எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

“இலங்கையில் வருடாந்தம் 3 இலட்சம் வாகன விபத்துகள்’

26parliament.jpgஇலங் கையில் வருடாந்தம் மூன்றுலட்சம் வாகன விபத்துக்கள் இடம் பெறுகின்றன. இதில் 2300 பேர் வரை பலியாகின்றனரென பயணிகள் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன் கிழமை இடம்பெற்ற வீதி அபிவிருத்தி அதிகார சபை திருத்த சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

தினமொன்றுக்கு எட்டரை லட்சம் மக்கள் கொழும்புக்குள் வருகின்றனர். இவர்களில் 3 இலட்சம் பேர் ரயில்மூலமும் ஐந்தரைலட்சம் பேர் 12 ஆயிரம் பஸ் வண்டியிலும் 1,75000 பேர் ஏனைய வாகனங்கள் மூலமும் வருகின்றனர்.

வருடாந்தம் 3 இலட்சம் விபத்துகள் இடம்பெறுகின்றன இதில் 2300 பேர் உயிரிழக்கின்றனர். எனவே, உரிய வீதி அபிவிருத்தி தேவைப்படுகின்றது. அதனை இலக்காகக் கொண்டே நாம் செயற்பட்டு வருகின்றோம்.

களனி மேம்பாலம் கட்டப்படுவதற்கு பெரும் தொகைப்பணம் செலவிடப்பட்டதாக சிலர் விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த மேம்பாலம் அமைக்கப்படுவதற்கு முன் இந்த வீதியில் பெரும் வாகன நெருக்கடி ஏற்பட்டிருந்தது.

24 மணி நேரத்தினுள் 8 மணி நேரம் ரயில் பாதை மூடப்பட்டிருந்தது. இதன் காரணமாக எரிபொருள் வீண்விரயமாகியது. எரிபொருள் சுமார் 1.5 பில்லியன் ரூபாவரை வீண்விரயமாகியது தற்போது இப்பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது.

கொழும்பின் சில பகுதிகளில் இன்று நீர் வெட்டு

tap_water.jpgகொழும் பின் சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை அறிவித்துள்ளது.

நீர் விநியோகக் குழாய்களில் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் இன்று காலை 8 மணி முதல் இந்த நீர் வெட்டு அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. களனி, பேலியகொட, ஹெந்தல,  வத்தளை, மகர மற்றும் கிரிபத்கொட ஆகிய பிரதேசங்களிலிலேயே இந்த நீர் வெட்டு அமுலாக்கப்படும். எனவே முன்கூட்டியே நீரைச் சேமித்துக்கொள்ளுமாறு பொது மக்களுக்கு சபை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

அரசினால் திணிக்கப்பட்ட தேர்தலில் போட்டியிட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம் – தமிழ்க்கூட்டமைப்பு எம்.பி. சிவசக்தி ஆனந்தன்

மூன்று இலட்சம் மக்கள் அகதியாகவுள்ள நேரத்தில் யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் எம்மீது திணிக்கப்பட்ட நிலையில், தேர்தலில் போட்டியிடவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளோம். இந்த தேர்தல் ஊடாக அரசு யுத்தத்தின் பிற்பாடு தமிழ்மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை நாடிபிடித்து பார்க்கும் ஒரு குட்டி தேர்தலாகவே இது அமைந்துள்ளதென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

நகர சபைக்குரிய வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர் மத்தியில் பேசும்போது மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் பேசும்போது கூறியதாவது; யுத்தத்தினால் ஏற்பட்ட வடுக்கள், மனக்காயங்கள் தமிழ் மக்கள் மனதில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் இலங்கை தமிழரசுக் கட்சி அமோகவெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

இடம்பெயர்ந்துள்ள மக்களுடைய மீள்குடியேற்றம், தமிழ்மக்களுடைய நீண்டகால இனப்பிரச்சினைக்குரிய அரசியல் தீர்வுகளை முன்னெடுப்பதற்காக எமது கட்சி தொடர்ந்தும் உழைக்கும். நகர சபைக்கு உள்ள அதிகாரங்களை பயன்படுத்தி நகர எல்லைக்குள் பல்வேறுபட்ட பணிகளை எம்மால் செய்ய உத்தேசித்துள்ளோம்.

பாராளுமன்றம் தவிர்ந்த ஏனைய நாட்களில் நாம் எமது தொகுதியில்தான் தங்கியுள்ளோம். மாவட்டத்தைவிட்டு வெளியேறவில்லை. மக்களோடு மக்களாகவே தங்கியுள்ளோம். நகர எல்லைக்குள் உள்ள வடிகால் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார்.

