செய்திகள்

செய்திகள்

செய்திகள்

இடம்பெயர்ந்தோர் ஆர்வத்துடன் வாக்களிப்பு: வன்னி மாவட்டத்தில் 33 வீத வாக்கு பதிவு

இடம்பெயர்ந்துள்ள மக்கள் நேற்று அதிக ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களில் இருந்த வர்களுக்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிகளில் நேற்று 57 சதவீத வாக்குப் பதிவு இடம்பெற்றிருந்ததாகவும் அரச அதிபர் கூறினார். அதேநேரம் வன்னி மாவட்டத்தில் 33 வீதமான வாக்குப் பதிவு இடம்பெற்றதாக அரச அதிபர் மேலும் கூறினார்.

மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோரில் 15 ஆயிரத்து 763 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இவர்களுக்கென மெனிக் பார்ம்மில் 17 வாக்குச் சாவடிகளும் தமிழ் மகா வித்தியாலயத்தில் 16 வாக்குச் சாவடிகளுமாக 33 வாக்குச் சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

காலை 7 மணி முதல் ஆரம்பமான வாக்களிப்பில் மக்கள் மிகுந்த சுறுசுறுப்புடன் சென்று வாக்களித்துள்ளனர். இவர்கள் தமக்கு வழங்கப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு செல்வதற்கென விசேடமாக 100 பஸ்கள் தொடர்ச்சியாக சேவையிலீடுபடுத்தப்பட்ட தனால் மக்கள் எவ்வித சிக்கலுமின்றி வாக்களிக்கக் கூடியமாகவிருந்ததென அரச அதிபர் சார்ள்ஸ் தெரிவித்தார்.

வடக்கின் பல்வேறு பகுதிகளிலுமிருந்த மேற்படி மக்கள் சுமார் 15 வருடங்களுக்குப் பின்னர் சுதந்திரமாக இந்த பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் நேற்றைய வாக்க ளிப்பின்போது எவ்வித வன்முறைகளோ முறைகேடுகளோ இடம்பெறவில்¨யெனவும் அரச அதிபர் கூறினார்.

வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய நிருவாக மாவட்டங்களில் மீள்குடியமர்த்தும் பணிகள் முற்றுப்பெற்றுள்ள கிராம சேவையாளர் பிரிவுகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்கெடுப்பு நிலையங்களில் சுமுகமான வாக்களிப்பு இடம்பெற்றது.

நெடுங்கேணி, வன்னிவிளாங்குளம், வவுனிக்குளம், பாண்டியன்குளம், நட்டாங்கண்டல், விநாயகபுரம், துணுக்காய், முத்தையன்கட்டு, கற்சிலைமடு, சின்னத்தம்பி, மாங்குளம், திருமுருகண்டி, வற்றாப்பளை, உயிலங்குளம், மல்லாவி, யோகபுரம், அம்பலபெருமாள்குளம், புத்துவெட்டுவான் ஆகிய இடங்களில் வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. நெடுங்கேணி உதவி அரச அதிபர் பிரிவில் உள்ள அனைத்து கிராம சேவையாளர் பிரிவு வாக்களிப்பு நிலையங்களும் நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் நான்கு மண்டபங்களில் அமைக்கப்பட்டிருந்தன.

மடு உதவி அரச அதிபர் பிரிவின் இரணை இலுப்பைக்குளம், விளாத்திக்குளம் கிராம அலுவலர் பிரிவு அனைத்து வாக்கெடுப்பு நிலையங்களும் பூவரசங்குளம் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட் டிருந்தது.

பொதுமக்களுக்கும் வேட்பாளர்களுக்கும் பொலிஸ் திணைக்களம் நன்றி தெரிவிப்பு -சட்ட விதிமுறைகளை மீறினால் கைது

gamini.jpgவன் முறைகள் மற்றும் அசம்பாவிதங்களில் ஈடுபடாமல் அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கும், சகல வேட்பாளர்களுக்கும் பொலிஸ் திணைக்களம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தேர்தல்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காமினி நவரட்ன தெரிவித்தார். வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் அமைதியான தேர்தல் நடைபெற்றதாக தெரிவித்த அவர், பாரிய அசம்பாவிதங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை எனவும் கூறினார்.

