின் 40 000 பேரை விடுவிக்கின்ற அறிவிப்பும் இலங்கை அரசு தான் இழந்த சர்வதேச அங்கிகாரத்தை மீளவும் தக்க வைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கி இருப்பதை வெளிப்படுத்துகின்றது. தமிழகத்தில் இருந்து சட்டசபை உறுப்பினர்களை வரவழைத்து அவர்களது வேண்டுகோள்களை ஏற்றுக்கொள்வது போன்ற ஒரு நடவடிக்கையையும் எடுத்து வன்னி முகாம்களில் உள்ளவர்கள் தற்போது ஆயிரக்கணக்கில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். முகாம் மக்களை குறிப்பிட்ட காலத்திற்குள் விடுவிப்பது என்ற திட்டம் இலங்கை அரசிடம் ஏற்கனவே இருந்தது என்பதும் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது என்பதும் பற்றி தேசம்நெற்றில் பரவலாக செய்திகள் வெளிவந்திருந்தது. மேலும் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள படையினர் பலரும் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்நடவடிக்கைகள் விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச சமூசத்தை மீண்டும் வென்றெடுத்து தங்கள் மீதுள்ள அவப்பெயரை நீக்குவதற்கான முயற்சியாகவே இருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும் புலித் தமிழ் தேசியவாதிகளும் புலி மார்க்ஸிஸ்ட்டுக்களும் பிரச்சாரம் செய்வது போன்ற ஒரு முரட்டுத்தனமான முட்டாள்தனமான இன ஒடுக்குமுறையை இலங்கை அரசு மே 18ன் பின் மேற்கொள்ளவில்லை. தற்போது தமிழ் அரசியல் அடையாளத்தை நீண்ட காலப்போக்கில் இல்லாதொழிக்கின்ற நாசுக்கான மௌனமான அடையாள அரசியல் அழிப்பையே இலங்கை அரசு மேற்கொள்கிறது. அதில் தமிழ் அரசியல் தலைமைகளால் பணயம் வைக்கப்பட்டு முள்ளிவாய்க்காலில் கைவிடப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசினால் மட்டுமே தலைமை கொடுக்கும் ஆளுமை உள்ளது என்பதை இலங்கை அரசு தனது ஒவ்வொரு நடவடிக்கையின் மூலமும் உறுதிப்படுத்தி வருகின்றது.

தமிழக சட்டசபைக் குழுவையும் பிபிசி ஊடகவியலாளர்களையும் வன்னி முகாம்களுக்குச் செல்ல அனுமதித்த அரசு தமிழீழ விடுதலைப் புலிகளின் பினாமிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பை வன்னி முகாம்களுக்கு அனுமதிக்கவே இல்லை. அரசு அனுமதிக்காவிட்டாலும் அந்த மக்களைப் பார்க்க தங்களை அனுமதிக்கும்படி இவர்கள் போராடவும் இல்லை. ஏதாவது வகையில் முகாம்களில் உள்ள மக்களுக்கு தங்கள் உதவிகளை நல்கவும் இல்லை. அதே போன்று சமாதான காலத்தில் பொங்கு தமிழ் கொண்டாடி போர் முழக்கம் செய்த புலம்பெயர் தமிழர்கள் மிக முட்டாள்தனமாக புலிகளின் முல்லைத்தீவு கடற்கரைக்கு வணங்கா மண் அனுப்ப பல மில்லியன் பவுண்களைச் செலவழித்தனர். இன்று அவ்வளவு மில்லியன் பவுண்களும் அவத்தில் அழிந்தது. ‘300 000 மக்களுக்கு நாங்கள் எதற்காக உதவ வேண்டும்’ ‘அது அரசின் கடமை’ என்று சொல்லி தங்கள் குறைந்தபட்ச பொறுப்புகளையும் தட்டிக் கழித்தது புலம்பெயர் சமூகம். (தனிப்பட்ட முறையில் சில உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்பது மறுப்பதற்கில்லை.) அம்முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவுவது தவறு, அம்மக்கள் வலியுடன் இருந்தால் தான் போராடுவார்கள் என்று இலங்கை அரசின் கைகளிலேயே அம்மக்களைத் தள்ளிவிட்டுள்ளனர். இவர்கள் தலைவரை விட்டுவிட்ட வெளியேறியதற்காக அம்மக்களை துரோகிகள் என்றும் பட்டம் கொடுத்தனர். இன்று அம்மக்களுக்குள்ள ஒரே நம்பிக்கை இலங்கை அரசு மட்டுமே என்ற நிலையை ஏற்படுத்தியதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளினதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் வங்குரோத்து அரசியல் மட்டுமல்ல புலத்தில் உள்ள புலி ஆதரவு அறிவுகளின் புலி மார்க்ஸிஸ்டுக்களின் சிந்தனையும் தான் காரணம். ஆயிரக் கணக்கில் மக்கள் கொல்லப்பட்டால் தான் போராட்டம் உக்கிரமடையும் சர்வதேசம் தலையிடும் என்ற ஆலோசனை ஆங்கிலம் பேசுகின்ற நாடுகளில் உள்ள கோட்சூட் அணிந்த புலிக் கனவான்களின் ஆலாசணை.

சமையற் குறிப்பெடுத்து சமையல் செய்பவர்கள் போல் சிவப்புப் புத்தகம் வாசித்து புரட்சி செய்ய புறப்பட்ட பேப்பர் மார்க்ஸிட்டுக்கள் இப்பொது இணையம் வசதியாக உள்ளதால் கூகிள் மார்க்ஸிட்டுக்கள். உண்மையில் இவர்கள் குணாம்சத்தில் மார்க்ஸிசத் தோல் போர்த்தியிருக்கும் புலிகள். தலைவர் வே பிரபாகரன் நத்திக் கடலில் விட்ட ‘போராட்ட’ குத்தகையை தாங்கள் பொறுப்பெடுத்த விட்ட கனவில் நிதர்சனம் நடத்துகின்றனர். மார்க்ஸிய கருத்துக்களை முன்னெடுப்பதாகக் கூறுபவர்கள் நடைமுறையில் மக்களையே கோட்டைவிட்டு விடுகின்றனர். அது மார்க்ஸிய தத்துவத்தின் தவறு அல்ல. அதனை முன்னெடுப்பவர்களின் பலவீனமும் அர்ப்பணிப்பின்மையும். இது புலம்பெயர் தமிழ் சூழலுக்கு மிகவும் பொருந்தும். ஏனெனில் இங்கு சொகுசு மார்க்ஸிட்டுக்கள் மலிந்துவிட்டனர்.

அதற்காக அனைவரையும் ஒருங்குசேர ‘சொகுசு மார்க்ஸிஸ்ட்டுகள்’ என்ற வரையறைக்குள் அடைக்க முடியாது. நம்பிக்கையான சில போராட்டங்களும் முயற்சிகளும் இடம்பெறவே செய்கின்றன. இலங்கையில் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகங்கள் சார்பாகவும் குரலெழுப்பப்ட வேண்டியதன் அவசியத்தை குயின்ஸ்மேரி பல்கலைக் கழக கண்டனக் கூட்டத்தில் இளம்தலைமுறை மாணவர்கள் முன்வைத்தனர். வரலாற்றை சரியாகக் கற்றுக்கொள்ளத் தவறினால் அது மீளவும் நடைபெறுவதைத் தடுக்க முடியாது என்றும் ஐ நா போன்ற அமைப்புகளிடம் எமது கோரிக்கைகளை முன் வைப்பதும் அவர்களிடம் எதிர்பார்ப்பதும் அர்த்தமற்றது என்றும் மாணவர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டனர். அண்மைக்காலத்தில் இடம்பெற்ற ஒரு இடதுசாரி அமைப்பின் கூட்டத்தில் மாணவர்கள் கலந்துகொண்டு முன்னின்று செயற்பட்டதை முதற்தடவையாக அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

ஒக்ரோபர் 17ல் ‘தமிழர் ஒருங்கிணைப்பு’ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் பல்கலைக் கழக தமிழ் மாணவர்கள் நூறுபேர் வரை கலந்துகொண்டனர். அவர்கள் அவர்களில் பல்வேறு அரசியல் பின்னணிகளைக் கொண்டவர்கள் இருந்த போதும் விவாதத்திற்கும் மீளாய்விற்கும் தாங்கள் தயார் என்பதை தங்கள் கருத்துக்கள் மூலம் வெளிப்படுத்திக் கொண்டனர். ‘தமிழர் ஒருங்கமைப்பு’ கடந்த சில மாதங்களாக உலகின் பல்வேறு பாகங்களிலும் சிறிய அளவிலாயினும் தனது போராட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளது. ஆனால் இப்போராட்டங்களில் கலந்துகொண்டவர்களில் பெரும்பான்மையினர் இளைஞர்களும் யுவதிகளும் என்பது குறிப்பிடத்தக்கது. அலையென அடித்துச் செல்லும் குறும் தமிழ்த் தேசிய அலையை எதிர்த்து தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் என்று ஒடுக்கப்பட்ட மக்களது குரல்களும் ‘கீபோட்டுக்கு’ அப்பால் அங்கு மட்டுமே தற்போது ஒலித்து வருகின்றது.

இன்று இலங்கை அரசு மிக நாசுக்காக தனது மௌனமான தமிழ் அரசியல் அடையாள அழிப்பு முயற்சிகளை மேற்கொள்கின்றது. இலங்கை அரசு இனவாத அரசாக இருந்த போதும் அதனிடமுள்ள விவேகத்தையும் திட்டமிடல்களையும் அதனை நடைமுறைப்படுத்துகின்ற வேகத்தையும் எதிர்கொள்கின்ற ஆற்றல் இலங்கையிலும் சரி புலம்பெயர் தேசங்களிலும் சரி தமிழ் அரசியல் சக்திகளிடையே மிகக் குறைந்த அளவிலும் இல்லை என்பதே வேதனையான உண்மை. கட்சி அரசியல், குழுவாத அரசியல், புலி அரசியல் எனத் தங்கள் அடையாள அரசியலை நிறுவுவதிலேயே அவர்கள் வலு அவதானமாக இருக்கின்றனர். குறிப்பாக புலம்பெயர் தேசத்தின் குழுவாத அரசியலுக்கும் இலங்கையில் உள்ள தமிழ் கட்சிகளின் அரசியலுக்கும் பாரிய வேற்றுமைகள் கிடையாது. தங்கள் இருப்பை அடையாளப்படுத்துவதற்கு இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் அறிக்கை விடுவார்கள். கடிதம் எழுதுவார்கள். புலத்து குழுவாதிகள் தங்கள் இணையங்களில் அல்லது சார்பு இணையங்களில் கட்டுரை எழுதுவார்கள். தேவைப்பட்டால் கடிதமும் எழுதுவார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் இலங்கை அரசின் முடிவுகளுக்காக காத்திருப்பதைத் தவிர அவர்களுக்கு வேறுவழியில்லை.

இலங்கை அரசின் மிக நிதானமான திட்டமிடல் காலவரையறை வைத்து புலிகளை அழித்தொழிக்க வழிகோலியது. இன்று அதே நிதானத்துடன் தமிழ் மக்களது அரசியலைப் பலவீனப்படுத்துவதை நோக்கி அரசு நகர்கின்றது. அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் கண்டு வருகின்றது. ஜனாதிபதி மகிஹிந்த ராஜபக்ச ஒரு ஸ்ரண்ட் மாஸ்ரர். புலிகளை தான் குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடிவுக்குக் கொண்டு வந்ததாக சிங்கள மக்களிடம் பெயரெடுத்தவர். தான் குறிப்பிட்ட 180 நாள் காலக்கெடுவினுள் வன்னி முகாம்களையும் மூடிவிடுவேன் என்று மீண்டும் மீண்டும் கூறி வந்தவர். அதனை தற்போது ஒரு ஸ்ரண்ட் ஆகவே அறிவித்தும் உள்ளார். இலங்கை அரசு இவ்வாறான ஒரு ஸ்ரண்டைச் செய்யும் என்பதனை பலர் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். நம்பகமற்ற செய்திகளைப் பரப்பி, செய்திகளை தங்கள் அரசியலுக்கேற்ப திரிபுபடுத்தி உண்மையான விடயங்களும் மூடிமறைக்கப்படுவதற்கு வழிசெய்யப்பட்டது. இலங்கை அரசு நாசுக்காக செய்து வருகின்ற மௌனமான அடையாள அழிப்பை (தமிழ் மக்களை சுட்டுக் கொல்லாமல் இளம்பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தாமல்) அம்பலப்படுத்த இவர்களுக்கு முடியவில்லை.

ஸ்ரண்ட் மாஸ்ரர் வன்னி முகாம்களை அடுத்த ஆண்டு முற்பகுதிக்குள் மூடிவிட்டால் இங்குள்ள பலருக்கு போராடவும், குரலெழுப்பவும் விடயமே இருக்காது. ஏனெனில் இவர்களிடம் இருப்பது வெறும் உணர்ச்சியும் வேகமும் மட்டுமே. புலம்பெயர்ந்து வாழும் புலிகளின் சில முக்கிய உறுப்பினர்களுக்கு வன்னி முகாம்கள் மூடுப்படுவதில் உள்ளுக்குள் மிகுந்த புழுக்கம். ஏனென்றால் முகாம்களை மூடினால் போராட முடியாது என்ற கவலை. இதே கவலை மே 18க்குப் பின் சரணடைந்த போரளிகள் வகைதொகையின்றிக் கொல்லப்படவில்லை என்பதிலும் பெண்கள் வகைதொகையின்றி பாலியல் வல்லுறவுக்கு உட்படவில்லை என்பதிலும் இருந்தது. தங்களது எதிர்மறை அரசியலை முன்னெடுக்வே இவர்கள் களம் தேடுகின்றனர். அந்த அரசியலை மட்டுமே இவர்கள் அறிந்து வைத்துள்ளனர். அதனால் இலங்கை அரசு மேற்கொள்கின்ற மெனனமான அடையாள அழிப்பிற்கு முகம்கொடுக்க இவர்களால் முடியவில்லை.

தற்போது அரசு மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகள் தான் இழந்த கௌரவத்தை மீள்விப்பதை நோக்கிப் படிப்படியாக நகர்கின்றது. இந்திய அரசை தனக்கு ஆதரவாகக் கொண்டிருந்த நிலையில் இருந்து தற்போது புலிகளின் முக்கிய ஆதரவுத்தளமான தமிழகத்தை அரசு தன்பக்கம் வளைத்துப் போட்டுள்ளது. தனது 180 நாள் உறுதிப்படி வன்னி மக்களை மீள்குடியேற்றுகிறேன் என்றும் அரசு அறிவிக்க ஆரம்பித்துவிட்டது. அந்த ஆரம்பத்திலேயே தனக்கு எதிராக வரவிருந்த அமெரிக்க இராஜாங்க அமைச்சின் அறிக்கையை காலாவதியான அறிக்கையாக்கும் வகையில் தனது காயை இலங்கை அரசு நகர்த்தி உள்ளது.

அதுமட்டுமல்ல அடுத்த ஆறு மாத காலத்திற்குள் ஜிஎஸ்பி பிளஸ் சலுகை தொடர்பான முடிவெடுக்கப்படும் போது இலங்கை அரசு ஐரோப்பிய ஒன்றியத்தில் தனக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்தினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனாலும் அரசின் மௌனமான தமிழ் அரசியல் அடையாள அழிப்புத் தொடரும். அதனை எதிர்கொள்ளுமா எமது அரசியல் சக்திகள்?

ஒக்ரோபர் 21ல் பிரித்தானிய பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம்:

House of Commons : Wednesday 21 October 2009 : Oral Answers to Questions

International Development : Sri Lanka

Mr. Jim Cunningham (Coventry, South) (Lab): What his most recent assessment is of the humanitarian situation of refugees in Sri Lanka; and if he will make a statement.

