செய்திகள்

செய்திகள்

செய்திகள்

பார்சல் மூலம் இலங்கைக்கு அனுப்பப்படவிருந்த துப்பாக்கியால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

இலங்கைக்குத் தபால் மூலமாக அனுப்பப்படவிருந்த துப்பாக்கியால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது;

வெள்ளி காலை 11.30 மணிக்கு சென்னையில் இருந்து கொழும்பு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மூலம் இந்தப் பார்சல் அனுப்பப்படவிருந்தது. அதன்போது பார்சலை ஸ்கேன் செய்தபோது அலாரம் ஒலித்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் பார்சலைப் பிரித்துப் பார்த்துள்ளனர். அதில் துப்பாக்கியொன்று இருந்ததையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இத்துப்பாக்கியைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அப்பார்சலை விமான நிலையத்தில் கையளித்த தபால் துறை ஊழியர் சுப்பிரமணியனிடம் விசாரணை நடத்தினர். அதன்போது அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் பார்சலை டெலிவரி கொடுப்பது மட்டும் தான் தனது பணி என்றும் கூறினார். தொடர் விசாரணையில் அது பறவைகளைச் சுடும் “ஏர் கன்’ வகையைச் சேர்ந்த ஆபத்தற்ற துப்பாக்கி எனவும் அதை வைத்துக்கொள்ள லைசன்ஸ் பெற வேண்டியதில்லை என்றும் தெரியவந்தது.

இத்துப்பாக்கியை சென்னை அண்ணாசாலையைச் சேர்ந்த விஜய் என்பவர் கொழும்பிலுள்ள தனது நண்பர் சபரீசனுக்கு அனுப்பி வைத்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை “கியூ’ பிரிவுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

7 வது ஆசிய பெண்கள் வலைப்பந்தாட்ட போட்டியில் இலங்கை அணி சம்பியன்

netball.jpgஏழாவது ஆசிய பெண்கள் வலைப்பந்தாட்ட போட்டியில் இலங்கை அணி சம்பியனாக தெரிவாகியுள்ளது. இலங்கை பெண்கள் வலைப்பந்தாட்ட அணிக்கும் நடப்புச் சம்பியனான சிங்கப்பூர் அணிக்குமிடையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற மேற்படி போட்டியில் இலங்கை அணி 77-48 என்ற செட் கணக்கில் சிங்கப்பூர் அணியை தோற்கடித்தது.

ஆசிய வலைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் 9 நாடுகள் பங்கேற்றன. இலங்கை அணி தான் பங்கேற்ற 6 போட்டிகளிலும் வெற்றியீட்டி 4 ஆவது தடவையாகவும் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

இலங்கை அணி முதல் சுற்றை 19-11 என்ற செட் கணக்கிலும் இரண்டாம் சுற்றை 20-14 என்ற செட் கணக்கிலும் முன்றாம் நான்காம் செட்களை 18-9, 20-14 என்ற செட் கணக்கிலும் வென்றது.

பெற்றோரை இழந்த சிறார்கள் சிறுவர் இல்லத்தில் ஒப்படைப்பு

இலங்கையில் இடம்பெயர்ந்து வந்துள்ள பெற்றோரை இழந்த சிறுவர்களில் ஒரு தொகுதியினர் வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் அறங்காவலர் அவையினரால் நடத்தப்பட்டு வருகி்ன்ற அருளகம் சிறுவர் இல்லத்தில் நீதிமன்றத்தின் மூலம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர்.

பெற்றோர் மற்றும் உற்றோர் ஆதரவற்ற 129 சிறுமியர் இவ்வாறு ஒப்படைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இங்கு ஏற்கனவே சிறுவர் இல்லம் ஒன்றும் முதியோர் இல்லம் ஒன்றும் செயற்பட்டு வருகின்றன.

இரு தினங்களுக்கு முன்னர் ஒப்படைக்கப்பட்ட இந்தச் சிறுமியரின் உடனடி அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தொண்டு நிறுவனங்கள் உதவிகளை வழங்கியிருக்கின்றன.

