ஸ்காபுறோவில் உபாலி குரேயின் ஞாபகார்த்த கருத்தரங்கு

Upaly Coorayஉபாலி குறேயின் ஞாபகார்த்த கருத்தரங்கு கனடா ஸ்காபுறோவில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. Canadians for Peace Sri Lankan Alliance என்ற அமைப்பு இந்நிகழ்வை ஏற்பாடு செய்தள்ளது. நவம்பர் 14ல் இடம்பெறும் இஞ்ஞாபகார்த்த நிகழ்வில்

சந்திரறட்ன பண்டார: என் நினைவில் உபாலி
கே தங்கவடிவேல்: புலம்பெயர் மக்களும் இடம்பெயர் மக்களும்.
அஜித் ஜினதாச: இன முரண்பாட்டின் காரணிகள்.
ராஜன் பிலிப்ஸ்:  அரசியல் அடையாளமும் இலங்கையின் பன்முக சமூகமும்

ஆகிய தலைப்புகளில் பேச்சாளர்கள் தம் உரையை நிகழ்த்த உள்ளனர்.

காலம்: 14 th of November 2009, 2.30 PM
இடம்: Scarborough Civic Centre 150 Borough Drive Scarborough

._._._._._.

தோழர் உபாலி குரே: தமிழ் – சிங்கள உறவுப் பாலம்

தமிழ் – சிங்கள இனங்களிடையே பாலமாகச் செயற்பட்டு வந்த தோழர் உபாலி குரே நேற்று (ஓகஸ்ட் 21 2009) அதிகாலை காலமானார். தமிழ் – சிங்கள இன உறவுகள் மிகவும் பலவீனப்பட்டுப் போயுள்ள இன்றைய சூழலில் தோழர் உப்பாலி குரேயின் மறைவு மிகவும் வேதனையானதாக அமைந்துள்ளது. தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்த உப்பாலி குரே, அந்த ஓடுக்குமுறை அரசிடம் இருந்தோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்தோ யாரிடம் இருந்து வந்த போதும் அதனைக் கண்டிக்கத் தவறியதில்லை. தனது இறுதிக் காலங்கள் வரை தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்காக குரல் கொடுத்தும் எழுதியும் வந்தவர்.

தனது இளமைப் பராயத்தில் இலங்கை சுதந்திரமடைந்த காலப் பகுதிகளிலேயே தன்னை லங்கா சமசமாஜக் கட்சியில் இணைத்துக் கொண்டவர். சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டுவந்து இனவாதத்திற்குத் தூபமிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் 1964ல் லங்க சமசமாஜக் கட்சி (LSSP) இணைந்த போது அந்த இணைவை கடுமையாக எதிர்த்தவர்களில் உபாலி குரேயும் ஒருவர். தோழர்கள் எட்மன்ட் சமரக்கொடி, பாலாத்தம்பு, காராளசிங்கம், பரராஜசிங்கம், தமிழ்ரைம்ஸ் ராஜநாயகம் ஆகியோர் அப்போது லங்கா சமசமாஜக் கட்சியில் இருந்து வெளியேறினர். இவர்கள் இணைந்து புரட்சிகர லங்கா சமசமாஜக் கட்சியை (LSSP-R) உருவாக்கினர்.

தொடர்ந்தும் தொழிற்சங்க நடவடிக்கைகளுடன் தன்னை ஈடுபடுத்தி வந்த உபாலி குரே என்றும் தான் நம்பிய இடதுசாரி அரசியலில் இருந்து விலகி இருக்கவில்லை. 1970க்களின் முற்பகுதியில் லண்டனுக்கு புலம்பெயர்ந்த உபாலி குரே லண்டனிலும் தனது அரசியல் நடவடிக்கைகளைத் தொடர்ந்தார்.

1983 இனக்கலவரத்தின் போது இலங்கையில் இருந்த உப்பாலி குரே தனித்தும் கூட்டாகவும் தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை எடுத்திருந்தார். 1983ல் மரத்துடன் கட்டி உயிருடன் தீவைக்க முயன்ற கூட்டத்திடம் இருந்து ஒரு தமிழ்ப் பையனை காப்பாற்றி இருந்தார். இலங்கையில் இடம்பெற்ற இனக்கலவரங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக தன் கருத்துக்களை முன்வைத்து வருபவர். சிங்கள தேசியவாதிகளால் துரோகியாகக் கருதப்படுபவர்களில் உபாலி குரேயும் ஒருவர்.

Upaly Coorayஇலங்கை அரசு மேற்கொள்ளும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் அண்மைக் காலமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பு அமைப்புகளால் தவறான வகையில் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் புலம்பெயர்ந்த மண்ணில் தமிழ் மக்களின் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களை முதலில் ஆரம்பித்தவர்களில் தோழர் உபாலி குரேயை மறக்க முடியாது. 1983 இனக்கலவரங்களுக்கு முன்னதாகவே இலங்கைச் சிறைகளில் அடைக்கபட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்காக இலங்கையில் உள்ள அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரும் போராட்ட அமைப்பு (Campaign for Release of Political Prisoners in Sri Lanka) தோழர் உபாலி குரே, சூரியசேகரம், டொக்டர் ஆறுமுகம், தமிழ் ரைம்ஸ் ராஜநாயம் போன்றவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வமைப்பு பின்னர் ஸ்ரீலங்கா சொலிடாரிற்றி கம்பைன் (Sri Lanka Solidarity Cambaign) என பெயர்மாற்றம் செய்யப்பட்டு 1983 இனக்கலவரத்திற்கு எதிராக அப்போது பெரும் ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் ஒழுங்கு செய்யப்பட்டது. பிற்காலங்களில் தமிழ் தேசியவாத அலையில் ஸ்ரீலங்கா சொலிடாரிற்றி கம்பைன் ஈழம் சொலிடாரிற்றி கம்பைனாக (Eelam Solidarity Campaign) மாற்றப்பட்டது.

அதன் பின்னர் கொமிற்றி போர் டெமொகிரசி அன் ஜஸ்டிஸ் (Committee for Democracy and Justice) என்ற அமைப்பை தோழர்கள் உபாலி குரே, வெஸ்லி முத்தையா, வி சிவலிங்கம், தமிழ் ரைம்ஸ் ராஜநாயகம் ஆகியோர் உருவாக்கினர். இவ்வமைப்பு தமிழ் தேசியவாத அலையைத் தாண்டி செயற்படும் பலத்தைக் கொண்டிருக்கவில்லை. அதன் செயற்பாடுகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே அமைந்தது.

