இலங் கையில் வடக்கே போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அனுப்பட்டதாக கூறப்பட்ட பொருட்கள் அடங்கிய கப்பலான கேப்டன் அலி சென்னை துறைமுக எல்லைக்கு அப்பால் நங்கூரமிட்டுள்ளது.
இந்தக் கப்பலில் உள்ள பொருட்கள் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் மூலமாக இலங்கையில் விநியோகிக்க இலங்கை அரசு ஒப்புகொண்டிருப்பதாக இந்த கப்பலில் உள்ள ஒருங்கிணைப்பாளரான உதயணன் தவராஜசிங்கம் B.B.C தமிழோசையிடம் தெரிவித்திருந்தார்
கப்பலில் உள்ள பொருட்களை இறக்குவதற்கான ஆவணங்கள் தயாரிப்பில் செஞ்சிலுவை குழுவினர் ஈடுப்பட்டுள்ளதாகவும் வரும் திங்கள் அல்லது செவ்வாய்கிழமையன்று பொருட்கள் இறக்கப்படும் என்று தாங்கள் நம்புவதாகவும், அதன் பின்னர் கப்பலில் உள்ள தாங்கள் நாடு திரும்பவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்