இந்தச் சிறுமியர்களின் நலன்கள், வவனியா மாவட்ட நீதிமன்றத்தின் நேரடி பார்வையில் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

வன்னிப்பிரதேசத்தில் இயங்கிவந்த பல்வேறு சிறுவர் இல்லங்களைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்கள் இன்னும் இடைத்தங்கல் முகாம்களில் வைக்கப்பட்டிருப்பதாகவும், இவர்களைப் படிப்படியாக அரசாங்கத்தினால் பதிவு செய்யப்பட்ட சிறுவர் இல்லங்களில் ஒப்படைத்து பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவி்த்திருக்கின்றனர்.

கியூபாவில் பயன்படுத்தும் பக்டீரியா நுண்ணங்கியை பாவிக்க அரசு தீர்மானம்

aedes_aegypti.jpgடெங்கு காய்ச்சலைப் பரப்பும் நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவென கியூபா நாட்டில் பயன்படுத்தப்படும் பக்டீரியா நுண்ணங்கியை இலங்கையிலும் பாவிப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இம்முடிவுக்கு அமைய கியூப நாட்டிலிருந்து பி.ரி.ஐ. (Bacillus Thuringenesis Subspecies Isreelenesis) என்ற இந்த பக்டீரியாவை இவ்வாரம் இந்நாட்டுக்குள் கொண்டு வருவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் உயரதிகாரியொருவர் நேற்று தெரிவித்தார்.

டெங்கு காய்ச்சல் நாட்டிலுள்ள பத்து மாவட்டங்களில் இருக்கும் 68 மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளில் பெரிதும் பரவியுள்ளது. அதேநேரம் இக்காய்ச்சல் காரணமாக இற்றைவரையும் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் பத்தாயிரத்துக்கு மேற்பட்டோர். இக்காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.நுளம்புகளால் பரப்பப்படுகின்ற இக்காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிவகைகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத் துறை அமைச்சு அதிகாரிகள் பங்குபற்றிய கலந்துரையாடலொன்று கடந்த வாரம் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவென கியூபா நாட்டில் பாவிக்கப்படும் வழிமுறையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கினார். இந்த அறிவுறுத்தலுக்கு அமைய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கொழும்பிலுள்ள கியூப நாட்டு உயர் ஸ்தானிகருடன் பேச்சுவார்த்தை நடத்தி டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் பக்aரியாவை துரிதமாகக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதனடிப்படையில் இப்பக்டீரியா தொடர்பான இரு மருத்துவ நிபுணர்களின் சேவையை இலங்கைக்கு பெற்றுத் தருவதற்கும் கியூப உயர் ஸ்தானிகர் அமைச்சரிடம் உறுதியளித்திருக்கிறார். நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் இந்த பக்டீரியா 1982ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இப்பக்டீரியா நுளம்புகளின் குடம்பியை அழிக்கும் தன்மை கொண்டவை. இதனூடாக டெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்பக்டீரியாவைப் பயன்படுத்தி நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையைப் பல நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. இலங்கையில் குருநாகல் மற்றும் பொலன்னறுவை பிரதேசங்களில் நுளம்புகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தவென இந்த பக்aரியா ஏற்கனவே பரீட்சிக்கப்பட்டது தெரிந்ததே.

“கப்டன் அலி’ தொடர்பாக ஐ.நா. எதுவும் செய்யாது – ஜோன் ஹோம்ஸ்

ships000.jpgஐ.நா. இலங்கையின் வடபகுதியில் இடம்பெயர்ந்த மக்களுக்கென ஐரோப்பாவில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களுடன் வந்த “எம்.வி.கப்டன் அலி’ கப்பல் தற்போது சென்னைத் துறைமுகத்துக்கு அப்பால் 5 கடல்மைல் தொலைவில் நங்கூரமிட்டிருக்கும் நிலையில் அக்கப்பல் விவகாரம் தொடர்பாக ஐ.நா. வோ அல்லது ஐ.நா. வின் மனிதாபிமான விவகாரத்திற்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் நாயகமான தானோ எதுவும் செய்வதற்கு இல்லை என்று ஜோன் ஹோம்ஸ் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. வின் தலைமையகத்தில் பாதுகாப்புச்சபைக் கூட்டம் முடிவடைந்த பின் வெளியே வந்த ஐ.நா. உதவிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸிடம் இன்னர் சிற்றி பிரஸ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளதாக இன்னர் சிற்றி பிரஸின் நிருபர் மத்தியூ ரஸல்லீ தனது செய்தி ஆய்வில் குறிப்பிட்டிருக்கிறார்.