தேர்தல் முடிவுற்ற போதிலும் தேர்தல் தொடர்பான சட்ட விதிமுறைகள் இன்று தொடக்கம் எதிர்வரும் ஏழு நாட்களுக்கு அமுலில் உள்ளதாக தெரிவித்த அவர், இந்த நாட்களுக்குள் ஊர்வலங்கள் மற்றும் பேரணிகள் நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது என்றார். பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிரு க்கும் 58,800 பொலிஸாரும், பாதுகாப்புப் படையினரும் தொடர்ந்தும் இந்த நாட்களில் கடமையில் இருப்பர் எனவும் அவர் கூறினார்.

தேர்தலில் வெற்றி பெற்றவர்களும், தோல்வியடைந்தவர்களும் அமைதியாக செயற்படுமாறு தெரிவித்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர், எவரேனும் அசம்பாவிதங்களில் ஈடுபட்டால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவர் எனவும் தெரிவித்தார். அவ்வாறு குழப்ப முயற்சிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுட்டிக் காட்டினார்.

வடக்கு கிழக்கில் தேர்தல் வாக்களிப்பு மிகவும் அமைதியாக நடைபெற்றதாகக் குறிப்பிட்ட அவர், 30 வருடத்திற்குப் பின்னர் எவ்வித வன்முறையுமின்றி வடக்கு, கிழக்கில் தேர்தல் நடைபெற்றுள்ளது என்றார். நீதியானதும், அமைதியானதுமான தேர்தலை நடத்துவதற் குத் தேவையான வகையில் வடக்கு, கிழக்கு உட்பட 22 தேர்தல் மாவட்டங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்ட அவர், பொலிஸாரும் அவர்களுக்கு உதவியாக பாதுகாப்புப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனரென்றும் குறிப்பிட்டார்.

வாக்களிப்பு நிலையத்தில் போதையிலிருந்த கான்ஸ்டபிள் கைது

களுத்துறை மாவட்டத்தில் உள்ள அகலவத்தை தினியாவல 86 வது வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் அமர்த்தப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மதுபோதையில் இருப்பது தெரியவந்ததையடுத்து களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இப்பொலிஸ் கான்ஸ்டபிளை சேவையிலிருந்து இடை நிறுத்தியுள்ளார்.

நேற்று 7ம் திகதி இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  வேறு பொலிஸ் உத்தியோகத்தர் இங்கு சேவையில் அமர்த்தப்பட்டுள்ளார்.

நாடு முழுவதிலும் அமைதியான வாக்களிப்பு

பதினான் காவது பாராளுமன்றத்திற்கு 196 உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7:00 மணிக்கு நாடு முழுவதிலும் மிகவும் அமைதியான முறையில் ஆரம்பமானது. இன்று மாலை 4 மணிக்கு வாக்களிப்பு முடிவடைந்தது. தேசம்நெற் சார்பில் கண்டி, மாத்தளை, குருணாகலை ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்த எமது குழுவினர் தேர்தல் அமைதியாக நடைபெற்றதை உறுதிப்படுத்தினர். அத்துடன் வடக்கு கிழக்கு பிரதேசங்களிலும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றுள்ளது. சில சில இடங்களில் சிறு சிறு சம்பவங்கள் இடம்பெற்ற போதிலும் கூட அவை வாக்களிப்பினை பாதிக்கக் கூடியதாக இருந்ததாக இதுவரை உத்தியோகப் பூர்வமாக கிடைக்கப் பெறவில்லை. 

அமைதியான தேர்தலொன்றை நடத்துவதற்காக முப்படையினரும் பொலீஸாரும் விசேட கடமைகளில் ஈடுபட்டிருந்தனர். மேலும் கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடும் போது மக்கள் வாக்களிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டியதாக தெரியவில்லை. பெரும்பாலும் கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பு நோக்கும் போது வாக்களிப்பு விகிதம் குறைவடைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.   தேர்தல் முடிவுகள் இன்று நள்ளிரவு முதல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முடிவுகள் வெளியானவுடன் மாவட்ட ரீதியான முடிவுகளை தொகுத்துத் தர தேசம்நெற் விசேட ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.

GCE O/L results uploaded to the web today

anura-edirisingha.jpgThe results of the G.C.E. Ordinary Level Examinations has been uploaded to the internet today.

