கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 30ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் இவர்கள் ஏ-9 வீதியூடாக 1658 பஸ்களில் பிறமாவட்டங்களுக்கு சென்றுள்ளனர். கண்டி- யாழ் ஏ-9 வீதி மீண்டும் மக்கள் பாவனைக்கு திறக்கப்பட்ட பின்னர் 61 ஆயிரத்து 754 பேர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு பயணம் செய்துள்ளதாக யாழ் மாவட்ட அரச அதிபர் கே. கணேஷ் தெரிவித்துள்ளார்