எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

வவுனியா வடக்கு; மீளக்குடியேறிய குடும்பங்களுக்கு இவ்வாரம் முதல் இலவச மின்சாரம்

electricity.jpgவவுனியா வடக்கில் மீளக்குடியமர்த்தப் பட்டிருக்கும் குடும்பங்களுக்கு இவ்வாரம் முதல் இலவச மின்சார இணைப்புகள் வழங்கப்படவிருப்பதாக அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் நேற்றுத் தெரிவித்தார்.

மின்சார இணைப்பு வழங்கப்பட்டது முதல் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு இலவசமாக மின் விநியோகம் செய்யப்படுமெனவும் இதற்காக எவ்வித கட்டணங்களும் அறவிடப்பட மாட்டாதெனவும் அவர் தெரிவித்தார்.

வடக்கின் வசந்தம் மற்றும் கமநெகும வேலைத் திட்டத்தின் கீழ் முதற் கட்டமாக நிறைவு செய்யப்பட்டிருக்கும் மின் இணைப்பை பெற்றுக் கொடுக்கும் 14 செயற்திட்டங்களே இவ்வாரம் முதல் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளன. அதன்படி கணேசபுரம், ஓமந்தை, நொச்சிமோட்டை, கட்டான்குளம் உள்ளிட்ட 14 கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள மக்கள் இவ்வாரம் முதல் மின் இணைப்பை பெற்றுக் கொள்கின்றனர்.

இவர்களுள் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதிக்குப் பின்னர் அப்பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்டவர்களுக்கே இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. வவுனியா மற்றும் செட்டிக்குளம் பிர தேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட 14 கிராம சேவகர் பிரிவுகளிலும் தற்போது 500 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளன. இவர்களுள் குறித்த திகதிக்கு பின்னதாக மீளக்குடியமர்த்தப்பட்டிருக்கும் சுமார் 200 குடும்பங்களே இலவச மின் இணைப்பை பெறவுள்ளன.

வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட 200 செயற் திட்டங்களுக்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதில் முதற் கட்டமாக நிறைவு செய்யப்பட்டிருக்கும் 14 செயற்திட்டங்களே பொதுமக்களின் இவ்வாரம் முதல் கையளிக்கப்படவிருப்பதாகவும் அரசாங்க அதிபர் நேற்றுத் தெரிவித்தார்.

இலங்கை கப்பல் பணியாளர்களுக்கு உலக நாடுகளில் பெருமளவு கிராக்கி – 27 நாடுகளுடன் தொழில்வாய்ப்பு ஒப்பந்தம்

இலங்கை கப்பல் பணியாளர்களுக்கு உலக நாடுகளில் பாரிய கிராக்கி நிலவுகிறது. இவர்களை வேலைக்கமர்த்துவது தொடர்பில் இதுவரை 27 நாடுகளுடன் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருப்பதாக துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சாந்த வீரகோன் தெரிவித்தார். வெளிநாடுகளில் தற்போது பணியாற்றி வரும் இலங்கையைச் சேர்ந்த கப்பல் பணியாளர்களினால் வருடாந்தம் 13 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்து வருகின்றது.  இதனை மேலும் அதிகரிக்கும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு திட்டங்களை தீட்டி வருவதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இங்கிலாந்து, ஹொங்கொங், சிங்கப்பூர், பெங்கொக், மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கை கடற்பணியாளர்களுக்கு கிராக்கி இருக்கும் அதேவேளை குறிப்பாக இந்தியா, மாலைதீவு மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலேயே அதிக கிராக்கியிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

கப்பல் பணியாளர்களின் எண்ணிக்கையை ஊக்குவிக்கும் வகையில் துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சின் கீழ் நாட்டின் ஆறு நிலையங்களில் அதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கப்பலில் திருத்தங்களை மேற்கொள்ளல், கொள்கலனிலிருந்து பொருட்களை அப்புறப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் இந்த பாடத் திட்டத்தினூடாக பயிற்றுவிக்கப்படவுள்ளன.

வடக்கு, கிழக்கு தமிழர்களை தனிமைப்படுத்த கூட்டமைப்பு முயற்சி – திஸ்ஸவிதாரண

thissa.jpgஇலங் கையின் ஏனைய சமூகங்களிலிருந்து வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை தனிமைப்படு த்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சி செய்கிறதென அமைச்சர் திஸ்ஸவிதாரண தெரிவித்தார்.