சுயேச்சையான ஒரு பிரேதப் பரிசோதனையை நடத்த ஜாக்சனின் குடும்பத்தினர் விருப்பம்.

25michael_jackson.jpgபாப் மன்னன் மைக்கேல் ஜாக்சனின் மரணத்திற்கான காரணம் என்ன என்பதை தெளிவாக அறிய அவரது குடும்பத்தினர் விரும்புகின்றனர். இதனால் சுயேச்சையான ஒரு பிரேதப் பரிசோதனையை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர் என்று ஜாக்சன் குடும்பத்தினருக்கு நெருக்கமானவரான ஜெஸி ஜாக்சன் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஜெஸி கூறுகையில், ஜாக்சனின் மறைவு குறித்து பல பதில்களே இல்லாத கேள்விகள் நம்மிடையே உலவுகின்றன. ஜாக்சனின் தனிப்பட்ட டாக்டர் குறித்தும் சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.

எனவே இதுதொடர்பாக இன்னொரு அட்டாப்சியை நடத்த அவரது குடும்பத்தினர் விரும்புகின்றனர். இருப்பினும் இதை தனிப்பட்ட முறையில் நடத்த அவர்கள் விரும்புகின்றனர். முடிவு மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதற்கான ஏற்பாடுகள் இதுவரை செய்யப்படவில்லை என்றார் அவர்.

உடல்களைத் தேடும் பணியை முடித்துக் கொள்வதாக பிரேசில் ராணுவம் தெரிவித்துள்ளது.

airfrancetail.jpgஅட்லான்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஏர் பிரான்ஸ் விமானத்தில் பயணித்தவர்களின் உடல்களைத் தேடும் பணியை முடித்துக் கொள்வதாக பிரேசில் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜூன் 1ம் தேதி விமான விபத்து நடந்துத. அதன் பின்னர் கடந்த ஒரு மாத காலமாக உடல்களைத் தேடும் பணி முழு வீச்சில் நடந்து வந்தது. மொத்தம் 228 பேர் விபத்தில் இறந்தனர். இருப்பினும் 51 உடல்கள் மட்டுமே இதுவரை கிடைத்துள்ளது. அவற்றிலும் 11 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரேசில் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஹென்றி முனோஸ் கூறுகையில், இனியும் உடல்கள் கிடைக்கும் என்பது சந்தேகம்தான். எனவே இதைத் தொடருவதை நிறுத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.

இருப்பினும் கருப்புப் பெட்டியைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. ஜூலை 1ம் தேதி வரைதான் கருப்புப் பெட்டியிலிருந்து சமிக்ஞைகள் வெளி வரும். அதற்குள் கருப்பு்ப பெட்டியை மீட்க பிரான்ஸ் குழுவினர் முயன்று வருகின்றனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏராளமான கப்பல்கள், அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஆகியவை கருப்புப் பெட்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

அரசியலமைப்புக்கு உட்பட்டதாக சகல செயற்பாடுகளும் அமையும் – ஜனாதிபதி

he_president.jpgஅரசிய லமைப்புக்கமையவே அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமையும் அத்துடன் எந்தத் தேர்தலையும் எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அரசியலமைப்பில் மாற்றம் செய்யப் போவதாகப் பலரும் அஞ்சுகின்றனர். அவ்வாறு எதுவும் இடம்பெறாது. அரசியலமைப்புக் குட்பட்டதாகவே சகல செயற்பாடுகளும் அமையுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது.  இனி பாதாள உலகத்தை ஒழிக்க வேண்டியுள்ளது. அத்துடன் போதையற்ற இலங்கையை உருவாக்கும் நடவடிக்கை தொடருமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தெற்கில் வலஸ்முல்ல பிரதேச செயலாளர் பிரிவில் ஹந்துகல தேயிலைத் தொழிற்சாலையை உத்தியோக பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

