செய்திகள்

செய்திகள்

செய்திகள்

அமெரிக்க பிரஜாவுரிமை விவகாரம்: சரத் பொன்சேகாவுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு

sa.jpgஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு எதிராக நேற்று உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய மாற்று முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சட்டத்தரணி சரத் கோங்ஹாகே இந்த அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கை தாக்கல் செய்துள்ளார். அமெரிக்க பிரஜையாக இருக்கும் சரத் பொன்சேகா, ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்திருப்பது அடிப்படை உரிமை மீறல் என அறிவிக்கும்படி கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சரத் பொன்சேகா இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய தகுதியற்றவரென தெரிவிக்குமாறு கோரி வேட்புமனு தாக்கல் செய்யும் போது தாம் எதிர்ப்பு தெரிவித்தவேளை, அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனவும் அவர் இதில் குறிப்பிட்டுள்ளார்.

இவ் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது சட்டத்துக்கு முரணானது எனத் தெரிவிக்குமாறும் சரத் பொன்சேக்கா இதற்கு தகுதியற்றவரென தெரியப்படுத்துமாறும் சரத் கோங்ஹாகே இந்த மனுவில் கேட்டுள்ளார்.

தமது மனு மிகவும் முக்கியமானது என்பதால் கூடிய விரைவில் இதுபற்றி விசாரணை செய்து முடிக்குமாறு மனுதாரர் கேட்டுள்ளார்.

சரத் பொன்சேக்காவின் வேட்புமனு வழங்கப்பட்டது மற்றும் ஏற்றுக் கொள்ளப்பட்டது தொடர்பில் பொன்சேக்கா மற்றும் தேர்தல் ஆணையாளர் அரசியல் அமைப்பில் 12 (4) சரத்தின்படி தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அறிவிக்கும்படியும் சரத் கோங்ஹாகே தனது மனுவில் கோரியுள்ளார்.

வவுனியா அபிவிருத்திப் பணிகள் அரச அதிபர் தலைமையில் மீளாய்வு

வவுனியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகவும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்வதற்காகவும் வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் தலைமையில் நாளை (15) வவுனியா செயலகத்தில் கூட்டமொன்று நடைபெறுகின்றது.

இந்தக் கூட்டத்தில், 2009ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளை மீளாய்வு செய்வதுடன், 2010ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படுமென அரச அதிபர் தெரிவித்தார். வவுனியா நகர் முழுவதற்கும் குடிநீரை விநியோகிப்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இரண்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. வவுனியா வடக்குப் பிரதேசத்திற்கும் குடிநீர்த் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஏ-பீ தரத்திலான சகல பாதைகளும் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. புளியங்குளம், நெடுங்கேணி- ஒட்டுசுட்டான் பாதை அபிவிருத்திப் பணிகள் எதிர்வரும் 19ம் திகதி ஆரம்பமாகின்றன. நெலுக்குளம்-நேரியகுளம், செட்டிக்குளம் பாதையும் அபிவிருத்தி செய்யப்படுகிறது என்றும் அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.

அசாத்சாலி, சதுராணி ஜனாதிபதிக்காக பிரசாரம்

sri-lankan-election-01jpg.jpgகொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி பிரபல சிங்கள திரைப்பட நடிகை வசந்தி சதுராணி ஆகியோர் நேற்று முதற்தடவையாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி தேர்தல் பிரசார மேடையில் தோன்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

கொழும்பு, பொரல்லையில் மேல் மாகாண சபை உறுப் பினர் திலங்க சுமதிபாலவின் ஏற்பாட்டில் ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷவின் தலைமையில் கெம்பல் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இவர்கள் தோன்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். அவர்கள் இருவரும் இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து உரை யாற்றினர்.

ஹைத்தியில் பயங்கர பூகம்பம்- ஆயிரக்கணக்கானோர் இறந்திருக்கக்கூடும் என அச்சம்

haiti-earthquake.jpgகரீபியன் தீவு நாடான ஹைத்தியில் இன்று காலை 7.3 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் அதிபர் மாளிகை, ஐ.நா.அலுவலகம், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் உள்பட ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன.

இதில் இடிபாடுகளில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் இறந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பல இடங்களில் மக்கள் இடிபாடுகளில் சிக்கி அபயக்குரல் எழுப்பி வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும் உயிர் சேதம் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. மீட்புப் படையினர் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.

haiti-earthquake.jpgஅமெரிக்காவுக்கு கிழக்கே உள்ள தீவு நாடான ஹைத்தியை உலுக்கியுள்ள இந்த நலநடுக்கம், அருகில் இருக்கும் கியூபாவின் சான்டியாகோ உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஐநா அமைதி நடவடிக்கைகளுக்காக ஹைத்திக்கு சென்றிருந்த 950 இலங்கை ராணுவப்படை வீரர்களை நிலநடுக்கத்திற்கு பின்பு தொடர்பு கொள்ள முடியவில்லை என இலங்கை ராணுவம் தெரிவித்தது. பின்னர் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாக இலங்கை ராணுவ செய்தித்தொடர்பாளர் உதயநாயணக்கரா அறிவித்துள்ளார்.

