எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

அரசுக்கு எதிரான சூழ்ச்சிகளை முறியடிக்கும் மறியல் போராட்டம் – கொழும்பில் நாளை நடாத்த ஏற்பாடு

அரசாங்கத்திற்கு எதிரான சதி, சூழ்ச்சிகளை முறியடிப்பதற்காக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலான மறியல் போராட்டம் நாளை 10ம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு. புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நடைபெறவுள்ளது.

சிரேஷ்ட தொழிற் சங்கத் தலைவரும், மேல் மாகாண ஆளுனருமான எஸ். அலவி, மெளலானா தலைமையில் நடைபெறவுள்ள இம்மறியல் போராட்டத்தில் அரசாங்க கூட்டுத்தாபனங்கள் திணைக்களங்கள், நியதிச் சபைகள், உள்ளிட்ட அரச, தனியார் நிறுவனங்களின் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கம், கூட்டுத் தொழிற்சங்க கமிட்டி உட்பட ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் இணைந்து இம்மறியல் போராட்டத்தை ஒழுங்கு செய்துள்ளன. இம்மறியல் போராட்டம் தொடர்பாக மேல் மாகாண ஆளுனர் அலவி மெளலானா குறிப்பிடுகையில், சுமார் முப்பது வருடகாலம் நாட்டுக்குப் பெரும் தலையிடியாக இருந்த பயங்கரவாதத்தை குறுகிய காலத்தில் ஒழித்துக்கட்டி நாட்டில் அமைதியையும், சமாதானத்தையும் ஏற்படுத்தியது எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. இருந்தும் அற்ப அரசியல் பெறும் நோக்கில் சிலர் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் எதிரான சூழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இச்சூழ்ச்சிகள் முறியடிக்கப்பட வேண்டும். இதன் முதற்கட்டமாகவே நாளை இந்த மறியல் போராட்டம் நடாத்தப்படுகின்றது.

ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தும் நோக்கிலான இம்மறியல் போராட்டம் மாகாண மட்டத்திலும் நடாத்தப்படும் என்றார்.

இலங்கை தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்க முஸ்லிம் காங்கிரஸ் முயற்சி

slmcraufhakeem.jpgஇலங்கை யிலுள்ள தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஈடுப்பட்டுள்ளது என்று அதன் தலைவர் ரவூஃப் ஹக்கீம் BBC தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தைகள் பல கட்டங்களில் நடைபெற்றதாகவும், இன்னும் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு பிறகு, சிறுபான்மை சமூகங்களின் சார்பில் குறைந்தபட்ச கொள்கை திட்டம் ஒன்றினை முன்வைத்து, அதற்கான அரசியல் நடவடிக்கைகளில் ஒன்று சேர்ந்து செயற்படுவது சம்பந்தமான ஒரு முடிவை எட்டலாம் என்கிற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.

தங்களால் வகுக்கப்படவுள்ள குறைந்தபட்ச செயற்திட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களின் அவசர மீள்குடியேற்றம், நாட்டின் பல பகுதிகளில் இருக்கும் தமிழ் பேசும் மக்களின் காணிகள் அபகரிப்பு சம்பந்தமான விடயங்கள் போன்றவை இடம்பெறும் என்றும் ரவூஃப் ஹக்கீம் கூறுகிறார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் சிறுபான்மை கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைந்த செயற்பாட்டை உருவாக்குவதற்கான முயற்சியையும் உள்ளடக்கியும் அந்த குறைந்தபட்ச கொள்கை திட்டம் உருவாகும் எனவும் அவர் கூறுகிறார்.

இலங்கையில் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சியின் கூட்டணி சார்பில் யார் பொது வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்பது குறித்து இன்னமும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் ரவூஃப் ஹக்கீம் கருத்து வெளியிட்டார்.

ஏ(எச்1என்1): இலங்கையில் முதல் மரணம்:

இலங்கையில் முதல் தடவையாக ஏ(எச்1என்1) இன்புளுவன்சா நோய்த்தாக்கத்திற்கு கண்டியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் பலியாகியுள்ளார். வைத்தியத் தம்பதியினரின் மகனான மேற்படி பாடசாலை மாணவன் கடந்த புதன்கிழமை இரவு கண்டி போதனா வைத்தியாலையில் உயிரிழந்துள்ளார்.