லண்டனில் மாற்றுக் கருத்துச் சூழலில் நன்கு அறியப்பட்டவர் உப்பாலி குரே. ஒரு சட்டத்தரணியான இவர் எப்போதும் அவருடைய அரசியல் விடயத்திறகாகவே அறியப்பட்டவர். அவருடைய அரசியலுக்கு அப்பால் அவர் ஒரு மனிதநேயம் மிக்கவராக இருந்துள்ளார். அந்த மனித நேயப் பண்பே அவரை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலை அவர் தேர்ந்தெடுக்க காரணமானது.

Upaly Coorayஇலங்கை அரசின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான வெற்றியை பெரும்பான்மைச் சிங்களச் சமூகம் வெற்றிக் கழிப்பில் கொண்டாடிக் கொண்டிருக்கையில் அந்த வெற்றிக் கழிப்பை தோழர் உபாலி குரேயின் உறவுக்காரப் பையன் ஒருவரும் தனது பேஸ்புக்கில் (facebook) பதிவிட்டிருந்தார். அந்த வெற்றிக் கழிப்பை விமர்சித்து அந்தப் பையனின் பேஸ்புக்கில் உபாலி குரே தனது விமர்சனத்தை ஆணித்தரமாகப் பதிவு செய்திருந்தார். அதன் பின்னர் தானும் தனது இருபது நண்பர்களும் யுத்தம் பற்றிய மனநிலையை மாற்றிக் கொண்டதாக அப்பையன் தோழர் உபாலி குரேக்கு தெரிவித்துள்ளார். இருபது அல்ல இருபது மில்லியன் இலங்கை மக்களுக்கும் இந்த யுத்தம் பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்த வேண்டிய தருணத்தில் உபாலி குரேயின் மரணம் சம்பவித்துள்ளது.

சிங்கள – தமிழ் – முஸ்லீம் மக்களிடையேயான உறவுகள் மிகக் கீழ் நிலைக்கு சென்றுள்ளது. இனங்களுக்கு இடையேயான நம்பிக்கையீனம் மிகவும் செல்வாக்குச் செலுத்துகின்றது. இந்த நம்பிக்கையீனத்திற்கு தூபமிடுகின்ற வகையில் இலங்கை அரசின் பேரினவாதப் போக்கும் அதற்கு எதிரான தமிழ் தேசியவாதத்தின் போக்கும் உள்ளது. இவற்றைக் கடந்து இன உறவுகளை வளர்த்துக் கொள்வதற்கான முன்னோடிகள் அனைத்து சமூகங்களின் மத்தியிலும் பலவீனமாகவே உள்ளனர். இவர்களைப் பலப்படுத்தி இன உறவுகளைக் வலுப்படுத்தி சகலவிதமான ஒடுக்குமுறைக்கும் முற்றுப்புள்ளி வைப்பதன் மூலமே இலங்கையில் நிரந்தரமான சமாதானத்தை நிறுவ முடியும். இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான அடிப்படை இனங்களிடையேயான உறவும் புரிந்துணர்வும்.

அந்த வகையில் தனது இறுதிக் காலம் வரை ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்து வந்தவர் தோழர் உபாலி குரே. இன்று இவர் போன்ற பல பாலங்கள் தமிழ் – சிங்கள மக்களை இணைக்க அவசியப்படுகின்ற போது அவர் எம்மைவிட்டுப் பிரிந்தது மிக மிக வேதனையானது. அவருடைய இறுதி நிகழ்வுகளில் இருந்து மற்றுமொரு இன உறவுப்பாலத்தை அமைப்பதே அவருக்கு செய்யும் அஞ்சலியாக அமையும்.

மேலதிக வாசிப்பிற்கு : Upali Cooray: The Unrepentant Marxist : P Rajanayagam

._._._._._.

தோழர் உபாலி குரேயின் இறுதி நிகழ்வுகள் செப்ரம்பர் 3ல்

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக வாழ்ந்த தோழர் உபாலி குரேயின் இறுதி நிகழ்வுகள் செப்ரம்பர் 3 வியாழக்கிழமை வெஸ்ட் லண்டன் கென்சல் கிறீன் மயானத்தில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது. இந்நிகழ்வு மிகவும் குறுகிய நிகழ்வாக அமைய உள்ளது. தோழர் உபாலி குரெ இன் பூதவுடல் 12:30ற்கு சப்பலில் இருந்து புறப்பட்டு வெஸ்ட் லண்டன் கென்சல் கிறீன் மயானத்தை மதியம் ஒரு மணிக்கு முன்னதாக வந்தடைய உள்ளது.

இறுதி நிகழ்வுகளுக்கு மலர்களோ மலர் வளையங்களோ எடுத்து வர வேண்டாம் என குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்நிகழ்வின் போது யுனிசெப் சர்வதேச மன்னிப்புச்சபை ஆகிய அமைப்புகள் தங்கள் பொது நோக்கங்களுக்காக நிதி சேகரிக்க குடும்பத்தினர் தங்கள் ஆதரவை நல்கி உள்ளனர்.

Funeral Service & Cremation:
Thursday, 3 September 2009

West London Crematorium,
Harrow Road,
Kensal Green,
London W10 4RA.

The service will be brief (approx. 30 minutes). The hearse will leave the chapel at 12.30 pm and arrive at the crematorium before 1.00 pm.

Map (Crematorium) :
http://www.streetmap.co.uk/map.srf?x=523796&y=182518&z=0&sv=W10+4RA&st=2&pc=W10+4RA&mapp=map.srf&searchp=ids.srf

Parking is available at the Crematorium. The nearest underground station is Kensal Green.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 Comments

  • T Sothilingam
    T Sothilingam

    தோழர் உபாலி குரே அவர்களுக்கு எனது அஞ்சலிகள்

    கடந்த மாதம் 25ம் திகதி லண்டன் High gate ல் தோழர் உபாலி குரே அவர்களும் மற்றும் முன்னாள் LSSP தோழர்களுமாக ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தனர். சோசலிசக் கூட்டணி ஒன்று அமைப்பதற்கான சோசலிஸ்ட்டுக்களின் ஒரு study circile உருவாக்குவதற்கமான ஆரம்பக் கூட்டம் ஒன்றில் சந்தித்திருந்தனர். நானும் அக் கூட்டத்திற்கு சென்றிருந்தேன் அக் கூட்டத்திலும் இலங்கை அரசின் தவறுகளை குறிப்பாக வன்னி மக்களின் அகதி முகாம்கள் பற்றியும் அவை பற்றிய அரசின் தவறுகள் பற்றியும் பேசினார். அன்று குரே அவர்கள் மிகவம் திடகாத்திரமாகவும் உறுதியாகவுமே காணப்பட்டவர். அன்று அவர் நோய்வாய்ப்பட்டவர் போன்றோ அல்லது ஏதாவது பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டடிருந்தமைக்கான எந்த அடையாளங்களும் இருந்ததில்லை. தோழர் குரே இலங்கை சமூகத்தின் மீதிருந்த அக்கறையும் இறுதிவரை சமூகத்திற்காக செயற்பட்டதும் முன் உதாரணமானது.