The Parliamentary Under-Secretary of State for International Development (Mr. Michael Foster): Two weeks ago, I visited Sri Lanka to see for myself the situation of the 250,000 internally displaced people detained in camps. Conditions have improved there compared with my previous visit in April, with basic needs such as food and shelter being met. However, health care and humanitarian access remain inadequate and we are concerned about military oversight of the camps and family separations. We also believe that conditions will deteriorate during the monsoon season, which is about to start. While I was in Sri Lanka, I repeated the United Kingdom’s call for freedom of movement for all the IDPs so that they can go back to host families, relatives or their places of origin.

Mr. Cunningham: May I ask my hon. Friend whether he has been able to get a time scale for the Tamils to go back to their homes in Sri Lanka? Also, how has the aid been distributed?

Mr. Foster: The Government of Sri Lanka were committed to having 80 per cent. of those detained in camps going back to their places of origin by the end of the year. To facilitate that process, I am pleased to announce today an allocation of £500,000 to the HALO Trust for mine surveillance and de-mining in the Mullaitivu area. That work has started and will make the area safe for homes and for land use for the people who were put in the camps.

Mr. Lee Scott (Ilford, North) (Con): Will the Minister look into whether further pressure can be put on Sri Lanka by the Commonwealth? If Sri Lanka continues not to let people return or go home from the camps, perhaps it should be suspended from the Commonwealth.

Mr. Foster: It is important that the international community makes clear its position with regard to the number of people still in the camps and the importance of freedom of movement. We believe that that is happening, but, as far as the Commonwealth’s position is concerned, I know that the Government of Sri Lanka are keen to host the Commonwealth Heads of Government meeting in a couple of years’ time. That might have some bearing on their response to the developments for people who are in the camps.

Siobhain McDonagh (Mitcham and Morden) (Lab): May I thank the Minister for his statements and for his visit to Sri Lanka on behalf of my Tamil constituents? May I also ask his Department to support the EU Trade Commissioner’s GSP—or generalised system of preferences—plus report, which was issued on Monday, to ensure that preferred status will be withdrawn from Sri Lanka should things continue as they are?

Mr. Foster: My hon. Friend has long been an advocate for her Tamil constituents and I applaud her for her commitment. As regards the GSP plus and the announcement made this week by the European Commission, there is a process that should be followed to maintain the integrity of the GSP plus system. We believe that in the meantime the Government of Sri Lanka should look at the findings and act on them swiftly.

Malcolm Bruce (Gordon) (LD): As someone who visited the camps earlier this year, along with you,

Mr. Speaker, I welcome the Minister’s report on the basic conditions in the camps. Does he agree with me, however, that the Sri Lankan Government would better serve their interests if they gave full unrestricted access to the camp to the media and all the agencies and fulfilled their promise to allow people to return home before Christmas? What are the chances of that happening?

Mr. Foster: The right hon. Gentleman knows the situation well from his own experience and from his experience as Chairman of the Select Committee. I agree entirely with his assessment that it is in the Government of Sri Lanka’s interest to allow open access to the media. During the visit that I undertook two weeks ago, I had people from the BBC with me. It had full access to camps and individuals within those camps to do whatever reporting it felt necessary. Let me give the right hon. Gentleman an indication of the scale of the transfer that is needed. We have had a request from the International Organisation for Migration for transport assistance to help 41,000 people from the camps go back to Mannar, Mullaitivu and Kilinochchi, in addition to the 32,000 whom we know left the camps in September.

Mr. Eddie McGrady (South Down) (SDLP): I had the very distressing experience with the all-party group of visiting the camps at Menik farms zones 2 and 3 at Vavuniya. In spite of that distressing aspect, there was an uplifting side to the visit because of the attitude of the people and their hope for the future. Will the Minister ensure that any aid that is forthcoming from the Government is directed primarily at the welfare of the people in the camps and their displacement back to their own homes, which have been out of reach, to be joined with their families? Secondly—

Mr. Speaker: Order. I do not wish to be discourteous to the hon. Gentleman, but I think that one question will do.

Mr. Foster: When I was in Sri Lanka, I made it clear to the Government that from the end of this year, when the monsoon season was brought to a conclusion, we would no longer be funding aid for closed camps and that our aid would be directed towards facilitating movement from the camps. That includes the de-mining to which I have referred and means that I can announce £250,000 for predictable, safe and dignified transport for people from the camps back to host communities, as well as a further £220,000 to the Food and Agriculture Organisation to provide bushels of rice seeds to enable people to have a decent livelihood when they get back to their homes.

Mr. Geoffrey Clifton-Brown (Cotswold) (Con): The Minister has confirmed this morning that a package of rehabilitation measures is being put in place by the Department. That is welcome, but he has also confirmed that emergency aid will be redirected away from the camps. The Government also voted against the $2.5 billion International Monetary Fund package in July and are now considering ending the EU’s special trade privileges that the hon. Member for Mitcham and Morden (Siobhain McDonagh) mentioned. Is that really the most constructive way to persuade the Sri Lankan Government to promote a long-term reconciliation process, and to meet their stated pledge that 80 per cent. of displaced people should be returned by Christmas? That is what members of the Sri Lankan diaspora, and all Sri Lankan people in the UK, desperately want.

Mr. Foster: We were speaking up for all the people I saw in the camps two weeks ago. It was clear that they wanted to be returned to their homes as quickly as possible, but the nature of the closed camps, with their restrictions and military oversight, is wholly wrong. That is why our assistance will be geared to the de-mining, transport and livelihood programmes, as they will enable people to move safely and securely from the camps back to their homes, where they will be able to get on with their lives. I think that that is what the diaspora community here in the UK wants to hear.

ஒக்ரோபர் 22ல் அமெரிக்க இராஜாங்க அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய சாரம்:

III. Executive Summary

This report is submitted pursuant to the Joint Explanatory Statement accompanying the Supplemental Appropriations Act, 2009 (P.L. 111-32), which directed the Secretary of State to submit a report ―detailing incidents during the recent conflict in Sri Lanka that may constitute violations of international humanitarian law or crimes against humanity, and, to the extent practicable, identifying the parties responsible.‖ The alleged incidents set forth herein occurred in the context of the final months of an armed conflict between the Government of Sri Lanka (GSL) and the Liberation Tigers of Tamil Eelam (LTTE), which has been listed as a terrorist organization by the United States since 1997. While the conflict lasted intermittently for 25 years, this report focuses on incidents that occurred from January 2009, when fighting intensified, through the end of May 2009, when Sri Lankan government forces defeated the LTTE. It does not provide, nor is it intended to be, a comprehensive portrayal of the conflict.

The United States recognizes a state’s inherent right to defend itself from armed attacks, including those by non-state actors such as terrorist groups. The United States also expects states and non-state actors to comply with their international legal obligations. This report compiles alleged incidents that transpired in the final stages of the war, which may constitute violations of international humanitarian law (IHL) or crimes against humanity and related harms. The report does not reach legal conclusions as to whether the incidents described herein actually constitute violations of IHL, crimes against humanity or other violations of international law. Nor does it reach conclusions concerning whether the alleged incidents detailed herein actually occurred.

The report addresses the following categories of incidents:

Children in armed conflict—According to reports, on numerous occasions during the January to May 2009 reporting period the LTTE took both male and female children, some as young as 12, to join LTTE cadres.

Harm to civilians and civilian objects—The State Department has not received casualty estimates covering the entire reporting period; sources alleged that a significant number of deaths and injuries incurred at the time of attack were likely never recorded. Senior Sri Lankan officials made repeated public statements denying that the GSL was shelling the NFZ or targeting hospitals and was not responsible for any civilian casualties. However, sources alleged that the majority of shelling in the NFZ was from GSL forces. The GSL announced that it would observe a 48-hour ceasefire on two occasions. The stated aim of these was to allow civilians to move into areas in which they would not be subject to shelling. Incident reports suggest, however, that the GSL may have begun shelling before the end of the second 48-hour ceasefire. Reports also indicated that the LTTE forcibly prevented the escape of IDPs and used them as ―human shields‖.

Killing of captives or combatants seeking to surrender—A number of sources alleged that the GSL committed unlawful killings. Multiple reports alleged that in the final few days of fighting, senior LTTE leaders contacted international representatives in an effort to broker a surrender but were killed after they allegedly reached a surrender agreement with the GSL.

Disappearances—According to reports, GSL forces or GSL-supported paramilitaries abducted and in some instances then killed Tamil civilians, particularly children and young men. Sources reported that these individuals were taken to undisclosed locations without any further information being provided to relatives. IDP checkpoints and camps were alleged to be particularly vulnerable areas, with a heavy military presence hindering the ability of international organizations to conduct protection monitoring and confidential IDP interviews.

Humanitarian conditions—Reports include instances of severe food shortages; malnutrition, particularly among the very young and old; as well as surgeries being performed with little or no anesthetic. The GSL pledged to provide sufficient food and medical supplies to people in IDP camps and to those trapped in the NFZ. However, most reports point to significant gaps between food, medicine, and clean water needs and the available supplies in the NFZ and IDP camps.

அறிக்கையை முழுமையாக வாசிக்க:

திருடர்கள் தாக்கியதில் தமிழக வாலிபர் லண்டனில் மரணம்

லண்டன் குரொய்டனில் வாழ்ந்து வந்த சரவணகுமார் செல்லப்பன் (25) என்ற இளைஞர் ஒக்ரோபர் 19ல் அவருக்கு ஏற்படுத்தப்பட்ட உடற்காயம் காரணமாக மரணமடைந்தார். இவர் தமிழ்நாடு நாமக்கல்லைச் சேர்ந்த இளைஞர் தனது கல்வியைத் தொடர்வதற்காக லண்டன் வந்திருந்தார். தீபாவளி தினமான ஒக்ரோபர் 17ல் மாலை ஏழு மணியளவில் தனது வீட்டுக்கு அருகில் இருந்த வீதியில் நின்று தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த சரவணகுமார் செல்லப்பன் இனம்தெரியாத சில இளைஞர்களால் தாக்கப்பட்டதாக அதே ஊரைச் சேர்ந்த சரவணகுமாரின் நண்பர் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். தாக்கப்பட்டு வீதியில் வீழ்ந்த சரவணகுமார் செல்லப்பனிடம் இருந்த தொலைபேசி மற்றும் கிறடிட்காட் போன்ற உடமைகள் பறிக்கப்பட்டது என்றும் திருடிச் சென்றவர்கள் வீதியில் நீண்ட நேரமாகக் கதைத்துக் கொண்டிருந்த சரவணகுமார் செல்லப்பனின் பிடரியில் இரும்புக் குற்றியினால் தாக்கிவிட்டு அவரது உடைமைகளைப் பறித்துச் சென்றதாகவும் சரவணகுமாரின் நண்பர் கூறினார்.

வீதியில் வீழ்ந்த சரவணகுமார் செல்லப்பன் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு எழுந்து தனது வீட்டுக்குச் சென்று அங்கு நடந்ததை தான் தங்கியிருந்த வீட்டுக்காரர் ராஜனக்கு தெரிவித்ததாக ராஜனின் நண்பர் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். தான் தன்னுடைய நண்பர்களுடன் மேடே மருத்துவமனைக்கு செல்ல உள்ளதாகக் கூறிவிட்டு அவருடைய நண்பர்களிடம் சென்றுள்ளார். நண்பர்களிடம் நடந்ததைக் கூறி விட்டு தனக்கு பிடரியில் வலி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவர்கள் மேடே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சரவணகுமார் செல்லப்பனைக் காண்பித்துள்ளனர். சரவணகுமார் செல்லப்பனைப் பார்வையிட்ட மருத்துவர் தாக்குதலினால் ஏற்பட்ட வலியே அது என்று கூறி வலிநிவாரணியை வழங்கியாதாகத் தெரியவருகிறது. அன்றைய தினம் இரவு சரவணகுமார் தான் தங்கியிருந்த வீட்டில் தங்கவில்லை. தன்னுடைய நண்பர்கள் வீட்டிலேயே தங்கியதாகவும் சரவணகுமார் தங்கியிருந்த வீட்டுக்காரரர் ராஜனின் நண்பர் கூறுகிறார். இரவு படுக்கைக்குச் சென்ற போதும் சரவணகுமார் செல்லப்பனின் வலி குறைந்திருக்கவி;ல்லை என்றும் நண்பர்கள் அடிபட்ட இடத்தில் சுடுநீர் ஒத்தடம் கொடுத்தனர் என்றும் சரவணகுமாரின் நண்பர் தெரிவிக்கின்றார்.

வலியுடன் படுக்கைகுச் சென்ற சரவணகுமார் செல்லப்பன் மறுநாள் 18 ஒக்ரோபர் காலையில் எழுந்திருக்கவில்லை. காலை எழுந்து வேலைக்கு புறம்பட்ட நண்பன் வலியுடன் படுக்கைக்குச் சென்றவன் எப்படி உள்ளான் என்று பார்க்கச் சென்ற போதும் மூக்கிலும் வாயிலும் இரத்தம் வடிந்தபடி சரவணகுமார் செல்லப்பன் படுத்திருந்தார். உடனடியாக அவசர உதவிக்கு அழைப்பு விடுத்து ரூற்றிங் சென் ஜோர்ஜ் மருத்துவமனைக்கு சரவணகுமார் செல்லப்பன் எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு மறுநாள் மதியம் ஒரு மணியளவில் சரவணகுமார் மரணமடைந்ததாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

சரவணகுமார் செல்லப்பன் தனது இளம் வயதில் தன்னுயிரை இழந்ததையிட்டு உலகத் தமிழர் இயக்கம் (யுகே) தனது ஆழந்த மனவருத்தத்தை தெரிவித்துள்ளதுடன் இறந்த இளைஞரின் குடும்பத்தினருக்கும் அவரது மரணச் செய்தியை அறிவித்துள்ளனர். தமிழ்பேசும் நாங்கள் சரணவனகுமாரது உடலை பொறுப்பெற்காவிட்டால் கவுன்சில் அனாதையாக கருதி உடலை அடக்கம் செய்வவே வழமை. ஆதலால் சரவணகுமாரின் உடலைப் பொறுப்பெற்று அவரது உறுவினர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான முயற்சியை தாம் மேற்கொண்டுள்ளதாகவும் உலகத் தமிழர் இயக்கம் சார்பில் ஜேக்கப் ரவிபாலன் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார்.

ஏற்கனவே விபத்தில் மரணமடைந்த மருத்துவத்தாதி செல்வி மஞ்சுளாவின் உடலையும் உலகத் தமிழர் இயக்கம் அவருடைய பெற்றோருக்கு அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜனவரி 6ல் விபத்தில் மரணமான தமிழகத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற இளைஞரின் உடல் இங்கு உறவினர்கள் இல்லாத நிலையில் ரவர்ஹம்லற் கவுன்சிலால் அனாதையாக் கருதப்பட்டு அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. செப்ரம்பர் 9ல் முத்துக்குமாரின் உடலை கவுன்சிலர் போல் சத்தியநேசன் பொறுப்பேற்று லண்டன் சைவமுன்னேற்றச் சங்க ஐயரின் உதவியுடன் இறுதிக்கிரியைகளை மேற்கொண்டு அஸ்தியை முத்துக்குமாரின் பெற்றோருக்கு அனுப்பி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

லண்டனில் அமைச்சர் திஸ்ஸ விதாரனவுக்கு காரசாரமான விருந்து : த ஜெயபாலன்

Tissa_Vitharana_Profஒக்டோபர் 18ல் அமைச்சர் திஸ்ஸ விதாரனவுடனான கேள்வி நேரம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கேள்வி நேரத்திற்கு முன்னர் மதிய உணவு பரிமாறப்பட்டது. மதிய உணவு காரமாக இல்லாவிட்டாலும் உணவிற்குப் பின்னர் இடம்பெற்ற கேள்வி நேரம் ‘யாழ்ப்பாண மிளகாய்த்தூள்’ போட்டது போன்ற காரத்துடன் அமைந்தது. மதிய உணவின் போதிருந்தே அமைச்சர் கேள்விகளுக்கும் கருத்துகளுக்கும் முகம் கொடுக்க வேண்டி இருந்தது. ‘இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த நீங்கள் எப்படி இனவாத சக்திகளின் கை ஓங்கியுள்ள அரசின் அங்கமாக இருக்கின்றீர்கள்?’ என்றது முதல் ‘ஏபிஆச்சி தீர்வுத் திட்டம் குப்பைக் கூடையினுள் செல்லப் போகின்றது’ என்பதுவரை பல கேள்விகள் எழுப்பப்பட்டது.