முக்கோண கிரிக்கெட் தொடர்: கோப்பையை வெல்வது யார்? இந்தியா – இலங்கை இன்று பலப்பரீட்சை

catak.jpg3 நாடுகள் கிரிக்கெட் போட்டி பங்களாதேஷில் நடைபெற்று வருகிறது. “லீக்” ஆட்டத்தின் முடிவில் இந்தியா, இலங்கை அணிகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதிப் போட்டி இன்று 13ம் திகதி நடக்கிறது. சமீப காலமாக இரு அணிகளும் தொடர்ந்து விளையாட்டி வருகிறது. இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

தற்போது நடைபெற்று வரும் 3 நாடுகள் போட்டியில் இரு அணிகளும் 2 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா ஒரு ஆட்டத்திலும் இலங்கை ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு இலங்கையில் நடந்த 3 நாடுகள் போட்டியில் இந்திய அணி இலங்கை இறுதிப்போட்டியில் வீழ்த்தி சாம்பியன் பட்டம்பெற்றது.

தற்போதைய இந்திய அணி மிகவும் பலம் வாய்ந்து இருப்பதால் கோப்பையை கைப்பற்றும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் பலமே துடுப்பாட்டம்தான். வீரட்கோலி, காம்பிர், கப்டன் தோனி, ரெய்னா ஆகியோர் தொடர்ந்து துடுப்பாட்டத்தில் நல்ல நிலையில் உள்ளனர். கடந்த 2 போட்டிகளில் ஓய்வு கொடுக்கப்பட்ட அதிரடி துடுப்பாட்ட வீரர் வீரேந்தர் ஷேவாக் இன்று இறுதிப் போட்டியில் விளையாடுவார். அவர் அணிக்கு திரும்புவது மேலும் துடுப்பாட்ட பலத்தை அதிகரிக்கும்.

கடந்த 2 ஆட்டத்தில் நன்றாக ஆடிய தினேஷ் கார்த்திக் நீக்கப்படுவார். சுதிப் தியாகியின் பந்து வீச்சு நன்றாக இருக்கிறது. இதனால் இறுதிப் போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். தியாகி இடம் பெற்றால் நெஹ்ரா அல்லது ஸ்ரீசாந்த் நீக்கப்படலாம். கடைசி “லீக்” ஆட்டத்துக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட ஜாகீர்கான் இடம் பெறுவார். முன்னணி சுழற்பந்து வீரரான ஹர்பஜன்சிங்கு 2 ஆட்டத்தில் ஓய்வு கொடுப்பட்டது.

அவருக்குப் பதிலாக இடம்பெற்ற அமித் மிஸ்ரா இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்பஜன்சிங்குக்குதான் அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்தியா வுக்கு எல்லா வகையிலும் இலங்கை அணி சவா லாகத் திகழும் அதிரடி துடுப்பாட்ட வீரர் டில்சான் அந்த அணியின் துருப்பு சீட் டாக உளளார். அவர் களத்தில் இருக்கும் வரை இலங்கையின் ஸ்கோரை கட்டுப்படுத்த முடியாது. கப்டன் சங்கக்கார தொடக்க வீரர் தரங்க ஆகியோரும் அதிரடியாக ஆடக் கூடியவர்கள் சமரவீர, முன்னாள் கப்டன் ஜயவர்தன, பெரேரா ஆகியோரும் சிறப்பாக ஆடக்கூடியவர்கள். பந்து வீச்சில் வெலகெதர ரந்தீவ் நல்ல நிலையில் உள்ளனர். இரு அணிகளுமே பலம் பொருந்தியவை என்பதால் இன்று இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபாகரனின் தாயாரும் மாமியாரும் விரும்பினால் இந்தியா செல்ல முடியும் – ஜனாதிபதி ராஜபக்ஷ

velu.jpgவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரும் மாமியாரும் (மனைவியின் தாயார்) விரும்பினால் இந்தியாவிற்குச் செல்ல முடியும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“இந்தியா இணங்கினால் அவர்கள் இந்தியாவிற்குப் போக முடியும் என்று வெளிநாட்டு நிருபர்களுடன் நேற்று செவ்வாய்க்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில் ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியுள்ளார்.

பிரபாகரனின் தாயார் பார்வதிபிள்ளையும் மாமியார் திருமதி ஏரம்புவும் தமது எதிர்காலம் தொடர்பான திட்டம் எதனையும் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கவில்லை. ஆயினும் பிரபாகரனின் தாயாரை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் பிரபாகரனின் உறவினரான இராஜேந்தினும் இலங்கை அரசாங்கத்தைக் கோரியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

மரணமடைந்த பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளையின் பூதவுடலுக்கு மரியாதையுடன் இறுதிக்கிரியை இடம்பெற்றுள்ளதாக ராஜபக்ஷ கூறியுள்ளார். இந்தவார முற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இறுதிக்கிரியையின் போது பார்வதியும் திருமதி ஏரம்புவும் சமுகமளித்திருந்ததாகவும் 300 இற்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டதாகவும் தமக்குக் கூறப்பட்டதாக ஜனாதிபதி கூறியதாக பி.ரி.ஐ. செய்திச்சேவை தெரிவித்தது.