    Reply
  • Sabes Sugunasabesan
    Sabes Sugunasabesan

    With great shock and deep sadness I note Upali’s passing away. I too was at the meeting on the 25th July where we discussed the formation of a Socialist Study Circle. As I entred the room he was talking about how he had to leave school at 16 due to personal circumstances and start making a life for himself. I first met Upali in the 70s when he founded the South Asia Socialist Forum in London. As then, on the 25th July 2009 too he was very spirited, engaging and inspiring. He listened attentively and responded accuratley. He challenged misconceptions. As then on the 25th July too he quoted Lenin and told stories of the Sri Lankan left. Many would have read the two letters he recently wrote to his Grand Nephew on the issues of rights of Tamils and the myths about the purity of races in Sri Lanka. In the second letter he reflects on the need for modernising the institutions of Sri Lanka. He also talked about the need for broading our reading. He talked about the relevance of Gramci’s writings in bringing about changes in different spheres of the society. His hope for the future and the trust in the young people was shining through his conversations. Upali never gave up on the hope and endevour for better society.

    Reply
  • Azan
    Azan

    உபாலி கூரேயின் கடிதம்

    புலிகள் தோற்கடிக்கப்பட்டதிலிருந்து தொடரும் ஆதிக்கவாதக் காய்ச்சல்

    அன்புள்ள பெரிய மருமகனுக்கு!

    உன்னுடைய பெயரை இங்கு தவிர்த்திருக்கிறேன். ஏனெனில் இந்தக் கடிதத்தின் நோக்கம் உன்னைத் தொல்லைப் படுத்துவதோ அன்றி உன்னைச் சிறுமைப்படுத்துவதோ அல்ல. உன்னுடைய FACEBOOK இல் வெளியாகியிருந்த வீறாப்பும் வெற்றிக் களிப்பும் கொண்ட அபிப்பிராயங்கள் எனது கவனத்தை ஈர்த்தன. அவற்றை மீளவும் நான் இங்கு சொல்ல எண்ணவில்லை. ஆனால், விடுதலைப்புலிகள் மீதான இராணுவரீதியான வெற்றியைத் தொடருகின்ற ஆதிக்கவாதக் காய்ச்சலினால் நீயும் பீடிக்கப்பட்டிருக்கிறாய் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. கடந்த சில மாதங்களாக இலங்கையில் நடந்த நிகழ்வுகள்பற்றி, உன்னைப் போன்ற கல்வியும் அறிவும் கொண்ட ஒரு இளைஞனிடம் இருந்து இதைவிட ஒரு விமர்சனப் பாங்கான பகுப்பாய்வை நான் எதிர்பார்த்திருந்திருக்கவேண்டும்.

    முதலாவதாக உன்னுடைய வீறாப்பும் வெற்றிக் களிப்பும் யதார்த்தத்தைச் சரியாகப் பிரதிபலிக்கவில்லை. “இலங்கை இராணுவம்தான் உலகின் மிக உயர்ந்த இராணுவம்” என்பது போன்ற உரிமை கோரல்கள் ஐயத்துக்கிடமின்றித் தவறானவை. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், இறுதிச் சில மாதங்களாக நடந்த இராணுவ நடவடிக்கைகளில் 6000க்கும் அதிகமான இராணுவச் சிப்பாய்கள் உயிரிழந்திருக்கிறார்கள். அதற்கும் அதிகமானவர்கள் மோசமாகக் காயம்பட்டிருக்கிறார்கள். நாங்கள் இதனை, இந்திய அமைதிப்படை இரண்டு வருடங்கள் தரித்திருந்தபோது கொண்டு வந்த இழப்புகளுடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகமானது. அந்த நேரத்தில், ஜேவிபியினாலும் இன்னும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலராலும் தூண்டப்பட்டு, அன்றைய ஜனாதிபதி பிரேமதாசாவினால் இந்திய அமைதிப்படை வெளியேற்றப்பட்டது. விடுதலைப்புலிகளின் தலைமையைச் சுற்றி வளைத்தார்கள். விடுதலைப்புலிகளை வெற்றிகொள்ளும் இறுதிப்பேரத்தினை அண்மித்திருந்தார்கள். அந்த நேரத்தில்கூட இந்திய அமைதிப்படை ஆயிரத்துக்கும் சிறிதளவு அதிகமான சிப்பாய்களையே இழந்திருந்தது.

    ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அரங்கேறுகின்ற யுத்த நிலைமைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இலங்கை பாதுகாப்புப்படைகளின் இழப்பு மிகவும் அதிகமானது என்பது தெளிவு. விடுதலைப்புலிகளை வெற்றிகொள்வதில் ஆயுதப்படைகள் ஆற்றிய பங்கை நிச்சயமாக இந்த எண்ணிக்கை எந்த விதத்திலும் குறைத்துவிடாது. தற்போதைக்கு இந்த இனப்பிரச்சினை ஒருவாறு முடிவுக்கு வந்துவிட்டதென்றதன் அடிப்படையில் அநேகமான மக்கள் நிம்மதியடைந்திருகக்கூடும். இது அனுமதிக்கப்பட முடியாதது. எப்படி இருப்பினும் இந்த ஆயுதம் தாங்கிய யுத்தத்தின் விளைவை ஒருபோது மதிப்பிடும்கால் இது வெளிப்படும். இன்னும் சொல்லப்போனால், இந்த வெற்றிக் களிப்பானது, இந்த யுத்தம் ஏற்படுத்திய எண்ணற்ற உயிர்களின், உடைமைகளின் சேதங்களையும் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிரிழப்பையும் ஏற்றுக் கொள்ளத் தவறுகின்றது.