Commissioner General of Examinations Anura Edirisinghe said that  students can log on to www.doenets.lk to obtain their results. Principals of Colombo and Sri Jayewardenepura education zones can obtain the result sheets by calling over at the Examination Department tomorrow morning.

Anura Edirisinghe said that the result sheets of the other schools will be posted tomorrow. Results of more than 400 thousand students who sat for the examination under the new syllabus will be released today. Results of the candidates who wrote for the examination under the old syllabus is expected to be released during the festive season.

சனத் ஜயசூரிய நேற்று தபால் மூலம் வாக்களிப்பு

jayasooriya.jpgமாத்தறை மாவட்ட ஐக் கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளரும் பிரபல கிரிக்கெட் வீரருமான சனத் ஜயசூரிய நேற்று காலை (7) தபால் மூலம் வாக்களித்ததாக மாத்தறை உதவித் தேர்தல் ஆணையாளர் சுனேத் லோசன தெரிவித்தார்.

இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். 20க்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு செல்வதற்காகவே இவருக்கு தபால் மூலம் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் சட்ட த்தின் 20 (சீ) பிரிவின் பிரகாரம் அவருக்கு முன்கூட்டி வாக்களிக்க தேர்தல் ஆணை யாளரின் விசேட அனுமதி வழங்கப்பட்டதாக தேர்தல் திணைக்களம் கூறியது, காலை 11.30 மணியளவில் மாத்தறை உதவித் தேர்தல் காரியாலயத்தில் சனத் வாக்களித்தார்.

அவர் நேற்று இந்தியா பயணமாக ஏற்படாகியிருந்தது, ஐ.பி.எல். போட்டிகளில அவர் மும்பை இன்டியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

தோட்ட தொழிலாளருக்கு இன்று விசேட விடுமுறை – அமைச்சர் ஆறுமுகன்

தோட்டத் தொழிலாளர்கள் அனைவருக்கும் இன்று வியாழக்கிழமை வாக்களிப்பதற்கு விசேட விடுமுறை வழங்கப் பட்டுள்ளது. எனவே, தொழிலாளர்கள் அனைவரும் காலையிலேயே வாக்குச் சாவடிக்குச் சென்று தமது வாக்கினை பதிவு செய்யுமாறு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; இறுதி நேர நெருக்கடியை தவிர்க்கும் பொருட்டு காலையிலேயே வாக்காளர்கள் தத்தமது வாக்குச்சாவடிகளுக்கு சென்று தமது வாக்கினை பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு வாக்களிக்கும் ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும். வாக்களித்த பின்னர் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல முடியும்.

அவ்வாறு வேலைக்குச் சென்ற பின்னர் தொழிலாளர்களுக்கு தோட்டத் நிருவாகம் வேலை வழங்க மறுப்புத் தெரிவித்தாலோ, அல்லது சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க மறுப்புத் தெரிவித்தாலோ, உடனடியாக இ. தொ. கா. தலைமை காரியாலயம், கிளைக் காரியாலயம் அல்லது என்னுடனோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்க்கூட்டமைப்பை தோற்கடிக்க முயற்சிப்பது பகல் கனவு; இமாம்

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் சம்பந்தன் தலைமையில் பெரு வெற்றியோடு வந்து அமரும் எனக்கூறிய அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இமாம், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை தோற்கடிக்க எடுக்கப்படும் முயற்சிகள் பகற்கனவாகவே முடியும் என்று தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்புவிவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

இந்த அரசாங்கம் எதற்காக மாதாமாதம் அவசரகால பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எது எப்படியிருந்தாலும எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் இலங்கையின் தலைவிதியை தீர்மானிக்க இருக்கின்ற வேளையில் ஒரு சில உண்மைகளை இங்கு நான் சொல்லியே ஆகவேண்டும். கடந்த மே மாத இறுதியில் ஆயுத போராட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் அரசாங்கம் இலகுவாக தமிழ்மக்களின் பிரச்சினையைத் பேசித் தீர்த்திருக்கலாம். ஆனால், ஜனாதிபதி, தான் ஜனாதிபதித் தேர்தலின் பின்புதான் இப்பிரச்சினையை பேச இருக்கின்றேன் என்று வெளிப்படையாகக் கூறினார். ஆனால்,ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்பு தற்போது வேறொரு விதமாக ஜனாதிபதி தான் இந்த பொதுத்தேர்தலின் பின்பு வடகிழக்கு மாகாணங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்டு வருகின்ற புது முகங்களோடு இப்பிரச்சினையை பேசித்தீர்க்க இருக்கிறேன் என்று கூறி வருகின்றார்.

இந்த வேளையில் நான் சார்ந்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக ஒரு உண்மையைச் சொல்ல ஆசைப்படுகின்றேன்.இத்தேர்தலில் வடகிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்கள் ஏக மனதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை தலைவர் சம்பந்தன் தலைமையில் பாராளுமன்றம் அனுப்ப இருக்கின்றனர். எனவே, ஜனாதிபதி தமிழ் மக்கள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென்றால் இதய சுத்தியுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் பேச முன்வரவேண்டும். அதற்கு எமது தலைமைத்துவம் தயார். அடுத்து இத்தேர்தலில் எமது கட்சியை எவ்வகையிலேனும் தோற்கடிக்க வேண்டுமென்று பலவித யூகங்கள் வகுத்து ஆட்சியாளர்கள் செயற்படுகின்றார்கள். ஆனால், இவை யாவும் பகற்கனவாகவே முடியும்.

எமது தலைவர் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்களின் மகத்தான ஆதரவைப் பெற்று அமோக வெற்றி அடைவதும் உண்மை.எங்களுக்கெதிராக செயற்படுகின்ற சக்திகள் வாக்காளர்களுக்கு தையல் மெஷின்களையும் சைக்கிள்களையும் விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி வாக்குச் சேகரிப்பதற்கு முனைகின்றார்கள்.

எமது கட்சியை நோக்கி பலவிதமான இடையூறுகள் இத்தேர்தலில் விளைவிக்கப்படுகின்றது. அரியநேத்திரனின் ஊர்வல பேரணி மீது விஷமிகளால் தாக்குதல் நடத்தப்பட்டு மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அதேவேளையில், வடகிழக்கில் எந்தத்தேர்தல் தொகுதியிலும் எமது கட்சியினர் ஒரு சிறு வன்முறையில் ஈடுபட்டார்கள் என்பது குறித்து எந்தவித முறைப்பாடுகளும் இல்லை என்பதைக் கூறிக்கொள்வதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றுக்கு திடீர் விஜயம்

pr.jpgகலைக் கப்பட்டுள்ள 6 ஆவது பாராளுமன்றம் சில விசேட விடயங்களை நிறைவேற்றும் நோக்கில் நேற்று மீண்டும் கூடிய போது திடீரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்கு சமுகமளித்தார்.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி அலுவலகத்துக்கு சென்ற ஜனாதிபதி. அங்கிருந்து கொண்டு அவசர காலத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிக்கும் பிரேரணையை நிறைவேற்றுவதற்கான விவாதத்தை கேட்டுக் கொண்டிருந்தார்.

அதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான போசனசாலைக்கு சென்ற ஜனாதிபதி ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் சுமுகமாக பேசிக் கொண்டே பகல் உணவை உண்டார். பாராளுமன்றத்தின் உத்தியோகத்தர்களுடன் பேசவும் அவர் தவறவில்லை.

வவுனியா இரவு தபால் ரயில் கல்கமுவவில் தடம்புரண்டது

கொழும்பு கோட்டையிலிருந்து திங்கட்கிழமை இரவு வவுனியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த இரவு தபால் ரயில் கல்கமுவவுக்கும் செனத்கமுவவுக்கும் இடையில் தடம்புரண்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் ஒரு பெட்டி தண்டவாளத்தை விட்டு விலகியுள்ளது.

இச் சம்பவத்தால் பயணிகளுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லையெனவும், திருத்த வேலைகள் நடைபெறுவதாகவும் ரயில்வே பகுதி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இச் சம்பவத்தால் நேற்று கொழும்பிலிருந்து வவுனியா அநுராதபுரம் நோக்கிச் செல்லும் ரயில்கள் கல்கமுவவரையும் நடைபெற்றன.

அண்மைக் காலங்களில் இந்தப் பாதையில் ரயில்கள் அடிக்கடி தடம்புரள்வதும் குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேயர் கால ரயில் பாதை அமைப்பே இதற்கு காரணம் எனவும், ரயில் பாதைகள் புனரமைக்கப்பட வேண்டுமெனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.