ஏபிஆர்சி குழுவில் முன்னர் அங்கம் வகித்த எஸ் தவராஜா இக்கேள்வி நேரத்திற்குத் தலைமை தாங்கினார். ராஜேஸ் பாலாவின் குறுகிய அறிமுகத்துடன் நிகழ்வு ஆரம்பமாகியது. கேள்விகளை அரசியல் தீர்வு என்ற வரையறைக்குள் வைத்திருக்க வேண்டும் என அவர் வரையறை செய்திருந்த போதும் கேள்விகள் பல அம்சங்களிலும் எழுப்பப்பட்டது. ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு, ஏபிஆர்சி தீர்வுச் செயன்முறையில் நம்பிக்கை கொள்ள வேண்டும், அரசு வன்னி முகாம் மக்களை விரைவில் மீள்குடியமர்த்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது, 30 ஆண்டுகால யுத்தம் அண்மையிலேயே முடிந்துள்ளதால் அரசு சமாதானச் சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கும் இன்னமும் காலம் அவசியப்படுகின்றது போன்ற கருத்துக்களே அமைச்சரின் பேச்சிலும் பதில்களிலும் தொனித்தது.

புலம்பெயர்ந்த தமிழர்கள் புலிகளுடைய யுத்தத்திற்கு ஆதரவு வழங்கினர், புலம்பெயர்ந்த தமிழர்கள் வன்னி முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவத் தவறிவிட்டனர் போன்ற குற்றச்சாட்டுகளையும் அமைச்சர் திஸ்ஸ விதாரன அங்கு தெரிவித்தார். மற்றுமொரு சமயத்தில் வெறும் விமர்சனங்களாக அல்லாமல் விமர்சனங்களை ஆரோக்கியமாக முன்வைத்து காத்திரமான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அமைச்சரின் கருத்துக்களில் வந்திருந்த பெரும்பான்மையினர் உடன்படாத நிலையில் ஒருவர் மாறி ஒருவராக இலங்கை அரசின் இனவாத செயன்முறைகள் பற்றியும் அரசியல் தீர்வை அரசு தட்டிக்கழிப்பதைப் பற்றியும் கேள்வி எழுப்பினர். (இங்கு தேசம்நெற் வாசகர்களால் முவைக்கப்பட்ட கேள்விகளும் அமைச்சரிடம் கேட்கப்பட்டது. கேள்வி பதில்கள் முழுமையாக விரைவில் தரப்படும்.)

மதிய உணவு முதல் ஐந்து மணிநேரம் இடம்பெற்ற இச்சந்திப்பில் அமைச்சரின் கருத்துடன் உடன்பட்டு ஒரே ஒருவரே தனது கருத்தினை முன்வைத்தார். இவர் இலங்கையில் இன சமத்துவம் என்பது கடைப்பிடிக்கவில்லை எனவும் குறிப்பாக தமிழ் தலைமைகளும் இனவாதக் கருத்துக்களை வெளியிடுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

வன்னி முகாம் மக்களின் நிலைதொடர்பாக அங்கு எழுப்பப்பட்ட கேள்விகள் சிலவற்றுக்கு சபையில் இருந்த துணைத் தூதுவர் ஹம்சா பதிலளித்தார். வன்னி முகாம்களில் உலக உணவுத்திட்டம், ஹரித்தாஸ் போன்ற சர்வதேச என்ஜிஓ க்கள் உட்பட 53 என்ஜிஓக்கள் இலங்கையில் செயற்படுவதாகவும் மே 18க்குப் பின் பிபிசி போன்றவற்றின் ஊடகவியலாளர்கள் உட்பட 300 ஊடகவியலாளர்கள் வன்னி முகாம்களுக்கு சென்று வந்தள்ளாதாகக் கூறினார். ஆனால் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களை அரசு வன்னி முகாம்களுக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. துணைத்தூதுவர் ஹம்சா மேலும் குறிப்பிடுகையில் 70 000 வன்னி முகாம்களில் உள்ள மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் இவ்வாண்டு முடிவிற்குள் பெரும்பாலானவர்கள் குடியமர்த்தப்பட்டு விடுவார்கள் என்றும் அடுத்த ஆண்டின் முற்பகுதிக்குள் வன்னி முகாம்கள் மூடப்பட்டுவிடும் என்றும் தெரிவித்தார்.

நிகழ்ச்சிகளின் இறுதியாக சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு வழங்கப்பட்ட தண்டனை பற்றிக் குறிப்பிட்டு அமைச்சர் வெளியிட்ட கருத்துக்களுடன் முரண்பட்டதுடன் ‘திஸ்ஸநாயகத்தின் மீது தொடரப்பட்ட வழக்கு முற்றிலும் சோடிக்கப்பட்ட வழக்கு’ எனக் குற்றம்சாட்டினார். மேலும் ‘திஸ்ஸநாயகம் புலிகளிடம் நிதிபெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட காலப்பகுதியில் புலிகள் இலங்கையில் தடை செய்யப்பட்டு இருக்கவில்லை’ என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தொடர்கையில் ‘ஜேவிபி தலைவர் ரோகன விஜயவீர கொல்லப்பட்ட போது அவருடைய மனைவி கொல்லப்படவில்லை. ஆனால் வே பிரபாகரன் சரணடைந்த பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடைய முத்த பிள்ளைகள் கொல்லப்பட்டதற்கு நியாயம் கற்பிக்கலாம். ஆனால் மனைவி மதிவதனி கொல்லப்பட்டார். 11 வயது மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டார். இது எந்தவகையில் நியாயம்’ என அவர் கேள்வி எழுப்பியதுடன் ‘இவர்கள் தமிழர்கள் என்பதற்காகவே அவர்கள் கொல்லப்பட்டனர்’ எனவும் அவ்வூடகவியலாளர் குற்றம்சாட்டினார்.

கூட்டத்தின் இடையே இவ்வூடகவியலாளர் தனது கேள்வியை எழுப்பிய போது அவர் கூட்டவிதிமுறைகளை மீறியதாக அவர் தொடர்ந்து கேள்வியை எழுப்ப அனுமதிக்கப்படவில்லை. அதனால் பின்னர் அவருடைய கேள்வி இறுதிக் கேள்வியாக அமைந்தது. அமைச்சருடைய பதில்கள் தன்னை ஆத்திரமூட்டுவதாக அமைந்ததால் தான் இடையே குறிப்பிட்டதாகக் கூறிய அவ்வூடகவியலாளர் மேலுள்ள கேள்வியை எழுப்பினார். ஆனால் நிகழ்வுக்கு தலைமையேற்ற எஸ் தவராஜா இக்கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்க வேண்டியதில்லை எனத் தெரிவித்தார்.

இதனை தேசம்நெற் ஆசிரியர் த ஜெயபாலன் உடனடியாகக் கண்டித்ததுடன் அவருடைய கேள்விக்கு பதிலளிக்க வேண்டியது அவசியம் என்ற கோரிக்கையையும் வைத்தார். அதற்குள்ளாக மண்டபம் கையளிக்கப்பட வேண்டிய நிலையில் கூட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. பலரும் இக்கேள்விக்கு பதிலளிக்காமல் தட்டிக்கழிக்கப்பட்டதைக் கண்டித்தனர். எஸ் தவராஜாவின் அந்த முடிவு விமர்சனத்திற்குள்ளானது.