    இரண்டாவதாக, உங்களுடைய வெற்றிக் களிப்பு, தமிழ்மக்களில் ஒரு பகுதியினரின் ஆயுதக் கிளர்ச்சிக்கு வித்திட்ட ஆழமான பிரச்சினைகளை எண்ணிப் பார்க்கத் தவறுகிறது. 1977இன் தமிழருக்கெதிரான இனக் கலவரம், 1983இன் மிகவும் பெறுமதி வாய்ந்த யாழ் பொது நுhல்நிலைய எரிப்பு, இவைகளைச் சரித்திரத்தில் இருந்து இது அழித்துவிட்டது. 1983இல் அரசினால் ஏவிவிடப்பட்ட இனக்கலவரத்தின்போது நாடு பூராவிலும் இருந்த தமிழர்கள்மீது பரந்தளவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அப்போது பல தமிழ் செயற்பாட்டாளர்கள் காணாமல் போனார்கள். பலர் கிரமமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டார்கள். இவைகள் எல்லாம் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்டவை.

    இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்றால், எங்களுக்கு இன்று தேவையானது வெற்றி குறித்த பெருந்தன்மையே அல்லாமல் வெற்றிக் களிப்பல்ல. நாங்கள் அவர்களோடு உடன்பாடு கொள்ளவேண்டிய தேவை இல்லாவிடினும் அவர்களை நோக்கி நாங்கள் நட்புக்கரம் நீட்டவேண்டும். நாங்கள் அவர்களுக்கு ஆறுதலாக இருக்கவேண்டுமேயன்றி இனிமேலும் சண்டைக்குப் போகக்கூடாது. அவர்களுடைய குறைகளை நாங்கள் கேட்கவேண்டும். அவர்களுடைய கோரிக்கைகளை அடைவதற்கு நாங்கள் அவர்களை நோக்கிச் செல்லவேண்டும். இன்னும் உங்கள் வெற்றிக் களிப்பு எங்களுடைய கலாச்சாரத்திற்கு அந்நியமானது. உதாரணத்திற்கு, துட்டகைமுனு, எல்லாளனை வெற்றி கொண்டபின், எல்லாளனுடைய சமாதிக்குச் சென்றபோது எல்லாளனுக்கு மரியாதை செலுத்துமுகமாக ஒவ்வொரு குதிரைவீரனும் அந்தச் சமாதிக்கு மண்டியிட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தான். இந்த உயர்நிலையின் வழிநின்றுதான் நாங்கள் இலங்கையின் இனப்பிரச்சினையை அணுகவேண்டும்.

    மூன்றாவதாக, இன்று விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள் என்பதால், வேறு ஆயுதக் கிளர்ச்சிகள் எதிர்காலத்தில் நடைபெறமாட்டாது என்று நாங்கள் வெகுசாதாரணமாக நம்பக்கூடாது. எந்த ஒரு மக்கள் குழுமத்தினதும் உரிமைகளை நீங்கள் நசுக்கவோ பறிக்கவோ முடியாது. தங்களுக்கு சமமான உரிமைகளும் நீதியும் கிடைக்கவில்லை என்று மக்கள் உணர்ந்து கொண்டிருக்கும்வரை அங்கு ஆயுதக் கிளர்ச்சிகளைத் தோற்றுவிப்பவர்கள் எப்போதும் இருப்பார்கள்.

    இலங்கை, தமிழ்நாடு, தென்னாபிரிக்கா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா போன்ற நாடுகளில் இருக்கின்ற கணிசமான தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள் இரண்டாம்தரப் பிரஜைகளாக இருப்பதாகவே உணர்கிறார்கள். இங்கு சொல்பவற்றில் சில மிகைப்படுத்தல்கள் இருப்பினும்கூட, முக்கியமான விடயம் என்னவென்றால், பெரிய காசுக்காரர்கள் கொண்ட ஒரு கூட்டம் எல்லா இடங்களிலும் இருக்கின்றது. இவர்கள் தங்கள் கெளரவத்தையும் உரிமைகளையும் பெறுவதற்கு வேறு ஆயுதக் குழுக்களுக்கு நிதி வழங்க ஆயத்தமாக இருக்கக்கூடும். நீங்கள் ஆயுதப் படையினால் ஒரு சிறுபான்மை இனத்தை அடக்கி வைத்திருக்க முடியாது. இதனை நீங்கள் பாலஸ்தீனப் போராட்டத்தின் வரலாற்றில் இருந்து பார்க்க முடியும். மேலான ஆயுத பலம், துப்பாக்கிப் பலம், மேற்கு நாடுகளின் ஆதரவு எல்லாம் இவர்களிற்கு எதிராக வன்மையாக இருந்தபோதிலும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வருடமும் தங்கள் நியாயத்தைப் பெறுவதற்கு மேலும் மேலும் பாலஸ்தீன இளைஞர்கள் தங்கள் உயிரைக் கொடுக்க முன்வருகிறார்கள். சுத்தமான ஆயுதம் தாங்கிய போரினால், இஸ்ரேல் ஒருபோதும் பாதுகாப்பான எல்லைகளையோ அமைதியையோ காணமுடியாது. எந்த மட்டத்திலும் எங்களால் இனி ஒரு பெரிய அழிவு யுத்தததைச் சந்திக்கமுடியாது. எனவே எங்களிற்குத் தேவையானது தமிழர்களைப் புரிந்து கொள்வதற்கான ஒரு எத்தனம். சகல சமூகங்களிற்கும் நேர்மையான சமமான உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்கிச் செயற்படல்.

    உங்கள் வெற்றிக் களிப்பு, எங்களிற்கு முன்னால் இருக்கின்ற பிரமாண்டமான கடமையின் முக்கியத்துவத்தை மதிக்கவில்லை.

    நீ உன்னுடைய FACEBOOK இல் அனுப்பியிருந்த தகவல்களின் தன்மை குறித்து நான் கவலைப்பட்டேன். விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகு நாடுமுழுவதும் பரவிய ஆதிக்கவாத ஸ்டீரியாவிற்கு ஆட்படாமல் இருக்கக்கூடிய தைரியமான ஒருவன் என்று உன்னை நான் நினைத்திருந்தேன். உன்னுடைய நேர்மையான விழுமியங்களை நீ பாதுகாக்க வேண்டும் என்றால், சிலவேளைகளில் எதிர்நீச்சல் போடுவது முக்கியமானது. உன்னுடைய பார்வைகளை நீ மறுபரிசீலனை செய்வாய் என்றும் உணர்ச்சிவசப்படாத ஒரு நிலைப்பாட்டை எடுப்பாய் என்றும் நினைக்கிறேன்.