சர்வதேசத்தின் தலையீட்டை நாடுவதன் மூலம் இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார்களெனவும் அவர் கூறினார். பொதுத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் வெளியிட்டது.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், தமிழ்த் தாயக் கோட்பாட்டின் அடிப்படையிலான உள்ளக சுயாட்சியை வலியுறுத்தி எதிர்வரும் தேர்தலில் மக்கள் ஆணையைப் பெறும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறங்கியிருக்கிறது. தமிழ் கடும் போக்காளர்களாக இருக்கும் இவர்கள் சர்வதேச சமூகத்தை கொண்டுவர முயல்வது பெரும் பாதிப்பையே ஏற்படுத்தும் என்றார்.

உண்மையில் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்ட மைப்பு பங்குபற்றவில்லை. ஏனென்றால் புலிகள் அவர்களைத் தடுத்தனர். ஆனால் புலிகள் இப்போது அரங்கில் இல்லை. இப்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சுதந்திரமான அரசியல் கட்சியாக தேர்தலில் நிற்கிறது. இது தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடியதாக இருக்க வேண்டும். அதேநேரம் அரசியல் தீர்வு யோசனையை அவர்கள் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு முன்வைக்கலாம் என்றார்.

இலங்கையின் நிலைப்பாடுகள் அவ்வப்போது இந்தியாவுடன் பகிர்வு – வெளிவிவகார செயலர் ரொமேஷ் ஜயசிங்க

இலங்கையின் நிலைப்பாடுகளை அவ்வப்போது இந்திய அரசுடன் பகிர்ந்து வருவதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க தெரிவித்தார்.

இலங்கை – இந்திய தலைவர்களுக்கிடையில் நெருங்கிய உறவு நிலவுவதாகவும் ரொமேஷ் ஜயசிங்க குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) நடந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் வெளிவிவகார அமைச்சின் செயலாளரும் கலந்து கொண்டார். அப்போது இலங்கைக்கு எதிரான சர்வதேச ரீதியாக முன்வைக்கப்படும் கருத்துக்களை முறியடிக்க இந்தியாவின் உதவி நாடப்பட்டதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு ரொமேஷ் ஜயசிங்க பதிலளிக்கையில், இலங்கையின் கருத்துக்கள், நிலைப்பாடுகள் தொடர்பில் எந்நேரமும் இந்தியாவிடம் பகிர்ந்து கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார்.

கட்சி சார்பாகப் பொலிஸார் செயற்பட்டால் கடும் நடவடிக்கை : பொலிஸ் மா அதிபர்

dig.jpgஎதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போது கட்சி சார்பாகச் செயற்படும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.

சமூக பொறுப்புடைய பொலிஸ் சேவையில் கட்சிகளுக்கோ அரசியல்வாதிகளுக்கோ பொலிஸார் உதவக் கூடாது என அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளன.
 

ஓய்வுபெற்ற பின்னரும் நிரந்தர வருமானம் பெற நிதியம் – வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஏற்படுத்தத் தீர்மானம்

pb-jayasundara.jpgஓய்வு பெற்ற பின்னரும் நிரந்தர வருமானமொன்றைப் பெற்றுக்கொள்ள வழிவகுக்கும் நிதியமொன்றை எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ஏற்படுத்தத் தீர்மானித்துள்ளதாகத் திறை சேரியின் செயலாளர் பி. பீ. ஜயசுந்தர தெரிவித்தார்.

இலங்கையை ஆசியாவின் வியத்தகு நாடாக உருவாக்குவதில் எதிர்கொள்ள நேரும் பல்வித சவால்களையும் மிகுந்த கவனத்துடன் வெற்றிகொள்ள வேண்டியுள்ள தாகவும் அவர் குறிப்பிட்டார்.

“2020ம் வருடத்தில் இலங்கை” எனும் தொனிப் பொருளில் உரையாற்றிய அவர், 2020ம் ஆண்டில் நாட்டில் சகலருக் கும் வீடு, அடிப்படை வசதிகளுடன் தனிநபர் வருமானத்தை 7,000 அமெரிக்க டொலராக உயர்த்துவதே அர சாங்கத்தின் நோக்கமாகு மெனவும் தெரிவித்தார்.