மதிய உணவில் 25 வரையானோரும் கேள்வி நேரத்தில் 70 வரையானோரும் கலந்துகொண்டனர். பொதுவாக விடுக்கப்பட்ட அழைப்பிற்கு தங்கள் வரவை உறுதிப்படுத்தியவர்கள் மட்டும் நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். அமைச்சருக்கான பாதுகாப்பு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இந்நிகழ்வு ரி கொன்ஸ்ரன்ரைன் ராஜேஸ் பாலா எஸ் தவராஜா ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் நிகழ்வின் ஆரம்பத்தில் லிற்றில் எய்ட் ஏற்பாடு செய்ததாக அறிவிக்கப்பட்டது தன்னுடைய தவறு என்றும் அதற்கு வருந்துவதாகவும் ரி கொன்ஸ்ரன்ரைன் தெரிவித்தார்.

வழமையாக கேள்விகளுக்கு முகம்கொடுக்காத கேள்வி கேட்கப்படுவதை அசௌகரியமாகக் காண்கின்ற ஒரு சூழலே தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்டு வந்தது. குறிப்பாக தமிழ் அரசியல் தலைமைகள் எப்போதும் தங்களை கேள்விக்கு உட்படுத்துவதைத் தவிர்த்தே வந்திருந்தன. தாங்கள் பதிலளிக்க விரும்பாத கேள்விகள் கேட்கப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை. ஆனால் அமைச்சர் திஸ்ஸ விதாரனவை லண்டன் தமிழர்கள் கேள்விக்கு உட்படுத்தியதுடன் அரசு பற்றிய தங்கள் அச்சத்தையும் நம்பகத் தன்மையின்மையையும் உறுதிபடத் தெரிவித்தனர். இலங்கை அரச பிரதிநிதிகள் தமிழ் மக்களது கேள்விக்கு நேரடியாக முகம்கொடுக்க வைப்பது அவசியமாகின்றது. ஊடகவியலாளர்கள் தங்கள் தொழில்சார்ந்து அரசைக் கேள்விக்கு உட்படுத்தும் அதே சமயம் சாதாரண பொதுமகனும் தனது உணர்வு சார்ந்து அவர்களைக் கேள்விக்கு உள்ளாக்கும் வாய்ப்புகள் இதன் மூலம் ஏற்படுத்தப்படுகின்றது.

வன்னி முகாம்களை மூடுவது மட்டும் தீர்வாகாது! : த ஜெயபாலன்

Wanni_IDPs_Queueing_for_Water._._._._._.

முகாம்களை மூடுங்கள் – கண்டனப் பொதுக்கூட்டம்

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும் 280 000 மக்களை சிறை வைத்துள்ள வன்னி முகாம்களை மூடுமாறு கோரியும் கண்டனப் பொதுக்கூட்டம் ஒன்று ஒக்ரோபர் 17ல் லண்டன் குயின்ஸ்மேரி பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழ் ஒருங்கமைப்பு – ரமிழ் சொலிடாரிற்றி என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்டனக் கூட்டம் நீண்ட போராட்டத்தின் ஒரு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. தமிழர்களை படுகொலை செய்வதை நிறுத்து – என்ற போராட்டத்தின் தொடர்ச்சியாக இந்தக் கண்டனக் கூட்டத்தை தமிழ் ஒருங்கிணைப்பு அமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழர்களைப் படுகொலை செய்வதை நிறுத்து மற்றும் தமிழ் ஒருங்கிணைப்பு மேற்கொள்கின்ற போராட்டங்கள் இன்றைய சூழலில் மிக அவசியமானவையாக உள்ளது. தமிழ் அரசியல் சூழல் மற்றும் புலம்பெயர் தமிழ் அரசியல் சூழல் என்பது ஒற்றைப் பரிமாணமாகி நின்று தமிழ் மக்களை மிகமோசமான அரசியல் சூழலுக்குள் தள்ளியுள்ள நிலையில் அந்த ஒற்றைப் பரிமாண அரசியலை நிராகரிக்கின்ற இவ்வாறான போராட்டங்கள் ஊக்குவிக்கப்படுவது இன்றைய காலத்தின் தேவையாகின்றது.

தமிழர் ஒருங்கிணைப்பு சோசலிசக் கட்சியின் போராட்ட முன்னரங்க அமைப்பாகும். ஒக்ரோபர் 17ல் சோசலிசக் கட்சியின் பொதுச்செயலர் பீற்றர் ரப்பே, பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன்னான போராட்டங்களை ஏற்பாடு செய்த ஜனனி பரமசோதி, சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசிய ஆய்வாளர் நாகர்ஜீனன் (ரமேஸ் கோபாலகிருஸ்ணன்), தமிழர் ஒருங்கிணைப்பின் சர்வதேச இணைப்பாளர் சேனன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு: PUBLIC MEETING -sat 17 october, 6pm, Queen mary university, room 210, Laws building
._._._._._.

அரசியல் பொருளாதார ரீதியாக மிகுந்த நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கின்ற இலங்கை அரசு அவற்றுக்கு சளைக்காமல் வன்னி மக்கள் தொடர்பில் திட்டமிட்ட ஒரு இன ஒடுக்குமுறையையும் இனச் சுத்திகரிப்பையும் மேற்கொள்ளத் திட்டமிட்டு உள்ளது. வன்னி முகாம்களில் உள்ள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் மிகுந்த அசமந்தப் போக்கிலேயே அரசு செயற்படுகின்றது. ஆரம்பத்தில் 80 வீதமான மக்களை நவம்பர் மாதத்திற்குள் மீள்குடியேற்றப் போவதாக அரசு அறிவித்து இருந்தது. ஆனால் யூலை 10ல் ஜனாதிபதி ராஜபக்ச நவம்பரில் 60 வீதமான மக்களை மீள்குடியேற்றப் போவதாகத் தெரிவித்தார். “We have a 180-day programme. That is our plan. In 180 days, we want to settle most of these people,” எனத் தெரிவித்த ஜனாதிபதி ராஜபக்ச ஆனால் “It’s not a promise, it’s a target.” என்றும் குறிப்பிட்டு இருந்தார். 60 வீதமான மக்களை மீளக்குடியேற்ற வழங்கிய காலக்கெடு இன்னும் இரு வாரங்களில் வந்துவிடும். 180 நாள் இலக்கும் வெகு தொலைவில் இல்லை. ஆனால் மீள்குடியேற்றம் பற்றிய தெளிவான அறிவிப்புகளை அரசு இன்னமும் வெளியிடவில்லை.

உலகின் ‘மிகச் சிறந்த’, ‘மிகக் கட்டுக் கோப்பான’ இராணுவ அமைப்பு என்று பெயரெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகளை 30 ஆண்டுகள் ஆயுத வன்முறையை முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகளை ‘புரஜக்ற் பீக்கன்’ என்ற திட்டத்தை வகுத்து கால அட்டவணைப்படி இரு வார தாமதத்தில் இலங்கை அரசு துடைத்து அழித்தது. அவ்வளவு வல்லமையைப் பெற்றிருந்து அரசு வன்னியில் உள்ள 300 000 லட்சம் மக்களை தான் குறிப்பிட்ட ஆறு மாதங்களுக்குள் மீள்குடியேற்றத் திணறுவதற்கு அரசின் இனவாதப் போக்கைத் தவிர வேறு குறிப்பிடத்தக்க காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

வன்னி முகாம்களில் உள்ள மக்களில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலையைச் சேர்ந்த மக்கள் அவர்களது அடையாள அட்டையில் உள்ள பிரதேசங்களில் கொண்டு சென்று விடப்பட்டு உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம் கெ சிவாஜிலிங்கம் தெரிவித்தார். ஓக்ரோபர் 13 தேசம்நெற்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டார். இப்பகுதிகளில் கொண்டு சென்று விடப்பட்டு உள்ளவர்களது ‘பூர்வீகம் அப்பிரதேசங்களாக இருந்தாலும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் அப்பிரதேசங்களுடன் தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை’ என்று தெரிவித்த எம் கெ சிவாஜிலிங்கம் ‘இம்மக்களுக்கு மீளத் தமது வாழ்வை ஆரம்பிப்பதற்கான எவ்வித உதவிகைளயும் அரசு வழங்கவில்லை’ எனவும் குற்றம்சாட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில் ‘தீவுப்பகுதிகளில் குடியேற்றப்பட்டவர்களில் இரு கால்களையும் இரு கைகளையும் இழந்த ஒரு போராளிப் பெண்ணும் அவரது தாயும் அடங்குவதாகவும் எவ்வித உதவியும் இல்லாமல் அத்தாய் எவ்வாறு தனது ஊனமாக்கப்பட்ட மகளைப் பராமரிக்க முடியும்’ என்றும் கேள்வி எழுப்பினார்.

