நிவாரண முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டு வெளிமவாட்டங்களில் வசித்துவரும் கிளிநொச்சி மாவட்ட கண்டாவளைப் பிரதேசச் செயலகத்திற்குட்பட்ட அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளையும் சோந்த மக்களும் தங்கள் சொந்த இடங்களில் மீள் குடியமர்வதற்கான ஆயத்தநிலையில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக பதிவுகளை உரிய பகுதிகளில் நீக்கம் செய்து விட்டு எதிர்வரும் 21, 22 அகிய திகதிகளில் கிளிநொச்சி தர்மபுரம் மகாவித்தியாலயத்தில் காலை 9 மணிதொடக்கம் பிற்பகல் 2 மணிவரை வருகை தந்து மீள் குடியமர்வதற்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் கோரியுள்ளார்.
மேலும் கிளிநொச்சி கரைச்சிப் பிரதேசச் செயலர் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சிää சிவிக்சென்ரர், மாயவனூர், இராமநாதபுரம்ää ஆகிய கிராமசேவை அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த அனைவரும் தாங்கள் தற்காலிகமாக தங்கியிருக்கும் இடங்களிலுள்ள பதிவுகளை நீக்கிவிட்டு எதிர்வரும் 22ம் திகதி இராமநாதபுரம் மகாவித்தியாலயத்தில் தங்கள் பதிவகளை மேற்கொள்ளுமாறும் அரசாங்க அதிபரால் அறிவிக்கப்பட்டுள்ளது.