மஹிந்த சிந்தனையின் எதிர்காலத் திட்டத்தை தொழிலாளர் வர்க் கத்தினருக்கு விளக்கும் மாநாடு கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்புரையாற்றும் போதே திறைசேரியின் செயலாளர் பி. பீ. ஜயசுந்தர இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:- மஹிந்த சிந்தனை எதிர்காலத் திட்டம் கடந்த தேர்தலோடு ஆரம்பமானது. தற்போது நாட்டில் தனிநபர் வருமானம் 2,000 அமெரிக்க டொலராக உள்ளது. இன்னும் ஐந்து வருடங்களில் 4,000 டொலராகவும், 2020ல் 7,000 அமெரிக்க டொலராகவும் அதிகரிக்கச் செய்வதே எமது இலக்காகும்.

சகலருக்கும் வீடு, அடிப்படை வசதிகள், மின்சாரம், கல்வி, சுகாதாரம், தொடர்பாடல், தொழில்நுட்ப வசதிகளுடன் சகல மாணவர்களுக்கும் கணனி அறிவை வழங்கும் திட்டமும் நடைமுறைப் படுத்தப்படும்.

அத்துடன் சிசுமரணத் தொகையை பூஜ்ஜியமாக்குவதற்கும் உகந்த வழிவகை மேற்கொள்ளல், ஆசியாவின் வியத்தகு நாடாக இலங்கையை உயர்த்துவதே மஹிந்த சிந்தனையின் நோக்கம். நாட்டின் அரசியல், பொருளாதார நிபுணர்களின் கவனத்தை இத்திட்டம் ஈர்த்துள்ளதுடன் நாட்டின் வளத்தைப் பெருக்குவதே இதன் இலக்காகும் என்றார்

தபால் அலுவலகங்களுக்கும் தபால்காரருக்கும் பாதுகாப்பு – வீதிகளில் விசேட பொலிஸ் ரோந்து

வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும் தினங்களில் சகல தபாலகங்களுக்கும், தபால்காரர்களுக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என்று தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன நேற்றுத் தெரிவித்தார்.

எதிர்வரும் 22ம் திகதி முதல் 31ம் திகதி வரையும் நாடு பூராவும் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன. இதன் நிமித்தமே இப்பாதுகாப்பு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, சட்ட விரோத சுவரொட்டிகள், பதாகைகள், பனர்கள் என்பவற்றை நாளை 15ம் திகதிக்குள் முழுமையாக அகற்றுவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிரு ப்பதாகவும் அவர் கூறினார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன மேலும் கூறுகையில்:- ஏப்ரல் மாதம் 8ம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலின் நிமித்தம் எதிர்வரும் 22ம் திகதி முதல் 31ம் திகதி வரையும் நாடு முழுவதும் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன. இதன் நிமித்தம் தபாலகங்களுக்கும், தபால்காரர்களுக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளைப் பொலிஸ் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

குறிப்பாக வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கவென தபால்காரர்கள் செல்லும் ஒவ்வொரு வீதியிலும் பொலி ஸார் விஷேட பாதுகாப்பு மற்றும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவர். இப்பணியில் அவ்வப் பிரதேச பொலிஸ் நிலைய பொலிஸார் முழுமையாக ஈடுபடுத்தப்படுவர்.

இதேநேரம், எதிர்வரும் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் அட்டைகள் விஷேடமாக விநியோகிக்கப்படும். அத்தினத்தில் வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளுவதில் மக்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும். என்றாலும் 22ம் திகதி முதல் 31ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் வாக்காளர் அட்டையைப் பெற்றுக் கொள்ளத் தவறுகின்றவர்கள், அருகிலுள்ள தபாலகங்களுக்குச் சென்று தங்களது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

இதேவேளை சட்டவிரோத சுவரொட்டிகளையும், பதாகைகளையும், பெனர்களையும், அகற்றும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாளைக்குள் அவற்றை அகற்ற முடியுமென நம்புகின்றேன். இதற்கு வேட்பாளர்களதும் பொது மக்களினதும் ஒத்துழைப்பையும் கோரியுள்ளோம் என்றார்.

