மாத்தளை மாவட்டத்தில் டெங்கு, மற்றும் எலிக் காய் ச்சல் நோய்கள் தீவிரமடைந்துள்ளன. இது வரை டெங்கு நோயினால் பீடிக்கப்பட்ட மூவரும், எலிக் காய்ச்சலினால் பீடிக்கப்ப ட்ட இருவரும் உயிரிழந்துள்ளதாக மாத் தளை மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாக இம்மாவட்டத் தில் டெங்கு நோயால் பீடிக்கப்பட்ட 515 பேரும், எலிக் காய்ச்சலினால் பீடிக்கப்ப ட்ட 263 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
இம் மாவட்டத்தில் உக்குவளை பிரதே சத்திலேயே மிகக் கூடுதலான எண்ணிக் கையானோர் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். இது வரைக்கும் 161 பேர் இந் நோயினால் தாக்கப்பட்டுள்ளனர். அதே சம யம் எலிக் காய்ச்சல் இம் மாவட்டத்தில் இறத்தோட்டை, பள்ளேபொள, யடவத்த, தம்புள்ள, ஆகிய பிரதேசங்களிலேயே அதிகமாக பரவி வருகின்றது.
தற்போது இம்மாவட்டத்தில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருவதாகவும் மேற்படி மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் காமினி செனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.