    முடிவாக, வெற்றியிலும் தோல்வியிலும் பாரபட்சமற்ற சித்தம் பேணுவது எங்கள் கலாச்சாரத்தின் சாரம். இலாபத்திலும் நஷ்டத்திலும், செல்வத்திலும் வறுமையிலும், புகழ்ச்சியிலும் இகழ்ச்சியிலும், மகிழ்ச்சியிலும் துக்கத்திலும், பாரபட்சமற்ற சித்தமுள்ளவராக இருக்கவேண்டும் என்று எங்களுடைய கலாச்சாரமும் பண்பாடும் எங்களுக்குக் கற்பிக்கின்றது.
    அன்புடன்
    பெரிய அங்கிள்
    உபாலி கூரே
    ————

    பெறா மகனின் கடிதம்

    என் அன்புக்குரிய பெரிய அங்கிள்,
    உங்களுடைய இந்தக் கட்டுரையை என்னுடைய FACEBOOK இலும், சில இலங்கையரின் FACEBOOK இலும் பிரசுரித்தேன். என்னுடைய நண்பர்களில் 20 பேருக்கும் அதிகமானவர்கள் யுத்தம் பற்றிய தங்கள் அபிப்பிராயத்தை இதற்குப் பின் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய கட்டுரை மூலமாக அவர்களுடைய அபிப்பிராயங்ளை மாற்ற முடிந்தததையிட்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் இதைக் கட்டாயம் ஒரு பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.

    தயவுசெய்து இதுபற்றி யோசியுங்கள். இந்தக் கட்டுரையை நீங்கள் எனக்கு அனுப்பி வைத்ததற்காக நான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பிரியமுடன்
    XXXXXX
    (பெறாமகனின் பெயரை உபாலி கூரே வெளியிட விரும்பவில்லை)

    Thank you thenee

    Reply
  • abeywickrema
    abeywickrema

    Brother Asoka Weerasinghe sent a letter to THE OTTAWA CITIZEN It’s old But good to read

    Tamil Tigers get millions from Canada
    Wednesday, July 22nd, 2009
    Asoka Weerasinghe Kings Grove Crescent . Gloucester . Ontario Canada
    July 22, 2009

    THE OTTAWA CITIZEN

    Sir:

    “Tigers got millions from Canadian Tamils: report”, you said. “Intelligence experts say the now defeated Liberation Tigers of Tamil Eelam received millions a year from Canada’s Tamil Diaspora”, your news item continued.

    This is not ‘hot from the press’ news, as it is stale by over 10 years, as we knew it since the early 1990s during the Liberal era, when the then government decided to look away when the mainly Toronto and Montreal Tamils stuffed the Tamil Tiger war chest to the tune of two million Canadian dollars a month for 13 long years. How they managed to collect such funds is another intriguing story. Canadians funded one-third of the Tamil Tiger operation funds a year which saw 11 ship loads of sophisticated arms being brought in through the east coast, and the purchase of four Czech built ZLIN-143 planes which were converted into night bombers during the famous “ceasefire” period between 2002 and 2008.

    What was stunning about this episode was when the Reformers in the early 2000s challenged the Liberals in parliament for letting the Tamils collect funds for their war in Sri Lanka, the Reformers were tagged as “racists” by the Chretien and Martin Liberals.

    This was the very reason why the Tamils felt empowered to demonstrate in the thousands in April and May this year, harassing the citizenry of Ottawa and Toronto by blocking streets and expressways and waving a sea of banned Tamil Tiger terrorist flags thumbing their noses at our federal and provincial lawmakers and the police.

    Asoka Weerasinghe

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்த உப்பாலி குரே, அந்த ஓடுக்குமுறை அரசிடம் இருந்தோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்தோ யாரிடம் இருந்து வந்த போதும் அதனைக் கண்டிக்கத் தவறியதில்லை. தனது இறுதிக் காலங்கள் வரை தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்காக குரல் கொடுத்தும் எழுதியும் வந்தவர்.

    தனது இளமைப் பராயத்தில் இலங்கை சுதந்திரமடைந்த காலப் பகுதிகளிலேயே தன்னை லங்கா சமசமாஜக் கட்சியில் இணைத்துக் கொண்டவர். சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டுவந்து இனவாதத்திற்குத் தூபமிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் 1964ல் லங்க சமசமாஜக் கட்சி (LSSP) இணைந்த போது அந்த இணைவை கடுமையாக எதிர்த்தவர்களில் உபாலி குரேயும் ஒருவர்./—-
    1964 “சிங்களம் மட்டும்” சட்டத்தை குரே எதிர்த்தது சரி!,ஆனால்,இலங்கை தேசிய கட்டுமான வாதிகளால்,இலங்கைத் தமிழர்களின் “தமிழ்”,காலனித்துவத்தை பிரதிபலித்தது!,அதனால்தான் ஆதரித்தோம் என்று சில லங்கா சம்சமாஜ கட்சியினரின் கூற்றை,”என்னால் நியாயப் படுத்த முடியும்”!.மற்றபடி,திரு.குரே எடுத்த நிலைகளைப் போல “புலம்பெயர் தமிழர்கள்” எடுத்திருந்தால்,அப்பாவி தமிழ்மக்கள் மீது,”முல்லிய வாய்க்காலில்” கடைசிநேர “இலங்கை அரச அநியாயத்திற்கு” எதிராக,போரிட்டு “நானும்” “மடிந்திருந்தால்!”,அதை எண்ணி அரூபமாக இன்றும் பெருமையுடன் இருந்திருப்பேன்!.

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    தோழர் கூரே மறைவு: மகத்தான வாழ்வொன்றின் முடிவு

    தி.ஸ்ரீதரன் (பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி)

    தோழர் உபாலி கூரே அவர்கள் இந்த நாட்டில் பிறந்து சமகாலத்தில் வாழ்ந்த உன்னதாமான மனிதர்.

    ஆரம்பத்திலிருந்து இடதுசாரி தொழிலாளி வர்க்க அரசியலில் தீவிர ஈடுபாடுகாட்டிய உபாலி இனவாதத்தால் செல்லரித்துப்போயிருந்த இலங்கையின் சமூக அரசியல் தளத்தில் ஆரோக்கியமான மனிதராகப் திகழ்ந்தார். சுதந்திரமான தொழிலாளி வர்க்க இயக்கமொன்றை கட்டியெழுப்புவதில் ஈடுபாடு கொண்டிருந்தார். ஜனநாயக முற்போக்கு அணியில் அவர் நின்றிருந்தார். இலங்கை சமசமாஜக்கட்சி, வர்த்தக ஊழியர் சங்கம், புரட்சிகர மார்க்சியக்கட்சி, நீதிக்கும் சமத்துவத்துக்குமான இயக்கம், ஜனநாயகத்திற்கும் நீதிக்குமான குழு, சமூக குழுக்களுக்கான மூலவள நிலையம் ஆகிய அமைப்புக்களில் அவரது பணி வௌ;வேறு காலகட்டங்களில் இடம்பெற்றது தோழர் உபாலி கூரே அவர்கள் பன்முக ஆழுமை கொண்டவராக காணப்பட்டார்.