போய்ச்சேருமிடம் சுனாமி (Destination Tsunami): ஒரு உல்லாசப் பயணத்தின் கதை!

சுனாமி எனப்படும் ஆழிப்பேரலை தமிழ் நாட்டினதும், கேரளத்தினதும் தென்பகுதிக் கரையோரங்களிலும், இலங்கையின் கிழக்கு மற்றும் தெற்கு கரையோரங்களிலும் ஒரே இரவில் ஏற்படுத்திய உயிரழிவும் அனர்த்தங்களும் யாவரும் அறிந்ததே. சுனாமிக்குப் பின்னர் அப்பிரதேசங்களில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் குறித்து டூரிஸம் கென்சேர்ண்(Tourism Concern) எனும் அமைப்பு அண்மையில் லண்டன் மெற்றோபொலிட்டன் பல்கலைக்கழகத்தில் (London Metropolitan University) ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. இக்க்கருத்தரங்கில் விசேட பேச்சாளராக கேரளாவில் இருந்து சஜீர் ரஹ்மான் பங்கு பற்றியிருந்தார். சஜீர் கபனி எனப்படும் சமூக நல செயற்பாட்டு அமைப்பின் பொறுப்பாளர். கேரளத்தின் தென்பகுதிக் கடற்கரையோரங்களில் பல நூற்றண்டுகளாக வாழ்ந்து வரும், மீன் பிடித்தலை வாழ்வாதாரமாகக் கொண்ட குடும்பங்கள் அவர்களின் வாழ்விடங்களிலிருந்து அகற்றப்பட்டு அவர்களது குடிசைகள் இருந்த இடங்கள் எவ்வாறு உல்லாசப் பயணிகள் தங்குவதற்கான விடுதிகளாகவும், ஹோட்டல்களாகவும் மாற்றப்படுகின்றன என்பதை விபரித்தார்.

பல்கலைக்கழ மாணவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாடாளர்கள் நிறைந்திருந்த கருத்தரங்கில் சஜீர் தமது அமைப்பின் பணிகளை தெளிவாக விளக்கினார். தமது அமைப்பினால் கவனமெடுக்கப்படும் பிரதேசங்களில் உள்ள மக்கள் கடல் சார்ந்து வாழ்பவர்கள் எனவும் அவர்களது மூதாதையர் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த இடங்களிலிருந்து அவர்கள் அகற்றப் படுவதாகவும் பெரும் வணிக நிறுவனங்கள் கேரள அரசின் சுற்றுலாப் பயணத்துறையின் ஆசீர்வாதத்துடன் எவ்வாறு அந்த நிலங்களை அபகரிக்கின்றன என்பதையும் விபரித்தார். தனது அமைப்பின் செயற்பாடுகள் பற்றி எவ்விதமான மாயப் பிம்பங்களையும் ஏற்படுத்த அவர் முயலவில்லை. இந்த சுமூகங்களின் மக்களது மனநிலையில் சுனாமி ஏற்படுத்திய அவலமான தாக்கத்தை பெரும் வணிகம் எவ்வாறு தனது இலாப நோக்கத்திற்கு பயன்படுத்த முயல்கிறது என்பதையும் இம்மக்கள் மத்தியில் பணியாற்றும் சில தொண்டு நிறுவனங்கள் தூர நோக்கின்றி எவ்வாறு உடனடிப் பொருள் ஆதாயத்தினை நோக்காகக் கொண்டு செயற்படுகின்றன என்பதையும் விபரித்தார். சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களது நிவாரணத்திற்காக மத்திய அரசால் வழங்கப்பட்ட நிதி எவ்வாறு கேரள அரசின் சுற்றுலாத்துறையினால் உல்லாசப் பயண மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதையும் விபரித்தார்.