தேச நிர்மாண அமைச்சின் கீழ் தென் மாகாண அபிவிருத்தி அதிகாரசபையினால் 45 மில்லியன் ரூபா செலவில் மேற்படி தேயிலைத் தொழிற்சாலை நிர்மாணிக்கப் பட்டுள்ளதுடன் நேற்றைய அங்குரார்ப்பண நிகழ்வில் அமை ச்சர்கள் டி. எம். ஜயரட்ன, சமல் ராஜ பக்ஷ, குணரட்ன வீரக்கோன், மஹிந்த அமர வீர உட்பட அமைச்சர்கள் மாகாண அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது: முப்பது வருடங்களின் பின் நாடு ஐக்கியப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் பயத்துடனும் அச்சத்துடனும் வாழ்ந்த யுகத்துக்கு முடிவு கட்டப்பட்டுவிட்டது. பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்ததன் பின்னர் இன்று நான் எனது ஊரில் முதல் தடவையாக உரையாற்றுகின்றேன்.

நாட்டை ஆண்ட தலைவர்கள் நாடு பற்றி சிந்திக்காமல் தம்மைப்பற்றியே சிந்தித்தனர். இதில் நாட்டை எழுதிக் கொடுத்தவர்களும் உள்ளனர்.  இன்று அதற்கு மாறாக வடக்கு, கிழக்கு, தெற்கு என சகலதும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. சகல இனமத மக்களும் சமத்துவமாகவும் அச்ச மின்றியும் வாழும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. வாக்கு, பலம், புள்ளடி என நாம் இனி சிந்திக்கத் தேவையில்லை. அதற்கு மாறாக நாடு பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. யுத்தசங்காரத்தை முடித்த நாம் நாட்டைக்கட்டியெழுப்பும் சங்காரத்தையும் வெற்றிகொள்ள வேண்டியுள்ளது.

எமது காலத்தில் நாம் யுத்தத்திற்கு மட்டுமே கவனம் செலுத்தவில்லை. நாட்டின் எந்த அபிவிருத்திப் பணிகளையும் நாம் நிறுத்தவில்லை. சகலதையும் செயற்படுத்தினோம். கிராமங்கள் தோறும் அபிவிருத்தி யையும் தொழில்நுட்பத்தையும் கொண்டு செல்ல எம்மால் முடிந்துள்ளது.

நான் மூன்று பிள்ளைகளின் தந்தை என்ற வகையிலும் நாட்டின் சகல பிள்ளைகளின தும் தந்தை என்ற ரீதியிலும் இளைய சமு தாயத்தை, ஒழுக்கமுள்ள பண்பாடு, கலா சாரம் உள்ளிட்ட உயர் மதிப்பீடுகளை மதிக்கின்ற சமுதாயமாக உருவாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.

பிள்ளைகளை வளர்ப்பதில் தந்தைக்கு பாரிய பொறுப்புகள் உள்ளன. போதையற்ற கெளரவமான சமூகத்தைக் கட்டியெழுப்ப நாம் அர்ப்பணிப்புடன் செயற்படும்போது சகல பெற்றோர்களும் இதில் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியமாகிறது.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது. இனியும் நாம் காலத்தை வீணடிக்க முடி யாது. அபிவிருத்தியிலும் நல் ஒழுக்கத்திலும் நாட்டைக் கட்டியெழுப்பவேண்டும். அரசியல் தலைவர்கள் குறிப்பாக பிரதேச அரசியல் வாதிகள் தம்மைப் பற்றி சிந்திப்பதை விடுத்து நாட்டைப் பற்றியும், பிரதேச அபிவிருத்தி பற்றியும் சிந்தித்துச் செயற்படுவது அவசியம், ஊழல் மோசடியில் லாத திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இன்று நாட்டில் நீலக்கொடியல்ல சிங் கக்கொடியே எங்கும் பறக்கிறது. இன, மத, குல, பிரதேச பேதமற்ற நாட்டின் மக்களாக சகலரும் வாழும் சூழ்நிலையை உருவாக் குவதே எமது நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்

இந்தியா சென்று முறையிடும் வேலையை இனியாவது தமிழ்க் கூட்டமைப்பு நிறுத்த வேண்டும் – விமல் வீரவன்ச

