செய்திகள்

செய்திகள்

செய்திகள்

40 ஆயிரம் ஏக்கரில் தென்னைப் பயிர்ச்செய்கைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு – சாவகச்சேரியில் அநுர தெரிவிப்பு

40 ஆயிரம் ஏக்கரில் தென்னைப் பயிர்ச்செய்கைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு – சாவகச்சேரியில் அநுர தெரிவிப்பு

வட மாகாணத்தில் 40 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தென்னைப் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு வரவு ,செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சாவகச்சேரியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,
வட மாகாணம் சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்குகிறது.2025 ஆம் ஆண்டு இலங்கைக்கு அதிக சுற்றுலாப்பயணிகள் வருகை தரும் ஆண்டாக பதிவாகும்.சுற்றுலா பயணிகள் வட மாகாணத்துக்கு வருகை தர வேண்டும். அதற்கான திட்டத்தை நாம் தயாரிப்போம். மக்களின் பொருளாதாரம் வலுப்படுத்தப்பட வேண்டும். அதுவே எமது பிரதான இலக்காகும். வட மாகாணத்தில் உள்ள கிராமப்புற வீதிகளை புனரமைப்பதற்கான நிதியை ஒதுக்குவோம்.புதிய திட்டங்களை அமைப்பதற்கும் நாம் தயாராக உள்ளோம்.

இனி மக்களுக்கு இனவாதம் தேவையில்லை. எந்தவொரு இனவாதத்துக்கும் இலங்கையில் இதன் பின்னர் சந்தர்ப்பம் இல்லை. இந்த நாட்டில் அரசியல் பொருளாதார சமூக கலாசார ரீதியாக பல மாற்றங்களை கொண்டு வருவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். மக்களுடன் பிணைப்பைக் கொண்ட அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம். மக்களின் சொத்துக்களை வீண் விரயம் செய்யாத அரசியல் கலாசாரத்தை தோற்றுவிப்போம். இனவாதத்தின் ஊடாக நாட்டினால் முன்னோக்கி செல்ல முடியாது. ஒற்றுமையின் மூலமே நாட்டினால் முன்னோக்கி செல்ல முடியும் என்றார்.

 

காணாமலாக்கப்பட்டோருக்கு இழப்பீடு, காணி இழந்தோருக்கு நட்டஈடு – அர்ச்சுனாவுடைய கருத்தால் ஆடிப்போன தமிழ்த்தேசியவாதிகள்

காணாமலாக்கப்பட்டோருக்கு இழப்பீடு, காணி இழந்தோருக்கு நட்டஈடு – அர்ச்சுனாவுடைய கருத்தால் ஆடிப்போன தமிழ்த்தேசியவாதிகள்

காணாமலாக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தெரிவித்தமை சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

காணாமலாக்கப்பட்டோருக்கான உதவித்திட்டங்களை தொடர்ந்து வழங்குமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். இதன்போது குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, என்னுடைய அப்பா இலங்கை பொலிஸில் வேலைசெய்து தமிழீழ காவல்துறையில் சேவையாற்றி 2009இல் காணாமலாக்கப்பட்டார். காணாமலாக்கப்பட்டோருக்கான நிலையம் ஸ்தாபிக்கப்பட்டு பெருமளவான நிதி ஒதுக்கப்படுகிறது. அதனால் எந்தப் பிரயோசனமும் இல்லை. காணாமலாக்கப்பட்டோர் உண்மையில் இருக்கின்றார்களா இல்லையா என்பதை சொல்லவேண்டும். காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தில் வேலைசெய்த பெண்மணி சுவிஸில் அரசியல் தஞ்சம் தஞ்சம் கோரியுள்ளார். இவ்வாறான விடயங்களுக்கு இதைப் பயன்படுத்தாமல் எங்களுடைய சகோதரங்கள், அப்பா, அம்மா இருக்கின்றார்களா இல்லையா என்பதை தெரிவித்துக்கொண்டு அவர்களுக்குரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றார்.

இதேவேளை தையிட்டி விகாரையை இடிப்பது முட்டாள்தனமானது அதற்குரிய நட்ட ஈட்டை வழங்கி விகாரைக்குரிய காணி பாதிக்கபட்டோருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் அர்ச்சுனா முன்வைத்திருந்தார்.