கடல் சார்ந்து வாழும் மக்களை கடற்கரைகளிலிருந்து அகற்றும் பிரதான நோக்குடன் அவர்களுக்கு தூர இடங்களில் தொடர் மாடி வீடுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது தொழில் நிமித்தம் கடலுக்குச் செல்வதற்கு வருமானத்தின் ஒரு பகுதியை பிரயாணச் செலவுக்காக இழக்க வேண்டியிருப்பதாகவும் கூறினார். அதைவிடவும் கடுமையானது என்னவெனில் உல்லாச விடுதிகள் அமைக்கப் பட்டுள்ள கரையோரங்களில் அவர்களது படகுகளை நிறுத்துவதற்கான அனுமதி மறுக்கப்படுவதும், விடுதிகள் அமைக்கப் பட்டுள்ள கரையோரங்களில் அவர்கள் நடமாடுவதற்கு (கடற்கரையில் நடந்து செல்வதற்குக் கூட) தடை விதிக்கப் பட்டுள்ள நிலையும் எனக் கூறினார். தமது அமைப்பு உல்லாசப் பயணத்துறைக்கு எதிரானதல்ல என்றும் உல்லாசப் பயணம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரங்களை அபகரிப்பதன் மூலம் அவர்களது வாழ்க்கையை பாதிப்பதையும் இலகுவில் மாறுபடக் கூடிய கரையோர சுற்றுச்சூழல் (coastal ecology) மாசடைவதையும் தடுப்பதே தமது அமைப்பின் நோக்கம் எனவும் தெரிவித்தார். கரையோரங்களுக்கு வரும் உல்லாசப் பயணிகளால் கரையோரங்களில் வாழும் சமூகங்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். கபனி அமைப்பின் பணிகள் தொடர்பான ஒரு புகைப்படக் கண்காட்சி லண்டன் கார்டியன் கேலரியில் (The Guardian Gallery, King’s Place, 90 York Way, London N1 9GU) மார்ச் 31 வரை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. டூரிஸம் கென்சேர்ண் அமைப்பு இக் கண்காட்சியை ஒழுங்கு செய்துள்ளது.

கம்பனியின் பணிகள் டூரிஸம் கென்சேர்ண் அமைப்பின் ஒத்துழைப்புடன் கடந்த மூன்று வருடங்களாக நடைபெற்று வருவதாக அதன் அமைப்பாளாரான தான்யா கூப்பர் (Tanya Cooper) தெரிவித்தார். ஸ்ரீ லங்காவில் தாம் மேற்கொண்ட இத்தகைய பணியை தாம் முடிவுக்கு கொண்டுவந்து விட்டதாக அவர் சொன்னார். அதற்கான காரணத்தை வினவியபோது, பாதுகாப்பு என்ற பெயரில் தமது பணியாளர்களின் நடமாட்டம் பெரிதும் கட்டுப்படுத்தப் பட்டதால் சுனாமியால் பாதிக்கப்பட்ட கிழக்குப் பிரதேசங்களில் தமது பணியைத் தொடர முடியாமல் இருந்ததை குறிப்பிட்டார். எனினும் அறுகம் பே பகுதியில் ஒரு ஹெலிபாட் (helipad) அமைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியை உள்ளூர் மக்களும் சிறு வர்த்தகர்களும் சேர்ந்து எதிர்த்ததன் மூலம் முறியடித்ததை மக்கள் போராட்டத்தின் சிறந்த உதாரணமாக தான் கருதுவதாக தெரிவித்தார். தமது பணி ஸ்ரீலங்காவில் முடிவுக்கு வந்துவிட்டாலும் அந்நாட்டு மக்களது மனித உரிமைகள் தொடர்பாக தமது அமைப்பு ஒரு அறிக்கையை தயாரித்திருப்பதாகவும் தெரிவித்தார். போர் முடிவுக்கு வந்த பின்னர் கிழக்கினதும் வடக்கினதும் கடற்கரைகள் பெரு நிறுவனங்களுக்கு விலை போவது பற்றி தமது அமைப்பு அக்கறை கொள்வதாகவும் தெரிவித்தார்.

http://www.tourismconcern.org.uk/index.php?page=destination-tsunami

சர்வதேசத்தில் 2/3 பெரும்பான்மை நாடுகள் இலங்கைக்கு சாதக நிலைப்பாடு

 mahinda-samarasinha.jpgசர்வ தேசத்தில் உள்ள மூன்றிலிரண்டு பெரும்பான் மையான நாடுகள் இலங்கைக்குச் சாதகமான நிலைப்பாட்டையே கொண்டுள்ளதாக இடர் முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள மொத்த நாடுகளின் மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான நாடுகள் இலங்கைக்குச் சாதகமாகவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கை தொடர்பில் மேற்கொள்ள உத்தேசித் துள்ள நடவடிக்கையைக் கண்டித்து அணிசேரா நாடுகளின் தலைவரான எகிப்து ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அணிசேரா அமைப்பில் உள்ள 124 நாடுகளின் சார்பில் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது- ஐ.நா. சபையில் அங்கத்துவம் பெறும் 194 நாடுகளில் மூன்றிலிரண்டு பெரும்பான் மையைவிட அணிசேரா நாடுகளின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது” என்று அமைச்சர் சமரசிங்க சுட்டிக்காட்டினார்.

“ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பாக விசேட அமர்வொன்றை நடத்தும் யோசனையொன்றை 16 நாடுகள் இணைந்து முன்வைத்தன. இதனையடுத்து, ஆணைக்குழுவுக்கு வருமாறு இலங்கைக்கு அழைப்பு வந்தது. ஆனால் அந்த யோசனை நிராகரிக்கப்பட்டது. இலங்கை முன்வைத்த யோசனை ஏனைய நாடுகளின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் சரத் பொன்சேகா முன்னுக்குப் பின் முரணான கருத்துகளை வெளியிட்டதால் முடிந்த பிரச்சினை மீண்டும் தலைதூக்கியது. நானும் (அமைச்சர் சமரசிங்க) சட்ட மாஅதிபர் மொகான் பீரிஸ¤ம் ஜெனீவா சென்று மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளைக்கும் வேறு நாடுகளின் தூதுவர்களுக்கும் நிலைமையை விளக்கினோம். அமெரிக்க இராஜாங்க திணைக்களம் முன்வைத்த ஆவணம் சட்ட வலுவற்றது.

விசாரணைக்காக அல்ல என்று கூறப்பட்டபோதிலும், அவர்கள் குறிப்பிட்டதைப்போல் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான சம்பவங்கள் குறித்து ஆராய ஆறுபேர் கொண்ட குழுவை ஜனாதிபதி நியமித்தார். அந்தக் குழு ஏப்ரல் மாதம்வரை தனது விசாரணைகளை மேற்கொள்ளும்.

இந்தப் பின்னணியில்தான், போர்க்கால சம்பவங்கள் குறித்து ஆராய நிபுணர்கள்கொண்ட குழுவொன்றை நியமிக்க எண்ணியுள்ளதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பாக்கி மூன் கடந்த மார்ச் இரண்டாந் திகதி ஜனாதிபதிக்குக் கடிதமொன்றை அனுப்பியிருந்தார். அதன் பின்னர், தொலைபேசியூடாகவும் ஜனாதிபதியைத் தொடர்புகொண்டார். அப்போது அந்தக் குழு நியமிக்க வேண்டிய அவசியம் இல்லையென ஜனாதிபதி எடுத்துரைத்தார். மேலும் நேற்று முன்தினம் அணிசேரா நாடுகளின் தலைவர்பான் கீ மூனின் உத்தேச செயற்பாட்டுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க தகவல் தருகையில்; ஐ.நா. வுக்கான வதிவிட பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன மேற்கொண்ட தொடர்பாடல்களை அடுத்தே அணிசேரா நாடுகளின் தலைவர் ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு கடிதம் அனுப்பியிருப்பதாகத் தெரிவித்தார்.

ஆசியாவின் உன்னத நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு பலம்மிக்க பாராளுமன்றம் அவசியம் – ஜனாதிபதி

president.jpgஎந்தவித சக்திகளிலும் தங்கியிராத பெரும்பான்மை பலமுள்ள பாராளுமன்ற மொன்றை அமைப்பதற்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டார். மஹிந்த சிந்தனைக் கொள்கைத் திட்டத்தைத் தேர்தலின் பின் நாம் மறந்துவிடவில்லை. யுக யுகமாக அதனை முன்னெடுத்து ஆசியாவின் ஐஸ்வர்யமிக்க நாடாக இலங்கையை உருவாக்க நாம் கட்டுப்பட்டுள்ளோமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

‘மஹிந்த சிந்தனை’ எதிர்காலத்திட்டம் சம்பந்தமாக தொழிற்சங்கத்தினருக்குத் தெளிவுபடுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாநாடு நேற்று ஜனா திபதி மஹிந்த ராஜ பக்ஷவின் தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது. இம்மகாநாட்டில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:-

மஹிந்த சிந்தனையை வெளியிட்டு நாம் அதன் மூலம் செயற்பட்டோம். மக்கள் பிரசாரங்களால் அதனை அறிந்து கொள்ளவில்லை. நாட்டில் மேற்கொள்ளப் பட்ட அபிவிருத்தித் திட்டங்களே மஹிந்த சிந்தனையை மக்களுக்குக் காண்பித்தன. அதன் மூலம் நாம் சொன்னதைச் செய்தோம். அதுவே அத்திட்டத்திற்குக் கிடைத்த வெற்றி.