இவற்றின் பின்னணியில் வன்னி முகாம்களில் உள்ள கணிசமான பகுதியினர் வன்னி முகாம்களைவிட்டு வெளியேறத் தயாராக இல்லை என அங்குள்ள சிலருடன் ஏற்படுத்திக் கொண்ட தொலைபேசி உரையாடல்களில் இருந்து தெரியவருகின்றது. எந்தவொரு வெளிநாட்டுத் தொடர்புகளும் கிடையாத பெரும்பாலும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்த இம்மக்கள் நிரந்தரமான வேலை வாய்ப்புகளைக் கொண்டிருக்கவில்லை. (பெரும்பாலும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில் 75 வீதத்திற்கும் அதிகமானவர்கள் யாழ் மாவட்டத்தையே சேர்ந்தவர்கள்.) இவர்கள் வன்னி முகாம்களைவிட்டு வெளியேறும் பட்சத்தில் இவர்களது நாளாந்த வாழ்வுக்கு எவ்வித ஆதாரமும் இல்லாத நிலை ஒன்றும் உள்ளது. அதனால் இம்மக்கள் தாங்கள் முகாம்களைவிட்டு வெளியேறினால் நிர்க்கதியாவோம் எனத் தேசம்நெற்க்கு தெரிவித்தனர். அவ்வாறு இருந்தும் தங்களது சுதந்திரமான நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி அரசு தங்களை கைதிகளாக நடத்துவதாக அம்மக்கள் உணர்கின்றனர்.

இவ்வாறு வன்னி முகாம்களுக்கு உள்ளேயே வாழ வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளவர்களில் வன்னியில் குடியேறிய மலையகத் தமிழர்களும் கணிசமானவர்கள் உள்ளதாக எம் கெ சிவாஜிலிங்கம் தெரிவிக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சேர்ப்பிலும் நடந்து முடிந்த யுத்தத்திலும் இம்மக்கள் மிகுந்த இழப்புகளைச் சந்தித்ததாகவும் அவர் தெரிவித்தார். இவ்விடத்தில் வன்னிக்குப் புலம்பெயர்ந்த மலையகத் தமிழர்கள் எதிர்கொண்ட சமூகப் பிரச்சினை தமிழ் மக்களால் கண்டுகொள்ளப்படாத ஒரு பிரச்சினை. (அதனை முடிந்தவரை ஆர் புதியவன் தனது ‘மண்’ படத்தில் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.)

அண்மையில் தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் வன்னி முகாம்களில் உள்ள மக்களில் கணிசமான தொகையினரை அரசு நாட்டின் ஏனைய பகுதிகளில் ‘தற்காலிகமாக’ குடியிருத்த முயற்சிப்பதாகத் தெரியவருகின்றது. அதன்படி வெளிநாடுகளில் உள்ளவர்கள் வன்னி முகாம்களில் உள்ள மக்களைப் பொறுப்பெடுக்க முன்வரும்பட்சத்தில் பொறுப்பெடுக்கப்பட்டவர்களை ‘தற்காலிகமாக’ தென்னிலங்கையில் குடியமர்த்துவது பற்றி அரசு ஆராய்கின்றது. அவ்வாறு குடியிருத்தப்படுபவர்களது செலவீனங்களை அவர்களைப் பொறுப்பெடுக்கின்ற புலம்பெயர்ந்த தமிழர்கள் செலுத்த வேண்டும் எனக் கேட்கப்பட இருப்பதாகவும் தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்னி முகாம்களில் உள்ள மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கான கால தாமதம் ஏற்படும் பட்சத்தில் வடக்கு – கிழக்கில் குடியமர்த்த முடியும் ஆயினும் அரசு அவர்களை வடக்கு கிழக்கில் ‘தற்காலிகமாக’ குடியமர்த்துவதற்குப் பதிலாக தென்னிலங்கையில் ‘தற்காலிகமாக’ குடியமர்த்த முற்படுவதன் பின்னணி அபாயகரமானது. ஏற்கனவே சனத்தொகை ரீதியாக மிகப் பலவீனமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தமிழ் மக்கள் வன்னி முகாம்களில் உள்ள மக்கள் தெற்கில் ‘தற்காலிகமாக’ குடியமர்த்தப்படுவார்களாக இருந்தால் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் சனத்தொகையில் பாரிய விழ்ச்சி ஏற்படும். வட மாகாணத்தின் யாழ் மாவட்டம் தவிர்ந்த வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னியின் மொத்த  வன்னியின் மொத்த மக்கள் தொகை – 551,000. ( மன்னார் – 100,000, கிளிநொச்சி – 142,000, முல்லைத்தீவு – 145,000, வவுனியா – 164,000) இவர்களில் 250 000 மக்கள் தொகையினர் – 50 வீதமான மக்கள் வன்னி முகாம்களில் உள்ளனர். இவர்களில் கணிசமான தொகையினரை அரசு தென்பகுதிகளில் குடியேற்ற முயற்சிக்குமாக இருந்தால் வன்னி நிலப்பரப்பிலும் வடக்கு கிழக்கிலும் தமிழ் மக்களின் சனத்தொகை கணிசமான அளவு வீழ்ச்சி அடைவது தவிர்க்க முடியாதது.

ஏற்கனவே யாழ் மாவட்டத்தில் வாழந்த முஸ்லீம் மக்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டு கடந்த 20 வருடங்களுக்கு மேலாக புத்தளத்தில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இம்மக்கள் தங்கள் வாழ்நிலையை அங்கேயே ஸ்தீரப்படுத்திக் கொண்டதால் அவர்கள் மீண்டும் தங்கள் பூர்வீக மண்ணுக்கு வருவதற்கு தயாராகவில்லை. அவர்களது வாழ்நிலையை உயர்த்துவதற்கான மீள்குடியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படாதவரை அவர்கள் தாங்கள் தங்கியுள்ள இடத்திலேயே தங்களை நிலைப்படுத்திக் கொள்வர்.

இன்று வன்னி முகாம் மக்களை தெற்கில் முடியமர்த்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளும் இதே விளைவையே ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

கடைசியாக 1981லேயே வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் சனத்தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் வடக்கு கிழக்கில் சனத்தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கான சுமூகமான சூழலோ அல்லது வடக்கு கிழக்கு பிரதேசங்கள் அரச கட்டுப்பாட்டிலோ இருக்கவில்லை. பத்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை மேற்கொள்ளப்பட உள்ள குடிசனமதிப்பீடு 2011ல் இடம்பெற இருக்கின்றது. 1991, 2001 ல் வடக்கு கிழக்கின் சனத்தொகை மதிப்பீடு இலங்கையின் வளர்ச்சி வீதத்துடன் ஒத்ததாக மதிப்பிடப்பட்டது. தற்போது வடக்கு கிழக்கு முழுமையாக அரச கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் 2011ல் குடிசனமதிப்பீடு மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்படி வடக்கு கிழக்கின் உண்மையான சனத்தொகைப் புள்ளிவிபரம் வெளிவரும்.

கடந்த 30 ஆண்டுகளில் வடக்கு கிழக்கின் சனத்தொகையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றது. இது தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையவில்லை. அண்ணளவாக மூன்று மில்லியனாக இருந்த வடக்கு கிழக்கு தமிழர்களில் ஒரு மில்லியன் தமிழர்கள் குறிப்பாக யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து உள்ளனர். இன்னும் ஒரு மில்லியனுக்கும் சற்று குறைவான தமிழர்கள் தென்பகுதிகளில் வாழ்கின்றனர். எஞ்சிய ஒரு மில்லியனுக்கும் சற்று அதிகமான தமிழர்களே வடக்கு கிழக்கில் உள்ளனர். இவர்களில் 660 000 பேர் (முஸ்லீம்கள் உட்பட) இடம்பெயர்வு முகாம்களில் வாழ்வதாக தமிழர் தகவர் நடுவம் தெரிவிக்கின்றது.