26parliament.jpgநாடு முழுவதும் படை முகாம்கள் இருக்கும் நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தியா சென்று கோரியது போல் வடக்கு, கிழக்கிற்கு மாத்திரம் விசேட சலுகை வழங்கி அங்கு படை முகாம்களை அமைக்காமல் இருக்க முடியாதென்றும், இவ் விடயத்தில் எவரும் தலையிட முடியாதென்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச எம்.பி.தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி சட்ட மூலம் மீதான விவாதத்தில் பேசும் போதே விமல் வீரவன்ச இவ்வாறு கூறினார். அவர் இங்கு மேலும் பேசுகையில்; “எமது நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு துறைகளிலும் உரிய மாற்றங்கள் தேவைப்படுகின்றன. அதேபோல் பாதுகாப்பு தரப்பிலும் ஆக்கபூர்வமான மாற்றங்கள் தேவைப்படுகின்றன. அதன் பொருட்டே இதுவரை காலமும் சம்பிரதாய பூர்வமாக இருந்து வந்த கூட்டுப் படைகளின் தளபதி பதவியை சட்டபூர்வமாக அங்கீகரிப்பதற்கான ஏற்பாடுகள் இந்த சட்டமூலத்தின் மூலம் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

கடந்த காலங்களில் கூட்டுப் படைத் தளபதி பதவிக்குரிய சட்டபூர்வமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளைப் பாதுகாப்புச் செயலாளரே திறம்பட மேற்கொண்டு வந்தார். எதிர்வரும் காலங்களில் வரவிருக்கும் பாதுகாப்புச் செயலாளர்கள் கோதாபய ராஜபக்ஷவைப் போன்று ஒருங்கிணைப்பு கூட்டு நடவடிக்கையில் திறம்பட செயற்படுவார்களா என்பதைக் கூற முடியாது.

இதேநேரம், வடக்கு, கிழக்கில் படை முகாம்களை அமைக்க இடமளிக்க வேண்டாமென தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியாவிடம் சென்று கேட்கின்றனர். படை முகாம்களை எங்கு அமைக்க வேண்டுமென்பது குறித்து இந்த நாடே தீர்மானிக்க வேண்டும். நாட்டின் ஏனைய பகுதிகளில் படை முகாம்கள் இருக்கும் போது இதில் வடக்கு, கிழக்கிற்கு மாத்திரம் விசேட சலுகை வழங்க முடியாது. இந்த விடயத்தில் வேறு எவரும் தலையிட்டு செயற்படவும் முடியாது. எனவே, இனியாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம் மாதிரியான செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பயங்கரவாதத்தை யுத்தத்தின் மூலம் தோற்கடித்த நாடு என்ற வகையில் நாம் இனியும் அவ்வாறானதொரு ஆபத்துக்கு இடமளிக்க முடியாது. இனியும் பயங்கரவாதம் தலை தூக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளுக்கே கூட்டுப் படைகளின் தளபதி பதவிக்கான அதிகார அதிரிப்புகள் தேவைப்படுகின்றன’ என்றார்.

‘கேப்டன் அலி’ பொருட்கள் திங்கள் அல்லது செவ்வாய்கிழமையன்று இறக்கப்படும்?

ships000.jpgஇலங் கையில் வடக்கே போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அனுப்பட்டதாக கூறப்பட்ட பொருட்கள் அடங்கிய கப்பலான கேப்டன் அலி சென்னை துறைமுக எல்லைக்கு அப்பால் நங்கூரமிட்டுள்ளது.

இந்தக் கப்பலில் உள்ள பொருட்கள் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் மூலமாக இலங்கையில் விநியோகிக்க இலங்கை அரசு ஒப்புகொண்டிருப்பதாக இந்த கப்பலில் உள்ள ஒருங்கிணைப்பாளரான உதயணன் தவராஜசிங்கம் B.B.C தமிழோசையிடம் தெரிவித்திருந்தார்

கப்பலில் உள்ள பொருட்களை இறக்குவதற்கான ஆவணங்கள் தயாரிப்பில் செஞ்சிலுவை குழுவினர் ஈடுப்பட்டுள்ளதாகவும் வரும் திங்கள் அல்லது செவ்வாய்கிழமையன்று பொருட்கள் இறக்கப்படும் என்று தாங்கள் நம்புவதாகவும், அதன் பின்னர் கப்பலில் உள்ள தாங்கள் நாடு திரும்பவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்