மஹிந்த சிந்தனைத் திட்டத்தின் மூலம் நாம் 350 ரூபாவுக்கு உரம் வழங்குகிறோம் என்றதையும் நாட்டை ஒன்றிணைப்போம் என்று உறுதியளித்ததையும் நம் தலைவர்கள் பலர் நம்பவில்லை.  அதை பகற்கனவு என்றனர். பிரபாகரன் கூட இதெல்லாம் மஹிந்தவின் கனவு எனவும் குறிப்பிட்டதை மறந்துவிட முடியாது.

கடினமானது கஷ்டமானது என எதனையும் நாம் செய்யாமலிருக்கவில்லை. கைவிட்டு தப்பியோடவும் நினைக்கவில்லை. கஷ்டம் கடினம் என்றில்லாமல் நாட்டுக்கு எதுதேவையோ அதனை முன்கொண்டே தீர்மானங்களை நிறைவேற்றினோம். மஹிந்த சிந்தனையானது இந்நாட்டு மக்கள் இழந்ததை மீளப்பெற்றுக் கொடுக்கும் கொள்கைத் திட்டமாகும். பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு பெற்றோருக்கு உரிமையில்லாத நிலை இருந்தது. ஒன்றிணைந்த நாடு எமக்கு இழக்கப்பட்டிருந்தது.

மஹிந்த சிந்தனை மூலம் இவற்றை நாம் நிறைவேற்றியது மட்டுமன்றி நாட்டிற்கும் மக்களுக்குமான கெளரவத்தையும் பெற்றுக்கொடுத்தோம். சுதந்திரம், சமாதானம், பொருளாதார அபிவிருத்தி என்பவற்றையும் மஹிந்த சிந்தனை மூலம் எம்மால் பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளது. முழு உலகமே பொருளாதார நெருக்கடியில் அகப்பட்டுத் தவித்த வேளையில் எம்மால் துணிவுடன் எழுந்து நிற்க முடிந்தது.

சுதந்திரத்தின் பின்னர் உருவான பல்வேறு நாட்டினதும் நகலாக நாம் இருக்கக் கூடாது. சிலர் இந்த நாட்டைச் சிங்கப்பூராக்குவோம் என்றனர். பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளின் அரசியலமைப்பை இங்கு திணிக்கப் பார்த்தார்கள். வேறு நாடுகளில் வழங்கப்பட்ட இனப் பிரச்சினைத் தீர்வுகளை இங்கும் நடைமுறைப்படுத்த தயாராகினர்.

இதனால் எமது தனித்துவம் இல்லாது போகும். நாம் அதற்கு இடமளிக்கவில்லை. நாம் எந்த நாட்டினதும் நகலாக இருக்க வேண்டிய அவசியமுமில்லை. நாம் இலங்கையை இலங்கையாகக் கட்டியெழுப்பவே மஹிந்த சிந்தனை மூலம் முயற்சித்தோம். அரசியல் ஆரம்பமாவது மக்கள் ஒன்றிணையும் இடத்தில்தான். நாம் மக்களிடம் சென்று அவர்களுடன் செயற்பட்டு, அவர்களிடம் பாடம் கற்று அவர்களுக்குச் சேவை செய்தே அரசியலைக் கற்றுக் கொண்டோம்.

மஹிந்த சிந்தனையைத் தயாரித்தது வெளிநாட்டு நிபுணரல்ல. நம் நாட்டு சாதாரண மக்களின் தரிசனமே மஹிந்த சிந்தனை எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது தொழிற்சங்கப் போராட்டங்களின் போது உயிரைத் தியாகம் செய்த தொழிற்சங்கவாதிகளின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி ஞாபகச் சின்னம் மற்றும் உதவித் தொகையொன்றையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.