தற்போது இவை சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளன. காணாமலாக்கபட்டோருக்கு நீதிகோரியும், பௌத்தமயமாக்கல் காணிஅபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தமிழ்த்தேசியவாதிகள் தொடர்போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தமிழ்த் தேசியப்பரப்பில் இவற்றைவைத்தே பெரும்பாலானோர் அரசியல் நடத்துகின்றனர். இந்தநிலையில் அர்ச்சுனாவின் கருத்து அவர்களுடைய அரசியல் இருப்பை பாதிக்கும் என்பதால் அர்சுனாவை சமூக ஊடகங்களில் வசைபாடுகின்றனர். அதேவேளை அர்ச்சுனாவுடைய கருத்து யதார்த்தத்திற்கு ஏற்புடையது என்று அவரது கருத்தைப் பலர் ஆமோதித்து வருகின்றனர்.

ஜனாதிபதி மாளிகையில் என்ன செய்யப் போகின்றீர்கள் ? முன்மொழிவை வையுங்கள் காணியைத் தருகின்றேன் ஜனாதிபதி அனுர

ஜனாதிபதி மாளிகையில் என்ன செய்யப் போகின்றீர்கள் ? முன்மொழிவை வையுங்கள் காணியைத் தருகின்றேன் ஜனாதிபதி அனுர

மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்தாக வேண்டும் எனவும், வடக்கின் காணிப்பிரச்சினை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு, வெகு விரைவில் மக்களுக்கு மீண்டும் காணிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் அபிவிருத்திக்காக அல்லது பாதுகாப்புக் காரணங்களுக்காக நாட்டின் எந்தப் பகுதியிலும் காணிகளை அரசாங்கம் சுவீகரிக்க முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்தக் காணிகளுக்குப் பதிலாக கட்டாயமாக மாற்று காணிகளை மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ். மக்களுக்கான மிக முக்கியமான திட்டங்களுக்காக யாழ். ஜனாதிபதி மாளிகையை முற்றாக விடுவிக்கத் தயாரெனவும், அதற்கான உரிய முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

 

2.5: போரினால் இடம்பெயர்ந்த குடும்பங்கள் இன்னும் வடமாகாணத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், இது குறித்து ஆராய்ந்து விரைவான தீர்மானங்களை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

பொலிஸ் சேவையில் இணையுங்கள் ! 2000 பேருக்கு வேலைவாய்ப்பு !

பொலிஸ் சேவையில் இணையுங்கள் ! 2000 பேருக்கு வேலைவாய்ப்பு !

பொலிஸ் சேவையில் 2000 தமிழ் இளைஞர்களை இணைத்துக்கொள்ள தாயாராக இருப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க நேற்று வல்வெட்டித்துறையில் தெரிவித்துள்ளார்.

பொலிஸ்துறையில் தமிழர்கள் குறைவாக உள்ளனர். மக்களுக்கு சேவையை வழங்க அந்த மக்களின் மொழியில் கதைக்கும் அதிகாரிகள் தேவை. இந்தப் பகுதிகளில் பாரியளவில் போதைவஸ்துப் பாவனை விஸ்தரிப்பு நடக்கின்றது. இளைஞர்கள் போதைவஸ்துக்கு பெருமளவில் அடிமையாகி வருகின்றனர். இதை நிறுத்துவதற்கு சக்தி வாய்ந்த திட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். அதற்கு உங்கள் ஒத்துழைப்பு தேவை என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தக் கடற்பரப்பு உங்களுடையது. மீன் பிடிக்கும் உரிமையிருப்பது உங்களுக்கு!” வல்வையில் ஜனாதிபதி

இந்தக் கடற்பரப்பு உங்களுடையது. மீன் பிடிக்கும் உரிமையிருப்பது உங்களுக்கு!” வல்வையில் ஜனாதிபதி

இந்தக் கடற்பரப்பு உங்களுடையது. மீன் பிடிக்கும் உரிமையிருப்பது உங்களுக்கு. அந்த உரிமையை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு எங்களுக்கு சில காலம் வழங்குங்கள். சட்டவிரோத ரோலர்களைப் பயன்படுத்தி எங்களது மீனர்களை அச்சுறுத்துவதை கட்டாயம் நிறுத்தப்படும் என்றார் ஜனாதிபதி அனுர. வல்லையில் நடந்த தேசிய மக்கள் சக்தியின் கட்சிக் கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

வடக்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் படிப்படியாக தீர்க்கப்படும் எனவும் அதற்குரிய கால அவகாசத்தை வழங்குமாறும் அனுரகுமார திசநாயக்க கோரியுள்ளார். வல்வெட்டித்துறையில் நேற்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மக்கள் ஒன்றுகூடலில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்இ நீண்ட காலமாக வடமாகாணத்தில் மீனவர்களுக்கு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவை தீர்க்கப்பட வேண்டும். நாங்கள் இந்திய அரசாங்கத்திடம் பல தடவைகள் பேச்சுவார்த்தை நடாத்தினோம். கடற்பரப்பின் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு கடற்படைக்கு கட்டளையிட்டுள்ளோம். படிப்படியாக மீனவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்போம் எனவும் ஜனாதிபதி அனுரா உறுதியளித்தார்.

கிளிநொச்சியில் பொலிஸார் கள்ளச் சாராயம், கள்ளமரம் கடத்துவது, கள்ளமண் அகல்வதற்கு உடந்தை ? அமைச்சர் பிமல் ரத்நாயக்க

கிளிநொச்சியில் பொலிஸார் கள்ளச் சாராயம், கள்ளமரம் கடத்துவது, கள்ளமண் அகல்வதற்கு உடந்தை ? அமைச்சர் பிமல் ரத்நாயக்க

கிளிநொச்சியில் பொலிஸார் கள்ளச்சாராயம், கள்ளமரம் கடத்துவது, கள்ளமண் அகல்வதற்கு எல்லாம் உடந்தையாக இருக்கின்றனர், தமிழரசுக் கட்சியின் பா உ எஸ் சிவஞானம் சிறிதரனின் இடது வலது கரங்களும் இவற்றுடன் தொடர்புற்றிருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்து வந்தார். தற்போது அவர் பொலிஸார் மீது வைத்த குற்றச்சாட்டுக்களை யாழ் பா உ க இளன்குமரனும் முன்வைத்துள்ளார். இதே குற்றச்சாட்டுக்களை அமைச்சர் பிமல் ரத்நாயக்காவும் கிளிநொச்சி பொலிஸார் மீது வைத்துள்ளார்.

கிளிநொச்சி – இராமநாதபுரம், வவுனியா – ஈச்சங்குளம் பகுதி பொலிஸாரின் செயற்பாடுகளால் பொலிஸ் நிலையங்களை மூடுமாறு மக்கள் விரக்தியில் தன்னிடம் தெரிவித்ததாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்ட சட்டவிரோத வியாபாரங்களை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றம் சாட்டியிருந்தார்.

அதன்போது கருத்து தெரிவித்த பிமல் ரத்நாயக்க, வடக்கில் விரும்பத்தகாத செயற்பாடுகளால் பொலிஸார் மீது நம்பிக்கை இழந்து விரக்தி நிலையில் உள்ளனர். சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தால்இ உடனேயே சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு அந்த தகவல் செல்கின்றன. தமது பகுதியில் பொலிஸ் நிலையம் இருந்தும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் எதற்காக பொலிஸ் நிலையம், அதனை மூடிவிடுங்கள் என என்னிடம் தெரிவித்தனர் என்றார்.

அதற்கு பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் பதில் அளிக்கையில்இ கீழ்நிலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது நம்பிக்கையீனம் இருந்தால், மேலதிகாரிகளுக்கு தகவல் வழங்க முடியும் என குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்காவில் இருந்து 3000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்படலாம் !

அமெரிக்காவில் இருந்து 3000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்படலாம் !|

டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான புதிய அமெரிக்க நிர்வாகத்தால் நாடு கடத்தப்படவுள்ள சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களில் 3இ065 இலங்கையர்களும் அடங்குவதாக அந்நாட்டின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப்பிரிவு அறிவித்துள்ளது.

இந்த வகையில், உலகின் பல நாடுகளில் இருந்து வந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 14 இலட்சத்துக்கு அதிகமானோரின் பெயர்ப் பட்டியலை புதிய அமெரிக்க நிர்வாகம் தயாரித்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான இறுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வெளிநாட்டினரின் எண்ணிக்கையும் இதில் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு 9 குழந்தைகள் மரணம் ! ஆண்டுக்கு 3,300 குழந்தைகள் மரணிக்கின்றன !

ஒரு நாளைக்கு 9 குழந்தைகள் மரணம் ! ஆண்டுக்கு 3,300 குழந்தைகள் மரணிக்கின்றன !

இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வடைந்துள்ளதுடன்இ பிறந்து ஒரு வயதை அடைவதற்கு முன்னரே சுமார் 2,500 குழந்தைகள் வருடாந்தம் உயிரிழப்பதாக சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் சமூக வைத்திய நிபுணர் கபில ஜயரத்தன தெரிவித்தார்.