    1981ல், யாழ் நூல் நிலையம், ஈழநாடு பத்திரிகை, புதிய சந்தை உட்பட அன்றைய ஆட்சியாளர்களினால் எரியுட்டப்பட்ட நேரத்தில் கொழும்பிலிருந்து மனித உரிமை வாதிகள், சமூக உணர்வாளர்களை அழைத்துக்கொண்டு துணிச்சலாக புகையிரத்தில் யாழ்ப்பாணம் வந்தவர். வணபிதா போல் கஸ்பஸ், தோழர் உபாலி கூரே, குமுதினி சாமுவல், உட்பட பலரும் வந்திருந்தனர். அவர்கள் யாழ்ப்பாணத்தில் அரச பயங்கரவாதம் என்ற பிரசுரத்தையும் அச்சிட்டுக் கொண்டு வந்திருந்தனர்.

    அவர்கள் யாழ்ப்பாணம் வந்தி;ருந்த சூழ்நிலை ஆபத்து மிகுந்ததும், பதட்டமானதுமாகும். எரிதழல்கள் நெருப்பை உமிழ்ந்தபடி இருந்தபோது அவர்கள் வந்திருந்தர்கள். மிக மோசமானகால கட்டத்தில் அவர்கள் தெற்கிலிருந்து நட்புக்கரத்தை நீட்டியிருந்தார்கள்.
    அப்போது நீதிக்கும் சமத்துவத்திற்குமான இயக்கத்தில் யாழ்ப்பாணத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்தவரும் முன்னணி இடதுசாரியும், இலக்கியவாதியும் ,கல்விமானுமாகிய காலஞ்சென்ற தோழர் பரராசசிங்கம் அவர்களின் வீட்டில் கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

    யாழில் செயற்பட்ட பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள,; இயக்கங்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மிகவும் உணர்ச்சியும்- ஆவேசமும்- கோபமும் கொப்பழித்த கூட்டம் அது.

    இந்த அரச பயங்கரவாதம் அராஜகம் நடப்பதற்கு சிலமாதங்களுக்கு முன்னர் தான் 40 ஆயிரம் தொழிலாளர்கள் அன்றைய அரசினால் வேலை நீக்கம் ;செய்யப்பட்டிருந்தார்கள். இதே காலகட்டத்தில் தான் இலங்கை சமசமாஜக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான விவியன் குணவர்த்தனா பொலிசாரால் தாக்கப்பட்டிருந்தார்.

    தென்னிலங்கையின் தொழிலாளிவர்க்கமும், தீவிர ஒடுக்குமுறைக்குட்பட்டிருந்த தமிழ் மக்களும் இணந்து செயற்படவேண்டிய வரலாற்றுக் காலகட்டமாக அது அமைந்திருந்தது.
    1977 இனவன்முறை, 1979 இல் பயங்கரவாத தடைச்சட்டம,; 8 யாழ் இளைஞர்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டது ,சிலரின் சடலங்கள் பண்ணைக்கடலில் மிதந்தது, 1981 இவ்;வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் வேலையிலிருந்து துரத்தியடிக்கப்பட்டது, யாழ் நூல் நிலையம,; ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம், யாழ் புதியசந்தை, யாழ் பா.உ யோகேஸ்வரனின் வீடு தீக்கிரையானது. அரஜாகம் தலை விரித்தாடிய காலமது.

    இக்காலாத்தில் தோழர் உபாலி கூரே தொழிலாளவர்க்க, ஒடுக்கப்பட்ட தேசிய இன ஒற்றுமைக்காக முன்னணியல் நின்றார். சட்டத்துறையில் பரிஸ்டரும் விரிவுரையாளருமான தோழர் உபாலி ஸ்பானிய பெண்மணியை திருமணம் செய்தவர். அவருக்கு இரண்டு ஆணும் ஒரு பெண்ணுமாக மூன்று குழந்தைகள். ஆங்கிலம், ஸ்பானிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.

    லண்டனில் குடியேறிய தோழர் உபாலி சர்வதேச தொழிலாளவர்க்க இயக்கத்துடனும், புரட்சிகர சத்திகளுடனும், இலங்கையின் இடதுசாரி இயக்கம,; முற்போக்குச் சத்திகள் மற்றும் சிவில் சமூகத்தினருடனும் உறவை இடையறாது பேணி வந்தவர்.

    அவ்வப்போது எமது நாட்டின் தேசிய சமூக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் தொடர்பாக கட்டுரைகளையும், கடிதங்களையும், புத்தகங்களையும் எழுதியவர். எழுதப்படுபவை தமிழ் சிங்கள மொழிகளில் மக்களைச் சென்றடையவேண்டும் என்று கரிசனை கொண்டவர். உன்னதமான ஒரு மனிதாபிமானி. சுதந்திரத்திற்காகப் போராடுபவர் மனித குலத்தின் மீதான அன்பினால் வழி நடத்தப் பட்டவேண்டும் என்று எப்போதும் திடமாக நம்பியவர்.

    1983 கலவரத்தை தொடர்ந்து பழியை இடதுசாரிகள் மீது ஜே. ஆர் அரசு சுமத்திய போது அதற்கெதிராக குரல் கொடுத்தவர்.

    ஈபிஆர்எல்எப் உடனான அவரது உறவு நீண்டதும் பாரம்பரியம் மிக்கதுமாகும். தோழர் பத்மநாபா உட்பட உமது தோழர்களுடன் நெருங்கிய தோழமை ப+ண்டிருந்தவர். 1980 களின் பிற்பகுதியில் இலங்கையில் மனித உரிமை நிலவரங்கள் மோசமாக இருந்த காலத்தில் தோழர் சாந்தன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா உட்பட பல மனித உரிமை ஜனநாயக வாதிகளுடன் இணைந்து மனித உரிமைகளுக்காக செயற்பட்டவர்.