பொதுமக்கள் இதுகுறித்து கவலையடையத் தேவையில்லையெனவும் உயிரிழந்தவர் ஏற்கனவே முள்ளந்தண்டு மற்றும் நுரையீரல் பிரச்சினையினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவரை ஏ(எச்1என்1) இன்புளுவன்சா வைரஸ் தாக்கியிருக்கின்றது என வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குருநாகல் மாவட்டத்தில் ஏ(எச்1என்1) இன்புளுவன்சா வைரசினால் பாடசாலை மாணவர்கள் இருவர் பாதிக்கப்பட்டமை ஊர்ஜிதம் செய்யப்பட்டதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்ட அம்மாவட்டத்தின் நகரப் பாடசாலைகள் அனைத்தும் இன்று மீள திறக்கப்படுவதாக கல்வியமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார். வைரஸ் தாக்கத்துக்கு உள்ளான மாணவர்கள் இருவரும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை வருகை – ஜனாதிபதி, போகொல்லாகமவுடன் சந்திப்பு

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்ரீபன் ஸ்மீத் மற்றும் பிரதமரின் விசேட தூதுவர் ஜோன் மெகார்த்தி ஆகியோர் இன்று இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் அடங்களான குழு இன்று ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம ஆகியோரை சந்திக்க உள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் குறித்து இந்த சந்திப்பின் போது முக்கியமாக ஆராயப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்டே இக்குழு இலங்கை வருகின்றது.

கியூபா நாட்டு பிரதி வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை வருகை – மியன்மார் ஜனாதிபதி 12 இல் விஜயம்

கியூபா பிரதி வெளிவிவகார அமைச்சர் மார்கொஸ் ரொட்ரிகஸ் கொஸ்டா இன்று (9ம் திகதி) இலங்கை வருகிறார்.

இலங்கைக்கும் கியூபாவுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 வருட பூர்த்தியை சிறப்பிக்கும் முகமாகவே அந்நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்.

இதேவேளை இலங்கை – கியூபா 60 வருட இராஜதந்திர உறவுகளை முன்னிட்டு வெளிவிவகார அமைச்சில் இன்று முத்திரையொன்றும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

இதேவேளை நாளை மறுதினம் புதன்கிழமை தென்னாபிரிக்காவின் வெளிவிவகார அமைச்சரும் வியாழக்கிழமை மியன்மார் ஜனாதிபதியும் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

மீள் குடியேற்றம் – வன்னியில் முதல் பாடசாலை இன்று ஆரம்பம்

north-governor.jpgநிவாரணக் கிராமங்களிலிருந்து மீள் குடியேற்றப்படும் மாணவர்களுக்கான முதல் பாடசாலை இன்று துணுக்காய் கல்வி வலயத்தில் வடமாகாண ஆளுனரினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

துணுக்காய் கல்வி வலயத்தில் ஆளுனரினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட பாடசாலை யோகபுரம் ம.வி ஆகும்.  இன்றைய தினம் சுமார் 100 மாணவர்கள் பாடசாலைக்குச் சமுகமளித்திருந்ததாக தேசம் நெற்றுக்கு தகவல் கிடைத்துள்ளது. 

ஏ-9 வீதியூடாக இதுவரை 61,754 பேர் பயணம்: யாழ்.அரச அதிபர்

gaganesh.jpgகடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 30ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் இவர்கள் ஏ-9 வீதியூடாக 1658 பஸ்களில் பிறமாவட்டங்களுக்கு சென்றுள்ளனர். கண்டி- யாழ் ஏ-9 வீதி மீண்டும் மக்கள் பாவனைக்கு திறக்கப்பட்ட பின்னர் 61 ஆயிரத்து 754 பேர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு பயணம் செய்துள்ளதாக யாழ் மாவட்ட அரச அதிபர் கே. கணேஷ் தெரிவித்துள்ளார்

அவுஸ்திரேலிய உயர்மட்ட குழு இலங்கை வருகை

14indonesia.jpgஅவுஸ்தி ரேலியாவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் இலங்கையர் விவகாரம் தொடர்பாக ஆராய்வதற்கென அவுஸ்திரேலிய உயர்மட்டக்குழுவொன்று இலங்கை வந்துள்ளது.

இந்தக் குழு, அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதோடு இலங்கைக் குடிவரவு- குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான கட்டுப்பாட்டாளரையும் சந்தித்துப் பேசவுள்ளது.

குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தின் பிரதான கட்டுப்பாட்டாளர் பீ. பி. அபேகோன் இதனைத் தெரிவித்தார்.சட்டவிரோதமான முறையில் இலங்கையர் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதாக அந்நாடு பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. பயிற்றப்பட்ட தகுதிவாய்ந்த தொழில்சார் இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் தொழில் வாய்ப்பைப்பெற்றுச் சென்றுள்ளனர்.

சட்டவிரோதமாகச் செல்லும்போது பயிற்றப்படாத, அவுஸ்திரேலியாவுக்குள் எதிர்பார்க்கப்படுகின்ற நபர்கள் இல்லாதிருப்பதும் குறையாகக் காணப்படுவதாகவும் இதனை எவ்வாறு தடுக்கலாம் என்பதுபற்றி ஆராய்வதற்கும், அவுஸ்திரேலியாவிலிருந்து விசேட குழுவினர் இலங்கை வந்துள்ளனர்.

அண்மையில் அவுஸ்திரேலியா சென்றிருந்த குடிவரவு- குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான கட்டுப் பாட்டாளர் பீ. பி. அபேகோன் அவுஸ்திரேலிய குடிவரவு- குடியகல்வு முக்கியஸ்தர்களையும் சந்தித்து உரையாடியுள்ளார்.

பிரான்ஸ் மனித உரிமை பிரதிநிதி அமைச்சர் றிஷாட்டுடன் சந்திப்பு – மீள் குடியேற்றம் தொடர்பில் திருப்தி தெரிவிப்பு

281009rishad.jpgமனித உரிமைகளுக்கான பிரான்ஸ் நாட்டு பிரதிநிதி பிரான்கொய்ஸ் ஸிமரே மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீனை நேற்று முன்தினம் அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இச் சந்திப்பின் போது இடம்பெயர்ந்த நிலையில் வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்கள் குறித்தும் அவர்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மிகச் சிறப்பாகவும் துரிதமாகவும் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்த அமைச்சர், தற்போது இடம்பெயர்ந்த மக்கள் வாழ்ந்த பிரதேசங்களில் மிதிவெடி கண்ணிவெடிகள் காணப்படுவதால் அவற்றை அகற்றுவதில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. மீள்குடியேற்றப்படுபவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மின்சாரம், சுகாதாரம், கல்வி, பாதை, போக்குவரத்து உட்பட இன்னோரன்ன உட்கட்டமைப்பு வசதிகளையும் அரசாங்கம் அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த பிரான்ஸ் நாட்டு மனித உரிமைக்கான பிரதிநிதி பிரான்கொய்ஸ் ஸிமரே இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சியை பாராட்டுவதாகவும் நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்களுக்கும் அம்மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கும் பிரான்ஸ் அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் தெரிவித்தார்.

மலையக வீடமைப்புத் திட்டத்திற்கு தமிழக அரசு ரூ. 7½ கோடி வழங்க முடிவு

மலையக வீடமைப்புத் திட்டத்திற்கென தமிழ்நாடு மாநில அரசு எழரைக் கோடி ரூபாவை (இலங்கை நாணயம்) வழங்க முடிவு செய்துள்ளது.

இந்த நிதி மூலம் மலையகத்தில் 500 வீடுகளை கட்டுவதற்குத் தீர்மா னிக்கப்பட்டுள்ளதாக இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொரு ளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக விடுக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பெருந்தோட்டத் தொழி லாளர்களுக்கென வீடமைப்புத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த முன் வந்துள்ளது. அமைச்சர் ஆறு முகன் தொண்ட மான் தமிழக அரசின் உதவியோடு இத்திட்டத்தை மலை யகத்திற்கு அறிமுகப்படுத்துகின்றார்.

இந்த உத்தேச 500 வீடுகளில் தோட்டப்புறங்களை ஒட்டிய கிராமப் புறங்களுக்கும் 50 வீடுகள் கட்டப்படவுள்ளன.

இதன் மூலம் மலையகத்தில் உள்ள தோட்டப்புற மக்களுக்கும் தோட்டங்களை அண்டியுள்ள கிராமப் புற மக்களுக்கும் இடையே புரிந்துணர்வையும் செளஜன்ய உறவையும் நிலைநாட்ட வழி வகை செய்ய ப்பட்டுள்ளது.