வன்னி யுத்தத்தில் இலங்கை அரசு மிக மோசமாக மனித உரிமைகளை மீறியது. தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தது. ஆனால் இலங்கை அரசு இன அழிப்பை மேற்கொண்டதாக நிறுவுவது கடினம் என்பதனை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அனுதாபமானவர்கள் லண்டனில் ஏற்பாடு செய்த கூட்டங்களிலேயே சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். வன்னியில் மக்களின் உயிரிழப்புகள் அதிகரித்தால் சர்வதேசம் தலையீடு செய்யும் என்ற முட்டாள்தனமான சமன்பாட்டை வைத்துக் கொண்டு மக்கள் கொல்லப்படுவதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தது புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்த புலி ஆதரவு திங்ராங்க். யுத்தத்தின் கொடுமை தாங்காது தங்கள் கட்டுப்பாட்டை மீறி அரச படைகளை நோக்கி ஓட நிர்ப்பந்திக்கப்பட்ட மக்களை புலிகள் சுட்டுக்கொன்றனர். ஓடித்தப்ப முடியாது சிக்குண்டவர்கள் அரசின் குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். இவ்வாறு  தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் பெரும் மனித அவலத்தை நிகழ்த்தி சர்வதேசத்தை கூவி அழைத்தனர் புலிகள். இம்முயற்சி எவ்வித பலனையும் அளிக்கவில்லை. அதனால் வன்னி யுத்தத்தில் இலங்கை அரசு இனஅழிப்புச் செய்துள்ளது என்பதனை நிறுவுவதற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இடம்கொடுக்கவில்லை.

ஆனால் ‘இலங்கை அரசு தற்போது செய்ய முற்படுகின்ற விடயங்களே திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு இனஅழிப்பு நடவடிக்கை’ என்கிறார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஏபிஆர்சி உறுப்பினருமான எஸ் தவராஜா. தற்போதைய இன அழிப்பு இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் என்பது தமிழ் மக்களை படுகொலை செய்வதும் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவுக்கும் உட்படுத்துவதும் அல்ல எனத் தெரிவிக்கும் அவர் ‘அரசு மிகத் திட்டமிட்டு நிதானமாக தமிழ் மக்களை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்த முயற்சிக்கின்றது’ என்கிறார். ‘இதுவே தற்போது தமிழ் மக்கள் எதிர்கொள்ள வேண்டிய முக்கிய விடயம்’ எனவும் அவர் தெரிவிக்கின்றார். ‘எப்போதும் வருமுன் காப்பதே நன்று’ எனக் கூறும் எஸ் தவராஜா ‘தமிழ் மக்களுக்கு சிறுபான்மை இனங்களுக்கு எதிரான சட்டங்கள், விதிமுறைகள், நடைமுறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அவை ஒரு போதும் மீளப்பெறப்படப் போவதில்லை. கல்லோயக் குடியேற்றத் திட்டம் முதல் இன்றுவரை நிலைமைகள் அவ்வாறே உள்ளது. அவற்றை இனிமேல் நீக்க முடியாது. அதனால் அவ்றை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும்’ என்றும் குறிப்பிட்டார்.

வன்னி முகாம்களை தொடர்ந்தும் வைத்திருப்பதில் இலங்கை அரசு பெரும் பொருளாதார அரசியல் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருகின்றது. அதனால் அந்த முகாம்களை மூடவேண்டிய நிர்ப்பந்தம் உள்ளேயும் வெளியேயும் அரசுக்கு ஏற்பட்டு உள்ளது. ஆனால் இந்த முகாம்களை மூடிவிட்டு மக்களை அவர்களது சொந்த மண்ணில் குடியமர்த்தும் விருப்பம் அரசிற்கு இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் அரசு இம்மக்களில் கணிசமான பகுதியினரை வடக்கு கிழக்கிற்கு வெளியே கொண்டு சென்று குடியேற்றவும் வடக்கு கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளவும் திட்டமிடுகின்றது. கிழக்கில் அரசு வெற்றிகரமாக சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்ட போதும் வடக்கில் அவ்வாறான ஒரு நிலை காணப்படவில்லை. ஆனால் தற்போதைய சூழல் வடக்கிலும் அவ்வாறான ஒரு சனத்தொகை மாற்றத்தை அரசு மேற்கொள்வதை நோக்கி நகர்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இலங்கை அரசின் இந்தப் போக்கானது மலேசிய அரசு தனது சிறுபான்மை இனங்களை எவ்வாறு கையாள முற்படுகின்றதோ அதை நோக்கியதாக உள்ளதாக அண்மையில் தமிழர் தகவல் நடுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு ஒன்றில் மலேசிய நண்பர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

இவற்றின் பின்னணிகளைக் கொண்டு வன்னி முகாம்களில் உள்ள மக்களது எதிர்காலம் தொடர்பில் அந்த மக்களுடன் தொடர்புபட்டு போராட்டங்கள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகின்றது. நாம் சரியெனத் தீர்மானிக்கும் அரசியல் காரணங்களுக்காக அல்லாமல் அந்த மக்களது நலன்களை அடிப்படையாகக் கொண்டு போராட்டங்களும் கோரிக்கைகளும் முன் வைக்கப்பட வேண்டும். அதற்கு போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் அந்த மக்களுடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வன்னி முகாம்களை மூடுவது மட்டும் தீர்வாகாது.

._._._._._.

அரசின் முகத்திரையைக் கிழிக்கும் வன்னி முகாம்களின் முட்கம்பிவேலி : த ஜெயபாலன்

வன்னி முகாம்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக …..

1. அரசு வன்னி முகாம்களில் உள்ள மக்களை துரிதகதியில் அவர்களது பகுதிகளிலேயே அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து மீளக் குடியேற்றுவது மிக மிக அவசியம். அதுவொன்றே இந்த முகாம்களில் உள்ள பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதுடன் அந்த மக்களின் சுயாதீனமான சுதந்திரமான வாழ்வையும் அடிப்படை உரிமைகளையும் உறுதிப்படுத்த வேண்டும்.

2. மீளக் குடியேற்றும் வரையான குறுகிய காலப்பகுதியில் வன்னி முகாம்களினுள் உள்ள பாதுகாப்புப் படைகள் வெளியெற்றப்பட்டு நிர்வாகம் சர்வதேச மனிதாபிமான ஸ்தாபனங்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட வேண்டும். சர்வதேச அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படாத பட்சத்தில் இலங்கையின் அனைத்து சமூகங்களையும் புலம்பெயர் தமிழர்களையும் உள்ளடக்கிய சிவிலியன் நிர்வாகத்தில் அம்முகாம்கள் ஒப்படைக்கப்பட வேண்டும்.

3. முகாம்கள் சர்வதேச விதிமுறைகளுக்கமைய நிர்வகிக்கப்பட வேண்டும்.

4. முகாம்களில் உள்ளவர்கள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் போது முகாம் நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமான பதிவுகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அழைத்துச் செல்லப்படுபவருடன் பெற்றோர் உறவினர் தொடர்பு கொள்ளக் கூடிய ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும்.

5. முகாம்களில் உள்ளவர்களுக்கு உளவியல் மருத்துவம் உட்பட அனைத்து மருத்தவ வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

6. முகாம்களில் உள்ளவர்கள் நேரடியாகவும் தொலைபேசியூடாகவும் தங்களுடைய உறவினர்களைச் சந்திக்கவும் உதவிகளைப் பெறவும் ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும்.

7. முகாம்களை கண்காணிப்பதற்கான சுயாதீன கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டு அவர்கள் முகாம்களை எப்போதும் எவ்வித தடையுமின்றி பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

8. சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் ஊடகங்கள் முகாமினுள் சென்று பார்வையிடுவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும்.

9. அங்குள்ள மக்களது குறைகளைக் கேட்டறிந்து அவற்றை உடனுக்குடன் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

10. முகாம்களில் உள்ள அனைவருக்கும் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் பாதிப்புகளுக்கு அமைய தகுந்த நட்டஈடு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.