    தோழர் பத்மநாபா நினைவுதினக் கூட்டங்கள், மறைந்த தோழர்களை நினைவு கூரும் கூட்டங்கள், அதிகாரப்பகிர்வு பற்றிய கருத்தரங்குகள் பலவற்றிலும் அவர் உரையாற்றியிருக்கிறார். எமது தோழர்களின் பொருளாதார நிலை பற்றிய கவலைகள் அவருக்கிருந்தன. அவர்கள் பொருளாதார ரீதியாக குறைந்தது சுயாதீனமாக வாழ்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும், என்று எப்போதும் வலியுறுத்தினார். அதற்கான ஆலோசனைகளையும் வழங்கி வந்தார். சமூக அரசியல் செயற்பாடுகளில் அவ்வப்போது அவர் பெறுமதியான ஆலோசனைகளை வழங்கினார். கணனித்தொழில் நுட்பம் கிராமமட்டதிற்கு சாதாரணமக்களுக்கு சென்றடைய வேண்டும் என்று பிரக்ஞை பூர்வமாகச் செயற்பட்டார். சுனாமி வந்து எமது கிழக்கு கரையின் வாழ்வழிந்தபோது அங்கும் இனநல்லுறவின் குறியீடாக அவர் திகழ்ந்தார்.

    அவர் எப்போதும் முழுமையான மனிதராக வாழ்வதற்கான போராட்டதில் ஈடுபட்டிருந்தார்.
    தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் அங்கீகரிக்கபட வேண்டும். இலங்கை பல இனமக்களின் ஐக்கிய தேசமாக கட்டியெழுப்பப்பட வேண்டும். சமூக அநீதிகள் ஒழியவேண்டும், நீதியான சமூக அமைப்பொன்று ஸ்தாபிக்கப்டவேண்டும் என்பதில் உறுதியாக நின்றிருந்தார். மலையகத்தொழிலாளர்களின் நலன்கள்- பெண் ஒடுக்குமுறை, சாதி ஒடுக்குமுறை உட்பட அனைத்து சமூக அநீதிகளும் ஒழிய வேண்டும் என்று அவர் இதய பூர்வமாகச் செயற்பட்டார்.

    சமூக சமத்துவமும் மக்களின் வாழ்வில் பிரகாசமும் நிலவும் எழிலார்ந்த இலங்கையை அவர் கனவு கண்டார்.

    சமூக பொருளாதார அபிவிருத்திப்பணிகளிலும் அவரது ஈடுபாடு ஆழமாக இருந்தது. தொழிலாளர்களும், வறியமக்களும் சொந்தக்காலில் நிற்பதற்கான இடையறாத தேடலில் அவர் ஈடுபட்டிருந்தார்.

    நாடளாவிய அளவில் ஐக்கியப்பட்ட, மக்கள் சமூகங்களின்; தனித்துவங்களை ஏற்றுக்கொண்ட புதிய தொரு அரசியல் பண்பாடு கட்டியெழுப்பபடவேண்டும் என்று அவர் கனவு கண்டார். இனவாதத்தின் செல்வாக்கிற்கு அடிபணிய வேண்டாம் என்று தனது மருமகனுக்கு வினயமாக எழுதிய கடிதங்களும் அவரது மருமகன் அவருக்கு எழுதிய கடிதங்களும் அவரது மரணப்படுக்கைக்கு முன்னர் வெளிவந்திருந்தன. அவை இலக்கியப் பெறுமானமும் சரித்திரப் பெறுமானமும் மிக்கவை. யுத்தவெற்றிக் ;கொண்டாட்டங்;கள் மூலம் தமிழ் மக்களின் மனங்களைக் காயப்படுத்துவது தார்மீகப் பண்பல்ல ,தமிழ் மக்களின் மனக்காயங்கள் ஆற்றப்படவேண்டும் என்பதை அவர் பிரதானமாக சுட்டிக்காட்டியிருந்தார். இத்தகைய மனிதர்களால் தான் உலகம் நம்பிக்கையுடன் இயங்குகிறது.

    மிகவும் இக்கட்டான காலத்தில் தோழர் உபாலி போன்ற உன்னதமான மனிதரின் இழப்பு ஈடுசெய்ய முடியாது.

    எங்கே துன்புறும்; மனிதர்கள் இருந்தார்களோ அவர்களின் பக்கமே தோழர் உபாலியின் மனம் நினறிருந்தது.

    நன்றி தோழரே உமக்கு எம் பிரியாவிடை!
    70 ஆணடுகள் இவ்வுலகில் வாழ்ந்த நீர் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உம் இதயத்தை நல்கியிருந்தீர்.

    எங்கள் இதயங்கள் கனக்கின்றன. கண்கள் பனி;கின்;றன. .போய் வாருங்கள் தோழரே!

    அன்னாரின் அன்பு துணைவியாருக்கும் குழந்தைகளுக்கும் எம் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    தி.ஸ்ரீதரன்
    பொதுச்செயலாளர்
    பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

    Reply
  • பல்லி
    பல்லி

    எவரும் இறந்தபின் புகழ்பாடுவதில் வல்லவர்கள் நாம், ஆனால் அவர்கள் இருக்கும் போதோ அல்லது செயல்படும் போதோ அவர்களை பின்பற்றவோ அல்லது அவர்களுடன் இனைந்து செயல்படவோ நினைப்பதில்லை, ஏற்று கொள்வதும் இல்லை; இது தமிழரின் சாபமே, அரசின் அற்ப சலுகைக்களுக்காக அவர்களை ஏற்று கொண்டு இரவு பகலாக செயல்படும் அரசியல்வாதிகள் ஏன் தோழர் கூரே போன்ற சமூக அக்கறை உள்ள மனிதரை முன்னிறுத்தி செயல்படுவதில்லை, எனிமேலாவது கூரே போன்றோரை இறப்புக்கு பின் புகழாமல் அவர்கள் வாழும் காலங்களில் அவர்கள் செயல்பாடுகளுக்கு அனுபவத்துக்கு மதிப்பளித்து அவர்களுடன் இனைந்து அனைத்து தர இனமக்களும் அமைதியாய் வாழ முயற்ச்சிப்போம்;

    கூரே போன்ற உன்மையான அரசியல்வாதிகளின் மறைவு ஏழைமக்கள் அடக்கு முறையில் வாழும் மக்களுக்கு பேரிழப்பே ஒரு உன்மையான சமூக சேவகருக்கு பல்லியின் கண்ணீர் துளிகள், அவரது ஆத்மா சாந்தியடைய அவரை போன்ற சமூக சேவகர்களை இனம் காண்ப்போம் செயல்படுவோம்;

    Reply
  • sutha
    sutha

    பிரபல சமூகசேவையாளரும் சமாதான செயற்பாட்டளாரும் ரிபிசி இயக்குனர்களில் ஒருவரும் பாரிஸ்டருமான உப்பாலி குரோ அவர்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை லண்டன் மருத்துவமனையில் காலமானார்.
    Posted by TBC in செய்திகள் on 21-08-2009

    இவர் ஒரு இடதுசாரி சிந்தனையாளர். இலங்கையில் உள்ள இடதுசாரி தலைவர்களுடனும் தொழிற்சங்கவாதிகளுடனும் முற்போக்கு சக்திகளுடனும் சர்வதேச ரீதியாக நெருங்கிய தொடர்பினை கொண்டிருந்தவர்.