இதன்போது வைத்தியர் மேலும் தெரிவிக்கையில்இ வருடாந்தம் 3 இலட்சத்து 13 ஆயிரம் தாய்மார்கள் கர்ப்பம் தரிப்பதுடன்இ 2 இலட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பிறக்கின்றன. எனினும் அவ்வாறு பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் நல்ல தேகாரோக்கியத்துடன் பிறப்பது பிறப்பது இல்லை. ஆண்டு தோரும் 5 வயதுக்கும் குறைந்த 3,300 குழந்தைகள் உயிரிழக்கின்றனர். கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது பிறப்பு வீதம் குறைவடைந்து செல்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

பொருளாதார சுமை, கருத்தரித்தல் தொடர்பில் போதியளவான தெளிவின்மைஇ வாழ்க்கை சூழல் போன்றன இதற்கு காரணமாக உள்ளன. மேலும் இந்நாட்டின் சுகாதார சேவையின் தரம் வீழ்ச்சி கண்டிருப்பதும் இதில் தாக்கம் செலுத்தியுள்ளது.

மேலும் ஊனக் குறைபாட்டுடன் கூடிய கருக்கலைப்புக்கு இந்தியா போன்ற நாடுகள் அனுமதி வழங்கியுள்ளன. எனினும் இலங்கையில் அச்சட்டத்தை கொண்டு வருவதற்காக சுமார் 20 வருடங்களாக போராடி வருகின்ற போதிலும்இ இதுவரை சாத்தியப்படவில்லை என்றார்.

ஜனாதிபதி அனுரவின் யாழ் விஜயம் மக்கள் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்ய முயற்சி !

ஜனாதிபதி அனுரவின் யாழ் விஜயம் மக்கள் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்ய முயற்சி !

ஜனாதிபதி அனுராவின் யாழ் விஜயத்தின்போது யாழ் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான விடயங்கள் கேட்டறியப்பட்டு அதற்கான செயற்திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களுடைய போக்குவரத்தப் பிரச்சினைக்கு பஸ்களை வழங்குவது, தெருக்களைப் புனரமைப்பது, மருத்துவமனை வெற்றிடங்களை நிரப்புவது, யாழ் மக்களுடைய குடிநீர் பிரச்சினை, பொலிஸாரின் குற்றச்செயல்களுக்குத் துணைபோகும் நடவடிக்கை எனப் பல்வேறு விடயங்களும் பேசப்பட்டது. தீர்வுகளும் முன்வைக்கப்பட்டது.

ஜனாதிபதி அநுரவின் தலைமைத்துவத்தின் மீது வடக்கு மக்கள் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் வைத்திருக்கின்றார்கள் என வடக்கு மாகாண ஆளுநர் ஆளுநர் நா.வேதநாயகன் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.

வடக்கு மக்கள் சார்பாக ஜனாதிபதியை வரவேற்பதாகக் குறிப்பிட்ட ஆளுநர்,  ஜனாதிபதியின் தலைமைத்துவத்தில் இந்தப் பிரதேசத்தில் மிகப் பெரிய மாற்றம் நடைபெறும் என எதிர்பார்ப்பதாகவும்,  இந்தப் பகுதி மக்கள் அவர் மீது அதற்காக நம்பிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

டொலர் வேண்டாம் என்றால் அமெரிக்காவுடன் உள்ள உறவையும் துண்டித்துக் கொள்ளுங்கள் – டிரம்ப்

டொலர் வேண்டாம் என்றால் அமெரிக்காவுடன் உள்ள உறவையும் துண்டித்துக் கொள்ளுங்கள் – டிரம்ப் பிரிக்ஸ் நாடுகளுக்கு எச்சரிக்கை !

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க டொலருக்கு பதிலாக மற்றொரு நாணயத்தை உருவாக்கவோ அல்லது ஆதரிக்கவோ கூடாது என இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் உறுப்பு நாடுகளை எச்சரித்துள்ளார்.

அமெரிக்க டொலருக்கு மாறாக செயல்படும் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும். பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் புதிதாக எந்த நாணயத்தையும் உருவாக்கக் கூடாது. ஏற்கனவேஇ இருக்கும் வேறு நாட்டு நாணயத்தையும் பயன்படுத்த கூடாது என தெரிவித்துள்ள டிரம்ப், சர்வதேச வியாபாரங்களுக்கு பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டொலரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவர்களுக்கு வேறொரு ஏமாளி கிடைத்தால் அவர்களுடன் வியாபாரம் செய்யட்டும். டொலர் வேண்டாம் என்றால் அமெரிக்காவுடன் உள்ள உறவையும் துண்டித்துக் கொள்ளுங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளைஇ இலங்கை BRICKS அமைப்பில் இணைவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்திஇ 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் BRICKS மற்றும் புதிய அபிவிருத்தி வங்கியில் உறுப்புரிமைக்காக விண்ணப்பித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.