எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

வவுனியா நிவாரண கிராமங்களில் தங்கியிருந்த வயோதிபர்கள்: – சமூக சேவை அமைச்சினால் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடங்கள்

வவுனியா நலன்புரி நிலையங்களில் நிவாரணக் கிராமங்களிலுள்ள முதியவர்களை அவர்களது உறவினர்களின் பராமரிப்பில் அனுப்புவதற்கு முடிவு செய்யப்பட்டதையடுத்து உறவினர்கள் வந்து அவர்களை பொறுப்பேற்கும் வரையில் சமூக சேவைகள் அமைச்சு முதியோர் இல்லங்களுக்கு அழைத்துவந்து பராமரித்து வருகிறது.

மேற்படி முதியவர்களின் உறவினர்கள் சமூக சேவைகள் அமைச்சுடன் தொடர்புகொண்டு தமது உறவுகளை அழைத்துச் செல்லலாம்.

சமூக சேவைகள் அமைச்சு தனது பராமரிப்பில் வைத்துள்ள முதியவர்களின் விபரங்கள் வருமாறு :-

மன்னார் கீரி அம்மன் முதியோர் இல்லம்

1) நாகராசா குணவதி, வயது 64, சன்னதி வீதி, வரணன், அச்சுவேலி.
2) ராஜேந்திரம் பூனம்மா, சுதந்திரபுரம், முல்லைத்தீவு.
3) சிவசுப்பிரமணியம் தர்மலிங்கம், வயது 60, முழங்காவில்
4) தர்மலிங்கம் ராசமணி வயது 62, கந்தர்மடம் சந்தி, யாழ்ப்பாணம்.
5) ஐயாத்துரை பார்வதி, வயது 64, மாணிக்கபுரம், விஸ்வமடு.
6) முருகன் மாணிக்கம், வயது 68, இடைக்காடு, யாழ்ப்பாணம்.
7) ஜோசப் அந்தோனி, வயது 64, குருநகர், யாழ்ப்பாணம்.
8) ஆறுமுகம் தர்மலிங்கம், வயது 72, கந்தர்மடம் சந்தி, யாழ்ப்பாணம்.
9) நாகநந்தி கணபதிப்பிள்ளை, வயது 67, பூநகரி, பள்ளிக்குடா.
10) அந்தோனிப்பிள்ளை ஜேசுதாஸ், வயது 62, 4ஆம் குறுக்குத் தெரு, யாழ்ப்பாணம்.
11) கந்தசாமி மகாலிங்கம், வயது 71, காக்கைதீவு, ஆணைக்கோட்டை, யாழ்ப்பாணம்.
12) அருணன் தர்மன், வயது 63, மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி.
13) கனகசபை கணபதிப்பிள்ளை, வது 69, இல. 68 நாவாந்துறை, யாழ்ப்பாணம்.

மன்னார் திருக்கேதீஸ்வரம் மஹா சிவராத்திரி மட பரிபாலன சபை

1) காந்தன் உருத்திரா, வயது 61, முக்கைத்தீவு, புதுக்குடியிருப்பு.
2) கணபதி நடராசா, வயது 73, வட்டக்கச்சி, கிளிநொச்சி.
3) சின்னத்தம்பி அழகரட்ணம், வயது 75, மணியன்குளம், ஸ்கந்தபுரம்.
4) முத்தையா பரமசாமி, வயது 68, கோம்பாவில், புதுக்குடியிருப்பு.
5) பர்னாந்து ஆசிர்வாதம், வயது 82, கல்பாடு வடக்கு, முல்லைத்தீவு.
7) பொன்னம்பலம் முருகையன், வயது 78, வட்டு தெற்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்.
8) நாகராசா ராஜேஸ்வரி, வயது 59, முல்லைத்தீவு.
9) கதிர்வேல் ஜெயரட்ணம், வயது 70, குமுலமுனை, முல்லைத்தீவு.
10) சின்னத்துரை பொன்னம்மா, வயது 70, திருவையாறு, கிளிநொச்சி.
11) அழகரட்ணம் ராசம்மா, வயது 61, மணியன்குளம், ஸ்கந்தபுரம்.
12) வீரமுத்து வீரவதி, வயது 82, பைலமடு, விடத்தல்தீவு.
13) பரமசாமி பாக்கியம், வயது 58, கோம்பாவில், புதுக்குடியிருப்பு.
14) முருகேஷ்பிள்ளை சந்தனம்மா, வயது 85, முக்கைத்தீவு, புதுக்குடியிருப்பு.
15) அலோசியஸ் ஜெயவதி, வயது 60, முக்கைத்தீவு, புதுக்குடியிருப்பு.

வவுனியா, பம்பைமடு ஆயுர்வேத ஆஸ்பத்திரி தொடர்புகொள்ள வேண்டியவர் திரு. ஸ்ரீநிவாசன் தொலைபேசி இலக்கம் – 060 – 2243427.

1) கந்தையா தர்மலிங்கம், வயது 70, முஹிலன்குளம்.
2) கந்தையா கனகரட்ணம், வயது 80, புதுக்குடியிருப்பு.
3) செங்கன் சந்தானம், வயது 70, உழவனூர்.
4) கந்தையா நடராசா செல்லத்துரை, வயது 84, இழுப்பைக்கடவை.
5) வேலாயுதம்பிள்ளை, வயது 77, வன்னியர்குளம் முதியோர் இல்லம்.
6) செல்லையா ஷண்முகம், வயது 67, முரசுமோட்டை.
7) கணபதிப்பிள்ளை கண்மணி, வயது 70, காங்கேசன்துறை.
8) சின்னையா கந்தையா, வயது 68, பளை.
9) சுப்பையா சிவஞானம்பிள்ளை, வயது 82, ஒட்டுசுட்டான்.
10) வைத்தியநாதன், வயது 75, நெடுங்கேணி.
11) சுப்பையா, வயது 67, ஸ்கந்தபுரம்.
12) பாலசிங்கம், வயது 80
13) முத்துலிங்கம், வயது 78, ஜெயபுரம்.
14) முத்தையா, வயது 81, அடம்பல்
15) ஆர். ராசமணி, வயது 60, வட்டக்கச்சி.
16) மூக்காயி, வயது 70, யாழ்ப்பாணம்.
17) தனவதி, வயது 60
18) செல்லம்மா, வயது 89
19) முத்தம்மா, வயது 85, முழங்காவில்
20) அழகையா, வயது 95, நெடுங்கேணி
21) முனியாண்டி தியாகராசா, வயது 61, புதுக்குடியிருப்பு.
22) சின்னத்தம்பி கமலம், வயது 70, யாழ்ப்பாணம்.
23) எட்வர்ட், வயது 89, புங்குடுதீவு.
24) ராஜலக்ஷ்மி, வயது 73, கிளிநொச்சி.
25) கே. வேலாயி, வயது 81, அடம்பல்.
26) ஆர். சிவராசலிங்கம், வயது 65, உடையார்கட்டு.
27) கதிர்காமநாதன், வயது 67, கோப்பாய்
28) வெள்ளையன் செல்லம்மா, வயது 70, தர்மபுரம்.
29) சிவகுரு, வயது 78, வட்டக்கச்சி.
30) எம். கனகரட்ணம், வயது 80, பூநகரி.
31) எம். மீனாட்சி, வயது 75, மல்லாவி.
32) சின்னத்தம்பி பெருமாள், வயது 75, பொக்கனை.
33) எம். சிவமணி, வயது 70, கிளிநொச்சி.
34) எஸ். சாந்திதேவி, வயது 60, புதுக்குடியிருப்பு.
35) விநாயகமூர்தி சிவமணி, வயது 68, வள்ளிபுரம், மண்டைத்தீவு.
36) ஆர். சின்னப்பிள்ளை, வயது 70, புதுக்குடியிருப்பு.
37) என். பூமணி, வயது 78, திருவையாறு, கிளிநொச்சி.
38) கே. விநாயகமூர்த்தி, வயது 69, புதுக்குடியிருப்பு.
39) வீ. சிங்கரவேல், வயது 65, சிவபுரம்.
40) நாகமுத்து, வயது 65, தேவிபுரம்.
41) நாகம்மா, வயது 80, விஸ்வமடு.
42) நல்லம்மா, வயது 65
43) என். நாகம்மா, வயது 70
44) கருப்பண்ணன் சிவனார் மயில்வாகனம், வயது 68, பண்டிவைத்தகுளம்.
45) தங்கலிங்கம் நல்லநாதபிள்ளை, வயது 65, பொக்கனை.
46) கமலாவதி, வயது 60 கொக்குதொடுவாய்
47) கருப்பையா ராக்சி, வயது 82, ஸ்கந்தபுரம்.
48) சுப்பையா ராமாயி, வயது 60, முல்லைத்தீவு.
49) கந்தவனம் பசுபதி, வயது 87, பொக்கனை, (நெல்லியடி)
50) செல்லையா கணபதிப்பிள்ளை, வயது 77, வட்டக்கச்சி.

“நாட்டில் யுத்தம் முடிவடைந்துள்ளமை சகல இன மாணவர்களினதும் கல்வி உயர்வுக்கு வழி செய்யும்’

schoolgirls-sri-lanka.jpgநாட்டில் யுத்தம் நிறைவுற்றுள்ளமை சகல இன மாணவர்களினதும் கல்வி உயர்வுக்கு வழி செய்யுமென கம்பளை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.துரைராஜ் தெரிவித்தார். அண்மையில் கம்பளை வலயத்திற்குட்பட்ட வலப்பனை இக்ரா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், கடந்த காலங்களில் வட, கிழக்கு மாணவர்களுடன் தென்பகுதி மாணவர்களும் யுத்தம் காரணமாக தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடருவதில் பல்வேறு சிக்கல்களை அனுபவித்தனர். நாட்டில் யுத்தச் செலவுக்கு பணம் பெருமளவு செலவிட வேண்டியேற்பட்டமையால் பாடசாலைகளின் தேவையை நிறைவு செய்ய அவசியமான நிதியும் குறைந்தது. தற்போது யுத்தம் முடிவடைந்துள்ளது. இதனால் அதிகளவு பணம் கல்வித்துறைக்கு செலவழிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

இரண்டு மாதச் சம்பளத்தை இடம் பெயர்ந்தோருக்கு வழங்கினார்

கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் மெளலவி ஹஸன் அஸ்ஹரி தனது மாகாண சபை உறுப்பினர்களுக்கான இரண்டு மாதச் சம்பளத்தை வன்னியில் இடம் பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்களுக்கும், அங்கவீனமுற்ற படையினரின் பிள்ளைகளுக்கும் வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.

23-06-2009 செவ்வாய்க்கிழமையன்று கிழக்கு மாகாண சபை அமர்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மெளலவி ஹஸன் அஸ்ஹரி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மெளவி ஹஸன் இம் மாதச் சம்பளத்தை வன்னியில் இடம் பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு வழங்குவதுடன் அடுத்த ஜுலை மாதச் சம்பளத்தை அங்கவீனமுற்ற படைவீரர்களின் பிள்ளைகளுக்கும் வழங்கவுள்ளோம்.ஈரான் நாட்டின் உதவியுடன் மூதூர் கிராமத்தில் 150 வீடுகளைக் கட்டி கொடுக்கவுள்ளேன் எனவும் மேலும் அவர் தெரிவித்தார்.

வேலை நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தையில்லை நீவூட் தோட்ட தொழிலாளர் விசனம் தெரிவிப்பு

sri-lanka-upcountry.jpgஏழு மாதங்களாகியும் இதுவரை வேலை நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை என நீவூட் தோட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். எந்த தொழிற் கட்சியும் முன்வரவில்லை எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.  ஹப்புத்தளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நீவூட் பெருந்தோட்ட அதிகார சபைக்குரிய தோட்டம் 1989 ஆம் ஆண்டு தனியார் ஒருவருக்கு 30 வருட உப குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தது.

இருப்பினும் இத்தோட்டத்தினை உப குத்தகைக்கு எடுத்த புதிய நிர்வாகம் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டதன் விளைவாக நிர்வாகத்திற்கும் தோட்டத் தொழிலாளிகளுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தன.

103 ஏக்கர் விஸ்திரணம் கொண்ட மேற்படி தோட்டத்தில் பெறுமதியான தேயிலைச் செடிகளை அகற்றி விட்டு கிராண்டிஸ் மரங்களை நடவும் 15 ஏக்கர் நிலப்பரப்பில் மரக்கறி பயிரிடவும் நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் மேற்படி தோட்டத் தொழிலாளிகள் மேற்கொண்ட வேலை நிறுத்தம் இதவரை தொடர்வதாகவும் இவ்வேலை நிறுத்தம் குறித்த எந்தவித தொழிற்கட்சிகளும் நிர்வாகத்தோடோ அல்லது தொழிலாளிகளோடோ பேச்சு வார்த்தை நடத்த வில்லை என நிவ்வூட் தோட்டத் தொழிலாளிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

சுமார் 194 தொழிலாளிகள் இத் தோட்டத்தில் பணியாற்றியதாகவும் தற்போது 98 தொழிலாளிகள் மாத்திரமே உள்ளனர் எனவும் தொழிலாளிகள் மேலும் தெரிவித்தனர்.

வெளிநாடுகளிலுள்ள கூட்டமைப்பு எம்.பி.க்கள் நாடு திரும்பாவிடின் மாற்று நடவடிக்கை

sampanthr.jpgவெளி நாடுகளில் நீண்டகாலமாக தங்கியிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை நாட்டிற்கு வருமாறு அழைப்பதற்கும் அவர்கள் வராத பட்சத்தில் அவர்களின் இடங்களுக்கு பொருத்தமானவர்களை நியமிப்பது குறித்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்டத்தில் ஆராயப்பட்டு வருவதாக கூட்டமைப்பு வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயானந்தமூர்த்தி, சிவாஜிலிங்கம்,கஜேந்திரன், என்.கே.ராஜலிங்கம் ஆகியோர் நீண்டகாலமாக வெளிநாடுகளில் தங்கி உள்ளனர்.

இவர்களில் சிலருக்கு நாடாளுமன்றத்தில் விடுமுறை பெற்றுக் கொடுப்பதில் இங்கிருக்கும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இக்கட்டான சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். லீவு பெற்றுக் கொண்டு வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதாகவும் அவர்களுக்கு விடுமுறை வழங்கக் கூடாது எனவும் நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.

நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக வெளிநாடுகளில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திய அத்தாட்சிப்பத்திரத்தை கொடுத்து விடுமுறை பெற வேண்டிய நிலைக்கு சக கூட்டணி உறுப்பினர்கள் தள்ளப்பட்டனர். இதனை அடுத்து இவ் விவகாரம் குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு கூட்டமைப்பு தீர்மானித்திருப்பதாக தெரியவருகிறது

கோத்தபாய இன்று அமெ. செல்கிறார்

gothabaya7777.jpgபாது காப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்று அமெரிக்கா செல்கிறார் என ஏசியன் ரிபியூன் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விஜயத்தின்போது கலிபோர்ணியா நேவாடா மாநில இலங்கையரைச் சந்தித்துக் கலந்துரையாடுவதுடன், இராணுவத்தினரின் வீட்டுத்திட்டத்திற்காக “நமக்காக நாம்” என்ற நிதியத்தையும் ஆரம்பித்துவைக்கவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

போரினால் இடம்பெயர்ந்த வன்னி மக்களை மீளக்குடியமர்த்துவதை பிற்போடவேண்டாம் – யாழ். ஆயர்

வன்னியில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழுகின்ற மூன்று இலட்சம் மக்களையும் மீண்டும் அவர்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் எனவும், இதனைப் பிற்போடக் கூடாதெனவும் யாழ். ஆயர் அதிவண.தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

வத்திக்கான் வானொலிக்கு ஆயர் அளித்த பேட்டியிலேயே இவ்வாறு கூறியுள்ளார். வன்னிப் பகுதியில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு அந்த மக்களின் வீடுகள் புனரமைக்கப்பட்டு உள் கட்டமைப்பு வசதிகள் சீராகச் செய்ய வேண்டும் எனவும் ஆயர் வலியுறுத்தியுள்ளார்.

தொண்டர் நிறுவனங்களை அகதி முகாம்களில் உள்ள மக்களுக்கு நிவாரணப் பணிகளைச் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும் எனவும் ஆயர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது இந்த மக்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. பணியாளர்கள், கரித்தாஸ் நிறுவனம் என்பன மட்டுமே மட்டுப்படுத்தப்பட்ட பணிகளை ஆற்ற அனுமதிக்கப்பட்டுள்ளன என்பதையும் ஆயர் குறிப்பிட்டுள்ளார்

அரசியல் நல்லிணக்கம் அவசியம் : பிளேக்

robert-blake.jpgஇலங் கையில் தமிழ் சமூகத்துடன் அரசியல் நல்லிணக்கம் ஏற்படும்வரை இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கப்படுமென தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட்.ஓ.பிளேக் கூறினார்.

இலங்கையில் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டியிருக்கும் அதேநேரம், தமிழ் சமூகத்துடன் அரசியல் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவேண்டுமெனச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், இடம்பெயர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவுகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

“மோதல்கள் முடிந்த பின்னர் முகாம்களுக்குள் சென்று வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவுகள் நீக்கப்பட்டு, அனுமதியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும், பல முன்னேற்றங்கள் செய்யப்படவேண்டியுள்ளன” என்று அவர் கூறினார்.

இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் வடபகுதிக்குச் சென்று அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்ற மனிதநேய அமைப்புக்களுக்கு அனுமதி வழங்கவேண்டுமென தாம் இலங்கை அரசாங்கத்துக்குத் தொடர்ந்தும் அழுத்து வருவதாகவும் பிளேக் சுட்டிக்காட்டினார்.

மோதல்களுக்குப் பின்னர் இலங்கை அரசாங்கம் முன்னேடுக்கும் நடவடிக்கையானது மனிதநேயம் மற்றும் அரசியல் ரீதியாக முக்கியம் வாய்ந்தவையாக இருக்குமெனவும் பிளேக் தெரிவித்தார்.

ஆதரவற்ற சிறுவர்களை பராமரிக்க வவுனியாவில் சிறுவர் நிலையம்

shi-raja.jpgசெட்டி குளம் நிவாரண கிராமங்க ளில் வசிக்கும் ஆதரவற்ற சிறுவர்களை பராமரிக்கும் நிலைய மொன்று இன்று சனிக்கிழமை வவுனியா வைரவபுளியங்குளத்தில் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்படவுள்ளது. ஜனாதிபதியின் பாரியார், முதல் பெண்மணி திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நிலையத்தை திறந்து வைக்கவுள்ளார். ஆதரவற்ற சுமார் 300 சிறுவர், சிறுமியர்கள் நிவாரண கிராமங்களில் தங்கியுள்ளனர்.

புலிகளின் நிழல் அரசை சர்வதேசம் அங்கீகரிக்காது : விநாயகமூர்த்தி முரளிதரன்

karuna-20.jpg“நாடு கடந்த நிலையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் நிழல் அரசாங்கத்தை சர்வதேச ரீதியில் எந்தவொரு நாடும் அங்கீகரிக்க மாட்டாது என்பதால் அதனை அமைப்பது என்பது முடியாத காரியம்” என தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

நேற்று மட்டக்களப்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து அளித்த பதிலில் அவர் மேலும் கூறியதாவது :

“இலங்கையைப் பொறுத்த வரை விடுதலைப் புலிகள் தற்போது முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டனர். அந்த அமைப்பு பிரபாகரன் என்ற தனி மனிதனிலேயே தங்கியிருந்தது. இப்போது அவரும், அவரது தளபதிகளும் கொல்லப்பட்டு விட்டனர் .இப்படியான சூழ்நிலையில் இனி ஆயுதப் போராட்டத்திற்கு வாய்ப்பே இல்லை.

அதே நேரம், வெளிநாடுகளில் நிறைய நிதி மோசடிகள் செய்தவர்கள் விடுதலைப் புலிகள். தொடர்ந்தும் அவ்வாறான விடயங்களில் ஈடுபடுவதற்காகவும், அரசியல் ரீதியாக சில அமைப்புகளைக் கட்டியெழுப்பலாமா என்பது குறித்தும் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில் தான் கடந்த வாரம் நாடு கடந்த நிலையில், ஒரு நிழல் அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பாக அறிவித்திருக்கின்றார்கள். இது வேடிக்கையானது. இயலாத காரியமும் கூட. காரணம், நிழல் அரசாங்கம் என்பது சர்வதேச சட்டத்தில் ஓர் அம்சமாக இருந்தாலும், அதனை இன்னொரு நாடு அங்கீகரித்தால்தான் அது சாத்தியமாகும். அதற்கு வாய்ப்பு இல்லை.

விடுதலைப் புலிகள் பலமாக இருக்கும் போது, அதனை அங்கீகரிக்காத நாடுகள், அவர்கள் அழிந்து போயிருக்கும் இன்றைய நிலையில் அங்கீகரிக்கமாட்டாதுஆகவே புலம் பெயர்ந்துள்ள மக்கள் தற்போது உண்மை நிலையை உணர்ந்து விட்டார்கள் “என்றார்.