கரையோர ரயில் சேவை அஹங்கமை வரை

train_.jpgஅவசர திருத்த வேலை காரணமாக தெற்கு ரயில் சேவை மூன்று தினங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

அதன்படி சனிக்கிழமை இரவு 10 மணி முதல் 29 ஆம் திகதி அதிகாலை 3 மணி வரை கரையோர ரயில் சேவைகள் அஹங்கம ரயில் நிலையம் வரை மட்டுமே இடம்பெறுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

அஹங்கமவுக்கும் வெலிகமைக்கும் இடையிலான ரயில் பாலத்தின் திருத்த வேலைகள் இடம்பெறுவதால் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது 

தோட்டப்புற தபால் சேவகர்களுக்கு சீருடை, சைக்கிள் வழங்கப்படவில்லை

பெருந் தோட்டப் பகுதிகளில் தபால் சேவையை விரிவுபடுத்தும் நோக்குடன் தபால் திணைக்களத்தினால் கடந்த டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்ட 350 தபால் சேவகர்களுக்கான சீருடை, சைக்கிள் என்பன இன்னும் வழங்கப்படவில்லை. ஐந்து மாதங்கள் கடந்துவிட்டபோதிலும், இன்னும் இவை தமக்கு வழங்கப்படாமை குறித்து தபால் சேவகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது, தமது சொந்த சைக்கிள்களையே கடமையின்போது பயன்படுத்திவரும் இவர்களுக்குச் சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, தோட்டப்பகுதிகளில் கடிதங்களைச் சேகரிக்க ஆங்காங்கு குறிப்பிட்ட இடங்களில் தபால் பெட்டிகளைப் பொருத்துவதென முடிவு செய்யப்பட்டபோதிலும் இன்னும் அவை பொருத்தப்படவில்லை.

மாத்தறை மாவட்டத்தில் ஆறு பேரும் காலி மாவட்டத்தில் நான்கு பேரும் இரத்தினபுரி மாவட்டத்தில் பதினாறு பேரும் கொழும்பு மாவட்டத்தில் ஏழு பேரும் கண்டி மாவட்டத்தில் 29 பேரும் கேகாலை மாவட்டத்தில் 11 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 138 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 13 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 13 பேரும் தபால் சேவகர்களாக நியமிக்கப்பட்டனர்.

எனவே, தபால் திணைக்களம் இவர்களுக்கான சீருடை, சைக்கிள் என்பனவற்றை வழங்க முன்வருவதுடன், ஏற்கனவே அறிவித்தபடி இரண்டாம் கட்டத்திலான தபால் சேவகர்களையும் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில், தபால் சேவகர்களைச் சேர்த்துக்கொள்ளும் முகமாக வெளியிடப்பட்ட அறிவித்தல்கள் உரியமுறையில் தோட்ட இளைஞர்களிடையே போய்ச் சேரவில்லையெனவும் இதனால், தகுதியும் திறமையும் இருந்தும் பலர் நியமனம் பெறும் வாய்ப்பை இழக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

வவுனியா மாவட்டத்தில் முதற்கட்ட மீள்குடியேற்ற பணிகள் அடுத்தவாரம்

chals_.jpgவவுனியா மாவட்டத்தில் முதற்கட்ட மீள்குடியேற்ற பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளன. இது தொடர்பான இறுதிக் கட்ட அறிக்கை எதிர்வரும் மூன்றாம் திகதி ஜனாதிபதி செயலகத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

180 நாள் மீள்குடியேற்றத் திட்டத்தின் வவுனியா மாவட்டத்தின் ஓமந்தை மற்றும் பூவரசங்குளம் பிரதேசங்கள் உட்பட 25 கிராமங்களில் முதற்கட்டமாக மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படுவதாக அரச அதிபர் தெரிவித்துள்ளார் .

மீள்குடியமர்த்துவதற்காக சுமார் 800 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நலன்புரி முகாம்களிலும், நிவாரணக் கிராமங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

இவர்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பாகத் தயாரிக்கப்பட்டுள்ள இறுதித் திட்ட அறிக்கை ஜனாதிபதி செயலகத்திடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் மீள்குடியேற்றம் ஆரம்பமாகுமென்று வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார் .

இது தொடர்பாக அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் தலைமையில் நேற்று பிற்பகல் கூட்டமொன்றும் நடைபெற்றது. வடக்கு மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ் அண்மையில் மன்னார் முசலி பகுதியில் மக்கள் தமது சொந்த வாழ் விடங்களில் மீள்குடியேற்றப்பட்டார்கள்.

வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தற்போது வவுனியா மாவட்டத்திலும் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்படுகின்றது என்று அரச அதிபர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் உள்ள நலன் புரி நிலையங்களில் தங்கியிருந்த மக்களை நிவாரணக் கிராமங்களுக்குக் கொண்டு செல்லும் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டதாக அரச அதிபர் தெரிவித்துள்ளார் .

