யாழ். நகரப்பகுதிகளில் தடைசெய்யப்பட்ட இடங்களில் நடைபாதை வியாபாரம் செய்த வந்த 24 பேர் Jun 10 2010ல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 17 பேர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்ட்டவர்களின் விற்பனைப் பொருட்களும் அகற்றப்பட்டன. பழவகைகள். உடைகள், ‘பான்ஸி’ பொருட்கள் என்பனவற்றை விற்பனை செய்த நடைபாதை வியாபாரிகள் மீதே இவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களில் சிலருக்கு நீதிமன்றத்தினால் தலா 1500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. சில பொருட்கள் மீள ஒப்படைக்கப்பட்டன. சில பொருட்கள் ஒப்படைக்கப்படவில்லை. ஏனையோர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.
போர் முடிவடைந்து ஏ-9 பாதை திறந்த விடபட்டதன் பின் தென்னிலங்கையிலிருந்து வந்த பெருமளவிலான நடைபாதை வியாபாரிகள் யாழ்.நகரை முற்றுகையிட்டு கண்ட இடங்களிலும் தங்கள் வியாபரத்தை மேற்கொண்டனர். யாழ. பஸ்நிலையம் உட்பட பல இடங்களிலிருந்த இவ்வியாபார நடவடிக்கைகள் அகற்றப்பட்டுள்ள போதிலும் மேலும் பல இடங்களில் பொதுமக்களுக்கு சிரமம் தரக்கூடிய, சுகாதாரமற்ற வியாபார நடவடிக்iகைகளை சில வியாபாரிகள் மேற்கொண்டு வருகின்றனா. இவ்வாறு வியாபாரா நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள. மீதே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது