நாட்டில் யுத்தம் நிறைவுற்றுள்ளமை சகல இன மாணவர்களினதும் கல்வி உயர்வுக்கு வழி செய்யுமென கம்பளை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.துரைராஜ் தெரிவித்தார். அண்மையில் கம்பளை வலயத்திற்குட்பட்ட வலப்பனை இக்ரா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், கடந்த காலங்களில் வட, கிழக்கு மாணவர்களுடன் தென்பகுதி மாணவர்களும் யுத்தம் காரணமாக தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடருவதில் பல்வேறு சிக்கல்களை அனுபவித்தனர். நாட்டில் யுத்தச் செலவுக்கு பணம் பெருமளவு செலவிட வேண்டியேற்பட்டமையால் பாடசாலைகளின் தேவையை நிறைவு செய்ய அவசியமான நிதியும் குறைந்தது. தற்போது யுத்தம் முடிவடைந்துள்ளது. இதனால் அதிகளவு பணம் கல்வித்துறைக்கு செலவழிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.