வவுனியா மாவட்ட கல்வி வலயத்தின் 17 பாடசாலைகள் இடம்பெயர்ந்தவர்கள் தங்கும் நலன்புரி நிலையங்களாகப் பயன்படுத்தப்பட்டன. தற்போது இந்த நிலையங்களில் இருந்த மக்கள் நிவாரணக் கிராமங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் சீராக மேற்கொள்ள ப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்னமும் ஓரிரண்டு பாடசாலைகளே விடுவிக்கப்படவுள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்டம், எலிக் காய்ச்சல் டெங்கு அதிகரிப்பு * டெங்கு – மூவர் பலி; 515 பாதிப்பு * எலிக் காய்ச்சல் – இருவர் பலி; 263 பாதிப்பு

aedes_aegypti.jpgமாத்தளை மாவட்டத்தில் டெங்கு, மற்றும் எலிக் காய் ச்சல் நோய்கள் தீவிரமடைந்துள்ளன. இது வரை டெங்கு நோயினால் பீடிக்கப்பட்ட மூவரும், எலிக் காய்ச்சலினால் பீடிக்கப்ப ட்ட இருவரும் உயிரிழந்துள்ளதாக மாத் தளை மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாக இம்மாவட்டத் தில் டெங்கு நோயால் பீடிக்கப்பட்ட 515 பேரும், எலிக் காய்ச்சலினால் பீடிக்கப்ப ட்ட 263 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இம் மாவட்டத்தில் உக்குவளை பிரதே சத்திலேயே மிகக் கூடுதலான எண்ணிக் கையானோர் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். இது வரைக்கும் 161 பேர் இந் நோயினால் தாக்கப்பட்டுள்ளனர். அதே சம யம் எலிக் காய்ச்சல் இம் மாவட்டத்தில் இறத்தோட்டை, பள்ளேபொள, யடவத்த, தம்புள்ள, ஆகிய பிரதேசங்களிலேயே அதிகமாக பரவி வருகின்றது.

தற்போது இம்மாவட்டத்தில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருவதாகவும் மேற்படி மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் காமினி செனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

‘பிரபாகரனை சூனியத்தின் மூலம் நானே கொலை செய்தேன்’ – சோதிடர் நாலாம் மாடியில் தடுத்து வைப்பு

புலிகளின் தலைவர் பிரபாகரனை சூனியத்தின் மூலம் நானே கொலை செய்தேன் என்றும், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி விரைவில் கலையும் என்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கூறிய சோதிடர் ஒருவர் கைது செய்யப்பட்டு, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி. தயாசிறி ஜயசேகர நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி சட்டமூலம் மீதான விவகாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:- பிரபல சோதிடர் ஒருவர் பிரபாகரனை அரசு கொல்லவில்லை. சூனியத்தின் மூலம் நானே கொலை செய்தேன் என்றும், மஹிந்தவின் அரசு விரைவில் கவிழும் என்றும் தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும் கூறியிருக்கின்றார். அச்சோதிடர் ஜனாதிபதியை கொலை செய்யத் திட்டம் தீட்டினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவின் நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

யாழ். இரவுநேர பஸ் சேவையில் மாற்றம்

jaffna_town.jpgயாழ்ப் பாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த ஊரடங்குச் சட்ட நேரத்தில் இப்போது  மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதைத்  தொடர்ந்து யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் இருந்து யாழ். குடா நாட்டின் ஏனைய பகுதிகளுக்கான இறுதி பஸ் சேவை நேரமும் மாற்றப்பட்டுள்ளது.

புதிய நேரப்படி இந்த பஸ் இரவு 7.30 மணிக்குப் புறப்படும் என வட பிராந்திய இலங்கை போக்குவரத்துச் சபையின் பதில் பொது முகாமையாளர் எஸ். சிவனேந்திரன் அறிவித்தள்ளார்.

இரவு 9.00 மணிக்கு அமுல்படுத்தப்பட்டுவந்த ஊரடங்குச் சட்டம் தற்போது 11.00 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.   இதனால், யாழ்ப்பாணத்தில் கடந்த பல வருடங்களாக இரவில் மக்கள் நடமாட்டம் குறைந்திருந்த நிலைமை மாறி,பொது மக்கள் இரவு நேரத்திலும் படிப்படியாக நடமாடத் தொடங்கியுள்ளனர்.

வர்த்தக நிலையங்களும் இரவு 7.00 மணிவரை திறக்கப்பட்டு வியாபாரம் நடத்தக் கூடிய நிலையும் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 2ஆவது சர்வதேச விமான நிலையம் திஸ்ஸ மஹாராமயில் நிர்மானம்

இலங்கையின் இரண்டாவது  சர்வதேச விமான நிலையம் திஸ்ஸ மஹாராம பிரதேசத்தைச் சேர்ந்த உடமத்தலாவப் பகுதியில் நிர்மானிக்கப்படுகிறது.

இந்த விமான நிலையத்தின் பெயர் தகஷின் லங்கா சர்வதேச விமான நிலையம்  என்பதாகும்

இதன் நிர்மானப்பணிகள் இரண்டு கட்டமாக இடம் பெறவுள்ளதுடன் 3ஆண்டுகளில் நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.  முதலாம் கட்ட நிர்மானப் பணிகளுக்காக 2000 கோடி செலவிடப்படவிருக்கிறது.