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறு மாவை அவசர கோரிக்கை

Mavai_Senathirajahமிக நீண்டகாலமாக விசாரணையுமின்றி விடுதலையுமின்றி சிறைகளில் வாடும் தமிழ் இளைஞர்களை இனியாவது விடுதலை செய்ய அரசு முன்வரவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.மாவை சேனாதிராஜா அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடு முழுவதிலுமுள்ள சிறைகளில் 600 க்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் கடந்த எட்டு நாட்களாக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ள நிலையிலேயே நீதி மற்றும் சட்டமறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொடவுடன் நேற்றுக் காலை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட மாவை சேனாதிராஜா அவரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

186 இலங்கை மீனவர்கள் இந்தியாவில் விடுதலை

fishing.jpgதமிழகம் மற்றும் ஆந்திரா கரையோர பகுதிகளில் கைதான இலங்கை மீனவர்கள் 186 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

2009 ஓகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி சென்ற குற்றச்சாட்டின் பேரில் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த 186 பேரும் சென்னை மற்றும், விசாகபட்டினம் பகுதியில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். கடற்றொழில் அமைச்சர் பீளிக்ஸ் பெரேரா இந்திய அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுக்களின் பயனாக மேற்படி 186 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு ள்ளனர்.

விடுதலையான 186 மீனவர்களும் அவர்கள் பயணம் செய்த 35 ஆழ்கடல் வள்ளங்களுடன் இன்று இலங்கை கடல் எல்லையூடாக அழைத்து வரப்படுகின்றனர். மிரிஸ்ஸ, தெவிநுவர, தங்கல்ல, வென்னப்புவ, திருகோணமலை ஆகிய பகுதிகளிலிருந்து இவர்கள் கடற்றொழிலுக்காக சென்றுள்ளனர்.

பிரிட்டனில் இஸ்லாமிய அமைப்புக்குத் தடை

000.jpgபயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் பிரிட்டனில் உள்ள முஸ்லிம் அமைப்பான இஸ்லாம்-போர் – யூ கே என்னும் அமைப்பை பிரிட்டிஷ் அரசாங்க தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அல் முகஜிறூன் என்பது உட்பட அந்த அமைப்பின் ஏனைய அனைத்துப் பெயர்களுக்கும் இந்தத்தடை பொருந்தும்.

இந்தத் தடைக்கான எந்த காரணத்தையும் குறிப்பிடாத பிரிட்டனின் உட்துறைச் செயலர் அலன் ஜோண்சன், தடை செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்றான போதிலும், பயங்கரவாதத்தை சமாளிக்க அது அவசியமான ஒரு அதிகாரம் என்று அவர் விபரித்துள்ளார்.

இந்த அமைப்பின் தலைவரான அஞ்சும் சௌத்ரி தமக்கு வன்செயல்களுடன் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்று கூறியுள்ளார்.தமது ஆதரவாளர்கள் தடை செய்யப்பட்ட பெயரின் கீழ் இயங்கமாட்டார்கள் என்றும், ஆனால், இஸ்லாத்தை முன்னேற்றும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபடுவார்கள் என்றும் அவர் கூறினார்.

திருக்கேதீஸ்வர புனரமைப்பு: முதற்கட்ட நடவடிக்கை சிவராத்திரிக்கு முன் பூர்த்தி

koneswaram-kovil.jpgதிருக் கேதீஸ்வரம் தேவஸ் தான வீதி புனரமைப்பு, உட்கட்டமைப்பு வேலைகளின் முதற்கட்ட நடவடிக்கைகளை சிவராத்திரி தினத்துக்கு முன்னதாக பூர்த்தி செய்யுமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி பணிப்புரை வழங்கியுள்ளார். கேதீஸ்வரம் ஆலயப்பகுதி புனித பூமி பிரதேசமாக புனரமைப்பு செய்யப்படுவ துடன் இதற்கென 270 மில்லியன் ரூபாவை அரசு செலவிட்டுள்ளது. ஆலய புனரமைப்பு, வேலைகள் கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி ஆரம்பமாகின.

மடுக்கோயிலுக்கு அடியார்கள் 24 மணி நேரமும் சென்று வழிபடுவதைப் போன்று பாடல்பெற்ற திருத்தலங்களில் ஒன்றான கேதீஸ்வரத்தானின் ஆலயத்திற்கும் 24 மணி நேரமும் அடி யார்கள் சென்று வருவதற்கான நட வடிக்கைகளும் மேற் கொள்ளப் பட்டு ள்ளன.