    ஒடுக்கபட்ட மக்களுக்காகவும் தமிழ்பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துn வந்ததுமல்லாமல் அது தொடர்பாக பலகட்டுரைகளை த ஜலண்ட. ஏசியன் ரிபுன.; லங்கா கார்டியன.; தமிழ் வீக்.ஆகிய இணையத்தளம் போன்றவற்றிலும் தொடர்ச்சியாக இனவாதத்திற்;கு எதிராக கருத்துக்களை வெளியிட்டுவந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    அண்மையில் யுத்த வெற்றியினை புகழ்ந்து அவருடைய பெறாமகன் ஒருவர் உப்பாலி குரோக்கு எழுதிய கடித்திற்கு யுத்தத்தின் தாக்கங்களையும் அதன் ஊடாக வேதனை அனுபவித்த தமிழ்மக்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்தி எழுதிய பதில் கடிதத்தினை பிரபல பத்திரிகையாளர் டி.பி.எஸ் ஜெயராஜ் தமது இணையத்தளமான தமிழ் வீக் இணையத்தளத்தில் வெளியிட்டதன் ஊடாக நுற்றுக்கணக்காண இளைஞர்கள் வெளியிட்ட கருத்துக்கள் உப்பாலி குரோக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்திருந்து.

    இவர் லங்கா சமசமாஜ கட்சியின் ஆரம்பா கால உறுப்பினருமாவார் அத்தோடு அமரார்களான சிறி சபாரத்தினம் பத்மநாபா போன்றவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடியவர்

    இதேவேளை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னியின் உடன் நெருங்கிய தொடர்பினை கொண்டிருந்தவர் அவ் அமைப்பின் முக்கியஸ்தரான தோழர் தம்பாவுடன் இறுதிநேரம்வரை உரையாடியவர் என்பதும் குறிப்பிடதக்கது

    அவரின் சேவைகளை தமிழ்ச்சமூகம் என்றும் நினைவில் கொள்ளும் என்பதே உண்மை எனக் கூறிக்கொண்டு

    அண்ணார்க்கு எமது கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்து கொள்வதோடு அண்ணாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த அனுதாபாங்களையும் தெரிவித்துகொள்கிறோம.;
    ஈமக்கிரிகைகள் தொடர்பாக பின்னர் அறியத்தரப்படும்

    Reply
  • Marzook
    Marzook

    Upali was one among the very few Sri Lankans who are honest to the cuases that they stand for. Upali never compromised his policies for perks or positions; never surrendered himself to any power; he stood for those who were suffering. Let him be rememberred as an example for principled thinking.

    Reply
  • Jeevan
    Jeevan

    Azan நீங்கள் பதிவு செய்திருக்கும் “புலிகள் தோற்கடிக்கப்பட்டதிலிருந்து தொடரும் ஆதிக்கவாதக் காய்ச்சல்” என்ற கட்டுரை 11-06-2009 அன்றே புகலியில் அவர்களின் மொழிபெயர்ப்புடன் பதிவிட்டிருக்கிறார்கள்.

    Reply
  • transcurrents
    transcurrents

    Comrade Upali Cooray dedicated his life to protection of human rights : by Lionel Bopage

    I join with many comrades and friends, who are saddened by the passing away of Comrade Upali Cooray. He dedicated his life to the protection of human rights of the working people. He always persevered to preserve and enhance those rights against individuals, groups and parties that violated them. He always struck me as a simple man who was always politically conscious.

    Upali Cooray
    I first heard of Comrade Upali when I was behind bars in the seventies, convicted for conspiring and waging war against the Queen’s government in Sri Lanka. Formerly, he was a member of the LSSP and left it in 1964 when its leadership decided to form a bourgeois coalition with the SLFP. Comrade Upali was an active member of the International Marxist Group in London and worked together with the comrades of the Ginipupura Group agitating for the release of the political prisoners.

    My recollection is that he came back to Sri Lanka at the end of the seventies and worked with Comrade Bala Tampoe as a member of the Revolutionary Marxist Party. He visited Comrade Rohana Wijeweera and me when we were in prison and later after our release. When I left the JVP in 1984, Comrade Upali with Comrades Gunasena Mahanama and Professor Sumanasiri Liyanage met me at the GCSU office in Colombo to discuss the political situation in the country.

    I remember with pleasure his response to several comments made on Letter to a Grandnephew: Building a new society in Sri Lanka based on equality and justice, which expressed his genuine commitment for a fair, just and better Sri Lanka. A Sri Lanka where all its residents could take part and enjoy life as equals with dignity and security. I admit I did not agree with some of the positions he took. Nevertheless, I never had any doubt that he meant well. For his intention, like all his social activism, was for achieving a just and lasting peace in the island.

    I met him last when I was in London a few years back. We had a fruitful discussion about the ways to rid Sri Lanka of the terror being practised. We also discussed the political means on how to achieve a fair and just solution to the national question in Sri Lanka. He had been unwell for some time but this did not deter him from being engaged and active.

    Even though we moved along different paths and followed different strategies we had the same cherished secular ideal of protecting and upholding the democratic rights of working people irrespective of their socio-cultural background.

    As a fellow traveller on the path to social justice, I take this opportunity to pay tribute and to un-categorically state, how much I and other activists on the road to justice and equity will miss Upali and his immeasurable contribution.

    My heartfelt and deepest sympathy go out to his wife Sylvia and children Alex, Samantha and Jasmine, friends and loved ones. All I can say is that I share their grief.

    In the end keeping Comrade Upali’s fight for justice, fairness, equity and democracy alive will be the best way to remember and honour him and his legacy.

    transcurrents.com

    Reply
  • mathy
    mathy

    “மனநோயாளியான இளைஞனை எவ்வித விசாரணைகளும் இன்றி அடித்துக் கொலை செய்த மோசமான வன்முறைச் சம்பவம் இலங்கையர் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.”இது தேசத்தின் தலைப்பு. ஸ்காபரோவை மையமாகக் கொண்டு இயங்கும் எந்த அமைப்பும் இலங்கை மனித உரிமை மீறல்களை கண்டனம் செய்யவில்லை. ஞாபகார்த்த கருத்தரங்குகளை மாத்திரம் நடாத்திக் கொண்டு காலத்தை கடத்துகின்றார்கள்.

    Reply