அமைச்சர்களிடம் ஒரு கேள்விக்காக 31,500 ரூபா செலவிடப்படுகிறது சபையில் ரவி கருணாநாயக்க

பாராளு மன்றத்து எதிர்க்கட்சி எம்.பி.களினால் அமைச்சர்களிடம் ஒரு தடவை கேட்கப்படும் கேள்வி ஒன்றுக்கு 31,500 ரூபா செலவிடப்படுவதாக ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின்போதே ரவி கருணாநாயக்க எம்.பி இதனை சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் நேற்று ரவி கருணாநாயக்காவின் வாய்மூல விடைக்கான 3 வினாக்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் ஒன்றுக்கு பதிலளிக்க சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் கால அவகாசம் கேட்டனரே தவிர பதில் அளிக்கவில்லை.

இதனால் விசனமடைந்த ரவி கருணாநாயக்க எம்.பி. பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கேள்வி ஒன்றை ஒரு தடவை கேட்க 31,500 ரூபா செலவாகின்றது.இந்தக் கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்கும்போது செலவு இன்னும் அதிகரிக்கின்றது.

எனவே எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கேட்கப்படும் கேள்விகளுக்கு உடனடியாகவே பதில் வழங்கக் கூடிய நிலையில் சம்பந்தப்பட்ட அமைச்சர் தயாராக இருக்க வேண்டும்.இவ்வாறு நடந்து கொண்டால் மக்களின் பணத்தை வீணடிக்க வேண்டிய தேவையில்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Rohan
    Rohan

    “பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கேள்வி ஒன்றை ஒரு தடவை கேட்க 31,500 ரூபா செலவாகின்றது.இந்தக் கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்கும்போது செலவு இன்னும் அதிகரிக்கின்றது.”

    அட! குத்தரிசியும் விற்க முடியாத நிலையில் இது வேறு ஒரு கொசுறுத் தலைவலி!

    Reply