கிளி நொச்சியில் 50 வீடுகளை அமைப்பதற்கான முதற்கட்ட உதவிகளை இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் மேற்கொண்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் 50 குடும்பங்களுக்கு வீடுகளை அமைக்கும் ஆரம்பப் பணிகளுக்காக தலா 50 ஆயிரம் ரூபா நிதியுதவி செஞ்சிலுவைச் சங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேசப் பிரிவில் நூறு வீடுகளை அமைப்பதற்கு செஞ்சிவைச்சங்கம் திட்டமிட்டுள்ளது. இவை கரைச்சிப் பிரதேசச் செயலர் பிரிவிலுள்ள விவேகானந்தநகர், அனந்தபுரம், கணேசபுரம் ஆகிய கிராமங்களில் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.